கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,111 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

வெல்வதற்கு ஏற்ற இடத்தை அறிதல்

நரசிம்மவர்மன் படைத்தலைவர் பரஞ்சோதி யார் என்ற பட்டம்பெற்ற சிறுத்தொண்டர் ஆவார். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். தந்திரத்தில் சிறந்த அறிவு பெற்றவர்; புலிகேசி ஹர்ஷரைத் தோற்கடித்தவன்; இவன் பல்லவ நாட்டின் மீது படை எடுத்து வத்தான். வந்தவனைத் தென்கரையில் உள்ள காவிரி வரை போகும்படி செல்லவிட்டுப் பின் திரும்பித் தலைநகராகிய காஞ்சி வந்தபொழுது திடீர் என்று பெரும்படை யுடன் தாக்கினர். அச்சமயம் மணிமங்கலம், சூரமாரம் என்ற இடத்திலும் தாக்க ஆரம்பித்தனர்.

இவற்றால் பெரும்படைகள் சிதறி அங்கும் இங்கும் ஓடலாயின. இவ்விதம் பெரும்படைகள் சிதறுண்ட தால் புலிகேசி தன் வலிமை குன்றி ஓடலானான். அவன் பின்னே சிறுத்தொண்டர் ஓடி அவன் நகரான வாதாபியைக் கைக்கொண்டு அங்குள்ள செல்வம் யாவற்றையும் கவர்ந்து வந்தார். இவ்விதம் பெரும் படையையும் மிக்க பலமுமுடைய அரசராயி னும் அவரை வெல்வதற்கு உபாயமான இடத்தை அறிந்து போர் செய்ததால் வலிமை குறைந்த பல்லவன் வலிமை யுடையவனாய்ப் புலிகேசியை வென்றான்.

ஆற்றாரும் ஆற்றி அடுப; இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்

இடன் அறிந்து = (வெல்வதற்கு ஏற்ற) இடத்தினை அறிந்து
போற்றி = தம்மைக் காத்து
போற்றார் கண் = பகைவரிடத்து
செயின் = தொழிலைச் செய்தால்
ஆற்றாரும் = வலிமையில்லாதவரும்
ஆற்றி = வலிமையுடையவராய்
அடுப் = (பகைவரை) வெல்வார்.

கருத்து: வலிமையில்லாத அரசரும் இடமறிந்து போர் செய்வாராகில் வெல்லுவார்.

கேள்வி: வல்லமை யுள்ள வரை வெல்லக் கருதும் வலிமை இல்லாதவர் எனத ஆராய்தல் வேண்டும்?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *