நாராயணனும் நாரதரும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 9, 2024
பார்வையிட்டோர்: 2,769 
 
 

பகுதி – 1

சொர்க்க லோகத்தில் நாராயணன் அதிசேஷனில் மேல் படுத்திருக்க, நாரதர், “நாராயண, நாராயண”என்று சொல்லிக் கொண்டு வருகிறார். அவரின் வருகைக்கு அர்த்தம் அறிந்த நாராயணன்,படுத்துகொண்டு சிரிக்கிறார்.

நாரதர்: நாராயண, நாராயண (பகடியை அடிக்கிறார்)

நாராயணன்:_”என்னநாரதா, அதிகாலையில் இந்தப் பக்கம்? இன்று யாரை வம்புக்கு இழுக்கப் போகிறாய்?”

நாரதர்: “நாராயண, நாராயண”ஒன்றும் இல்லை சுவாமி, வெகு நாட்களாக பூலோகம் செல்லவில்லை.தாங்களும் வந்தால் நாம் போய் விட்டு வரலாம் எனக் கேட்கத் தான் வந்தேன் சுவாமி”.

நாராயணன்:_”அது போய் வரலாம் நாராதா ஆனால் முன் போல் பூலோகம் இல்லை, மிகவும் பல மாற்றங்கள் அகி உள்ளன. உன்னால் அதை பொறுத்துக் கொள்ள முடியாது”.

நாரதர்: “அதனால் ஒன்றும் இல்லை சுவாமி,அது தான் தாங்கள் கூட வருகிரிறே சுவாமி, நாராயண,, நாராயண”.

ஆடுத்த ஒரு நிமிடத்தில் நாராயணன் எழுந்து நிற்கிறார் ஷார்ட்ஸ்ம், டீ_ஷர்ட்டும் கூலிங் கிளாஸ்சும், மொபைல்போன்,லேப்டாப்பில் மாறி நிற்கிறார். அசந்து போன நாரதர், “என்ன சுவாமி, இதெல்லாம், நன்றாக இல்லையே.”

நாராயணன்: “இப்படி போனால் தான் நமக்கு மதிப்பு நாரதா, இரு உன்னையும் மாற்றுகிறேன், அப்பொழுது தான் பூலோகத்திற்கு போக முடியும். சட்டென்று நாரதரும் மாறி விடுகிறார்.

நாரதர்: “நாராயண, நாராயண இதென்ன சுவாமி? தம்புரா இருக்கும் இடத்தில் லேப்டாப்!! பகடி இருக்க வேண்டிய இடத்தில் மொபைல் போன்!! ஒரே குழப்பமாய் இருக்கு சுவாமி”.

நாராயணன்: “பூலோகத்தில் மனிதர்களும் இப்படித் தான் குழம்பி இருக்கிறார்கள். லேப்டாப்பில் எல்லாவற்றையும் அறியலாம். தம்புராவில் இருந்து இசை மட்டும் தான் வரும், நரஸ்”.

நாரதர்: “சுவாமி, இது என்ன நரஸ் என்று சொல்கிறீர்கள்?”.

நாராயணன்:_”இப்படி பெயர் வைத்துக் கொண்டு போனால் தான் மதிப்பார்கள்.என்னையும் சேம் என்று கூப்பிடு, என்னுடைய இமேஜை கெடுத்து விடாதே, சிரிக்கிறார். வா நரஸ், பூலோகத்தற்கு போகலாம்.”

நாரதர்: “இல்லை சுவாமி, சேம், மாதா மஹாலக்ஷ்மி வரட்டும், சொல்லிக் கொண்டு போகலாம்”.

நாராயணன்;_”அதற்கெல்லாம் சமயம் இல்லை நரஸ், மெசேஜ் அனுப்பி விடுகிறேன், வா”.

இருவரும் கீழே இறங்கி பூலோகத்திற்கு வருகிறார்கள்.

பகுதி-2

நேராக பூலோகத்தில் ஒரு மாலின் (mall) முன்னால் வந்து நிற்கிறார்கள். ஒரே மனிதர்கள் கூட்டம். பெரிய பெரிய கட்டடங்களை பார்த்து பிரமித்து போகிறார் நாரதர்.

நாரதர்: “சேம்”,இது என்ன புது மாதிரியான கோவில்? கோபுரம் இல்லையே”?

நாராயணன்: இப்பொழுது எல்லாம் கோவில்களில் கூட்டம் இல்லை.இங்கு தான் கூட்டம் அதிகம்.வா,” நரஸ்”உள்ளே போய் பார்க்கலாம்.

செக்யூரிட்டி அதிகாரி எல்லோரையும் தடவிப் பார்ப்பதை பார்த்த நாரதர்,

நாரதர்: “சேம்” என்ன செய்கிறான் அவன்?

நாராயணன்: உன்னிடம் துப்பாக்கி இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளத் தான்”.

அதற்குள் அவர்கள் செக்யூரிட்டி அதிகாரியிடம் வந்து நிற்கின்றனர்.

செக்யூரிட்டி: என்னய்யா, பேந்த பேந்த விழிக்கிறே, என்னது பையிலே?”

நாராயணன்: ஒண்ணுமி இல்லை ஐயா, கிராமத்திலிருந்து வந்ததால அப்படிப்பார்க்கிறார். பையில் லேப்டாப் தான்.”

செக்யூரிட்டி: “சரி சரிப் போ அப்படி” கடிந்து கொள்கிறான்.

நாரதர்: என்ன” சேம்” இப்படி கடிந்து கொள்கிறான்?”

நாராயணன்: எல்லாம் அப்படித்தான்,வா, புன்னகைத்துக் கொண்டே போகிறார்.

எல்லாம் சுற்றிப் பார்த்து மலைத்து போயி பீட்ஸா ஹட் முன்னால் வந்து நிற்கிறார்கள். உள்ள நுழைந்த நாரதர், வெளியில் ஒடி வருகிறார்.

நாரதர்: நாரா… வாயைப் பொத்துகிறார்

நாராயணன் : “நரஸ்”, ஏன் இப்படி ஒடி வருகிறாய்?”.

நாரதர்: உள்ளே போய் வரலாம் என போனேன், ஒரே நாத்தம், எதையோ சாப்பிடுகிறார்கள் அதில் இருந்து வெள்ளையாக இழுத்துக் கொண்டே வருகிறது!! ” சேம்” நம்ம கோவிலில் கிடைக்கும் வெண்பொங்கல், புளியோதரை கிடைக்காதா?”.

நாராயணன்:அதற்கு பெயர் தான் பீட்ஸா,இங்கு வெண்பொங்கல், புளியோதரை எதுவும் கிடைக்காது. சரி ,வா, உனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருகிறேன்”.

இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி வருகின்றனர்…

பகுதி-3

இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டு வர ஒருப் பக்கம் பரபரப்பாக மனிதர்கள ஓடுவதைப் பார்க்கிறார்கள். நாராயணனுக்கு புரிந்து விட்டது. வா, நாராத இதையும் பார்க்கலாம், என அழைத்து செல்கிறார். ஒரே கூட்டம். ஒருத்தருக்கு ஒருத்தர் தள்ளிக் கொள்கின்றனர். போலீஸ் கும்பல் வேறு. மேடை போல் போட்ட இடத்திற்கு யாரோ வரப் போகிறார்கள் என்பது தெரிகிறது. சிறிது நேரம் கழித்து, எல்லோரும் “யோ , யோ ஹனிசிங், யோ, யோ, ஹனிசிங்” என்று கூச்சல் போடுகிறார்கள்.

நாரதர்: என்ன “சேம்” யார் இவன்? தங்கள் நாமத்தை சொல்லாமல் யாரோ ஒருவனின் பெயரை அல்லவா சொல்கிறார்கள். தங்களை விட பெரியவரும் உள்ளனரோ?”.

நாராயணன்: இவன் இந்த காலத்துப் பாடகன்.வா, பார்க்கலாம்.”

ஒரே மாலையும்,கையில் மொபைலு்டன் எல்லோரின் கைத் தட்டலுடன்” யோ,யோ ஹனிசிங்”மேடைக்கு வருகிறான்.

யோ யோ ஹனிசிங் லுங்கி டான்ஸ் பாட்டை பாடவும் எல்லோரும் ஓ என கத்துகிறர்கள்.

நாரதர்: என்ன “சேம்” கேட்கவே நன்றாக இல்லையே திருப்பாவையும், திருவம்பாவையும், கேட்ட காதுகளுக்கு இது என்ன தெரு கூத்து?”.

நாராயணன்: “பார்,அவர்கள் கவலைகளை எல்லாம் மறந்து விட்டு, சந்தோஷமாக எப்படி இருக்கிறார்கள். வா, நாமளும் அவர்களுடன் கைத்த ட்டி பாடலாம்,”. என்கிறார்.

இருவரும் பேசுவதை பக்கத்தில் இருப்பவர்கள் கேட்க, அவர்கள் பேச்சத் தொல்லை தாங்காமல் போலீசாரிடம் சொல்ல, போலீசார் இருவரையும் வெளியில் தள்ளி விடுகின்றனர்.

நாரதர்: நல்லதப்பா,நாங்கள் போய் வருகிறோம். “சேம்” வாங்கள்,நம்முடைய கோலத்திலேயே, கோவிலுக்கு போகலாம். மணியும் ஆகி விட்டது.”.

நாராயணன்: வேண்டாம், “நரஸ்” நம் கோலத்தில் போனாலும் மனிதர்கள் நம்ப மாட்டாரகள். மாறு வேடப் போட்டியில் இருந்து வந்ததாய் நினைத்து கொள்வார்கள்”.

நாரதர்: பரவாயில்லை,” சேம்’ அங்கும் என்ன நடக்கிறது என்று தான் பார்ப்போமே”.

இருவரும் மாலில் இருந்து கோவில் பக்கமாய் போகிறார்கள். அவரவர் உடையிலேயே கோவிலுக்குவருகிறார்கள்.

பகுதி-4

கோவிலில் சந்தியா காலத்தில், விளக்குகள் வெளியிலும் உள்ளேயும் எரிந்து கொண்டு இருந்தன. அர்ச்சகர்கள், ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டு இருந்தனர். பக்தர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது. கோவிலுக்கு போய் கொண்டு இருக்கும் போது எல்லோரும், இருவரையும் பார்த்து சிரிக்கின்றனர்.

நாரதர்: “ஐயா, நாங்கள் சொர்கத்தில் இருந்து வந்திருக்கிறோம்”.

(எல்லோரும் சிரிக்கின்றனர்.)

சிறுவன்: என்னையா, மாறு வேடபோட்டியில் இருந்து வந்திருக்காங்க உங்களுக்கு எல்லாம் தெரியலையா என்ற உடன், பக்கத்தில் இருந்தவார்களும் ஆமாம் என்று சொல்லிச் சிரிக்கின்றனர்.

நாரதர்; உங்களுக்கு எல்லாம் தெரியவில்லை, இவர் உங்களை எல்லாம் காக்கும் பரமாத்மா, நாராயணன்”.

சிறுவன்: அது தான் தெரியுதே சார், சொல்ல வேண்டுமா என்ன?”.

நாரதர்: சாரா? பகவானிடம் அப்படி எலலாம் பேசக் கூடாது”.

வயதானவர்; போறும் ஐயா, நீங்கள் நடித்தது. என குழந்தைகள், நாராயணனின் சக்கரத்தை தொடுவதும் ,சிலர் தம்புராவை இழுப்பதும் என்று ஆரம்பிக்க இருவரும் கோவிலுக்குள் நுழைந்து விடுகின்றனர்.

பகுதி-5

கோவிலில் பண்டிதர்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள்.

பண்டிதர்1: “என்ன சுவாமி, இன்னிக்கு ஷூட்டிங் இருக்கா, நமக்கு எதுவும் தெரிய வில்லையே”.

பண்டிதர் 2: ஆமாம் சுவாமி, எனக்கும் தெரியவில்லை. இருங்கள் அவர்கள் இடம் கேட்டுப் பார்க்கிறேன்”.

நாரதரிடம், எந்த படத்திற்கு ஷூட்டிங் என்று கேட்கிறார்.

நாரதர்: ஷூட்டிங்!! நாங்கள் சொர்கத்தில் இருந்து வந்திருக்கிறோம்.

எல்லோரும் சிரிக்கின்றனர். சிறிது நேரம் கூட்டத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

நாரதரும் ,நாராயணனும் பார்த்துக் கொள்ள,சிறிது நேரத்தில் அங்கு இருந்த கூட்டத்தில் சிலர் சேர்ந்து இருவரையும் சேர்த்து

மொத்துகிறார்கள். அடிகளை வாங்கிக் கொண்டு சிரிக்கிறார் நாராயணன்.

நாரதர்: என்ன சுவாமி, தங்களுக்கு வலிக்கவே இல்லையா?அதற்கும் அதே சிரிப்பா?.”

எல்லோருக்கும் தாங்கள் வந்த காரணத்தை நாராயணன் கூற எல்லோரும் மலைத்துப் போக இருவரும் சொர்க்கத்திற்கு திரும்பி வந்து விடுகின்றனர்.

.

Print Friendly, PDF & Email

1 thought on “நாராயணனும் நாரதரும்

  1. நாராயணனும் நாராதரும் சிறுகதை நல்ல நகைச்சுவையாக இருந்தது. அருமையாக விவரித்து எழுதியுள்ளார் திருமதி வித்யா விஜயகுமார். இன்னொரு முறை படிக்கத் தோன்றுகிறது. 👌👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *