சப்பாத்தி… சப்பாத்தி!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 10,389 
 
 

அறிவழகனும் தமிழரசனும் அண்டைவீட்டுக்காரர்கள். ஒருநாள் இருவரும் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அறிவழகனின் மனைவி அவனுக்கு நான்கு சப்பாத்தி சுட்டுத் தந்தார். தமிழரசனின் மனைவி இரண்டு சப்பாத்தி சுட்டு கொடுத்தார். இருவரும் சிறிது தூரம் நடந்தனர். வழியில் மற்றொரு பயணியும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார். மூவரும் பேசிக் கொண்டே செல்லலாயினர்.

அப்போது அவர்கள் சிறிது ஓய்வு எடுக்க எண்ணினர். வழியில் ஒரு கிணறு இருந்தது. பசியும் தாகமும் எடுத்தது. சாப்பிட்டுவிட்டு செல்லலாமே என எண்ணியவர்கள் அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்தனர்.

அறிவழகனும் தமிழரசனும் தாங்கள் கொண்டு வந்த சப்பாத்திகளை எடுத்தனர். அறிவழகன் அனைத்து சப்பாத்திகளையும் பாதி பாதியாக ஆக்கிவைத்தான். மொத்தம் பன்னிரண்டு துண்டுகள். மூவரும் சப்பாத்தி துண்டுகளைச் சாப்பிட்டனர். தண்ணீர் அருந்தினர். இறைவனுக்கு நன்றி செலுத்தினர். மூன்றாமவன் பன்னிரண்டு ரூபாயை எடுத்து அறிவழகனிடம் கொடுத்துவிட்டு வேறுவழியில் சென்றுவிட்டான்.

இவர்கள் இருவரும் தமது வழியில் பயணத்தைத் தொடர்ந்தனர். வழியில் தமிழரசன் அறிவழகனிடம் “”அறிவு! பன்னிரண்டு ரூபாயில் எனக்கும் கொடு. என் சப்பாத்தி கூடதானே அதில் இருந்தது…” என்றான். இதைக் கேட்ட அறிவழகன் ஒரு ரூபாயை தமிழரசனுக்குக் கொடுத்தான்.

“ஓஹோ! எனக்கு ஒரே ரூபாய். உனக்கு மட்டும் அவ்வளவுமா? எனக்கு இன்னும் கொடு… ‘ அறிவழகன் தர மறுத்துவிட்டான்.

இருவரும் சண்டையிட்டவாறே ஒரு நகரில் நுழைந்தனர். அங்குதான் நம் அறிவாளி இளம் பெண் வசிக்கிறாள். அந்த நகரத்தின் நீதிபதியிடம் வழக்கு சென்றது. அந்த நேரத்தில் ஏதோ வேலையாக நீதிபதியும் அறிவாளி இளம் பெண்ணை அழைத்திருந்தார். அவள் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். வழக்கு ஆரம்பமானதும் நீதிபதி அறிவான இளம் பெண்ணிடம், “” மகளே! இந்த வழக்கை நீயே தீர்த்து வை..” என்றார்.

இதைக் கேட்ட இளம் பெண் இருவரின் வாதத்தையும் கேட்டறிந்தாள். பின் தமிழரசனிடம், “”நீ இந்த ஒரு ரூபாயை வைத்துக்கொண்டால் உனக்கு லாபம்தான். நியாயமாக, தீர்ப்பு சொல்லிவிட்டால் உனக்கு நஷ்டமாகிவிடும்…” என்றாள்.

தமிழரசன், “”நஷ்டம் எப்படி? 6 சப்பாத்தி 12 துண்டுகள். ஒவ்வொரு துண்டும் ஒருரூபாய். என் 2 ரொட்டிக்கு 4 துண்டுகள். அறிவு எட்டு ரூபாய் வைத்துக் கொண்டு 4 ரூபாய் எனக்குத் தரட்டும்..” என்று சொன்னான்.

அங்கு கூடியிருந்தவர்கள் “”ஆமாம்… தமிழரசன் சரியாதானே சொல்றான்…” என்றனர்.

“”உம்…” என்ற அறிவாளிப் பெண், “”நீங்கள் இருவரும் அந்தப் பணத்தை மேசை மீது வையுங்கள்…”

அறிவழகன் பதினோரு ரூபாயும் தமிழரசன் ஒரு ரூபாயும் வைத்தனர்.

இப்போது அறிவாளி இளம் பெண் தமிழரசனிடம் கூறினாள்:

“”12 சப்பாத்தி துண்டுகளை 3 பேர் சாப்பிட்டீங்க. ஆளுக்கு 4 துண்டுகள். அதாவது 4 துண்டுகளை நீயும் சாப்பிட்டாய். இதனுடைய அர்த்தம், நீ உன்னுடைய 2 ரொட்டியைத்தான் சாப்பிட்டே…. அதாவது அந்த மூன்றாம் நபர் அறிவழகனோட சப்பாத்தியைத்தான் சாப்பிட்டிருக்கார். உன் சப்பாத்தியிலிருந்து அவர் எதுவுமே சாப்பிடலை. அதனால உனக்கு ஒரு ரூபாயும் இல்லை…” எனக் கூறியதுடன், 12 ரூபாயையும் எடுத்து அறிவழகனுக்குக் கொடுத்துவிட்டாள்.

வழக்கு முடிந்தது. தமிழரசன் முகத்தைத் தொங்கவிட்டவனாய் வருத்தத்துடன் சென்றான். அங்கு கூடியிருந்தவர்கள் கூறினர்.

“சரியான தீர்ப்பு!’ எங்களுக்கு இது தோணலையே!’

– உம்மு மைமூனா (டிசம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *