(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
காரியங்களைச் செய்தற்குரிய மன உறுதி
சிதம்பரம், மதுரை, திருவாரூர் முதலிய ஊர் களில் ஓதுவார்கள் பாடிய பதிகங்களைக் கேட்டான். கேட்ட ராஜ ராஜ்ன் மனம் கரைந்தான். எல்லா க்ஷேத்திரங்களுக்கும் இவ்விதம் பாடல் உண்டா ? என்று ஓதுவார்களைக் கேட்டான் ; அவர்கள், “உண்டு ; நால்வர்கள் பாடியிருக்கிறார்கள் ; அவை அந்தந்த ஊர் ஓதுவார்களுக்கே தெரியும்” என்றார் கள். சோழப் பேரரசன் திருப் பதிகங்களைத் தொகுத்து வெளியிட எண்ணினான். நம்பியாண்டார் மூலம் மூவர் பாடிய திருப்பதிகங்கள் தில்லைக்கோவி லில் உள்ள அறை ஒன்றில் பாதுகாப்பில் இருப்ப தாக அறிந்தான். உடனே அரசன், சிதம்பரத்தை அடைந்து, “அக்கதவைத்திறந்து பார்க்கவேண்டும்,”என்று தில்லைவாழ் அந்தணரைக் கேட்டுக் கொண்டான். அவர்கள், “மூவர் அடைத்துப் போனது; மீண்டும் அவர்கள் வந்தால் தான் திறக்கலாம்,” என்றார்கள். இதைக் கேட்டு அரசன் பேசாது தன் மாளிகை சென்றான்; “யாவரும் அர சன் செயல் நடக்கவில்லை” என்று வருந்தினர். மறுநாள் மூவர் செப்புச் சிலைகளையும் அலங்காரம் செய்து, பூசை முதலியன செய்வித்து, தெருவில் எழுந்தருளச் செய்து, திருமுறைகள் இருந்த அறைக்கு எதிரில் கொண்டுவந்து நிறுத்தினான். மூவர்வந்து விட்டார்கள் அறையைத் திறக்கலாமே! என்றான் அரசன். ஆரம்பத்திலாவது நடுவிலா வது அரசன் செய்யும் தந்திரம் தெரிந்திருந்தால் மூவரை எழுந்தருளப்பண்ண மாட்டோம்” முடிவில் தெரிவதால் ஏமாந்தோம்” என்று அவனது நுண் ணறிவைப்பாராட்டித் தில்லை வாழ் அந்தணர்கள் அறைக்கதவைத் திறந்தனர். உள் செல்லரிக்கப் பட்ட ஏடுகள் போக, ஏனையவற்றை எடுத்து, ஒழுங்கு செய்து, ஏழு திருமுறைகளாக வெளிப்படுத்தி அனை வரும் அறியச் செய்தான். இதனால் இவனுக்குத் திருமுறைகண்ட ராஜராஜன் என்ற பட்டப் பெய ரும் உண்டு. வள்ளுவரும் “தொழிலை மறைத்து முடிவில் தெரியும்படி செய்வதே ஆண்மையாகும்” என்று கூறியுள்ளார்.
கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும். (50)
கடை = (செய்யப்படும் தொழிலை) முடிவிலே
கொட்க = வெளிப்படும்படி
செய்தக்கது = (அதற்கு முன் எல்லாம் மறைத்துச்) செய்வதே
ஆண்மை = வலிமை ஆகும்.
இடை = நடுவிலே
கொட்கின் = வெளிப்படுமாயின் (அவ்வெளிப்படுதல்)
எற்றா = நீக்கப்படாத
விழுமம் = துன்பத்தை
தரும் = (தொழில் செய்தவனுக்குக்) கொடுக்கும். –
கருத்து: தொழிலை மறைத்து முடிவில் தெரியும்படி செய்வதே ஆண்மை ஆகும். அது நடுவில் வெளிப்படுமா யின் துன்பம் உண்டாகும்.
கேள்வி: எற்றா விழுமம் தருவது எது?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.