இளமைப் பழம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,738 
 

குஞ்சுலபாதம் என்ற நாட்டை வசீகரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவர்களுக்கு குழந்தை கிடையாது. அதனால் அவர்கள் ஒரு பச்சைக்கிளியை வளர்த்து வந்தனர். அக்கிளி மிகவும் அழகானது. ஒரு நாள் ஒரு முனி தவம் செய்யும் போது அவர் அருகில் வந்து உட்கார்ந்திருந்தது. “”ஏய் கிளியே… நீ மிகவும் அழகாய் இருக்கிறாய், உனக்கு நான் ஒரு பழம் தருகிறேன். அதை சாப்பிட்டால் என்றும் இளமையுடன் இருப்பாய்,” என்று கூறி பழத்தை கொடுத்தார்.

http://www.dinamalar.com/siruvarmala…ges/Smr-10.jpg
கிளி அப்பழத்தை வாங்கி வந்து தான் சாப்பிடாமல் அரசனிடம் கொடுத்தது. அரசன் அப்பழத்தை சாப்பிடாமல் தன் தோட்டத்தில் நட்டு வைத்தால் அம்மரம் பெரிதானவுடன் அதில் வரும் பழத்தை நம் மக்கள் சாப்பிடலாம் என்றெண்ணி அப்பழத்தை நட்டு வைத்தான் அரசன். அம்மரத்திற்கு காவலாளி ஒருவன் இருந்தான். ஒரு நாள் அம்மரம் பெரிதாகி பழம் பழுத்தது. “”ஒரு நாள் இந்த பழத்தை பறித்து தன் அரசனுக்கு மறுநாள் கொடுக்கலாம்,” என்று நினைத்தான்.

அன்று மாலை ஒரு நல்ல பாம்பு அம்மரத்தில் ஏறி ஒரு பழத்தில் தன் விஷத்தை கக்கியது. அது காவலாளிக்கு தெரியாது. மறுநாள் அந்த காவலன் தன் அரசனுக்கு பழத்தை பறித்துக் கொடுத்தான். அப்பழம் பாம்பு விஷத்தை கக்கிய பழம் என்று தெரியாமல் கொடுத்தான். அரசன் அப்பழத்தை வாங்கி கொண்டு, “”நீ ஒரு வருடமாக கஷ்டப்பட்டு வளர்த்தவன். அதனால் இந்தப் பழத்தை நீ சாப்பிடு!” என்று கூறினான். காவலன் பழத்தைச் சாப்பிட்ட உடனே இறந்துவிட்டான். அதை கண்ட அரசன் அதிர்ச்சியடைந்தான். இதற்கு காரணமான கிளியை அடித்துக் கொன்றான். அந்த மரத்தின் பழத்தை யாரும் சாப்பிடக் கூடாது என கட்டளையிட்டான்.

ஒரு நாள்—
வயதான நோயினால் தள்ளாடிய கிழவன் ஒருவன், தன் பிள்ளைகள் தன்னை பார்க்கவில்லையே என்ற வேதனையில் நாம் இருந்து என்ன பயன் என்று நினைத்தான். எனவே, இந்த விஷப் பழத்தை சாப்பிட்டு செத்துடலாம் என நினைத்து அந்த மரத்தில் ஏறி அங்கிருந்த பழத்தை பறித்து சாப்பிட்டான். அவ்ளோதான் அவனது வயோதிகத் தோற்றம் மாறி அழகிய இளைஞனானான். இந்தச் செய்தி அரசனின் காதுக்குச் சென்றது. ஆச்சர்யமடைந்த அரசன் அப்பழத்தை தின்றான். அவனும் நோய் நீங்கி இளைஞனானான். அவசரப்பட்டு கிளியை கொன்றதை எண்ணி வருந்தினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *