குற்றம் குற்றமே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: June 6, 2023
பார்வையிட்டோர்: 15,605 
 
 

சார்..  இன்ஸ்பெக்பர பாக்கனும்.. Yes.. சொல்லுங்க சார்.. போன வாரம் என்னோட கார்லேந்து ஒரு கோல்ட் ஆரம் கம் நெக்லஸ் உள்பட வேற சில பொருட்கள் காணாம போயிடிச்சி. 

காருக்குள்ளேந்தா.. எப்படி, எங்க நடந்தது என்று விவராம ஒரு புகார் எழுதி குடுங்க. Writer…னு கூப்பிட.. சார் வாங்க இந்தாங்க பேப்பர். க்ளீனா எழுதி குடுங்க. Dont worry sir. கண்டு பிடிச்சிடலாம்.. 

பிராகஷ், அவன் மனைவி உஷா இருவரும்  கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு வெளியே வந்தனர். 

பாத்து போட்டுகுடுப்பா. Last time மாதிரி பண்ணிணா உனக்கு இனிமேல் spare parts கிடைக்காது பாத்துக்கோ என்றார் ஏட்டய்யா ஒருவனிடம். ஏங்க என்ன சொல்றாரு இவரு. அது ஒண்ணுமில்ல seize பண்ண வண்டி எல்லாம் இந்த station பின்னாடிதான் போட்டு வெப்பாங்க. பழைய spare parts விக்கறவங்களுக்கும் இவங்களுக்கும் டீல். இதெல்லாம்

யாரு கேப்பாங்க…?

One day before.. பிரகாஷ் தன் தங்கை சாருவிடம் வீடியோ காலில் பேசி ஏற்கனவே ரிசர்வ் செய்த நகைதானா என்று காண்பித்து வாங்கிக்கொண்டு கிளம்பினான் நகை கடையிலிருந்து.  அண்ணி.. dress, தாம்பூலம் எல்லாம் வாங்கிட்டீங்களா. இல்ல இனிமேல்தான் என்றாள் உஷா. 

கார் glove box இல் நகையை வைத்தான். பத்திரிக்கை தரவேண்டியவர்களுக்கு தாம்பூல ஐட்டங்கள் பூ,பழம்,முக்கிய உறவினர்களுக்கு புடவை,  gift சகிதம் கார் back seat இல் வைத்து விட்டு கிளம்பினான் பிரகாஷ்.

ஏங்க,  எங்கேயும் ten minutes க்கு மேல நிக்கவேணாம். சாருவும் அம்மாவும் தனியா இருக்காங்க. ஓகே டியர் done. மூன்று முக்கிய இடங்கள் கவர்செய்தனர். இருட்ட தொடங்கியது.  மாப்பிள்ளையோட அக்கா temple tower apartments குடுத்துட்டு கெளம்பிடலாங்க சரியா.. ஓகேமா. 

வண்டி கார் பார்க்கிங்கில் நின்றது. 13th floor. Invitation, saree, பூ,பழம் மட்டும் எடுத்துக்கிறேங்க. ஆமா ரொம்ப நேரம் ஆக்கிடுவாங்க. Come, quick. 

வாங்க, வாங்க.. Distribution லாம் முடிஞ்சுதா. எப்படி இருக்கீங்க. Fyn. உள்ள வாங்க. மாப்பிள்ளையின் அக்கா கணவன் ஆகாஷ்  வரவேற்றார். அவர் முகம் சற்று வாட்டமாக இருந்தது. இரண்டு வயது குட்டி மகளுக்கு சாக்லெட் குடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். பத்திரிக்கை தந்தனர்.

உஷா.. கெளம்பலாமா. இருங்க night stay பண்ணிட்டு காலைல போலாமே என்றாள் மாப்பிள்ளையின் அக்காவும், ஆகாஷும்.  இல்லிங்க. நிறைய வேலை இருக்கு. கிளம்பறோம். குட்டி bye… 

இருங்க.. நாங்களும் கீழ வரோம் கார்கிட்ட வந்தவங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. Back seat இல் வைத்திருந்த புடவை, பழங்கள், காணவில்லை. Invitation மட்டும் இருந்தது. உஷா டேஷ்போர்டு பாரு. Oh my god. ஆரம் நெக்லஸ் பாக்ஸும் இல்லீங்க. 

என்ன சொல்றீங்க ப்ரகாஷ்? எதுக்கு ஜுவல்ஸ் கார்லியே வெச்சிட்டு வந்தீங்க என்றனர்  மாப்பிள்ளையின் அக்காவும், ஆகாஷும் ஒருவரை ஒருவர் விநோதமாக பார்த்தவண்ணம். 

ஏங்க கார் லாக் பண்ணலியா  கோவமாய் கேட்டாள் உஷா.  திருதிருவென முழித்த பிரகாஷ்… லாக் பண்ணேன் நல்லா ஞாபகம் இருக்கு. அப்பறம் எப்படீங்க?  

Inspector அரவிந்த்,  ப்ரகாஷ் கொடுத்த கம்ப்ளைன்டை படித்துக்கொண்டே இருந்தவர், திடீரென constable இங்க வாங்க last week ஒரு கம்ளைன்ட் வந்துதே எடுங்க. Yes sir.. நீங்க நெனைக்கிறது கரெக்ட். நான் நேத்தே பாத்துட்டேன். இந்த புகாரும் அதே Tempe tower apartments லேந்து தான் வந்துருக்கு. Typical ஆ இருக்கு. பூட்டின கார்லேந்து சில important documents காணோம்னு ஆகாஷ்னு ஒருத்தர் கம்ப்ளைன்ட் குடுத்திருக்கார். Something fishy. 

ஆகாஷ் வீட்டில்..

ஏங்க..இப்படியே upset ஆ இருந்தா எப்படி. File இல்லாம office க்கு வரக்கூடாதுன்னு HR ல சொல்லிட்டாங்க. நான் FIR காமிச்சாலும் no use. நம்ம அபார்ட்மெனடல்ல கார்ல வெக்கற பொருள் எல்லாம் காணாமபோறது டவுட்டா இருக்கு. இப்ப பாரு 12 சவரம் சம்மந்தி வீட்டு நெக்லஸ்.

போனவாரம் உன்னோட friend 12th floor ல கூட ஏதோ கார்ல வெச்சிருந்தது காணோம்னு சொன்ன இல்ல. Yes.. But.. அவங்க husband car லாக் பண்ணலையோ என்னமோ டவுட்டாவா சொல்றா அவ. போன் பண்ணி என்ன ஆச்சுன்னு கேட்டுப்பாரு கெடச்சதான்னு.

Mr. ப்ரகாஷ் நீங்க ஸ்டேஷனுக்கு வரணும்.. Station இல் இருந்து inspector. அரவிந்த் கால் செய்ய..Yes  சார் இதோ வரேன். இன்ஸ்பெக்டர் அர்விந்த் கொஞ்சம் பரபரப்பாக இருந்தார்.  Yes prakash come in. அன்னிக்கி temple towers இன்விடேஷன் குடுக்க போயிருந்தீங்களே, ஆகாஷ் என்பவர் வீட்டுக்கா? Yes sir. 13th floor தான. ஆமாம். அந்த derails உங்க புகார்ல இல்ல. என்ன சார் எதாவது க்ளூ கெடச்சுதா.. கெடச்சுடும். வண்டி எடுங்க போலாம். Constable.. Yes sir… Police dress வேண்டாம்.. Mufty லியே ஏறுங்க..

Temple towers இல் நுழையும் முன்பு இன்ஸ்பெக்டர் அர்விந்த் சொன்னார்..  Mr.ப்ரகாஷ் பத்திரிக்கை தரும்போது எங்க  பார்க் பண்ணீங்களோ அங்கேயே பார்க் பண்ணுங்க என்று. 

செக்யூரிடி முஸ்தபாவிடமும்  association secretary மைக்கேலிடமும் formal ஆக விசாரித்தார் inspector.  சார் அன்னிக்கி night between 8.30 to 10.15 வரைக்கும் வந்த CCTV footage காட்டுங்க என்றார் மைக்கேலிடம். எதுவும் வித்தியாசமாக தோன்றவில்லை. செக்யூரிட்டி உங்களுக்கு இங்க ஏதாவது வித்தியாசமா smell பண்ணா உடனே எனக்கு போன் பண்ணனும். ஒகேவா.. சார் நீங்களும் தான். மைக்கேல் தலையசைத்தார். 

வாங்க ப்ரகாஷ். இன்ஸ்பெக்டர் வாங்க. சொல்லிருந்தா நானே வந்திருப்பேனே. இன்னும் suspension ல தான் இருக்கீங்களா ஆகாஷ். Yes sir. 

ப்ரகாஷ் வித்தியாசமாக பார்க்க ஒரு குட்டி flashback சொல்லி முடித்தார் இன்ஸ்பெக்டர் அர்விந்த்.

ஆகாஷ் அங்கலாய்த்தான். இங்க என்ன நடக்குதுன்னே தெரியல. First என் கார்.. Very important file ப்ரகாஷ்.  அடுத்து உங்க கார்.

ஆகாஷின் மனைவி காஃபி கொடுக்க, குடித்து விட்டு கிளம்பும் நேரம்… inspector கேட்டார்..ஆமாம் ஆகாஷ்,  12th floor உங்க wife friend புருஷனோட கார்லேந்து கூட ஏதோ காணமபோச்சுன்னு சொன்னீங்க இல்ல. வாங்க அந்த வீட்டுக்கு போலாம். 

டீ… ரேவதி ஒண்ணுமில்ல அன்னிக்கி சொன்னியே அத பத்தி கேக்கலாம்னு வந்திருக்கார். சார்.. அது.. அது வந்து.. உடனே அவளது கணவன் இடைமறித்து, sir actually அன்னிக்கி நான் கார் lock பண்ணல. But பெருசா ஒண்ணும் போகல. என்னோட பேட்மின்டன் பேட் and some eatables. அவ்ளோதான். 

ஏண்டி எவ்ளோ serial பாக்கர. அதபத்தி பேசவேண்டித்தான. இது ஒரு பெரிய விஷயமா discuss பண்ணிருக்க. போ உள்ள என்று கத்தினான் ரேவதியின் கணவன்.

Constable.. நீங்க போய் செக்ரட்டரி மைக்கேல் கிட்ட வேற எந்தெந்த வீட்ல என்னென்ன காணாம போயிருக்குன்னு list கேட்டு வாங்கிடுங்க. Yes sir.

ஒரு வாரம் கழித்து இன்ஸ்பெக்டர் அர்விந்துக்கு கால் வந்தது. அப்படியா.. Flat நம்பர் எந்த floor னு சொல்லு. 

பேரு.. ஓகே.. ஓகே குறித்துக்கொண்டான். 

Constable.. Yes sir. மஃப்டில தான.. There you are..

அர்விந்த் புல்லட் temple towersஇல் நின்றது.. லிஃப்டில் ஏறி 8th floor க்கு வந்து H3 ப்ளாட் கதவை தட்ட ஒருவர் கதவை திறந்தார். ID ஐ காண்பித்து உள்ள போயி பேசலாமா.. 

உக்காருங்க சார்.. உள்ளேயிருந்து ஒரு மூதாட்டி ஈ யென்று பல் இளித்தாள். தங்கபல் செட்டா பாட்டி. நல்லாருக்கே எப்ப கட்னீங்க. 

அம்மா போ உள்ள.. எல்லார்கிட்டயும் பல்ல காம்சிகிட்டு. சார் அவங்கள ஏன் திட்ரீங்க. சரி உங்க பையன் தீபக் எங்க. Two days ஆகும் ஒரு tour போயிருக்கான். உங்க அபார்ட்மென்ட்ல 13th floor ஆகாஷ் வீட்டு கார்லேயும் அவங்க வீட்டுக்கு வந்த உறவினர் ஒருத்தர் கார்லேயும் சில items காணாம போயிருக்கு தெரியுமா. தெரியும் சார். Association office ல பேசிக்கிட்டாங்க.

அத ஏன் சார் எங்க கிட்ட கேக்கறீங்க. என் பையன் school first என்றாள் அவனது மனைவி.  வாம்மா.. வா.. சிகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்ரா மாதிரி இருக்கு நீங்க சொல்றது. Schools first ன்னா வக்கிர புத்தி இருக்காதா.. 

ருசி கண்ட பூனை சும்மா இருக்காது.. வடைய தேடி எலி வராமயா போய்டும். பொறிவச்சி பிடிக்கிறேன்.. சரிங்க சார், இதெல்லாம் எங்க கிட்ட ஏன் சொல்ரீங்க. புரியும் கூடிய சீக்கிரம். Constable அந்த பையன் போன் நம்பர் வாங்கிடுங்க கெளம்பலாம்..

இன்ஸ்பெக்டர் அரவிந்த் அவரது வீட்டில் இரவு ட்ரிங்ஸ் பண்ணிக்கொண்டிருக்கையில் டீவியின் சத்தம் அதிகமாவதை கேட்டு, ஏம்மா இவ்ளோ சவுண்டு வெச்சிருக்க. காதே செவிடாயிடும் போலிருக்கு.  சவுண்ட் இன்னும் அதிகமாகிக் கொண்டேபோனது. 

ஏங்க டீவி சத்தமா வெச்சி பாக்கறீங்க என்று மனைவியும் சமையலறையிலிருந்து கத்தினாள்.  ஏண்டி காதுல விழலியா நான் சொல்றது. ஹாலுக்கு கத்தியபடி வெளியே வந்தான். திடீரென டீவி ஆஃப் ஆனது. மனைவியும் ஹாலுக்கு ஓடிவர, அவர்களின் இரண்டு வயது மகனின் கையில் டீவி ரிமோட். எல்லா பட்டன்களையும் அழுத்தி அழுத்தி விளையாடிக் கொண்டிருந்தான். ஏங்க அவன்கிட்டேந்து அந்த ரிமோட்ட பிடுங்கி வைங்க. அரவிந்துக்கு ஒருகணம் பொறிதட்டியது.

 Constable.. அய்யா சொல்லுங்கய்யா. மணி பத்து ஆயிடிச்சி இப்ப போகணுமா temple tower க்கு. No no. நாளைக்கு போலாம். நான் சொல்றத நல்லா கேட்டுக்கோங்க. ஏதோ சொல்ல.. ஓகே சார்.. ஓகே சார் என்று தலையாட்டினார் constable. 

ப்ரகாஷ்.. இன்னிக்கி நைட்டு சரியா 8.30 க்கு ஸ்டேஷன் வந்துடுங்க. நான் ஒருகார் arrange பண்ணிருக்கேன். அதுலதான் போறோம்.  இன்னிக்கு round up பண்ணிடலாம் குற்றவாளிய. ஓகே சார்.  உடனே ஆகாஷுக்கும் போன்பண்ணி ப்ளான் infirm செய்தான் அரவிந்த். 

இரவு சரியாக 8.50 க்கு innova கார் temple towersஇல் வந்து நின்றது. Constable back seat third rowக்கு போயிடுங்க. நல்ல கீழ படுத்துடுங்க. மேல ஒரு பெட்ஷீட் போத்திக்கோங்க.  லக்கேஜ் மாதிரி தெரியணும். உள்ள ஆள் இருக்கறதே தெரியகூடாது தீபக்கிற்கு. 

சார் தீபக் ஆ. என்ன சொல்றீங்க. யாரு தீபக்..என்று கேட்ட பிரகாஷிடம்.. எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் புரியும் வாங்க ஆகாஷ் ப்ளாட்டுக்கு போலாம் இன்ஸ்பெக்டர் அரவிந்தும், ப்ரகாஷும் லிஃப்டில்

ஏறி காலிங் பெல் அடிக்க ஏதோ ஒரு operation நடக்கப்போவதை உணர்ந்த நால்வரும் சோஃபாவில் அமர்ந்தனர். 

அரவிந்த் கார் ரிமோட்டை ஆகாஷின் குழந்தையிடம் கொடுக்க, அது lock unlock செய்து சிரித்து சிரித்து விளையாடியது அரவிந்த் நினைத்தபடியே. கார் unlock ஆன சத்தம் கேட்டு தீபக் மெதுவாக கார் பக்கத்தில் வந்து நின்றான். காரை ஒரு வலம் வந்தான். உள்ளே யாருமில்லை என்று புரிந்துகொண்டான். Blue toothஇல் instruction constableக்கு. வந்துட்டான். ரெடி.. 1…2…3…தீபக் கார் கதவை திறந்த அடுத்த நொடி constable பாய்ந்து அவனை பிடித்தார். சார் பய மாட்டிகிட்டான், வாங்க கீழ இறங்கி.  இந்த operation ஐ ஏற்கனவே செக்யூரிடிக்கும் association secretary க்கும் சொல்லி வைத்திருந்ததால் அவர்கள் இருவரும் சேர்ந்து சூழ்ந்து கொள்ள… லிஃப்டிலிருந்து குழந்தையுடன் நால்வரும் இறங்கிவர..குழந்தை க்ளாப் அடிக்க.. அனைவரும் க்ளாப் அடிக்க.. அந்த க்ளாப் சத்தம் கேட்டு ப்ளாட்டுகளில் அணைந்திருந்த எல்லா விளக்குகளும் எரிய… 

ஓங்கி ஒரு அறை விட்டான் ஆகாஷ். எங்கடா file. உன்னால என் நிம்மதியே போச்சு. ப்ராகாஷும் அடிக்க கை ஓங்கிக் கொண்டு வர.. சார்.. சார்… தெரியாம பண்ணிட்டேன்.. விட்ருங்க சார்..ப்ளீஸ்.. எல்லா ப்ளாட்ஸ்லிருந்தும் பாக்கறாங்க. 

தம்பி school first வந்தா மட்டும் போதாது. ஏறு கார்ல. Constable இவனோட parent ஐயும் கூட்டிட்டு வாங்க. ஸ்டேஷன்ல வெச்சி செய்வோம்..(விசாரணை). மைக்கேல்.. முஸ்தபாதான  நீங்க ரெண்டு பேரும் வரணும் ஸ்டேஷனுக்கு..

Climax

காரில் ஏறிய ஆகாஷும், ப்ராகாஷும் இன்ஸ்பெக்டரை பார்த்து, சார் ஒண்ணு கேக்கலாமா. தெரியும் நீங்க என்ன கேக்கபோறீங்கன்னு. ஒரு நாள் செக்யூரிட்டி முஸ்தபா எனக்கு கால் பண்ணாரு. 

Flash back.  ஏய் கொஞ்சம் தள்ளிக்கோ.. Compromising postureஇல் தனது girl friend உடன் இருந்த தீபக், செக்யூரிடியை பார்த்தவுடன் வழிந்தான். ஹீ..ஹீ.. இப்பதான் போறீங்களா பாய் ஃஷிப்டுக்கு. அது ஒண்ணுமில்ல கூட படிக்கிற பொண்ணு. நான் ஒண்ணும் கேக்கலியே தம்பி. இல்ல கேப்பீங்களோன்னு நெனச்சி சொன்னேன். 

பய புது புல்லட், ஐ ஃபோன் என்று பந்தாவாக இருந்தான். அந்த புள்ள கையிலயும் புது மொபைல் மாதிரிதான் தெரிந்தது. அவளது ஸ்கூட்டியிலும் for registration sticker ஒட்டியிருந்தது. பாய்.. இந்தாங்க செலவுக்கு வெச்சிக்கோங்க.. இல்ல வேண்டாம் தம்பி. இன்னிக்கி சம்பளம் போட்ருவாங்க. 

பறவால்ல பாய்.. உங்களுக்கு எவ்ளோ செலவு இருக்கும் என்று 2000/- ரூபாய் நோட்டு ஒன்று எடுத்து பாக்கெட்டில் வைத்தான். பர்ஸில் 2000/- ரூபாய் தாள்கள் கத்தையாக இருந்தன. இத எப்போ செல்லாதுன்னு சொல்லப் போறானுங்ளோ என்று அலுத்துக்கொண்டான்.  

அது ஒண்ணுமில்ல பாய்.. அப்பாக்கு கம்பெனில நல்ல ப்ரமோஷன், salary increase எல்லாம் கெடச்சிருக்கு. இதகூட நான் கேக்கலியே தம்பி.. இல்ல எதாவது கேப்பீங்கன்னு நெனச்சேன். 

வரேன் தம்பி.. ஓகே பாய்.. எதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்க. நம்மள்ளாம்  ஒண்ணுக்குள்ள ஒண்ணு. முஸ்தபா சொன்னதை சொல்லி முடித்தார் இன்ஸ்பெக்டர்.

போலீஸ் ஸ்டேஷனில்… சார் என் பையன விட்ருங்க ப்ளீஸ். கெஞ்சினர் தீபக்கின் அப்பாவும் அம்மாவும். டேய் வா இங்க.. உக்காரு் Constable இவன்கிட்ட தன்மையா விசாரிங்க.. உள்ள போயி கொஞ்சம் லாடம் கட்டிட்டு வந்துடறேன். 

போலீஸ் அடியை இதுவரை பார்க்காத தீபக் பயந்து நடுங்கினான்.. ஏட்டையா எதாவது சொன்னானா? முழுசா சொல்லலிங்கய்யா. 

இந்த லத்தி ஒடஞ்சிடிச்சி அந்த லத்திய எடுங்க constable. டேய் completeஆ எல்லாத்தையும் ஒப்பிச்சுறு..சார் அடிய பாத்தியா இல்லையா.. இருங்க ஏட்டையா இவனெல்லாம் அடிக்க வேணாம். பரம்பரை கிரிமினல் இல்ல இவன். ஏதோ நப்பாசை அவ்ளோதான்.. இல்ல… கேட்டுக்கொண்டே பளார் என அறைந்தார் இன்ஸ்பெக்டர். 

மைக்கேல் சார்.. அந்த ஸ்டேட்மென்ட்ட குடுங்க. இதான்.. இத பாரு.. இதுவரைக்கும் எந்த ப்ளாட்ல என்ன என்னென்ன ஆட்டய போட்டேன்ற list. ஒழுங்கு மரியாதையா எங்க வெச்சிருக்கேன்னு சொல்லு. இல்லேன்னு வை..

சார்.. சார்.. ப்ளீஸ்.. FIR போட்டா அவ்ளோதான் உன் carrier spoil ஆயிடும். சொல்லுமா உன் பையனுக்கு.. கை வெக்கவேணாம்னு பாக்கறேன். Yes sir. Please கொஞ்சம் wait பண்ணுங்க.. நான் பேசறேன் என்றாள் தீபக் அம்மா.

Constable நீங்க அவங்க school principal கூப்பிடுங்க சரிபட்டு வரலேன்னா. அய்யோ சார் ப்ளீஸ்.. School வரைக்கும் போகாதீங்க. என் க்ளாஸ் மிஸ் ரொம்ப நல்லவங்க.. School first னு என்பேர்ல நல்ல affection அவங்களுக்கு. 

Physics sir தான் கொஞ்சம் அப்பிடி இப்பிடின்னு இருப்பாரு பொண்ணுங்க கிட்ட. Physics teacher னால எல்லா school லியும் அப்பிடிதான் இருப்பானுங்க போல என்றார் constable. சார் இவன விசாரிச்சா pocso க்கு நிறைய case கிடைக்கும்போல.

ஏட்டு நம்ம இந்த விஷயத்த முடிப்போம் மொதல்ல. என்னடா principal கூப்பிடவா.. வேண்டாம் சார்.. எல்லாத்தையும் சொல்லிடறேன் one by one ஆ.. List குடுங்க. அவன் சொல்ல.. சொல்ல சிலவற்றை அவன் வீட்டிலிருந்த பரணையிலிருந்தும், ப்ரகாஷ் நகையை மார்வாடி கடை ஷோரூமிலிருந்தும் recover செய்து உரியவர்களிடம் தந்தனர். ஆகாஷ் file company யில் ஒப்படைத்தான். Suspension revoke செய்தார்கள். 

இன்ஸ்பெக்டர் கேட்டார் தீபக் பெற்றோரிடம்.. பசங்க நடவடிக்கைகள் watch பண்ணிட்டே இருங்க. அளவுக்கு அதிகமா பணம் நடமாடினா கேக்கணும்.. 

புது புல்லட் எங்கேந்து வந்துச்சுன்னு கேட்டீங்களா?. சார் அவன் friend டோடதுன்னு சொன்னான் எங்க்கிட்ட. 

போனவாரம் ஒரு பணக்கார வீட்டு பையன், அவளோட lover புது மொபைல் கேட்டான்னு ரோட்ல போய்கிட்டிருந்த பொண்ணோட செயின் அறுத்துட்டான். நியூஸ் பாக்கரீங்களா இல்லையா..  

Sorry sir.. Sorry sir. என் பையன் future spoil பண்ணிடாதீங்க சார்..

சரி ப்ரகாஷ், ஆகாஷ் உங்க complaint pursue பண்ணப்போரீங்களா or otherwise.. இல்ல சார்.. வாபஸ் வாங்கிக்கிறோம். படிக்கிற பையன். வேணாம்..please. 

Well said. நானும் அதான் advice பண்லாம்னு இருந்தேன். FIR போட்டு உள்ள தள்ளினா பெரிய கிரிமினலா மாறிடுவான் futureல. நானே அதுக்கு அடித்தளம் போடக்கூடாதுன்னு நெனைக்கிறேன். படால் என இன்ஸ்பெக்டர் காலில் விழுந்தான் தீபக்.. என் கால்ல விழாத. இதோ இவங்க ரெண்டு பேர் கால்லியும் விழு. Uncle sorry uncle. Uncle sorry uncle.. 

குற்றவாளிகள் உறுவாக்கப்படுகிறார்கள்..

மைனர் செய்தாலும் குற்றம் குற்றமே.. மன்னிப்போம்.. வாய்பளிப்போம் திருந்த..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *