அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும்

0
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 15,602 
 

ஒரு காட்டில் உடல் கொழுத்து பலம் மிகுந்த சிங்கம் ஒன்று வசித்த வந்தது.

அந்தச் சிங்கம் ஒரு வரைமுறையின்றி நாள்தோறும் கண்முன் தென்படும் விலங்குகளையெல்லாம் அடித்துக் கொன்ற தின்று வந்தது.

பசியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கண்முன் தென்படும் விலங்குகளைக் கொன்று அழிப்பது அதன் பொழுது போக்காக இருந்தது.

சிங்கத்தின் அந்த அக்கிரமச் செயலால் பீதியும், கவலையும் அடைந்த வனவிலங்குகள் ஒருநாள் ஒன்று திரண்டு சிங்கத்திடம் சென்றன.

அனைத்து விலங்குகளும் சிங்கத்திடம் மண்டியிட்டு வணங்கி அரசப் பெருமானே. தங்கள் குடிமக்களாகிய எங்களைக் காத்து ரட்சிக்க வேண்டிய தாங்கள் எங்கள் இனத்தவர்களைக் கண்டபடி அழித்து நிர்மூலப் படுத்துவது நியாயமாகுமா ?

மன்னராகிய தாங்கள் பசி நீங்கப் பெற்றவராக உடல் வலிமை மிக்கவராக இருந்தால்தான் எங்களுக்கு நிச்சயமான பாதுகாப்பு கிட்டும் என்பதை ஒப்புக் கொள்கிறோம். எங்களைப் போன்ற விலங்குகள் தான் உங்களுக்கு உணவாக முடியும் என்பதையும் மறுக்கவில்லை. ஆனால் எதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா ? தங்களுக்குத் தேவையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், எங்களைக் கொன்றழிப்பது தங்களின் விளையாட்டு என்று ஆகிவிட்டால் நாங்கள அனைவரும் பூண்டற்றுப் போய் விடுவோம், அப்போது தாங்கள் பசி நீங்க வழியில்லாமல் பட்டினி கிடக்க வேண்டி நேரிடும் அல்லவா!

இவ்வாறெல்லாம் வன விலங்குகள் மிகவும் பணிவுடன் கூறின.

சரி நான் என்ன செய்ய வேண்டுமென்ற எதிர்பார்க்கிறீர்கள் ? என்று சிங்கம் கேட்டது.

மகிமை மிக்க மன்னவா, நமக்குள் ஓர் ஏற்பாடு செய்துக் கொள்வோம். இன்று முதல் தங்களுடைய உணவு நேரத்தில் நாஙகள் முறை வைத்துக் கொண்டு எங்களில் ஒருவரை உணவாக அனுப்புகிறோம். தாங்கள் அதோடு அன்றைய தினம் திருப்தியடைந்து விட வேண்டும். தாங்கள் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டால் எங்கள் குலமும் படு நாசத்திலிருந்து தப்பிப் பிழைக்கும், தங்களுக்கும் தட்டின்றி வாழ்நாள் முழுவதும் உணவு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு வன விலங்குகள் ஒருமித்த மனத்துடன் ஒரு திட்டத்தைச் சிங்கத்திடம் சமர்ப்பித்தன.

சிங்கம் யோசித்துப் பார்த்தது.

காட்டில் வன விலங்குகள் எல்லாம் ஒரு குறுகிய காலத்தில் பூண்டற்று போனால் அப்புறம் பசிக்கு விலங்குகள் கிடைக்காமலேயே போய்விடும். ஆகவே விலங்குகளின் கோரிக்கையை ஏற்பதுதான் நல்லது என்ற முடிவுக்குச் சிங்கம் வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *