யானை வடிவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடம் இது. அமெரிக்காவின் தற்போதைய நியூஜெர்ஸியில் உள்ள ‘மார்கேட்’ நகரில் இருக்கிறது.
1882&ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்த கேம்ஸ் லாஃபர்டி என்பவர்தான் இதைக் கட்டினார். 6 மாடி அளவுக்கு இதன் உயரம் உள்ளது. முதலில் இதன் பெயர் ‘எலிஃபன்ட் பகார்’. 1990&ல் ‘லிuநீஹ் tலீமீ ணிறீமீஜீலீணீஸீt’ என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்கள். இதுதான் விலங்கு வடிவில் உள்ள பழைமையான கட்டடம். இது 2,000 சதுர அடி தகர (tவீஸீ) ஷீட்டாலும் ஒரு மில்லியன் மரக்கட்டையாலும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் உடலமைப்பு 38 அடி நீளம், 80 அடி சுற்றளவு கொண்டது. இதில் 22 ஜன்னல்கள் உள்ளன. இதன் கால்கள் 22 அடி உயரமும், 10 அடி விட்டமும், வால்பகுதி 26 அடி நீளமும், தந்தங்கள் 22 அடி நீளமும் கொண்டது. கண்கள் 18 அங்குல விட்டம், காதுகள் 17 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டது.
இந்தக் கட்டடத்துக்கு கால்களில்தான் கதவுகள் இருக்கின்றன. உள்ளே போக சுற்றிச் சுற்றி செல்லும் படிக்கட்டுகளும், ஏறும்போது பிடித்துக்கொள்ள அழகான கைப்பிடிகளும் யானையின் மீது உட்கார அம்பாரியும் உள்ளன.
இந்தக் கட்டடத்தால் கவரப்பட்டவர்கள், இதே போல் நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளின் நகரில் எலிஃபன்டைன் கொலோசஸ் (ணிறீமீஜீலீணீஸீtவீஸீமீ நீஷீறீஷீssus) என்ற ஹோட்டலும், ‘கேப் மே லைட் மே’ என்ற இடத்தில் ‘லைட் ஆஃப் ஆசியா’ என்பதையும் அமைத்தார்கள். ஆனால் றீuநீஹ் tலீமீ மீறீமீஜீலீணீஸீt மட்டும்தான் ஒரு நூற்றாண்டையும் தாண்டி இன்றும் அனைவரையும் கவர்ந்துகொண்டு இருக்கிறது.
ஜேம்ஸ் இதைக் கட்டியபோது அலுவலகமாகவும் சின்ன ரெஸ்டாரன்டாகவும்தான் பயன்படுத்தினார்.
இதை 1887&ல் ஜான் மற்றும் சோபி ஜெர்ஷென் என்பவர்களுக்கு விற்றுவிட்டார். அவர்கள் இதை சுற்றுலா வருபவர்களைக் கவரும் வகையில் பிரமாண்டமான ஓட்டலாக மாற்றினார்கள். பின் 1902&ல் இதை ஒரு டாக்டர் தன் வீடாக மாற்றினார். அடுத்து மதுபானக் கடையாக மாற்றிவிட்டார்கள். காலப்போக்கில் இது பழுதடைந்துவிட்டது.
அப்போதுதான் இப்படிப்பட்ட பழமையான கட்டடத்தை பாதுகாக்கவேண்டும் என்று ‘லூசி பாதுகாப்பு கமிட்டி’ என்ற பெயரில் ஓர் அமைப்பு பிரச்சாரம் செய்தது. அதைத் தொடர்ந்து 1976&ல் இது வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக (ழிணீtவீஷீஸீணீறீ பிவீstஷீக்ஷீவீநீணீறீ லிணீஸீபீனீணீக்ஷீளீ) அறிவிக்கப்பட்டது. இன்று அமெரிக்கா செல்பவர்கள் இதைப் பார்க்காமல் திரும்புவதில்லை.
தற்போது லூசியின் வயிற்றில் ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது. இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பல வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகளும் இதன் வரலாற்றைச் சொல்லும் விதத்தில் உள்ளன.
கோடைக்காலத்தில் சுமார் 25 ஆயிரம் பார்வையாளர்கள் இதைப் பார்த்து ரசிக்கிறார்கள்.
இங்கே மற்றொரு சிறப்பம்சம், இங்கே இருக்கும் கிஃப்ட் ஷாப்பில் போஸ்ட் கார்டு வாங்குவதுதான்.
அதேபோல் அம்பாரிக்குப் போய் கடற்கரையின் அழகை ரசிப்பதற்கும் யாரும் மறப்பதில்லை. கடலில் வரும் கப்பலை 8 மைலுக்கு முன்பே பார்க்கலாம்.!
– வெளியான தேதி: 16 டிசம்பர் 2006