அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 30,679 
 
 

வடிவேல் – திருடன், ராதாரவி அரசியவாதி என அமைத்து கொண்டு நான் எழுதிய அரசியல் நையாண்டி கதை.

நம்ம ஹீரோ ஒரு சின்ன திருடன்.

உண்மை என்னன்னா இது வரைக்கும் அவன் திருடி மட்டினதே இல்ல.

ஆமா. திருட்றதுக்கு முன்னயே மாட்டிப்பான்.

போலிஸ்தான் அவனை அப்பப்போ petti கேஸ் போட்டு திருடன்னு நம்ப வச்சிட்டு இருக்காங்க.

ஒரு தபா அரசியல்வாதி ஒருத்தர் அந்த போலிஸ் ஸ்டேசனுக்கு வந்தாரு.

அப்போ நம்ம ஹீரோ அவர்கிட்ட கெஞ்சி கூத்தாடி எடு பிடியா சேர்ந்துகிட்டான்.

அவர் சேர்ந்த நேரமோ என்னவோ, அரசியல்வாதி அமைச்சர் ஆயிட்டார். பிறகென்ன இப்போ நம்ம ஹீரோ தான் அவருக்கு எல்லாமே. ஹீரோவும் சந்தர்பத்த பயன்படுத்தி அமைசரோட சகாக்கள் எல்லாரையும் பின்னுக்கு தள்ளி தன்னை முன்னிலை படுத்திகிட்டாரு.

இப்போ ஐயர் கண் பட்டா தான் ஐயனை பாக்க முடியும். ஐயர் ஓதுவதே ஐயனுக்கு வேதம்.

நேரம் நல்லா இருந்ததால ரெண்டு பேருக்கும் ஏறுமுகம் தான். (பணத்துல).

ஒரு நல்ல கேரள ஜோசியக்காரன வரவச்சு அரசியல்வாதி அவருடைய ஜாதகத்த பத்தி கேட்க,

ஜேசியக்காரன் ஒரு பெரிய மாற்றம் வரும், நீங்க பேகாத இடம்மெல்லம் போவீங்க. அடையாத பதவியெல்லாம் அடைவீங்கன்னு சொன்னான்.

ஒரு மாலை நேரம், ஏகாந்த வேளையில் அமைச்சர் அவரோட சகாக்களுடன் ஏகாந்தமா இருக்கும்போது, இதுவரை அடையாத பதவி-ய பத்தி பேச்சு வந்துச்சு,

அப்போ நம்ம ஹீரோ (எவ்வளவு பேர் சுத்தி இருந்தாலும் அமைச்சர் எது கேட்டாலும் நம்ம ஹீரோ தான் ஒப்பினியன் சொல்லோனும். அது அமைச்சரோட senttiment.) “அண்ணே இது வரைக்கும் நீங்க அடையாத பதவின்னா அது சி.எம் இல்லனா பி.எம் தாண்ணே”னு சொல்ல அமைச்சருக்கு புலங்காங்கிதம். (சந்தோஷத்துக்கு மேல சந்தோஷம்).

இந்திய அரசமைப்பு சட்டப்படி ஐஞ்சு வருசஷத்துக்கு ஒரு தபா தேர்தல் வந்தாகனுமே.

தேர்தலும் வந்துச்சு…

அமைச்சர் சி.எம் கனவில் மிதக்க…

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ட்டன…

நம்ம ஹீரோவோட வாய் முகூர்த்தம்…

ஆளும் கட்சி… ஆள முடியாம போச்சு.

அந்த சோகமயமான வேளையில், இருள் சூழ்ந்த மாலையில் – முன்னாள் அமைச்சரான அரசியல்வாதி சகாக்களுடன் ஏன் இந்த மாற்றம் என சோகமா பேசிட்டிருக்கும் போது நம்ம ஹீரோ “சனியன் சல்லாபம் ஆடுதுண்ணேணு” சொல்ல, இவ்ளோ நாளா கடுப்புல இருந்த மத்த சகாக்கள் அந்த சனியனே ஹீரோதான்னு உசுப்பேத்த அரசியல்வாதி கோபமாகி ஹீரோவ ஒரு எத்து எத்த,

திடீர்னு அங்க பேலீசு வந்து மெத்த பேரையும் அள்ளிட்டு பேயிடுச்சு.

மறுநா காலைல “முன்னாள் அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் கைது. பி.ஏ-வும் உடன் கைதானார்” – அப்படின்னு தலைப்பு செய்தி.

அந்த சிறைக்கு,
முன்னாள் அமைச்சரும், முன்னாள் பி.ஏ.வும் இந்நாள் கைதியா வந்ததுலேருந்து மத்த கைதிங்க யாருக்கு ஜாமீன் கெடச்சாலும் சரி, விடுதலை கெடச்சாலும் சரி ரொம்ப வருத்தப்பட்டாங்க. ஏன்னா இவங்க ரெண்டு பேருக்குள்ள சண்டைங்கற பேர்ல நடக்குற அந்த கூத்த பாத்து ரசிக்க முடியாதே. அது தான்.

அமைச்சருக்கு என்ன கோபம்ன்னா தனக்கு சிறைல ஒரு வசதியும் கெடைக்க மாட்டேங்குது. ஆனா நம்ம ஹீரோவுக்கு மட்டும் எல்லாம் கெடைக்குது. இத்தனைக்கும் ஹீரோவுக்கு கிடைக்கிற எல்லா வசதிக்கும் அரசியல்வாதிதான் பணம் கெடுக்கனும். ஏன்னா… அது அப்படித்தான்னு பதில் வருது.

ஹீரோ எந்த வேலையும் செய்ய வேணாம். (எப்பனா ஆடர்லி வேலைய அவரே கேட்டு வாங்கி செய்வாரு)

ஆனா அரசியல்வாதி வேல செஞ்சே ஆகணும். (அவருக்கு பீ.பி., சுகர்னு எல்லா பணக்கார, பிச்சக்கார வியாதியும் இருக்கு).

ஏன் இப்படின்னா…

ஹீரோவுக்கு அரசியல்வாதியோட எல்லா ரகசியங்களும் தெரியுங்கிறதால இப்போதைய ஆளும் கட்சி அவருக்கு எல்லா சலுகைகளும் செய்து தாறதா கிசு கிசு உலாவுது.

அதாவது அரசியல்வதிய உண்மையாவே தூக்கி உள்ள வெச்சிட்டாங்களாம். ஹீரோவ சும்மானாங்காட்டியும் உள்ள வெச்சிருக்காங்களாம்.

…………..

……………

என்னங்க மேல ஒன்னுமே சொல்ல மாட்டேங்கறீங்க?…

ஹீரோ அரசியல்வாதியோட ரகசியங்களை போலீஸ்கிட்ட சொன்னாரா?…

அரசியல்வாதி வெளியில் வந்தாரா? இல்லயா?…

ம்ம்ம்ம்…

அதையெல்லாம் நீங்க தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிளும்,

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”

படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க.

நன்றி. வணக்கம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *