கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 15, 2013
பார்வையிட்டோர்: 19,875 
 

ஆமாம், நான்தான் இதை செய்தேன். ராம்பூர் போயலியாவில் வசிப்பவனும் கோபேஷ் ரஞ்சன் பக்க்ஷியின் மகனுமான சாட்சாத் பாபேஷ் ரஞ்சன் பக்க்ஷி என்றழைக்கப்படும் நான்தான் இதைச் செய்தேன். அதுவும் மிகவும் தெளிவான மனநிலையில் செய்தேன். நான் எனது குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன். இந்த மாபாதகத்தை செய்ததிற்கு தண்டனை என்ன என்பதுவும் எனக்குத் தெரியும்.

யாருடைய வற்புறுத்தலோ. தூண்டுதலோ இல்லாமல், நானாகவே முன்வந்துதான் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை தருகிறேன். நான் பாவம் செய்துட்டேன். இன்ஸ்பெக்டர்!! சரி, இப்போ நீங்களே சொல்லுங்கோ. நான் செஞ்சது தப்பானு? எனக்கு இந்தப் பிரச்சினையை தீர்க்க வேற மார்க்கம் தெரியலை. ஜெயா கூட ரொம்ப பயந்துதான் போயிருந்தாள். சாவதற்கு ரொம்ப பயந்தாள்.

ஆனா இதை தீர்க்க இந்த ஒருவழிதான் இருந்தது.

அவளுடைய வலியையும் வேதனையையும் என்னால் எப்படி உணர முடியும் என்று கேட்கிறீங்க? ஏன் முடியாது? நாங்கள் இருவரும் ஒண்ணாவே பிறந்து வளர்ந்தோம். அவள் என்னை விட ரெண்டு வருசம் சின்னவள். அவ்வளவுதான். அவளை குழந்தை பருவத்தில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். உண்மையில் சொன்னால். அவளை யாரையும் விடவும் நான் ரொம்பவும் அறிவேன். ஆகவே ரொம்பவும் நேசித்தேன். அதனால்தான் அவள் படும் கொடுமைகளை பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல். என்னால் மற்றவர்களைப்
போல் சகித்துக் கொண்டிருக்க முடியலை..

கஷ்டம்? அவளோட கஷ்டத்திற்கு யார் மூலக்காரணமாய் இருக்க முடியும்? அவ புருசன்தான்…

ஜெயாவின் கல்யாணம் தாமதப்பட்டது வாஸ்தவம்தான். பதினெட்டு வயசு கடந்த பிறகுதான் அவளுக்கு திருமணம் கூடியது. அவள் ரொம்ப அழகு. அதனாலேயே அவளுக்கு பணக்கார மாப்பிள்ளை ஒருத்தர் தேடி வந்தார். ஆனால் அவர் வயசாளி. நாற்பது வயதைக் கடந்தவர். கூடவே மனைவியை இழந்தவர். வறுமையில் புரண்ட எங்களுக்கு, கடவுள் அனுப்பிய பரிசுதான் இந்த மாப்பிள்ளை என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள். நான் அப்பதான் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்து திரும்பியிருந்தேன். நான் இந்த கல்யாணத்திற்கு எதிர்ப்பு தொரிவித்தேன். ஆனால் எனது எதிர்ப்பினால் எந்த பயனும் விளையவில்லை. நான் எப்போதுமே எளிதில் கோபப்படுபவன். எனக்கு ஆத்திரம் வந்தால், எனது கட்டுப்பாட்டை இழந்துடுவேன். விளைவாய் தாங்க முடியாத எரிச்சலுடன், மேற்கே
வேலையொன்றை தேடிக் கொண்டு சென்று விட்டேன். சென்ற இடத்திலேயே தங்கி விட்டேன்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு, அம்மாவிடம் இருந்து கடிதம் வந்தது. அப்பாவின் சுகவீனம் அதிகரித்து விட்டதாம். அவரும் வருடக்கணக்கில் நோய்வாய் பட்டுதான் கிடந்தார். வெயில் காலத்தில், அவர் நோய் முற்றிவிடும். இந்த தடவை, ரொம்ப கடுமையாகி விட்டது.

நான் வீடு வந்தேன். அப்பாவின் நோய்க்கு மருந்து என்று எதுவும் கிடையாது. என்ன செய்வது என தெரியாது வழக்கம் போல், நாங்கள் அனைவரும் அவர் பக்கத்தில் உட்கார்ந்து முழித்தோம். அப்பதான் எனக்கு அது உதிர்த்தது. ஜெயாவின் வீட்டிற்கு போய், அவளைப் பார்த்து வந்தால் என்ன? அவளை பார்த்தும். ரொம்ப காலமாகிப் போச்சு.

அவள் வாழ்க்கைப்பட்டு போன இடம், ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த ஊர் என்று சொல்ல முடியாது. அந்த ஊர் ரயில் நிலையத்தில். மெயில் ரயில் எல்லாம் நிற்காது. பாசன்ஸர் ரயில்தான் நிற்கும். போகும் போது ஒரு தடவை வரும்போது மறுமுறை என்று ஒரு பாசன்ஸர் டிரெயின் நிற்கும். நான் ரயிலை விட்டு ஊரில் இறங்கிய போது, மாலை நேரம். எனக்கு ஊர் ரொம்ப பிடிச்சுப் போச்சு.

ரம்மியமான ஓவியகரமான அந்த ஊர் எனக்கு பிடிச்சுப் போச்சு. ஆனால் மாப்பிள்ளையை பிடிக்க வில்லை. அவர் பெயர் சவுத்ரி மோசை. அவருடையது சரியாய் பராமரிக்கப்படாத வீடு. பளிங்குகல் பதித்த அந்த தனது பழங்காலத்து வீட்டின் நடுஹாலில் அமர்ந்திதிருந்தார். ஏதோ சட்டச்சம்பந்தமான பத்திரங்களை படித்துக் கொண்டிருந்தார். கழுத்து தெரியாமல் பொதுமிக் கிடந்தது. ஒரு ஆமையைப் போல் தோற்றமளித்தார். அவர் உயரம் ஆறடி இருந்திருக்கும். தடித்தும் கறுத்தும் இருந்தார். ஆனால் அவர் கால்கள் சூம்பிப்போய் கிடந்தன. அவர் படித்தவர் போலவோ. நயமாய் பேசுபவர் போலவோ தோன்றவில்லை. அவர் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தொழிலை செய்பவர் என்பதால் அவரிடம், அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான். அவர் விவசாயிகளுக்கு கூட்டுவட்டிக்கு பணம் கொடுத்து, வாங்கி வந்தார்.

என்னோட நட்புப்பூர்வமாய் இருக்க, அவர் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு முயன்றார் . வெளிச்சமும், நிழலும் தொட்டுப்பிடித்து விளையாடும் பால்கனி வழியே என்னை உள்ளே அழைத்துச் சென்றார். அவர் நடந்து வரும்போது. ரொம்ப நாகரிகமானவர் போலவோ, ஒரு சபையில் மதிக்கத்தக்க நயத்தினை பெற்றவராகவோ தோற்றம் அளிக்கவில்லை. அவர் நடந்து கொண்டிருக்கும் போது, அவரது ஒரு கால் ஊனமாய் இருப்பதை நான் கவனித்தேன். ஊனமாகி சுருங்கிப் போயிருந்த தனது இடது காலை இழுத்து
இழுத்து நடந்தார்.

அவர் வளவளவென பேசிக் கொண்டிருந்தார் அவர் தனது தொழில் சம்பந்தமாய் வெகுதூர கிராமம் ஒன்றிற்கு அன்றே போக வேண்டியுள்ளது என்றார். நான் இன்னும் ரெண்டோ அல்லது கூடவோ நாட்கள் அங்கு தங்கி இருக்க வேண்டும் என்ற அபிப்ராயத்தில்தான் வந்திருந்தேன். மேலும் இந்த சீசனின் போது. அந்த பகுதி தண்ணீரும் சீதோக்ஷணமும் ஒருவருடைய உடல்நலத்தை செழுமைப்படுத்தும் என்று வேறு சொன்னார்கள். ஜெயாவின் அறையை எனக்கு காட்டி விட்டு. தனது அவசர வேலைகளை கவனிக்க தான் போகப் போவதாக அவர் சொன்னார். அப்படி என்றால், ஜெயா தற்போது அறையில் இல்லையா? நான் அவள் திரும்பி வரும்வரைக்கும். அந்த அறையில் தனியே காத்திருக்க வேண்டுமா?

அவள் வீட்டில் எங்கேயாவது இருந்திருக்க வேண்டும். தனது அன்றாட வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்திருக்கலாம். சீக்கிரமே வந்து விடுவாள். மாப்பிள்ளை விடை பெற்றுக் கொண்டார். நான் காத்திருந்தேன்.

நான் அங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்தே இருந்தேன். உள்ளே இருந்து வீட்டின் முற்றத்தை என்னால் பார்க்க முடிந்தது. ஒருபக்கம் கொடியில் துணிகள் காய்ந்து கொண்டிருந்தன. அறையின் ஒரு மு்லையில். காலி மதுப்பாட்டில்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. நானும் கொஞ்சம் மந்தப் புத்திக்காரன். உடனே எதுவும் உறைக்கவில்லை. .

திடீரென யாரோ யாரையோ எச்சரிக்கும் கடு்ரமான குரல் கேட்டது. “வர வர இந்த தேவடியா கைமீறி போறா.. கொஞ்சம் பாத்திரங்களை கழுவி எடுத்துட்டு வர எவ்வளவு நாழி ஆகுது? யாராவது கோஷ் பசங்க கூட. ஆற்றங் கரையோரம்உக்காந்து கொஞ்சி குலாவுறாளா?”. இதற்கு யாரோ பணிவான குரலில் பதில் சொன்னார்கள். மறுபடியும் முதலில் கேட்ட அந்த கொர கொர சத்தம். “சரிதான். நீ எதையும் ரொம்ப வலிந்து செய்ய வேண்டாம். ஆனா நீதான் என்ன செய்வே? இப்படி நீ இருக்கிறது என்பது இயற்கைதான்.. உன் குடும்ப ரத்தம்தானே
உனக்குள்ளும் ஓடும். உன்னோடது சரியான பிச்சைக்கார குடும்பம். உங்கிட்ட இருந்து வேற என்னத்தை. எதிர் பார்க்க முடியும்? பணம் இல்லைனா. ஏன் சந்திரனுக்கு முட்டணும்?னுதான் நான் கேக்கிறேன். ஏன் மறுபடியும் அந்த ஆச்சார ஆனுஷ்டானங்கள்? படிப்புகள்? இந்த சாஸ்திரங்கள் வந்துதான் உனக்கு முக்தி தரப்போகுது? இதெல்லாம் வேற எதையோ மறைப்பதற்கான சித்து வேலை..”. நான் பின்னால் நகர்ந்து கொண்டேன். இரண்டு பெண்கள் கண்களில் பட்டார்கள். கேலியும் கிண்டலும் கலந்த வழக்கமான ஏச்சுப்பேச்சுகள்தான். .

ஜெயா, பாத்திரங்களின் சுமையுடன், கிழிந்த புடவையை கட்டிக் கொண்டு நின்றாள். எக்கச்சக்கமாய் வியர்த்துக் கொட்டியிருந்தது. ஆனால் அந்த கிழட்டு பொம்பளை, தனது இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு, தனது கொடுக்குதொனியால், அவளை துளைத்து எடுத்தாள். படையும். வெள்ளை திட்டுகளும், ஜெயாவின் மெல்லிய பூப்போன்ற உடலில், பரவ ஆரம்பித்து இருந்தன. அவளது கூந்தல் கலைந்து கிடந்தன. கண்கள் கன்னக்குழியின் ஆழத்தில் கிடந்தன. அவளது தோலில் நோய் குறிபடும் மஞ்சள் நிறம் பாவி நின்றது. ரத்தசோகை பிடித்தவள் போலிருந்தாள்.

எங்களது வசந்தமான குழந்தைபருவம் க்ஷணநேரத்திற்குள் மனத்திற்குள் புகுந்து கொண்டது. ஜெயா எங்கள் அம்மாவின் குணாம்சங்கள் சிலவற்றை பெற்றிருந்தாள். மனைவியை பறி கொடுத்திருந்த இந்த சவுத்ரி மோசை அவளது அழகுக்காகதான் அவளை மணந்திருந்தார். அவள் லஷ்மி கடாக்ஷயம் பெற்று இருந்தாள். அவளது இருப்பு, அவளது மெல்லிய தீண்டல் குடும்பத்தில் அமைதியை வளர்க்கும். ஆனால் இந்த உண்மையை அவர்கள் அறிந்து செயல் படுவது போல் தெரியவில்லை.

எனக்கு சிரிக்க வேண்டும் போல் தோன்றியது. என்னை அறியாமலேயே, நான் பால்கனிக்கு வெளியே வந்தேன். என்னை பார்த்ததும், ஜெயா ஆச்சரியம் அடைந்தாள். “நீயா.. வா, வா.. நாம் எனது அறைக்குப் போவோம்..”.

வயதான அந்தப்பெண்மணி. ஒருவேளை தர்மசங்கடமாய் உயாந்திருக்கலாம். அவள் சேலை ‘பல்லு’வை கொண்டு, தலையை சுற்றிக் கொண்டாள். ஆனால் உடலின் மற்ற பகுதிகள் அப்படியே தொரிந்தது- சன்னமான குரலில் நான் யார் என்று விசாரித்தாள். பிறகு அவள் அவசரமாக சென்று விட்டாள். நான் மறுபடியும் ஜெயாவின் அறைக்கு சென்றேன். ஜெயா பாத்திரங்களை வைத்து வருவதற்காக சென்றாள்.

அந்த வயதான மூதாட்டி சவுத்ரி மோசையின் அத்தை எனவும், பெயர் பிஷிமா என்றும் எனக்கு சொல்லப்பட்டது. அவர்கள் மூவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்தார்கள்.

அந்த முற்றத்தின் முடிவில். ஒரு ஆலமரமும். ஒரு ஓக் மரமும் இருந்தன. அதைச் சுற்றிக் கொண்டும், வீட்டு வேலைகளை செய்து கொண்டும், ஜெயா இருந்தாள். மந்திரங்களை எண்ணிக்கொண்டும், ஜெயாவை விரட்டிக் கொண்டும். பிஷிமா தன்னை ரொம்ப ‘பிசி’யாக வைத்துக் கொண்டாள். சவுத்ரி மோசை பணத்தை எண்ணியே பொழுதை போக்கி வந்தார்.

என்னைப் பார்த்ததும், ஜெயாவுக்கு சந்தோசம் கரை புரண்டு ஓடியது. தனதுபின்னங்கையால். வியர்வை துளிர்த்திருந்த முன்னந்தலையில் சலிந்து விழுந்த முடிக்கற்றையை தள்ளி விட்டுக்கொண்டாள். “நீ எப்பண்ணா வந்தே? அப்பா எப்படியிருக்காங்க? அப்பா கூட, கூகூக்கு உடம்பு சரியல்லைனு எழுதியிருந்தாங்க.. இப்ப அவ எப்படி இருகக்கா?” என்று விசாரித்தாள். அவள் எனது முகத்தையே ஒரு உக்ஷணம் நோக்கிக் கொண்டிருந்தாள். – “அண்ணே, நீ
ரொம்ப மெலிஞ்சு போயிட்டே.. ஒழுங்கான நேரத்துக்கு சாப்பிடுறதுல்லை, தூங்கிறதுல்லைனு நினைக்கிறேன். இப்படி இருந்தா அப்படிதான் ஆகும்..உங்கிட்டே எந்த ஒழுங்கும் கிடையாது. நீ எப்படி விரும்பிகிறாயோ அப்படி இருந்தா, நான் சொல்றதை இப்பவே குறித்துக் கொள். நீ சீக்கிரமே உடம்பு சரியில்லாம படுத்துடுவே..”.

என்னைவிடவும் அவள்தான மெலிந்தும் சலிந்தும் கிடந்தாள். என்னை விடவும் சீக்கிரமாயும் நிச்சயமாயும் அவள்தான் சாகக் கிடக்கிறாள். ஆனால் நான் அதை அவளிடம் சொல்லவில்லை.

ஜெயா தனது குடும்பத்து செய்திகளை தெரிந்து கொள்வதில் ஆர்வமாய் இருந்தாள். பால்கனியின் ஒரு மூலையில் மரஅடுப்பு ஒன்று இருந்தது. ஊதுகுழல் மூலம் அடுப்பை பற்ற வைத்து தேநீர் போட முயன்று கொண்டிருந்தாள். அப்படியே தனது தோழியர்கள் குறித்தும் வீட்டுநிலைகள் குறித்தும் விசாரித்தாள். நானும் பக்கத்தில் உள்ள ஸ்டூலில் உட்கார்ந்து எனக்கு தெரிந்த பதில்களை சொல்லிக் கொண்டிருந்தேன்.

சவுத்ரி மோஷி அப்போது உள்ளே வந்தார். தேநீரை குடிக்கும் போது அரசியல் பேசினார். அவர் இன்னும் கொஞ்சம் நேரத்திற்குள் ஏதோ ஒரு தொலைநேர கிராமத்திற்கு போகப் போகிறாராம். “நல்லவேளை, இந்த நேரம் பார்த்து நீங்க வந்தீங்க. இல்லைனா வீட்லே ரெண்டு பொம்பளைகளும் தனியாதான் இருக்க வேண்டி இருந்திருக்கும்” என்றார். அவர் அடிக்கடி இப்படி சில நாட்களுக்கு வெளியே போக வேண்டி வருமாம். அப்பல்லாம் இந்தப் பெண்கள் வீட்டில் தனியாத்தான் இருப்பார்களாம். போவதற்கு அவர் ஒரு கேன்வாஸ் பையை வைத்திருந்தார்.

அவர் போன பிறகு நான் ஜெயாவை நோக்கி கேள்வி மேல் கேள்வி கேட்டேன்.

சவுத்ரி மோஷி குடிப்பதை வழக்கமாய் கொண்டவராம். சில சமயங்களில் அவர் குடிபோதையில் மிதப்பதும் உண்டாம். பிஷிமாவும் ஜெயாவை கோபித்துக் கொள்வாளாம். அவள் சொல்வதைக் கேட்டால், அவள் அனுபவிப்பதை எதனுடனும் ஒப்பிட்டுக் கூட பார்க்க முடியாது – ஒவ்வொரு முறையும். பிஷிமா ஜெயாவின் தந்தைவீட்டு வறுமை நிலையை சுட்டிக்காட்டி, பகடி செய்வாளாம். இந்த சில மாதங்களிலேயே ஜெயா பாடாய் பட்டுப் போனாள். தீடிரென என்னை திரும்பிப் பார்த்தவள், அப்படியே உறைந்து போனாள். எனது நாடி இறுகிக்
கொண்டே போனது.

பிறகு அவள் மற்ற விசயங்களை பேசினாள். வீட்டைப்பற்றி. எனது வேலையைப் பற்றி என்று என்னன்னவோ கேட்டாள். மெள்ள இருட்ட ஆரம்பித்தது. ஜெயா சமையல் செய்ய சென்றாள். நான் மட்டும் தனியே உட்கார்ந்திருந்தேன். இங்கு மொத்தமுமே எவ்வளவு பயங்காரமாயும். பயமுறுத்துவதாயும் உள்ளது. இவ்வளவு இனிமையான ஒரு பொண்ணை எப்படிதான் இப்படி நோக அடிக்க முடிகிறது என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியலை. நான் உள்ளுக்குள் கொதித்துப போனேன். எழுந்து மேலும் கீழும் நடக்க ஆரம்பித்தேன்.

ஜெயாவின் கல்யாணத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு ஞாபக்திற்கு வந்தது. நான் அந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததற்கு அதுதான் போதுமான முதல் காரணமாகும். சவுத்ரி மோஷியின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டாளாம். இப்ப எனக்கு புரிகிறது. அந்த அம்மாள் ஏன் தற்கொலை செய்து கொண்டாள் என்று. அவள் ஒரு நொடி முட்டாள்தனத்தால் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டாள் என்று எங்களுக்கு சொல்லப்பட்டது.

இந்த கொடுமையை எதனுடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. இதைவிடவும் எதாவது கொடுமை இருக்குமா என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கொஞ்ச நேரத்திற்கு பிறகு. ஜெயா இருந்த இடத்திற்கு நான் சென்றேன். பிஷிமாவை அங்கு காணோம். கடவுளுக்குதான் அவள் எங்கு போய் தொலைந்தாள் என்று தொரியும். நான் காலில் செருப்பு போடாமல் வந்ததால், நான் உள்ளே வந்ததை ஜெயா உணரவில்லை. அவளது பின்புறம் எனக்குத் தொரிய, அவள் சமையல் செய்வதில் மும்முரமாய் இருந்தாள். நான் அவளிடம் இன்னொரு கேள்வியும் கேட்க வேண்டியிருந்தது.. அதை நான் மறந்து விட்டேன். திடீரென் சவுத்ரி மோஷி காலை நொண்டி நடப்பது ஞாபகத்திற்கு வந்தது.

சமையலறை ஈரம் படிந்து. தூசு படிந்து கிடந்தது. எங்கும் சிலந்தி வலை படர்ந்திருந்தது. விளக்கின் துடிக்கும் ஒளி ஜெயாவின் நிழலை சுவாரில் நடுங்கவைத்தது. அவளது பின்புறத்தின் ஒருபகுதி மூடப்படாமல் இருந்தது. அதில் சிராய்ப்பு இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது.

“என்ன இது ஜெயா?” என்று கேட்டேன்.

திடுகிட்டு எழுந்து கொண்ட அவள். என்னை திரும்பிப் பார்த்தாள். துரிதமான உக்ஷணத்தில். அவளது நிலைகுத்தி போயிருந்த அவளது பார்வை வருத்தம் தோய்ந்ததாய் இருந்தது. அவள் ஜெயா மாதிரியே இல்லை ஒரு நொடிக்குள் அவள் தனது சுயத்துக்கு பழைய ஜெயாவாக திரும்பினாள்.”ஓஸா நான் திடீரென வந்து கேட்டதில் பயந்தே போயிட்டேன்.. ஓ இதுவா? இது ஒண்ணும் அப்படி பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லை…”

“என்ன முட்டாள்தனமா பேசறே? நான் உன் சிராய்ப்புகளைப் பார்த்தேன…”

ரொம்ப சமாதானப்படுத்திக் கேட்டப்பிறகு. எல்லாம் வெளியே வந்தது. சவுத்ரி மோஷி ராத்திரி குடிச்சிட்டு வந்து, அடிக்கடி அவளை தனது பூட்ஸ் காலாலேயே மிதிப்பாராம்..

ஓப்ப்ஸா எனக்கு உணர்ச்சி ஓட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், தலை சிலர்த்துக் கொள்ள ஆரம்பித்தது. என்னுள் ஒரு அந்தகாரம் அப்படியே கவ்விக் கொண்டது….

ஜெயா எழுந்து கொண்டு தனது சேலையை ஒழுங்குப்படுத்திக் கொண்டாள்.

இதற்கு முன்பு இதை நான் கவனிக்கவில்லை. துடிதுடிக்கும் விளக்கின் வெளிச்சத்தின் சரிவு கோணம். நிழலை பரப்பி நின்றதால். சரியாய் எதையும் கவனிக்க முடியலை. ஆனால் இப்ப எல்லாம் தெளிவு. நான் கோபத்தில் துடித்தாலும், எனது உணர்வின் கட்டுப்பாட்டை இன்னும் இழக்கவில்லை.. எனக்கு தெளிவாக தெரிந்தது.. ஜெயா கருவுற்று இருக்கிறாள்.

எனது மனத்தில் எழுந்த கேள்விகள் மெள்ள அமரத் துவங்கின. இதைப்பற்றி நான் ஜெயாவிடம் கேட்க வேண்டிய அவசியம் கூட இல்லை.. அவள் கரை படிந்து நின்றாள்.

காட்சி துலாம்பரமாய் தெரிந்தது. அந்த துடிதுடிக்கும் சிவப்பு விளக்கு வெளிச்சத்தில். எல்லாம் அப்படியே ஸ்தம்பித்து நின்றன. நான் ஜெயாவின் மெல்லிய கரம் என்மேல் படுவதை உணர்ந்தேன். மரஅடுப்பில் காய்கறி கறி காpயாய் தீய்ந்து விட்டது என்று நினைக்கிறேன். தீய்ந்த வாசனை எங்கும் பரவியது. அந்த வாசனை சுற்றி சுற்றி என்னை துரத்திக் கொண்டு வந்தது. ஆக்ஸா ஆம். நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஓஸா நான் ஜெயா சொல்வதை கேட்டேன. “நானே எனது வழியை கண்டுப்பிடித்து விட்டேன்.. நான் அப்பாவால்
பயிற்றுவிக்கப் பட்டவள் என்பது உனக்குத் தொரியும். எப்படி என்னை கட்டுப்படுத்துவது என்பதுவும். எப்படி எனது அமைதியற்ற மனதை அமைதிப் படுத்துவது என்பதுவும் எனக்குத் தெரியும்.. அப்பா எனக்கு கீதையையும், வேதாந்தங்களையும், உபநிதங்களையும் கல்யாணப் பரிசாக தந்தார். இந்த எல்லா அவமாங்களையும். என்னால் அமைதியாக ஏற்றுக் கொள்ள முடியும். உண்மையில் இதைதான் நான் செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் உன்னை பார்த்தும்தான், எனது தாக்குப்பிடிக்கும் தன்மை தோற்று விடும் போல் தோன்றுகிறது.. ஆனாலும் இதெல்லாம் ஒண்ணுமில்லை.. எல்லாம் தற்காலிகம்தான்…”.

ஒற்றை மூச்சில், சன்னமான மெல்லிய குரலில் நான் சொன்னேன். அந்த வார்த்தைகள் இன்னும் ஞாபகம் இருக்கிறது. “என்னோடு வந்துடு ஜெயா… நாம் எனது இடத்திற்கு போய் விடுவோம்…”

“அது மட்டும் முடியவே முடியாது, ஜெயா தடுமாற்றமான குரலில் பதில் அளித்தாள். “அது முடியவே முடியாது. நான் அப்படி செய்தால், என்னை விட்டு வைக்க மாட்டார்கள். முடியாது. எப்படி இருந்தாலும், இது எனது மாமியார் வீடல்லவா?”.

“எனக்கு சவுத்ரி மோஷியை கொலை பண்ண வேண்டும் போல் தோன்றுகிறது..”

“அப்படி சொல்லாதே அண்ணா.. என்னை விதவை கோலத்தில் பார்க்கவா நீ விரும்புகிறாய்?”

எனக்குள் கவலை பீடிக்க ஆரம்பித்தது. எனது கோபம் எல்லாம் கரைந்து போய்விட்டது.

நான் ஒரு மிருகம் மாதிரி யோசித்துக் கொண்டிருந்தேன். அவளால் என்ன செய்ய முடியும்?

“அப்படி என்றால், நீ தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும். வேற வழியே இல்லை”. ஜெயா பயந்து, பின்னால் போனாள். அவளது பெரிய துக்கம் படிந்த கண்கள், என்னை ஊடுருவி பார்த்தன.

“தற்கொலை செய்து கொள்வது பாவம்”.

நான் சிரித்தேன்… “ஏன்?”.

“ஒருவரது சேவை எப்போது தேவைப்படும் என்பது அந்த ஒருவருக்கே தெரியாது…”

“யாருக்கு செய்யும் சேவை?” நான் சிரிப்பில் வெடித்து விடுவது போல் ஆனேன்.

“உன்னையும் கூட, அப்பாதான் பயிற்றுவித்தார். ஆனால் நீ உனது அன்றாட வாழ்க்கைக்கு உனது அறிவை பயன்படுத்துவதில்லை…”

உண்மைதான்.. நான் எனது அறிவை அனுபவரீதியாக பயன்படுத்துவதில்லை. கொஞ்சம் கூட பயன்படுத்துவதில்லை.. நான் மெள்ள அவளிடம் சொன்னேன்..
“இதிலிருந்து தப்பிக்க இன்னொரு வழியும் உள்ளது”

நான் ஜெயாவின் அருகில் சென்றேன்.. அவளுக்கு நான் என்ன செய்ய போகிறேன் என்பது சுத்தமாக புரியவில்லை. அவளது கழுத்து ரொம்ப மென்மையானது. மெல்லிசாய். குளிர்ந்து போய் இருந்தது. அவள் அனுபவித்து வரும் துக்கம் வலி எதனாலும் அவள் கழுத்து பாதிக்கப் பட்டிருக்கவில்லை. நான் பெரிய அளவு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. எனது நீண்ட விரல்கள் அப்படியே பிடித்து…….

அவள் என்னை குழப்பமடைந்து பார்த்தாள். அவளது நகங்கள் எனது கைகளில் பதிந்து விட்டது. பாருங்கள். அதன் தடங்கள் இன்னும் தெரிகிறது…

எனக்கு ஒரு தம்ளர் தண்ணீர் தயவு செய்து கொடுங்கள். இன்ஸ்பெக்டர்?

ஆமாம். ஜெயா இறந்து விட்டாள். எனக்கு எல்லா உணர்வுகளும் போய்விட்டது. நான் அந்த அறையை விட்டு. அவளது உயிரற்ற உடலை சுமந்து கொண்டு வெளியே வந்தேன். எங்கே இந்த பிஷிமா ஒழிந்தாள்? தெரியவில்லை..

நான் செய்தது சரியா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதுதான் அவள் சந்தோசமாயும். புனிதமாயும் விடுதலை அடைய ஒரே வழி. குறைந்தபட்சம் நான் அப்படிதான் நினைத்தேன்..

திடீரென எனக்கு வாழவேண்டும்னு விருப்பம் வந்துவிட்டது. ஆகவேதான் நான் வெளியே வந்தேன். அங்கேயே சுற்றித் திரிந்து, அந்த வீட்டை திரும்பிப் பார்த்தேன். திடீரென அந்த வீடும், பால்கனியும், முற்றமும் வெளிச்சமும், நிழலும் நிரவிக் கிடக்கும் சியாரகுரோ சித்திரம் போன்ற ஒரு பேய்வீடாக மாறிவிட்டது போல் தோன்றியது. கைவிடப்பட்ட சுடுகாடு போல் அது காட்சியளித்தது.

நான் ஜெயாவை ரயில்வே வைனுக்கு தூக்கிச் சென்றேன். ஏதாவதொரு ரயில் ஏதாவது ஒரு சமயத்தில் இங்கு வந்துதான் தீரவேண்டும்.

ராத்திரியில், உங்களுக்கு பழக்கம் இல்லாத ரெயில்வே டிராக்கில். உங்களின் பிரியத்துக்கு உரிய ஒருவரின் செத்த உடல் மடியில் கிடக்க, காத்துக் கிடந்த அனுபவம் உங்களுக்கு உண்டா. இன்ஸ்பெக்டர்? நான் கிடந்தேன்.. நான் அப்போது எப்படி உணர்ந்தேன்ங்றதை இப்ப சொல்றேன்.

கறுப்பும் நீலமுமான வானம் சிலேட்டுக்கல் போல் தோன்றியது. வானத்தில் வரிசையாய் மிதந்து கொண்டிருந்த வெள்ளை மேகங்கள் அந்தரத்தில் மறைந்து போயின. நிலா இன்னும் ஒளிர ஆரம்பிக்கவில்லை. ஆனால் ஒருகட்டம் வரைக்கும் நட்சத்திரங்கள் எழுப்பும் மங்கிய ஒளியை மட்டும் காண முடிந்தது. ஒரு பக்கத்தில் இருண்ட, இலைகள் அற்ற, பப்லா மரம் தனது பட்டுப்போன கிளைகளுடன் நின்று கொண்டிருந்தது. பக்கத்தில் உள்ள, கழிவுநீர் கால்வாயில், தண்ணீர் கறுப்பு மசி போல கட்டிப்போய் கிடந்தது. ரெயில்வே லைன் தூரத்தில் இரவின் இருண்மையுடன் கலந்து போயிருந்தது. ஆனால் டிராக்கில் படிந்திருந்த பனித்துளிகள் மிளிர்ந்துக் கொண்டிருந்தன. ஏதோ தெளிவற்ற சத்தங்கள் தூரத்தில் இருந்து கேட்க முடிந்தது. குளிர்ந்த தென்றல் வீசிக் கொண்டிருந்தது.

நான் ஜெயாவின் கண்களை மு்டினேன். என்னை நம்புங்கள். பயத்தினால் மிரண்டு போயிருந்த, ஆச்சரியப்பட்டு போயிருந்த அவள் பார்வை சமனம் அடைந்திருந்தது. அவள் நாக்கு கூட வெளியே தொங்கிக் கொண்டிருக்கவில்லை. என்ன. அவளது நுண்மையான கழுத்து கொஞ்சம் வீங்கிப் போயிருந்தது. நான் எனது கைகளை அவள் முன்னம் நெற்றியில் மென்மையாக வைத்து வருடி விட்டேன். அவள் தூய்மையாகவும், திருப்தி அடைந்தவள் போலவும் காணப்பட்டாள். எண்ணெய் இல்லாமலும். போதுமான பராமரிப்பு இல்லாமலும். அவளது தலைமயிர் கலைந்திருந்தது. அவளது உச்சியில் உள்ள குங்குமத்தை நான் கலைத்து விட்டேன். அது அவளுக்க பொருத்தமாய் இல்லை. கலைத்த பிறகுதான். அவள் அழகுடன்
மிளிர்கிறாள். இப்போது ஜெயா கல்யாணம் ஆகாதவள். ஆமாம் நல்லதுக்கும் சிறந்ததிற்கும் உதாரணமாய் திகந்த ஒருத்தி…

…..நான் உட்கார்ந்து இருக்கும் வரை, சந்தோச நினைவுகள் என்னுள் வெள்ளம் போல் பெருக்கெடுத்து வந்தது. ஒன்றன் பின் ஒன்றாக நான் பல சம்பவங்களை நிளைத்துக் கொண்டேன். மேலே நட்சத்திரங்கள் நிளைந்த ஆகாயம் உலகத்தை சுற்றி அருமையான காட்சியாக அமைந்திருந்தது. ஜெயாவின் தலை என் மடி மேல் கிடக்க நான் அங்கு உட்கார்ந்திருந்தேன். நேரம் பறந்து கொண்டிருந்தது. அந்த சுற்றுசூழலின் அமைதியை யாரும் கெடுக்கவில்லை.

கொஞ்ச நேரத்திற்கு பிறகு சந்திரன் மெள்ள வெளியே வந்து. அதன் சஞ்சாரித்தது. அப்போது. கிழக்கு வானத்திற்கு வெளிச்சம் தந்தது. வடக்கே தூரத்தில். ரயில் ஒன்று வருவது வெளிச்சத்தின் மூலம் தெரிந்தது. நான் ஜாக்கிரத்தையாக ரெயில்வே லைனை நோக்கி நடந்தேன். ஜெயாவின் அசைவற்ற உடலை டிராக்கில் கிடத்தினேன். அவளது நெற்றியை பாசத்துடன் வருடிக் கொடுத்தேன்.

லைன் அதிரத் தொடங்கிய போது, அவளை கடைசி முறையாய் தொட்டு விட்டு, பாப்லா மரத்தின் அருகில் போய் நின்று கொண்டேன்.

தாரோகபாபு. ரயில் விஸ்ஸென எனக்கு முன்னால் கடந்து சென்ற பின்பு, நான் உள்ளுக்குள் சாரமற்று போனது போல் உணர்ந்தேன். மொத்தமாய் சிந்தனையற்று, அறிவற்று கிடப்பது போல் எண்ணம். எங்கும் எதுவும் இல்லாதது போலிருந்தது. ஜெயாவின் உடல் மு்ன்று துண்டாய் பிய்த்து எறியப்பட்டிருந்தது. திகைப்படைந்து, ரெயில்வே டிராக்கை ஒட்டி, ஸ்டேசனுக்கு நடந்தேன். எவ்வளவு நேரம் அப்படியே அங்கு உட்கார்ந்திருந்தேன் என்று எனக்கேத் தெரியாது. ஸ்டேசனுக்கு மறுபக்கம். ரெயில்வே கம்பெனி குவார்டர்ஸ். சாய்வாய்க விழுந்த புதியநிலவாவின் ரேகையினால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. மெள்ள, ரெயில்வே பிளாட்பார்மில் ஒரு கூட்டம் கூடியது. நானும் எழுந்து, ஒரு மூலையில் நின்றேன். அங்கேயும் தீய்ந்த வாசனை அடிக்கிறதா? குவார்டஸில் இருந்து அது வருகிறதோ இல்லை, அங்கிருந்து எப்படி வர முடியும்? எனது தலை அந்த தீய்ந்த வாசனையால் உருளுவது போலிருந்தது.

கொஞ்ச நேரத்திற்கு பிறகு, ஒரு ரயில் பெரும் சத்தத்துடன் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. கொல்கத்தாவுக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டு. நான் அதில் ஏறிக் கொண்டேன். நான் வீட்டிற்கு போக விரும்பவில்லை. உறாரிசன் ரோட்டில் எனக்கு தெரிந்த ஒருவரிடம் இருந்து எப்படியாவது ஒரு கடத்தப்பட்ட துப்பாக்கியை வாங்க வேண்டும். எந்த தகிடுதனம் பண்ணியாவது என்னால் சவுத்திரியின் பலத்துடன் சமதையாக நிற்க முடியாதுதான்….ரோட்டுக்கு அந்தப்பக்கம் இருப்பது உங்க வீடா. இன்ஸ்பெக்டர்? ரொம்ப அழகா இருக்கு.

என்ன? அதற்கு பிறகா? … நீங்க என்னை ரணாகாட்டில் கைது செய்துள்ளீர்கள். என்னை ஒரே ஒருமுறை போக உங்களால் அனுமதிக்க முடியுமா? கொஞ்ச நேரத்துக்கு.. நான் சவுத்தியை எதிர்கொள்ள விரும்புகிறேன். அந்த மிருகம்.. தனது இளமையின் வேகத்தில். கண்ட நோயையும் தனக்குள் வாங்கிக் கொண்டான். அந்த மோசமான நோய் அவனை தொற்றிக் கொண்டது. அது கடுமையான தொற்று நோய். அவன் அதை தன் மனைவிக்கு தொற்ற விட்டிருக்கிறான். விளைவாய் நான் அக்கறை எடுத்துக் கொள்ளும், அவனது வம்சம் குறைபாட்டுடன்தான் பிறக்க முடியும். முடிவாய் ஜெயா தனது வாழ்க்கை முழுதும் துன்பப்பட்டு சாகவேண்டியதுதான். சவுத்ரிக்கு தனது நோயைப் பற்றி தெரியும். அதன் விளைவுகள் குறித்தும் தெரியும். என்னை மட்டும் ஒரு ஷணம் போக நீங்கள் அனுமதித்தால், நான் எனது ரிவால்வரில் உள்ள அத்தனை ரவைகளையும் காலிச் செய்து அவனை கொன்று தீர்ப்பேன்.. முதலில் அவனது கால்களில் சுடுவேன். பின்னர் கைகளில். பின்னர் முதுகில். அதற்கு பிறகு நெஞ்சில் என்று சுட்டு தீர்ப்பேன்…. ஆனால் நீங்க யாரும் என்னை போக அனுமதிக்க மாட்டீர்கள்..

அவனை கொல்வது எதையாவது சாதிக்க பயன்படுமா? இருந்தாலும் அவனை கொல்ல வேண்டும். இல்லையென்றhல். நான் எதையும் நிறைவேற்றியதாக ஆகாது. ஜெயாவை கொன்றதன் மூலம், நான் பாவம் செய்து விட்டேன். ஜெயாவை போல் எக்கச்சக்கமான பெண்கள் இருக்கதான் செய்கிறார்கள். அது போலவே சவுத்ரியை போன்ற காட்டுமிராண்டிகளும் இருக்கிறார்கள்..

உண்மையிலேயே நான் பாவம் செய்து விட்டேனா? எனது அப்பாவிற்கு திடீரென வேலை பறிபோனதும், அவர் பைத்தியமாகி, கஷ்டப்பட்டு வந்தார். இதுவும் தொரிந்தால், நிலைக்குத்தி போயிருப்பார்.

நான் ஜெயாவை அந்த கடுமையான நரக வேதனையில் இருந்து காப்பாற்றினேன். சமயலறையில் தெரிந்த அவளது நிலைகுத்தி போயிருந்த பார்வை எனக்கு எனது தந்தையின் முகத்தை அப்படியே ஞாபகப் படுத்தியது…..

எனக்கு தெரியும், நான் தூக்கிலிடப்படலாம். ஆனால் அது எப்போதும் குறடை வைத்தக் கொண்டு, மென்னியை நெறிப்பது போன்ற வலிக்கு ஈடாகுமா?

நான் நல்ல உடலநிலையில் தற்போது இல்லை.

ஆகவே மேலும் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை..

ஓ! இன்ஸ்பெக்டர்!! உங்கள் வீட்டிலிருந்து ஏதோ கெட்ட தீய்ந்த நாற்றம் வந்து கொண்டிருக்கிறது.. ஆமாம். அது காய்கறி தீயும் வாசனைஸா சீக்கிரம் போங்கோ!!!

வங்காளத்தில்: ரித்விக் ஹடக்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *