விடுகதை கவிதையாகிறது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 17, 2021
பார்வையிட்டோர்: 12,570 
 
 

குழந்தைகளின் தேவசபை கூடியிருக் கிறது. விடுகதைகளைத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிருர்கள். அவர்க ஞடைய உலகத்திற்கு என்னையும் அழைக்கிறார்கள்.

‘முள்ளு முள்ளு முள்ளு
எல்லா இடத்திலும் இருக்குதென்று
சொல்லு!
கால்களிலே தைக்காது-ஆனால்
கண்கண விட்டு வைக்காது’

என்றேன். குழந்தைகள் குழம்பிப் போனார்கள், “நீ விடுகதை போடவில்லை. ஏதோ பாட்டுச் சொல்லுகிறாய்”- என்று குற்றம் சாட்டினார்கள்.

“இல்லை விடுகதைதான்” என்று விவாதித்தேன், அவர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே அதை இப்படி மாற்றிச் சொன்னேன்:

‘காணும் இடமெல்லாம் முள்ளாக இருப்
பான்;
கால்களில் மட்டும் குத்தவே மாட்டான்.
அவன் யார்?’

இப்போது குழந்தைகள் ‘இது விடுகதை தான்’ என்று ஏற்றுக் கொண்டார்கள்.

“பதில் தெரியவில்லை” என்றார்கள்.

“காலச் சக்கரவர்த்திக்குக் கணக்கப் பிள்ளை. அவன் யார்?” என்றேன்.

“வாடி போகலாம். புரிகிற மாதிரி விடுகதை போட அப்பாவுக்குத் தெரியவில்லை” என்று சிறியவள் பெரியவளை அழைத்தாள்.

“பொறுடி. இவர் பெரிய கவிஞரில்லையா… என்னதான் உளறுகிறார் பார்க்கலாம்” என்று பெரியவள் எனக்கு ஒரு சான்றிதழ் கொடுத்தாள்.

‘பார்க்க எழுதத் தெரியாதவன்
பார்த்ததைக் குறித்து வைக்காதவன்
சூரியன் பூமியைச் சுற்றி வருவதை மட்டும்
சுருக்கெழுத்தில் குறித்து வைப்பான்’

என்று தான் கூறி முடித்தவுடன் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன. எல்லாக் குழந்தைகளும் சேர்ந்து என்னை ‘ஒரு மாதிரி’ யாகப் பார்க்கத் தொடங்கின.

“உனக்கு விடுகதையே போடத் தெரிய வில்லை. விடுகதை என்றால் இப்படி இருக்காது” என்று குழந்தைகளெல்லாம் ஒரே மூச்சில் என் விவேகத்தைத் தூக்கி வீசி எறிந்தார்கள்.

“கொஞ்சம் விளக்கம் சொல்கிறேன், அப்போதாவது கண்டுபிடியுங்கள். எல்லா விடுகதைகளுக்கும் ஒரே பதில்தான்” என்று சமாதானப்படுத்தினேன்.

“உள்ளுக்குள் அவன் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு மனிதர்கள் வெளியே ஓடிக் கொண்டிருப்பார்கள். தன்னைக் கைகளில் கட்டி வைப்பதற்காகத்தான் மனிதர்களை அவன் தன்னுடைய கால்களால் விரட்டிக் கொண்டிருக்கிறான்” என்று நான் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே. மூத்த மகள் “ஓஹோ…” என்று தலையை ஆட்டினாள்.

“அடே கடிகாரம்” என்று இரண்டாவது பெண் கத்தினாள்.

“ஆமாம், கடிகாரம்” என்று குழத்தைகள் அனைவரும் குதித்தார்கள், தான் விரித்த வலையில் தானே மாட்டிக் கொண்டு திண்டாடிய பின் திடீரென்று விடுபட்ட திருப்தி எனக்கு ஏற்பட்டது.

***

குழந்தைகளை அனுப்பிவிட்டு தனிமையில் யோசித்தபோது விடுகதைக்கும் கவிதைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று தெரிந்தது. இரண்டுமே உவமை, உருவக, ஓசை நயங்களை ஆடை அணிகலன்களாக அணிந்து கொள்கின்றன.

கடிகாரம் பற்றிய விடுகதையைக் கவிதையாக உருமாற்ற வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்:

கடிகாரமே நீ
கவலைப்படாதே!
உன் பெருமை
ஆகாயம் போலவே
அளக்க முடியாதது!

ஏனென்றால் –
வானம்கூட
பூமிப் பெண்
கட்டிக் கொண்டிருக்கும்
கடிகாரம்தான்!

அதில்
சுற்றி வரும் முட்கள்தான்
சூரியனும் சந்திரனும்!

– 06-07-1986

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *