1986 -ஆம் ஆண்டு கோடையில் பியா என்ற பதினோரு வயது சிறுமி கோதுமை வயல்வெளியில் வைத்து, ரோஷன் என்பவனால் கற்பழித்து கொல்லப்படுகிறாள்.
அவனது சிவப்புநிற காரில், அவனது நண்பனும், கணிதம் படிக்கும் மாணவனுமான அனீஷ் உடனிருக்கிறான். பியாவின் மிதிவண்டியை கோதுமை வயல்வெளியில் எறிந்துவிட்டு, அவளது உடலை ஏரி ஒன்றில் எறிந்துவிடுகிறான் ரோஷன்..
சரியாக 23 வருடங்கள் கழித்து, பியா கொல்லப்பட்ட அதேநாளில் சினிக்கா என்ற 13 வயது சிறுமி காணாமல் போகிறாள். அவளது மிதிவண்டி பியாவின் மிதிவண்டி கிடந்த அதே இடத்தில் கண்டெடுக்கப்படுகிறது.
பியாவை கொலை செய்த கொலைகாரன்தான் சினிக்காவை கடத்தியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு விசாரணை அதிகாரிகள் வருகின்றனர். 23 வருடங்கள் கழித்து கொலைகாரன் மீண்டும் அதேபோன்றதொரு குற்றத்தை ஏன் செய்கிறான்? அதற்கு என்ன காரணம்? கொலைகாரனை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடிந்ததா?
பார்போம்
பியா கொலை செய்யப்பட்டதும் மாணவனான அனீஷ், ரோஷனை விட்டு விலகிவிடுகிறான். அவர்கள் இருவரும் எதோச்சையாக நட்பானவர்கள். ரோஷனிடம் பாலியல் படங்கள் இருக்கின்றன. அதில் சிறுமி ஒருத்தியின் பாலியல் படம் அனிஷை கவர்கிறது. பாலியல் படங்கள் பார்க்கும் இந்த நட்பு பியாவின் கொலையுடன் முறிந்து போகிறது. அனீஷ் பயந்துபோய் ரோஷனைவிட்டு விலகிவிடுகிறான்.
23 வருடங்களுக்குப் பிறகு சினிக்காவின் மரணம் நிகழும்போது, அனீஷ் வேறொரு இடத்தில் இருக்கிறான். அவனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சினிக்காவின் கொலை அவனுக்கு 23 வருடங்களுக்கு முந்தைய கொலையின் ஞாபகத்துடன், குற்றவுணர்வையும் கிளறிவிடுகிறது. அவன் ரோஷனையும் , பியாவின் தாயையும் சந்திக்கிறான். பியாவின் தாய் தினந்தோறும் காலையில் மகளின் மிதிவண்டி கிடைத்த இடத்தில் மலர் வைத்து அஞ்சலி செலுத்துகிறாள். அவளது வீடு முழுவதும் பியாவின் பொருள்களே நிரம்பியுள்ளன.
சினிக்கா காணாமல் போனதை விசாரிக்கும் டேவிட் என்ற அதிகாரி, பியாவின் தாயிடம், 23 வருடங்களாக பியாவின் பொருள்களுடன் எப்படி வாழ முடிந்தது, அது சிரமமாக இல்லையா என கேட்கிறான்.
ஏனெனில், டேவிட்டின் மனைவி சில மாதங்கள் முன்புதான் புற்றுநோயால் இறந்திருந்தாள். அவளை மறக்க முடியாத மனவேதனையில் டேவிட்டின் நடவடிக்கைகள் அதீதமாக மாறிக் கொண்டிருந்தன. அந்த மனக்குழப்பத்துடனே அவன் சினிக்காவின் வழக்கை விசாரித்து வருகிறான்.
இழப்பின் துயரம் தோய்ந்த இந்த இரு கதாபாத்திரங்களும் கதையில் முக்கியமாக வருகின்றன. குற்றவுணர்வுக்கு ஆளான அனீஷ்ன் கதாபாத்திரம் ஒருகட்டத்தில் தன்னைத்தானே மாய்த்துக் கொள்கிறது. சினிக்காவின் உடல், பியாவைப் போலவே தண்ணீரிலிருந்து கண்டெடுக்கப்படுகிறது.
பியாவின் ஹெட்போனில் கிடைத்த தலைமயிரை வைத்து, பியாவையும், சினிக்காவையும் கொலை செய்தது தற்கொலை செய்து கொண்ட அனீஷ் தான் என்ற முடிவுக்கு அதிகாரிகள் வருகின்றனர். பியாவை கொன்ற கொலைகாரனின் காரில் இரண்டு பேர்கள் இருந்தார்கள்.
காரை ஓட்டியது அனீஷ் அல்ல, வேறெnருவன். அந்த வேறொருவன்தான் கொலைகாரன் என்ற டேவிட்டின் வாதம், உயர் அதிகாரியின் அவசரம் மற்றும் பிடிவாதத்தால் எடுபடாமல் போகிறது. ரோஷனின் அருகில்வரை வந்த போலீஸாரால் அவன்தான் கொலைகாரன் என்பதை உணர முடியாமல் போகிறது.
பியாவின் கொலையைத் தொடர்ந்து, அனீஷ் தன்னைவிட்டுப் போனதை ரோஷனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அனீஷ் திரும்பி வருவான் என காத்திருக்கிறான். எங்கு தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
23 வருடங்களுக்குப் பிறகு இனியும் காத்திருக்க முடியாது என்ற நிலையில், அனிஷுக்கு ரோஷன் அனுப்பிய செய்திதான், சினிக்காவின் மரணம். அனிஷை தொடர்பு கொள்ள ரோஷனுக்கு இருந்த ஒரேவழி, பியாவைப் போன்ற இன்னொரு கொலையை நிகழ்த்துவது மட்டுமே.
ரோஷன் எதிர்பார்த்தது போலவே அந்த செய்தி அனிஷை எட்டியது. அவன் விரும்பியது போலவே அனிஷும் ரோஷனை தேடி வந்தான். ஆனால், அனிஷின் குற்றவுணர்வு அவனை தற்கொலை செய்ய வைத்தது, ரோஷன் எதிர்பார்க்காத திருப்பம்.
நண்பனின் மரணம் தந்த அதிர்ச்சியுடன் வீட்டுக்கதவை ரோஷன் மூடுவதுடன் கதை நிறைவடைகிறது.
உறவை இழந்தவர்களை அந்த இழப்பு சாகும்வரை தொடர்ந்து வேட்டையாடுவது போலவே, குற்றவாளிகளையும் அவர்களின் குற்றவுணர்வு தொடர்ந்து வேட்டையாடுகிறது. அவர்கள் குற்றத்தை மறந்தாலும், ஒரு திருடனைப் போல குற்றவுணர்வு விழிப்புடன் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறது. சந்தர்ப்பம் அமைந்ததும் முன்னைவிட பலத்துடன் குற்றவுணர்வு அவர்களை வேட்டையாட ஆரம்பிக்கிறது. அதனை எதிர்கொள்ள முடியாமல் அனீஷ் தற்கொலை செய்து கொண்டான்.
ரோஷனை பொறுத்தவரை பியா, சினிக்காவின் கொலைகள் எவ்வித குற்றவுணர்வையும் அவனுக்குள் ஏற்படுத்தவில்லை. ஆனால், அவன் பெரிதும் விரும்பிய நண்பன் அனிஷின் தற்கொலை அப்படியல்ல.
அனீஷ் அவனால்தான் தற்கொலை செய்து கொண்டான். அவன் சினிக்காவின் மூலம் செய்தி அனுப்பியிருக்காவிடில் அனீஷ் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டான். அனிஷின் மரணம் ரோஷனை அவன் மரணம்வரை வேட்டையாடும் என்ற குறியீடுடன் கதை முடிகிறது.
Super Patten
Very bad