கட்டிப்போடு….. கட்டிப்போடுடா….

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 33,418 
 
 

காபி உறிஞ்சும்போது கோடு கோடாய் சுருங்கிய சிவந்த உதடுகளை கண் கொட்டாமல் பார்த்துக் கிறஙகினான் ஜீவா. கழுத்துக்கு கொஞ்சமே இறங்கி சிக்கென்று கழுத்தைப் பிடித்திருந்த பனியன் மீது அவனுக்குக் கோபம் வந்தது.. கொஞ்சம் தளர்ந்தால் எவ்வளவு பரவசப்படலாம்.. இந்த பனியனுக்கு இரக்கமே கிடையாது…

“யோவ் காப்பியைச் சாப்பிடு.. மேயறியே…”

“இல்லடா… வேறு யோசனை…”

“எல்லாம் தெரியும்… உடாத… காப்பியை எடு. உன் புத்தி எனக்கா தெரியாது.. கொறப்பார்வை.. இப்படியே பார்த்தே முட்டைக் கண்ணை அவிச்சிடுவேன்… வெட்கங்கெட்ட ஆசாமிய்யா நீ….”

“நான் பார்த்தா கோவிச்சிக்கிறே… வேற எத்தனை பேர் பார்க்கிறாங்க..தா…. அவனைப் போய்க் கேளேன்…”

“அதைக் கேட்க வேண்டியது உன்வேலை.. நீ ஆம்பிள்ளை தானே….என்னை ஒருத்தன் பார்த்தால் பல்லக் குத்திக்கிட்டு சுகமா உட்காந்துட்டு இருப்பே அப்படித்தானே…”

“அவனைப் பார்த்தால் அடியாள் மாதிரி இருக்கிறான்.. அவன் கிட்ட மோத முடியாது.. எனக்கென்னும் அவசரமில்லை.. ஒரு மூனு மாசம் அப்புறம் நான் சொன்னபடி நடந்துக்க வேண்டியவதானே.. நீ…”

“மூணு வருஷமானாக்கூட உன் நெனைப்பு நடக்காது..

“நீ இந்த மாத்ரு ப+தம்… நாராயண ரெட்டி எல்லாம் படிக்க மாட்டியா ஸ்ரீ..”

“நீ படிக்கிறியே போதாது… ஒரு கம்ய+ட்டர் என்ஜினியர் மாதிரி பேசமாட்டியா… ஒரு ஜட்கா வண்டிக்காரன் ரசனை உனக்கு இருக்கு..”

“சரி விடு எதுக்குப் போன் பண்ணி வரச் சொன்னே.. திட்டி சாகடிக்கவா….”

“இல்லை அப்படியே என்னை முழுங்கி ரசிக்கிறதுக்கு….”

“ஏன் நான் உன்னை ரசிக்கறதுலே என்ன தப்பு..”

“ஆமா.. நீங்க என்னை முழுசா பட்டா போட்டு சொந்தமாக் கிட்டீங்க.. என்னவானாலும் செய்வீங்க….”

அதுலே ஒன்றும் தப்பில்லையே.. நீ எப்போ சொன்னாலும் பட்டாதான்.. போட வேண்டியதுதான்….”

“நான் உள்பட என்மேலே இருக்கிற எதுவும் எதுவுமே உன்னுது இல்லே.. கஞ்சப் பிரபுவே.. இந்த செயின். இந்த பனியன், ஜீன்ஸ், ஷடு எல்லாமே என்னுது தெரியுமில்லே….”

“ஒன்னு மறந்துட்டியே ஸ்ரீ…”

“எதை ?”

ஜீன்சுக்கு கீழே இருக்கிற அந்த சமாச்சாரம் என்னுது.. நான் என் சொந்த காசிலே வாங்கித் தந்தது… எத்தனை டாலர் தெரியுமா….”

குப்பென்று முகம் சிவந்து… போயும் போயும் அதைச் சொல்றியே…ஜட்டியை வாங்கிக் கொடுத்ததை சொல்லிக் காட்டிறியே… வெக்கமில்லாத நாய் நீ… இப்பவே டாய்லெட் போய் கழட்டி முகத்திலே வீசிடறேன்….”

“ஆகா எவ்வளவு சந்தோசமான விஷயம். மூணு மாசத்துக்கு அது ஒன்று போதும்… ஸ்ரீ அதக் கொடுத்துடேன்… படுக்கிற போது தலை யணையிலே வச்சி….”

எழுந்து நங்கென்று ஊருக்கே கேட்கிற மாதிரி குட்டு வைத்தாள்.

“நீ உருப்படவே மாட்டேடா….”

“வரவர இந்தப் பெண்கள் ரொம்ப மோசம்…”

“நீயா பேசின ஜீவா….”

“ச்சீ…. நான் பேசுவனா எனக்கு அந்த தைரியம் வருமா. உன்னை எதிர்த்து எப்ப நான் பேசினேன்.. இது அசரீரீ…”

“எங்கிருந்து வந்தது…”

“பின்னாலிருந்து….”

ஸ்ரீ ஆங்காரத்துடன் பின்னால் திரும்பினாள். இரண்டு பழைய மாடல்கள், மசால் தோசையோடு இவர்களை மேய்ந்து கொண்டிருந்தன…

“அலோ… தோசைக்கு மட்டும் வாயைத் திறக்கலாம்…. வேற விஷயத்துக்கு வாய் திறந்தா என்ன ஆகும்னு அந்த வெயிட்டர்கிட்ட கேட்டுக்குங்க…”

“வெயிட்டர் குறுக்கிட்டான். ஸார் அந்த பொண்ணுகிட்ட வச்சிகிட்டீங்க… அப்புறம் கைமாதான் நீங்க….”

அரை வினாடியில் பெரிசுகள் காணாமல் போய்விட்டன.

“அப்புறம் எந்த இடத்தில் விட்டோம்…”

“அந்த உள் சமாச்சாரத்தை அதாவது ஜட்டி கழட்டற இடத்திலே விட்டோம்.” கொத்தாய் அவன் தலைமுடியை பிடித்தாள்…

“உன்னை என்ன செய்யறதுன்னே தெரியலை… மவனே அடிச்சே கொன்னுடுவேன்… நான் எவ்வளவு முக்கியமான விஷயமா வந்திருக்கேன் தெரியுமா… டீஸ் பண்ற அதைவிட்டுட்டு” ஸ்ரீ வெடித்தாள்.

“கோவப்படாதே முதல்லே உட்காரு நிதானமா சொல்லு…”

“நீயெல்லாம் காம்பியரா…. டி.வி. ஸ்டேஷன்லே அழகுப்போட்டி நடக்குதா என்ன.. கேட்வாக் போறீங்களே தவிர ஒரு உருப்படியான சூடான புரோகிராம் பண்ண நீயெல்லாம் லாயக்கான்னு அந்த கருவாயன் திட்டினான்…

“நீதான் நெம்பர் ஒன் காம்பியர்னு ஊரே சொல்லுதே….”

“அந்த மர மண்டையிலே அது ஏற்றதா தெரியில்லே… சூடா ஒரு புரோக்கிராம் பண்ணனும்… பேப்பர், டி.வி, எல்லாம் பேசணும் அந்தக் கருவாயன் வாயை அடைக்கணும்… என்ன செய்யலாம் சொல்லு அதுக்குத்தான் உன்னை வரச் சொன்னேன்…”

“யோசிக்கிறேன் விடு…”

“கண்ணை மூடி யோசி… என்னை மறந்திடு உருப்படியா ஏதாவது சொல்லு….”

இருவரும் கண்ணை மூடியோசித்தபோது ஒரு கார் வந்து நிற்க மேலே ஸ்டாண்டில் இருந்து சில சீன்செட்களை இறக்கினார்கள்.. கடைசியாக ஒரு ஆள் பனைமர வளர்த்தியில் ஒரு தலைவன் ஒரு கட்அவுட்டை இறக்க
ஜீவா ஒரு சொடக்குப் போட்டான்.

“ஆகா வந்துடுச்சி…ஜடியா வந்திருச்சி…. ஸ்ரீ… பெஸ்ட் ஜடியா”

“ராகம் தப்புத்தான் பரவாயில்லை என்ன ஜடியா…”

“அந்த கார் ஸ்டேண்ட் மேலே உன்னைக் கட்டிப் போட்டுடறது ஸ்ரீ அண்ணாசாலை உள்பட முக்கியமான எல்லா ரோடுலேயும் வண்டி விடறது…. நம்ம தமிழ்க் குடிமக்கள் விமர்சனத்தை டீ.வியிலே டெலிகாஸ்ட் பன்றது எப்படி ஜடியா… பொம்பளையைக் கட்டிப்போட்டு ஊர்வலம் வந்தா உலகமே பார்க்கும்…”

ஒரு கணம் கண்ணை மூடினாள் ஸ்ரீ…. “வெரிகுட் ஜீவா. பெஸ்ட் ஜடியா… ஆனா ஒரு சின்ன மாற்றம் மேலே எனக்கு பதிலா உன்னைக் கட்டிப்போட்டு நான் காம்பியரா இருந்தா சூப்பரா ஒர்க் அவுட் ஆகும்… ஓ.கே.வா.ஜீவா. இவ்வளவு வருஷத்திலே நீ கொடுத்த நல்ல ப்ளான் இது ஒன்றுதான்….”

“அடிப்பாவி… என்னைப் பொறியில் மாட்டறியேடி…. நீ உருப்புடுவியா….”

“சும்மா இருய்யா… என்னைக் கார் மேலே கட்டிப் போட்டா மாதர் சங்கங்கள் கொடிபிடிக்கும்… பட்டி மன்றம் நடத்துவான்கள்….. ஆம்பிள்ளைன்னா ஒரு பய கேட்கமாட்டான்….”

“அவ்வளவு போக்கத்தவனா ஆம்பிளை… சாமி என்னை விடு… உன் காதல்லே இருந்து நான் டைவோர்ஸ் வாங்கிக்கிறேன்…”

கண்ணா ஜடியா குடுத்துட்டு ஜகா வாங்கறியே இது ஒர்க் அவுட் ஆனா உன் மனசு மாதிரி நான் நடந்துக்குவேன்.. அன்னைக்கு தியேட்டர்லே செஞ்சதை செய்வேன்…”

“அதெல்லாம் நீ செய்யமாட்டே உன்னை நம்ப முடியாது…. ஏமாத்துக்காரி நீ.. எவ்வளவு வாக்குறுதி கொடுத்து ஏமாத்தியிருக்கே.. ஒரு நா ஜட்டியை… என் எதிர்லே போடறதா சொல்லி….”

சனியனே… அத விடு.. மறைவா அந்த மரத்துப் பக்கம் வந்தா அட்வான்ஸ் தர்றேன்… இந்த தடைவ நம்பு சத்தியம்…

“நெஜம்மா… கையை நீட்டினான் ஜீவா….”

கையில் அடித்துக் கிள்ளினாள் ஸ்ரீ…. “ போதுமா…”

ப+ மாதிரி மிருதுவான அவள் விரல்பட்டதும் சிலிர்த்தான் ஜீவா..

“கார் மேல என்ன நீ தேர் மேல கட்டினாலும் தயார்… என்னை ராக்கட்லே கட்டிவிட்டாலும் சரி உனக்கு மூணு முடிச்சு போட நீ முப்பது முடிச்சு போட்டுக் கட்டினாலும் பொறுத்துக்குவேன்.. ஆனா எப்படி இதை செய்யப்போற…. ஸ்ரீ”

“அது ரகசியம் முதல்லே. அந்த டீ.வி. கேமரா டீமை ரெடிபண்ணிட்டு அனுமதி வாங்கிட்டு போன் பன்றேன்… வந்துடு.. கலக்கலா புரோகிராம் பண்ணிடறேன்….”

“நீ என்ன செய்யப்போறியோ தெரியாது… என்கு இப்பவே கலக்குது…. எதுக்கும் எங்க அம்மா, அப்பாகிட்ட அனுமதி கேட்கட்டுமா…”

“ஏன் உன் தங்கை புருஷன்… தங்கை இவங்ககிட்ட கூட பர்மிஷன் கேளேன்… கோழைய்யா நீ….”

அவள் பார்வையின் தகிப்பில் கரைந்தான் ஜீவா.

“அடியேன் தாசானுதாசன்… ஒரு விளக்கு தர்றேன்… நீ தேய்த்தால் நான் அங்கே இருப்பேன்… உன் கட்டளைப்படி நடப்பேன்…”:

“அதானே கேட்டேன் நல்லபிள்ளையா நடந்துக்கோ – ஸ்ரீயை இழந்தே நீ தேவதாஸ்தான் நிறைய குப்பைத் தொட்டி தெருநாய்கள் கிடைக்கும்…”

சின்னக் கற்பனை ஜீவா மனசில் ஓடியது.

ஒரு மரத்தின் பக்கத்தில் ஒரு பிராந்தி பாட்டில் ஒரு சொறி நாய். பக்கத்தில் ஜீவா. பரட்டைத்தலை ஜீவாவை நாய் நக்க அவன் நாயை நக்குவதாக கற்பனையில் சிலிர்த்தான். பேசாமல் ஸ்ரீ சொல்வதை செய்வது உத்தமம்… கிழிந்த டிரஸ்ஸில் அழுக்கு நாற்றத்தோடு சொறிநாய்க்கு எங்கே போக முடியும்.. பிரச்சனை வரும்… நாயை ஏதாவது செய்யப் போக ப்ரூ கிராஸ்காரன் உள்ளே போட்டு விடுவான்….

ஜீவாவைக் ஏற்றி காரின் ஸ்டேன்டின் மேல் கட்டினாள் ஸ்ரீ.

“பசிச்சா ஏதாவது குடுப்பியா…” “பதினோரு மணிக்கு காபி ஒரு மணிக்கு சிக்கன் பிரியாணி அப்புறம்…”

“ராத்திரிக்கு காய்ச்சின விளக்கெண்ணெய் – பேசாம படுத்துக்கனும்..ஒரு பேச்சு வாயிலிருந்து வரக்கூடாது… இப்ப போகப் போறது அண்ணா சாலை…. ஏதாவது பேசினே பெனாயில் வாயிலே ஊத்திடுவேன்…”

வண்டி அண்ணா சாலையில் நுழைந்தது.

“ஏம்மா எதுக்கு அந்த புள்ளையாண்டாணைக் கட்டிப்போட்ட….”

“ஒரு வேண்டுதல்தான்….”

“எதுக்கு வேண்டின…”

“ஒரு தடைவ காலரா வந்து சாகக் கிடந்தாரா… பிழைச்சா இந்த மாதிரி கட்டி கருமாரியம்மன் கோயில் வரை வர்றதா நேர்ந்துகிட்டேன்…”

“காலரா எப்படி வந்தது….”

“ஷேர் ஆட்டோ ஏறி வந்தது….”

“காலராவுக்கு என்ன கொடுத்தே…” இது இன்னொரு கிழம்…

“காலராவுக்கு ஒன்றும் கொடுக்கலை… இவருக்கு வேணா மருந்து கொடுத்தேன்….”

“அப்புறம் என்ன கொடுத்தே…”

“ஜனாதிபதிக்கு தந்தி கொடுத்தேன்… டாக்டருக்கு பீஸ் கொடுத்தேன்..அப்புறம்… வேற என்ன கேள்வி…”

கேட்ட ஆள் ஓடிப்போனான்.

“ஏம்மா எதுக்கு இந்த ஆளை கார்மேலே கட்டிப்போட்டிருக்கே…”

“அதுங்களா ஐயா… இந்த கோழி, ஆடு எல்லாம் வண்டி மேலே கட்டிப்போடறாங்களே.. அது எவ்வளவு தப்பு…. உசிரை வதை பண்ணக் கூடாதுன்னு காண்பிக்க இப்படிப்பன்றேன்….”

“அதுக்காக இந்தப் பையனை இப்படி வதைக்க வேண்டாம்….”

“ஆமாம் உட்டுரு ஸ்ரீ” என்று கூடப் பேசின ஜீவாவை பொத்தென்று போட்டாள்… “வாயை மூடுய்யா… காரியத்தைக் கெடுத்துடவே நீ….”

“ஏம்மா அப்புறம் இந்த ஆடு, கோழி அறுத்தா எப்படித் துடிச்சு சாகுதுன்னு காட்ட இந்தப் பையனை அறுப்பீங்களா….”

“இல்ல அதுக்கு உங்களை மாதிரி வெட்டி ஆள் ஒருத்தனை தேடிகிட்டு இருக்கோம் வர்றீங்காளா…” கேட்டவன் துண்டைத் துறந்து ஓடினான்….

ஒரு போலிஸ்காரர் வந்தார்.

“இந்தாம்மா இப்படி ஆட்களை வண்டிமேலே கட்டிப் போடக் கூடாது…”

“அப்படி ஏதாவது சட்டம் இருந்தா காண்பீங்க…”

“நான் சட்டப் புத்தகம் வச்சிகிட்டுத் திரியமுடியாது…”

“நீங்க திரியரதும், திரியாததும் உங்க இஷ்டம்….”

“உன்னை புக் பண்ணப் போறேன்…”

“யோவ் என்னய்யா கெட்ட வார்த்தையெல்லாம் பேசறே…”

“நான் ரிப்போர்ட்டர் தப்பா பேசினே மேலிடத்திலே பதில் சொல்ல வேண்டி வரும்…”

“அந்தாளை ஏன் மேலே கட்டிப் போட்டிருக்கு..”

“மேலே கட்டி வைத்திருக்கிறது ஒரு பைத்தியத்தை. புரிஞ்சிக்காம ஏராவது பேசினா கமிஷனருக்கு நீ பதில் சொல்ல வேண்டி வரும்…. சொல்லிட்டேன்…

இது வருமானம் இல்லாத கேஸ். வேறு யாராவது கையாளவிட்டு விடுவது உத்தமம் என்று கான்ஸ்டபிள் ஜகா வாங்கினார்.

“கார்மேல செத்துப் போனவங்களைத்தான் கட்டி எடுத்துப் போவாங்க.. நீ பார்த்திருப்பியேம்மா…”

“ஒரு மாறுதல் உயிரோட ஒரு ஆளைக் கட்டிக் தூக்கிப் போய்ப் பார்ப்போமே என்று கட்டிப் போட்டேன்….”

“அதுலே ஒண்ணும் தப்பில்லேம்மா… சாமிக்கு வேண்டிக்கிட்டு என் மச்சினன் பொணம் மாதிரி படுத்துக்கிட்டான்.. நாங்க பாடை கட்டி தூக்கிப் போனோம்…”

“அப்புறம் அந்த ஆளை என்ன செஞ்சீங்க…”

“வேற என்ன செய்யறது.. பொதைக்கிறதா, எரிக்கிறதான்னு பெரிய கலவரமாகிப் போச்சு…. பெரிசாயி… வெட்டிட்டாங்க….”

“என்ன குழியா…”

“இல்ல அவனையே வெட்டிட்டாங்க… பாடை வீணாகலை பாருங்க…”

“ஸ்ரீ என்னை விட்டுரு ஸ்ரீ இதுமாதிரி ஏதாவது நடந்துறப் போகுது….”

“நீ அடிக்கடி வாயைத் திறந்தே அப்படித்தான் நடக்கும்…..’

“ஒரு பெப்ஸி கிடைக்குமா….”

“பச்சத் தண்ணி கிடையாது.. அரை மணி கூட ஆகலை தொரைக்கு பெப்ஸி கேக்குதா…..”

“சண்டாளன்….”

“யாரு சண்டாளன்…”

“நான் தான் இதுக்கு ஒத்துக்கிட்ட என்னைத் திட்டறேன்.. மானம் போகுது… எல்லாரும் என்னையே பாக்கறாங்க….”

“ரோட்ல போகும்போது எங்களை எத்தனை பேர் இப்படிப் பார்த்திருக்காங்க நாங்க இப்படிக் கத்தறோமா…”

கேமரா டீமைக் கூப்பிட்டாள்… “எப்படி புரோகிராம்….”

“அதுலே ஒண்ணும் தப்பில்லேம்மா… சாமிக்கு வேண்டிக்கிட்டு என் மச்சினன் பொணம் மாதிரி படுத்துக்கிட்டான்… நாங்க பாடை கட்டி தூக்கிப் போனோம்..”

“அப்புறம் அந்த ஆளை என்ன செஞ்சீங்க…”

“வேற என்ன செய்யறது.. பொதைக்கிறதா.. எரிக்கிறதான்னு பெரிய கலவரமாகிப் போச்சு… பெரிசாயி… வெட்டிட்டாங்க..”

“என்ன குழியா…”

“இல்ல அவனையே வெட்டிட்டாங்க.. பாடை வீணாகலை
பாருங்க…”

“ஸ்ரீ என்னை விட்டுரு ஸ்ரீஇதுமாதிரி ஏதாவது நடந்துறப் போகுது…”

“நீ அடிக்கடி வாயைத் திறந்தே அப்படித்தான் நடக்கும்…”

“ஒரு பெப்ஸி கிடைக்குமா…”

“பச்சத் தண்ணி கிடையாது.. அரை மணி கூட ஆகலை தொரைக்கு பெப்ஸி கேக்குதா…”

“சண்டாளன்…”

“யாரு சண்டாளன்…”

“நான்தான் இதுக்கு ஒத்துக்கிட்ட என்னைத் திட்டறேன்.. மானம் போகுது.. எல்லாரும் என்னையே பாக்கறாங்க…”

“ரோட்ல போகும்போது எங்களை எத்தனைபேர் இப்படிப் பார்த்திருக்காங்க நாங்க இப்படிக் கத்தறோமா…”

கேமரா டீமைக் கூப்பிட்டாள்.. “எப்படி புரோகிராம்…”

“ரொம்ப த்ரிலிங் ஸ்ரீ….” நீ எங்கேயோ போயிடுவே…”

“நானும் போயிடுவேன்யா.. பாவிகளா பெப்ஸி குடுத்து கொல்லுங்கடா…”

“தினத்தந்தி ஆபீஸ் பக்கம் போவோமா…”

“இந்தி ஆபிஸ் பக்கம் போ… அப்படித்தான் உலகம் ப+ரா தெரியும்..நாளைக்கு என் வேலை காலி, சீட்டுக் கிழிச்சிடுவான்… கம்பெனிக்காரன்…”

“விடுங்க ஜீவா சார்.. உங்க பாப்புலாரிட்டிக்கு இனிமே ஆலிவுட்வரை போகலாம்….” ஒருத்தன் முன் மொழிந்தான்..

“ஆலிவுட் விடுங்க ராம்… எங்க ஸ்ரீ கிடைக்க இப்படிக் கட்டிப் போட்டது பெரிசில்ல… ஸ்ரீக்காக சுட்டுப் போட்டாலும் நான் பொறுத்துக் குவேன்….” இவன் பின் மொழிந்தான்.

“ஸ்ரீஇவன் உன்னை டாவடிச்சவனா.. லெட்டர் கொடுத்து பிட்ஸா எல்லாம் வாங்கித்தந்தானா.. என்னென்னவோ பேசறானே.. யோவ் போட்டிக்கு வராதய்யா.. ஸ்ரீக்கு நான் என்னவெல்லாம் வாங்கித் தந்திருக்கேன் தெரியுமா… போன மாசம் கூட மூணுடாலருக்கு ஒரு ஜட்..”

“ராம் அந்தாள் மூஞ்சியிலே ஒரு குடம் தண்ணி ஊத்து, மயக்கம் போல தெரியுது.. உளர்றான்….”

“வேண்டாம் ஸ்ரீநீ சொல்றபடி கேக்கறேன்.. நீதண்ணி ஊத்தப் போய் மத்தவங்க மஞ்சத் தண்ணி ஊத்தி மாலை போட்டுருவாங்க….”

“ஸ்ரீ அவுத்து விட்டதும் ஒரு சினிமா காட்டுவியா…”

“சினிமாவா வரவர உன் தொல்லை தாங்கலை… பேசாம வா…பேசினே வெட்டிருவேன்.. வீணாப்போவ.. அப்புறம் ஸ்ரீ இல்ல எவருக்கும் ப்ரயோஜனம் ஆகமாட்டே நீ”

“சண்டாளி…”

பஸ்ஸைத் தாண்டிப் போனது ஸ்ரீயின் கார்…

“டீ இந்தாளைப் பார்.. பஸ்ஸிலே ஏறினா நம்மளயே பார்க்குமே அந்த மெண்டல்….”

“இப்ப நல்லா சிக்கிடுச்சி.. கட்டி கார் மேலே போட்டு ஸ்டேஷன் கொண்டு போவாங்க போல.. பாரு பின்னால போலீஸ் வண்டி கூட.. ஒரு பஸ்ஸில் பல பேர் ஆச்சரியத்துடன் கேள்வியுடனும் பார்த்தார்கள்..

“ஏன் தாயி எதுக்கு அந்தப் புள்ளையாண்டானை கட்டிப் போட்டிருக்கே….”

“வரதட்சணை கொடுமைம்மா….”

“உன் புருஷனா.. தாலியைக் காணோமே….”

“கழட்டி வித்துட்டான்.. பாரு புடயைக் கூட உருவிட்டான்.. அதான் பேண்ட் போட்டிருக்கேன்….”

“திருட்டு முண்டம் பார்வையே சரியில்லை… இரண்டு விசிறு விசிறட்டுமா.. அந்த கிங்கரி கையில் இருந்த துடைப்பத்தை வாகாக உள்ளங்கையில் தட்ட ஜீவா நடுங்கினான்…

“இல்லக்கா… ஸ்டேஷன்லே வச்சி தட்டிடறேன்.. பொம்பளை
ஸ்டேஷன் கூட்டிப்போறேன்…”

“நாயே பொம்பளை கையில் அடிவாங்கினா உனக்கு புத்தி வரும்… போ.. அங்க உன்னை அம்மனமாக்கப் போறாங்க.. பொம்பளை ஸ்டேஷன்கறே.. பையன் கணக்கா இருக்கான் ஜாக்கிரதை… கெடுத்துப் புடுவாங்க… அவங்களையும் நம்பமுடியாது…” அவள் நகர்ந்ததும் ஜீவா ஆரம்பித்தான்…

“ஸ்ரீ நான் மேலே கெடந்து சாவறேன்.. யாரும் என்னைக் கேட்கலை உன்கிட்டேயே கேட்கறாங்களே.. இதான் நியாயமா..”

“அதான்யா நம்ம தமிழ்க்குணம்.. அடிபட்டவனைத்தான் இன்னும் நாலு சாத்துவான்…”

“தமிழ் வாழ்க.. தமிழ்க்குலம் வளர்க.. அதன் குணம், மணம் எல்லாம் வாழ்க..”

கார் கொஞ்சம் நகர்ந்தது…

“ஏம்மா கார் மேலே கட்டிப் போட்டீங்க…”

“கீழ்ப்பாக்கம் கொண்டு போறேன் மாமா… பார்க்கற பொம்பளைங்களை எல்லாம் கட்டிப்புடிச்சி கடிக்கிறான்….”

“பாவம் நிறைய சினிமா பார்ப்பானா… மாத்ருப+தத்துக்கிட்ட கொண்டு போ.. உன் தம்பியா…”

“ஐயய்யோ.. இல்லை மாமா…”

“பையன் பார்க்க உன்னை மாதிரியே லட்சணமா இருக்கானே…அவனுக்கு பாரு வியாதியை…”

“ஸ்ரீ கட்டறதுக்கு பல் இல்;ல இந்தக் கிழம் சந்துலே உடுது…”

“நான் அழகுங்கறான்… கவனிச்சியா….”

“உன்னை லுக்விடறாண்டி…. கெழவன்… ஜீன்ஸ் கொஞ்சம் லூசா போடக் கூடாது…”

“ச்சீ வாயை மூடு ஒரு ஆள் நல்ல வார்த்தை சொன்னா பொறாமைப்படற….”

“கிழவனெல்லாம் ரசிக்கிறானே. இப்படிக் கெட்டுப் போறியே….”

ஏறக்குறைய இரண்டு மணிநேரம் முடிந்திருக்கும் வெயில் கொளுத்தி ஜீவா பரிதாபமானான்.

“ஸ்ரீ இங்க வாயேன்….”

“என்னப்பா….”

“மயக்கமா வருதுடா… இன்னும் எவ்வளவு நேரம் இப்படி இருக்கணும்…”

“ஏம்மா டயர்டா இருக்கா….”

“ஆமாண்டா ரொம்ப டார்ச்சரா இருக்கு…. அங்கங்க உடம்பு மரத்துப் போச்சு…. ரெண்டுமணி நேரம் ஆச்சா” ஸ்ரீ அவனை உற்றுப் பாhர்த்தாள்….“ஜொசப் இங்க வாங்க.. கட்டு அவருங்க….”

கட்டவிழ்த்து களைப்புடன் இறங்கிய ஜீவாவின் இருப்பில் கைகொடுத்து அவணைத்துப் பிடித்து எதிரில் இருந்த பெரிய ஓட்டலுக்கு நடத்தினாள்…

“யொவ் இங்க என்ன ஆடுதுன்னு பாக்கறீங்க நகருங்கய்யா….”

“ஸாரி ஜீவா….”

“பரவாயில்லே ஸ்ரீ..”

“ம்.. இதுவேண்டாம் ஜீவா.. சீக்கிரமா நல்ல முகூர்த்த நாள் பாரு…. அப்புரம் நீ சொல்றபடியெல்லாம் நடப்பேன்… ஓ.கே.. எனக்கும் வரவர தூக்கமே வரலைம்மா.. எப்படா அந்த நாள் வரும்னு ஏக்கமா இருக்கு…”

“எந்த நாள்….”

“அந்த முதல் நாள்… சினிமாவிலே வருமே அந்த மாதிரி ராத்தி…” ஜீவா டொக்கென்று மயங்கி சரிந்தான்… சந்தோஷத்தில்.

Print Friendly, PDF & Email

1 thought on “கட்டிப்போடு….. கட்டிப்போடுடா….

  1. அடடே..

    இது பதிணெட்டுக்கு மேலா
    இல்ல கீழா 😀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *