கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: September 10, 2023
பார்வையிட்டோர்: 2,895 
 

(1984ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

26 – 30 | 31 – 35 | 36 – 40

31. அசைந்த கன்னம்! விசித்திர விலாசம் 

அன்று பகல் புலவர் உத்தரவுப்படி கடல்வேந்தனை அவனது மரக்கலத்தில் சந்தித்துப் புலவரின் அழைப்பை அவனுக்கு அறிவித்ததும், கடல்வேந்தன் புலவர் உத் தரவைச் சிரம் தாழ்த்தி அங்கீகரித்தான். “மரக்கலத்தில் சில சில்லறை வேலைகள் இருக்கின்றன. அவற்றைச் சீர் செய்து விட்டு மாலை வருவதாகப் புலவரிடம் தெரிவி யுங்கள்” என்று கூறிய கடல்வேந்தன், சிறிது சிந்தித்து விட்டு “தலைவரே! என்னுடன் நிலக்கள்ளியும் வருவதைப் பற்றித் தங்களுக்கு ஆட்சேபனையில்லையே?” என்றும் கேட்டான் 

துறைமுகத் தலைவன் முகத்தில் வியப்பைப் படF விட்டுக் “சேரமன்னரின் கொண்டான். கடற்படைத் தலைவர் வருவதையோ, அவரைச் சேர்ந்தவர்கள் வருவதையோ நான் எப்படி ஆட்சேபிக்க முடியும்?” என்று வினவினான் அவன், குரலிலும் வியப்பு ஒலிக்க. 

“ஆட்சேபனையில்லை என்பது ஒன்று. அன்புடன் அழைப்பது வேறொன்று” என்று சுட்டிக்காட்டினான் கடல் வேந்தன். 

“நான் சம்பந்தப்பட்ட வரையில் தங்களை அழைப் பதில் புலவரின் ஆணையும், என் அன்பும் இரண்டுமே கலந்திருக்கிறது. தங்களைப் போன்ற ஒரு மகாவீரர் எனது இல்லத்துக்கு விஜயம் செய்வதை நான் பெருமை யாகக் கருதுகிறேன்” என்று பதில் சொன்னான் துறைமுகத் தலைவன். 

அந்தப் பதிலில், மேலுக்கு அன்பு குழைந்தாலும் உள்உதறல் இருப்பதைக் கவனித்த கடல்வேந்தன் புன்முறுவல் கொண்டு, “மாலை கண்டிப்பாய் வருகிறேன், தந்தை கட்டளையையும், தங்கள் அன்பையும் அனுப என்று சொல்லி அவன் போவதற்கு அனுமதி கொடுத்தான். 

அந்தக் கப்பலிலிருந்து தப்பினால் போதுமென்று நினைத்த துறைமுகத் தலைவன் வெகுவேகமாக நூலேணி இறங்கி கீழிருந்த படகைத் தானே துடுப்புகளால் ழாவிக்கொண்டு கரை சேர்ந்தான். புலவரை உடனடி நாகச் சந்தித்துக் கடல்வேந்தன் பதிலையும் தெரிவிக்கவே புலவர் மிகுந்த உற்சாகப்பட்டு, “ஆயிரம் பேர் இருந் நாலும் சுடல்வேந்தனுக்கு இணை யார் இருக்க முடியும்? என்று வினவியதன்றி, ‘துறைமுகத் தலைவரே! நன்று செய்நீர்! உமது தூது பயன் அளித்திருக்கிறது. இன்றிரவு கடல்வேந்தன் நம்முடன் உணவருந்துவான் அதற்கு ஏற்பாடு செய்யும். மன்னனுக்கு அளிக்கப்படும் விருந்துக்கு குறைந்திருக்கக் இது பிறிதளவும் கூடாது என்றும். கூறினார். 

துறைமுகத் தலைவன் அவர் அறையிலிருந்து மிகுந்த இத்தனையுடன் வெளியேறினான்: ”இந்தப் புலவர் என்ன கிேறார் என்பது எனக்கு விளங்கவில்லை. நான் என்ன பிரமாக தது சென்று விட்டேன்? என்ன பிரமாத ற்றியடைந்து விட்டேன்? இவர் அழைப்பைத் தெரி பிதன், அந்தக் கொள்ளைக்காரன் ஒப்புக் கொண்டான். இவ்வளவுதானே? என்று தன்னைக் கேட்டுக்கொ ான் கடல்வேந்தன் வந்த நாளாய் எல்லாமே விசித்திர நடப்பதை எண்ணிப் பார்த்தான். இதில் ஏதோ மர்மம் இருப்பதை தான் உணர்ந்தாலும் அது என்னவென்பது அவனுக்கு விளங்காததால், குழம்பிய வனத்துடன் அன்று பகலைக் கழித்தான். மாலையில் கடல் வேந்தனை எதிர்கொள்ள சகல ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கினான். 

துறைமுக நகரின் முகப்பிலுள்ள படகு தங்கும் கரையில் சேர வீரர்களை நிற்க வைத்தான் கரை முகப்பிலிருந்த தளைகளில் பிணைக்கப்பட்டிருந்த சாதாரணப் படகுகள் அகற்றப்பட்டு, கடல்வேந்தன் படகை மட்டும் பிணைக்க ஏற்பாடு செய்திருந்தான். அவன் உத்தரவுப்படி அவன் மாளிகையும் விழாக்கோலம் பூண்டது. பற்பல விதமான விளக்குகள் துடைக்கப்பட்டு எண்ணெய் திரி இடப்பட்டு, மாலை வந்ததும் ஏற்ற சித்தம் செய்யப்பட்டன. 

ஆனால், அத்தனை ஏற்பாடுகளுக்கும் தகுந்தவன் என்ற முறையில் கடல்வேந்தன் அன்று மாலை துறைமுகக் கரை யில் வந்து இறங்கினான். சேரர்கள் கடற்படைத் தலைவ னுக்கு ஏற்பட்ட உடைகளை அணிந்தும், காலுக்கு மட்டும் அராபியச் சராய் அணிந்தும், இடையில் தனது பெரிய வாளைத் தொங்கவிட்டுக் கொண்டும் கரையில் குதித்துத் தன்னுடன் வந்த நிலக்கள்ளியைக் கைகொடுத்துத் தூக்கி விட்டன 

நிலக்கள்ளி அன்று பெரிய அரசகுமாரி போல் காணப் பட்டாள். அவள் இடையில் சோழநாட்டுச் சரிகை வேலைப்பாடமைந்த அழகிய நீலப்பட்டுச் சேலை காணப் பட்டதால், படகிலிருந்து கடல்வேந்தன் கையைப் பற்றி ஏறிய அவள், கடலிலிருந்து எழுந்த தேவதை போல் காணப்பட்டாள். அவள் குழல் எடுத்து முன்புறம் கொண்டையிடப்பட்டு ஒரு முத்துச்சரத்தால் பிணைக்கப் பட்டிருந்தது. மார்புக்கச்சையை மறைக்க முயன்று மேற் புறம் மூடியிருந்த மெல்லிய மேலாடை மார்புக்கு ஒரு தனி அழகைக் கொடுத்திருந்தது. அவள் கழுத்திலாடிய நவரத்தின மாலை விலைமதிக்க முடியாதிருந்தது. அதன் மாணிக்க முகப்பு மிகவும் உயர்ந்ததுதான். ஆனால் அவள் இதழ்ச் சிவப்புடன் அதனால் போட்டிபோட முடிய வில்லை. 

இப்படி கரையேறி வந்த இருவரையும் துறைமுகத் தலைவன் தலைதாழ்த்தி வரவேற்றான், “தாங்கள் நகரத் துக்கு வரவேணும்” என்று முகமனும் கூறினான். வணக்கத்துக்குப் பதில் வணக்கம் செய்யத் தலைதாழ்த்திய 
கடல் வேந்தன் “தலைவரே! தங்கள் விருந்தினரை வரவேற்கும் முறையிலேயே சேரநாட்டுப் பண்பு இருக்கிறது” என்று அவனும் பதில் சொல்லிவிட்டு நடக்கத் தொடங் தினான். 

“தங்களை அழைத்துச் செல்ல ரதம் வந்திருக்கிறது” என்று எட்ட நின்றிருந்த இரட்டைப் புரவி ரதத்தைக் காட்டினான் துறைமுகத் தலைவன். 

அதைச் சிறிது நேரம் கூர்ந்து நோக்கிய கடல்வேந்தன், “இந்த ரதத்தை எங்கு கொள்ளையடித்தீர்?” என்று வினவினான். 

துறைமுகத் தலைவன் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது, “கொள்ளையடித்தேனா?” என்று பதிலிலும் அதிர்ச்சியைக் காட்டினான். 

நிலக்கள்ளி நகைத்தாள். “தவறாக நினைக்காதீர்கள் துறைமுகத் தலைவரே! கொள்ளைக்காரருக்கு என்ன வேடம் போட்டாலும் சுயபுத்தி போகாது. இவரைப் போல் எல்லாரும் கொள்ளையால் தான் எல்லாவற்றையும் சம்பாதிப்பதாக நினைக்கிறார்” என்று சமாதானம் சொன்னாள் 

கடல்வேந்தன் அவளைத் திரும்பி நோக்கி, “நிலக்கள்ளி! நான் கொள்ளையடிக்காவிட்டால் இந்தச் சேலை, அந்த முத்துச் சரம் இந்த நவரத்னமாலை எல்லாம் உனக்கு எப்படி கிடைக்கும்?” என்று வினவினான். 

நிலக்கள்ளி முறுவல் கொண்டு, “கொள்ளையடித்தது. இவற்றை மாத்திரந்தானா?” என்று கேட்டு ரதத்தில் சென்று ஏறிப் புரவியின் கடிவாளங்களைக் கையில் ஏந்திக் கொண்டாள். அவள் பின்னால் கடல்வேந்தனும் ஏற ரதம் பறந்தது ஊருக்குள். 

அவள் பேச்சையும், தனக்கு சொல்லக்கூட இல்லாமல் இருவரும் ரதத்தில் பறந்து விட்டதையும் பார்த்த துறைமுகத் தலைவன் பக்கத்திலிருந்த காவலன் புரவி யொன்றை வாங்கிக்கொண்டு, தன் மாளிகை நோக்கி விரைந்தான். அவன் மாளிகையை அடையுமுன்பு புலவர் அறையில் கடல்வேந்தனும், நிலக்கள்ளியும் பேசிக் கொண் டிருந்தார்கள். அவன் வந்ததும் “தலைவரே! நீரும் அமரும். முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறோம்” என்று அவனையும் உட்காரப் பணித்தார் புலவர், 

அவன் அமர்ந்ததும் புலவர்,சொன்னார் “சேரநாட்டுத் துறைமுகங்களுக்கு முன்பிருந்த பாதுகாப்பு இப்பொழுதில்லை” என்று. 

துறைமுகத் தலைவனுக்கு ஏதும் விளங்காததால். “அப்படியொன்றும் ஆபத்தில்லையே” என்றான். 

“தொண்டியில் முன்பு இருந்த யவனர் குடியிருப்பில் எத்தனை பேர் இருந்தார்கள்?” என்று புலவர் கேட்டார்.

“மிஞ்சினால் இருநூறு குடும்பங்கள் ஆரம்பத்தில் இருந்தன” என்று பதில் கூறினான் தலைவன். 

“இப்பொழுது?” புலவர் கேட்டார். 

“இரண்டு மடங்கு இருக்கும்,” என்றான் தலைவன். இதை எதற்காக புலவர் விசாரிக்கிறார் என்பதை அறியாமல். 

“இரண்டு மடங்கில் இப்பொழுது எவ்வளவு பேர் இருப்பார்கள்?” புலவர் மீண்டும் கேட்டார். 

“சொல்ல முடியாது. இங்குள்ள யவனர்கள் அடிக்கடி வாணிபத்துக்காக முசிறி போகிறார்கள். திரும்பவும் வருகிறார்கள்,” என்றான் துறைமுகத் தலைவன். 

கடல்வேந்தனும் நிலக்கள்ளியும் பரஸ்பரம் திடீரெனப் பார்த்துக் கொண்டார்கள். அதை அடுத்து நிலக்கள்ளி கேட்டாள், “தலைவரே! இங்கு சமீபத்தில் முசிறியிலிருந்து யாராவது வந்தார்களா?” என்று. 

“யாரோ கிளேஸியஸாம். நல்ல மாலுமியாம். அவன் வந்தான். இங்குள்ள சிலரைப் படகுகளில் அழைத்துச் சென்றான்” தலைவன் இதை சர்வசாதாரணமாகக் கூறினான். 

“அவன் தனியாகவா வந்தான்?” என்று வேந்தன் வினவினான். 

“யாரோ யூசப்பாம். அராபியன் மாதிரி இருக்கிறான். இருவரும் வந்து உணவுப் பொருள்களை ஏராளமாக வாங்கிச் சென்றதாக நமது ஒற்றர்கள் சொன்னார்கள்” என்றான் தலைவன். 

“அவர்களை நீங்கள் விசாரிக்கவில்லையா?” என்று வேந்தன் கேட்டான். 

“இல்லை. இங்கு வாணிபம் செய்யும் யாவருக்கும் தடை கிடையாது. தடை கூடாதென்பது மன்னர் கட்டளை”. 

“சரி. க்ளேஸியஸும், அராபியனும் உணவுப் பொருள்களைத் தவிர வேறு ஏதாவது வாங்கினார்களா?”

“இல்லை.” 

அத்துடன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த கடல் வேந்தன், “சரி, நாம் விருந்து அறைக்குப் போவோம்” என்று சொல்ல, எல்லாரும் விருந்து மண்டபம் சென்றார்கள். கடல்வேந்தன் விருந்தை மிகவும் சுவைத்து உண்டான். கடின பதார்த்தங்களை அனாயாசமாகக் கடித்தான். 

துறைமுகத் தலைவன் சரியாகச் சாப்பிடவில்லை. வேந்தன் சாப்பிடுவதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். உணவருந்தி முடிந்த முடிந்த பிறகு கடல் வேந்தன் புலவரை நோக்கி, “புலவர் பெருமானே! என்னை அழைத்த காரணம் என்ன?” என்று வினவினான். 

“ஒன்றுமில்லை, பார்த்து நாளாயிற்றே என்றுதான் அழைத்தேன். தவிர, நீ கொள்ளைக்காரனாயிருந்து கடற் படைத் தலைவனாக மாறிவிட்டாய். இந்தப்புதுப்பதவியில் ஒட்டுகிறாயா என்று பார்க்கவும் அழைத்தேன்.” என்றார். 

புறப்படும் சமயத்தில் கடல்வேந்தன் புலவரை நோக்கி, ”நீங்கள் என்று புறப்படுகிறீர்கள் முசிறிக்கு?” என்று கேட்டான். 

“நாளை காலையில்” என்றார் புலவர். 

“இன்னும் இரண்டு நாள் தங்கிச் செல்லலாமே” என்றான் துறைமுகத் தலைவன். 

“வந்தவேலை முடிந்துவிட்டது. இனித் தாமதிக்க இயலாது” என்றார் புலவர். 

கடல்வேந்தன் தனது மரக்கலத்துக்குப் போகத் திரும்பியவன் எதையோ நினைத்துக்கொண்டு, “புலவரே! முசிறியின் எல்லையில் படைத்தளம் இருக்கிறதல்லவா?” 

”ஆம்” என்றார் புலவர். 

“அங்கு ஒருநாள் தங்கும். மறுநாள் இரவு அங்கு ஒரு பெரியவர் வருவார். அவரிடம் இந்த ஓலையைக் கொடுங்கள்” என்றான். 

தலையை அசைத்தார் புலவர். ஓலையிலிருந்த விலாசத் தைப் பார்த்தார். விலாசம் “புலவர் தங்கோ! பிரதமை 45 பூசம” என்றிருந்தது. 

அந்த விலாசத்தை உரக்கவே படித்தார் புலவர் “இது விலாசமா?” என்றும் வினவினார். 

“ஆம்” என்ற கடல்வேந்தன் நகைத்தான் கன்னங்கள் அசைய, அதைக் கண்ட துறைமுகத் தலைவன் பேரதிர்ச்சி யடைந்தான். அதைக் கவனிக்கவே செய்தாள் நிலக்கள்ளி அதற்கு மேல் அங்கு தாமதிக்க இஷ்டப்படாமல், சரி….சரி, நேரமாகிறது, வாருங்கள்” என்று கடல்வேந்தனை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வாயிலுக்குச் சென்று அங்கி குந்த ரதத்தில் ஏறினாள். கடல்வேந்தனும் ஏற, புரவிகள் பறந்தன. கடலோரம் வந்ததும் படகைத் துழாவி மரக்கலம் வந்து சேர்ந்த நிலக்கள்ளி தனது அறையை அடைந்ததும். “உங்களை யார் சிரிக்கச் சொன்னது?” என்று சீறினாள். அத்துடன் அவன் கன்னத்தைத் தனது இரு கைகளாலும் இருமுறை அசைத்துத் தனது கன்னமொன்றால் அவன் உன்னமொன்றை இழைத்தாள். 

கடல்வேந்தன் முகத்தில் காதல் விரியவில்லை. சந்தேகமும் அதிர்ச்சியுமே விரிந்தன. “அவன் கண்டு கொண்டானா?” என்று மட்டும் கேட்டான். 

ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தாள் நிலக்கள்ளி. 

32. கடற் கள்ளி 

கடல்வேந்தன் மரக்கலத்து அறையில், “உங்களை யார் சிரிக்கச் சொன்னது?” என்று அவனைக் கடிந்து கொண்டு அவனது கன்னத்துடன் தனது கன்னத்தை  வைத்து இழைத்த நிலக்கள்ளி சற்று விலகி நின்று அவன் முகத்தை ஏறிட்டு நோக்கினாள். அந்த சமயத்தில் வேந்தனுக்கு ஏதோ சந்தேகம் விரிந்ததால், “அவன் கண்டு கொண்டானா?” என்று மட்டும் கேட்டான் குரலில் சந்தேகத்துடன் சிறிது அதிர்ச்சியும் கலந்து ஒலிக்க. 

அவன் முகத்தில் துலங்கிய உணர்ச்சிகளைக் கண்ட நிலக்கள்ளி லேசாக நகைத்து “உலகத்தை அதிர்ச்சியுறச் செய்யும் அதிர்ச்சியை அளிக்கும் கடல்வேந்தருக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு என்பதை இன்றுதான் கண்டேன்” என்றாள். அத்துடன் வெளியே செல்லத் திரும்பினாள். 

அவளுக்கு முன்பு சென்று கதவைத் தாளிட்டுவிட்ட கடல்வேந்தன் “இரு அவசரப்படாதே” என்று தடுத்தான் அவளை. அத்துடன் அவள் முதுகைப் பிடித்து அறைக் கோடியிலிருந்த மஞ்சத்துக்கும் அழைத்து வந்தான். 

அவன் வலிமையான கை அவள் பஞ்சு முதுகில் ஏதோ உலக்கை போல் கடினத்துடன் விழுந்து கிடந்தது. அவன் வலுவையும், அவன் தன்னைப் பற்றி இழுத்த காரணத் தையும், தனக்கு வெகு அருகில் அவன் அறை மூலையி லிருந்த கட்டில் தென்பட்டதையும் கவனித்த நிலக்கள்ளி, “ஆமாம், இங்கு நான் எதற்காக இருக்க வேண்டும்? இங்கு என்ன வேலை எனக்கு?” என்று போலி உஷ்ணம் ஒலித்த குரலில் வினவினாள். 

“வேலை இருக்கிறது. சொல்கிறேன். உட்கார்ந்து கொள்” என்று கட்டிலில் அவளை உட்கார வைத்தான் கடல்வேந்தன். அவனும் கூட உட்கார்ந்து தனது இடக் கையால் அவள் கழுத்தை வளைத்து தனது தோளில் ஈரத்திக் கொண்டான். 

வேலையைச் சொல்லுங்கள் என்று கேட்டாள் நிலக்கள்ளி. சொற்களை அதிகாரமாகத்தான் உதிர்க்க முயனறாள், ஆனால் அவற்றில் அதிகாரத்தைவிட சங்கடம் நிரம்பி நின்றது. 

அதைக் கவனிக்கவே செய்த கடல்வேந்தன் அவள் எழுத்தை அணைத்த கையை அகற்றாமலே, “நிலக்கள்ளி! என்ன அவசரம்? சிறிதுநேரம் கழித்துத் தான் சொல்கிறேனே” என்றான்.  

“இப்பொழுதே இரண்டாம் ஜாமம் வந்துவிட்டது” என்று சுட்டிக் காட்டிய நிலக்கள்ளி அவனது வலக்கை தனது இடையின் முன்பக்கத்தில் ஊர்வதைக் கண்டதும் அதைத் தன் கைகளால் பிடித்து நிறுத்தினாள். “கொஞ்சம் நிதானமிருக்கட்டும்” என்றும் எச்சரித்தாள். 

கடல்வேந்தன் தன் கையைத் தேக்கிய பூங்கரங்களை நோக்கினான். பிறகு பூவைப் போலவே மிருதுவான கன்னங்களை நோக்கினான். பிறகு அவள் கன்ன மோன்றில் தனது கன்னத்தால் இழைத்து கன்னத்தை ஈேசாகத் திருப்பி அவள் உதடுகளைத் தனது உதடுகளால் தீண்டினான். 

அவன் வலிய உதடுகள் தனது உதடுகளைத் தீண்டியதால் சற்றே உணர்ச்சி வசப்பட்ட நிலக்கள்ளி, “வேந்தரே! உங்கள் நேர்மையை இந்த மரக்கலத்து மாலுமிகள் நம்புகிறார்கள். என் தந்தையும் நம்புகிறார். கடல்வேந்தன் கொள்ளைக்காரனெனினும் நெறிதவறாதவன் என்ற பெயர் இருக்கிறது. அது தவிர, நீங்கள் எனக்களித்த உறுதியும், ஏன் உங்கள் சபதமும் இருக்கிறது. இவற்றை யெல்லாம் பெண்ணாசையால் காற்றில் விடாதீர்கள்” என்றாள் வேட்கையும், கடமையும் கலந்து ஒலித்த குரலில், 

கடல்வேந்தன் கண்களில் விவரம் புரியாத ஒளி ஒன்று தோன்றியது. “நீ சொன்னதற்கெல்லாம் முரணாக என்ன நடந்துவிட்டது?” என்று வினவினான். 

“எதுவும் நடக்கவில்லை” என்று கூறிய நிலக்கள்ளி தனது கழுத்தைச் சுற்றியிருந்த அவன் கையை நீக்கி விட்டு மெல்ல அவன் மடியில் சாய்ந்து தனது மலர்ச் கண்களை அவனை நோக்கி நிமிர்த்தினாள். “நடப்பது நமதிஷ்டம்; நினைப்பது பிறர் இஷ்டம்” என்ற நிலக் கள்ளி தனது பாதி உடலை அவன் உரத்த மடியில் திருப்பினாள் லேசாக.

கடல்வேந்தன் அவள் முகத்தைப் பார்த்தான். பிறகு. அவள் உடல் மடியில் திரும்பியதால் தன்னை நோக்கி முறைத்த மொட்டுகளை நோக்கினான். உள்ளே அவள் இதயம் வேகமாக அடித்துக் கொண்டதால் அந்த மொட்டுகள் அசைந்த அழகையும் கவனித்தான். அதன் விளைவாக தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட கட்டுப்பாட்டையும் மீறி அவள் மார்பில் தனது முகத்தைப் பதித்தான் சில விநாடிகள் பிறகு பிறகு லேசாக முகத்தை நிமிர்த்தி, “என்ன புதிர் போடுகிறாய் நிலக்கள்ளி!” என்றும் கேட்டான். 

நிலக்கள்ளி அவனது கைகளுடன் தனது கைகளைப் பின்னிக் கொண்டாள் “நான் சொன்னதில் புதிர் ஏதுமில்லை. இத்தனை நாள் இரவு மூண்டதும் என்னை எனது அறைக்கு அனுப்பி விடுவீர்கள். அதனால் என்னை சாதாரண மாலுமியாக மட்டும் நடத்துவதாக மற்ற மாலுமிகள் நினைத்தார்கள். இன்று இரண்டாம் ஜாமத்தில் உங்கள் அறையில் தனித்திருக்கிறேன். எப்படி இருக்கிறேன் என்பதை நீங்களே பார்க்கிறீர்கள். இதைப்பற்றி மாலுமிகள் என்ன நினைப்பார்கள்?” என்று வினவினாள்.

அவன் அவள் மலர்முகத்தை நோக்கி நன்றாகக் குனிந்தான் மீண்டும். “என்ன நினைப்பார்கள்?” என்று கேட்டான். 

“உங்கள் நேர்மையை நினைத்து நகைப்பார்கள். என்னைப் பற்றி அவர்கள் நினைக்கக்கூடியது ஒன்றுதான்” என்ற நிலக்கள்ளி பேச்சைப் பாதியில் நிறுத்தினாள். 

கடல்வேந்தன், அவள் கன்னத்துடன் தனது கன்னத்தை வைத்து நன்றாக இழைத்தான். பிறகு மடியில் கிடந்த அவளைத் தூக்கிக் கட்டிலில் நன்றாகக் கிடத்தி அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தனது கையொன்றை அவள் உடலுக்குக் குறுக்கே போட்டான். அந்த நிலையில் அவளை நோக்கி, “நிலக்கள்ளி! யார் எதை நினைத்தாலென்ன? நமக்கென்று ஒரு கொள்கை கிடையாதா?” என்று கேட்டு அவள் உடலை குறுக்கே விழுந்த கையால் இறுக்கினான். 

அதைக் கவனித்த நிலக்கள்ளி லேசாக நகைத்தாள். “கொள்கை திவ்யமாக இருக்கிறது” என்று சொன்னான். 

“ஏன் நமது கொள்கைக்கு என்ன?” என்று கடல் வேந்தன் மீண்டும் வினவினான். 

“அறைக்குப் போகத் திரும்பியவளை இழுத்து வந்து கட்டிலில் உட்கார வைத்தீர்கள். இப்பொழுது படுக்க வைத்திருக்கிறீர்கள்…அடுத்து…”

”அடுத்து?” 

“உங்கள் பித்தம் எந்த நிலைக்குப் போகுமோ?” 

இதைக் கேட்ட கடல்வேந்தன் அவளை நோக்கிக் குனிந்து “அடுத்த நிலை என்ன? எந்த நிலையைச் சொல்கிறாய்?” என்று மெதுவாக வினவினான். 

நிலக்கள்ளி உணர்ச்சி மிகுதியால் கண்களை மூடிக் கொண்டாள். “சொல்லத் தேவையில்லை” என்றாள் செவ்விய உதடுகளை மெதுவாக அசைத்து. 

“சொல்லத் தேவையில்லையா?” வேந்தன் உணர்ச்சி கொந்தளித்த குரலில் கேட்டான். 

“சொல்லத் தேவையுமில்லை, சொல்லித் தெரிவதுமில்லை”. 

“விளங்கவில்லை” 

“வாழ்க்கையில் போதிக்கப்படுவது சிலதான்.”

“மற்றவை?” 

“பிறக்கும் போதே பிறக்கின்றது. வளரும்போது வளர்கிறது. இணையும்போது இணைகிறது. இதற்குப் பாடம் சொல்ல எத்தப் புலவரும் வேண்டாம்.” 

“இதற்குப் புலவரே கிடையாதா?”  

“உண்டு.” 

“யார் அவர்?” 

“இயற்கை என்பவர்” 

இப்படிப் பேசிய நிலக்கள்ளி சற்றே புரண்டு படுத்தாள் கட்டிலில். அதனால் எழுந்தஒரு புறத்துப் பின்னழகு மிகப் பெரிதாகத் தெரிந்தது, கடல் வேந்தன் கண்களுக்கு. அதன் மேல் முகத்தை வைத்த கடல்வேந்தன், “அடீ நிலக்கள்ளி! நீ மிகப் பொல்லாதவள்” என்றான். 

உணர்ச்சிகள் முற்றிவிட்டதால் அவளும் சுயநிலை இழந்தாள். மரியாதையைக் கைவிட்டுப் பேசினாள். “கொள்ளைக்காரனே! நீ மட்டும் என்னவாம்? என் உடலை மட்டுமன்றி, உணர்ச்சிகளையும் புரட்டுகிறாயே, அயோக்கியனே! கொடியவனே! என்னை ஏன் கொடுமைப் படுத்து கிறாய்?” என்று கேட்டு சரேலெனத் திரும்பி அவன் தலையைத் தனது கைகளால் தனது பின்னெழில் மேடையிலிருந்து முன்புற மடிக்குப் புரட்டினாள். 

கடல்வேந்தன் உணர்ச்சிகளும் காற்றில் பறந்தன. “அடீ! நிலக்கள்ளி! நீ நிலத்தில் மட்டுமல்ல கள்ளி, உடலிலும் கள்ளிதான். கடற்கள்ளி! கடல்வேந்தனையே மயக்கிய உன்னைத் தண்டிக்காமல் விடுவது தவறு” என்று மல்லாந்த நிலையில் திண்மையான அவள் தொடைகள் சமைத்த மடியில் தலையைப் புரட்டிப் பேசினான். 

அவள் பேசவில்லை. அவன் கையொன்றை எடுத்துத் தன் இடையில் வைத்து அழுத்திக் கொண்டாள். “வேந்தா!” என்று மெதுவாக அழைத்தாள். 

அவன், அவள் மடியிலிருந்து மெல்ல எழுந்து, அவள் மீது ஊர்ந்து, காதருகில் உதடுகளைக் கொணர்ந்து, “என்னடீ?” என்று கேட்டான்.

நிலக்கள்ளியின் கண்கள் மூடிக்கிடந்தன. “வரவர அடீ பட்டம் அதிகமாகிறது” என்று முணுமுணுத்தாள். 

“நீ என் அடிமை தானே! எப்படி அழைத்தால் என்ன?” என்று அவன் கேட்டான் அவள் காதுக்கருகில். 

அவளும் கேட்டாள் மெதுவாக “யார் யாருக்கு அடிமை?” என்று. 

“காட்டுகிறேன் பார்” என்று சொல்லி எழுந்த கடல் வேந்தன் அவளை மீண்டும் உற்று நோக்கினான். 

அறை விளக்கில் அலைந்த ஆடைகளுடன் அவள் தெய்வமோகினி போல் மிக அழகாகக் கட்டிலில் கிடந்தாள், சாளரத்தின் மூலம் திடீரென அடித்த கடல் காற்று அவள் மேலாடையை விலக்கியதைக்கூட அவள் லட்சியம் செய்யவில்லை. அவள் பக்கத்தில் அமர்ந்த கடல்வேந்தன் அவள் கால்களைப் பற்றிப் பிடித்தான். நிலக்கள்ளி நகைத்து, “யார், யாருக்கு அடிமை?” என்று கேட்டாள். 

“நான் தான் உனக்கு அடிமை” என்று கடல்வேந்தன் அவள் கால்களைப் பற்றியவண்ணம், அவள் அணிந்திருந்த நீலநிறச் சேலையுடன் விளையாட ஆரம்பித்தான். 

“உம்” எச்சரித்தாள் நிலக்கள்ளி, “கையை எடுங்கள்” என்றும் சீறினாள். 

அவன் கையை எடுத்து அவள் உடலைத் தனது இருகைகளாலும் தூக்கி தனது மடியில் கிடத்திக் கொண்டான் “அடுத்து என்ன?” என்றும் கேட்டான். 

“அவனை அனுப்புங்கள்,” என்றாள் நிலக்கள்ளி.

“நான் வேண்டாமா?” என்று கடல்வேந்தன் கேட்டான்.

“வேண்டும்” 

“அவன்?” 

“அவனும் வேண்டும் ” 

“இரண்டு பேருமா?” 

“ஆம்.”

இதைக் கேட்ட கடல்வேந்தன் “அடீ! கடற்கள்ளி! இருவருமா வேண்டும் உனக்கு? உன்னை என்ன செய்கிறேன் பார்.” என்று கூறி கதவிடம் சென்று நீண்ட நேரம் நின்றான். பிறகு பரமவேகத்துடன் திரும்பக் கட்டிலுக்கு வந்தான். அவன் அசுரவேகம் அவளுக்கு அச்சத்தை அளித்தது. ஆனால், அச்சம் தவிடு பொடி யாகும் நிலை அது. விரகம் பூர்ணமாகத் தலையெடுத்த நேரம் அது. அடுத்து நடந்தது…ஊகத்துக்கு அப்பாற் பட்டது. 

33. வம்பு உலகம் 

பண்புள்ள மனிதனுக்கும், பண்பில்லா மனிதனுக்கும் ஒரு வித்தியாசமுண்டு. பண்பில்லாதவன், உணர்ச்சிகள் மேம்படும்போது அவற்றின் வேகத்துக்கு இடங் கொடுத்து அவற்றுடனேயே சென்று அழிந்துவிடுகிறான். பண்புள்ளவன், உணர்ச்சிகள் உந்தும்போது சற்றே நிதானிக்கிறான். அவற்றைத் தன்வசமாக்கிக் கொள்கிறான். அதனால் அவன் கடமையிலிருந்தோ, கண்ணியத் இலிருந்தோ சிறிதும் தவறுவதில்லை. பண்பே உருவான கடல்வேந்தன்,கதவைத் தாளிட்டு வேகமாகக் கட்டிலை நோக்கி வந்தபோது நிலக்கள்ளியும் அவனை வரவேற்கச் சித்தமாயிருந்தாள். விரகம் அவளைப் பூர்ணமாக ஆட் கொண்டிருந்தது. கொழு கொம்பை நாடி, கொடி செல்வது இயற்கை. ஆனால், கொழுகொம்பு கொடியை நாடி வருமா? அத்தகைய விநோத நிலை ஏற்பட்டால் கொடி அதன்மீது தொத்தி ஏறிப் படராதிருக்கத்தான் முடியுமா? 

கடல்வேந்தன் கதவைத் தாளிட்டதுமே கட்டிலில் ஒருக்களித்த நிலையிலிருந்து மல்லாந்து படுத்த நிலக்கள்ளி தனது கைகளால் அவனை வளைக்கச் சித்தமாயிருந்தாள். அந்த வேளையில் அவள் தந்தையை மறந்தாள். சமூகத்தை மறந்தாள். கடல் வேந்தனைத் தவிர மற்ற எல்லாவற்றையுமே மறந்தாள். அப்படி இருந்தவளை நோக்கி வேகமாக வந்த கடல் வேந்தன் கட்டிலை அணுகியதும் சட்டென்று நின்றான். அவன் ஏதோ சிந்தனை வயப்பட்டு விட்டதை அவன் முகம் தெளிவாகக் காட்டியது. அப்படி சிந்தித்த அவன் தன் வேகத்தையெல்லாம் உதறித் தலையை இருமுறை ஆட்டிக் கொண்டான். பிறகு கட்டிலின் முகப்பில் உட்கார்ந்து கொண்டு, கட்டிலில் கிடந்த கட்டழகியை நோக்கினான். அவள் அழகெல்லாம் திரண்டு விகசித்த புஷ்பம் போல் கிடந்தாள். 

அவள் நெற்றிமீது கையை வைத்த கடல்வேந்தன் மிக மெதுவாக, உணர்ச்சி குறைந்த குரலில் கேட்டான், “நேரம் என்ன இருக்கும் நிலக்கள்ளி?” என்று.

அவள் மல்லாந்து கிடந்த, நிலையில் புன்முறுவல் கொண்டாள். “நேரத்துக்கு என்ன வந்துவிட்டது இப்பொழுது?” என்று கேட்டாள்.  

கடல்வேந்தன் கை அவள் நெற்றியிலிருந்து கன்னத்துக்கு வந்து அதைத் தடவலாயிற்று. அப்படி தடவிக் கொண்டே சொன்னான், “இரண்டாவது ஜாமத்தில் பாதி தாண்டியிருக்கும் போல் தெரிகிறது” என்று. 

நிலக்கள்ளி மல்லாந்த நிலையிலிருந்து சிறிது புரண்டு தனது கையொன்றை அவனது இடையில் செலுத்தினாள், “தாண்டியிருந்தால் என்ன?” என்று கேட்டாள். 

“தாண்டியிருந்தால் நீ உன் அறைக்குப் போகவேண்டும்” என்றான் கடல்வேந்தன். 

“எது என் அறை?” என்று கேட்ட நிலக்கள்ளி நகைத்தாள். 

கடல்வேந்தன் நகைக்கவுமில்லை. அவளைப் பார்க்கவுமில்லை. கூரை மீது கண்களை ஓட்டிய வண்ணம், “உப தலைவன் அறை. முன்பு க்ளேஸியஸ் இருந்தானே, அந்த அறையைத்தானே உனக்குக் கொடுத்தேன்?” என்று கேட்டான். 

நிலக்கள்ளி மீண்டும் நகைத்தாள். “ஐயா வேந்தரே!” என்று மரியாதையாக அழைக்கவும் செய்தாள். 

“என்ன உபதலைவி?” 

“நேற்றுவரை கிளேஸியஸின் அறைதான் என் அறை.” 

”இன்று முதல்?” 

“இந்த அறைதான் எனக்கும். தலைவன் இருக்கும் அறையில்தானே தலைவியும் இருப்பாள்?” இதைத் திட்டமாகச் சொன்னாள் நிலக்கள்ளி 

கடல்வேந்தன் பெருமூச்செறிந்து, “நிலக்கள்ளி” என்று கடுமையாக அழைத்தான். 

“என்ன?” அவளும் குரலில் சற்றுக் கடுமையைக் காட்டினான். 

“நீ இன்னும் தலைவியாகவில்லை”.

“யார் சொன்னது?” 

“நான் சொல்கிறேன். நீ உப தலைவிதான்”.

“ஓ! கப்பல் பதவியைச் சொல்கிறீர்களா?”

“வேறெந்தப் பதவி இருக்கிறது இங்கே?”

“காதலின் பதவி இல்லையா?”

“காதலின் பதவியா?” 

“ஆம். அது தருவது தலைவியின் பதவி. தலைவனுக்கு இரு தலைவி உண்டு, இலக்கியம் கண்ட உண்மை இது”. 

கடல்வேந்தன் இதற்குப் பதில் சொல்ல முடியாமல் தினறினான். “நமக்கு இன்னும் திருமணமாகவில்லை” என்று மெல்லச் சுட்டிக் காட்டினான். 

“ஆக, எத்தனை நேரம் ஆகும்?” என்று கேட்ட நிலக்கள்ளி, அவன் இடையை நன்றாக இறுக்கிப் பிடித்தாள். 

கடல்வேந்தன் கூரையிலிருந்து கண்களைக் கட்டிலுக்குத் திருப்பினான். சற்றுத் திரும்பியும் உட்கார்ந்து ”உனக்குப் பைத்தியம் ஏதும் இல்லையே?” என்று நிலக்கள்ளியை நோக்கிக் கேட்டான். 

நிலக்கள்ளி கட்டில் முகப்பில் உட்கார்ந்த கடல் வேந்தனைத் தன்னை நோக்கி இழுத்து, “அப்படி என்ன திடீர் சந்தேகம் வந்துவிட்டது?” என்று வினவினாள். 

“திருமணமாக எத்தனை நேரமாகும் என்று கேட்டாய், திருமணத்துக்கு நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டாமா? மற்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டாமா?” என்று கடல்வேந்தன் கேட்டான். 

நிலக்கள்ளி அவனை வலிய இரு கைகளாலும்பிணைத்த வண்ணம் “நீங்கள் என்ன சாதி?” என்று கேட்டாள். 

“சாதியில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்றான் கடல்வேந்தன். 

“அப்படியானால் திருமணம் என்று தனிச் சடங்கு தேவையில்லை” என்ற நிலக்கள்ளி அவன் கழுத்தை இரு கைகளாலும் இழுத்துத் தன் கன்னத்தோடு அவன் கன்னத்தை வைத்துக் கொண்டாள். 

அவள் வாதத்தை எதிர்க்க முடியாததால் இனபேதத்தில் இறங்கிய கடல்வேந்தன், “நான் க்ஷத்திரியன்” என்று சொன்னான். 

“அப்படியானால் திருமணத்துக்கு நாள் தேவையில்லை. க்ஷத்திரியர்களுக்கு காந்தர்வ விவாகம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது”. 

எதற்கும் நிலக்கள்ளி ஒரு பதில் வைத்திருப்பதைக் கண்ட கடல்வேந்தன் வீண் சர்ச்சையை விட்டு, உள்ள நிலைக்குத் திரும்பி, “நிலக்கள்ளி! நீ சொல்வதெல்லாம் வாதத்திற்கு சரி. ஆனால் நான் உன்னைத் தனியாக அழைத்து வந்த போது உன்னை மாசு மரு இல்லாமல் திரும்ப உன் தந்தையிடம் சேர்த்து விடுவதாக சபதம் செய்தேன். அதிலிருந்து நான் தவறுவது உன் குடும்பத் துக்கும், என் குடும்பத்துக்கும் துரோகம் செய்வதாகும். தவிர. நான் உன்னை இரவு முழுவதும் இங்கு நிறுத்திக் கொண்டால் மாலுமிகள் என்ன நினைப்பார்கள்?” என்று கேட்டான். 

நிலக்கள்ளி மெதுவாக நகைத்தாள். “வேந்தரே! உமக்குச் சிறிது அறிவு இருக்குமென்று நினைத்தேன்” என்றாள். 

“இப்பொழுது இல்லையென்று நினைக்கிறாயா?”, என்று வினவினான் வேந்தன். 

“ஆம், சிந்தித்துப் பாருங்கன். நீங்கள் என்னை இந்த அறையில் இத்தனை நோம் வைத்துக் கொண்டிருப்பதைப் பற்றி மாலுமிகள் என்ன நினைப்பார்கள்? தவம் செய்கிறீர்கள் என்று நினைப்பார்களா?” என்று வினவிய நிலக்கள்ளி, “வேந்தரே! வீண் சிந்தனைகளை விடும்” என்று கூறி விட்டு அவனை மெதுவாகத் தன் மீது சாய்த்துக் கொண்டாள். கட்டிலின் முகப்பிலிருந்து திடீரென சாய்க்கப் பட்ட கடல் வேந்தன் நிலைகுலைந்தான். அவள் சற்று நகர்ந்து கொண்டு இடம் விட்டாலும், அவன் உடலில் பாதி அவள் மீதே இருந்தது. அந்த உடலின் பகுதிகளின் மீது அவள் புஷ்பங்கள் புரண்டன. கன்னமலர் கன்னத் தோடும், மார்புப் பங்கயங்கள் மார்போடும் இணைந்த தால் மீண்டும் உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்த கடல் வேந்தன், அவளை ஒரு கையால் அணைத்தான். அவன் உறுதியெல்லாம் அகன்றது. பண்பாட்டு நினைப்பெல்லாம் பறந்தது. அவன் ஒரு கை அவளை அணைத்துத் தூக்க இன்னொரு கை அவள் பூவுடலெங்கும் அலைந்தது. 

உவகையின் உச்சியிலிருந்தாள் மந்திரி மகள். அவள் உணர்ச்சி அடிக்கடி பெருமூச்சாக வந்து கொண்டிருந்தது. கைகள் கடல்வேந்தனைச் சுற்றிக் கிடந்தன. இதழ்கள், அவன் இதழ்களைக் கடித்தன, அவள் கை யொன்று அவன் கன்னத்தைப் பிடித்துப் பலமாக இழுத் தது. “கன்னத்தை நிமிண்டட்டுமா?” என்று கேட்ட நிலக்கள்ளி, சட்டென்று எச்சரிக்கை அடைந்து, அவன் இதழ்களிலிருந்து தனது இதழை மீட்டுக்கொண்டு அவன் முகத்தை உற்று நோக்கினாள். “வர வர இது நகர்ந்து விடுகிறது” என்று கன்னத்தைச் சுட்டிக் காட்டினாள். 

அதைக் கேட்டதும் கடல்வேந்தன் வேகமாக எழுந் தான். அந்த அறை மூலையில் ஒரு தகளியை நோக்கிச் சென்று அதில் தன் முகத்தை ஆராய்ந்தான். பிறகு திருப்தியடைந்தவனாகத் திரும்பி, “சரியாகத்தானிருக் கிறது நிலக்கள்ளி! அதை நாளை சரிப்படுத்தி விடுகிறேன்” என்று கூறினான். அப்படிக் கூறிவிட்டுத் திரும்பியவன் கட்டிலிலிருந்த நிலக்கள்ளியைத் தனது இரு கைகளாலும் தூக்கி எடுத்துக் கொண்டு, “நிலக்கள்ளி! நாம் இன்னும் சிலநாள்கள் பொறுக்கத்தான் வேண்டும். கண்களை மூடிக் கொள்” என்றான் 

“கண்ணை மூடுவானேன்?” 

“மாலுமிகள் தவறாக நினைக்காதிருக்க”.

“பூனை கண்ணை முடினால் உலகம் அஸ்தமித்து விடுமா?” 

“மூடிக் கொள்ளேன்” என்று கடல்வேந்தன் வலியுறுத்த, அவள் கண்ணை மூடிக்கொண்டாள். அவளைக் கைகளில் தாங்கிய வண்ணம் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றான். சற்று எட்ட காவலிருந்த மாலுமியை அழைத்து, “உபதளபதி மூர்ச்சையாயிருக்கிறார். ஒரு பந்தத்தை எடுத்துவா. அவர்கள் அறையில் விட்டு வருவோம்” என்று கூறி மாலுமி பந்தம் காட்ட நிலக்கள்ளியை கிளேஸியஸின் அறைக்கு எடுத்துச் சென்று படுக்க வைத்தான். 

”தலைவரே! உபதளபதியாருக்கு சிகிச்சை ஏதாவது செய்ய வேண்டுமா?” என்று கேட்டான் மாலுமி, 

“நானே செய்துவிட்டேன். நீ போ. நான் வருசிறேன்” என்று கூற மாலுமி நடந்தான். 

அவன் சென்றதும், “சிகிச்சை முடிந்து விட்டதா?” என்று கேட்டாள் நிலக்கள்ளி. 

“முக்கால்வாசி முடிந்துவிட்டது. மீதியை அப்புறம் முடிப்போம்” என்று கூறி அவளை ஒருமுறை அணைத்து வெளியேறிய கடல்வேந்தன் மரக்கலப் பலகையில் சாய்ந்து இரு மாலுமிகள் கடலைப் பார்த்துக் கொண்டு ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தான். மாலுமிகளுள் ஒருவன் சொன்னான். “சிகிச்சையாவது. மண்ணாங்கட்டியாவது, சுத்தப் பொய்” என்று.

“பெரிய இடத்து விவகாரம் இப்படிதான்” என்றான் இன்னொருவன். 

அதைக் கேட்டு முறுவல் கொண்ட வேந்தன், “வம்பு உலகம் யாரையும் விடாது” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, தனது அறையை நோக்கி நடந்தான். 

34. மந்திராலோசனை 

கிளேஸியஸின் பழைய அறையில் நிலக்கள்ளியை விட்டு தனது அறைக்கு வந்த பின்பும், கடல்வேந்தன் உறக்கம் பிடிக்காமல் கட்டிலில் படுத்துக் கூரையை நோக்கி ஏதோ சிந்தனை வயப்பட்டிருந்தான். தான் மட்டும் இஷ்டப் பட்டிருந்தால் நிலக்கள்ளியை இன்று பூர்ணமாக அடைந்திருக்க முடியும் என்று நினைத்த கடல்வேந்தன், ‘ஏன் அப்படி அடையவில்லை? காரணம் கோழைத்தனமா?” என்று தன்னைத்தானே வினவிக் கொண்டான். ‘இல்லை. ‘இல்லை, காரணம், கோழத்தனமல்ல. சேர வம்சத்தின் நெறியின் பலம் என்னைக் கட்டுப்படுத்தி விட்டது. கடைசி நிமிஷத்தில் எனக்கு மயக்கத்தை நீக்கி, சுய உணர்வை அளித்துவிட்டது’ என்று சமாதானமும் செய்து கொண்டான். இருப்பினும், அத்தனை நேரம் அந்த அழகியை அணைத்தது முதலிய புற இன்பங்களையெல்லாம் நினைத்துப் புள காங்கிதமே அடைந்தான். அந்த நினைப்பிலேயே உறங்கி விட்டவன் காலையில் நீண்ட நேரம் எழுந்திருக்கவேயில்லை. நிலக்கள்ளி வந்து கதவைத் தட்டிய பிறகுதான் சிறிது சுரணையைக் காட்டி, “யாரது?” என்று அதட்டலாக வினவினான். 

பதில் நிலக்கள்ளியிடமிருந்து வரவில்லை. அவள் கண்ணைக் காட்ட, பக்கத்திலிருந்து மாலுமியே பேசினான். “உபதளபதியார் வந்திருக்கிறார்கள்” என்று. 

அப்பொழுதும் தூக்கம் முழுதும் கலையாத கடல் வேந்தன், “யாரது உபதளபதி? அப்புறம் வரச்சொல்” என்று கூறிவிட்டு, திரும்பவும் கட்டிலில் குப்புறப்படுத்து தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். 

கதவுக்கு வெளியே நின்ற நிலக்கள்ளி, “கும்பகர்ணரே எழுந்திரும். இல்லாவிட்டால்”, என்று சினத்தைக் குரலில் காட்டினாள் நிலக்கள்ளி. 

“இல்லாவிட்டால் என்ன செய்துவிடுவாய்?” என்று உள்ளிருந்தே சீறினான் கடல்வேந்தன். 

“போர்க்கோடாரியைக் கொண்டு கதவைப் பிளந்து விடுவேன்” என்ற நிலக்கள்ளி, இன்னொரு முறை கதவைப் பலமாகவே தட்டினாள். கதவை நெருங்கி நின்று: தோளால் அதை ஒரு முறை இடிக்கவும் செய்தாள். அந்த சமயத்தில் முக்கி முனகிக்கொண்டு கட்டிலிலிருந்து எழுத்து வந்த கடல்வேந்தன் திடீரெனக் கதவைத் திறக்கவே, உட்புறமாக விழவும் இருந்தாள். 

அவளை விழாமல் கட்டிப்பிடித்துக் கொண்ட கடல் வேந்தன், “உபதளபதி’ தாங்கள் கதவை அணைத்தாற் போல் நின்றிருக்கக்கூடாது” என்று கூறிப் புன்முறுவலும் செய்தான்.

அப்பொழுதும் அவன் தன்னை விடாததையும், அணைத்த வண்ணமே நின்றதையும், அதைப் பார்த்த இரண்டொரு மாலுமிகள் புன்முறுவல் செய்து தலையை வேறுபுறம் திருப்பிக் கொண்டதையும் கவனித்த நிலக்கள்ளி, “தளபதி! உங்களைப் பார்த்து மாலுமிகள் சிரிக்கிறார்கள்” என்றாள் கோபத்துடன். அவன் பிடியிலிருந்து விடுபடவும் முயன்றாள். 

கடல்வேந்தன் அவள் சொற்களைக் கேட்டான். தவிப்பையும் கவனித்தான். “நம்மை என்று சொல் உபதளபதி” என்று உத்தியோக முறையைக் கைவிடாது பேசவும் செய்தான். 

“நம்மையா?” வியப்புடன் அவனை நோக்கி வினவினாள் நிலக்கள்ளி.

“ஆமாம்.” 

“என்னைப் பார்த்து எதற்காக நகைக்க வேண்டும்?”

“நாமிருக்கும் நிலையில் நம்மைப் பிரித்து நினைக்கவோ நகைக்கவோ முடியாது.” 

“ஏன்?” 

“நாம் ஒரு புதுமை”. 

“புதுமை என்ன இதில்?” 

“இதுவரை பெண் உபதளபதி எந்த மரக்கலத்திலும் கிடையாது. இங்கு நீ இருக்கிறாய். தவிர, எந்தத் தளபதியும் உபதளபதியை அணைத்துக் கொண்டதும் கிடையாது” என்று கூறி நகைத்தான் கடல்வேந்தன். 

அவன் நகைத்ததால் சீற்றமும், மாலுமிகள் தங்களை அரைகுறையாகப் பார்த்துப் பார்த்துத் திரும்பிக் கொண்டதால் சங்கடமும் அடைந்த நிலக்கள்ளி, அவனிடமிருந்து திமிறிக் கொண்டு அறைக்குள்ளே நுழைந்து விட்டாள். நுழைந்ததும், திரும்பி, “அறையை நான் சரி செய்கிறேன். நீங்கள் சென்று நீராடி வாருங்கள்” என்று கூறினாள். சொன்னதோடு நில்லாமல், உள்ளேயிருந்த ஒரு பெரிய துண்டையும் எடுத்து அவன் தோளின்மீது விழும்படியாக விட்டெறிந்து, அவனை வெளியே தள்ளிக் கதவையும் மூடிவிட்டாள். 

பலவந்தமாக வெளியே அனுப்பப்பட்ட கடல் வேந்தன், நீராட அறையை நோக்கி நடந்தான். அவன் குறிப்பை அறிந்த மாலுமிகள் அவனுக்கு முன்பாக அந்த அறைக்கு ஓடி நீராட நன்னீர்க் குடங்களை எடுத்து வந்தார்கள். பல்துலக்கி, முகம் கழுவி, நன்றாக நீராடிய கடல்வேந்தன், துண்டை மட்டும் இடையில் கட்டிக் கொண்டு கப்பலின் தளத்தில் நடந்து சென்றான். 

அவன் துண்டு மட்டும் கட்டி காலைக்காற்றில் பறந்த குழல்களுடனும், வெயில் கிளம்பிவிட்டதால் அது பட்டு பளபளத்த வஜ்ர தேகத்துடனும், இரும்புத் தூண்கள் போன்ற உலக்கைக் கால்களுடனும் வருவதை தளபதி அறைவாயிலிருந்தே கவனித்த நிலக்கள்ளி, அவன் முரட்டு அழகையும், அனாயாச நடையையும் கண்டு பிரமித்தாள். அவன் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியிலும் பௗருஷம் ஒளிவிடுவதைக் கண்டு, அப்பேர்ப்பட்டவன் தன்னிடம் மையல் கொண்டதை எண்ணிப் பெருமை முகத்தில் நிலவ, பெருமிதம் இதழ்களில் உலாவ அழகிய புன்சிரிப்புடன் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவன் அறைக்கு வந்ததும், அவன் உள்ளே செல்ல வழிவிட்டு விக்கி கி நின்றாள். உள்ளே சென்றதும், தானும் உள்ளே சென்று கதவைத் தாளிடவும் செய்தாள். 

அறையிலிருந்த நிலையைப் பார்த்து, கடல்வேந்தன் பிரமிப்பின் எல்லையை அடைந்தான். கட்டிலின் பஞ்சணை நன்றாகச் சுருட்டப்பட்டிருந்தது. அவனது புத்துடைகள் சீராக மடிக்கப்பட்டு, தனியாக ஓர் ஆசனத்தின் மீது வைக்கப்பட்டும், அவன் தலை சீவி. முகம் துடைத்துத் நிலகமிடுவதற்கு வேண்டிய அலங்காரப் பொருள்களும் தகளியும் சித்தமாக எடுத்து வைக்கப்பட்டும் இருந்ததை யும் கவனித்த கடல்வேந்தன், ‘புருஷன் வாழ்வுக்குப் பெண்ணின் உதவி எத்தனை அவசியம்’ என்பதைப் புரிந்து. கோண்டான். அந்த நினைப்பினால் ஏற்பட்ட திருப்தி லினாள் வேகமாகப் புத்தாடை புனைந்து, திலகமும் இட்டுக் கொண்டதும், நிலக்கள்ளி அவன் நிலக்கள்ளி அவன் ஈரத்துண்டை எடுத்துக் கொண்டு வெளியே சென்று, அதைப் பிழிந்து கொடியொன்றில் உலர்த்தி வந்தாள். 

உள்ளே வந்த நிலக்கள்ளியைக் கேட்டான் கடல்வேந்தன் “இதெல்லாம் பணிமக்கள் வேலையல்லவா?” என்று. 

“ஆம்” என்றாள் நிலக்கள்ளி. 

“அப்படியானால், துணி உலர்த்தும் வேலையை நீ ஏன் செய்ய வேண்டும்?” என்று மறுபடியும் கேள்வியைத் தொடுத்தான் கடல்வேந்தன். 

“உங்களுக்கு நான்தான் பணியாள்” என்று நிலக்கள்ளி சொன்னாள். 

“நீ உபதளபதி” என்று சுட்டிக் காட்டினான் கடல்வேந்தன்.

“ஆம். இப்பொழுது” என்ற நிலக்கள்ளி முறுவல் கொண்டாள். 

“என்ன சொல்கிறாய் உபதளபதி?” கடல்வேந்தன் வினவினான். 

“நேற்றிரவு நீங்கள் என்னை உபதளபதியைப் போலவா நடத்தினீர்கள்?” என்று கேட்ட நிலக்கள்ளி சற்றுப் பெரிதாகவே நகைத்தாள்.

அவன் முகத்தில் வேட்கையின் சாயை படர்ந்தது. “சரி கதவைச் சாத்து” என்று உத்தரவிட்டான்.

“எதற்கு?” என்று வினவினாள் அவள். 

“மந்திராலோசனை நடத்தப் போகிறேன்” என்றான் கடல்வேந்தன். 

“அப்படியானால் சரி” என்ற நிலக்கள்ளி, வெளியே எட்டிப் பார்த்து, பாய்மரங்களின் அடியில் நின்ற இருவரை வரும்படி குரல் கொடுத்தாள். கடல்வேந்தன், அவளைத் தடுக்க முயன்றும் முடியாததால், “அவர்கள் எதற்கு?” என்று கேட்டான். 

“இந்த மரக்கலம் போரில் இறங்கும்போது இதைத் திசை திருப்ப வேண்டியவர் சுக்கான் பிடிப்பவர்; மற்றொருவர் உங்கள் உத்தரவுப்படி மாலுமிகளை இயக்க அம்புகளையும், வேல்களையும் வீசும் கடமையைச் செய்பவர்” என்ற கூறினாள். அவள் அழைப்பை ஏற்று அறைக்கு வந்த இருவரையும், ஆசனங்களில் உட்கார வைத்து அறைக் கதவை மூடினாள். “தளபதி மந்திராலோசனை செய்ய தங்களை வரவழைத்தார்” என்றும் கூறினாள்.

கடல்வேந்தன் திறமையையும், அவன் திடீரென்று குணம் மாறும் தன்மையையும் அன்றுதான் புரிந்து கொண்டாள். நிலக்கள்ளி அவர்கள் எதிரே கடல்வேந்தன் சுட்டிலில் உட்கார்ந்ததும், சுருட்டி வைக்கப்பட்டிருந்த படுக்கைம் உட்கார்ந்தாள் நிலக்கள்ளி. வேந்தன் கண்கள் அவளை நோக்கிக் கடுமையுடன் இரும்பின. “உபதளப உட்கார வேண்டிய இடமோ, நிறையோ இதுவல்ல” என்ற அவன் சொற்களிலும் அதிகாரம் இருந்தது. 

நிலக்கள்ளி வியப்பின் வயப்பட்டாள். திடீரென்று வந்தன் முகபாவமும் பேச்சும் மாறிவிட்டதைக் கண்டு குழப்பமும் அடைந்தாள். அந்தக் குழப்பத்தைக் கவனிக்கவே செய்த கடல்வேந்தன், “உபதளபதி! அதோ ஆசனத்தில் அமருங்கள், கடற்பகுதியிலும் நிர்வாக நியமங்கள் உண்டு” என்று தூர இருந்த ஓர் ஆசனத்தைச் சுட்டிக்காட்டினான். 

பிரமை பிடித்த இதயத்துடன் அவன் காட்டிய இசயத்தில் நிலக்கள்ளி உட்கார்ந்ததும், கடல்வேந்தன் மற்ற இரு மரக்கல அதிகாரிகளையும் நோக்கி, “கடல் வீரர்ளே! இந்தக் கூட்டத்தை நான் பிற்பகல் கூட்டுவதாக இருந்தேன். உபதளபதி சற்று அவசரப்பட்டு விட்டார்கள். இருப்பினும் பாதகமில்லை” என்று தொடங்கி மேற்கொண்டு பேச முற்பட்டான். “நாம் இங்கு வந்து இரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. உபதளபதியை இவரது தந்தையிடம் ஒரு வாரத்தில் ஒப்படைப்பதாகச் செய்தி அனுப்பியிருந்தேன். அந்தக் கெடு தாண்டிப் விட்டது. இருப்பினும், அதிக காலம் கடத்துவது தவறு. கெடுவை மாற்றியோ, மீறியோ கடல்வேந்தன் நாளை இங்கிருந்து நாம் நடந்து கொண்டது கிடையாது. நங்கூரம் எடுத்துச் செல்கிறோம். வந்தபோது தனியாக வந்தோம். போகும்போது தனியாகப் போகமாட்டோம். இந்தத் துறைமுகத்திலுள்ள மரக்கலங்களில் மூன்று நம்முடன் வரும். இந்த நான்கு மரக்கலங்களையும் நிர்வகிப்பதும், இந்தத் தலைமை மரக்கலத்தின் சைகை களை அறிந்து, அவற்றை நடத்த நமது முறைகளை அந்த மரக்கலங்களின் தலைவர்களுக்குப் போதிப்பதும் கடமையாகும்” என்று சொல்லி மற்றவர்களை நோக்கினான். 

கப்பலைத் திசை திருப்பும் மாலுமி கேட்டான். “மற்ற மரக்கலங்களின் தளபதிகள் நாங்கள் சொல்வதைக் கேட்பார்களா?” என்று. 

“கேட்பார்கள்” உறுதியுடன் சொன்னான் கடல்வேந்தன். 

“கேட்காமலிருக்க முடியாது. சேரநாட்டு கடற் படைக்கு கடல்வேந்தனைத் தலைவராக மன்னர் நியமித்திருக்கிறார்” என்று பெருமையுடன் சொன்னாள் நிலக்கள்ளி.

இந்தச் செய்தியால் அதிர்ச்சியடைந்த இரு மாலுமிகளும், “அப்படியா?” என்று வினவினார்கள். 

“ஆம். அந்தச் சுமையை என்மீது திணித்திருக்கிறார். சேரர் பெருமான்” எனறு சொன்ன கடல்வேந்தன் “கடல் வீரர்களே! இன்று மற்ற மரக்கலங்களின் தலைவர்களையும், துறைமுகத் தலைவனையும் இங்கு வரவழைக்கிறேன். பிற்பகல் இங்கு அவர்கள் நம்மையும், நாம் அவர்களையும் புரிந்து கொள்ளவும் வசதியளிக்க இங்கு கூடுவோம்” என்று கூறி, அவர்கள் போகலாமென்பதற்கு அறிகுறியாகக் கடல்வேந்தன் கட்டிலிலிருந்து எழுந்தான். அவர்கள் சென்றதும் நிலக்கள்ளியிடம் ஓர் ஓலை எழுதிக் கொடுத்து, “நீ போய் துறைமுகத் தலைவனிடம் இதைக் கொடுத்து, மற்ற மரக்கலத் தலைவர்களுடன் பிற்பகல் இங்கு வரச்சொல்” என்று உத்தரவிட்டான்.  நிலக்கள்ளி சிறிதும் தாமதியாமல் கரைக்குச் சென்றாள். 

அன்று பிற்பகல் கடல்வேந்தன் உத்தரவுப்படி, அந்த மரக்கலத்தில் கூட்டம் நடந்தது. மற்ற மூன்று தலைவர் களுக்கும் தனது மரக்கலத்தை அவர்கள் தொடர்ந்து வர வேண்டிய முறைகளை எடுத்துரைத்த கடல்வேந்தன். “நாளைக்காலையில் நாம் தொண்டித் துறைமுகத்திலிருந்து புறப்படுகிறோம்” என்றான். 

மற்ற மரக்கலத் தலைவர்களில் சற்று முதியவனாகக் காணப்பட்ட ஒருவன் கேட்டான். “எந்த இடத்துக்கு?” என்று. 

“கடல்வேந்தன் உத்தரவுக்கு இதுவரை யாரும் காரணம் கேட்டது கிடையாது. போகும் திசை, இடம் எதையுமே. கேட்டது கிடையாது. கேட்டு, பதவியில் அடுத்த விநாடி இருந்தவர்களும் கிடையாது; இது நினை விருக்கட்டும். உங்கள் மூன்று கப்பல்களுக்கு நமது சைகை களை சொல்லிக் கொடுக்க, எனது இந்த இரு அதிகாரி உம் உபதளபதியும் வருவார்கள். இதைச் சர்வசாதா உணமாகச் சொன்னான் கடல்வேந்தன் ஆனால் அந்த தாரணத்துக்குள் உறுதி பூர்ணமாக ஊடுருவி இருந்ததை மற்ற மரக்கலத் தளபதிகள் உணர்ந்தார்கள். கடைசியாகத் துறைமுகத் தலைவனை நோக்கிய கடல்வேந்தன் “தலைவரே! நாளைக் காலையில் நான் பயணமாகிறேன், கொண்டியைக் காத்து நிற்க இங்குள்ள நான்கு மரக்கலங்களில் ஒன்றை மட்டும் விட்டுப் போகிறேன், மற்ற மூன்றும் என்னுடன் வரும்” என்று தெரிவித்தான். 

துறைமுகத் தலைவன் தலைவணங்கி விடைபெற்றுச் சென்றான். மறுநாள் விடியற்காலையில், தன்னுடன் புறப்பட வேண்டிய மற்ற மூன்று மரக்கலங்களுக்கும் நிலக்கள்ளியையும், மற்ற இரு அதிகாரிகளையும், அனுப்பி வைத்தான். நிலக்கள்ளியை, அனுப்பும் முன்பு அவளுடன் நீண்டநேரம் பேசினான். அவளுக்குப் போக விடை கொடுத்ததும், அவளுக்கு நூலேணியை அவனே இறக்கி விட்டு, “சொன்னதை நினைவில் வைத்துக்கொள். மிகுந்த எச்சரிக்கையுடன் இரு”  என்று எச்சரித்து அனுப்பினான்.

வெள்ளி முளைத்ததும் கடல்வேந்தன் மரக்கலம் நங்கூரமெடுத்து, தொண்டித் துறைமுகத்தை விட்டு வெளியே ஊர்ந்தது. மற்ற முன்று மரக்கலங்களும் அதைத் தொடர்ந்தன. தளத்திலேயே நின்றுகொண்டிருந்த கடல் வேந்தன் தன்னைத் தொடர்ந்து வந்த மற்ற மூன்று மரக்கலங்களையும் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் முகத்தில் என்ன காரணத்தினாலோ, சந்தேகம் விரவிக் கிடந்தது. 

35. குருட்டு அதிர்ஷ்டம் 

நிலக்கள்ளியைத் தனது சிறு கடற்படையின் உபதளபதி யாக்கிவிட்ட கடல்வேந்தனுக்கு, அவள் அந்தப் பதவியை எத்தனை தூரம் நிர்வகிக்க முடியும் என்பதில் மட்டும் சந்தேகம் இருந்தது. மரக்கலத்தின் சூட்சுமங்கள் அவளுக்கு ஓரளவு தெரியுமே தவிர, போர்க் காலங்களில் மரக்கலங்களை இயக்கவும் போரின் திருப்பத்துக்குத் தகுந்தபடி பக்கவத்தைத் திருப்பவும், முன்னேறச் செய்யவும் அவளுக்குப் பயிற்சி கிடையாதென்பதை அவன் முற்றும் உணர்ந்தேயிருந்தான். அப்படி போர் அனுபவமில்லாத ஒருத்திக்கு மற்ற மரக்கல மாலுமிகள் எத்தனை மதிப்பு தருவார்கள், எத்தனை தூரம் அவள் சொற்படி கேட்பார்கள் என்பதும் சந்தேகமாயிருந்தது கடல்வேந்த னுக்கு. கடற்போரில் தனக்கு அடுத்தபடி கப்பலை நடத்த ளேஸியஸுக்குத்தான் அவன் பயிற்சியளித்தானே தவிர, வேறு யாருக்கும் பயிற்சி அளிக்காததால், கிளேஸியஸின் இடத்தை நிலக்கள்ளி எத்தனை தூரம் நிரப்புவாள் என் ஓம் சந்தேகப்பட்டான். 

ஆனால், அந்த சந்தேகம் எதுவும் நிலக்கள்ளிக்கு இல்லை. தனக்கு அளிக்கப்பட்ட கப்பலுக்குச் சென்றதும் அந்தக் கப்பலின் தலைவரான முதியவரைத் தனது அறைக்கு அழைத்தாள். அறைக்குள் மிக அலட்சியமாக அழைந்த முதியவரின் மனவெறுப்பை உணர்ந்ததால் நிலக் “பெரியவரே! இப்படி அமருங்கள் என்று அவர் அழக்கமாக உட்காரும் ஆசனத்தையே சுட்டிக்காட்டினாள், ஞ்சன் அந்த இறைக் கட்டிலில் உட்கார்ந்தபடி. 

முதியவர் உள்ளே நுழைந்ததும் உபதளபதிக்குத் தலைவணங்கினாலும், உபதளபதி சுட்டிக்காட்டிய ஆச னத்தில் அமரவில்லை. “கட்டளை எதுவாயிருந்தாலும் உபதளபதி சொல்லலாம். நிறைவேற்ற சித்தமாயிருக்கிறேன்” என்று நின்று கொண்டே பதில் சொன்னார். 

“முதலில் உங்கள் ஆசனத்தில் உட்காருங்கள். பிறகு பேசுவோம்” என்றாள் நிலக்கள்ளி, மரியாதை தொனித்த குரலில். 

“அந்த ஆசனம் இப்பொழுது என்னுடையதல்ல. உபதளபதிதான் அதில் அமரலாம்” என்றார் முதியவர். 

நிலக்கள்ளி அவரை அன்புடன் உற்று நோக்கினாள். ”பெரியவரே! சற்று முன்பு நான் எந்தக் கட்டளையிட்டாலும் நிறைவேற்றுவதாக நீங்கள் சொல்லவில்லையா?” 

“ஆம். சொன்னேன்” முதியவர் குரலில் உற்சாகமில்லை. கடமை உணர்ச்சி மட்டும் இருந்தது. 

“அப்படியானால் ஆசனத்தில் அமரும். இது என் கட்டளை” என்றாள் நிலக்கள்ளி. 

அதற்குப் பிறகு உட்கார்ந்த முதியவரை நோக்கி ”பெரியவரே! உங்கள் அளவுக்கு எனக்கு மரக்கலப் பயிற்சி கிடையாது. கடல்வேந்தர் ஓரளவு சொல்லிக் கொடுத்திருக்கிறாரே தவிர, போர் வந்தால் இதை இயக்க என்னால் முடியாது. நான் உபதளபதி பதவியை ஏற்ற தற்குக் காரணம், கடல்வேந்தன் செய்யும் சைகைகள்,போர்க் குறிகள் உங்களுக்குத் தெரியாதென்பதுதான். சாதாரண போர் நியதிகளை ஒரு கொள்ளைக்காரர் தமக்கு வைத்துக் கொள்ள முடியாதென்பதைத் தாங்களும் ஒப்புக் கொள்வீர்கள்” என்று நிலக்கள்ளி சொன்னாள். 

மனம் திறந்து அவள் பேசிய பேச்சு, அவள் அடக்கம் இரண்டும் முதியவரைக் கொள்ளை கொள்ளவே. “உபதளபதி! உங்களுக்கு எந்தக் கவலையும் வேண்டாம். நாளை முதல் நீங்கள் சைகைகளைச் சொல்லுங்கள். மாலுமிகளுக்கு அவற்றில் நானே பயிற்சி அளித்து விடுகிறேன்” என்று சொல்லி விடைபெற்றார். 

மறுநாள் முதல் முதியவரும் நிலக்கள்ளியும் சேர்ந்தே மாலுமிகளை அந்தந்த இடங்களில் சந்தித்து புதுப் போர் முறைகளை எடுத்துரைத்தார்கள். கடல்வேந்தன் கப்பலிலிருத்து வரும் சைகைகள் எப்படியிருக்கும், அவற்றை பொருள் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் மாலுமிகளுக்கு விளக்கப்பட்டன. மற்ற மரக்கலத் தலைவர்களும், முதியவர் தமது மரக்கலத்திலிருந்து காட்டிக்கொடுத்த சைகைகளைப் புரிந்து கொள்ளவே, நிலக்கள்ளி நிம்மதி அடைந்தாள். 

நிம்மதி அடைந்தது நிலக்கள்ளி மட்டுமல்ல. கடல்வேந்தனும் நிம்மதியடைந்தான். முதிய மாலுமி நிலக்கள்ளியைப் பின்பற்றி அவர் தளத்தில் உலாவுவதையும், நிலக்கள்ளி சொன்னதையெல்லாம் அவர் தலைவணங்கி ஏற்று மற்ற மாலுமிகளுக்கு உத்தரவிட்டு வந்ததையும் கவனித்த கடல் வேந்தன், “நிலக்கள்ளிக்கு யாரையும் மயக்கும் சக்தி இருக்கிறது; நல்ல வேளை அந்த மரக்கலத் தலைவனுக்கு வயதாகி விட்டது. இல்லாவிட்டால் எனக்குப் போட்டியாக வந்து முளைப்பான்’ என்று உள்ளூரச் சிரித்துக் கொண்டான். அப்படி நிமதி ஏற்பட்டு விட்டதால் சிறிதும் கவலையின்றி மரக்கலத்தை ஓட்டலானான்.

முசிறிக்கும், தொண்டிக்கும் தூரம் அதிகமில்லை யென்றாலும், இரண்டு நாள் கழித்தும் முசிறியை அடையவில்லை. கடல்வேந்தன் மரக்கலம் வேறு எந்த திசை நோக்கி போய்க் கொண்டிருந்தது. முதியவர்கூட அதைக் கவனித்து, “உபதளபதி! தலைவர் கப்பல் திசைமாறுச் செல்வது போல் தெரிகிறதே” என்றார். 

“ஆம்” என்று ஒப்புக்கொண்டாள் நிலக்கள்ளி. 

“காரணம்?” என்று வினவினார் முதியவர். 

“தெரியவில்லை. ஆனால் காரணமில்லாமல் கப்பலைக் செலுத்த மாட்டார் கடல்வேந்தர்” இதை உறுதியுடன் சொன்னாள் நிலக்கள்ளி.

“அது உண்மை” என்று முதியவரும் ஒப்புக்கொண்டார். ஆனால், இப்படி கரையிலிருந்து நீண்ட தூரம் கப்பலைச் செலுத்த வேண்டியதற்கு முகாந்திரம் எதுவுமில்லை என்று திட்டபாக நம்பினார். அவர் நம்பிக்கைக்கு ஆகாரமிருப்பதை நிலக்கள்ளி ஒப்புக் கொண்டாலும், கடல்வேந்தன் காரணமில்லாமல் எதையும் செய்ய மாட்டாரென்ற உறுதியால் அவள் ஏதும் பதில் சொல்லவில்லை. உற்ற சமயத்தில் கடல்வேந்தனிடமிருந்தே அதற்குப் பதில் கிடைக்கும் என்று நம்பினாள். 

அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. இரண்டு நாள் கழித்து காலையில் தனது மரக்கலத்தின் பாய்களை இறக்கி, நங்கூரத்தையும் பாய்ச்சிய கடல்வேந்தன், உபதளபதி யையும், மற்ற மரக்கலத் தலைவர்களையும் தனது மரக் கலத்துக்கு வர உத்தரவிட்டான். நிலக்கள்ளி, முதியவர் உட்பட மற்ற மரக்கலத் தலைவர்களும் படகுகளை இறக் அவன் மரக்கலத்தை அடையவே, அவர்களைத் தளத் திலேயே வரவேற்ற கடல் வேந்தன். “தலைவர்களே! உபதளபதி நமது போர்ச்சைகைகளை உங்களுக்குப் போதித்திருப்பாரென்று நம்புகிறேன்” என்று உரையாடலைத் தொடங்கினான். 

ஆமாமென்பதற்கு அறிகுறியாக மற்ற மரக்கலத் தலைவர்கள் தலையசைத்தார்கள். “நல்லது! நாம் போரிட அவசியமிருக்குமோ இருக்காதோ தெரியாது. ஆனால், என்னைக் கடற்படைத் தலைவனாக்கியதிலிருந்து மன்னர் போரை எதிர்பார்க்கிறார் என்பது தெளிவதாகத் தெரி என்றும் பேச்சைத் தொடர்ந்தான் கிறது 

“அப்படித்தானிருக்க வேண்டும்” என்றார் முதியவர்.

“காரணம் என்ன முதியவரே? தங்களைப் போன்ற அனுபவம் மிக்க கடற்படை மாலுமிகள் இருக்கும்போது ஒரு கொள்ளைக்காரனை ஏன் தலைவனாக நியமிக்க வேண் டும் மன்னர்?” என்று வினவினான் கடல்வேந்தன் 

“எங்களுக்கு சாமர்த்தியம் போதாதென்று மன்னர் எண்ணியிருக்கலாம்” என்றார் முதியவர், 

கடல்வேந்தன் அவரை உற்று நோக்கி, “காரணம் அதுவாயிருக்க முடியாது” என்றான். 

“வேறென்னவாயிருக்கும்?” என்று முதியவர் கேட்டார்.  

“அவர் எதிர்பார்க்கும் போரை, சம்பிரதாய முறை யில் வெற்றி கொள்ள நினைத்திருக்க முடியாதென்று வேண்டும் மன்னர். ஆகையால், வேறுமுறைகளைக் தை பாளும் கொள்ளைக்காரன்தான் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று எண்ணியிருக்க வேண்டும்” என்ற கடல் வேந்தன், மேற்கொண்டு விவாதத்தை வளர்த்தாமல், ”நாம் இப்பொழுது முசிறியையும் தாண்டி வடமேற்கில் இருக்கிறோம்” என்று நிலைமையை எடுத்துச் சொன்னான்.

“ஆம்” என்றார் முதியவர். 

”ஆகவே, முசிறியை மேற்குத் தீசையிலிருந்து நாடி வரும் மரக்கலம் எதுவானாலும் நம்மைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்” என்ற கடல்வேந்தன், நிலக்கள்ளியை உற்று நோக்கினான். 

“அப்படி ஏதாவது மரக்கலத்தை எதிர்பார்க்கிறீர்களா?’ என்று நிலக்கள்ளி கேட்டாள். 

“இல்லை. எதிர்பார்க்கவில்லை, முசிறிக்கு ஆபத்தை விளைவிக்க இப்பொழுது அங்குள்ள மூன்று மரக்கலங்களே போதும். எச்சரிக்கையாக நாம் இந்தப் பகுதியில் உலாவு அழிப் வோம். எந்த மரக்கலமாவது வந்தால் அதை போம். இல்லையேல், நாளைக்கு மறுநாள் முசிறி துறை முகத்தில் நுழைவோம்” என்று கூறிய கடல்வேந்தன், “உபதளபதி! எனது மரக்கலத்தை அனுசரித்து உன் ஆணையின் கீழ் மூன்று மரக்கலங்களும் இயங்கட்டும். என்னைப் பின்பற்றி வரவேண்டும். சற்றுத் தள்ளித் தள்ளி மொத்தமாகப் பார்ப்பதற்கு விசிறிபோல் வரட்டும்” என்று உத்தரவும் இட்டான். 

நிலக்கள்ளி அவனை பிரமையுடன் பார்த்தாள் “அர்த்த சந்திர வியூகமாக வரச் சொல்லுகிறீர்களா?” என்றும் கேட்டாள். 

”ஆம்” என்ற கடல்வேந்தனும், அவளை வியப்புத் ததும்பிய விழிகளால் நோக்கி, ”மர்க்கல சாஸ்திரமும் படித்திருக்கிறாயா நிலக்கள்ளி?” என்று வினவினான் மன நெகிழ்ச்சியால், அவள் உபதளபதி என்பதை மறந்து. 

“படித்திருக்கிறேன்” என்ற நிலக்கள்ளி தலைகுனிந்து தளத்தின் பலகையை நோக்கினாள். அத்துடன் சொன் னாள், “நாம் விசிறிபோல் முசிறி துறைமுகத்தில் நுழைந் தால்,அங்குள்ள மற்ற மரக்கலங்கள் நம்மிடம்சிறைப்படும். என்று. 

முதியவர் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டார். “உபதளபதி! வயதுக்கு உங்கள் கடற்போர் அறிவு மிக அதிகம். கடல்வேந்தன் மனத்தையும், முன் கூட்டிப் புரிந்து கொண்டீர்கள்” என்று பாராட்டவும் செய்தார். 

‘என் மனத்தை இவள் எப்பொழுதோ புரிந்து கொண்டவள்’ என்று உள்ளுரச் சொல்லிக் கொண்ட கடல்வேந்தன், முதியவருக்கும் மற்றோருக்கும் போக விடை கொடுத்தான், “உபதளபதி பின்னால் வருவாள்” என்றும் அறிவித்தான். 

“நானும் போகிறேன். இங்கு என்ன வேலை எனக்கு?” என்று வினவிளாள் நிலக்கள்ளி. 

“இருக்கிறது. சொல்கிறேன்” என்றான் கடல் வேந்தன்.. 

மற்று மரக்கலத் தலைவர்கள் சென்ற பிறகு தளபதி, உபதளபதியை அழைத்துக்கொண்டு தமது அறைக்கு சென்றார், கதவும் மூடப்பட்டது. 

அதைப் பார்த்த ஒரு மாலுமி, ”கதவை ஏன் சாத்த வேண்டும்?” என்று இன்னொரு மாலுமியைக் கேட்டான். “மந்திராலோசனை” என்று இகழ்ச்சியாகச சொன்னான் இன்னொரு மாலுமி, மூவரும் மூடிய கதவை நோக்கி மெதுவாக நகைத்தார்கள். 

ஆனால், தளபதி அறைக்குள்ளே நடந்தது அவர்கள் ஊகித்ததல்ல. நிலக்கள்ளியின் போர் அறிவை எடை போட்டுக் கொண்டிருந்தான் கடல்வேந்தன். அவள் அறிவின் நுட்பமும் கடல்வேந்தனையே அதிரவைத்தது. “நிலக்கள்ளி! உன்னை உபதளபதியாக்கியது தவறு. தளபதி யாகவே நீ செயல்பட முடியும்” என்ற கடல்வேந்தன் “உன் காதலை நான் பெற்றது எனது அதிர்ஷ்டம். சில பேருக்குக் குருட்டு அதிர்ஷ்டம் அடிப்பது உண்டு. அந்த வர்க்கத்தில் சேர்ந்தவன் நான்” என்றும் பாராட்டினான். 

இத்தனைக்கும் அவளைத் தொடவும் இல்லை அவன். அவளே, அவனை நோக்கி வந்து, தனது இரு கைகளையும் அவன் கழுத்தில் போட்டு வளைத்து, தனது இதழ்களை அவளது இதழ்களுடன் வலியப் பொருத்தினாள்.

– கடல் வேந்தன்(நாவல்), முதற் பதிப்பு : டிசம்பர், 1984, பாரதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *