டேவிட்டின் மர்மக்கொலைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 19,797 
 

டேவிட் கல்லூரி முடித்து வேலை தேடுகிறேன் என்ற போர்வையில் பொழுதை போக்கும் ஒரு பட்டதாரி. இவனெல்லாம் டிகிரி முடிபானென்று யாரும் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள், உண்மையில் டேவிட்ட்டை பொறுத்தவரை அது ஒரு கனவுதான். வாரமுழுக்க படம் பார்ப்பதும் தூங்குவதுமாக இருப்பவன் வார இறுதியில், வேறு ஒருவனாக இருப்பான் (ஒரு படத்தில் ஆறு மணிக்கு மேல் வடிவேலு இருப்பாரே அது போல்), என்ன நடந்தது நடக்குது நடக்க போவது எதுவுமே தெரியாது இரண்டு நாட்களுக்கு, எப்படியாவது ரெண்டு நாட்களுக்கான “பெட்ரோலை” உசார் பண்ணிருவான்.

டேவிட் ஒரு ஆங்கில பட பைத்தியம் குறிப்பாக ஹார்ரர் படமென்றால் அவனுக்கு சோறு தண்ணி எதுவுமே வேண்டாம், அவன் வருடமுழுக்க பார்ப்பது saw படத்தை திரும்ப திரும்ப பார்ப்பான்.  இல்லையெனில் final destination இவ்விரு படங்களின் அணைத்து பாகங்களும் அவனுக்கு மனப்பாடம் அவ்வளவு முறை பார்த்திருக்கிறான்.

அந்த இரு படங்களின் தாக்கத்தால், அவன் ரோட்டில் நடக்கும் போது பேருந்தில் பயணிக்கும் போது,  நண்பனுடன் வண்டியில் செல்லும்போது, இப்படி அவன் பயணிக்கும் எல்லா நேரத்திலும் அதே சிந்தனையில் இருப்பான்.

யாரவது நன்றாக நடந்து செல்லும் போது அவரை கடக்கும் லாரி டயரில் அவர் சிக்கி அவர் தலை சிதறி கிடப்பது போல் ஒரு விஸ்வல் தோன்றும், வண்டியில் செல்லும் போது அவனையறியாமல் அருகில் செல்லும் லாரி அல்லது பேருந்து டயரை பார்த்தாலும் மண்டையில் படம் ஓடும் டேவிடுக்கு.

சில நேரத்தில் யாரையாவது அதுபோல் கொள்ள வேண்டும் இல்லை, கொள்வதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஓடும்.

இது எண்ணத்தோடு முடிய வில்லை. இதை அவன் நண்பர்களிடம் சொன்னபோது, எல்லோரும் அவனை கலாய்த்தார்கள். “உன் மூஞ்சிய கிட்டகக்க பாத்தாலே ஆள் க்ளோஸ் மச்சி” என்று.

ஆனால் டேவிட் கொஞ்சம் தீவிரமாகவே இருந்தான், கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். ஆனால் தன்னை பாதித்துவிட கூடதென்பதில் தெளிவாக இருந்தான்.

அன்று அது நடந்தது.

வழக்கம் போல், சனி இரவு செம டைட்டா இருந்த டேவிட், உருண்டு பொரண்டு அறைக்கு வந்தபோது நள்ளிரவு டேவிட்டின் சட்டை மேல் படுத்திருந்தான் அவன். டேவிட்டுக்கு கோபம் தலைகேறியது. அவனிடம் சண்டையிடவில்லை. பார்த்துவிட்டு உடனே வெளியே வந்து யோசிக்க ஆரம்பித்தான். போதையில் தான் பார்த்த படங்களின் காட்சிகளும் கடைசியாக பாரில் பாட்டிலால் அடித்து மண்டையில் ரத்தம் வழிய ஒருவன் சென்றதும் கண்முன் தோன்றி மறைந்தது.

மேலும் கீழுமாக மூச்சை இழுத்தவன் விறு விறுவென போய் ரோட்டோரமாக கிடந்த கறுங்கல்லை தூக்கிகொண்டு அரையை நோக்கி விரைந்தான். கதவை தன் கை தோள்பட்டையால் மெதுவாக திறந்து அவனருகில் சென்றான்(கையில் துப்பாக்கியுடன் போலீசார் நுழைவார்களே அதுபோல் ), நன்றாக உறங்கிகொண்டிருந்தான் அவன். தனது தலையை சிலுப்பி லேசான தெளிவு பெற்று கல்லை ஓங்கி அவன் தலையில் போட்டான். ரத்தம் காலில் தெரித்தது, அவன் துடிதுடிக்க தொடங்கினான். மேலும் அவன் கை கால்கள் அடங்கும் வரை அடித்துகொண்டிருந்தான்(உரல்களில் நெல் குத்துவது போல்).

அவன் கண்கள் அதனிடத்தை விட்டு வெளியே வந்திருந்தது, அதை பார்த்து பார்த்து ரசித்தான், ரத்தம் பிசுபிசுத்தது, அவனை சாரி “அதை” இப்போ அவனரையில் ஒரு மூலையில் யார் கண்ணிலும் படாதவாறு ஒளித்து வைத்தான்.

இதோடு நிற்கவில்லை, மேலும் டேவிட் தினம் தினம் இதை தொடர்ந்தான். ஒருநாள் தனது அலுவலகத்தில் ஒருவனை பிடித்து அவன் முகத்தில் ஹிட் அடித்தான். அவன் சாகும் வரை மூக்கிலும் வாயிலும் அடித்தான். மூச்சுதினறி அவன் இறப்பதை கண்ணிமைக்காமல் கண்டு ரசித்தான், பழைய பைல்கள் மற்றும் ஓனர் வீட்டு பழைய பொருட்களெல்லாம் போடும் ஸ்டோர் ரூமில் போட்டு மறைத்தான். ஒவ்வொன்றும் டேவிட்டிற்கு உற்சாகம் தந்தது.

தினம் தினம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என விளையாடினான் டேவிட், முதல் கொலையை செய்து இன்றோடு ஒரு வருடம், இப்போதெல்லாம் டேவிட்டிற்கு கொலை செய்வது பழகிப்போயிருந்தது, ஹார்ரர் படங்களையும் பார்ப்பதில்லை. இவன் செய்தவற்றையே படம் பிடித்து வைத்திருந்தான்.

இன்றோடு நூறு கொலைகள், ஒவ்வொன்றையும் செய்ததும் பலத்டரியாவின் ஆறு கால்களையும் பிச்சிவிடுவான். பிறகு அவை தலை இல்லாமல் இருவாரம் வாழும் என அறிந்து சிதைத்து விடுவான், வெள்ளை ரத்தம் அரைமுழுக்க தெளித்திருக்கும், அணுகுண்டு போட்டால் கூட அழியாது என்பார்கள். டேவிட் கொன்ற ஒன்று கூட அப்படி இருந்தது இல்லை. மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருந்தான், இப்போதெல்லாம் அவன் அரையில் அந்த இனமே இல்லை, குடும்பம் குடும்பமாக கொன்றிருக்கிறான் எப்படி இருக்கும்.

(பலத்டரியா(Blattaria) கரப்பான்களின் இன்னொரு பெயர் )

ஆம் கரப்பான்கள், ஆனால் அவன் முதல் முதலில் செய்தது கொலைதான் ரசித்து ரசித்து செய்தான் போதையில், அந்த வெள்ளை ரத்ததை காணும்போதுதான், அவனுக்குள் இருந்த அந்த இனம்புரியாத ஆசை தீர்ந்தது. அதன் பெயர் blattaria வாக இருந்தாலும் டேவிட்டிர்க்கு இருந்த நோயின் பெயர்தான் தெரியவில்லை .

டேவிட் இப்போதெல்லாம் ஹார்ரர் படங்கள் பார்ப்பதில்லை ஒன்லி ரொமான்ஸ் 🙂 தவிர இப்போது டேவிட்டுக்கு வேலையும் கிடைத்துவிட்டது, அதனால் கொலை செய்ய நேரமும் இல்லை!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *