கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 12,825 
 

பசுமை நிறைந்த நிலங்களையும் ,கிராமங்களையும் சந்தோஷமாய் பார்த்தபடி அவைகளை பற்றி கேட்டு தெரிந்து கொண்டு ,டைரியில் நோட் செய்தபடி டாட்டா சுமோவில் பொள்ளாச்சி அருகில் உள்ள தாத்தா பாட்டியின் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தாள் மீடியா ஸ்டடீசில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மாணவி சுமன் .

கார் வேகமாய் சென்றுக்கொண்டிருந்தது.சாலைக்கு இருபக்கமும் பச்சை பட்டு கம்பளி விரித்து வரவேற்று கொண்டிருந்தாள் இயற்க்கை அன்னை .”’டிரைவர் .!கொஞ்சம் வண்டியை நிறுத்துங்களேன்.”என்றாள்”சுமன் .எதுக்கும்மா..?ஸ்பீடை குறைத்தபடி கேட்டார் வயதான டிரைவர் ரங்கண்ணா.”அங்கே பாருங்க ,”புரட்சி விடியல்”’ன்னு ஏதோ ஒரு போர்ட் தெரியுது .அது கிராமத்து பேரா அல்லது ஏதாவது சரித்திர முக்கயத்துவம் வாய்ந்த ஊரா ..?புரட்சி கண்ட ஊரா ?என்று ஆவலுடன் துலாவினாள் சுமன் .”’விடுங்க ,நேரமாச்சு ,வீட்டுக்கு போனும் ,தாத்தா பாட்டி காத்து கொண்டிருப்பாங்க ..என்று சொல்லிக்கொண்டே காரை வேகமாய் ஓட்ட துவங்கினார் ரங்கண்ணா .”அதெல்லாம் முடியாது ,நீங்கள் என்னை அந்த கிராமத்துக்கு கூட்டிக்கொண்டு போங்கள்,ப்ளீஸ் என்று சற்று பிடிவாத்துடன் கெஞ்சினாள் சுமன் .’’சரி ,உங்கள் இஷ்டம் என்று விருப்பமில்லாமல் வண்டியை திருப்பி கிராமத்திற்குள் புகுந்தார் டிரைவர் .

கிராமத்தில் காரை விட்டு இறங்கியவுடன் தன் டிரைவர்க்கு கிடைத்த ராஜ மரியாதையைக்கண்டு வியந்து போனாள் சுமன் .””வாங்கம்மா …! என்ன வேணும் சாப்பிட ? இளநீர் வெட்டி தரட்டுமா ? காபி குடிக்கிறீங்களா?என்று அன்பும் ,பாசமும் நிறைந்த கிராமத்து மக்களை பார்த்து மகிழ்ந்து போனாள் சுமன்.”’இந்த நெஞ்சங்களில் உள்ள நேர்மையான ,உண்மையான அன்பு எவ்வளவு காசு குடுத்தாலும் சிட்டிகளில் கிடைப்பதில்லையே “’ என எண்ணினாள்.

“”டிபன் சாப்பிட்டு தான் வந்தேன் ,எவ்வளவு பசுமையான ,சுத்தமான கிராமம் ஆனால் உங்க ஊர் பேர் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்குதே.?புரட்சி விடியல்…ன்னு …எனக்கு அதை பற்றி தெரிந்துக்கனும்,என்று ஆவலுடன் கேட்டாள் சுமன் அங்குள்ள மக்களை பார்த்து .

“”அதெல்லாம் எங்களை வாழவைத்த இந்த தைவத்தை தான் கேட்கணும் என்று சொன்னார்கள் ரங்கண்ணாவை காட்டியபடி..

‘’அதெல்லாம் இப்ப எதுக்கும்மா …?நாப்பது வருஷத்து முன்னால கதை ….என்றார் டிரைவர் . “அதெல்லாம் முடியாது ,நீங்க சொல்லணும் ,நான் கேட்கணும் …”என்று சொல்லிக்கொண்டே அருகில் இருந்த கயிறு கட்டிலில் அமர்ந்தாள் சுமன் .

டிரைவர் ரங்கண்ணா வாயிலிருந்து பழைய நினைவுகள் வெள்ளமாய் பாய ஆரம்பித்தன .

“இவ்வளவு காலேல மூனு மாச புள்ளைய தூக்கிண்டு எங்கே ஓடறே….?கேட்டான் குப்பன் மூக்காயியை பார்த்து .”’ஆமாம் ,மச்சான் ..!இவ இங்கே இருக்க கூடாது ..இங்கே இருந்தா அந்த பாவி இத வாழ விடமாட்டான் .யாருக்கும் தெரியாம மெட்ராசுல இருக்கிற என் தம்பி வூட்டுல வுட்டுட்டு வந்தூடறேன் .டவுன்ல அது வளர்ந்து நல்லா நாலு எழுத்து கத்துக்கட்டும் . எத்தன பொண்ணுகளை கெடுத்து கொன்னிருப்பான் ..இந்த ஊர் சனியன் ….என்று சொல்லிக்கொண்டே கண்ணீருடன் தன் பச்ச குழந்தையை முத்தமிட்டபடி பஸ் ஸ்டாப்பிற்கு ஓடினாள் மூக்காயி .பதில் எதுவும் கூறாமல் அவளை வருத்தத்துடன் பார்த்தான் குப்பன் .

“யாரோ நம்ப வூருக்கு வாத்தியாராம் காலேல வந்து இறங்கிருக்காராம் .சின்ன பையனாம் ..ரொம்ப நல்லவராம் ……ஓடி வந்துசொன்னான் தச்சன் முருகன் ,ஆடு மேய்த்து கொண்டிருக்கும் கருப்பனிடம் .

“”சரிதான் ,போடா…!படிப்பா…? நம்ப வூர்லியா …?வாத்தியார் வந்தால் போதுமா…?மூடின இஸ்கூல் மூடியே இருக்கு ….,நம்பளை ரெண்டெழுத்து கத்துக்க விடுவாங்களா ….இந்த பெரிய மனுசங்க ……?நம்ப படிச்சா, ,நம்ப புள்ளங்க படிச்சா அவங்கள மாதிரி ஆயிடுவம் இல்லே …விடுடா …..நம்ப கிராமத்துக்கு படிப்பு ஒத்து வராது …கவலையுடன் சொன்னான் கருப்பன் .

“ நான் இங்கு வந்ததே, உங்க பசங்களுக்கும் ,உங்களுக்கும் படிப்பு சொல்லி குடுக்கத்தான்.அதுக்குதான் பார்த்து உங்க ஊரை தேர்ந்தெடுத்தேன் ,,,,என்று சிரித்த முகத்துடன் ,சிவப்பா ,நல்லா உயரத்துடன் தம்முன் நிற்க்கும் இளைஞனை தலை தூக்கி பார்த்தார்கள் இருவரும் .

“’என் பெயர் ரங்கேஷ்.உங்கள் ஊரில் மூட பட்ட அரசு பள்ளிக்கு வேலைக்கு வந்த புது வாத்தியார் என கூறி வணக்கத்துடன் தன்னை அறிமுக படுத்தி கொண்டான் அந்த இளைஞன் .அன்று முழுவதும் அந்த ஊர் மக்களுடன் நேரத்தை கழித்தான் ரங்கேஷ் .விவசாயிகளின் தலைவர்அழகு, கிராமத்தின் கோவிலை பெருக்கி சுத்தம் செய்யும் மூக்காயி ,வயலில் வேலை செய்யும் ராக்காயி ,கருத்தம்மா ,குப்பன்,நல்லன் ,பால்க்காரன் முருகன் ..இப்படி எல்லா தொழிலாளிகளுடன் சேர்ந்து அவர்களின் குடிசைகளுக்கு சென்று அன்பாக நலம் விசாரித்து தன்னை அறிமுகம் செய்துக்கொண்டான் ரங்கேஷ் .

வாத்தியார் ஊருக்கு வந்த விஷயம் அந்த கிராமத்தின் நாட்டாமை ராமசாமி கௌண்டருக்கு தெரிந்து விட்டது .உடனே தன் தோழர்களான மாய தேவர் ,வணிகர் லக்ஷ்மண செட்டியார் , ஊர் பூசாரி ராமானுஜாச்சாரி எல்லோரையும் உடனே அழைத்தார் .இந்த நாலு பெரும் புள்ளிகள் என்றால் மக்களுக்கு அளவிலாத ,பயம் .கிராம தலைவரின் அக்ரமங்களுக்கு தலை ஆட்டி தூபம் போடும் இந்த மூன்று பேரும் நடத்தும் அநியாயங்களை அங்கு தட்டி கேட்க ஆள் கிடையாது .இவர்களின் அராஜகத்தை ஒழிக்கணும் என நினைத்தான் ரங்கேஷ் .செல்வாக்கு ,பண பலம் ,ஆட்களின் பலம் கொண்ட இந்த பாவிகளை அவ்வளவு எளிதில் தண்டிக்க முடியாது என்றும் ரங்கேஷ்க்கு தெரியும் .மூடி இருந்த பள்ளியை பல இன்னல்களுக்கு இடையே திறக்க செய்தான் .அதற்க்காக அவர்களிடம் ஓரிருமுறை உதையும் வாங்கி கொண்டான் ரங்கேஷ் .அவர்கள் ரங்கேஷிடம் பல முறை “இத பாரு வாத்தீ ! உன்னை எம் .ஜி .ஆர்ன்னு நினைச்சு கிட்டு கிராமத்து பசங்களுக்கு நாலெழுத்து சொல்லி தந்து அவங்களை ,கலெக்டரோ ,டாக்டரோ ஆக்கானும் என்றெல்லாம் பகல் கனவு காணாதே ..!இந்த வேலையை விட்டுட்டு போயிட்டா உனக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது ..”என்று மிரட்டவும் செய்தார்கள் .

இவை எல்லாத்தையும் கண்டுக்காமல் அந்த கிராமத்தின் குழைந்தைகளுக்கு படிப்பு சொல்லி குடுப்பது தான் தன் ஒரே குறிகொளாக எண்ணி நாட்டமையின் கையாட்களின் குழைந்தைகளுக்கும் சேர்த்து அன்போடு படிப்பை சொல்லி தந்தான் ரங்கேஷ்.கூலிக்காக மாரடிக்கும் அவர்கள் என்றால் ரங்கேஷுக்கு அதிக இரக்கம்.பகல் நேரம் பள்ளியில் படிப்போடு ,சுத்தம் ,சுகாதாரம் ,பசுமை ,செழுமையுடன் கூடிய காடுகளின் மகத்துவத்தை உணர்த்தி கிராமத்தின் எல்லா குழந்தைகளின் பெயரில் எல்லா பகுதிகளிலும் பல செடிகளை நட்டு ,அங்குள்ள மரங்களை பராமரிக்கவும் செய்தான் .அந்த கிராமத்தின் செழுமை நிறைந்த சுகாதார மையமாக மாற்றினான் ரங்கேஷ். இரவு நேரங்களில் முதியோர் கல்வி மையத்தை பல இடையூருகளுக்கு நடுவே அரசின் உதவியுடன் திறந்து ,எல்லா மக்களுக்கும் தன் பெயர் கையெழுத்து போட ,சின்ன சின்ன வரிகள் எழுதும் அளவிற்க்கு அறிவை கற்பித்தான் ரங்கேஷ் வாத்தியாரின் நல்ல செயல்களும் ,குணமும் கிராமம் முழுக்க பரவியது .

ஆனால் வருஷங்கள் செல்ல செல்ல நாட்டாமையின் தீய செயல்கள் எல்லை மீறி கொண்டிருந்தன. வறுமையில் வாடும் பல குடுமபங்களின் வயிற்றை அடிக்கின்றான் ,கடன் வசூல் என்கிற பெயரிலோ ,அல்லது தாத்தா,பாட்டனாரின் பேரில் இருக்கும் கடன் என்று பல பொய் பத்திரங்களை காட்டியும் அடகு வைத்த நிலங்களை எடுத்துகொண்டு விட்டான் .அழகான ஏழை பெண்களை கண்டால் தூக்கி சென்று விடுவான் “எப்ப கிராமத்தலைவர் யாரை கூப்பிடுவாரோ ? என்ன செய்யபோறாரோ…?எந்த பெண்ணை ,பையனை கொன்று விடுவாரோ .?எந்த கல்யாணத்தை நிறுத்தி பிரச்சினை பண்ணுவாரோ …உள்ளுக்குள் ஓர் இனம் புரியாத அச்சம் மக்களுக்குள் நிலவிக்கொண்டிருந்தது .வயிறார சாப்பிட்டு நிம்மதியாய் தூங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது அந்த கிராமம் .பல முறை ரங்கேஷிடம் கிராம மக்கள் “”வாத்தியாரே ..!என்னோட நூறு ஏக்கர் நிலத்தை பாவி மிரட்டி எழுதி வாங்கிகிட்டான் …..என் பெண்ணை மணமேடையில் இருந்து தூக்கிட்டு போயிட்டான் என்று அழுததுண்டு . ஒரு நாள் பொறுக்க முடியாமல் ரங்கேஷ் நாட்டமை வீட்டுக்கு சென்று “’ பாவம் பண்ணாதே …!கடவுள் உங்களை சும்மா விட மாட்டான்,தக்க தண்டனை குடுப்பான் என்று சொன்னான் கோபத்துடன் .”போதும்,வாத்தி…! நிறுத்து உன் பாடங்களை ……!நம்ப ஊரு நரசிம்மர் கோவிலின் பூசாரியை பாரு ,என்கிட்டே தான் காசு பொறுக்கிக்கொண்டு இருக்கான் .அதனால் என்னை சாமி ஒன்னும் செய்யாது…என்றான் கேலி சிரிப்புடன் .

நாட்கள் மெல்ல நகர தொடங்கின .ஓர் இரவில் ரங்கேஷ் முதியோர் கல்வி மையத்திலிருந்து நாட்டாமை வீட்டின் வழியாக சென்றுக்கொண்டிருந்தான் .அங்கிருந்து ஒரே கூச்சல் .ஒரு பெண் அலறி கொண்டு அழும் சத்தம் கேட்டது .

“”ஏன்டா …? இந்த கிழட்டு மூஞ்சிக்கு என் தங்க கிளி வேணுமா ?அவளை உனக்கு எறை ஆக்க ஒருநாளும் நான் ஒத்துக்கமாட்டேன்.உன்னை கொன்னுப்புடுவன் ….அழுதுக்கொண்டே ஒரு பெண் குரல் .அது மூக்காயியின் குரல் என்று உறுதி செய்து கொண்டான் ரங்கேஷ் .நாட்டாமை வீட்டிற்குள் நடந்தான்“’அதென்னடீ….!பெரிய உத்தமி போல் பேசறே…..!என்னவோ பட்டணத்துக்கு பொண்ண அனுப்பி படிக்க வெக்கெரியாமே ..இந்த கிராமத்தல எதா இருந்தாலும் எனக்கு தான் முதல் உரிமை மண்ணானாலும் சரி பெண்ணானாலும் சரி ……நாட்டாமை குரல்..ரன்கேஷை பார்த்ததும் நாட்டாமை “என்ன வாத்தீ …இதெல்லாம் உன் வேலைதானா …நாலெழுத்து சொல்லித்தந்து இவங்களை பெரிய மனுசங்களா ஆக்கிடுவியா ?……என்று சொல்லிக்கொண்டே ராக்க்கயியை முடியை பிடித்து இழுத்து அடித்தான் . அவனை சுற்றி நான்கு அட்யாட்கள் . .”’என்ன இது ..! என்று கேட்டபடி நாட்டமை கன்னத்தில் பலமாய் ஓர் அரை விட்டான் ரங்கேஷ் .””என்னை காப்பாத்துங்கோ வாத்தியாரே ….என்று அலறிக்கொண்டே அழுதபடி காலில் விழுந்தாள் ராக்காயி .நாட்டமை கையில் இருந்த கட்டையை பிடுங்கி அவனை பலமாக கட்டையால் ஓர் அடி அடித்தான் ரங்கேஷ் . இதை பார்த்து திகைத்து போன நாட்டாமை “என்னடா …! அப்படி முழிக்கிறீங்க ..இவனை அடித்து தள்ளி இழுத்துட்டு போங்கடா ….என்றான் …தன் அடியாட்களிடம் .”’மன்னிக்கணும் எஜமான் ,இவர் எங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தரும் தெய்வம் …என்று சொல்லிய படி வெளியே ஓடினார்கள் அவர்கள் .

“”ராக்காயி !எழுந்திரு.! வா ,நல்லா இந்த மிருகத்தை இஷ்டம்போல் அடி என்று அங்கிருந்த உருட்டு கட்டையை எடுத்து குடுத்தான் ரங்கேஷ் .அதை சந்தோஷமாய் வாங்கிக்கொண்டு ராக்காயி “ஏன்டா என் படிச்ச பொண்ணு உனக்கு படுக்கைக்கு வேணுமா என்றபடி வெறியாக அடித்து தீர்த்தாள். விஷயம் தெரிந்து அந்த கிராம மக்கள் முருகன்,ராக்காயி ,கருப்பன் ,கந்தன் ,நல்லன் ,கண்ணன் வீராசாமி எல்லோரும் ஓடி வந்தார்கள் .”’வாத்தியாரே !இவனை கொன்று விடலாம் ..என்று சொல்லிக்கொண்டே தம பங்கிற்க்கு இஷ்டம் போல் அடித்தார்கள் ,உதைத்தார்கள் .மூக்காயி அவனை மகிழ்ச்சியுடன் மக்களின் அனுமதியோடு அந்த கிராமத்தில் நாட்டமை உட்காரும் மரத்தடியில் இழுத்துகொண்டு சென்றாள்.நாட்டமை கடைசி மூச்சுடன் திணறி கொண்டு இருந்தான் .”மூக்காயி …அவனை பார்த்து “”இங்கு உக்காந்து எத்தன பேருக்கு பொய் தீர்ப்பை சொல்லி இருப்பே ,எத்தனை பேரின் வெயத்தெரிசெலை கொட்டி கொண்டிருக்கே …?எத்தன நிலத்த திருடிரிப்பே ..எத்தனை பொண்ணுகளை கொண்டுவர சொல்லிருப்பே …..?ஒன்ன கொல்லாம விட மாட்டேண்டா ..கடைசியாய் எல்லா பாவத்துற்க்கும் இங்கே ஆண்டவனிடம் மன்னிப்பு கேள் …என்று சொல்லிக்கொண்டே வீச்சருவாள் எடுத்து பத்ர காளியை போல் முன் வந்தாள்.ரங்கேஷ் அவன் காதில் விழும்படியாக “’நாட்டாமே …!நரசிம்மர் பொம்பள வடிவத்துல வந்திருக்கார் பார் …..என்றான் .எல்லோர் முன்னாலும் ராக்காயி கருக்கரிவாளால் அவன் கழுத்தைவெட்ட போனாள் உடனே .ரன்கேஷ்,அவனை கொன்று நீ பாவி ஆகிவிடாதே என்று சொல்லியபடி “’புரட்சி வெல்க “என கத்தினான் சந்தோஷமாக .. மக்களும் ஆனந்தமாய் புரட்சி வெல்க என கோஷமிட்டனர் .மீதி மூன்று பேரையும் மக்கள் இழுத்து வந்தார்கள் .எல்லா கிராம மக்களையும் ஒன்றாக திரட்டி அவர்களின் மேல கேசை போட்டு பொலிசிற்க்கு ஒப்படைத்தான் ரங்கேஷ் .அன்றிலிருந்து இந்த ஊர் பேர் புரட்சி விடியலாகி விட்டது …….கிட்டதட்ட நாப்பது வருஷத்து முன்னால நடந்த கதை இது …என்று சொல்லிகொண்டே துண்டால் கண்ணை துடைத்துக்கொண்டார் டிரைவர் ரங்கண்ணா , அன்றைய ரங்கேஷ் .

“’அதென்ன போலிஸ் கேஸ் மூக்காயி மேல் பதிவு செய்ய வில்லையா …?ஆவலுடன் கேட்டாள் சுமன் .”’அதா….! கிராமத்து மக்கள் எல்லோரும் சேர்ந்து கேஸை அந்த மூன்று நாட்டமை தோழர்களின் மேலே வேற விதமாக பதிவு செய்து சிறையில் அடைக்க செய்தார்கள் .”அப்படீன்னா இரத்தத்திற்கு இரத்தம் தான் பதிலா…..?என கேட்டாள் சுமன் .””ஆம் …எங்க மொழியில் இரத்ததிற்க்கு இரத்தம் தான் பதில் …”என்று சொல்லிக்கொண்டு,சிரித்தபடி வந்தாள்அந்த ஊர் இன்றைய பஞ்சாயத் தலைவி கமலா , அன்றைய மூக்காயியின் படித்த மகள்.

“இன்று எங்க கிராமத்தில் எல்லா வசதிகளும் இருக்கு இன்டர்நெட்டுடன்சேர்த்து .கல்வி நிலையங்கள் ,பணம் பிடுங்காத ,மனித நேயம் உள்ள மருத்துவர்கள் ,நல்ல பண்புள்ள மக்கள் ..”என்றாள் கமலா .’’அதெப்படி கேட்டாள் சுமன் அதற்க்கு கமலா “முதல்ல எங்க கிராமத்தை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் .இங்கு மதுபான கடைகள் ,பீடி,சிகரட், பான்,ஜர்தா விற்க்கும் கிடைகள் கிடையாது .கெட்ட பழக்கம் உள்ள மக்களும் இல்லை . .அந்த நாட்டமையின் சொத்தையெல்லாம் கிராமத்தின் முன்னேற்றத்துக்கு செலவழித்துக்கொண்டு ,கல்யாணம் கூட செஞ்சுக்காம இன்று வரை உடலை வருத்திக்கொண்டு சம்பாதிக்கும் எங்கள் வாத்தியார் ஓர் காந்தி மகானை போல் தான் . காந்தி அடிகளை ஒருத்தன் கேட்டானாம் “’பாபூ உங்களுக்கென்று பணம் ஏதும் இல்லையா என்று ? அதற்க்கு அவர் “இல்லை ,எனக்கு தேவையான பணம் உன் சட்டையில் இருக்கு.ஏனெறால் பணம் என்பது எல்லோருக்கும் பொதுவான சமுதாயத்துடையது என்றாராம் சிரித்தபடி.. எங்களை பொறுத்தவரை எங்கள் கிராமம் ஒரே குடும்பம் மாதிரி. எல்லா கிராமத்து உழைப்பாளிகள் .ஒரு சமயம் ஒன்று சேர்ந்து மொத்த கிராமம் ஒட்டு போடாமல் இருக்கலாம் என எண்ணினார்கள் .அதை கேள்விபட்டு எல்லா கட்சி தலைவர்களும் எங்களை தேடி ஓடி வந்தாங்க அப்ப எங்க வாத்தியார்தான் மக்களுக்கு ஜன நாயக நாட்டில் வாக்கின் மகிமையை எடுத்து கூறி வாக்களிக்க சொல்லி குடுத்தார் .எங்க கிராமத்தை பொறுத்தவரை மக்கள் தலைவர் எங்கள் வாத்தியார் தான் ..எங்க கிராமத்தின் முன்னேற்றத்துக்கு தேவையான திட்டங்களை நாங்களே பட்டியல் போட்டு கொடுத்தோம் .எந்த கட்சி எங்கள் கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பாடு படுகிறதோ அதற்க்கு தான் ஒட்டு மொத்த ஓட்டுகள் என்று முடிவு செய்தோம் .அதனால் எல்லா கட்சிகளும் சுறு சுறுப்புடன் எல்லா வேலைகளையும் செய்து விடும் .எந்த கட்சிக்கு வோட்டு போடுவோம் என்று எல்லோரும் ஒற்றுமையாய் சேர்ந்து உட்கார்ந்து ,கலந்து பேசி முடிவெடுப்போம் . இங்கிருக்கும் பசுமை புரட்சிக்கு பிள்ளையார் சுழி போட்டவரே இந்த ரங்கேஷ் மாஸ்டர் தான் .கிராமத்தில் இருக்கிற எல்லா இடத்திலும் வேலை பார்க்கும் இளைய தலைமுறை எல்லாம் ஒருகாலத்தில் இவரின் மாணவர்கள் தான். திருமணம் கூட செஞ்சுக்காத ,இந்த கிராமத்திற்காக பாடுபட்ட மகான் இவர் .. என்று பணிவுடன் ரங்கண்ணாவை பார்த்து கை கூப்பினாள் கமலா.

“”தனி மனிதனால் கூட இவ்வளவு சாதிக்க முடியுமா ?என்ற கேள்விக்கு விடையாக இருக்கும் புரட்சி விடியல் கிராமத்தை பார்த்து அது உருவான கதையை கேட்ட திருப்தியுடன் தன் வயதான டிரைவர் ஐ கை கூப்பி வணங்கி சந்தோஷமாய் வண்டியில் ஏறிஅமர்ந்தாள்சுமன்.

– தெலுங்கில் முனைவர் அம்பேத்கர்,முனைவர் லக்ஷ்மி அய்யர்,என் ராஜஸ்தான் மத்திய பல்கலை கழகம்

Print Friendly, PDF & Email

2 thoughts on “புரட்சி விடியல்

  1. வெரி குட் story.congradulations. இந்த மாதிரி கதைகள் அடிக்கடி வர vaazhthukkal.rakayee மூக்காய் kuzhappam?ஏன்? Uma

    1. எல்லாரும் ரங்கண்ணாவை போல் இருந்தா நாடே புரச்சி விடியலாக மாறும்.

      சிறந்த ஆசிரியருக்கு என் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *