(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒவ்வொரு வீட்டிற்கும் ஆபத்தான நேரம் வருவதுண்டு. ஒவ்வொரு நாட்டிற்கும் கஷ்ட காலம் அமைவதுண்டு. கிரேக்க நாட்டிற்கு அது கரைச்சலான நேரம். அரசவையில் ஒரு சிறந்த அறிஞர் இருந்தார். அரசர் அவரை அழைத்தார்.
“போர் மேகங்கள் எமது வானத்தைச் சூழ்ந்து வருகின்றன. எதிரி நாட்டுக் கடற்படை நமது கடற்கரையை அண்மித்து விட்டது. எமது நாட்டைக் காப்பாற்ற உங்கள் அறிவு உதவுமா?”
அந்த மனிதர் சொன்னார்.
“இதற்கு ஏன் கவலைப்படுகிறீர்கள் ? எதிரியின் கப்பலைத் தடுப்பது என்ன அந்தக் கப்பலை அழித்தே விடுவேன்..” அரசர் ஆச்சரியம் அடைந்தார். “இவர் அறிஞர் தானே. எப்போது போர்ப் பயிற்சி பெற்றார்?” தனது ஆச்சரிய நிலையில் இருந்து விடுபட்ட அரசர்.
“எப்படி.. நீங்கள் கப்பலை அழிப்பீர்கள் ?”
”பாருங்களேன் என்னிடம் எரியச் செய்யும் கண்ணா டிகள் இருக்கின்றன”
அரசருக்குச் சரியாகப் புரியவில்லை.
ஆயினும் அறிஞரின் திறமையில் நம்பிக்கை இருந்த படியால், தலையை ஆட்டி ஒப்புதல் தெரிவித்தார்.
இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள்.
“அதிகம் படித்துப் படித்து இந்த மனிதருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. அரசரும் இந்தப் பைத்தியம் சொல்வதை நம்பிக் கொண்டிருக்கிறார்” என்று பேசிக்கொண்டார்கள்.
பளபளப்பாக வளைந்த உலோகத் தகடுகளைக் கொண்டு பெரிய குழிவாடிகளை அமைத்தார் அந்த மனிதர்.
எதிரிக் கப்பல்கள் வந்து கொண்டிருக்கிறன.
குழிவாடியில் சமாந்தரமாய் வந்துபடும் ஒளிக்கதிர்கள் தெறித்துக் கப்பலில் குவியும்படி ஆடியைத் திருப்பினார் இவர்.
கப்பல்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.
சத்தமில்லாமல் கப்பல்கள் எரியத் தொடங்கின. பெரிய சக்கரங்களையும் கயிறுகளையும் கொண்ட கப்பீத் தொகுதிகளை அமைத்துப் பெரிய கப்பல்களைத் தூக்கிப்பந்தாடினார்.
விசித்திரமான இந்த மனிதர் யார் தெரியுமா?
அவர்தான் புகழ்பெற்ற கிரேக்க விஞ்ஞானி ஆக்கிமிடிஸ்.
– விஞ்ஞானக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 2000, கலை இலக்கியக் களம் தெல்லிப்பழை, ஸ்ரீலங்கா.