கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை  
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 19,858 
 

பங்கஜம் மாமி: “என்னடி வீடு வாசல் எல்லாம் தொறந்து போட்டு எங்கே போனா புஷ்பா மாலதி சரளா எல்லா எங்கேடி போனிங்க பெரியாவா வீட்டிலே இருந்தா இப்படி இருக்குமா? எல்லாம் ஒன்னும் தெரியாத பெண்ணுங்க” என்று நவராத்திரிக்கு பட்சனம் வாங்க வந்த மாமி அலுத்துக் கொள்ள மாமியின் குரலை கேட்டு ஒடி வந்தாள் பத்மா.

பத்மா: வாங்கோ மாமி என்று அழைத்துக் கொண்டே வீட்டினுள் இருந்து வந்தாள். “எல்லாரும் கொலுவுக்கு கூப்பி;ட போயிருக்கா மாமி” என்றாள்.

பங்கஜம்: அதுதான் கூப்பிட்டா யாரையும் காணலையா என்றாள். “இன்னிக்கு என்னடி பத்மா பச்சனம் செஞ்சே” என்றாள்

மாமி கடையிலிருந்து கடலை உருண்டை வெத்தலை பாக்கு வைச்சு தாம்பூலம் கொடுக்கலாம் இருக்கேன் மாமி என்றாள் பத்மா.

பங்கஜம் ஆச்சாரம் நிறைந்த பழங்காலத்து மனுஷி இப்படி அவளிடம் பத்மா கூறியவுடன் மாமி சில உணவு முறை பற்றி கூறினாள்.

வேப்பம்பூபச்சடி சித்திரையில் வருடபிறப்பு கொண்டாடுகிறோம் அன்று இல்லங்களில் அறுசுவை உணவு சமைத்து குலதெய்வத்திற்கு படைத்து எல்லா உறவினரும் கூடி உண்கிறோம். கோடைகாலத்தில் வெம்மையால் வரும் அம்மை முதலான நோய்கள் பரவத்தொடங்கும் காலம். அக்காலத்தே மனிதனின் உடல் வெப்பத்தை சமன்படுத்தும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு என்பதை அறிந்த முதாதையர் உணவே மருந்தாக வேப்பம்பூ பச்சடியை விருந்தில் சேர்த்துள்ளனர்.

நீர்மோர் பானகம் : ராமநவமி என்ற ராமனின் பிறந்தநாள் விழா கோடையில் வருகிறது. அச்சமயம் உடலில் நீர்சத்து குறையும் என்பதை அறிந்த முதாதையர் பானகத்தையும் நீர்மோரையும் அதில் சேர்த்தனர். ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ என்பது பழமொழி சுக்கை பானகத்தில் சேர்த்தனர். உமிழ்நீர் அதிகமாக சுரந்து உணவு ஜீரணம் ஆகும். சிறுநீரகக் கோளாறு தவிர்க்கவும் வயிறு உப்புசம் முதலியன நீர்மோர் குடித்தால் அண்டாது.

தானிய சுண்டல் : மழை வெயில் என்று மாறிமாறி வரும் காலநிலை நவராத்திரி விழா வருகிறது. மழைநீர் தேங்கி நோய்கள் தொற்றும் காலத்தில் உடலுக்கு கூடுதல் புரதச்சத்து அவசியம் என்பதை அறிந்த முதாதையர் நவராத்திரி விழா காலத்தில் வேகவைத்த சுண்டல் பட்ச்சனமாக கொடுத்தனர். புரதம் தரும் தானிய உணவை உண்ணும் வழக்கத்தை கொண்டு வந்தனர்.
இதை சொன்ன யாருக்கு தெரியது பழங்காலத்திலே ஒவ்வொரு செயலுக்கு அர்த்தம் ;தெரிஞ்சு ஒரு காரியம் செஞ்சா இல்லன்னா கூட பெரியவா என்ன சொன்னாளோ அதை அப்படியே செயலில் செய்தா? இப்போ பெரியவாளுக்கும் மதிப்பில்ல அதோடு அர்த்தத்தையும் புரிஞ்சிக்கரதில்லை? ஏன்று குறைப்பட்டுக்கொண்டாள்.

புஷ்பா: பத்மாவின் முத்த மகள் கல்யாண வயதில் நிற்கும் இளமங்கை.

“வாங்கோ மாமி எப்ப வந்தேள் ரொம்ப நேரம் ஆயிடுத்தா வந்து” என்றாள்

மாமி: எல்லா இப்பத்தாண்டி வந்தேன் எல்லா வீட்டிலையும் போய் கொலுவுக்கு கூப்பிட்டையோ” என்றாள்.

புஷ்பா: எல்லாரை கூப்பிட்டாச்சு மாமி எல்லோரும் வரேன்னா என்றாள்.

மாமி: திருவிழா பண்டிகையின்னாதான் எல்லோரையும் பார்க்க முடியறது.

பக்கத்து வீட்டு பெண்கள் கொலுவுக்கு பார்க்க வந்து கொண்டு இருந்தார்கள் பெண்கள் கொலு பொம்மைகளை பார்த்து கொண்டு இருக்கையில்.

மாமி: கொலுவுக்கு வந்தவா எல்லோரும் ஒரு பாட்டு பாடுங்கோ என்றாள் பெண்கள் திருதிருவென முழிக்க மாமி சொன்ன “என்னடி பாட சொன்னா திருதிரு நிக்கறேள் அதுவும் ஒரு கலை அதை பழக்கத்திலிருந்து விட்டுட்டோமானா அந்த கலை நமக்கிட்டே இருந்து போயிடும் தெரியரதோ? ஆந்த காலத்திலே கல்யாணம் சடங்கில் மாப்பிள்ளைக்கு வெத்தலை மடிச்சுக் கொடுக்கும் போது பாட்டு பாடி தான்டி கொடுக்கனும் இல்லன்னா வாங்கிக்கமாட்டாடி தெரிஞ்சு கொங்கோ” என்றாள்.

நவராத்திரியில் கன்னி பூஜை செய்யாவான் கேள்விபட்டிருக்கேன் அதை பத்தி சொல்லுங்கோ மாமி என்றாள் எதிர் வீட்டு சுந்தரி

மாமி கன்னி வழிபாடு பற்றி கூறுகிறாள்

“அந்தணர் எரியோம்ப கன்னியரின் தாய்மார் அருகே நிற்க தைந்நீராடல் நிகழ்ந்தது இதனை ‘ஆம்பா ஆடல்’ என்று பரிபாடல் குறிப்புள்ளது. கற்புடைமை சிறந்தது அதை விட சிறந்தது கன்னித்தன்மை. கன்னியாகுமாரி அம்மன் கன்னி கோலத்தில் என்றும் காட்சியளிக்கிறாள். திருப்பாவையில் பாவை நோன்பு கன்னிப்பெண்கள் செய்கின்றனர். தாய் தெய்வத்தின் மானுடவடிவமாக கன்னிப்பெண் கருதப்படுகிறாள். தமிழ்நாட்டில் திருவெண்காட்டில் உள்ள வீரராஜேந்திரன் கால கல்வெட்டில் கன்னிபூசை பற்றி விரிவான செய்தியுள்ளது. நவராத்திரி காலத்தில் கன்னி பெண்ணை தெய்வமாக கருதி வழிபாடு செய்ய கன்னிபெண்ணுக்கு அலங்கார பொருள்கள் பாவாடை வளையல் கொலுசு முதலியவை அணிவித்து அம்மனாக அழகு பார்த்தனர். கொற்றவை வழிபாட்டிலும் கன்னிப்பெண் அம்மனாக நினைத்து வழிபடுகின்றனர். கன்னியின் சக்தி உபயோகிக்கபடாதது அந்த சக்தியை நம் வழிபாட்டில் இணைத்தனர் நம் முதாதையர். கன்னிமார் கோயில் (சக்கி மங்கலம்) மழையில்லா காலங்களில் மழைவேண்டி வணங்குவது வழக்கமாக உள்ளது. நீர்நீரம்பிய கண்மாய் உடையாமல் இருக்க இத்தெய்வம் காப்பதாக எண்ணி கோயில் அமைத்து வழிபடுகின்றனர்”

எல்லோரும் ‘மாமி; எவ்வளவு தெரிஞ்சு வைத்து கொண்டு இருக்கிறாள்”; என்று .புகழ்ந்தனர்..

பத்மா பங்கஜத்தை பார்த்து கேட்டாள் “மாமி திருமண சடங்கிலே என்ன என்ன செய்யனும் புஷ்பாக்கு இப்போ கல்யாணம் செய்யனும் அதை பற்றி கொஞ்சம்; சொல்லுங்கோ கேட்டு தெரிஞ்சிக்கிறோம் எங்க வீட்டிலே உள்ள பெரியவா எல்லா போய் சேர்ந்துட்டா இப்ப நீங்க தான் பெரியவாளா இருந்து சொல்லி தரனும் என்றாள்.

பெரியவாளா இப்போ மதிக்கறதில்லை மரியாதையும் கொடுக்கவும் மாட்டேங்கறா இப்ப நீ கேட்டதற்கே எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா தொல்றேன் தெரிஞ்சுங்கோ என்று ஆரம்பித்தாள். மற்ற பெண்களின் கவனமும் மாமியிடம் திரும்பியது..

திருமண சடங்கும் வழிபாடும் : நம் சமூகம் தந்தை வழி சமூகம். தந்தைக்கு பின் தலைவனின் கட்டுப்பாட்டில் வாழ்கிறாள் பெண். தந்தையை பிரிதல் தலைவனை சேர்தல் என்பது பந்தத்தின் கோட்பாடு. பொதுவாக திருமணங்கள் பெண்களின் இளவயதிலும் பருவமடைந்தவுடன் நடத்தப்படுகிறது.

பெண் பார்த்தல்: ஆ+ண் தனக்குரிய தகுதிகளை பெற்றபின் திருமணம் என்ற சடங்கை மேற்கொள்ள நினைத்தபின் தனக்கு தகுதியான பெண்னை தேர்ந்தெடுத்து பெண் வீட்டாரிடம் முறையாக தாய் தந்தையருடன் பெண் வீட்டிற்கு செல்கிறான். பெணணின்; தந்தையிடம் (அ) தமையனிடமோ கன்னியாவரணம் செய்து கொடுக்க வேண்டுகின்றனர். அதன் பின் முறையப்படி பெண் பார்த்தல் நடைபெறுகிறது.

நிச்சியதார்த்தம்: ஆண் வீட்டாரின் பெண் பார்க்கும் படலம் முடிவடைந்த இருவீட்டார்; சம்மதித்து பின்னர் மணமகன் வீட்டில் நிசசயம் மேற்கொள்கிறார்கள். இருவீட்டாரின் உறவினர்கள் ஒன்றுகூடி திருமணம் தேதி மற்றும் சீர்வரிசைப்பற்றி பேசிகொண்டு பின் மணமகளுக்கு புடவை ரவிக்கை ஆபரணங்கள் பரிசாக அளிப்பார்கள்.

நாள் குறித்தல்.: சந்திரன் ரோகிணியை சேரந்த நாள் திருமணத்திற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. முகூர்த்த நாளில் திருமணம் செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்வர்.

பொன்னுருக்குதல்: பெண் பேசி நாள் குறித்தபின் மணமகன் வீட்டில் தாலியை செய்வதற்கு நல்லநாள் பார்த்து குடும்ப பொற்கொல்லரிடம் தங்கம் கொடுத்து தாலி செய்யசொல்வார்கள். தாலி தங்கத்தில் மட்டுமே செய்கிறார்கள்.

முகூர்த்தக்கால்: திருமண மண்டபத்தில் கல்யாணத்திற்கு முதல் நாள் மணமகன் மற்றும் மணமகள் வீட்டில் வடகீழக்கு ஈசானிய மூலையில் முகூர்த்தகால் நடுவர். முருங்கை மரத்தில் இருந்து ஒரு தடியை வெட்டி அதன் மேல் நுனியில் ஐந்து மாவிலைகள் மஞ்சள் பூசிய கயிற்றால் கட்டி நடுவர். அதன் அடியில் சுமங்கலி பெண்கள் நவதானியம் இரைப்பர். இருவீட்டாரும் இந்த நிகழ்ச்சிக்குபின் துக்க வீடுகளுக்கு செல்வதில்லை.

பாலிகையிடுதல்: நவதானியங்களை பாலிகைகளில் இட்டு முளையிடச் செய்வதே அங்குரார்;ப்பணம் எனப்படும். நவதானியங்கள் மக்கள் தேவைக்கு பயன்படுவது போல தம்பதியர் சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் என்பதே சடங்கின் நோக்கம். திருமணச்சடங்கு முடிந்தவுடன் பாலிகையை நதியிலோ குளத்திலோ கரைத்து விடுவர். பாலிகை தெளிக்கும் சுமங்கலிகள் குழந்தையுள்ளவர்களாகவும் மாதவிலக்கு நிற்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.

பிரதிஸர பந்தம்: திருமணம் எந்த விதமான தடங்கலில்லாமல் நடக்க காப்புக் கட்டுதல் என்ற சடங்கை மேற்கொள்கின்றனர். கிராம தேவதை திருவிழாவில் இக்காப்பு கட்டுதல் என்ற சடங்கு உள்ளது. காப்புக்கட்டியபின் ஊரில் உள்ளோர் அவ்வூரை விட்டு வெளியே செல்லமாட்டார்கள் அவ்வூருக்கு யாரும் வரமாட்டார்கள்.

நாந்தீ: குடும்ப வாழ்வை தொடங்கும் முன் இருவீட்டாரின் பெற்றோரும் தங்கள் வீட்டு மூதாதையர்களை நினைத்து அவர்களிடம் ஆசிபெறுதலே நாந்தீ எனப்படுகிறது. மணமக்கள் தங்கள் பெற்றோரிடம் ஆசிர்வாதங்களை பெறுகின்றனர்.

மாலைமாற்றுதல்: சில குடும்பங்களில் இந்த மங்கலச்சடங்கு மாங்கல்ய தாரணத்திற்கு முன்பாக நடக்கும் பெரும்பாலான குடும்பங்களில் தாலி கட்டிய பிறகே மாலை மாற்றிக்கொள்ளுதல் சடங்கு நடைபெறுகிறது.

நல்ல முகூர்த்த வேளையில் மணமகன் மணமகள் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்து தன் சொந்தமாக்கி கொண்டு வாழ்வை:; தொடங்குகிறான். சில திருமணங்களில் மாலை மாற்றிபின் திருமணம் முடிந்ததாக கருதப்படுகிறது.

அம்மிமிதித்து அருந்ததிபார்த்தல்: தாலி கட்டியபின் அம்மிமிதித்தல் என்ற சடங்கை செய்கின்றனர் அம்மி சுலபமாக நகர்த்த கூடிய ஒரு பொருள் அல்ல பெண்ணின் கற்பை அம்மியுடன் ஒப்புநோக்கி இச்சடங்கு அமைந்திருக்கிறது. கற்பு நெறியில் யாருடனும் வளைந்து கொடுக்காத தன்மையில் பெண் இருக்க வேண்டும் என்பதே இச்சடங்கின் பொருள். கடுமையான கற்புடைய பெண் கணவனின் துணைக் கொண்டு அம்மியின் மேல் ஏழு அடி வைக்கிறாள் ஏழு அடி ஒருவருடன் கூடி நடந்தால் நட்பு கொள்கிறார்கள் என்பது திண்ணம். ஓவ்வொரு அடியும் அம்மியின் மேல் நகர மணமகன் கடவுள் பெயரை உச்சரித்து மணமகளை காக்க வேண்டுதலே இச்சடங்கின் நோக்கம். தாலி கட்டுவது பின்னர் நம் திருமணச்சடங்கில் சேர்க்கப்பட்டது அம்மிமித்தல் சடங்கே திருமணத்தின் அறிகுறி.

அருந்ததி பார்த்தல் : அருந்ததி என்பது வானில் உள்ள ஒரு நட்சத்திரம். வானில் சப்தரிஷிகள் நட்சத்திரங்களாக இருக்கின்றனர். அதில் அருந்ததியும் ஒன்று. நட்சத்திரம் இரண்டு பக்கம் பக்கமாக இருக்கும். அருந்ததி என்பது வசிஷ்டரின் மனைவி. வசிஷ்ட முனிவர் தன் மனைவியை சோதனை செய்து திருமணம் செய்தார் என்கிறது புராணம். இரும்பு கடலையை வறுத்து தருமாறு கேட்க யாவரும் முடியாது என்று கூற அருந்ததி மட்டும் தன் கற்பு தன்மையால் அதை வறுத்தார் அதை கொண்டு கீழ்சாதியான அருந்ததியை மணந்தார். சுப்தரிஷி மண்டலத்தில் இன்;றும் அருந்ததியை காணலாம். பத்தினி தெய்வ வழிபாட்டின் எச்சமாக இதை எதுத்துக்கொள்ளலாம்.

எல்லோரும் மாமியின் சொற்போழிவை கேட்டு மனம் மகிழ்ந்து கைதட்டி தன் மகிழ்ச்சை ஆரவாரத்துடன் தெரிவித்தார்கள்.

மாமி திருமணத்த பத்தி அதில் உள்ள சடங்கோட அர்த்தத்தையும் புரிஞ்சிகிட்டோம் அப்படியே பத்தினி தெய்வ வழிபாடு பத்தி தெரிங்சிக்க ஆசையாயிருக்கு உங்களுக்கு அதைப்பத்தி தெரியுமா என்றாள் மல்லிகா.

தெரிஞ்சமட்டும் சொல்றேண்டி மல்லிகா என்றாள் மாமி

பத்தினி வழிபாடு: பெண்களை தெய்வமாக மதிக்;கும் தன்மை நம் பாரத தேசத்தில் உள்ளது. சங்க காலத்தில் வழக்கில் உள்ள வழிபாடு காவிய காலத்தில் பெருமை பெற்றது. “உரைசால் ”பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்”- இளங்கோ அடிகள் போற்றியுள்ளார். கணவனுக்காக வாழ்ந்த மனைவியர் கணவன் இறந்தபின் அவனுடனே தீயில் இறக்கின்றனர். இதை சதி என்று கூறுகின்றனர்.. அப்படி இறந்தவர்களை தெய்வமாக கருதி வழிபாடும் செய்கின்றனர். இறந்த இடத்தில் ஒரு கல்லை நட்டு அதை சதிக்கல் என்றும் அழைக்கின்றனர். பத்தினி விழா அந்நாளைய அகில இந்திய திருவிழாவாக கொண்டாடினர்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. திருநெல்வேலி மதுரை மாவட்டத்தில உடன்கட்டை ஏறிய் தீயில் பூகுந்த பெண்களை ‘சீலைக்காரி அம்மனாக” வழிபடுகின்றனர். காவேரிப்பாக்கத்தில் ‘பூ+வாடைக்காரி” எனறு அழைக்கினறனர். பெண்கள் தங்கள் பத்தினி தன்மையை காப்பாற்pக்கொள்ள தீயில் இறங்கினர் அவர்களை தீப்பாய்ந்த அம்மனாக வழிபடுகின்றனர்.

அதுவுமில்லாமல் பத்தினி தெய்வங்களை குலதெய்வமா வழிபடுகிற பழக்கம் நம் பெரியாவளோட காலத்திலிருந்தே இருந்திருக்கு தெரியுமா. புத்தினி தெய்வத்தை மட்டுமல்லாம நம்மை எல்லாம் காவல் காத்து அதுக்கா இறந்து போறாங்களே அவங்களையும் நாம் வழிபட்டு தான் இருக்கோம்.

அய்யனார் பிடாரி காளியம்மன் கருப்பண்ணச்சாமி மாரியம்மன் போன்ற தெய்வங்கள் காவல் தெய்வங்களாக வழிபடுகின்றனர். பண்டைய நாளில் கறியும் கள்ளும் வைத்து படைப்பர். என்று தக்கையக்கபரணி சானறு பகர்கின்றது. காவல் தெய்வங்ள் பல வித சடங்குகள் உள்ளன. காணிக்கை செலுத்துதல் அங்கமளித்தல் காவடி எடுத்தல் பால்குடம் எடுத்தல் மொட்டையடித்தல் காதுகுத்தல் பிச்சையெடுத்தல் வேண்டுதல் கால்நடைகளை நேர்ந்துவிடுதல் தர்மம் செய்தல் போன்ற சடங்குகளை மேற்கொண்டனர்.

நடுகல் வழிபாடு: தொல்பழங்காலம் முதல் வழக்கத்திலிருக்கும் வழிபாடு. முல்லைத்துறை பாடல் ஒன்றில் ‘நெல்லுகுத்துப் பரவும் தெய்வமாக நடுகல் கூறப்படுகிறது. மறிக்குட்டியை அறுத்து நடுகல்லுக்கு பலியிட்டு படைப்பர். நீத்தார்க்கு செய்யபெறும் வழிபாடு குலத்தின் வளம் வேண்டி செய்ய பெறுகின்றனர்.

நவகண்டம்: தலையறுத்து தரும் வழக்கம் தொல் பழங்காலத்திலிருந்து வழக்கத்தில் இருந்திருக்கிறது. 2500 ஆண்டுக்கு முற்பட்ட இவ்வழக்கம் நம் நாட்டில் இருந்திருக்கிறது. தன்னையே பலியிடுதல் தன் குலம் தழைக்கும் என்று நம்பினர் ஆதிமனிதர்கள். காலமாறுதலில் அரசன் நன்மைக்காக செய்யும் சடங்காக இது மாறியது.

மாமி எல்லா தெரிஞ்சு வெச்சுண்டு இருக்கா என்று புகழ்ந்தாள் அமுதா.

நாம மனுஷாள மட்டும் தெய்வமா வழிபடலை நம் சுத்தி இருக்கிற இயற்கையையும் வழிபடறோம் அதையும் சொல்றேன் கேட்டுகொங்கோ

புhம்பு வழிபாடு: பாம்பை குலதெய்வமா வழிபடுகிற வழக்கம் தமிழகத்தில் உண்டு. நாகாத்தமனை வழிபாடு செய்து தன் குலத்தை காப்பாற்ற வேண்டி கொண்டனர். புத்தூக்கு பால் ஊத்தும் பழக்கத்தையும் கொண்டு உள்ளனர்.

மரவழிபாடு: ஆலமரத்தை மரத்தை சுற்றினால் பிள்ளை பிறக்கும் என்பர். மரத்தை கோவில்களில் தலவிருஷ்சமாக வைத்துள்ளனர். சோடானிக்கரை பகவதி அம்மன் கோயிலிலே மரத்தில் ஆனி அடிக்கும் பழக்கம் இருக்கிறது. பேய் பிசாசு பிடித்தவர்கள் அந்த ஆன்மா மற்ற வாழும் உயிரிடத்து விலகும் போது மரங்களில் ஆனி அடித்து விலகுவதாக ஜதிகம்..
ஆவி வழிபாடு: முன்னோர்கள் தற்கொலை செய்து கொண்டு வாழ்கின்ற போது திரபு;தியில்லாமல் இறக்க நேர்ந்தாலோ ஆவி வடிவம் கொண்டு இவ்வுலகை விட்டு நிங்கார். ஆவர்களை வணங்குதல் மூலம் பல தீமைகளிலிருந்து விடுபடுகிறோம். அவவான்மா நம் நற்செயல்களை கண்டு நன்றாக வாழ வாழ்த்துகிறது.

மழை இடி மின்னல் சூரியன் சந்திரன் நீர்நிலைகள மரங்கள் விலங்குகள் என்னும் நிலையில் தொடக்ககால வழிபாட்டு முறைகள் அமைந்தன. வுழிபாடும் சடங்குகளும் மக்களிடம் இணைந்து காணப்படுவதால் தெய்வநம்பிக்கை ஒழுக்கத்தை சுகாதாரத்தை பழக்கவழக்கத்தை உணவுமுறையை ஒழுங்கு செய்து வாழ்வுக்கு ஆதாரமாக கடைபிடிக்ககூடிய வழிமுறைகளை வகுத்து கொடுத்தவர்கள் நம் முதாதையர் என்பதை நினைவு கொண்டு வாழ்வில் நாகரிகம் கருதி இதை தவிர்த்தோம் ஆனால் வாழ்வாதாரமே சீர்குலையும் என்பது திண்ணம்.

மாமி நல்லா விளக்கத்தை கொடுத்தேள் இப்போ சில வீடுகளிலே முன்னோர் வழிபாடு செய்யறதில்லை அதை வழக்கத்திலிருந்து விட்டுவிட்டா அதை செய்தா வாழ்க்கையில் சிறப்பா இருப்போம் என்று நீங்க சொல்லி கொடுத்திருக்கேள் இதை கண்டிப்பா கடைபிடிப்போம். ஏன்று அமுதா

பத்மா உங்க வீட்டு கொலுவும் நல்லாயிருந்தது மாமியின் விளக்கம் எங்களை எல்லாம் யோசிக்க வைத்திருக்கிறது என்றாள் ராதா..

Print Friendly, PDF & Email

1 thought on “நவராத்திரி கொலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *