கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 9, 2024
பார்வையிட்டோர்: 1,208 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-10 

உன்னாச்சீகிரியில் அரசி ஆடக சவுந்தரி மந்திரி விசித் திரயூகியாரின் வரவை ஆவலோடு எதிர்பார்த்த வண்ண மிருந்தாள். அவர் சென்றதும் வேலையை முடித்துக்கொண்டு சீக்கிரமே திரும்பிவிடுவார் என எண்ணியிருந்த அவளுக்கு அவர் சென்று மூன்று வாரங்களாகியும் திரும்பாதது மனக் கிலேசத்தை உண்டு பண்ணியது. அவர் மீது ஆத்திரமாக வும் இருந்தது! மன்னனைப் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளவே அவள் அமைச்சரின் வரவை ஆவலு டன் எதிர்பார்த்திருந்தாள். தான் வணங்கும் கதிர்காம தெய்வத்தை மனதார வேண்டி, அவர் சென்ற காரியம் ஜெயமாக முடியவேண்டுமெனப் பிரார்த்தித்தாள். 

அரசி தனிமையில் கற்பனை உலகிற் சஞ்சரித்துக்கொண் டிருந்தபோது பூங்குழலி அங்கே வந்து கொண்டிருந்தாள். தன் வரவை அரசி கவனிக்காமல் ஏதோ கற்பனையில் மூழ்கியிருப்பதை அறிந்துகொண்ட. அவள் மெதுவாக அரசி யின் பின்புறமாக வந்து அரசியின் கண்கள் இரண்டையும் தன் இரு கரத்தாலும் இறுகப்பற்றி மூடிக்கொண்டாள். எதிர்பாராத வகையில் தான் பூங்குழலியிடம் அகப்பட்டு விட்டதை உணர்ந்து கொண்ட அரசி அவளை மடக்கும் நோக்கத்துடன் “இந்த அரண்மனையில் என்னுடைய கண் களைப் பொத்தக் கூடிய துணிவு உன்னைவிட வேறு யாருக் கடி வரும்.. ? என் கண் வலிக்கிறதடி சற்று உன் கரத்தை எடுக்கிறாயா?” எனப் பொன் வளை குலுங்கும் தன் மென் மையான கரங்களால் பூங்குழலியின் பிடியைத் தளர்த்த முயன்றாள். 

பூங்குழலி தன் பிடியைத் தளர்த்திவிட்டு “அமைச்சர் திரும்புவதற்குள்ளாகவே அரசி இப்படித் தன்னை மறந்திருந் தால் அமைச்சர் திரும்பியதும் அவர் மன்னனைப்பற்றிக் கூறப்போகும் செய்திகளைக் கேட்டு மயக்கம் போட்டு விழுந்து விடுவார்களோ என்று எனக்கு ஒரே பயமாக இருக்கிறது. ஆமாம்! இப்போது என் கரம் தங்கள் கண்ணிற்பட்டால் பலிக்குந்தான். நாளைக்குத் தங்கள் உள்ளங்கவர்ந்த காவலன் வந்து பொத்தும்போது அது இனிக்கும்! அப்போது கையை எடுங்கள்! என்று தாங்கள் கூறமாட்டீர்கள். அவர் எடுக்கப்போனாலும் தாங்கள் விடவும் மாட்டீர்கள்! பெண் களின் இயல்பே அதுதான். அதற்கு எங்கள் அரசியார் மட் டும் எப்படி விதிவிலக்காக முடியும்…? உம்! என்னைச் சீக் கிரம் தாங்கள் மறந்துவிடப் போகிறீர்களே என்று நினைக் கும்போது அந்தக் குளக்கோட்டு மகாராசா மீது எனக்குப் பொறாமையாகக் கூட இருக்கிறது “என்று பூங்குழலி பொய்க் கோபத்துடன் கூற இயற்கையிலேயே அரசியின் சிவந்த அதரங்கள் இன்னுங் கூடச் சிவப்பேறின. 

‘போடீ பைத்தியம்! நான் போர் நிகழ்ந்தால் என் னென்ன ஆயத்தங்கள் செய்ய வேண்டும் எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஓர் அரசியோ அல்லது அரசனோ என் றுமே காதல் என்னும் கற்பனைப் பூங்காவிற் சஞ்சரிக்க முடி யாது. அவர்களுககுத் தங்களைவிடத் தங்கள் குடும்பத்தை விட நாடுதான் முக்கியம். அந்த நிலையில்தான் நானும் இன்றிருக்கிறேன், பூங்குழலி, எனது நாட்டை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்றுதான் இரவு பகலாகச் சிந்திக்கிறேன். மன்னன் குளக்கோட்டன் ஒருவேளை தான் போர் செய்வதற்கு ஆயத்தம் என்று கூறி விட்டால். என் நிலை என்ன…? என்பதையிட்டுச் சிந்திக்க வேண்டியவளாயிருக்கிறேன். ஒரு நாட்டின் அரசியாக இருப் பது ஒன்றும் சுலபமல்லடி என்று அரசி கூறிமுடித்த போது வெளியே குதிரைக் காலடிச் சத்தங்கேட்டது. விசித் திரயூகிதான் வந்து விட்டாரோ என்று பூங்குழவி எழுந்து பார்த்தபோது அங்கே சாட்சாத் அவரே வந்து கொண்டிருந்தார். 

அரசியும் அமைச்சரும் பேசும் இடத்தில் தான் இருப் பது அழகல்ல. அது சம்பிரதாயமும் அல்ல என்பதைஉணர்ந்த பூங்குழலி “அதோ! அமைச்சர் வந்து கொண்டிருக்கிறார் தேவி! அவர் கொண்டுவரும் செய்தி நல்ல செய்தியாக இருக் கட்டும் என வாழ்த்துகிறேன்.” என்று கூறிக்கொண்டே அவ்விடத்தை விட்டகன்றாள். அமைச்சர் அவள் முன்னிலை யில் வந்து “வணக்கந் தேவி!” என்றார். 

மந்திரி எப்படியான செய்தி கொண்டு வந்துள்ளாரோ என்று மனம் அவதிப்பட, அரசி தன் எதிரே இருந்து ஆசனத்தைக் காட்டி அதில் அமைச்சரை அமரும்படி பணித் தாள். அமைச்சர் அமர்ந்து கொண்டதும் “தாங்கள் சென்ற விடயம் எப்படி முடிந்தது அமைச்சரே.. ? மன்னன் திறை செலுத்துவதாக ஒப்புக் கொண்டானா அல்லது யுத்தத்திற்கு ஆயத்தம் என்று சொன்னானா?” என்று தன் உள்ள வேட் கையை மறைத்து, மந்திரி கொண்டுவந்த செய்தி எதுவாக இருந்தாலும் அதைத் தான் ஏற்கத்தயார் என்னும் பாவனை யிற் கூறினாள். எதுவாக இருந்தாலும் அதை அமைச்சர் மூலமாக அறிவதில் அவள் ஆர்வங் கொண்டிருந்தாள். 

அவளுடைய துணிகரமான பேச்சு அமைச்சருக்குச் சற்று அதிர்ச்சியைக் கொடுத்தாலும் தான் கொண்டுவந்துள்ள செய்தி சாதகமானதாக அமைந்ததால் சிறிது மனத்தெம் புடன் காணப்பட்டர். அத்துடன், எது நடந்தாலும் பூங்குழலி தனக்கு உதவியாக இருப்பாள் என்கிற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. அரசியின் திருமண விடயத்தில் தன்னை விடப் பூங்குழலிக்கு அதிக அக்கறை உண்டென்பதை அவர் அறிந்து வைத்திருந்தார். அதனால் தைரியத்தை வரவழைத் துக் கொண்டு அரசியின் கேள்விக்கு நேரடியாகப் பதில் கொடுக்காமல் முதலில் மன்னனது குலம் கோத்திரம், குணம், மரபு ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். மன்னனுடைய மன நிலையை அறிந்து கொள்ளத் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த அரசிக்கு அமைச்சரி 2 வர்ணனை அவ்வளவாகப் பிடிக்க வில்லை அதனால் “அமைச் சரே: நான் கேட்டது ஒன்று. தாங்கள் பேசுவது வேறொன் றாக இருக்கிறது. அரசர் தங்களையும் மயக்கி விட்டார் போலிருக்கிறது, தங்கள் பேச்சைப் பார்த்தால் ஏதோ சமரச உடன்படிக்கையுடன் தாங்கள் வந்திருப்பதாகத் தெரிகிறது. மன்னரைத் தாங்கள் அவ்வளவு போற்றுகிறீர்களே” என்று குரலைக் கடுமையாக்கிக் கூறினாள். அவளுடைய உள்மன மும் அப்படியான ஒரு சமசர உடன்படிக்கையையே விரும்பியது. 

“மன்னிக்க வேண்டும் தேவி! அரசரைச் தாங்கள் நேரிற் கண்டால் தாங்களும் தங்கள் மனதை அவரிடம் பறிகொ டுத்து விடுவீர்கள். நல்லகாலம் அவர் தங்கள் கண்ணுக் கெட்டாத தூரத்திலிருப்பது” என்று கூறிச் சிரித்துவிட்டு, “தங்கள் ஆணைப்படி தாங்கள் கூறியதை ஒன்று விடாமல் அப்படியே மன்னனிடம் ஒப்புவித்தேன். 

“அப்போது மன்னர் சிரித்து விட்டு என்ன சொன்னார் தெரியுமா ? கேவலம்! இப்படியான ஓர் அற்ப விடயத் திற்காக ஏன் போர் செய்ய வேண்டும்? அப்படி அநியா யமான முறையில் என் நாட்டு மக்களைப் பலிகொடுக்க நான் விரும்பவில்லை. இந்த ஆலயத்திருப்பணி இன்னும் ஒரு வாரத் தில் முடிந்து விடும். அதன்பின் தங்தளுக்குச் சிரமமின்றி நானே இந்த ஈழத்திரு நாட்டை விட்டுப் போய் விடுகி றேன்” என்றார். அவர் அமைத்திருக்கும் கோயில் மிகவும் அற்புதமானது தேவி. அவருடைய முதலமைச்சர் கலிங்க ராயர் மிகவும் நல்லவர். அவருடன் நான் ஒரு சில நாட் களே பழக முடிந்தது. அந்தக் குறுகிய காலத்துள் அரசர் இல்லாத சமயம் பார்த்து, அரசரைப் பற்றி அவர் எனக் குச் சில தகவல்களைக் கூறினார். மன்னனின் தந்தையான வரராமதேவர் பல சிவஸ்தலங்களையும் வழிபட்டுக் கொண்டு வரும்போது தட்சிணகைலாயத்தின் மகிமையை அறிந்து அதைத் தரிசிக்கும் பொருட்டு ஈழநாட்டுக்கு வந்திருந்தா ராம். அவர் கோணநாயகரைத் தரிசித்த போதே சோமாஸ் கந்தருக்கும் மாதுமை அம்மனுக்கும் ஒரு மகத்தான ஆலயம் எழுப்ப வேண்டும் என்கிற பேராசை ஒன்று எழுந்த தாம். உடனே அவர் தன்வழிப் பயணத்திற்காகக் கொண்டு சென்ற திரவியங்களில் ஒரு கணிசமான தொ கை யைக் கோணநாயகரின் ம க்குகை ஒன்றினுள் வைத்து, அதன் பெறுமதியையும் ஒரு செப்பேட்டில் எழுதி அதையுங் கூட வைத்து ஒரு பூதத்திடம் அவற்றைப் பாதுகாக்கும்படி கூறிச்சென்றாராம் அவர் பாரத நாடு திரும்பியதும் குழந் தைப் பாக்கியமற்றிருந்த அவருக்குக் கோணநாயகர் அரு ளால் குளக் கோட்டு மகாராசா அருந்தவப் புதல்வனாக அவதாரஞ் செய்தார். மன்னன் பிறக்கும்போதே அவருடை நெற்றியில் விலங்குகளுக்கு உள்ளது போல் சிறுகொம்பு போன்ற ஒன்றிருந்ததால் வரராமதேவர் இவருக்குக் குளக் கோட்டன் என்று பெயரிட்டார். 

அதன்பின் வரராமதேவர் இறக்க, இவர் ஆட்சிக்குவந்த தும் சோழ மண்டபலத்திலிருந்து திருக்கோணாசலத்துக்கு ஒரு யாத்திரீகர் வந்ததாகவும் அவர் ஒரு நாள் இரவு மலையிற் படுத்துறங்கிய போது ஒரு பூதம் அவர் முன்தோன்றி அங்கே வரராமதேவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் படி ஆணையிட்ட திரவியங்களைப் பற்றிக் கூறி, அச்செய் தியை அந்த யாத்திரீகள் சோழமண்டலம் திரும்பியதும் குளக்கோட்டு மன்னனிடம் சொல்லும்படியும் பணித்ததாம், தன் தந்தையின் நெடுநாளைய ஆசையைக் குளக்கோட்டு மகாராசா அறிந்திருந்தாராயினும் யாத்திரீகன் கூறிய செய் தியே அவரைச் செயலில் இறங்கத் தூண்டியதாம். அத னால் கோயில் திருப்பணிக்கு ஏற்றவகையில் வேண்டிய மக் களோடும் பொருட்களோடும் அமைச்சருடன் மரக்கலத்தி லேறித் தட்சிண கைலையில் வந்திறங்கிய செய்தியைக் கூறினார் என்றார் அமைச்சர். 

அதன் பின் அரசியை நேருக்கு நேராகப் பார்த்து “அர சர் தங்களிடம் ஓர் உதவியும் கோரியுள்ளார் தேவி!’ என் றதும் அரசி வியப்பினாலும் அதிர்ச்சியினாலும் எதுவும் பேச முடியாமற் சிலை போல் அமர்ந்திருந்தாள். 

“குளக்கோட்டு மன்னன் அழகிலும் குணத்திலும் மட் டும் மேம்பட்டவர் அல்லர். அவரிடம் தெய்வீகத்தன்மையும் நிறைய உண்டு. கோணநாயகரின் அருள் பாலிக்கப்பட்ட வர். என்னுடைய கர்வத்தினால் அவர் கட்டிய கோயிலை இடித்துவிடக் கூடத் துணிந்தேன். இதனால் தான் பெண் நினைத்துக் புத்தி என்பார்கள்’ என்று தனக்குள்ளாகவே கொண்ட அரசி, அரசர் தன்னிடம் என்ன உதவி கேட் டிருப்பார் என்று நினைத்தவளாய் “மன்னர் என்னிடம் அப்படி என்ன உதவி கேட்டார்? அதற்குத் தாங்கள் என்ன பதிலளித்தீர்கள்?” என்று தன் ஆவலை அடக்க முடியாமல்’ கேட்டாள்–கேட்டே விட்டாள். 

அரசியின் உள்ளம் மன்னன் பால் நெகிழ்வதை அமைச் சர் உணர்ந்து விட்டார். அதை நல்ல சந்தர்ப்பமாகக் கருதி “அரசியாரின் சிறப்புக்களையும் ஆட்சியின் வலிமையையும் நன்குணர்ந்த அரசர் கோணநாயகப் பெருமானுக்குத் தொண்டு செய்யும் குடிகளுக்கு என்றென்றும் நீர்வளமும் நிலவளமும் குன்றாதிருக்க. ஒரு திருக்குளத்தை அமைப் பதற்கு ஆட்பணி தேவைப்படுவதாகக் கூறும்படி சொன்னார். 

அமைச்சர் அதைக் கூறியதும் அரசிக்கு உடலெல்லாம் புல்லரித்தது. அவளுடைய இதயத்தில் நீக்கமற நிறைந் திருந்த அவர் நினைவு பூரித்துப் பொங்கியெழுந்தது மன்னரே துணிந்து தன்னிடம் உதவி கோரிவிட்டதால் தன் னுடைய அபிலாஷை நிறைவேறுங் கட்டம் வந்துவிட்டது என உள்ளம் மகிழ்ந்தாள். 

அந்த உத்வேகத்தில் அமைச்சரைப் பார்த்து, “மன்னர் உதவி கேட்டார்? எங்கள் படைப்பலத்திற்குப் பயந்து பணிந்துவிட்டார் போலிருக்கிறது! போகட்டும். அவருக்குத் தாங்கள் என்ன பதில் கூறி வந்தீர்கள்?” என்று கேட்டு விட்டு, அவர் கூறப்போவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். 

அமைச்சர் அமைதியாகச் சிரித்தார். “நான் என்ன பதில் கூறியிருப்பேன் என்று அரசியார் உணர்ந்திருப்பார் கள் என்று நினைத்தேன். எங்கள் அரசியின் செயல் திறன் களையெல்லாம் மன்னனிடம் எடுத்துக் கூறினேன். தங்கள் பூதப்படைகளைப் பற்றியுங் கூறி அரசியார் மனம் வைத் தால் திருக்குள வேலையை மிகவும் எளிதாகவும் சுலபமாக வும் முடித்துவிடலாம் என்றும் கூறினேன். ஆனால்…” என்று கூறிவிட்டு அமைச்சர் நிறுத்தியபோது, அரசி ஆச் சரியத்தோடு அமைச்சரைப் பார்த்தாள். 

அமைச்சர் அப்படிப் பொடிவைத்துப் பேசியது அவளுக் குப் புரியவில்லை. “ஆனால் என்று நிறுத்திவிட்டீர்களே மிகுதியையும் கூறுங்கள் அமைச்சரே!” என்று அவரைத் தூண்டினாள் அவள். 

“ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில்தான் இந்த உதவி யைச் செய்து தருவதாகக் கூறி வந்தேன்” என்றார் அமைச்சர். 

“நிபந்தனையா? நிபந்தனையென்றால்…? அது என்ன வென்று யான் அறியலாமா.. ?” 

“அரசியார் அறிந்துகொள்ள வேண்டியது அவசியந் தானே. ஆனால் இப்படியொரு நிபந்தனையைத் தங்கள் உத்தரவின்றி விதித்ததற்காக அரசி என்மேற் கோபப்படாமல் இருந்தாற் போதும். தங்கள் தந்தை இறந்தபின் தங் கள் சுகநலன்களில் அக்கறை காட்டவேண்டிய ஒரே வாரிசு நான் என்பது என் பணிவான அபிப்பிராயம். அரசியாரும் இதை மறுக்க மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் பேரில்தான் “திருக்குள வேலைகள் நிறைவுற் றதும் மன்னர் எம் அரசியைத் திருமணஞ் செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையிட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறி நிறுத்திவிட்டு, அமைச் சர் அரசியின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார். 

செந்தாமரை மலர் போன்றிருந்த அரசியின் முகம் முருக் கம் பூப்போற் சிவந்தது. அமைச்சரின் பேச்சு அரசிக்கு வெட்கமாக இருந்திருக்க வேண்டும். எவ்வளவுதான் பெரிய மகாராணியாக இருந்தாலும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்கிற அணிகலன்கள் பெண்களுடன் கூடப் பிறந் தனவாயிற்றே. 

அரசியின் தடுமாற்றத்தைப் புரிந்துகொண்ட அமைச்சர், “அரசர் மிக்க மகிழ்ச்சியுடன் எனது நிபந்தனையை ஏற்றுக்கொண்டதோடு மட்டும் நில்லாமல் அதற் கடை யாளமாகத் தனது கைவிரலில் இருந்த இந்தக் கணையாழி யையுங் கழற்றித் தங்களிடம் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டார்” என்று அமைச்சர் தன் கைக்குள் பொத்தி யிருந்த இரத்தினக்கல் பதிக்கப்பட்ட கணையாழியை அரசி யிடம் நீட்ட, அரசி அதை மிகுந்த பயபக்தியுடன் தன் இரு கரங்களாலும் பெற்றுக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். அவளுடைய விழிகள் அந்தக் கணையாழியின் மேலேயே பதிந்திருந்தன. 

“மிக்க மகிழ்ச்சி அமைச்சரே! தாங்கள் எதைச் செய் தாலும் அது என் நன்மைக்காகவேயிருக்கும் என்கிற நம் பிக்கையில் ஊறி வளர்ந்தவள் நான். அதனால் இவ்விடயத் தையும் என் உத்தரவின்றித் தாங்கள் செய்துவிட்டபோதும் தங்களைத் தண்டிக்கவோ கண்டிக்கவோ ஆற்றலற்றவளாய் இங்கே பொம்மையாக நான் இருக்கிறேன். தற்சமயம் என் முன் நின்றுகொண்டிருக்கும் உங்களை நான் ஓர் அமைச்ச ராகக் கருதுவதை விடப்பாசம் நிறைந்த ஒரு தந்தையா கப் போற்றுகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள்” என்று அவள் கூறியபோது அவர் கண்கள் பனித்தன. 

அத்தியாயம்-11 

தனிமையான அந்த இடத்தில் நிலவிய சூழ்நிலைய லிருந்து அரசியும் அமைச்சரும் தம்நிலை பெற வெகு நேர மெடுத்தது. அரசியின் பேச்சு அமைச்சரின் உள்ளத்தை தொட்டது. அவருடைய கண்களிலிருந்து நீர் ஆறாகப் பெருசு. அவர் நிலமடந்தையை உற்றுப் பார்த்தபடியே நின்றார். 

அரசி தன் கண்களில் துளித்த நீரை மெதுவாகத் துடைத்துவிட்டு அமைச்சர் அவர்களே!” என்று அமைச் சரை அழைக்க அமைச்சரும் தம்நிலை பெற்றுத் தலைநிமிர்ந் தார்: * ‘தங்களுக்கு யான் என் உயிர் உள்ளவரையும் கட மைப் பட்டுள்ளேன்: தாங்கள் மன்னருக்கு வாக்களித்தது போல் மலைபோலும் புயங்களையும் குறுகிய கால்களையு முடைய எமது பூதங்களிற் சிலவற்றை அழைத்துக்கொண்டு போய் மன்னரது மனங் குளிரும்படி கூடிய விரைவிற் குளத் தையுங் கட்டி வயல் வெளிகளையும் திருத்திக் கொடுங்கள். அத்துடன் இன்னுமொரு வேண்டுகோள்!” என்று கூறி விட்டுத் தயங்கினான் அரசி 

அரசியின் உள்ளக் கருத்தைப் புரிந்து கொண்டவர் போல் “வேண்டுகோள் என்ன தேவி? கட்டளையிடுங்கள். செய்து முடிக்கிறேன். மன்னனைத் தூக்கிக்கொண்டு வர வேண்டுமா? அல்லது கட்டிக்கொண்டு வரவேண்டுமா? எப் படி வேண்டுமானாலும் கூறுங்கள்” என்று கூறிவிட்டுச் சிரித் தார் அமைச்சர். 

அவருடைய பேச்சு அரசிக்குப் பெரும் வியப்பைக் கொடுத்தது. ‘தன் மனக்கருத்தை அறிந்துதான் அமைச்சர் இப்படிப் பேசுகிறாரோ’ என்று கூட எண்ணினாள். ஆயினும் இனிச் சிந்திப்பதில் எவ்வித பயனும் இல்லை என்பதைக் கருத்திற் கொண்டு, அமைச்சரின் குறும்பைத் தன் தார ஏற்றுக்கொண்டு விட்டதை அமைச்சர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக “அரசரை நீங்கள் தூக்கிக்கொண்டு வரும் அளவுக்கு நான் தங்களுக்குச் சிரமங் கொடுக்க விரும்ப வில்லை. முடிந்தால் தாங்கள் திரும்பும்போது அவரையும் எமது விருந்தினராக அழைத்து வந்தாற் போதும்” என்று கூறி மெதுவாகச் சிரித்தாள். 

“கண்டிப்பாக ‘அரசர் இவ்விடம் வரத்தான் போகிறார் தேவி. நாம் அங்கிருந்து புறப்படு முன் தங்களுக்கு அறி விப்பேன். தற்போது பூதங்களை அழைத்துக் கொண்டு போவ தற்கு உத்தரவு வேண்டும் தேவி’ என்று அவர் பணிவுடன் வேண்ட அரசியும் “ஜெயத்தோடு திரும்பி வாருங்கள்’ என அமைச்சரை வாயார வாழ்த்தி விடையளித்தான். 

அமைச்சர் செல்வதையே பார்த்து நின்ற அரசி, அவர் கண்ணுக்கெட்டிய தூரம்வரை சென்று மறைந்ததும் தன் கையிலிருந்த கணையாழியை எடுத்து அதிற் பொருத்தப்பட் டிருந்த விலைமதிப்பற்ற இரத்தினக் கல்லை நோக்கினாள். அதில் தான் கற்பனை செய்து வைத்திருந்த மன்னரின் முகந் தெரிவது போன்றதொரு பாவனையில் அவள் தன்னை மறந்து நின்றபோது “தேவி.” என்ற குரல் பின்புறமாகக் கேட் கவே திரும்பினாள். அங்கே பூங்குழலி. “வெற்றி விழாவே கொண்டாட வேண்டிய மாபெரும் வெற்றி இதோ பார்த்தாயா?” என்று தன் கையில் இருந்த கணையாழியை அவ ளிடம் காண்பித்தாள் அரசி. 

“ஓ! அரசரின் ஞாபகச் சின்னமாக்கும்! அடுத்துத் திரு மணம்! அரசியின் திருமணம் என்றால் கேட்கவா வேண்டும்? நமக்கு நல்ல விருந்து கிடைக்கும்! அப்புறம் நாமெல்லாம் அந்தப்புரப் பக்கம் எட்டியும் பார்க்க முடியாது. அரசியைக் காண்பது கார்த்திகைப் பிறை காண்பது போலிருக்கும்.” என்று பூங்குழலி குறும்பு செய்ய அவள் தோளில் தட்டிக் கொடுத்த அரசி. 

“திருமணத்திற்கு அரசர் உடன்பட்டுவிட்டார். அது அமைச்சர் அவர்களின் வெற்றி என்றுதான் கூற வேண்டும். மன்னருக்கு ஒரு திருக்குளம் அமைக்க எமது பூதப்படை களின் உதவி தேவைப்பட்ட தாம். உடனே அமைச்சர் ஒரு நிபந்தனையைப் போட்டு விட்டார். அந்த உதவிக்குக் கைம் மாறாக அரசர் என்னைத் திருமணஞ் செய்துகொள்ள வேண் டும் என்பதுதான் அந்த நிபந்தனை. என் சம்மதமோ உத் தரவோ இன்றியே அமைச்சர் எல்லாவற்றையும் முடித்து விட்டாரடி என்மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. அமைச்சர் திரும்பவும் பூதப்படைகளை அழைத்துக்கொண்டு தட்சிண கைலாயம் போகப் போகிறார். அந்த வேலை முடிவுற்றதும் அரசரையும் அழைத்துக்கொண்டு அமைச் சர் திரும்புவார். 

“நீ கூறியது போல எங்கள் திருமணம் கூடிய விரை வில் நடக்கத்தான் போகிறது. ஆனால் நீ நினைப்பதுபோல் உன்னை மறந்துவிட மாட்டேனடி. ஆமாம்! அரசரின் அழ கையும் குணத்தையும் அமைச்சர் புகழ்ந்தபோது, நீ பக் கத்திலிருந்து கேட்டிருக்க வேண்டும். அவர் நிரம்பவும் அழகு வாய்ந்தவராம். ஆனால் அவர் பிறக்கும்போது அவருடைய நெற்றியில் விலங்குகளுக்கு இருப்பதுபோன்ற ஒரு சிறு கொம்பு இருந்ததால் அவருக்குக் குளக்கோட்டன் என்று பெயரிட்டார்களாம். ஆயினும் காலப்போக்கில் அந்தக் கொம்பு மறைந்துவிட்டாலும் பெயர் நிலைத்துவிட்டது. வெகு சுவையாகவும் இனிமையாகவும் பேசுவாராமடி. இப் படியாக அமைச்சர் தட்சிண கைலாயத்திலிருந்து வந்த நேரம் முதல் மன்னர் புகழ் பாடிக்கொண்டேயிருந்தார். நீ வருவதற்குச் சற்று முன்னர்தான் என்னிடம் விடை பெற்றுப் புறப்பட்டார்” என்று முடித்தாள் அரசி. 

அரசி கூறுவதையே மிகவும் உன்னிப்பாகவும் ஆர்வமா கவும் கேட்டுக்கொண்டிருந்த பூங்குழலி, ஏதோ நினைத்துக் கொண்டவளாய் அரசியிடம் விடைபெற்று அரண்மனையை விட்டு வெளியேறி நெடும்பாதை வழியாக நடந்து குறுக் கறுத்துச் சென்ற ஒரு பாதையின் முடக்கில் நின்றாள். அவள் அமைச்சர் விசித்திர பூகியின் வருகையை எதிர்பார்த் துத்தான் அங்கே நின்றாள், அப்போது குதிரைக் காலடி யோசை கேட்டது. அவள் சற்று முன்னால் நடந்து நடுப் பாதையில் நின்றபோது, மந்திரியின் குதிரை அவள் பக்கலில் கடிவாளமிட்டு நின்றது. அமைச்சர் குதிரையினின்றும் குதித்து இறங்கினார். 

“அமைச்சர் அவர்கள் சென்ற விடயம் எப்படி முடிந் தது என்பதை அறிய ஆவலாக இருந்தேன். அதற்குள் நாங்கள் பூதப் படைகளை அழைத்துக்கொண்டு மறுபடியும் தட்சிண கைலாயம் செல்லப் போவதாக அறிந்தேன். அதற்கு முன் தங்களைச் சந்தித்துவிட வேண்டும் என்கிற துடிப்பில் இங்கு வந்து காவல் நின்றேன். எப்படியும் தாங் கள் அரசியைச் சந்தித்துவிட்டு இவ்வழியாகத் தான் வரு வீர்கள் என்று தெரியும்,” என்று பூங்குழலி கூற, அமைச் சர் சிரித்தார் ‘நீ மிகவும் கெட்டிக்காரிதான்! ஆனால் நீ என்னை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளவில்லை என்று தான் துக்கமாக இருக்கிறது. நான் மீண்டும் தட்சிண கைலா யம் புறப்படுமுன் உன்னைச் சந்திக்காமற் பேவேன் என்று நினைத்தாயா…? உன்னிடம் நான் கொண்டுவந்த மகிழ்ச்சி யான செய்தியைக் கூறாமல் வேறு யாரிடங் கூறுவது? போகட்டும். நீ என் நடவடிக்கைகளை மட்டும் நன்றாக அறிந்து வைத்துள்ளாய். நான் சென்ற விடயம் ஏதாவது இதுவரை தடைப்பட்டது என்று சரித்திரமே இல்லை. பூங் குழலி. அது உனக்கும் தெரியும். நான் சென்ற விடயம் மகத்தான வெற்றியாக முடிந்துள்ளது என்றுதான் கூற வேண்டும். நான் எதிர்பார்த்துச் சென்றதற்கு மேல் பிர மாத வெற்றி. மன்னர் குளக்கோட்டனுக்கென்றே அரசி ஆடக் சவுந்தரி பிறந்துள்ளார் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். 

“பூங்குழலி! உனக்குப் பரம இரகசியமான ஒரு செய்தி கூறப் போகிறேன். உன்னிடம் எனக்கு எவ்வளவு அன்பும் பாசமுமுண்டோ அவ்வளவு விசுவாசம் உண்டு. அதனால் தான் இரகசியம் என்றேன். இதுபற்றி யாரிடமும் மறந்து கூட மூச்சு விட்டு விடாதே. ஆமாம்! அரசியின் பிறப்பைப் பற்றி அரசர் எணக்கொருவியப் பான வரலாற்றையே கூறி விட்டிருக்கிறார்,” என்று தான் அறிந்த கதையை அப்படியே பூங்குழலிக்கு எடுத்துச் சொன்னார் அமைச்சர். அதைத் தொடர்ந்து அவர் மன்னனின் பிறப்பைப் பற்றியும் அவரு டைய மந்திரி தனக்கொரு செய்தி சொன்னார் என்று முடிப்பதற்குகுள் ‘குளக்கோட்டன் என்ற பெயரிடக் கார ணந்தனே?” என்று பூங்குழலி இடைமறிக்க. அமைச்சர் வியப்போடு ‘ஆ.. அது உனக்கெப்படித் தெரிந்தது!’: என்று ஆச்சரியத்தோடு வினவினார். 

“உங்களுக்குத் தெரிந்த இரகசியம் அரசி மூலமாக எனக் குந் தெரியவந்தது,” என்று கூறிச் சிரித்தாள் பூங்குழலி. அவளுடைய களங்கமற்ற ‘கலகல’ என்ற சிரிப்பு அந்த நெடும் பாதையெங்கும் எதிரொலித்தது. 

”நீ அரசியின் அந்தரங்கத் தோழியல்லவா? காதல் விவகாரங்கள் கூட உனக்குத் தெரிந்திருப்பதில் ஆச்சரிய மில்லை. அரசி உன்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார். என்பதை இதன்மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. எனக் குப் பொறாமையாகக் கூட இருக்கிறது. போட்டும்! அரசியும் அரசரும் சோழ நாட்டைச் சேர்ந்தவர்களாய் விட்டார் கள். அதிற்கூட அவர்களிடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமையைப் பார்த்தாயா? 

“அதிருக்கட்டும் பூங்குழலி! நீ அரசியின் திருமணத் தைப் பற்றித்தானே கவலைப்படுகிறாய்? அரசர் சம்மதத்தின் அறிகுறியாகக் கணையாழிகூடத் தந்துவிட்டார். அரசியிடம் அதையுங் கொடுத்துவிட்டேன். ஆமாம்! இவ்வளவும் சொன்ன அரசி இதுபற்றி உன்னிடங் கூறவில்லையா?” என்று விளையாட்டாகக் கேட்டார் அமைச்சர். 

“அதை மட்டும் காட்டாமல் இருப்பாரா அரசி… அதைக்கூடக் காட்டத்தான் செய்தார்கள். நான்தான் அது பற்றி உங்களிடம் பிரஸ்தாபிக்க மறந்து விட்டேன்,” என்று சமாதானஞ் சொன்னாள் பூங்குழலி. 

“மிக்க மகிழ்ச்சி பூங்குழலி! எனக்கு நேரமாகிறது. இனி, சிவகாமி அக்காவிடம் சென்று விடைபெற்று, பூதப் படைகளை அழைத்துக் கொண்டு தட்சிண கைலாயம் சென்று திருக்குள வேலையை முடிக்க வேண்டும் அதன் பின்னர் தான் நம் அரசியின் திருமணம்பற்றி அரசர் சிந்திப்பார். நமது அரசியின் திருமணம் நிறைவேறியதும் அடுத்து உன் னுடையதுதான்,” என்று கூறிவிட்டு அமைச்சர் குதிரையில் ஏறி அமர்ந்ததும், பூங்குழலி நாணத்தினால் முகஞ் சிவக்க, “முதலில் அரசியாரின் திருமணத்தைக் கவனியுங்கள்” என்றாள். “நான் திரும்பும்போது அரசரை எமது ‘அரண் மனை விருந்தினராகவும் எம் அரசியின் மணமகனாகவும் அழைத்து வருவேன் பூங்குழலி” என்று ஆணையிட்டு விரைந்து செல்லும் அமைச்சரையே பார்த்து நின்றாள் பூங்குழலி. சிறிது தூரஞ் சென்ற அமைச்சர் தன் வீட்டுக்குச் சென்று மனைவியிடம் தான் சென்று வந்த செய்தியையும் கூறி, மேலும் தான் உடனடியாகச் செல்ல வேண்டியிருப்பதையும் கூறி விடைபெற்றுக்கொண்டு, தன் பயணத்தைத் தொடர்ந்தார். 

பல மலைகளையும் நதிகளையும் கடந்து ஒரு சமதரை யான அகன்ற வெளிக்குச் சென்று மனுநேய கயவாகு வேந் தன் தனக்கு உபதேசித்துத் தந்த மந்திரத்தின் உதவியால் ஒரு சில பூதங்களை அழைத்துக்கொண்டு திருகோணமலையை நோக்கி விரைந்தார். 

தட்சிணகைலையில் அமைச்சர் கலிங்கராயர், மந்திரி விசித்திரயூகியாரையும் பூதப்படைகளையும் வரவேற்று உப சரித்துப் பூதப்படைகளை ஓரிடத்தில் ஆறும்படி விடுத்து, மந்திரியை மட்டும் அழைத்துக் கொண்டு அரசனிடம் சென்றார். 

விசித்திரயூகியாரைக் கண்ட மன்னன் மனம் நிறைந்த மகிழ்வோடு அவரை வரவேற்று ஆசனத்திலிருத்தி உபசரித் தான். அதன்பின் உன்னாச்சிகிரியின் சேமலாபங்களைப் பற்றி விசாரித்தபின் “அரசியின் முடிவு என்ன?” என்று வின வினார். 

அரசனது வேண்டுகோளை அரசி மதித்துக் கண்ணியப் படுத்தி அவருக்குத் திருக்குளத்து வேலைகளில் உதவுமுக மாகப் பூதப்படைகளை அனுப்பியுள்ளதாகக் கூற, அரசன் மகிழ்ந்து அரசிக்கும் மந்திரிக்கும் நன்றி செலுத்தினான். 

அப்போது கலிங்கராயர் கோயில் திருப்பணி வேலைகள் யாவும் சொன்ன பிரகாரம் முடிந்து விட்டனவென்றும் மந் திரி விசித்திரயூகியாரும் வந்துவிட்டதால் கும்பாபிஷேகத்தை முடித்து விடலாம் என்றும் யோசனை கூற, மன்னன் உடனே அரண்மனை ஜோதிடர்களை அழைத்து நாள் பார்க்கும்படி சொல்ல, அவர்கள் புதன்கிழமை நல்ல நாள் என்று கணித் துக் கொடுத்தனர். வசிஷ்டருக்கு ஏற்கனவே அறிவித் திருந்தபடியால் மரக்கலத்தில் சேவகர்கள் சிலரைச் சோழ மண்டலத்துக்கு அனுப்பி அவரை அழைத்து வரும்படி பணித்தான். 

குறிப்பிட்ட நாளில் வசிஷ்டரும் வந்திறங்கினார். அர சன் அளவு கடந்த சந்தோஷங்கொண்டு வீதிகளெல்லாம் பூப்பந்தர்களிட்டு வாழைகள் கட்டிப் பூரண கும்பங்களும் பாலிகைகளும் வைத்து விளக்கேற்றி. சொர்ணலோகம் போலச் சிங்காரஞ் செய்வித்தான். அதன் பின்பு வசிஷ்ட முனிவர் கும்பாபிஷேகத்துக்குச் செய்ய வேண்டிய கிரமங் களனைத்தையும் விதிப்படி செய்து முடித்துத் தேவர்கள் புஷ்பமாரி பெய்ய, முனிவர்கள் வாழ்த்தொலி எழுப்ப, மங் கல வாத்தியங்கள் முழங்க, விபூதி பஞ்சாட்சாருத்திராட் சத்தின் மேன்மை விளங்க, சிவனடியார்களின் வினைகள் நீங்க, தானதருமங்களோங்க குளக்கோட்டு மகாராசனது மனம் மகிழ்ச்சியடைய, சைவசமயம் தழைத்தோங்க, கோண நாயகரையும் பிடியன்ன மென்னடை யம்மையையும் இரத் தின சிங்காசனத்தின் மீது தாபித்து வேதவிதிப்படி கும்பா பிஷேகஞ் செய்து பின்பு விநாயகர் சுப்பிரமணியர் முதலிய தேவர்களையும் அவரவர்க்குக் கட்டப்பட்ட ஆலயங்களில் வைத்துப் பிரதிஷ்டை செய்து. குளக்கோட்டு மகாராசனுக் கும் ஆசீர்வாதஞ் செய்து வசிஷ்டமுனிவர் சோழநாடு திரும்பினார். 

அதையடுத்துக் காலதாமதமின்றித் திருக்குளத்தின்வேலை களைப் பூர்த்தி செய்ய வேண்டுமென மந்திரி பணித்ததற் கிணங்க அரசன் மந்திரிகள் பிரதானிகள் படைகள் புடை சூழ, திருக்கோணநாயகர் ஆலயத்திற்குச் சென்று அவரைப் பணிந்து விடைபெற்றுச் சென்று ஒரு குளிர்ந்த சோலையில் அழகான மண்டபம் கட்டி முடிப்பித்து, மந்திரி பிரதானி களுடன் தங்கியிருந்தார். 

மந்திரி விசித்திரயூகியார் தான் அழைத்து வந்த பூதங் களைக் கூப்பிட்டுத் திருக்குள வேலைகளை ஆரம்பிக்கும்படி கட்டளையிட்டார். உடனே பூதங்கள் விரைந்து சென்று மரங்களைப் ஊற்றுக்காணும்படியாக மண்டபப்படி லெட்டி இருமலைகளையும் ஒன்றாய்ப் பொருத்திக்கட்டி, அலை கள் மோதிக் கட்டை உடையாதிருக்கும்படியாகப் பெரிய கற்களை அடுக்கிக் கட்டின. அப்போது குளக்கோட்டு மகா ராசா ஆலயத்திருப்பணி செய்வதற்காகச் சோழ நாட்டி. லிருந்து வரவழைக்கப்பட்ட ஐந்து ஆசாரிமார்களையும் அழைத்து அவர்களிடம் ஏதோ கூறினார். அவர்கள் அரசன் கட்டளைப்படி மண்டபப்படியிலிருந்து மதகு வரையுஞ் செப்புப்பீலி வைத்துக் கபால சூத்திரம் போல இடைகலை பிங் கலை சுழுமுனையாக மதகுகளை வகுத்துக் கட்டி விசைகொண்டு வருகின்ற நீரானது வந்து விழுந்து ஆறிப் பாயும்படி உட லமையக் கிணறு, சிரமமையக் கிணறு என்னும் இரண்டு கிணறுகளையும் கட்டி முடித்தனர். தண்ணீர் அதிகம் ஓடா மலும் நில்லாமலும் போகவரத்தக்க இரண்டு நாசிமதகுங் கட்டி, அம்மதகுகளின் மேல் சிகர குப்பாயமாகக் கற்பலகை களைப் பரவி, கிழக்குப் பக்கத்திலுள்ள மையக்கிணற்றில் வந்து விழுகின்ற எவற்றையும் வெட்டித் தள்ளும்படி சக் கராகிருதியாக ஓர் இயந்திரம் வைத்துத் தேவர்களும் வியக் கக் கூடிய பிரகாசமாகக் குளம் கட்டி முடித்தார்கள். 

பூதங்கள் அக்குளத்திலிருந்து தண்ணீர் பாய்ந்து நெல் விளையக்கூடிய இரண்டாயிரத் தெழுநூறு அவண நெல் விதைக்கும் வயல் வெளிகளையும் திருத்தி அவ்வெளிக்கு நீர் பாயக் கூடிய விதமாக வாய்க்கால்களையும் வெட்டி மகாவலி கங்கை நீரும் குளத்தில் வந்து விழும்படி செய்து முடித்த பின் கொட்டியாபுரத்திலுள்ள காடுகளை வெட்டித் திருத் திக் கதலி, பலா, மா, புன்னை, இலுப்பை முதலிய மரங் களை அதிகமாக வைத்து அலங்காரமான் சோடையாக்கி அவ் விடத்திலுமுள்ள வயல்வெளிகளைத் திருத்தி முடித்தன. 

பின்னர் ஆசாரிமார்கள் திருக்குளத்தின் பெரிய மதகுக் கும் கதவு போட்டுப் பூட்டிவிட்டுத் திறவுகோலைக் குளக் கையிற் கொண்டுவந்து ஒப் படைத்தனர். அப்போது குளக்கோட்டு மகாராசா அமும் முகமும் மகிழ உள்ளம் பூரித்து அமைச்சர் கலிங்கராயருடனும் விசித்திரயூகியாருடனும் சென்று திருக்குளக் காட்சி யைப் பார்த்து, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து கோணநாய கரின் அருளை நினைந்து வியந்தார். 

அத்தியாயம்-12 

கோணநாயகரின் அருளினாற்றான் திருக்குளத் திருப் பணி இவ்வளவு விரைவாகவும் சிறப்பாகவும் முடிவுற்றது என்று மன்னன் மந்திரி விசித்திரபூகியாரிடம்கூறிக்கொண்டே திருக்குளத்தைப் பார்த்து உவகை மேலுந்தத் தன்னை மறந்து நின்றார். மகாவலிகங்கை நீரானது சிறுகச் சிறுக வந்து குளத்தில் விழுந்து சங்கமமாகிக் கொண்டிருந்தது. அது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. அந்தக் காட்சியைக் கண்குளிரப் பார்த்து நின்ற மன்னன் இன்னு மொரு விடயத்தையும் காணத் தவறவில்லை. 

மகாவலிகங்கை நீரானது வரவர அதிகரித்துத் திருக் குளத்தின் நீர்மட்டத்தை உயர்த்தியது. இதனால் அச்சமும் பீதியும் திகிலுமடைந்த மன்னன் மதகுகளில் ஒன்றைத் திறக்கா விட்டால் கங்கை நீரானது நிறைந்து குளக்கட்டை உடைத்து நாட்டையே அழித்துவிடும் என்று மதகைத் திறக்க யார் வல்லார் எனச் சிந்திக்கத் தொடங் கினார். அப்போது அவருக்குக் காத்தற் கடவுளாகிய விஷ்ணு மூர்த்தியின் ஞாபகம் வரவே அவர் விஷ்ணுமூர்த்தியை நினைத்து மனதாரப் பிரார்த்திக்கத் தொடங்கினார். 

குளக்கோட்டு மகாராசாவின் பிரார்த்தனைக்கு இரங் கிய காத்தற் கடவுளாகிய விஷ்ணுவும் உடனடியாக அவர் முன் தோன்றியருளினார். குளக்கோட்டு மகாராசா தன் முன் தோன்றிய கடவுளின் பாதங்களைப் பிடித்துச் சாஷ் டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து ‘சுவாமி! நான் கோண நாயகருக்குக் குறைவில்லாதிருக்கும் பொருட்டாக இந்தத் திருக்குளத் திருப்பணியை மிகுந்த சிரமத்துடன் நிறைவேற் றினேன். திருக்குள வேலைமுடிந்து விட்டது என்று மன மகிழ்ந்து இறும்பூ தெய்தி நிற்கும் இந்த வேளையில் ஏதோ தெய்வகுறை நேர்ந்துவிட்டதுபோல் கங்கை நீர் பிரவாக மெடுத்துக் குளத்தை நிரப்புகிறது. இதற்கு ஏதாவது வழி வகை செய்யாது விட்டால் இன்னும் சிறிது நேரத்தில் குளக்கட்டே இடிந்து நாசம் விளைந்து விடும். அதனால் மதகு திறந்து நீரை வெளியேற்ற வேண்டும். அது தேவரீரைத் தவிர வேறு யாரால் முடியும். அதனால் தயைசெய்து இந்த உதவியைச் செய்தருள வேண்டும்” என்று அவர் பாதங் களைக் கெட்டியாகப் பிடித்துக் கண்ணீர் சிந்திக் கேட்டார், 

அவர் கூறியதைக் கேட்ட விஷ்ணு மூர்த்திக்குக் கங்கை பெருக்கெடுத்ததன் நோக்கம் விளங்கி விட்டது. அதனால் அவர் குளக்கோட்டு மகாராசனை நோக்கி ‘அரசனே! எழுந் திரு. நீ இந்தத்திருப்பணியைத் தொடங்கும்போது விக்கி னேஸ்வரப் பெருமானை நினையாது விட்டதால் ஏற்பட்ட குறைதான் இது. ஆகவே உடனடியாக இக்குளக்கட்டின ருகில் விக்னேஸ்வரப் பெருமானை ஸ்தாபிப்பதே அதற் கேற்ற பிராயச்சித்தம்” என்று சொல்லித் திருக்குளத்தின் அருகில் ஒரு விநாயகரை ஸ்தாபித்தார். அதன்பின் அவ ருக்கு அபிடேகஞ்செய்து, முக்கனிகள் பணிகாரம், அவல், எள்ளுருண்டை முதலியவைகளை நிவேதித்து, விதிப்படி பூசைசெய்து முடித்தார். குளக்கோட்டு மகாராசன் தான் செய்த குற்றத்திற்காக விநாயகர்முன் ஆயிரந் தோப்புக் கரணம் போட்டு மன்றாட்டமாக வேண்டிக் கொண்டார். அதன்பின் விஷ்ணுமுர்த்தி மண்டூக ரூபங் கொண்டு குளத் துட் பிரவேகித்து விநாயகரை மனத்துட் பிரார்த்தித்தபடி மதகைத் திறந்தார். என்ன ஆச்சரியம்! அங்கே நிரம்பி வழிந்த நீர் மதகின் வழியாக விநாயகரை வலஞ் செய்து சுற்றியிருந்த வயல் வெளிகளெல்லாம் பாயத் தொடங்கியது 

அக்காட்சியைக் கண்ட குளக்கோட்டு மகாராசா பரமா னந்த மடைந்து விஷ்ணுமூர்த்தியை நோக்கி “சுவாமி! எக்காலமும் இத்திருக்குளத்துக்கு யாதொரு குறையும் ஏற் படாதவாறு தேவரீரே காத்தருள வேண்டும்” என்று பணி வுடன் வேண்டினார். அதற்கு விஷ்ணு மூர்த்தி மகாராசனை நோக்கி “நானும் பிரமதேவனும் அடிமுடிதேடி இன்னும் காணாதிருக்கும் சிறப்புப் பெற்ற கோணநாயகருக்காகவே நீ இக்குளத்தைக் கட்டி முடித்தாய். இதற்கு யாதொரு குறையும் வராமல் நான் பாதுகாத்தருள்வேன். நீ கலங்க வேண்டாம்” என்று திருவாய்மலர்ந்தருளினார். 

பின்பு, விஷ்ணுமூர்த்தி விநாயகரைத் தோத்திரஞ் செய்து கொண்டு, அண்ணமார், வதனமார், நாயமார், மங்கலர்,காள மாமுனி, இலங்கைச் சந்தி காவலர் முதலி யவர்களையும் ஏழு இராசாக்களையும், வைரவக் கூட்டங்களை யும் காளி, பத்தினி முதலியவர்களையும் குளக்கட்டிற் காவ லாக நிறுத்தி, அவர்களை நோக்கி “ஒருவருடம் பாற்பொங் கல். ஒருவருடம் பழம் பாக்கு வெற்றிலை முதலியவைகளில் மடை குறைவில்லாமல் உங்களுக்குக் கிடைக்கும் ஒருகாலங் குறைவு கண்டாலும் நீங்கள் மனதிற் கிலேசமடையாமல் திருக்குளத்தைச் சுற்றிப் பார்வையிட்டுப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இருபத்தெண்ணூழி சென்ற பின் யாமிவ்விடம் வந்து உங்கள் குறைகளைப் தீர்ப்போம். இது மட்டுமன்றி மழையில்லாத காலத்தில் விதிமுறையாகப் பச் சைப்பட்டுக் கொண்டு வந்து நேருவார்களாகில் மழையுண்டாகும்படிக்கும் கிருபை செய்யுங்கள்” என்று கட்டளை யிட்டுப் பின்பு குளக்கோட்டு மகாராசனை நோக்கி, “நானிப் போது சொல்லிய பிரகாரம் வருடந்தோறும் குறைவின்றி இவற்றை நடாத்திவா” என்று திருவாய் மலர்ந்து மறைந் தருளினார். 

குளக்கோட்டு மகாராசா விஷ்ணுமூர்த்தி கூறிய பிரகா ரம் வேள்வி முதலிய சடங்குகளை நிறைவேற்றி, விநாயகக் கடவுளிடம் விடைபெற்று மந்திரிமாரையும் அழைத்துக் கொண்டு தம்பல காமத்துக்குப்போய் வயல்வெளிகளின் சிறப்பையும் கண்டு அவ்வழியே தட்சிண கைலாயந் திரும்பினார். 

அதன்பின் குளக்கோட்டு மக ராசா கோணநாயகர் ஆலயஞ் சென்று கோணநாயகரையும் பிடியன்னமென்டையம் மையையும் வணங்கி • அடியவனாகிய யான் செய்து முடிப் பித்த திருக்குளமானது எக்காலமும் மாறாமடை பாயவும் வயல் வெளிகளெங்கும் விளைவு பெருகவும் அருள்புரிய வேண்டும்” என்றும் பிரார்த்தித்து அனுக்கிரகம் பெற்றுக் கொண்டு தன் அரண்மனைக்குச் சென்றார். 

அதன்பின் மந்திரி பிரதானிகளையழைத்து ஒருபடியாகத் திருக்குளத்திருப்பணியும் முடிவுற்று விட்டது. வயல் வெளி களையும் திருத்தி விட்டோம். ஆகையால் அவ்விடங்களிலி ருந்து செந்நெல் விளைவு உண்டாவதற்கு மிகுந்த குடிசனங் கள் வேண்டும். ஆகவே மந்திரி கலிங்கராயர் அவர்கள் உத்தரதேசஞ் சென்று குடிசனங்களை அழைத்துவர வேண்டும் என்று கட்டளையிட்டார். மந்திரியும் அவர் ஆணைக்குட் பட்டு உத்தர பிரதேசஞ் சென்று குடிசனங்களை அழைத்து வந்தார்’ 

அக்குடிசனங்களைக் கண்ட குளக்கோட்டு மகாராசா அகமகிழ்ந்து அவர்களைத் தம்பல காமம் கொட்டியாபுரம் என்னும் பகுதிகளிற் குடியேற்றி அவர்களுக்கு வேண்டிய பொருள்கள் உதவி, விளை நிலங்கள் கொடுத்து. சீரும் சிறப்பு மாக வாழச் செய்தான். அவர்களும் அரசர் ஆணைப்படி அந்நிலங்களை வளம்படுத்தி நெல்சாகுபடி செய்தனர். 

அதன்பின் கரையூர் சென்று அங்கிருந்து இருபத்தொரு குடிகளை அழைத்துக் கொண்டு வந்து விளைநிலம் முதலியன கொடுத்து, திருக்கோணாசல நகரிற் குடியிருத்தினார். அதன் பின்னரும் மன்னரின் மனம் அமைதி கொள்ளவில்லை. குடி சனங்களுக்கேற்ற வாழ்க்கை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றுங் கருதினார். ஆகவே கொல்லன், குயவன் ஏகாலி, நாவிதன் வள்ளுவன் ஆகிய தொழிலாளர்களில் ஒவ்வொரு குடிமகனை அழைப்பித்து அவர்களுக்கு வேண்டிய பொருள்களுமுதவி ஐந்து குடிமைகளையும் திருக்கோணை நக ரிற் குடியிருத்தினார். 

அதன்பின்பு தானத்தராகிய முப்பது குடிகளையும் அரண் மனைக்கழைத்து அவர்களிடம் நீங்கள் கோணநாயகருக்குச் செய்யுந் திருத்தொண்டுகளைச் சொல்லப் போகிறேன் கவனித் துக் கொள்ளுங்கள் என்று கூறத் தொடங்கினார். திருக் குளத்திலுள்ள ஏழு இராசாக்களுக்கும் பீதாம்பர மீதல், அறை முதலில் வரவு செலவுக் கணக்கெழுதல், திருச்சூக ரத்திருவிளையாட்டு நடித்தல், ஆதியனவற்றைக் கிரமமாகச் செய்ய வேண்டும் என்று பணித்து அவர்களில் ஏழு ஆண் களைத் தெரிந்தெடுத்து அவர்களுக்கு இராயரென்னும் பட் டமும் அவர்களின் பெண்களுக்கு மாணிக்கங்களெனப் பெய ரூம் கொடுத்தார். 

பட்டமளிக்கப்பட்டவர்களை நோக்கி “நீங்கள் ஏழுபே ரூம் கோணநாயகருக்கு முன்பாக நடனஞ் செய்தல் ஆலத்தி எடுத்தல்,கோண நாயகர் திருச்சூகரத் திருவிளையாட்டுக்கு எழுந்தருளும்போது சுவாமிக்குமுன் ஈட்டிகளைக் கொண்டு சென்று திருச்சூகரத் திருவிளையாட்டு முடிந்தபின் உள்மண் டபத்தில் நின்று சகலருக்கும் மஞ்சன நீருற்றல் முதலியற்றை ஒழுங்காகச் செய்ய வேண்டும்” என்று பணித்துக் கோயில் தொழும்புசெய்ய விடுத்தார்.

– தொடரும்…

– கோவும் கோயிலும் (நாவல்), முதற் பதிப்பு: ஜனவரி 1980, நரெசி வெளியீடு, திருகோணமலை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *