பொறாமை வேண்டாமே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,274 
 

பண்ணையார் வாசு ரொம்ப நல்லவர். அவரிடம் கடன் கேட்டு வந்தவர்களுக்குக் கூட வட்டியில்லாமல் கொடுத்து உதவி வந்தார். அவருடைய நிலங்கள் நன்றாக விளைந்தன. செல்வமும் முறையாகப் பெருகி வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால்—

அவரது தம்பியும், தம்பி மனைவியும் அருகில் வசித்து வந்தாலும் பண்ணையாரின் ஆதரவில்தான் வாழ்ந்து வந்தனர். பண்ணையார் பிறருக்குக் கொடுத்து உதவுகின்ற செயலை வெறுத்தார். அதனால் சில தில்லுமுல்லு வேலைகளையும் செய்து வந்தார்.

பண்ணையாரின் மகன் சுந்தரம் எட்டாம் வகுப்புப் படித்து வந்தான். ரொம்ப நன்றாக படிப்பான்.

அன்று மாலை—

சுந்தரம் பள்ளியிலிருந்து வந்து தன் தந்தையின் முன் தன் அரையாண்டு மதிப்பெண் பட்டியலை நீட்டினான்.

அதில், எல்லாப் பாடங்களிலும் எண்பதிற்கும் மேலாக மதிப்பெண்கள் வாங்கியிருந்தான். அத்தோடு கணக்கில் நூறு மதிப்பெண்கள் பெற்றிருந்தான். வகுப்பில் முதல் மாணவன் என்றும் குறிப்பிடப்பட்டுப் பாராட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த பண்ணையார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

“”அப்பா! நான் நிறைய மதிப்பெண்கள் வாங்கியதற்குக் கண்ணன் சார் தான் காரயம். ஆனால், அவரது மகள் உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். என் வகுப்பாசிரியர் கண்ணன் மிகவும் பணத்துக்கு கஷ்டப்படுகிறார் என்றான்.” உடனே ஆசிரியருக்கு தேவையான பண உதவிகள் செய்ய சென்றார் பண்ணையார். இதனால் ஆத்திரம் கொண்ட தம்பி, “”அண்ணா நான் ஊர் சுற்றி பார்க்க செல்லணும். எனக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் வேணும்!” என்றான்.

உடனே கொடுக்கும்படி கணக்குப் பிள்ளைக்கு கட்டளையிட்டார் பண்ணையார். ஒருவாரம் கழித்து ஊர் சுற்றித் திரும்பிய தம்பியும், தம்பி மனைவியும் குய்யோ முறையோ என வாயில் அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அவர்களது வீட்டில் திருடன் புகுந்து எல்லா பொருட்களையும் திருடிச் சென்றிருந்தான்.

“”தம்பி… பிறரை பார்த்து பொறாமைப் படக்கூடாது. பொறாமை எலும்புறுக்கி நோய் போன்றது. நீ பொறாமைபட்டு ஊருக்கு போன… என்ன நடந்தது, பார்த்தியா? இனிமேல் இப்படிச் செய்யாதே!” என்றார். மனம் திருந்தினர் தம்பியும், தம்பி மனைவியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *