(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
தமிழ்நாட்டு வேந்தர் மூவர். அவர்களில் சேர் வேந்தர்மட்டும் இன்று அரசுசெய்கிறார். இவர்கள் வேறு அர்சனிடம் தம் உள்ளத்தில் மாறுபாடு தோன்றியபொழுது அவனை எதிர்க்காது விலகிச் செல்லும் குணம் உள்ளவர்கள். இத்தகைய மேன் மைக்குணம் அமைந்த பெரியோர்கள் இருந்ததால் இன்று அரசோடு செல்வ வளர்ச்சியும் பெற்றுச் சேரர்குலம் விளங்குகிறது. சோழரும் பாண்டியரும் மாறுபாடு உண்டானதும் மேலும் மேலும் வளர்த் துக் கொண்டே சென்றார்கள். மிகுதியான மாறு பாட்டைக் கொண்டதால் அம்மாறுபாடே செல்வ அழிவை மிகுதியாக உண்டாக்கியது. இதனால் சோழ பாண்டியரைக் காணாது வருந்துகிறோம்: வள்ளுவரும், “மாறுபாட்டைக் கொள்ளாது விலகி நடத்தல் ஒருவன் செல்வவளர்ச்சிக்கு ஏதுவாகும்” என்று கூறியுள்ளார்.
இகலிற் கெதிர் சாய்தல் ஆக்கம்; அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடு. (65)
இகலிற்கு = (தன்னுள்ளத்து மாறுபாடு தோன்றிய இடத்து) அம்மாறுபாட்டிற்கு
எதிர்சாய்தல் = எதிர்செல்லு தலை நீக்கி விலகிப்போதல்
ஆக்கம் ஆம் = ஒருவனுக்குச் செல்வமாகும்
அதனை = அம்மாறுபாட்டில்
மிகல் = அதிகமாக
ஊக்கின் = மேற்செல்வானாயின்
கேடு = செல்வ அழிவை
ஊக்கும் ஆம் = மிகுதியாக உண்டாக்கும்.
கருத்து: மாறுபாட்டை எதிர்க்காது விலகல் செல் வம் தரும். இதனை மேற்கொள்ளுதல் அழிவைத் தரும்.
கேள்வி : செல்வத்தை விரும்புபவன் இகலிற்கு யாது செய்தல் வேண்டும் ?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.