கார்க்கி வ‌ழ‌ங்கும் “ஃபோனை போட்டு, கேளு பாட்டு”

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 17, 2023
பார்வையிட்டோர்: 2,435 
 
 

த‌மிழ் ப‌திவுல‌கின் ச‌மீப‌த்திய‌ வ‌ள‌ர்ச்சியைத் த‌ன் விள‌ம்ப‌ர‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ நினைக்கும் டுபாக்கூர் எஃப் எம், ப‌திவ‌ர் ஒருவ‌ரை வைத்து நிக‌ழ்ச்சி ஏற்பாடு செய்கிறது. நிக‌ழ்ச்சிக்கு “யூத்தான‌ ப‌திவ‌ர் தேவை” என்ற‌ விள‌ம்ப‌ர‌ம் பார்த்து சென்ற‌வ‌ர்க‌ளில் கார்க்கி தேர்வு செய்ய‌ப்ப‌டுகிறார். முத‌ல் நாள் மாலையில் இருந்தே காத்திருந்து தேர்வு ஆகாத‌த‌தால் கோப‌த்துட‌ன் அங்கிருந்து செல்கின்ற‌ன‌ர் யூத் கேபிளும், நைஜீரியா ராக‌வ‌னும்.

இதோ நிக‌ழ்ச்சி ஆர‌ம்ப‌ம்:

கார்க்கி: இது உங்க…ள் டுபாக்கூஊஊஊஊஊஊஊர் எஃப் எம்மின் “ஃபோனைப் போட்டு, கேளு பாட்டு” நிக‌ழ்ச்ச்ச்ச்ச்ச்ச்சி.. உட‌னே உங்க‌ ஃபோனை எடுத்து சிங்கிள் சீரோ ட‌புள் சீரோ ட்ரிபுள் சீரோ அடிங்க‌, எங்கிட்ட‌ பேசுங்க‌, உங்க‌ளுக்கு புடிச்ச பாட்டை கேளுங்க‌

ட்ரிங்.. ட்ரிங்

ஹ‌லோ.. இது டுபாக்கூர் எஃப் எம், நீங்க‌ யாரு?

நானு விருக‌ம்பாக்க‌த்துல‌ இருந்து குர்சிம் பேசுறேங்க‌..

சொல்லுங்க‌ குர்சிம், நீங்க‌ என்ன‌ ப‌ண்ணுறீங்க‌?

என்ன‌த்த‌ ப‌ண்ணுற‌து, ஒண்ணும் ப‌ண்ணாம‌ சும்மாத்தான் இருக்கேன்.

ஏங்க‌ இவ்ளோ ச‌லிச்சிக்கிறீங்க‌? ந‌ல்ல‌ விச‌ய‌மே எதுவும் இல்லையா என்ன‌?

குடும்ப‌த்தோட‌ செல‌வு ப‌ண்ண‌ நிறைய‌ டைம் கிடைக்குது, நானும் ச‌ந்தோச‌மா இருக்கேன், என் ஃபேமிலியும் ச‌ந்தோச‌மாத்தான் இருக்கு

ந‌ல்ல‌ விச‌ய‌ம்.. ச‌ரி சொல்லுங்க‌, உங்களுக்கு என்ன‌ பாட்டு வேணும்?

“நான் செத்துப் பொழ‌ச்ச‌வ‌ன்டா, எம‌னைப் பாத்து சிரிச்ச‌வ‌ன்டா”

என்ன‌து நீங்க‌ சிரிக்கிறீங்க‌ளா? எத்த‌னை பேர் வ‌யிறெரிய‌ப் போறாங்களோ!! அதெல்லாம் ப‌ழைய‌ பாட்டு, இப்ப‌ போட‌ முடியாது.. அடுத்த‌ கால‌ரை பாப்போம்.

ட்ரிங்.. ட்ரிங்..

ஹ‌லோ, யார் பேசுறீங்க‌?

நானு கோய‌முத்தூர்ல‌ இருந்து தென்க‌ரை சூல‌ன் பேசுறேங்க‌..

சொல்லுங்க‌ சூல‌ன், ஆயிர‌த்தில் ஒருவ‌னைத் த‌விர‌ வேற‌ எந்த‌ ப‌ட‌த்துல‌ இருந்து வேணும்னா பாட்டு கேளுங்க‌, போடுறோம்.

என‌க்கு சிம்லா ஸ்பெஷ‌ல்ல‌ இருந்து

ஆப்பிள் வேணுமா?

யோவ் முழுசா கேளுய்யா, “உன‌க்கென்ன‌ மேலே நின்றாய், ஓ ந‌ந்த‌லாலா” பாட்டு போடுங்க‌..

உங்க‌ளுக்கு ஏன் அந்த‌ பாட்டு புடிக்கும் சூல‌ன்?

அதுல‌ ரெண்டு வ‌ரி வ‌ரும் பாருங்க‌..

யார் யாரோ ந‌ண்ப‌ன் என்று, ஏமாந்த‌ நெஞ்ச‌ம் உண்டு
பால் போல‌ க‌ள்ளும் உண்டு, நிற‌த்தாலே ரெண்டும் ஒன்று

அப்ப‌டின்னு, அதுக்காக‌த்தான்

இருங்க‌.. தேடிப்பாக்குறேன், அட‌ அந்த‌ பாட்டும் இல்லைங்க‌.. இருங்க‌ அடுத்த‌ கால‌ரை பாப்போம்.

ஹ‌லோ இது டுபாக்கூர் டிவிங்க‌ளா?

இல்லைங்க‌, எஃப் எம்…

அப்ப‌டிங்க‌ளா, மாத்தி கூப்பிட்டுட்டேன் போல‌, கொஞ்ச‌ம் குழ‌ப்ப‌மாத்தான் இருக்கு.

நீங்க‌ எங்க‌ இருந்து பேசுறீங்க‌?

நான் கீழ்பாக்க‌த்துல‌ ஆஸ்பிட்ட‌ல்ல‌ இருந்து பேசுறேன்.

(கார்க்கி ம‌ன‌துக்குள்): அட‌ப்பாவிங்க‌ளா, இதை எல்லாம் க‌ண்பார்வையில‌யே வெச்சுக்க‌மாட்டாங்களா, குறைஞ்ச‌து ஃபோனையாவ‌து கைக்கு எட்டாம‌ வெக்க‌ மாட்டாங்க‌ளா? (ச‌த்த‌மாக‌) நீங்க‌ ஃபோனை ப‌க்க‌த்துல‌ யாராவ‌து அட்டென்ட்ட‌ர் இல்ல‌ டாக்ட‌ர் இருந்தா குடுங்க‌..

நாம‌ அடுத்த‌ கால‌ரை பாக்க‌லாம்.

ஒரு நிமிச‌ம் இருங்க‌, என‌க்கு ஒரு கால் வ‌ருது..

செல்ஃபோனில் “ஹா.. சொல்லு செல்ல‌ம்.. சாய‌ங்கால‌ம் மீட் ப‌ண்ண‌லாம்.. ஓகே. ஓகே.. ம்ம்ம்”

பேசி முடித்து மீண்டும் நிக‌ழ்ச்சியில்,

சொல்லுங்க‌.. நீங்க‌ யார் பேசுறீங்க‌?

நான் குப்துல்லா பேசுறேன்

சந்தோஷங்க! என்ன பாட்டு வேணும் உங்களுக்கு?

பாட்டெல்லாம் வேணாங்க. அதை நானே பாடி அடுத்தவங்களை கொன்னுக்குறேன்.ஒரே ஒரு வசனம் மட்டும் போடுங்க.

என்ன வசவுங்க‌.. ச்சீ.. வ‌ச‌னங்க??

இறைவா! என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று.எதிரிகளை நான் பாத்துக்குறேன்

ம்க்ம்.. இதுக்கு ஒண்ணும் குறைச்ச‌ல் இல்ல‌..

எல்லாம் ஆம்ப‌ளைங்க‌ளா கூப்பிடுறாங்க‌ப்பா.. இதோ ஒரு பெண்ணோட‌ குர‌ல்

சொல்லுங்க‌ மேட‌ம், உங்க‌ பேர் என்ன‌?

நான் ம‌துரையில‌ இருந்து பேசுறேங்க‌, பேரு ம‌ஞ்சுளாங்க‌..

ந‌ல்ல‌ ம‌ங்க‌ள‌க‌ர‌மான‌ பேருங்க‌.. சொல்லுங்க‌ என்ன‌ பாட்டு வேணும்?

என‌க்கு “புதுமைப்பெண்” ப‌ட‌த்துல‌ இருந்து “ஒரு தென்ற‌ல் புய‌லாகி வ‌ருதே” பாட்டு போடுங்க‌

(சிறிது நேர‌த் தேட‌லுக்குப் பின்) அட‌டா அந்த‌ பாட்டு இல்லைங்க‌, ந‌ன்றிங்க‌.. அடுத்த‌ நேய‌ரைப் பாக்குறேன்.

(க‌ர‌டு முர‌டான‌ ஒரு குர‌ல்) டேய் ஒரு பெண் நேய‌ர் கேக்குற‌ப் பாட்டைப் போடாத‌ பார்ப்ப‌ன‌ப் பொறுக்கி த‌டியா?

ஹ‌லோ என்ன‌ங்க‌, இப்ப‌டி பேசுறீங்க‌, நீங்க‌ யாரு?

நான் தென‌வு பேசுறேன்..

என்ன‌து தென‌வா? யேய்… நீதான‌ கொஞ்ச‌ நேர‌த்துக்கு முன்னால‌ கீழ்பாக்க‌த்துல‌ இருந்து பேசுன‌, இப்ப‌ எதுக்கு வேற‌ வாய்ஸில‌ பேசுற‌..

அதெல்லாம் தெரியாது நீ ஒரு பொறுக்கி, உன் வீட்டுக்கு நாங்க‌ வ‌ந்து ர‌க‌ளை ப‌ண்ணுவோம்.

திடீரென‌ அடுத்த‌ குர‌ல்… ச்சீ த்தூ.. ஆணாத்திக்க‌ சமூக‌த்தின் நீட்சிதான் இந்த‌ நிக‌ழ்ச்சியே, ஒரு பெண் கேட்கும் பாட‌லைக் கூட‌ ஒலிப‌ர‌ப்பாத‌ நீங்க‌ள் எல்லாம் நாய்க‌ளை விட‌ கீழான‌வ‌ர்க‌ள்.. த்தூ.. த்தூ.. த்தூ.. த்தூ..

ஏங்க‌, எதுக்கு இப்ப‌ நாய்னெல்லாம் சொல்றீங்க‌, இந்த‌ ப்ரோக்ராம் ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கு, போலீஸ்க்கு போவோம் தெரியும்ல‌?

க்ழ்லாஜ்ட‌ஜ்ட்ஃப‌ அஜ்க்ல்த்ஃபாட் அட்ஃப்க்ஹ‌டிஹ்

ஹ‌லோ, ரீசீவ‌ரை தொட‌ச்சிட்டு பேசுங்க‌, நீங்க‌ துப்புன‌ எச்சி ரிசீவ‌ர்ல‌ ரொம்பி என‌க்கு ஒண்ணுமே ச‌ரியா கேக்குல‌,

நாய் என்று நான் என்னையே சொல்லிகிட்டேன்

இன்னிக்குதான்யா நீ க‌ரெக்டா பேசியிருக்க..

(குர‌ல் மாறுகிற‌து) விடுங்க‌ அங்கிள், நீங்க‌ என்ன‌ சொன்னாலும் சில‌ ப‌ன்னிங்க‌ளுக்கு புரியாது

இதுக்கு அந்த‌ ஆளே ப‌ர‌வாயில்ல‌, நாய்ன்னு ம‌ட்டும் சொன்னாரு, நீ என்ன‌மோ ப‌ன்னின்ற‌, இன்னிக்கு என்ன‌ எல்லாரும் க‌ண்ணாடி முன்னால‌ நின்னு பேசிட்டு இருக்கீங்க‌ளா?

இன்னிக்கு என‌க்கு டைம் ச‌ரியில்ல‌.. அடுத்த‌ கால‌ரை பாப்போம்..

ஹலோ.. பேர சொல்லுங்க சார்..

டேய்.. நாதாரி..&*&^%$.

சார்.டீசண்ட்டா பேசுங்க.

எங்க வீட்டுக்கு நீ கால் போட்டா டீசண்ட்டா பேசனுமா?

சாரி. நீங்கதான் கால் பண்ணியிருக்கிங்க‌.

நீ முதல்ல‌ பண்ணத பார்த்துட்டுதான் நான் பேசறேன்டா பேமானி

பேர் சொல்லுங்க சார்

நான் நெருப்பு நீல‌மேக‌ம் பேசறேன்டா.

யாரு? வ‌டிவேலு தீப்பொறி திருமுக‌மா வ‌ர்ற‌ ப‌ட‌த்துல‌ சிங்க‌முத்து வ‌ருவாரே, அந்த‌ கேர‌க்ட‌ரா சார்?

உங்க ஸ்டூடியோவுக்கே வர்றேன்டா..

என்ன பாட்டு சார் வேணும்?

பாட்டா? உனக்கு வேட்டு வைக்க போறேன்டா.

(கார்க்கி ச‌லிப்புட‌ன் ம‌ன‌திற்குள்) இன்னிக்கு எவ‌ன் முக‌த்துல‌ விழிச்சேன்னு தெரிய‌லையே.. அட‌ ச‌ட்.. அந்த‌ புது க‌ண்ணாடிய‌ பெட்டுக்கு நேரா மாட்டாத‌ன்னு சொன்னேன், கேட்டாங்க‌ளா..

ஏதோ ஒரு எஸ்.டி.டீ கால் வருகிற‌து.

சொல்லுங்க சார் உங்க பேர்?

நான் பெங்க‌ளூர் ப‌வா பேசுறேன்.

என்ன வேணும் சார்?

நியாயம் வேணும். ஆதாரம் வேணும்.

சார். அதெல்லாம் கிடைக்காது, என்ன‌ பாட்டு வேணும்னு ம‌ட்டும் சொல்லுங்க‌..

போடா என் வென்ட்ரு.. என்னை ஒருத்த‌ன் திட்டுறான்னு சொல்லிட்டு இருக்கேன், நீ பாட்டு கேக்குற‌..

நிக‌ழ்ச்சி இய‌க்குன‌ர் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ உள்ளே வ‌ருகிறார். கையில் ஒரு நீள‌மான‌ துணி..

என்னது இது? அடுத்த காலர் எங்க‌?

இதாண்டா அடுத்த‌ கால‌ர்.. வெளில இந்த நிகழ்ச்சியை கண்டிச்சும் ஆதரிச்சும் சட்டையக் கிழிச்சுட்டு சண்டை போட்டத சமாதானப்படுத்தப்போய் கிழிஞ்ச என்னோட சட்டை காலர்தான் இது, இந்தா வெச்சுக்க. மொதல்ல சீட்டை விட்டு எந்திரிச்சு ஓடிப்போய்டு.. ஆமா.

கார்க்கி எழும்முன் ஃபோன் அடிக்கிற‌து.. தெரியாம‌ல் கை ப‌ட்டு அடுத்த‌ முனையில் இருப்ப‌வ‌ர் பேச‌ ஆர‌ம்பிக்கிறார்.

ஹ‌லோ, நான் காதி பேசுறேங்க‌

(கார்க்கி ம‌ன‌துக்குள்) ந‌ல்ல‌ வேளை பேதின்னு சொல்லாம‌ போனாரு..

சொல்லுங்க‌ காதி, என்ன‌ பாட்டு வேணும்?

பாட்டெல்லாம் வேணாங்க‌, ஒரு பேட்டி ம‌ட்டும்…

“ம‌றுப‌டியும் ஆர‌ம்ப‌த்திலேர்ந்தா” என்ற‌ அல‌ற‌லுட‌ன் பீதியாகி கார்க்கி, டைர‌க்ட‌ர் எல்லாம் பின்ன‌ங்கால் புட‌னியில் அடிக்க‌ ஓடுகிறார்க‌ள்.

– ஜூலை 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *