கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 1,331 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அருணன்:

சினிமா விளம்பர வண்டி என் சிந்தையினின்றும் அகலவே அகலாதா! என் செவிகளிலே அது எழுப்பிச் சென்ற நளினமான இன்ப இசை இன்னமும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. கையில் படபடக்கும் இந்தக் காகிதம் எத்தனை மகிழ்ச்சியைக் கூறி நிற்கிறது! ஒய்யார நடனமாடும் அந்த நடிகையின் மலர்ச் சிரிப்பிலே எத்தனை அழகு!

அருமையான திரைப்படம் இன்று தான் டூரிங் ‘சினிமா’வுக்கு வந்திருக்கிறது. அதனைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். ஆனால்…! காசு வேண்டுமே! அதற்கு எங்கே போவது! பாழாயப்போன அம்மா இருக்கிறாள். இருந்து என்ன பயன்! கேட்ட மாத்திரத்தில் என்றைக்காவது காசு கொடுத்திருக்கிறாளா! எங்கேயாவது ஒரு பணக்காரன் வீட்டிலே நான் பிறந்திருக்கக் கூடாதா! பாழுந் தொல்லை போகுமிட மெல்லாம் பின் தொடருகிறது! அன்பு மகனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யாத அன்னையும் ஒர் அன்னையா?

சிந்தித்துச் சிந்தித்து அலுப்புத் தோன்றிவிட்டது. எப்படியும் இன்று படம் பார்த்தாக வேண்டும். காசை எந்த விதத்தில் காணுவேன்! அழுமூஞ்சி அம்மாவிடம் காலணாக் காசு கூடப் பெற முடியாது. அம்மாவுக்கேற்றவளாக எனக்கு ஒரு தங்கை கிடைத்தாளே! ஒரு காசு கிடைத்தால் ஒன்பது முடிச்சுப் போட்டு வைத்துக் கொள்ளுகிறாள்! எல்லாம் தாரித்திரங்கள்!

முதல் காட்சிக்குப் போக வேண்டிமென்றால், அம்மாவைத் தான் எதிர்பார்க்க வேண்டும். இரண்டு பாத்திரங்கனை வீசியெறிந்தால் போதும், பீதியால் நடுங்கி விடுவாள் அம்மா! அப்புறம் காசு கேட்டு அதட்டினால் காரியம் பின்னர் ஆனந்தமாகச் சினிமா…!

அல்லி:

அருணனின் போக்கு இப்படித் திசை மாறும் என்று நான் நினைக்கவே இல்லை.”சினிமா.. சினிமா” என்று உயிரையே விடுகிறான். அண்ணன் இப்படிக் கெட்டுப் போனதற்குக் காரணம் அவன் நண்பர்கள்தாம்! பெரிய இடத்துக் குழ்ந்தையைப் போலிருக்க அருணன் ஆசைப்படுகிறான். அது எப்படி முடியும்! உலகத்தில் எல்லோருமா பணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்! சினிமா பைத்தியம் அருண்னை ஆட்டுகிறது. அந்த ஆட்டத்திலே அவன் செய்யும் அடாத செயல்கள் எத்தனை! அம்மா என்ன செய்வாள்!

அவள் அல்லல்படு யாருக்காக் உழைக்கிறாள்! எல்லாம் அருமை மகனின் நலத்தை நாடித்தானே! அருணன் மீது அம்மா காட்டும் அளவற்ற அவன் உணர்ந்தால்தானே.. அண்ணனின் ஒவ்வொரு செயலும் எனக்கு ஆத்திரத்தையே அளிக்கிறது என்றாலும் என்ன செய்வேன். அண்ணனல்லவா அவன்! அன்பு மாறுமா…!

சற்றுமுன் அருணன் செய்த அட்டகாசத்தை நினைக்க நெஞ்சு வலிக்கிறது. அந்த நேரம் அம்மா சினிமா ஆசை அவன் சிந்தையைச் சேறாக்கிவிட்டது. அம்மாவிடம் காசு கேட்கும் போது எப்படி அதட்டினான்..! ‘ஆணவக்காரன்’ என்று என் உள்ளம் ஒலமிட்டது.

“காசு இப்போது இல்லை அருணா…” என்றாள் அம்மா அமைதியோடு.

“என்றைக்குத்தான் இருக்கிறது என்று சொன்னாய்! உனக்குப் பழக்கமான பாடந்தானே இது…!”

“அருணா, ஏன் இப்படிக் கோபிக்கிறாய், நாம் ஏழைகள்! எப்படியும் நாளைக்குத் தருகிறேன் காசை…”

“சாந்தமாகப் பேசி என்னை ஏமாற்றிவிட முடியாது. எனக்கு வேண்டியது காசுதான்…!” அருணன் அலறினான்.

பெற்ற தாயிடம் இப்படிப் பேசுகிறானே மூர்க்கன் என்று என் இதயம் வெம்பியது. அம்மா மெள்னியானாள். அவள் இதயம், அழுதிருக்க வேண்டும். அன்னையின் கண்கள் கலங்கியிருந்தன். அடுத்த நிமிஷம் அங்கேயிருந்த பாத்திரத்தை ஒங்கி வீசினான். உருண்டு ஒடிய் அது நசுங்கி நாசமாகிவிட்டது! அப்பால்…! நூற்று வைத்திருந்த நூல் முடிச்சைக் கையிலெடுத்தபோது –

“அண்ணா… அண்ணா!“ என்று அலறிக் கொண்டு அவனிடம் ஒடினேன். அல்லல்பட்டு நூல் ‘குரங்கு கைப் பூமாலையாடிவிடக் கூடாதே என்பதற்காகப் ‘பாழ்படுத்தாதே’ என்று மன்றாடினேன். அவன் கையை ஒங்கினான். அது என் கன்னத்தே பட்டது! கவலையில்லை; அண்ணன்தானே அடித்துவிட்டான்!

”ஆறுதல் கூற வந்து விட்டாயே, நான் ஆவலோடு கேட்பதை எப்படியடி கொடுப்பாய்….! என்று அதட்டினான். அவள் எப்போது கேட்தை என்னால் கொடுக்க ….! எப்போது சோர்த்து வைத்திருந்த காசு இருக்கும் எனடற நினைவு பார்த்தேன்

“என்னாடி அல்லி”

அதுதான் இருக்கிறது அண்ணா என்ற வன்னம் கொடுத்தேன். கிடைத்த காசை! அடுத்த கணம் அவன் என்னை முறைத்த முறைப்பு…

எப்படியோ அவன் நகர்ந்துவிட்டான். அம்மாவின் பார்வையிலே படிந்திருக்கும் எல்லையற்ற சோகம் என்னை வருத்தியது. கலங்கியிருந்த அவள் கண்ணின் கடையிலே அரும்பி நின்ற ஒரு துளிக் கண்ணீரே போதும் என் நெஞ்சைக் க்க! ஆனால் அருணன்! அவனுக்கு எல்லாம் சினிமாக் காட்சியைப் போலத் தோன்றுகிறது போலும்! கண்ணீர்விட்டுக் கதறும் எத்தனையோ கதாபாத்திரங்களைக் கண்டவனாயிற்றே
அவன். எனவே,தான் அன்னையின் கண்ணீர் அவன் நெஞ்சத்தைத் தொடுவதில்லையே !அல்லியின் அன்பு ருணனுக்கு எங்கே தெரியப் போகிறது !அவனது அறிவுக் திறக்கும் அந்த நான் எதுவோ!

அருணன்:

அல்லி அஞ்சி நடுங்கிவி ட்டானே! அப்படித்தான் வேண்டும் இல்லையென்றால் அண்ணன் என்ற எண்ணமேயல்லவா அகன்றுவிடும்! அவள் கொடுத்த காசு ஒரு ‘டிக்கெட்டுக்குக் கூட ஆகவில்லையே! தேவைப் படும் காசை எப்படி அடைவேன்! டிக்கெட் வாங்கிக்கொண்டு எல்லோரும் உள்ளே பேகத் தெடங்கிவிட்டார்கன் ஆனால் நான்….! தெரிந்தவர் யாரேனும் வருவார்களா என்று தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. சுற்று புறத்திலே இருள் சூழ ஆரம்பித்துவிட்டது வெளியே நின்றிருந்த திரன் உன்னே சென்றுவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் படத்தைத் தொடங்கிவிடுவார்கன். நான் என்ன செய்வேன்| கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையே! சிந்தித்தேன். எண்ணமிட்டேன். இதய வானத்து முகட்டிலே பளிச்சி ட்டு மின்னியது யோசனையெனும் மின்னல். முன்பின் பழக்கமில்லாத அந்தச் செயலை எப்படி செய்வது !சினிமா கொட்டகை வேலியைத் தாண்டி திருட்டுத்தனமாக உள்ளே போய்விட வேண்டும்!

“முடியும்..! முடியும்!” – உள்ளம் எதிரொலியை எழுப்பியது.

அடுத்த நொடி|

நான் வேலியைத் தாண்டிய போது கால் வேலியில் தடுக்கிக் கெண்டது ,‘பொத்’தென்று விழுந்தேன். எங்கே! அந்தக் கண்ணாடிக் குவியலில்!

”ஆ, அம்மா!”- நான் ஒலமிட்டேன்! காலில் கண்ணாடித் துண்டுகள் ஏறிவிட்டனவா! குருதி ஏன் இப்படி வெளிவருகிறது! வலி பொறுக்க முடியவில்லை! நான் ஏன் அலறுகிறேன்!

“யாரடா அது!” என்றவாறு என் அருகே வந்தான் ஒருவன்.

“திருட்டுக் கழுதை! சரியாக மாட்டிக்கொண்டு விட்டாய்! வா, முதலாளியிடம்..,” – என்னைத் தள்ளிக் கொண்டு போனான் அவன். வேதனையால் துடித்தேன். காலிலே எரிச்சல் ஏற்பட்டது.

என் கண்கள் அருவியாகவிட்டன. கால்களிலே நடுக்கம் தோன்றியது. கொட்டகை முதலாளி என்னென் னவோ கேட்டார். பதில் கூறும் நிலையிலா நான் இருக்கிறேன்! சுற்றுப்புறமே எனக்கு விளங்கவில்லை. ஏளனமாகப் பலர் எழுப்பிய சிரிப்பொலி செவியில் பாய்ந்தது. யார் யாரோ என்னை ஏதேதோ செய்தது போன்ற உணர்வு. கழுத்தைப் பிடித்து எவனோ தள்ளிவிட்டான்! தரையில் விழுந்த நான் திறனை யெல்லாம் ஒன்று படுத்தி மெல்ல எழுந்தேன். நொண்டி நொண்டி நடந்தேன் வீட்டிற்கு.

அன்புள்ளங்கள் என்னருகே அண்டி வந்தன.

“என்ன நடந்தது அருணா!”

“ஏன் கண்ணீர் விடுகிறாய் அண்ணா!”

குரல்கள் எழுந்தன.

“சினிமா கொட்டகையில்… கண்ணாடி காலில்…! இரத்தம்… வலி தாங்க முடியவில்லை…!”

என்னால் பேச முடியவில்லை. அம்மா துடித்தாள். அல்லியின் கண்கள் நீர் துளிர்த்தன. படுத்தேன். உணர்வு இல்லை!

அருணனுக்கு மயக்கம் வந்துவிட்டது. துணி யெல்லாம் இரத்தக்கறை! என்ன நடந்ததோ! என் விழிகள் கலங்குவதேன்! அம்மாவின் உள்ளம் எப்படியெல்லாம் அழுது தீர்க்கிறதோ!

அண்ணனின் காலைப் பார்த்தாள். குருதியும் மண்ணும் பாத முழுதும் ஒட்டி உலர்ந்து போய்விட் டிருந்தன.

“அல்லி…”

“என்னம்மா!”

“வைத்தியரைக் கூட்டி வருகிறாயா!”

“போகிறேன்”

நாட்டு வைத்தியரின் வீட்டிற்குப் போனேன். ஐந்து நிமிஷத்திற்குள் அவரோடு மீண்டேன். வைத்தியர், விளக்கைன் ஒளியிலே அருணனின் காலைப் பார்த்தார். காலில் பதிந்திருந்த சில கண்ணாடித் துண்டுகளை மெதுவாக எடுத்தார். மருந்து வைத்துக் கட்டினார். ‘கவலைப்பட வேண்டியதில்லை’ என்றார். ‘காலையில் குணம் தெரியும்’ என்றார்.

உணர்வற்று அண்ணன் கிடப்பதை அம்மாவும் நானும் பார்த்தோம். ஏக்கம் சூழ்ந்தது. சோகமும் தாபமும் விரவின.

அருணன்:

அம்மாவும் தங்கையும் ஆதுரத்தோடு என்னென்ன செய்தார்களோ! கண் விழித்தது முதல் புரண்டு புரண்டு படுக்கிறேன். வலி குறைந்து நலம் கண்டிருப்பதை உணர்கிறேன்.

சினிமா மயக்கத்திலே இத்தனை நாட்களாக ஆழ்ந்திருந்தேன். அம்மாவுக்கு எத்தனையோ இன்னல்களை ஏற்படுத்தியிருக்கிறேன். அருமை அல்லியை அடித்திருக் கிறேன். அழ வைத்திருக்கிறேன்.

பெற்ற தாய்! அவள் தான் அன்புத் தெய்வம்! மக்களைக் கண் கலங்காமல் காப்பாற்றுகிறாள். வற்றாத அன்பால் மக்களின் வாட்டம் ஓட்டுகிறாள். பெற்றெடுத்த குழந்தைகளின் நலமே தன் நலமெனக் கொண்டுழைக் கிறாள். ‘அம்மாவே தெய்வம் உலகினிலே!’ – அது சினிமா பாட்டு அல்ல். எத்தனை உண்மையான கருத்து!

நான் செய்த இடுக்கண்களைப் பெற்றவள் பெரிதாகக் கருதியிருந்தால் இன்று குணமடைந்திருப்பேனா! சினிமா ஆசை எனக்கு வேண்டிய பரிசை அளித்துவிட்டது!

– 1957 – கல்கண்டு இதழில பிரசுமான கதை, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *