திருக்கிள்ளியே! உன் உடல் முழுதும், வாள் உழுது வடுப்பட்டுள்ளது. அதனால் நீ அழகு குறைந்தவன்.
”கண்ணுக்கு இனியன் அல்லன். ஆனால் காதிற்கு இனியன். ஆனால் உன் புகழ் பெரிது. ஏனெனில் உன் பகைவரோ, உன்னைக் கண்டால் அஞ்சிப் புறங்காட்டி ஓடுவர். ஆதலால் உடலில் புண் இல்லை . கண்ணுக்கு இனிய காட்சியளிப்பான். ஆனால் அவர்கள் செவிக்கு இன்னாதவர். நீயும் ஒன்றிலே இனியன். அவர்களும் ஒன்றிலே இனியர். ஆயினும் உன்னை மட்டும் தானே உலகம் மதிக்கிறது.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்