பாரிஸ் நகரத்தில் மிக அழகான பெண் ஒருத்தி இருந்தாள். அவளைத்தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த தாசி என்று சொன்னார்கள். அவளை அடைய, அவளுடன் (சந்தேகமில்லாமல் இன்பமாக) ஒரு மாலைப் பொழுதை கழிப்பதற்கு மிகுந்த பணம் தேவையாக இருந்தது.
நகரத்தின் அருகிலே ஒரு பெரிய மிலிட்டரி காம்ப் இருந்தது. அதில் இருந்த எல்லா ஆண்களின் கனவு அந்தப் பெண்ணுடன் ஒரு தினம்.
அவர்களில் ஒருவன் ஒரு நாள் மாலை மற்றவர் எல்லாரையும் திரளாகக் கூப்பிட்டு இவ்வாறு சொன்னான். “நண்பர்களே! நாம் எல்லோரும் குணத்திலும், உருவத்திலும், மனப்பான்மையிலும் வேறுபட்டவர்களாக இருந்தாலும் நம்மிடம் ஒரு ஆசை மட்டும் பொதுவாக இருக்கிறது. அது மிஸ் —-உடன் ஒரு இரவாவது இன்பமாகக் கழிப்பது. அதற்கேற்ற செல்வம் நம் ஒருவரிடமும் இல்லை. ஆனால் இவ்வளவு பேர் இருக்கிறோம். நாம் எல்லோரும் ஆளுக்கு ஒரு ஃபிராங்க் போட்டு ஒரு நிதி திரட்டுவோம். போட்டவர்கள் பேரை எல்லாம் சீட்டுகளில் எழுதிக் குலுக்கி ஒரு சீட்டு தேர்ந்தெடுப்போம். எவன் பெயர் வருகிறதோ அவன் மற்றவர்களின் பிரதி நிதியாக, திரண்ட பணத்தை எடுத்துக் கொண்டு அவளிடம் சென்று வரட்டும். வந்து தன் அனுபவத்தை மற்றவர்களிடம் சொல்லட்டும்.”
இதற்கு அவர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ள, மிகப் பெரிய வசூல் நிதி சேர்ந்தது. எல்லோர் பெயரும் சீட்டுக்களில் எழுதப்பட்டு ஒரு பெரிய ட்ரம்மில் குலுக்கப்பட்டு, ஒரு பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதிர்ஷ்டம் அடித்தது ஒரு சாதாரண சோல்ஜருக்கு. அவன் அளவிலா ஆனந்தம் அடைந்து சுத்தமாகத் தலை வாரிக் கொண்டு ஷூஸ் பாலிஷ் போட்டுக் கொண்டு தன் மிகச் சிறந்த ஷர்ட் அணிந்து கொண்டு சேகரித்த பணத்தை எடுத்துக் கொண்டு மற்றவர்களின் பொறாமைப் பெருமூச்சுகள் தொடர அந்தப் பெண்ணை நோக்கிச் சென்றான்.
அந்த மிக அழகான பெண்ணுடன் அவன் அந்த மாலை நிஜமான கனவில் மிதந்தான். அவள் சிநேகிதமும், அவள் மென்மையும் அவள் வடிவமும் அவள் உடம்பின் சில்க்கும் அவள் வாசனையும் அவள் இன்பமான பேச்சும் பேச்சுக்குப் பின் மூச்சும்….
கடைசியில் அவளிடமிருந்து விடைபெறுகையில் அந்தப் பெண் அவனை “நீ யார்?” என்று கேட்டாள்.
“ஏன் கேட்கிறாய்?” என்றான்.
என்னைப் பிரபுக்களும் அரச குமாரர்களும்தான் பார்க்க வருவார்கள். உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை” என்றாள்.
அவன் “நான் ஒரு சாதாரண சோல்ஜர்” என்றான்.
“அப்படியா! உனக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது? எங்கேயாவது…”
“இல்லை இல்லை” என்று அந்த இளைஞன் தன் காம்ப்பில் நடந்ததை முழுவதும் சொல்லி விட்டான்.
அதைக் கேட்ட அவள் ஆச்சரியப்பட்டாள். “என்னை நினைத்து பல்லாயிரக் கணக்கானவர்கள் உருகுகிறார்களா? என்னிடம் இவ்வளவு பேர் ஆசை வைத்திருக்கிறார்களா? உன் கதை என் நெஞ்சைத் தொடுகிறது… அதற்காக நான் உனக்கு ஒரு பரிசு அளிக்கப் போகிறேன்… மறக்க முடியாத பரிசு… உலகத்திலேயே மிக விலை உயர்ந்த பெண்ணுடன் நீ ஒரு இரவை முழுக்க முழுக்க இலவசமாகவே கழித்தாய் என்று இருக்கட்டும். எனக்கு உன் பணம் வேண்டாம்….”
இவ்வாறு சொல்லி அந்தப் பெண் அவனிடம் அவனுடைய ஒரு ஃபிராங்க்கை திருப்பித் தந்து விட்டாள்!
தொடர்புடைய சிறுகதைகள்
ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயே புல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது. களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்று கவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது. பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள் சிற்றடி வைத்து இறங்கி, ...
மேலும் கதையை படிக்க...
சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை! புரட்சி தீ! சுவிசேஷக் கூட்டங்கள் - ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல் ) - 30 .9 -1973 அன்று கடவுளை ...
மேலும் கதையை படிக்க...
புதிய பெண் லெக்சரர், ரமணியை எப்படி சமாளிக்கப்போகிறாள் என்று கதி கலங்கிப்போனோம். ரமணி என்று பெயர் இருந்தால் ஒருவன் எப்படி இருப்பான்? குழந்தை முகம், பெண்மை மிளிரும் தேக அமைப்புடன்தானே? தப்பு. இவன் மிலிட்டரி மீசையுடன் காட்டாகுஸ்தி பயில்வான் போல இருந்தான். ...
மேலும் கதையை படிக்க...
சுலோசனா சின்ன வயசில் அடிக்கடி ஓநாய்கள் அவளைத்துரத்துவதாகக் கனவு கண்டாள். ஒவ்வொரு முறையும் தலை தெறிக்க ஓடுவாள். அவை நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு எச்சில் வழிய துரத்தும். அவை, அவளைப் பிடிப்பதற்குள் கண்விழித்து விடுவாள். வியர்வை வெள்ளத்தில் எழுந்து தண்ணீர் குடிப்பாள். ...
மேலும் கதையை படிக்க...
"உங்களைப் பார்க்க உங்கள்..." என்று வெளி ஆபீஸ் சொல்லி முடிப்பதற்குள் ஆத்மா குறுக்கிட்டு "எத்தனை முறை சொல்லிருக்கிறேன். இந்த வேளையில் பார்வையாளர்களை அனுமதிக்காதே என்று" வெட்டினான். கோபக் கதவு திறந்தது.
"நான் பார்வையாளர் இல்லை. உன் மனைவி"
"ஒ நித்யா! நீயா?"
"உள்ளே வரலாமில்லையா?"
"தாரளமாக. உனக்கு ...
மேலும் கதையை படிக்க...
திரும்பி வந்துகொண்டு இருந்தபோது, ஆஃபீஸர்ஸ் கிளப்பை அடுத்து இருந்த ஹாஸ்டல் வாசலில் கூட்டமாக இருந்தது. கம்பெனி லாரி நின்றிருந்தது. செக்யூரிட்டி ஆசாமிகள் சிகரெட் புகைத்தபடி அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பேசாமல் வீட்டுக்குப் போயிருக்கலாம்.
ஏதாவது திருட்டாக இருக்கலாம் என்று அருகே சென்று ...
மேலும் கதையை படிக்க...
பட்டாபிராமன் தினம் போல் சாயங்காலம் நடப்பதற்குக் கிளம்பினார். ரிட்டயர் ஆனதிலிருந்து அது இப்போது பத்து வருஷமாகிறது. அதிக நாள்கள் இந்த வாக் தவறினதில்லை. பட்டாபிராமன் நிறைய நாள் வாழ்ந்திருக்க விரும்பினார். தினசரி மூன்று மைல் நடந்தால் நிறைய நாள் வாழலாம் என்று ...
மேலும் கதையை படிக்க...
இப்போதும் சிலர் இரண்டணா நாலணா என்ற சொற்களைப் பயன்படுத்தினால் சுதந்திரத்துககு முன் பிறந்தவர்கள் என்று நிச்சயமாக சொல்லலாம் இரண்டணா ஒரு தனி நாணயம். பித்தளை. சதுர வடிவில் இருக்கும். ஒரணா போல அசிங்கமான நௌ¤நௌ¤கள் இல்லாமல் கூர்மையான முனைகளை மழுப்பி ஒருபககததில் ...
மேலும் கதையை படிக்க...
‘அன்புள்ள டாக்டர் ராகவானந்தம்,உங்கள் 16-8-73 தேதியிட்ட விண்ணப்பம் கிடைக்கப் பெற்றோம். நீங்கள் குறிப்பிட்ட முறைப்படி தானியங்கும் ஊர்தியொன்றைத் தயாரிப்பது விஞ்ஞான முன்னேற்றத்தின் தற்போதைய நிலையில் சாத்தியம் இல்லை என்று அரசாங்கம் நம்புவதால் உங்கள் விண்ணப்பத்தை ஏற்பதற்கில்லை.இக் கடிதம் உங்கள் 17-8-73 தேதியிட்ட ...
மேலும் கதையை படிக்க...
நாஜி ஸல்யூட் போல நின்ற கான்கிரீட் கம்பங்கள், விண் என்று முடிச்சு முடிச்சாக முள் கம்பிகள், விரோதமாக மூடியிருக்கும் கேட், உள்ளே பசுமைப் பண்ணை,. காற்றில் பயிர்களின் பலவிதப் பச்சைகள். மஞ்சள் பச்சை, எமரால்ட் பச்சை, பாட்டில் பச்சை, கண்மட்டத்துக்கு உயர்ந்த ...
மேலும் கதையை படிக்க...
எப்போதும் போல ஒரு சுஜாதா டச் . நச்.
நல்ல விருந்து .