ஒப்புரவு அறிதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,412 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

உலக நடையை அறிந்து உதவி செய்தல்

திங்களூரில் வாழ்ந்தவர் அப்பூதி அடிகள். இவர் திருநாவுக்கரசர் சமண மதத்திலிருந்து சைவ மதத் திற்கு வந்ததையும் சமணர்கள் செய்த கொடிய துன்பத்திலிருந்து தப்பிப்பிழைத்து, சமண அரச னையும் சைவனாக்கிய திறமையும் கேட்டார். கேட்ட வர் தாம் முயற்சி செய்து தேடிய செல்வம் யாவும் அப்பெரியார்க்கே உரியதாகும் என்று எல்லாப் பொருள்களுக்கும் அவர் பெயரையே வைத்தார். அப்பெயரால் அழைத்தும் வந்தார். சிவனடியார்களுக்கு உணவும், நீரும் கொடுத்து தவினார். அப் பெரியாரையே நேரில் கண்டு அவர்க்கு உண வளித்து அவரால், இறந்த பிள்ளையும் எழப்பெற்று முடிவில் தாமும் இடைவிடாமல் இன்பம் தரும் அம்பலவன் அருளை அடைந்தார்.

இவ்விதம் ஒருவர் முயற்சியுடன் நல் வழியில் தேடிய செல்வம் பெரியோர்களுக்கு உதவி செய்வ தற்கே பயன் படும் என்று திருவள்ளுவரும் திருத்த மாகச் சொல்லியுள்ளார்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம்; தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

தாள் ஆற்றி = முயற்சி செய்து
தந்த = சம்பாதித்த
பொருள் எல்லாம் = செல்வம் யாவும்
தக்கார்க்கு = பெரியோர்களுக்கு
வேளாண்மை = உபகாரம்
செய்தற் பொருட்டு = செய்தற்காகவே (அது) பயன்படும்.

கருத்து: நல் வழியில் தேடிய செல்வம் யாவும் பெரி யோர்க்கு அளித்தலுக்கே ஆகும்.

கேள்வி: முயற்சியால் தேடிய செல்வம் எவர்க்கு உபகாரம் செய்தற்கு ஆகும்?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *