மன்மதப் பாண்டியன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 2,523 
 
 

(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-38

அத்தியாயம்-31 

வீரசேனன் குனிந்து கொண்டு நிற்க.

அதிவீரனுக்கு என்ன நடந்தது என்பது ஊகமாகி விட்டது. 

“வீரா! வீரா!” என்று அவனை அழைத்தார். கலங்கிய கண்களுடன் அவன் நிமிர்ந்து பார்த்தான். “பிரபு! தப்பு நடந்துவிட்டது. வீரியம் போலப் போனேன். தோல்வி கண்டேன்!” என்றான். 

துள்ளி எழுந்தான் அதிவீரன்! 

“அப்போது அந்தப் பெண் என்ன ஆனாள்?” என்று கேட்டான். 

“அவர்களிடம் சிக்கி இருக்கிறாள். அவளை தஞ்சாவூர் கொண்டுபோகிறார்கள்!” என்றான். வீரசேனன். 

அதிவீரனுக்கு மனம் கொதித்தது. 

“இந்தா, தர்மசேனா, வீரசேனா இரண்டு பேரும் கிளம்புங்கள்! உடனே நாம் அவளை விடுதலை செய்யணும்” என்று கூறினான், அதிவீரன். 

“சுவாமி! நில்லுங்கள்! நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்றான், தர்மசேனன். 

அதிவீரன் சற்றே திரும்பினான்.

“சுவாமி! அந்நிய ஊரில் இருக்கிறோம். நம்மிடம் படை கடையாது. கோட்டையை கூடப்பது வேறு கிடினம். பகலில் சில நாழிகை மட்டும் திறந்து வைத்திருக்கிறார்கள்.”

“இல்லை வீரசேனா தடுக்காதே! படை இல்லா விட்டால் போகிறது. நம் யுக்தியால் அவர்களை வெல்லப் பார்க்கலாம்! கிளம்பு அந்தப் பெண் தத்தளித்துக் கொண்டிருப்பாள்” என்றான், அதிவீரன். 

எல்லோரும் பாகை தரித்த வியாபாரி உருவில் கிளம்பினார்கள். 

கோட்டை திறந்திருந்த நாழிகையில் வெளியே வந்தார்கள். 

வடக்கு நோக்கி செல்லும் பாட்டையில் விரைந்து சென்றார்கள். 

பகல் சாயும் வரை அன்று பிரயாணம் செய்தார்கள்,

கடைசியில் அந்த பூசல் நடந்த இடத்திற்கு வந்தார்கள்.

“இங்கேதான் சண்டை நடந்தது!” என்றான், வீரசேனன். 

அதிவீரன் கீழே இறங்கிப் பார்த்தான். 

வீரசேனன் எல்லாவற்றையும் விளக்கினான்.

அதிவீரனுக்கு அவனை அறியாமல் கண்ணில் நீர் வந்தது. 

மங்கையை நினைத்துப் பார்த்தான். 

அவனது முகம் ஒரு கவிதை! 

கண்கள் இரண்டும் இரு சுறாக்கள்! 

ஒரு நீண்ட மூச்சு விடுத்தான். 

இவளை எந்த இனத்தோடு சேர்க்கலாம்.

இவளை அடைந்தால் அந்தக் கணமே சொர்க்கம் கிடைக்கும். 

”வீரசேனா! இந்த வழிதானே போயிருக்க. வேண்டும்? 

“ஆமாம் சுவாமி!” 

“வாருங்கள் போகலாம்! எப்படியும் அவளைப் பிடித்துவிடவேண்டும்!” 

அருமையான அரபிக் குதிரைகள். 

‘விர்’ என்று காற்றுக்குள் செலுத்தி ஓடின!

வைகையை கடந்து திருச்சி மார்க்கமாக சென்றார்கள்.

வழியில் விசாரணை செய்துகொண்டு போனார்கள்.

இரண்டு நாள் பிரயாணம் செய்தும் அந்தக் கும்பலைக் கண்டு கொள்ள முடியவில்லை. 

இரண்டாம் நாள் சாயங்காலம் சோர்ந்தது. அக்காள் மடம் என்ற சத்திரத்தில் நுழைந்தார்கள். 

சோர்வும் ஆத்திரமும் பீறிட்டு வந்தன. 

சத்திரத்து மணியக்காரரை விசாரணை செய்தார்கள்.

“தஞ்சாவூர் போகணும் என்றால் பல மார்க்கங்கள் உள்ளனவே. எதைப் பிடித்துப் போனார்களோ!” என்று சொன்னார். 

தவிரவும், “இப்போது இங்கே படை நடமாட்டம் வேறு அதிகமாக இருக்கிறது. எங்களுக்கே பயமாக இருக்கிறது! யார் யாருடைய படை என்று தெரியவில்லை. விஜயநகர ராஜ்ஜியம் அழிந்தாலும் அழிந்தது! தலைக்குத் தலை பூமியை ஆள வந்துவிட்டார்கள். கலிமுற்றிவிட்டது. அவ்வளவுதான் சொல்வேன்!” என்றார். 

“எந்தவழி போனார்கள் என்பது தெரியாமல் தேடிப் போவது சரியல்ல!” 

நாட்டைவிட்டு வெகுதூரம் வந்தாகிவிட்டது. 

அங்கே என்ன நடக்கிறதோ! 

வீரபாளையக்காரர் அங்கேயும் ஏதாவது செய்கிறாரோ! 

யோசித்துப் பார்த்தால் வீரபாளையக்காரர் தாமாக நின்று இந்தக் காரியங்களை செய்யவில்லை என்று படுகிறது. 

அவருக்குப் பக்க பலமாக இன்னும் பல பாளையக்காரர்கள் இருக்க வேண்டும். 

எல்லோரும் மதுரை நாயக்கர் ஆட்சியை வெறுக்கிறார்கள் 

‘தெலுங்கர்’ ஆட்சி என்று நைச்சியம் செய்கிறார்கள்.

தான்தான் தனி ராஜ்ஜியமாக இருக்கவேண்டும், என்று நினைக்கிறார்கள். 

இவர்கள் இப்படி வேறுபட்டக் கருத்துக்கள் வைத்திருப்பதனாலதான் கடற்கரையில் பரங்கியர் புகுந்து விட்டார்கள். இவர்கள் தங்கள் தீய பழக்க வழக்கங்களை நாட்டில் பரப்பி வருகிறார்கள். 

இவ்வாறு சிந்தனை வசனாய் இருந்த அதிவீரனிடத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. 

நாடுகள் எங்கிலும் என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது. 

“வா! தர்மசேனா, வீரசேனா? நாம் இனி இங்கே. அரைக்கணமும் தங்கக்கூடாது! உடனே மதுரை திரும்புவோம்!” என்றான். 

சிறிதுகூட ஓய்வு எடுக்கவில்லை. மீண்டும் தெற்கு நோக்கிப் புறப்பட்டார்கள்.

மறுநாள் மாலைக்குள் மதுரை அடைந்தார்கள்.

நல்லவேளை கோட்டைக் கதவு திறந்திருக்கும் நாழிகைக்குள் போய்விட்டார்கள். 

உள்ளே சென்று, கங்கை கொண்டான் சத்திரத்தில் போய்த் தங்கினார்கள். 

இப்போதுதான் அதிவீரனுக்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. 

இனி என்ன செய்ய? 

தெற்கே தனது தலைநகருக்குச் சீக்கிரம் திரும்பி விட வேண்டும். 

அதற்குமுன் மதுரை மன்னரைப் பார்த்து விஷயங்கள் பேசவேண்டும். 

மதுரை மன்னருக்கு அவன் நல்ல சிநேகிதன்! 

ஆனால், அவன் வத்திருப்பதைக் கூட அவருக்கு இன்னும் அறிவிக்கவில்லை. 

மாறுவேடத்தில் வந்தால் அவரைப் பார்க்காமலே திரும்பிவிடலாம் என்று நினைத்தான். 

ஆனால், இப்போது சூழ்நிலைகள் உருவாகி இருப்பதைப் பார்த்தால் நிச்சயம் அவரிடம் பேசி ஆலோசனை பெற்றுப் போகவேண்டும் என்று தோன்றியது. 

”வீரசேனா! இன்று இரவு நாம் நாயக்கரைப் பார்க்கிறோம்! ஏற்பாடு செய்” என்றான். 

“நல்லது சுவாமி! செய்கிறேன்! மன்னரைப் பார்ப்பதானால் ஏதாவது பரிசில் வாங்கவேண்டும்!” என்றான். வீரசேனன். 

“என்ன பரிசில்! முத்து, பவளம் ஏதாவது இருந்தால் வாங்கிப்போகலாம்!” 

“அப்போது இரவு அங்காடிக்குப் போக வேண்டியது தான்!” என்றான். வீரசேனன்; 

அங்காடிக்குப் புறப்பட்டார்கள். 

கடைகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வரும்போது ஒரு கணீர் குரல் அதிவீரனின் கவனத்தை அவசரமாக இழுத்தது. 

சடக்கெனத் திரும்பிப் பார்க்க, அவன் கண்கள் படபடத்தன. 

அந்தக் கணீர் குரலில் பேசிய பெண் அவனைத் திரும்பிப் பார்த்தாள். 

இருவர் கண்களும் மோதிக்கொண்டு லயித்தன.

அந்தப் பெண் தனது கண் மூலம் நுட்பமாக எச்சரிப்பது தெரிந்தது. 

அவனது அல்லிக்கொடியை அதிவீரனால் கண்டு பிடிக்க முடியாதா என்ன? 

அல்லிக்கொடி அந்த இடத்தைவிட்டு அகல்வதை ஓரக்கண்ணால் உணர்ந்து, 

அவள் சிறிது தூரம் சென்றபிறகு அவன் நன்றாகத் திரும்பிப் பார்த்தான். 

அவள் அருகில் வந்து போகும் அந்த வாட்டசாட்ட பிரயாணிகள், உண்மையில் காவலர்கள் என்பதைப் புரிந்து கொண்டான். 

அந்தக் கணமே அவன் செயலிழந்து நிற்க, 

“சுவாமி! இது என்ன? வந்த காரியத்தை மறந்து..” என்றான் வீரசேனன். 

”வீரா! அதோ ஒரு பெண் போகிறாளே, யார் என்று தெரியுமா?” என்றான் அதிவீரன்.

“யார் அது” 

“அல்லிக்கொடி!”

“அப்படியா?” 

”ஆமாம்! அதனால் தவித்து நிற்கிறேன்!” 

“இருக்கட்டும் சுவாமி! இப்போது நமக்கு இருக்கும் நெருக்கடிகள் பலவாகிவிட்டன. இப்போது நேரம் தாழ்த்துவது நமக்கு நிறைய சங்கடங்களை விளைவிக்கும்!. எனவே உடனே நாம் காரியங்களைக் கவனித்தாக வேண்டும்! வாருங்கள். நீலக்கல் அல்லது சிவப்புக்கல் வாங்குவோம். மன்னரைப் பார்த்தாக வேண்டுமே” 

“இல்லை வீரா! இப்போது அவள் எங்கே போகிறாள் என்பதைக் கவனிக்க வேண்டுமே!” என்று பரபரத்தான் அதிவீரன். 

“அப்போது நாயக்கரைச் சந்திக்க வேண்டாமா?” என்றான் வீரன். 

“அதை அப்புறம் வைத்துக் கொள்ளலாமே!”

திடுக்கிட்டான் வீரன். 

“சுவாமி! தாங்களா அப்படிச் சொல்கிறீர்கள்?” 

“கவனி வீரா! நாம் தேடி வந்தது அல்லிக்கொடியைத்தான். அவளை உடனே கவனியாமல்… வா! சீக்கிரம் அவளைப் பின்பற்ற வேண்டும்”. 

அதிவீரன் அதிவேகமாகச் செல்ல. வீரசேனன், தர்மசேனன் இருவரும் வெலவெலத்தார்கள். 

“மன்னர் இப்படி மாறி மாறி வெவ்வேறு காரியங்களில் இறங்குகிறாரே! இது எதில் கொண்டு விடுமோ?” என்று இருவரும் அங்கலாய்த்தார்கள். 

இருவரும் உடனே விறுவிறு என்று அதிவீரன் பின்னால் செல்லத் தலைப்பட்டார்கள். 

இருட்டு நேரம் அது! 

எங்கும் எண்ணெய் விளக்குகள் எரிந்து தெரு முழுதும் புகைப்படவங்கள். 

அதனூடே அவர்கள் நடந்து செல்ல, 

இருவர் கண்ணிலும் நிழல் போல ஓரத்தில் நகர்த்து வரும் உருவத்தின் மீது கவனம் விழுந்தது. 

அத்தியாயம்-32 

அல்லிக்கொடி அந்த இருட்டு நேரத்தில் தளுக்கான நடையிட்டு அங்கங்களை அபிநயித்துச் சென்றாள். 

இருட்டில் அதிவீரன் தன்னை அடையாளம் கண்டு கொண்டே வரவேண்டும் என்ற நினைப்பில்தான் அப்படிச் செய்திருப்பாள். 

தேர்முட்டியைத் தாண்டிய பிறகு தனக்குப் பாதுகாப்பாக வரும் பலசாலிகளை அழைத்துக் காதில் என்னவோ சொன்னாள். 

அவர்கள் அதன்பிறகு பின்னால் தொடரும் அதிவீரனிடம் அதிகம் கவனம் காட்டினார்கள். 

அதிவீரன் அதை உணர்ந்து அல்லிக்கொடி அப்படிச் செய்யமாட்டாளே என்று யாகம் பண்ணினான். 

பிறகு இது ஏதோ காரணத்திற்குத்தான் எனப்புரிந்து. அவனே பின்தங்கியும் அதே நேரத்தில் பின் தொடர்பை விடாமலும் இருந்தான். 

அவன் மெதுவாக ஆக, பலசாலிகளும் தயக்கங் தாட்டி அவன் தொடர்கிறானா என்பதைக் கவனித்துக் கொண்டே சென்றார்கள். 

சில சமயம் அவர்கள் சற்று நேரமாகக் கூட நிற்க வேண்டி வந்தது. 

அதிவீரன் மனதில் ஏதோ யுக்தி தோன்ற, ஒரு தெருவின் ஓரம் சென்றவன் அங்கேயே படி ஏறி நின்று விட்டான். 

அப்புறம் நடந்ததெல்லாம் வேடிக்கையாக இருந்தது.

பலசாலிகள் அவன் எங்கே போனான் என்பதைத் தேடி தெரு முனை வரை வந்து அவன் பதுங்கியிருப்பதைக் கவனியாமல் இன்னும் பின்னால் சென்றார்கள். 

ஆ இது சரியான தருணமாயிற்றே! அல்லிக் கொடி இப்போது தப்பியிருக்கலாமே என்று நினைத்தான். 

பின்னர் அந்த பலசாலிகள் திரும்பவும் அவனைக் கடந்து வந்த திசை போனார்கள். 

அந்த வீட்டுப் பருமனான தூண் அவனைக் காப்பாற்றிற்று என்று அதிவீரன் நினைத்தான். 

எனினும் அங்கே இன்னும் காத்திருக்க நினைத்தான். ஏதாவது தவறு செய்ய விரும்பவில்லை. அரை நாழிகை ஓடிற்று. 

“சுவாமி…சுவாமி” என்று மெல்லிய குரல் கேட்டது. பழகிய குரல் போல இருந்தது. 

எங்கோ உயிரைத் தொடுவது போல இருந்தது:

சட்டென்று திண்ணையிலிருந்து கீழே குதித்தான்.

தெளிவாக இப்போது கேட்டது குரல். 

ஆ.-இது- 

முன் நடையில் நின்று எட்டிப் பார்த்தான்.

அவன் அங்கே தன்னைக் காட்டிக் கொள்வதற்கும்,

அந்தப் பெண் அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது. 

சட்டென்று அவரை நோக்கி “சுவாமி!” என்றாள்.

“அல்லி!” என்றான் அவன். 

அடுத்த கணம் ஒரு சூறாவளி அவா ஒரு சூறாவளி அவனது உடலில் புகுந்திருக்க வேண்டும். 

பளீர் என்று தாவி அவன் முன்னால் நின்றாள்.

அவன்தானா என்று நிச்சயம் செய்து. சட்டென்று அவனை இறுகக் கட்டினாள். 

அவனுக்கு உணர்வுகள் வானளாவின. 

இரு கைகளையும் முறுக்குக் கயிறுகள் போலாக்கி இறுக்கித் தழுவினான். 

இருவரையும் அந்நேரத்தில் பார்த்தால் பொச்சக் கயிற்றில் கட்டப்பட்ட பொதி போல இருந்தார் 

வெகு நேரம் கழித்துத்தான் அவள் தனது பிணைப்பைத் தளர்த்தினாள். 

“சுவாமி! சுவாமி! நல்ல வேளையாகத் தப்பித்தேன்! சதிகாரர்கள் அவர்கள் உடனே இந்த இடத்தைவிட்டு அகல் வேண்டும்” என்றாள், 

அவளுக்கு அழுத்தமாக ஒருமுறை முத்தம் நல்கிய அதிவீரன். 

அடுத்து அவளுடன் புறப்பட்டு வெளியே வந்து இரு திசையும் பார்த்தான். 

யாரும் தென்படவில்லை. 

எச்சரிக்கை எடுத்து ஒவ்வொரு இடமாகத் தங்கி மாளிகையை அடைந்தார்கள். 

உடனே அவளை மேன்மாடத்திற்கு அழைத்துப் போனான் அதிவீரன். 

அங்கே அவனது. மதன சொரூபம் உண்டாகிய பெரிய தீ’ யாகப் பரவிவிட. 

அப்படியே அல்விக்கொடியைத் தூக்கி மஞ்சத்தின் மீது பூப் போன்று படுக்க வைத்தான், 

பிறகு மென்மையான அவள் நெஞ்சங்கள் மீது விரல்களைப் பரவளிட்டு, சிருங்காரத் தடவல்களில் ஈடுபட்டு அவள் உடலுக்கு ஊக்கம் கொடுக்க ஆரம்பித்தான். 

ஆனால், “சுவாமி! சுவாமி!” என்று அவள் இடைமறித்துக் கொண்டிருந்தாள். 

அதிவீரன் விடவில்லை. 

அல்லிக்கொடியை அனுபவித்து எத்தனை நாள் ஆகிவிட்டது. 

இப்போது பார்த்தால் இளமை திரும்பி கன்னிப் பெண் முதல் பருவம் அடைந்தது போல இருந்தாள். 

காலம் கடந்துவிட்டதால் புதுப் பெண்ணைத் தொடுவது போல் இருந்தது. 

இந்த மார்பகங்களா? இவைகளை முன்பு தொட்டது போல் நினைவு இல்லையே! 

அத்தனை புதுசாக இருக்கிறதே! 

இவை என்ன? 

இலந்தைப் பழம் போன்ற மேல் உச்சங்கள் இருக்கின்றனவே! 

விரிந்த குடைக்கு மேலே உள்ள பூண் போல மெருகு கொடுக்கிறதே, கைக்கு! 

“சுவாமி! சுவாமி! பொறுங்கள்! நான் சொல்வதைக் கேளுங்கள்!” என்றாள் அவள். 

“இல்லை! எனது பிரதம தாசியை இன்று ருசிக்காது விடுவேனா! நிச்சயம் மாட்டேன்!” என்றான் அவன். 

அவன் விடவில்லை! மென்மையான அந்தக் குலைகளை இதமாக துவைத்துவிட்டான். 

பிறகு அவசர அவசரத்தில் அவளது இலை போன்ற இடுப்பைக் கைகளால் பூசி, 

அவளது நாபியையும் மெல்லச் சுற்றிப் பரிமாறி,

பிறகு இடைக்குக் கீழே சல்லி வேர் போன்ற வளர்ச்சி எழுந்த படுகையில் விரல்களை விரவிக் கொண்டு போனான். 

இந்த முறை அவள், “சுவாமி!” என்று சொல்லி சடக்கென்று தரையில் குதித்துவிட்டாள். 

“என்ன என்ன” என்று பதறிக்கொண்டு அதிவீரன் கேட்க, 

“சுவாமி! பொறுங்கள்! நான் சபதம் எடுத்திருக்கிறேன்” என்றாள். 

“சபதமா!” 

“ஆமாம்.” 

“யாரிடம்? எதற்கு?” 

”என்னைச் சிறை வைத்திருந்தவர் யார் தெரியுமா சுவாமி?” 

“தெரியாது!” 

“கருமாணிக்கபுரத்தைச் சேர்ந்த வீரபாளையக்காரர்!”

“தெரியும் அல்லி!” 

“என்னை அவர் கேட்காத கேள்வி எல்லாம் கேட்டார்.” 

“என்ன கேட்டார்?” 

“உங்கள் மன்னன் ஸ்திரிலோலனா? எந்தப் பெண் கிடைத்தால் அவர் போரைக் கூடப் புறக்கணிப்பார் அவருக்குப் படை பலம் என்ன? யார் யார் உங்கள் மன்னருக்கு சிநேகிதர்கள் இப்படி எல்லாம் கேட்டார்.” 

“என்ன சொன்னாய்?” 

“நான் எதற்குமே மறுமொழி சொல்லவில்லை!”

“அப்புறம்?” 

“அவன் என்னை மானபங்கப்படுத்தப் பார்த்தான்!”

“அவ்வளவு துணிச்சலா அவனுக்கு?”

அதிவீரனுக்குக் கோபம் வந்திருந்திருந்தது.

“தங்களை அவமானப் படுத்த வேண்டும் என்று நினைக்கிறான். என்னை மானபங்கம் செய்வது மூலம்!”

“நீ என்ன செய்தாய்?” 

“என் அருகில் வந்தால் மண்டையை மோதி உயிர் துறப்பேன் என்று சொன்னேன். அதற்குப் பிறகுதான் அவன் சும்மா இருந்தான்.” 

“சபதம் ஏன் எடுத்தாய்?” 

“இரண்டாம் முறையும் மானபங்கப்படுத்த வந்தான். அப்போதுதான் சபதம் எடுத்தேன்! “இந்தா! என் அருகில் வந்தால் தரையில் தலையை மோதி இறப்பேன். நெருங்காதே என்னை! என் உறவு உனக்குக் கிடைக்காது! உனக்கு மட் டும் அல்ல! எங்கள் அரசர் உன்னை வாகை சூடி முடித்த பிறகுதான் நான் இனி போகத்திற்கே உடன்படுவேன். இது எங்கள் விசுவநாதர் சத்தியம்! என்று சொல்லிவிட்டேன்.” அதிவீரனுக்கு உடலில் பதட்டம் ஏற்பட்டது. 

“நன்று சொன்னாய், அல்லி” என்று வெறித்துப் பார்த்தான். 

கண்களுக்குள் ஒரு தீ எழுவது தெரிந்தது. 

அது சிவு சிவு என்று வளர்ந்து சிவப்புக் களறி ஆகிக் கொண்டிருந்தது. 

அவள் கைகளைப் பற்றினான். 

“இந்தா! அல்லி! நான் சபதம் எடுத்தால் என்ன? என் பிரஜையான நீ சபதம் எடுத்தால் என்ன? எலலாம் ஒன்றுதான் இனி உன்னை மோகத்துடன் தொட மாட் டேன். உன் சபதத்தை நிறைவேற்றி விட்டுதான் உன்னைத் தொடுவேன்!” என்றான் அதிவீரன். 

நீண்ட பெருமூச்சுகள் இழைத்துக் கொண்டு அவன் அந்தக் கணமே கட்டிலைவிட்டுக் கீழே இறங்கி. அப்பால் போய் மாடத்தில் உடகார்ந்தான். 

அல்லி அவனைப் பின்பற்றினாள். 

“சுவாமி! நான் செய்தது சரிதானே! அடியாள் மீது கோபம் இல்லையே?” என்று கேட்டாள் அல்லி. 

“நிச்சயம் இல்லை! நீ சரியாகத்தான் சபதம் செய்தாய்! இப்போது அதை நிறைவேற்றி வைப்பது என் பொறுப்பு” என்றான் அதிவீரன். 

மேலே வானம் நட்சத்திரங்களாகப் பரந்திருக்க. அவனது கட்டில் ஓரத்தில் அவன் அமர்ந்தாள். 

“சுவாமி! தங்களைக கொன்று தங்களது ராஜ்ஜியத்தை அபகரிக்க பலத்த சதி நடக்கிறது.” 

“யார் யார் இருக்கிறார்கள் இதில்?” 

‘தஞ்சாவூர் மன்னர்தான் இதற்குத் தலைமையானவர்”

“தெரியும்! மற்றவர்கள் யார்?”

“கொல்லம் ராஜா” 

“பிறகு…” 

“ஆறு பாளையக்காரர்கள்!” 

“அவர்களுக்குத் தலைமையானவர் யார்?”

“ஏன்? இந்த வீர பாளையத்தார்தான்!”

அதிவீரன் யோசித்து மவுனமானான். 

“எல்லோரும் சமயம் பார்த்து தென்காசி மீது படையெடுத்து உங்களை முடிப்பதாக இருக்கிறார்கள்”. 

“ஓ!” 

“நீங்கள் வெளியில் தலை காட்டுவதே ஆபத்து. இங்கே வந்திருப்பது அவர்களுக்குத் தெரிந்தாகிவிட்டது. உங்களை வேட்டையாடித் திரிகிறார்கள்.” 

சடக்கென்று வாசலில் ஏதோ கசமுசா சத்தம் ஏற்பட,

“பிரபு” என்று ஒரு குரல் எழுந்தது.

அதிவீரன் திடுக்கிட்டு எழுந்தான். 

அத்தியாயம்-33 

அதிவீர பாண்டியன் சபதம் செய்ய, இளநங்கை அல்லிக்கொடியின் முகத்தில் சூரியப் பிரகாசமாய் வெளிச்சம் பாய்ந்தது. 

“சுவாமி! இப்போதுதான் என் மனம் திருப்தி அடைந்தது! நாட்டில் எவ்வளவு பேராபத்து சூழ்ந்திருக்கிறது. தெரியுமா? எந்த நிமிடமும் யுத்தம் மூளப்போகிறது. இது துங்கபத்திரைப் போரைவிடக் கடுமையாக இருக்கும்!” என்று கூறினாள் அவள். 

துங்கபத்திரைப் போரில்தான் விஜயநகர ராஜ்ஜியம் தோற்கடிக்கப்பட்டது? 

“ஆமாம்! சுவாமி! அந்தப் போராவது வடக்கே நடந்து விட்டது. இது தெற்கே நடந்து நம்மை எல்லோரையுமே பாதிக்கப் போகிறது!” 

“அப்படியா சொல்கிறாய்?” 

“ஆமாம்! பாளையக்காரர்கள் கூட இதில் பாகுபாடோடு கட்சி சேருகின்றனர். வீரபாளையக்காரர் தங்களுக்கு எதிராசு மற்ற பாளையக்காரர்களைச் சேர்த்து வருகிறார். பலரும் சேர்ந்துவிட்டார்கள்”. 

“யார் அந்த பாளையாக்காரர்கள்?” என்று மிடுக்குடன் கேட்டான் அதிவீரன். 

“மண்டபப்பட்டு, மூலங்கரை. ஜெயங்குளம், நந்தி, வில்லியூர், கரிசல்பட்டி” என்று அடுக்கிக் கொண்டு போனாள் அல்லிக்கொடி, 

“என்ன?” என்று வெப்ப பெருமூச்சு விடுத்தான் அதிவீரன். “நந்தி, வில்லியூர், கரிசல்பட்டியா?” என்றான்.

“ஆமாம்! அந்தப் பாளையக்காரர்கள்தான்!”

“நேற்று வரை சிநேகம் காட்டி என்னிடம் உதவியும் கடனும் வாங்கியவர்கள் இவர்கள்” என்று வார்த்தைகளைக் கடித்துக் கொண்டு கூறினான் அதிவீரன்!

எல்லோரும் நயவஞ்சகர்கள்!” 

“மீதியிருப்பவர்கள் எல்வாரும் எனது தாயாதி உறவினர்கள்” என்றான் நெருப்பாக! 

தொடர்ந்து, “ஏன் அல்லி! உனக்கு இது நிச்சயமாகத் தெரியுமா?” என்றான். கண்கள் மினுக்க. 

“தெரியும் சுவாமி! அவர்கள் அத்தனை பேரையும் நேரில் பார்த்தேன்” என்றாள் அல்லி!

“வீரபாளைத்தாரருக்கு அடுத்த மாளிகையில்”

“ஓகோ! இங்கே வந்திருக்கிறார்களா?” 

“ஆமாம். இங்கே ரகசியமாய் இருந்து வருகிறார்கள்!”

“இங்கேயா?’ ஏன்?” 

“போர் ஆரம்பிக்கும் போது மதுரை அரசர் வீரப்ப நாயக்கரை ரகசியமாகக் கொல்லப் போகிறார்கள்”

திடுக்கிட்டுத் திரும்பினான் அதிவீரன்! 

“அப்படியா! அல்லி! இது அநியாயத் துரோகம் ஆயிற்றே! அவர்கள் குலம் வாழுமா?” 

சிரித்தாள் அல்லி! 

“சுவாமி! இந்த நாட்களில் அந்தப் பழையக் கொள்கை களை யார் நம்பப் போகிறார்கள்? 

அதிவீரன் எழுந்தான். 

அவன் மனம் கொந்தளிப்பது தெரிந்தது.

யோசனையில் ஆழ்ந்து அங்கும் இங்கும் உலாவ ஆரம்பித்தான். 

ஒரு இரவை சொர்க்கம் ஆக்க வேண்டும் என்று நினைக்கப் போய், இப்படி நரகமாகிவிட்டதே! 

அல்லி மேலும் தொடர்ந்தாள். 

“சுவாமி! இவர்கள் இதோடு நிற்கவில்லை! திருவடி ராஜ்ஜியத்தில் உள்ள ராஜாக்களையும் தங்களுக்குத் துணை சேர்த்திருக்கிறார்கள்!” 

திருவடி ராஜ்ஜியம் என்று அவள் குறிப்பிடுவது மலையாள ராஜ்ஜியம். 

அந்த ராஜ்ஜியமும் இப்போது ஒரு குடைக்கீழ் இல்லாமல் பலர் அரசாண்டு வந்தார்கள். 

“கொல்லம் ராஜா இவர்களுடன் சேர்ந்திருக்கிறார். அவர்தான் தம் மகளை தஞ்சாவூர் நாய்க்கருக்குத் திருமணம் செய்து வைக்க அனுப்பித்திருக்கிறூர்!” 

“யார்! திருமங்கைதானே அவள்?”

“ஆமாம்” 

“அவர் ஏன் கூட்டுச் சேருகிறார்!” 

“அவருக்கும். ஆதாயம் வேண்டி இருக்கிறது! தமது ராஜ்ஜியத்தை தங்களது எல்லையில் விரிவுபடுத்த நினைக்கிறார்!”

“ஓ! அப்படியும் ஒரு நினைப்பு இருக்கிறதா?”

“ஆமாம்! அதன் மூலம் மதுரையின் ஆட்சியைக் குலைக்க விரும்புகிறார்!” 

“இதில் அவர் அடையப் போகும் லாபம் என்ன?”

“தமக்கு உதவி செய்பவர்களை மதுரையில் வைத்து விட்டால், அவர்கள் உதவியால் திருவடி ராஜ்ஜியத்து இதர மன்னர்களை முறியடித்து தாமே ஏகச் சக்ரவர்த்தி ஆகத்தான்!” 

“ஓ! அவ்வளவு பெரிய திட்டமா?”

“ஆமாம், சுவாமி!” 

அதிவீரன் மீண்டும் பற்களை அரைத்துக் கொண்டான். 

“எல்லோரும் இப்போது ஆயுத்தமாகி விட்டார்கள், சுவாமி! ஒரே ஒரு விஷயத்திற்காகக் காத்திருக்கிறார்கள்!“

“என்ன அது?” 

“கொல்லம் ராஜாவின் மகள் தஞ்சாவூரைப் போய்ச் சேரவேண்டும். அவளுக்கும் தஞ்சாவூர் அரசர் அச்சுத நாயக்கருக்கும் திருமணம் நடக்க வேண்டும். அவ்வளவுதான் போர் தொடங்கிவிடும்.” 

ஒவ்வொரு செய்தியும் அதிவீரனின் மனஆழத்தில் விழுந்துகொண்டிருந்தது.

ஆபத்து அவன் அருகில் நிற்பது போல் உணர்ந்தான்.

அவனுக்கு உக்கிரம் ஏற ஏற உலாவுதல் அதிகமானது.

இடையில் திரும்பி. “இவ்வளவு விஷயமும் உனக்கு எப்படித் தெரிந்தது?” என்று கேட்டான். ஆச்சரியமுடன். 

“என்னைப் பிடிக்கப் போனது ஒரு விதத்துக்கு சவுகரியமாகப் போய்விட்டது சுவாமி! அவர்களோடு இருந்ததால் பல விஷயங்களில் கிரகித்துக் கொண்டேன்!”

“சரி! உன்னைப் பிடித்துக்கொண்டு போனது அந்த நிலததலைப்பாகைக்காரர்கள் தானே?” 

“நானும் அப்படித்தான் நம்பினேன். சுவாமி! ஆனால், அவர்கள் அல்ல! அவர்களைப் போல வேடம் தரித்த வீரபாளையத்தாரின் ஆட்கள்!”

“சரி! உன்னை ஏன் பிடித்துச் சென்றார்கள்?”

“இரண்டு விஷயம், சுவாமி!” 

“சொல்லு” 

“ஒன்று தங்கள் ராஜ்ஜியம் சீரழிந்துவிட்டது என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்! இரண்டாவது மதுரை மாமன்னரிடம் போய், தங்களைப் பற்றி அவதூறுகளை என்னை வைத்து சொல்லவைக்க வேண்டும்!” 

“அப்படியானால் மதுரை மன்னரைச் சந்தித்தாயா?”

”இல்லை! நான் அதற்குச் சம்மதிக்கவில்லை!”

“அப்படியா? உன்னைச் சும்மாவிட்டார்களா?”

“என்னை பயமுறுத்தினார்கள்! பட்டினி போட்டும் பார்த்தார்கள். பலவித வித்தை எல்லாம் செய்து பார்த்தார்கள். முடியவில்லை” 

“ஆ! நீதான் கெட்டிக்காரி!” என்று அவள் தோள் மீது வந்து தட்டினான், அதிவீரன். 

“இப்போது இந்த ஆறு பாளையத்தாரும் எங்கே இருக்கிறார்கள்?” 

“பாளையத்தார் வீட்டுக்கு அருகில் ரகசிய நிலவறை வீடு ஒன்று இருக்கிறது.” 

“நான் சிறைப்பட்டிருந்த இடமா?” என்று சொல்லி, அதைப்பற்றி விவரித்தான் அதிவீரன்! 

“அது கிடங்கு சுவாமி! இது அதுவல்ல! இதற்கு வழி வேண்டுமென்றே பின்தெருவில் வைத்திருக்கிறார்கள்!”

“உனக்குத் தெரியுமா?”

“தெரியும்! ஆனால் பிரயாசை எடுத்துத்தான் கண்டு பிடிக்கவேண்டும்!” 

“சரி! இப்போது போகலாமா!”

“இப்போதா! ஒரே களைப்பு சுவாமி! தவிர ஒரே களேபரமாக இருக்குமோ! என்னைத் தேடிக் கொண்டிருப்பார்களே!”

“இல்லை, அல்லி! ஒரு நாழிகை நீ ஓய்வு எடு பிறகு கிளம்புகிறோம்! விஷயம் ரொம்ப அவசரம். இனி சும்மா இருக்க வழியில்லை” என்றான். அதிவீரன். 

ஒரு இரவு தாண்டிய பிறகுதான் அவர்கள் புறப்பட்டார்கள். 

வழி கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது, அதிவீரன் மதுரைக்குப் பலமுறை வந்திருப்பவன்! அவனுக்கும் தடுமாறிற்று! இரவில் விசாரிக்க ஆட்களும் இல்லை. 

அரை நாழிகை சுற்றி விட்டு கடைசியில் தெருவைக் கண்டுபிடித்தார்கள். 

தோட்டங்கள் சூழ்ந்த வீடுகள் அங்கே நிறைய இருந்தன. 

எனவே பார்ப்பதற்கு ஒரு சோலை போலத் தெரிந்தது, தவிர, தெரு போல இல்லை. 

“சுவாமி! இதன் பின்புறத் தெருவுக்குப் போக வேண்டும்!” என்றாள். 

அந்தத் தெருவில் நுழைந்து, பாதிதூரம் போன பிறகு,

“இதுதான்” என்றாள். 

அங்கே வைக்கோல் படப்புகள் இருந்தன.

சுற்றிவர மண்சுவர் இருந்தது. சின்ன வழி ஒன்று. உள்ளே போக அனுமதித்தது. 

அதன் தட்டியைத் திறந்து. உள்ளே போய். படப்புகளைத் தாண்டினார்கள். 

செடிகளும், தழைகளும் இருந்தன. பூவரசுகள் நிறைய வளர்ந்திருந்தன. 

உள்ளே போனபோது, எதிரே ஒரு சுவர் தென்படடது.  

தூரத்தில் கதவு ஒன்று இருந்தது. 

அது உள்ளே பூட்டப்பட்டிருந்தது. 

அதிவீரன் சுவர்மேல் ஏறி உள்ளே பார்க்க விரும்பினான். 

அல்லியைக் கீழே பதுங்கி இருக்கச் சொல்லிவிட்டு. சுவர் மீது கைவைத்து ஏறினான். 

அல்லி ஆவலோடு அவனைப் பார்த்தாள். 

கீழே குனிந்து இருக்கும்படியே கையைக்காட்டினான், அதிவீரன். 

உட்புறமாக அவன் பார்க்க அவன் கண்கள் விரிய,

அதேநேரம் அல்லிக்குப் படபடப்பு ஏற்பட்டது.

காரணம் தெருவில் வாகனம் வரும் சத்தம் கேட்டது!

அது அவர்கள் இருந்த கொல்லைப்புறமே வந்து நின்றது. 

அடுத்த கணத்தில் காலடி ஓசைகள் கேட்க, அல்லி பதறினாள், 

“சுவாமி! சுவாமி!” என்று அழைக்க விரும்பினாள். 

குரல் வெளி வரவில்லை. 

அத்தியாயம்-34 

கல் சுவர் மீது ஏறி நின்ற அதிவீரன் மறுபக்கத்தில் ங்களின் கீழே பத்து பன்னிரண்டு பேர் அடங்கிய கூட்டம் வாதம் பண்ணிக்கொண்டிருப்பது தெரிந்தது. சட்டி விளக்கு ஒன்று பெரிதாக எரிந்து கொண்டு இருந்தது. 

கும்பலில் முகங்கள் அதன் வெளிச்சத்தில் பொன் மஞ்சளாகத் தெரிந்தன. 

வீரபாளையக்காரரை இனம் கண்டுகொண்டான் அதிவீரன். 

சுற்றிவர அந்தப் பாளையக்காரர்கள் தெரிந்தார்கள். அதிவீரனுக்குக் கோபம் பொங்கியது! 

அவன் நினைத்தால் இவர்களை ஒரு நிமிடத்தில் ஒடுக்கி இவர்களின் பாளையங்களை பறித்து விடுவான். 

அது நீதி ஆகாது என்பதால்தான் செய்யவில்லை!

இவர்கள் எல்லோருமே மதுரை நாயக்கருக்கு கப்பம் கட்டுபவர்கள். 

அதிவீரனும் கூட நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்டவன் தான்! 

இப்போதைய சூழ்நிலையில் பெரிய பெரிய ராஜ்ஜியங்கள்தான் வடக்கு ராஜ்ஜியங்களின் கொட்டங்களை அடக்க முடியும் என்ற நிலை. 

தனியாக இருக்க முடியாது. 

இருந்தால், எங்கிருந்தாவது ஆபத்து வந்து சேரும்.

பாளையாக்காரர் ஒருத்தர் கத்திப் பேசுவது தெரிந்தது. 

“தஞ்சாவூர் அச்சுதப்ப நாயக்கர்தான் தமது தோழர், சிநேகிதர், எல்லாம்! அவரைத்தான் நாம் நம்ப வேண்டும். நமக்கு ஏற்கனவே அவர் உறுதிமொழி கொடுத்துவிட்டார். மதுரையை மட்டும் அவர் கைப்பற்றிவிட்டால், நாம் அனைவரும் கப்பம் கட்டும் சிற்றரசர்களாக இருக்க வேண்டியது இல்லை! தோழர்கள் போல சுதந்திரமாக வாழலாம்! எனவே. அவரைத்தான் நாம் இதில் உறுதியாக நம்புகிறோம்” என்று கூறினார். 

குட்டிப் பாளையக்காரர் ஒருவர் இடையே புகுந்தார். “கொல்லம் ராஜா என்ன சொல்கிறார்?” 

“அவரும் நமது கூட்டோடு கலந்து கொள்கிறார்” என்றார் முன்னவர். 

”இதனால் அவர் அடையப் போகும் இலாபம் என்ன?” 

“இலாபமா? திருவிதாங்கூர் ராஜ்ஜியமும் நம்மைப் போல பின்னங்களாகப் பிளந்து தனித்தனி ராஜ்ஜியமாக இருக்கிறது; கொல்லம் ராஜா அனைத்தையும் சேர்த்து ஒரு ராஜ்ஜியமாக்க விரும்புகிறார்! அதற்குத்தான் கூட்டுத் துணையை நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.” 

“சரி! அவர் இப்போது நமக்காக என்ன உதவி செய்கிறார்?” என்றார் ஒரு இளையவர். 

“ஏன், தம் பெண்ணையே அச்சுதப்பனுக்கு கொடுக்கப் போகிறாரே!” 

“ஓகோ? சம்பந்தமே வைத்துக் கொள்கிறாரா?” 

“ஆமாம்! அந்தத் திருமணம் முடிய வேண்டியதுதான் போருக்கு எழுந்துவிடுவார்.”

“யார் மீது?” 

“மதுரை மீதுதான்!” 

“அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?” 

“நாம் இப்போது மதுரை நாயக்கருக்கு உதவுவது போல பாவனை செய்வோம்! ஆனால், சமயம் நேரும் போது நாமே மதுரை மன்னருக்கு எதிராகக் கிளர்ந்து, அவரை முடித்துவிடுவோம்! நமது அச்சுதப்பர்தான் இனி மதுரை சிம்மாசனத்தில் ஏறி ஆள வேண்டியது.” 

எல்லோரும் மெய்மறந்து கைதட்டினார்கள்.

அப்போது வீர பாளையக்காரர் எழுந்தார். 

“இதோ பாருங்கள்! உற்சாகத்தை மட்டும் காட்டி சும்மா இருந்துவிடப் போகிறீர்கள்? அவரவர் படையை மூச்சுப் பேச்சுக் காட்டாமல் மதுரைக்கு வெளிப்புறத்தே உடனே கொண்டு வரவேண்டியது!” 

“செய்வோம்! செய்வோம்!” என்று குரல், 

“சரி! இனி இங்கே ஒரு நிமிடம் இருந்தாலும் ஆபத்து! எல்லோரும் கிளம்புங்கள்!” 

கும்பல் எழுந்து பிரிந்து போக ஆரம்பித்தது. 

அதிவீரன் பின்புறம் குதித்தான். அவனுக்காக அல்லியும் புதர் அடியில் காத்திருந்தாள். 

அவன் வந்ததும், “பிரபு” என்று அவன் அருகில் வந்தாள். 

“பிரமாதம்! அல்லி, உன் யூகம்தான் நமக்குப் பல விதத்தில் உதவி இருக்கிறது. உன்னை மறக்க முடியாது. அல்வி வா, போகலாம். இங்கே இருந்தால் ஆபத்து!” எனறான. 

இருவரும் நிழல்கள் ஊடே மெதுவாக நடந்து வெளிப்புரத்தை நோக்கிப் போனார்கள். 


மறுநாள் அதிவீரன் அதிகாலையில் எழுந்து விட்டான். 

நாட்டின் நடப்புகள் எவ்வளவு நெருக்கடியான நிலையில் கொண்டு வந்துவிட்டிருக்கின்றன 

நல்லவேளை தென்காசியில் அமர்ந்து ஏடுகளில் திளைத்திருக்காமல் இப்படி அல்லியைத் தேடியாவது மதுரை வந்தோமே! 

இல்லாவிட்டால் இவ்வளவு விஷயமும் கிடைத்திருக்குமா? 

“தர்மசேனா” என்று அவனை அழைத்தான்.

இரு சேனர்களும் வந்தார்கள். 

“யுத்தம் வரும் போல இருக்கிறது” என்று ஆரம்பித்து அவன் அறிந்த விவரங்கள் எல்லாவற்றையுமே கூறினான்.

இருவரும் சற்று நேரம் சமைத்து இருந்தார்கள். 

சீக்கிரத்தில் யுத்தம் முனைத்துவிடும் என்று இருவரும் நம்பினார்கள்.

“அதனால்தான் தர்மசேனா! நீ உடனே தென் காசிக்குப் போக வேண்டும்!” என்றான் அதிவீரன். 

“உத்தரவு சுவாமி!” 

“நமது பாதுகாப்பை நமது சேனாதிபதியைக் கவனிக்கச் சொல்லிவிட்டு, ஒரு பகுதிப் படையை அவரிடம் வைத்துக் கொள்ளச் சொல்! மீதிப் பகுதிப் படையோடு இங்கே சீக்கிரம் வந்து சேர வேண்டும்!” என்றான் அதிவீரன். 

“சரி சுவாமி!” 

“என்ன! நான் சொன்னதெல்லாம் சரிதானே?” என்று வீரசேனனிடம் கேட்டான் அதிவீரன். 

“சரிதான் சுவாமி! இதில் நமக்கு இன்னொரு விஷயம் தெரிந்தால் நல்லது” என்றான் அவன்.

“என்னது?” 

”அந்த நீலத் தலைப்பாகையார் யார்? அவர்கள் தலைவர் யார்? அவர்கள் நோக்கம் என்ன? அதையும் கண்டுபிடித்து விட வேண்டும்!” 

“ஓ! அது ஒரு விஷயம் மீதி இருக்கிறது. எனக்கு அது ஒரு அரிப்பாகவே இருந்திருக்கிறது. நிச்சயம் அதையும் கண்டுபிடித்தாக வேண்டும்! வீரசேனா? இப்போது எல்லாவற்றுக்குமே அவசரம் வந்துவிட்டது நான் உடனே தளவாய் அரியநாதரைச் சந்திக்க வேண்டும். தாமதிக்கக் கூடாது!” என்றான். 

“அப்படியே செய்யுங்கள்! ஆனால், தயவு செய்து வெளியில் நாங்கள் யார் என்று யாரும் புரிந்துகொள்ளாது பார்த்துக் கொள்ளுங்கள்!!” என்றான் வீரசேனன். 

அதிவீரன் அன்று பகல் பலமுறை தளவாயைப் பார்க்கச் சென்றான். 

ஒவ்வொரு முறையும் அவர் இல்லை’ என்றுதான் மறுமொழியாக வந்தது. 

அதிவீரன் துடித்துவிட்டான். 

சீக்கிரம் அவரைப் பார்த்து மதுரைக்கு வரக்கூடிய ஆபத்தைக் கூற நினைத்திருந்தான். 

இருட்டின பிறகுதான் அதிவீரனுக்கு அந்த யோசனை தோன்றியது. மன்னர் வீரப்ப நாயக்கரையே பார்த்துவிட்டால எனன? 

இந்த வேளையிலா என்று ஒரு சங்கடம் எழுந்தது.

“அவசர காரியம் ஆயிற்றே! எந்த வேளையானால் என்ன?” என்று சமாதானம் சொல்லிக் கொண்டான்.

இரவு இரண்டாவது நாழிகையில் நாழிகையில் அவன் அரண்மனை வாயிலில் நின்றான். 

இந்த முறை அங்கிருந்த மெய்க்காவலரிடம் தனது அடையாளத்தைக் கூற, அவன் பறந்து கொண்டு உள்ளே போனான். 

அடுத்து, அரண்மனை அதிகாரிகள் அவசர அவசரமாக வெளியே வந்தார்கள். 

அவனை உபசாரமாக அழைத்து உள்ளே சென்றார்கள். 

“முன்கூட்டியே தூதுவரை அனுப்பியிருக்கக் கூடாதோ? மேளதாளத்துடன் அழைத்துச் செல்வோமே!” என்றார்கள். 

அதிவீரனை சபா மண்டபம் எல்லாம் தாண்டி அரச வாசல் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். 

அரசர் தமது அந்தரங்க அறையில் காத்திருந்தார்.

அதிவீரனைக் கண்டதும் அவர் அளவில்லாத ஆனந்தம் அடைந்தவர் போல எழுந்து வந்து தழுவிக் கொண்டார். 

இருவரும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டார்கள். 

பிறகு அதிகாரிகளை நோக்கி வீரப்ப நாயக்கர், “நீங்கள் போகலாம்” என்று கூற, அவர்கள் போய் விட்டார்கள், 

“வாருங்கள்” என்று அதிவீரனை அழைத்து மேலே போனார்கள். 

நாயக்கர் உடம்பு தளதள என்று பொன் போல மினுத்தது. 

உடம்பில் பல வடம் தங்க மாலைகள் தரித்திருந்தார். மீசை கட்டாக வளர்ந்து வழிந்திருந்தது. 

கருகரு என்று தலைமுடிகள் அடர்த்தியாக வளர்ந்து பின் புறம் வியாபித்திருந்தது. 

மேலே மேடைகளில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள்.

முன்பே பலமுறை இருவரும் சந்தித்து இருக்கிறார்கள்! எனவே, 

அதிவீரனது கவிதைகளைப் பற்றி வீரப்ப நாயக்கர் முதலில் விசாரணைகள் செய்தார். 

ரதி லீலையைப் போல தமிழில் செய்ய முற்பட்டு இருக்கிறேன் என்று தெரிவித்ததும் வீரப்பர் பிரமாதமாகச் சிரித்து அவன் தோளில் தட்டி உற்சாகப்படுத்தினார். 

பிறகு அதிவீரன் மதுரைக்கு வேடம் தரித்து வந்த காரணத்தைக் கூறி அவனுக்குக் கிடைத்த விவரங்கள் யாவற்றையும் கூறினான். 

வீரப்பர் முகம் இறுகிக்கொண்டே வந்தது. 

“கொல்லத்து இளவரசி திருமங்கை எந்த வழியாகத் தஞ்சாவூருக்குப் போனாள்?” என்று பரபரப்புடன் கேட்டார் வீரப்பன். 

எதிரே இருந்த மேடை மீது மதுரையின் வரை படம் ஒன்றைப் பரப்பி வைத்தார். 

இரவு வெகு நேரம் ஆனபடியால் தாதி ஒருத்தி மது வகைகளுடன் அருகே வந்து நின்றாள். 

வரை படத்தை அதிவீரன் உற்று நோக்கினான்.

”இதோ இந்த இடம்!” என்று காட்டினான் அவன்.

அத்தியாயம்-35 

மதுரை மன்னர் வீரப்பநாயக்கர் அடிக்கடி பெருமூச்சு விட்டார். 

அதிவீரராமன் அவருக்கு நாட்டு நடப்புகளைப் பற்றி பல புதுச் செய்திகள் வழங்கிக் கொண்டிருந்தார். 

திருமங்கை பற்றி கேள்விப்பட்டதும் வீரப்பருக்கு ஆச்சரியமாக இருந்தது! என்ன கேவலம்! தமது சொந்த. உளவுப் படை இந்த விஷயங்களை அவருக்குத் தெரியப் படுத்தவில்லையே! 

“இப்படி ஒரு சதி நடந்திருக்கிறதா? கொல்லம் ராஜா நமக்கு சிநேகம் ஆனவர் அல்ல என்று தெரியும். ஆனால் அச்சுதப்பருக்கு அவர் பெண் கொடுக்கத் துணிந்தாரா?” என்றார். 

திருமங்கையை மீட்க அதிவீரனின் ஆட்கள் போன தையும், இப்போது திரும்பி வந்ததையும் அதிவீரன் விவரித்தான். 

இருவரும் மதுக்கோப்பைகளைச் சூப்பினார்கள்.

வீரப்பருக்கு யோசனைகள் கனத்து வந்தன.

“இதற்குள் அவர்கள் தஞ்சை போயிருப்பார்கள்?”

“அவர்கள் பயந்து பயந்து போகிறார்கள்! மறைந்து போவதால் தஞ்சாவூர் போயிருக்கமாடர்கள்!” 

“அப்படியானால் அதிவீரரே உடனே படை ஏதாவது அனுப்பி, அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்துவோமா?” என்றார் அவர். 

“ஆ!” என்று சொன்னான் அதிவீரன். “அது நல்லதுதான்! ஆனால் மதுரைக்கு அபகீர்த்தி வரும்” 

“ஏன்?” 

“ஒரு பெண்ணுக்காகப் படை அனுப்புவதா? அதுவும் யாரோ, யாரையோ மணக்கப் போவதை மதுரைப் படை தடைசெய்வதா? அது கேவலமில்லையா?” என்றான் அதிவீரன். 

“இல்லையே! இப்போது அந்தப் பெண்ணுக்கு விருப்பமில்லை என்று கூறுகிறீர்களே?” என்றார் வீரப்பர். 

“அது எனக்குத் தெரியும், கூறினேன்! ஊருக்குத் தெரியாதே! அவர்கள் ஏசுவார்கள்!” 

“அப்போ, என்ன செய்யச் சொல்கிறீர்?”

“நீலத் தலைப்பாகைக்காரர்கள் போல நாமும் செய்ய வேண்டியதுதான்?” 

சட்டென்று திரும்பினார். 

“நீலத் தலைப்பாகைக்காரர்கள்? அவர்கள் யார்? கேள்விப் பட்டிருக்கேன். பார்த்ததில்லையே!” என்றார் நாயக்கர். 

“திடீரென்று தாக்கித் திடீரென்று மறைவார்கள் இந்த வித்தையை அவர்கள் வடக்கே ஏதோ ஒரு இனத்தாரிடமிருந்து கற்றிருக்கிறார்கள்!” 

“அவர்கள் என்ன கொள்ளைக் கூட்டத்தார்களா?”

“எதுவும் புரியவில்லை! என்னென்னவோ செய்கிறார்கள்!”. 

“சரி! அதை கவனிப்போம்! இந்த விஷயத்தில் நல்ல வலிமையான ஆட்களை அழைத்துப்போய் திருமங்கையை காப்பாற்றிவிட முடியுமா?” 

சற்று யோசித்தான் அதிவீரன் 

பிறகு, “மன்னவா! நான் என் படை எதுவும் அழைத்து வரவில்லையே” 

“நம் படை ஆட்களை எடுத்துக்கொள்ளுங்கள்.”

“அதிலும் ஒரு சிக்கல் உண்டு! தங்கள் ஆட்கள் தோற்றத்தைப் பார்த்தாலே இவர்கள் நாயக்கர் ஆட்கள் என்று சொல்லி விடுவார்கள்.” 

அக மகிழ்ந்து புன்னகை பூத்தார் மதுரை நாயக்கம் 

“நல்லது! அப்படியாயின் இன்னொரு வழி இருக்கிறது! நமது நண்பர் வாணாதிராயன் கோட்டைக்கு வெளியே தண்டு இறங்கி இருக்கிறார். அவரைச் சந்தித்து ஆட்கள் வாங்கிக் கொள்கிறீர்களா?” 

‘சரி’ என்று தலை ஆட்டிய நாயக்கர் சிறிது யோசித்து,

“சீக்கிரம் காரியத்தை முடித்துவிட்டு வாருங்கள்! பாளையாக்காரர்கள் பற்றி தாங்கள் தரும் செய்தி எனக்குக் கவலை கொடுக்கிறது. இதற்கு ஏதாவது செய்யவேண்டும்! உங்களிடம் அதுபற்றிப் பேசவேண்டும்” என்றார். 

அதிவீரனை அவர் வாயில் வரை கொண்டுவிட்டார்.


அன்று இரவே அதிவீரனுக்காக கோட்டை திறந்துவிடப்பட்டது. 

அதிவீரன் தன்னுடன் தர்மசேனன் அல்லி முதலான வர்களை அழைத்துக்கொண்டு சோழவந்தான் பாதையாகப் பிரயாணமானான். 

அத்தனை குதிரைகளும் இரவு நிசப்தத்தைக் கிளறி எரிந்தன. 

மதுரை மன்னனின் முத்திரை மோதிரம் பெற்று வந்திருந்தான் அதிவீரன்.

வாணாதிராயனின் தண்டுக்குள் புகுவது கடினமாக இல்லை. 

சிற்றாற்று ஓரமாக நின்றிருந்த பல கல்மண்டபங்களை வளைத்து தண்டாக மாற்றி இருந்தார்கள். 

அங்காங்கே வீரர்கள் கொத்து கொத்தாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். 

ஒரு புலம்பலான பாட்டு எங்கிருந்தோ கேட்டுக் கொண்டிருந்தது. 

கிட்டதட்ட உச்சி இரவைக் கடந்த சமயம் அது! வானத்தில் அத்தனை நட்சத்திரங்களும் தொங்கும் சுடர்களாக மின்னின. 

காற்றுகூட ஸ்தம்பித்து நின்றது. 

இயற்கை எல்லாம் உறங்கிக் கொண்டிருக்க,

பூமி இடிந்தது போல் காட்சி கொடுத்தது.

கல்மண்டபம் ஒட்டி ஒரு கூடாரம்.

அதன் வெளியே தீவர்த்திகள் எரிந்தன.

அடையாள மோதிரம் அதிவீரனுக்கு அதிவேக அனுமதியைக் கொடுத்தது. 

திரைகளை விலக்கி உள்ளே நுழைய. 

வெவ்வேறு புகைகளில் நறுமணம் முகத்தில் தவழ்ந்து வீசியது. 

சற்று எட்டத்திலிருந்தே வானாதிராயனைப் பார்த்தான் அதிவீரன். 

அகல்விளக்கின் பொன் ஒளி வாணனின் முகத்தில் விழுந்திருந்தது. 

நெற்றியில் ஞானம் வீசியது, கண்களில் கவிதை ஆடியது. 

மூச்சில் தமிழ்ப் பற்று சீறியது. 

அந்த அர்த்தராத்திரி வேளையில் ஒரு ஆரணங்கு அவர் அருகே நின்று ஒலைச் சுவடியிலிருந்து எதையோ படித்துக் காண்பித்துக் கொண்டிருந்தான். 

அவள் குரல் கணீரென்று அதிமதுரமாக இருந்தது. தமிழ் அவள் தொனியில் குழைந்து ஒரு தென்றல் இழை போல வீசியது, 

அங்கே அந்தக் கூடாரத்தில் பரிமளமாக மணந்து கொண்டிருப்பது என்ன? 

அகில் புகையா? 

அல்லது- 

அதிவீரன் ஸ்தம்பித்துப் போய்ச் செயலிழந்து நின்றான். 

அங்குக் காண்பது பூ உலகக் காட்சியாகத் தோன்ற வில்லை. 

தெய்வ உலகத்துக் காட்சியாகவோ, பழம் தமிழ்ச் சங்கத்துக் காட்சியாகவோ தோன்றியது. 

வியப்பில் அவன் சுவாசம் மெல்லியதாகியது. கண்களில் நீர் அரும்புகள் முளைத்துக்கொண்டன.

தன்னையும் அந்த வாணாதிராயனையும் ஒப்பு நோக்கிக்கொண்டான். 

பகலில்தானே அவன் (அதிவீரன்) எப்போதும் சுற்றது, கேட்டது. கவிதை எழுதியது எல்லாம்! 

இரவுகளில் தமிழைப் பருகாது இதழ்களைப் பருகச் சென்றோமே! 

கவிதையை எடுத்து நுகராது காரியரை எடுத்து நுகர்ந்தோமே!

இவன் அன்றோ தமிழ் அரசன்! 

இவனிடம் அன்றோ தமிழ்க்கொடி வாழ்வாள்.

இவ்விதம் பலவிதங்களில் எண்ணி. கலக்கமிகு நெஞ்சோடு இருக்க, 

சற்றே எதேச்சையாகத் திரும்பிய வாணன், அந்த அதிவீரனைக் கண்டு கொண்டான். 

“ஆ! யார் அங்கே?” என்று முகமலர்ந்து கூவிய வாணாதிராயன். 

சடக்கென எழுந்திருந்து. 

உள்ளமும் உடலும் புளகாங்கிதம் அடைந்த பாங்கில்,

கைகள் இரண்டையும் அகலவிரித்து- 

“என் வீரரே. என் ராமரே. என் அதிவீர ராமரே” என்று சிலிர்க்கும் குரலில் கூவிக்கொண்டு, அவனை நோக்கி வந்தான். 

அவ்வளவுதான். 

அதிவீரனின் கண்களில் இருந்து புஷ்ப மழை போல் கண்ணீர் ரத்தினங்கள் உதிர்ந்துகொண்டிருக்க, 

அவனும் மற்ற யாவையும் மறந்து இரு கைகளை விரித்து, வாணனை எதிர் பார்ப்பது போல நின்றான். சுருக்கென வந்த வாணன், அதிவீரனைக் கட்டிக் கொள்ள, 

பொதிகைத் தமிழும், காவிரித் தமிழும் ஒன்றை ஒன்று கட்டிக்கொள்வது போல் இருந்தது. 

சிறிது நேரம் மெய்மறந்து, பொறிகலங்கி அதே ஆலிங்கனத்தில் இருந்த அவர்கள்- 

பிறகு விடுபட்டு, “என்ன அதிவீரரே! அடியேனை இப்படி தேடி வரலாமோ? அழைத்தால் யானே வந்திருப்பேனே! தமிழ் உள்ள இடத்துக்கு நாங்கள் அல்லவோ தேடிப் போக வேண்டும்” என்று கூற, 

”வாணாதிராயரே! என் தமிழ் தங்களிடம் அன்றோ ஒட்டி உறைந்து விட்டது. ரதில்லையைப் பற்றி எழுதும் என்னிடம் தமிழ் அணங்கு இருப்பாளே!” என்று கூறினான். 

இந்த வகையிலேயே இருவரும் சிறிது நேரம்பேச,

“வாணாதிராயரே! இப்போது நான் வந்திருக்கும் காரியம் அவசரம்” என்றான். 

“என்ன?” என்று கேட்டார் வாணாதிராயர்.

“எனக்குப் படை வேண்டும்” என்று சொல்லி, நிறுத்தினான் அதிவீரன்.

– தொடரும்…

– மன்மதப் பாண்டியன் (நாவல்), முதல் பதிப்பு: 1998, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *