“எங்க குடும்பம் ரொம்ப பெரிசுங்க நான் “அவளை” இருபத்து நாலுமணி நேரமும் தொட்டுக்கிட்டே இருக்கணும் நினைக்கிறேன், ஆனா அவ படுத்துற பாடு இருக்கே, ஆதாங்க என்னால தாங்க முடியல!
“நான் அவளைத் தொடும் அடுத்த நொடியில்… என்னிடமிருந்து விலகி ஓடிறாள்“
இருங்க அவள் பேரைச் சொல்லையே, அதாங்க “சின்னப்பொண்ணு ”
“போங்க எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு, ஓரே வீட்டுல இருந்துகிட்டு. அடிக்கடி சேரக்கூடாதுன்னு சொன்னா யாருக்குத்தான் கோபம் வராதுங்க.”.
கோபத்தோடு கவலையும் கூடிகிட்டே போச்சு”
“ வீட்டிற்குள் நான் அவளை துரத்துவதும், அவள் விலகி ஓடுவதும். அவளுக்கு வேண்டுமானால், அது சுவாராஸ்யமாக இருக்கலாம், என்னால முடியல, அலுத்து போச்சு, ஒரு நாளா? இரண்டு நாளா… காலம் முழுக்க இதுதான்டா, ஒனக்குன்னா” நீங்களே சொல்லுங்க…இது நியாமா?.
இந்த கண்ணாமூச்சு விளையாட்டுக்கு ஒரு வழி கிடைத்தால் நன்றாக இருக்குமே, யாரைக் கேட்டால்…… என்று வெகுநேரம் யோசித்தேன். அப்போது எனக்கு “காலா” நினைவுக்கு வந்தார்.
“அப்புறமென்ன எடுத்தேன் ஓட்டம்…அவரிடம் சரணாகதி”
“குருவே “நாளெல்லாம் அவளுடன் கூடி சுகிக்க வேண்டும்” அதற்கு தங்கள் ஆசி வழங்க வேண்டும் ” தலை வணங்கி நின்றேன். வணங்கிய தலை நிமிர்ந்த போது..”குருவின் கண்கள் கோவைபழமாய் சிவந்திருந்தன.
“ அடேய் அற்ப பதரே…. கைக்கட்டி நிற்பவனே, அசை எழலாம், பேராசைக் கூடாதுடா? ”
கூடும் நேரமென்பது…. கட்டுப்பாட்டுடன் கண்ணியமாய் கடைப்பிடிக்க வேண்டியது. அதை தாறுமாறாய் கடைப்பிடித்தால் நீ கெட்டு விடுவாய், நீ கெட்டு விடுவதுடன் மட்டுமல்ல இயற்கைக்கு துன்பத்தை ஏற்படுத்தி விடுவாயடா”
“உன் பேராசை நிறைவேறாது….. ஆனால் ஆசையை மட்டும் வேண்டுமானால் நிறைவேற்ற ஆசி வழங்குகிறேன்… ஓர் நாளில் சிலமுறை மட்டுமே அதுவும் சிறிது நேரம் மட்டுமே சுகித்திருப்பாய்… ”ததாஸ்து” என்று ஆசி வழங்கினார்.
“வணங்கினேன் குருவே, தங்கள் ஆசி என்பாக்கியம்”என்று சொல்லிவிட்டு …..காலாவின் கட்டளையை நிறைவேற்ற கூடல் ஆசையோடு வேகமெடுத்தேன் ஆதாங்க “கடிகாரத்தின் பெரிய முள்ளான “ பெரிய பையன்“.
தொடர்புடைய சிறுகதைகள்
”ஆ” அம்மாவென அலறினான்” எதிரே பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவள் காதில் …என்ன விழுந்த த்தோ… ஸ்மார்ட் போனில்… இலாகவமாய் விரல்களால் விளையாடினாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம்….. சைரன் ஒலி கேட்டது. ஏதோ, ஆம்புலன்ஸ் என்று பார்த்தால் போலிஸ் ஜீப் … காலோரம் உரசியபடியே ...
மேலும் கதையை படிக்க...
“காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் உழைச்சு ஓடா தேயறோம்” மினிஸ்டர்; காட்டன்ல சட்டை போட்டுக்கிட்டு, துளியும் கசங்காம கார்ல வந்துட்டு போற முதலாளிக்கு நம்ம கஷ்டம் இன்னா தெரியும்” ஒரு பணியாளர் இன்னொரு பணியாளாரிடம் பேசிக்கொண்டிருந்ததை….. தொழில் நிறுவனத்தைச் சுற்றி பார்த்துக் ...
மேலும் கதையை படிக்க...
டாக்டர், என் ஒடம்பை செக் பண்ணுங்கோ”
என்னப்பா ஆச்சு?
நடந்தா கூடவே வருது டாக்டர்!
எதுப்பா?
ஒடம்புதான் டாக்டர்
அப்படியா?
அப்புறம்
கண்ணு மூடுனா தூக்கமா வருது டாக்டர்
கண்ணு துறந்தா
பார்க்கறதெல்லாம் பளிச்சுன்னு தெரியுது டாக்டர்
அப்படியா? என்னை தெரியுதா?
நல்லாவே தெரியுது டாக்டர்
சரி, யோசிக்க வேண்டிய விஷயம்தான்
காலைல பத்து இட்லி சாப்பிட்டா கூட மத்தியானம் ...
மேலும் கதையை படிக்க...
”புளியமரத்துக்கிட்டா போனா, ஆவி புடிச்சிக்கும்-ன்னு” சின்ன வயசில அம்மா சொன்னது அப்படியே மனசுல ஆழமா பதிஞ்சதல, புளியமர பக்கமே போக்கூடாது-ன்னு வைராக்கியமாய் இருந்த புண்ணியகோட்டிக்கு வந்த து சோதனை!
”பேய் காற்றுடன், பேய் மழையும் சுழற்றியடிக்க அவனின் வைராக்கியம் மழையில் கரைந்து வேறுவழியில்லாமல் ...
மேலும் கதையை படிக்க...
இராகவனுக்கு…அந்த போர்ஷனைக் காலி செய்வதற்கு.மனசே ஒப்பவில்லை. ஆனால், வீட்டின் உரிமையாளர், “வெளிநாட்டிலிருந்து அவர் பையன் வருவதாகவும், அவனுக்கு அந்த போர்ஷனை ஒதுக்கி தரப்போவதாகவும்” சொன்னார்.
ஆனால், அதில் உண்மை துளியுமில்லை, காரணம் மாடியிலேயே வசதியாக நான்கைந்து அறைகள் விசாலமாக இருக்கின்றன. தம்மை காலி ...
மேலும் கதையை படிக்க...
கதை கேளுங்கள்: பொறுப்பு
சரியாய் ஆறுமணிக்கு வந்தவிடுவதாக பொறுப்பாய் சொன்ன ஜோஸ்வா, இன்னமும் வரவில்லை! இன்று அவனது காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவதாக ஜாடையாய்க் கூறியும் அவன் வராத்து, அவன்மீது நம்பிக்கை இழக்கச் செய்ததுடன், பொறப்பில்லாதவன் எனவும் நினைக்க வேண்டியதாயிற்று ஜானுவிற்கு.
மணி ஏழாகிவிட்டிருந்த்து. ஒரு ...
மேலும் கதையை படிக்க...
”மூச்சிரைக்க லக்கேஜ்களைத் தூக்கி கொண்டு அவசர அவசரமாக மக்கள் அதிக நடமாட்டமுள்ள ரெயில் ஜங்ஷனிற்குள் நுழைந்து… சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த பாலாஜியின் அலைபேசியில்.. ”உறலோ ! இன்னாங்க ஸ்டேஷனுக்கு போயிட்டீங்களா? ரெயில் வந்திடுச்சீங்களா? எத்தனை மணிக்கு ரெயில் புறப்படும்? லக்கேஜ்லாம் பத்திரமா ...
மேலும் கதையை படிக்க...
”என்ன மீனு சந்தோஷமா இருக்கே, ஏதாவது விசேஷமா ?- கணவன் ராஜேந்திரன் கேட்டான்.
”எங்க அப்பா கேரம் டோர்னமென்ட் விளையாட திருச்சி வந்திருக்காராம், முடிச்சுட்டு நம்ம வீட்டுக்குத்தான் வர்றாராம்”!
”வரட்டும்…வரட்டும்…உன் அப்பா டிஸ்டிரிக்ட் லெவல்ல பெரிய சாம்பினயன்தானே? என்கிட்ட மோதி ஜெயிக்கட்டும், நான் ஜெயிச்சா ...
மேலும் கதையை படிக்க...
“எனக்கு பேஸ்புக்குல அறுநூற்று சொச்சம் பிரன்ட்ஸ் இருக்காங்க, அவங்க கூட நான் பேசி பழகி என்னோட கருத்த அவங்களுக்கு சொல்றேன், அவங்களும் என்னோட கருத்துக்கு லைக்ஸ் தாராங்க” என பெருமிதப்பட்டுக் கொள்வாள் பொன்னி.
காலை எழுந்தவுடன் ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு, வீட்டுக்காரரை ...
மேலும் கதையை படிக்க...
பிரபல புடவைக் கடையின் மேனேஐர்தான் கேசவன். ஆனால் அவன் மனைவி சித்ராவே சேலைக் கட்டுவதில்லை. என்ன செய்வது? சித்ரா தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கிறாள். பெரும்பாலும், அவள் நடிப்பது மாடர்ன் பெண் கதாபாத்திரங்களில்தான். அதற்காக மாடர்ன் டிரஸ் போட்டுப் போட்டு அப்படியே அதற்கு ...
மேலும் கதையை படிக்க...
மிக்க நன்றி
ரசித்தேன்.