ஆனைமுகதோனே

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 29,946 
 
 

அந்த ஊரில் ஒரு அரசமரம் ஒன்று இருந்தது. அதன் அடியில் ஒரு சிறிய பிள்ளையார். அசரமரத்தை சுற்றிக்கொண்டு போனால் பின்புறம் கொஞ்சம் தள்ளி குளம். குளத்தை கடந்து சிறிது தூரம் சென்றால் அரசு பள்ளிக்கூடம்.

அந்த ஊரில் புதிதாக யாரேனும் வழி கேட்டால் பிள்ளையாரை வைத்துதான் வழி காட்டுவார்கள். அந்த. ஊரை கடந்து சென்றாலும் பிள்ளையாரை தாண்டிதான் செல்லவேண்டும். அதனாலேயே எல்லோரும் அவரை அரசமர பிள்ளையார் என்றே அழைத்தனர். புதிதாக வந்தவர்களுக்கு வழி காட்டுவதோடு பிள்ளையாரின் வேலை முடிந்துவிடும். அதன் பிறகு அ வரை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த பிள்ளையார் அங்கு எப்படி வந்தார் யார் வைத்தார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியாது. தெரிந்துகொள்ளவும் யாரும் விரும்பவில்லை. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் சிலர் பிள்ளையாருக்கு வணக்கம் வைத்து செல்வர் அவர்களில் ஓர்இருவர்க்கு மட்டுமே பிள்ளையாரின் சக்தி தெரிந்தது.
இதை பற்றி எல்லாம் நம்ம பிள்ளையார் கண்டுகொள்ளவில்லை. என்னை விட்டா போதும் என்று நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தார்…

குழந்தைகளுக்கு பரீட்சை நேரம் வந்தால் நம்ம பிள்ளையார் பிஸி ஆகிவிடுவார். குழந்தைகளும் ஏகப்பட்ட வாக்குறுதிகளை பிள்ளையாரிடம் வைப்பார்கள். ஆனால் அவை அனைத்தையும் பரிட்சை முடிந்தவுடன் குழந்தைகள் மறந்துவிடுவார்கள். அன்றும் அதே போலதான் பள்ளி குழந்தைகள் ரங்கனும் சங்கரும் வந்தார்கள். வழியில் பறித்து வந்த செம்பருத்தியை பிள்ளையாரிள் காதில் சொருகினான் சங்கர். “பிள்ளையாரப்பா போன தடவ மாதிரி இந்ததடவையும் நான் இங்கிலீஸ்ல பாஸாயிடனும். உனக்கு நான் உண்டியல்ல காசு போடரேன் ”

“டேய் எப்பவும் இப்படியே வேண்டிகற உண்டியலே இல்லயே டா ” என்றான் ரங்கன்.

“உண்டியல் யாராவது வைப்பாங்க அப்ப போட்டுக்கலாம் இப்போ வா நேரமாச்சு ” என்று சொல்லி இருவரும் தோப்புக்கரணம் போட ஆரம்பித்தனர். ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஏழு ஒன்பது பத்து… அப்பாடா முடிஞ்சது வா போகலாம் ” என்று சொல்லி இருவரும் பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

பிள்ளையார் காதில் பூ வுடன் மனத்திற்குள் சிறித்துக்கொண்டார். குழந்தைகள் எத செஞ்சாலும் சரியாதான் செய்ராங்க… எனக்கு தான் கணக்கு தெரியல “.

சரி நாம நம்ம வேலைய பார்கலாம் என்று சொல்லி மறுபடி தூங்க ஆரம்பித்தார்…

தூரத்தில் யாரோ சிலர் வருவது தெரிந்தது. பார்த்தால் வெளியூர் ஆட்கள் போல காணப்பட்டார்கள். நம் தும்பிக்கையாழ்வார் கூர்ந்து கவனித்து பார்த்தார். அவர்கள் என்னை நோக்கிதான் வருகிறார்கள் என்னவாக இருக்கும் என யோசித்து பார்த்தார். அவருக்கா தெரியாது?.., தெரிந்தும் தெரியாதது போல இருப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.. வந்தவர்களில் மூன்று பெண்கள் ஒரு ஆண். கைகளில் தட்டுகள் பைகளில் பழம் பூக்கள் இரண்டு தூக்குகள் ஒரு குடம் மற்றும் சில சாமான்களை ஆளுக்கு ஒன்றாக தூக்கி வந்தார்கள்.. வந்தவர்கள் அனைத்தையும் மர நிழலில் வைத்துவிட்டு சற்று இளைபாரிக்கொண்டார்கள்… “அப்பப்பா நல்ல வெய்யில் உஉஷ்ஷ்ஸ்ஸ்., கலா குடத்தை எடுத்துட்டு போய் குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வா… என்றாள் வந்திருந்தவர்களில் வயது அதிகம் கொண்ட பெண் ஒருத்தி. சரிம்மா என்று சொல்லி கலா குடத்தை எடுத்துக்கொண்டு குளத்தை நோக்கி போனாள். அடுத்த. நடுத்தர வயது பெண் அவளை நோக்கி அம்மா ஜோஸியகாரன் அப்படி என்ன தான் சொன்னான் திடீர்னு போன் பண்ணி உடனே புறபட்டு வா…. னு சொன்ன என்ன விசயம் என்பத சொல்லல. வந்ததும் சட்டுனு கெளம்பி இங்க வந்தாச்சு இப்பவாது சொல்லுமா என்றாள் நிலா.

ஜோஸ்ஸியகாரன் தான் சொன்னான் நம்ம குடும்பத்துக்கு இப்போ போதாத காலமாம் நம்ம குலதெய்வம் கோயில் இப்போ இல்லையாம் அதற்கு பதில் இந்த அரசமர பிள்ளையாருக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்தால் எல்லாம் சரி ஆகும் னு சொன்னான். அதான் இங்க. வந்துஇருக்கோம். என்று சொல்லி பிள்ளையார் காதில் உள்ள செம்பருத்தி பூவினை எடுத்தாள். பி ள்ளையாரும் அம்மா அந்த பூவை தூக்கி போடாதீங்க குழந்தைங்க. எனக்கு ஆசையாய் வைத்தது சாய்ந்தரம் பார்த்தாங்கன்னா ஏமாந்துவிடுவாங்க என்று சொன்னார். பிள்ளையாரின் மைண்ட் வாய்ஸ் அவர்களுக்கு கேட்கவில்லை.

கலா குளத்திலிருந்து எடுத்துவந்த தண்ணீரை கொண்டு இடத்தை சுத்தபடுத்தினாள். நிலா கொண்டுவந்த சாமான்களை தட்டில் அடுக்கி வைத்துகொண்டிருந்தாள். நிலாவின் அப்பா பிள்ளையார் அபிஷேகத்திற்கு வேண்டிய ஏற்பாட்டினை செய்துகொண்டிருந்தார். நிலாவின் அம்மா இவர்களிடம் பேசிகொண்டே பிள்ளையாரை சுத்தபடுத்திகொண்டிருந்தாள். பிள்ளையாருக்கு பயங்கர குஷி இன்று நமக்கு விதவிதமாய் பலகாரங்கள் கிடைக்கப்போகிறது ஒரு கை பார்த்துவிடலாம் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தார். அபிஷேகமும் ஆரம்பிக்க பட்டது. நிலாவின் அம்மா முதலில் பிள்ளையாருக்கு எண்ணை காப்பு செய்தாள் பின் சீயக்காய் கரைத்து எண்ணை போக தேய்த்தாள். பிறகு பால் பண்ணீர் கொண்டு வரிசையாக. அபிஷேகம் செய்தாள். நம் பிள்ளையாருக்கு பொருமை போய்விடும் நிலையில் இருந்தார் . அவர் கண்கள் கவனம் எல்லாம் அங்கிருந்த கொழுகட்டை சுண்டல் சக்கரைபொங்கல் அவல்பொறி மேலே இருந்தது. அம்மா சீக்கரம் அபிஷேகத்தை முடித்துவிட்டு எனக்கு கொண்டு பதார்த்தத்தை நிவேத்தியம் பண்ணுங்கம்மா எனக்கு இதை பார்த்ததும் பசி எடுக்கிறது என்றார். ஒரு வழியாக அபிஷேகம் முடித்து புது வஸ்திரம் கட்டி சந்தணம் குங்குமம் எட்டு மாலை அணிவித்தவுடன் பிள்ளையாரின் தேஜஸ் மாறிவிட்டது அவராலேயே அவரை நம்ப முடியவில்லை. இதெல்லாம் எனக்கா எனக்கா என்று அவரையே அவர் கேட்டுக்கொண்டார். அவர் எதிர் பார்த்தமாதிரி எல்லா பதார்த்தங்களும் நேவேத்தியத்திற்காக வைக்கப்பட்டன. கலாவின் அம்மாவும் நைவேத்தியத்திற்கு முன் பிள்ளையாரிடம் வேண்டுதலை வரிசையாக வைத்தாள். பிள்ளயாரப்பா… இவர் என் கணவர் இவருக்கு அடிக்கடி தீராத வயிற்றுவலியால் அவதி படுகிறார் அவருக்கு பூரண குணமாகவேண்டும். இவள் என் பெரிய பெண் நிலா கல்யாணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை… இவள் என் இரண்டாம் பெண் கலா இவளுக்கு நல்ல வாவழ்க்கை துணை தேவை. இதை அனைத்தையும் வெகுசீக்கிரம் அமைய நீதான் உதவி செய்யவேண்டும் என்று வேண்டிகொண்டாள். நம் பிள்ளையார் அப்படியே ஆகட்டும் என்று ஒரே வரியில் கூரி பதார்தங்களை சாப்பிட தயாரானார். முதலில் சக்கரை பொங்கல் வந்தது அத்தூக்கை அவர் எட்டி பார்த்தார். கமகமக்கும் நெய் மணத்துடன் முந்திரி திராட்சை போட்டு செய்ததை பார்த்தவுடன் ஆகா இதல்லவோ பொங்கல் ஒரு கை பார்திட வேண்டியதுததான் என்று தன் துதிக்கையை தூக்கு பக்கத்தில் கொண்டு சென்றபோது தூக்கை டமால் என்று மூடி விட்டு கொழுக்கட்டை நிறைந்த தூக்கை நைவேத்தியத்திற்காக வைத்தாள் நிலாவின் அம்மா பிள்ளையாருக்கு ஏமாற்றமாய் போய்விட்டது. கொழுக்கட்டை பாத்திரம் கொஞ்சம் எட்டி இருந்தது அதனால் துதிக்கை எட்டாமல் பிள்ளையாருக்கு கொழுகட்டையும் கிடைக்கவில்லை. சுண்டலாவது சாப்பிடலாம் என்று நினைத்து பாத்திரத்துக்குள் துதிக்கையை விட்டார் துதிக்கையால் சுண்டல் எடுக்கவரவில்லை. அடஇதெண்ணடா எல்லாம் இருந்தும் நமக்கு ஏதும் கிடைக்கவில்லை இன்றூம் நான் விரதந்தான் போலும் என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டார். கடைசியாக. நிலாவின் அம்மா வெற்றிலை பாக்கு பழத்தை வைத்து நைவேத்தியத்தை முடித்தாள். பிள்ளையாரிடத்தில் வெற்றிலை பாக்குடன் இரண்டு வாழைபழத்தை மட்டும் வைத்துவிட்டு மற்ற பழங்களை கூடையில் எடுத்து வைத்துக்கொண்டாள். பிள்ளையாரும் அமைதியாக நடப்பதை பார்த்துகொண்டு இருந்தார். வந்தவர்கள் அணைவரும் பிள்ளையாரின் பின்புறம் உள்ள மர நிழலில் அமர்ந்துகொண்டு நைவேத்திய பதார்த்தங்களை கொண்டுவந்த இலைஏட்டில் வைத்து சாப்பிடஆரம்பித்தார்கள். பின் அணைவரும் அம்மரத்தினடியிலே இலைகளை போட்டுவிட்டு அருகில் இருந்த குளத்தில் கை கால்களை சுத்தம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றனர். பிள்ளையாருக்கு என்றதும் பதார்தங்கள் நன்றாக அமைந்துவிட்டது நல்ல சுவை எல்லாம் நன்றாகவே நடந்தது இனி நம் வேண்டுதலை பிள்ளையார் நடத்திவைப்பார் என்று அவர்கள் சொல்லிகொண்டு போனது பிள்ளையார் காதில் நன்கு விழுந்தது. பிள்ளையார் தன் முன் வெற்றிலைபாக்கு இரண்டு வாழைப்பழம் இருப்பதை பார்த்துகொண்டிருந்தார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் பள்ளி முடிவடைந்து அவ்வழியே குழந்தைகள் வீட்டைநோக்கி நடந்து சென்றார்கள் சங்கரும் ரங்கனும் சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு வந்தனர் பிள்ளையாரை பார்த்து சங்கரும் இதப்பார்டா நம்ம பிள்ளையார் ஆளே மாறிட்டார். சந்தனம் குங்குமத்தோட ஜம்முன்னு இருக்கார்டா .,ஐய்ய்ய் வாழைப்பழம் என்று சொல்லி ஆளுக்கு ஒன்றாக பிரித்து கொண்டனர். பின்னர் அவ்வழியே வந்த பைரவரை துரத்திகொண்டு ஊருக்குக்குள் சென்றனர். அவ்வழியே வந்து சென்ற. ஓர் இருவரை பார்த்து கொண்டு நம் பிள்ளையார் கண்ணயர்ந்தார்.

அன்று இரவு நடுநிசி நேரத்தில் சிலர் அவ்விடத்தில் பேசிக்கொள்ளும் சப்தம் கேட்டது. நம்பிள்ளையாரும் அதை நன்கு கேட்டுக்கொண்டிருந்தார்.

அதில் இருந்த ஒருவன் சன்யாசி மாதிரி உள்ள ஒரு முதியவரிடம் சாமி… இது சரியா இருக்குமான்னு பாருங்க என்று பிள்ளையாரை நோக்கி கையை காண்பித்து கேட்டான் அவரும் பிள்ளையாரை ஒரு பத்தடி தூரத்தில் நிலா வெளிச்சத்தில் பார்த்தார். பார்த்தவுடன் மனதுக்குள் சந்தோஷப்பட்டார். இது வலம்புரீ வினாயகர் ரொம்ப சக்தி வாய்ந்தவர் இவர்கிட்ட ஒரு வசீகரம் இருக்கு இவரையே வச்சுடலாம் என்றார். அந்த சன்யாசி அருகில் இருந்தவரை பார்த்து… ஸ்தபதி இவரை தான் நாம பிரதீஷ்டை பண்ணப்போறோம் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை பாருங்கள் என்றான். பின் சன்யாசியிடம் திரும்பி எதற்காக பிள்ளையாரை திருடி பிரதீஷ்டை பண்ணணும் மற்ற விக்ரகத்தை போல இவரையும் புதிதாக செய்யசொல்லி இருக்கலாமே என்றார். சந்யாசியும் திருட்டு பிள்ளையாருக்கு சக்தி அதீகம் நீங்கள் ஊர் மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்து கோவில் கட்டுகிறீர்கள்… அதில் இப்பிள்ளையார் கூடுதல் விஷேஷம்… என்று கூறி பேசிகொண்டிருந்தனர்.. பிள்ளையார் தெளிவாய் புரிந்து கொண்டார்.

பக்கத்து ஊரில் புதிய. சிவன் கோயில் ஒன்று அவ்வூர் மக்களாள் உருவாகி இருந்தது. அதற்கு பிள்ளையாரின் சன்னதிக்கு இப்பிள்ளையாரை வைப்பதற்காகதான் ஊர் தலைவரின் உதவியுடன் சிலர் இந்த ஏற்பாட்டினை நடத்தினர். பின் வந்த ஓர் இரு நாட்க ளில் பிள்ளையாரும் இடமாற்றம் அடைந்தார்.. பிள்ளையாருக்கு மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் வருத்தமும் இருந்தது. அரச மர நிழலில் இருந்த நிம்மதி இங்கு இல்லாததை போல் உணர்ந்தார். ஆனால் அப்பா அம்மா தம்பி என்று குடும்பத்துடன் இருப்பதை நினைத்து சந்தோஷம் அடைந்தார்.. ஆனால் அவருக்கு வேலை பளு அதிகம் இருப்பதை உணர்ந்தார். இவரை நம்பி வந்தவரை கை விடவில்லை… அதே சமயம் சங்கரும் ரங்கனும் பிள்ளையாரை காணாமல் கவலை அடைந்தனர் அவர்களுக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் தேடி களைத்தனர். பின் அதை ஒருவாறு மறந்தனர். பள்ளி செல்லும்போது அவ்விடத்தில் மரம் மட்டுமே இருப்பதை பார்த்துகொண்டு சென்றனர்.

சில மாதங்களில் கோயில் கும்பாவிஷேகத்திற்கு நாள் குறிக்கப்பட்டு வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடந்தது ஊர் கோலாகலம் கொண்டது. அருகில் உள்ள ஊர் மக்கள் அணைவரும் ஒன்று கூடி கும்பாவிஷேக திருவிழாவை சிறப்பாக கொண்டாடினர்.. நம் பிள்ளையாருக்கு பட்டாடைகள் விதவிதமான பலகாரங்கள் பல்வேறு அலங்காரங்கள் வாசனை திரவியங்கள் இன்னும் பல பல கைங்கரீயங்கள் நடந்தது. நம் பிள்ளையாரும் மிகவும் திருப்தி கொண்டார். அவரை தரிசிக்க ஆயிரகணக்கான. மக்கள் திரண்டனர்.. அதில் சங்கரும் ரங்கனும் அவர்கள் அம்மாவுடன் வந்திருந்தனர். சங்கரும் ரங்கனும் பிள்ளையாரை கண்டதும் அடையாளம் கண்டுகொண்டனர். சங்கரும் ரங்கனிடத்தில் இதப்பார்ர்டா நாம இவர எங்கெல்லாம் தேடிட்டிருந்தோம் இங்க இருக்கார்டா என்றான். ரங்கனும் ஆமாண்டா இங்க எப்படி வந்தார்டா, என்று கேட்டுவிட்டு சந்தோஷமாய் ஆச்சர்யமாய் பார்த்துவிட்டு நகர்ந்தனர். பிள்ளையார் இவர்களை பார்த்து சந்தோஷமாய் சிரித்தது போல் உணர்ந்தனர். அதேபோல் சிறிது நேரத்திற்கெல்லாம் கலா நிலா குடும்பங்களும் வந்திருந்தார்கள். கலா அம்மா பிள்ளையாரிடத்தில் அப்பா விநாயகா உன் கருணையால் என் வீட்டுகாரர் கால் வலி சரி ஆகிவிட்டது நிலாவுக்கும் வலைகாப்பு நல்ல படியா நடந்து விட்டது கலாவிற்கும் கல்யாணம் நிச்சையமாகிவிட்டது இப்பொழுது நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம் எல்லாம் உண் கருணை… என்று மணதார வேண்டி கொண்டாள் கல்யாணம் நல்லபடியாக முடிந்தால் உனக்கு கொழுகட்டையும் சக்கரை பொங்கலும் நெய்வேத்தியமாக படைப்பதாக வேண்டிக்கொண்டாள்..

பிள்ளையாரின் மைண்ட் வாய்ஸ் “மறுபடியும் அல்வா வா….”

Print Friendly, PDF & Email

1 thought on “ஆனைமுகதோனே

  1. முதல்ல வயிற்று வலி சொன்னீங்க அப்பறம் கால் வலி சொல்ரீங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *