கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 3,361 
 
 

(1984ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

41 -45 | 46 – 50

46. செங்குட்டுவன் தோற்றம் 

கடல்வேந்தன் நிலக்கள்ளியைப் படகில் இறக்கி விட்டு தனது மரக்கலத்தின் பாய்களை நோக்கிச் சென்றதை யவனர்களின் பிரதான மரக்கலத்திலிருந்து கவனித்த கிளேஸியஸ், பக்கத்தில் ராட்சஸன் போல் பிரமாண்டமாக நின்றிருந்த தலைவனை நோக்கி, “இனிக் கடலில் பயங்கரமாகப் போர் மூளும், நீங்களும் எதிரியைச் சமாளிக்கச் சித்தம் செய்து கொள்ளுங்கள்” என்று எச்சரித்தான். 

அந்த எச்சரிக்கையை அசட்டையாக ஏற்றுக் கொண்ட யவனர் பிரதான மரக்கலத்தலைவன், “புதிதாகச் சேர்ந்திருக்கும் இரண்டு இந்த நாட்டுப் போர்க் கலங்களின் திறமை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் எனது மரக்கலங்கள் பெரும் போர்களைக் கண்டவை. யந்திர வசதிகளைக் கொண்டவை” என்று பதிலிலும் அசட்டை காட்டினான். 

கிளேஸியஸின் முகத்தில் கவலை தெரிந்தது. “பல போர்களைக் கண்டிருப்பது வேறு; இங்கு கடல் வேந்தரைச் சந்திப்பது வேறு” என்று எரிச்சலுடன் பதில் சொன்னான் கிளேஸியஸ். 

அதைக் கேட்ட யவனர் கடற்படைத் தலைவன் “உங்கள் கடல்வேந்தன் என்ன ஆகாயத்திலிருந்து குதித்தவனா?” என்று விசாரித்தான். 

அவன் விசாரித்த அதே நேரத்தில், கடல்வேந்தன் சுழற் பொறியிலிருந்து வீசப்பட்ட ஒரு பெரிய பந்தம் நெருப்பைக் கக்கிக் கொண்டு யவனர் மரக்கலத்தின் பாயை நோக்கிச் சீறி வந்தது. அதைத் தடுக்கவும் பாய்களைக் காப்பாற்றவும் தனது மாலுமிகளை ஏவிய யவனர் போர்க்கலத் தலைவனை நோக்கிய கிளேஸியஸ், “‘ஆகாயத்திலிருந்து கடல்வேந்தர் குதிக்கா விட்டாலும் அவரது தீப்பந்தங்கள் குதிக்கும்” என்று சுட்டிக் காட்டியதன்றி, “யவனர் கடற்படைத் தலைவரே! ஏற்கெனவே நமது மரக்கலங்களின் பாய் ஒன்றில் தீப் பிடித்தால் கப்பல்களைக் காப்பாற்றுவது கடினம். எதிரியைக் குறைத்து எடை போடவேண்டாம்” என்று கூறிவிட்டு, “நான் தரைப் படையைக் கவனிக்கப் போகிறேன். இங்கு கவனித்துக் கொள்ளுங்கள். அவ்வப்பொழுது தரையிலிருந்து நான் செய்யும் சைகைகளைக் கவனித்து இயக்குங்கள்” என்று உத்தரவிட்டுப் படகொன்றில் இறங்கிக் கடற்கரைப் பக்கம் விரைந்தான். 

இவன் கரையை அடைந்தபோது யவனர் குடிகளுக்கும், முசிறி வாசிளுக்கும் பல இடங்களில் போர் நடந்து கொண்டிருந்தது. முதலில் வந்த முதலை வியூகம் பல பகுதிகளாகப் [பிரிந்து இக்கரையிலுள்ள யவனருடனும், அக்கரையில் ஏறிவிட்ட யவனருடனும் கைகலந்து போராடுவதைக்கண்டான். 

அடுத்து கிளேஸியஸ் பக்கத்திலிருந்த தனது இருப்பிடத்திற்கு ஓடி கேடயமும் வாளும் தாங்கிப் போருக்குக தலைமை வாங்கி வந்தான். தோளில் மாட்டிக் கொண்டிருந்த பெரிய குழலை எடுத்து ஊதி, பிரிந்து இடம் கொடுக்காதீர்கள் இணைந்து போராடுங்கள்” என்று அறிவிக்கவும் நான்கு வீரர்களை அழைத்து போர் முறையை பின்பற்றச் சொல்லி போர் மும்முரமாக முண்டிருந்த இடங்களுக்கு அனுப்பினான். 

கிளேஸியஸின் புதிய உத்தரவுகளால் பிரிந்த யவனர் படையில், மீதியிருந்தவர்கள் மறுபடியும் சுவர். போல ணைந்தார்கள். அவர்கள் முரசும் சற்று மாறு தலாக ஒலிக்கவே அந்த ராணுவச் சுவர் மீண்டும் அசைந்து ஒரு பகுதி சுள்ளியாற்றை இரண்டாம் முறையாகக் கடந்தது. இன்னொரு பகுதி இக்கரையிலிருந்தே அம்புகளை எய்தன. 

சற்று முன்பாகக் கை கலந்ததால் வாள்களுடன் வாள்கள் மோத ஏற்பட்ட மும்முரமான போரில் யவனா இக்கரையில் பக்கத்தில் அதிகச்சேதமிருந்ததையும், தான் படைகளுக்குத் தலைமை தாங்கியதும் பாடலை நிறுத்திப் படகிலிருந்து இறங்கிவிட்ட நற்கிள்ளி வாளேந்தி சேரர் படைகளை இயக்க முற்பட்டதையும் கண்ட கிளேஸியஸ், அடுத்து நிலச் சண்டை மும்முரமாகிவிடுமென்று தீர்மா னித்து, படை மத்திக்கு வந்து படைடகளை இயக்கியது மட்டுமன்றி தானும் உக்கிரமாகப் போரிட்டான். 

அதன் விளைவாக இரண்டாம் முறை ஆற்றைக் கடந்து விட்ட யவனர் படையின் தாக்குதல் மிக உக்கிரமாக இருந்தது. கைகலந்த வாட்போர் மட்டுமின்றி இருபக்கத்துப் ன்பகுதி வீரர்கள் வீசிய அம்புகளும், துணிசுற்றி தீ வைக்கப்பட்ட எரிவேல்களும் பெரும் நாசத்தை விளைவிக்க சுமார் மூன்று முறை பின் லாயின. யவனர் படைகளுக்கு னடைந்து விட்ட யவனர் படை, நான்காம் முறை முன்னேற முயன்ற சமயத்தில் சேரர் படை மறுபடியும் முதலையாக வடிவெடுத்து யவனரைச் சூழவந்தது. ஆனால் கிளேஸியஸ் அதில் அகப்பட்டுக் கொள்ளவில்லை. தனது படையைச் சிறிது பின் வாங்கச் செய்து முதலை வியூகத்திலிருந்து தப்பி முதலையின் முதுகையும் தலையையும் மட்டும். தாக்க லானான். 

எங்கும் எரிவேல்களும் அம்புகளும் பறந்து கொண் டிருந்தன. வாட்களோடு வாட்கள் மோதும் ஒலிகளும், மாண்டு வீழ்ந்தவர்கள் மரணக் கூச்சலும் சுள்ளியாற்றில் இருபுறத்தையும் பயங்கரமாக அடித்தன. போர் நுணுக்கங்களை அறிந்த கிளேஸியஸ் இரு முறை சேரர் படைகளைத் தண்டிக்கவே செய்தான். ஆனால் ஒரே குருவான கடல்வேந்தன் சீடர்களாதலால் நற்கிள்ளியும் கிளேஸியஸ் தனது வியூகத்தைத் துண்டிக்க முடியாதபடி, பலபடி திருப்பியும் இணைய வைத்தும் போரை நடத்தினான். தனது முயற்சி ஒவ்வொரு முறையும் நற்கிள்ளியால் தடுக்கப்பட்டதைக் கண்ட கிளேஸியஸ் அவனை உள்ளூரப் பாராட்டவே செய்தான். கிளேஸியஸின் போர் முறையைக் கண்ட நற்கிள்ளியும் கடல்வேந்தன் யவனனுக்கு அளித்த பயிற்சியைப் பற்றி உள்ளூர சிலாகித்தான். சுமார் கால் ஜாமம் தரைப்போர் நடந்து கொண்டிருக்கையிலேயே கடலிலும் போர் மூண்டது மும்முரமாக. 

கடல்வேந்தன் தனது நான்கு மரக்கலங்களின் நங்கூரங்களையும் எடுத்து மரக்கலங்களைத் துடுப்புகளைக் கொண்டே முன்னேறச் செய்தான். இரண்டு போர்க்கலங்களை அவனும் மற்றுமிரு கலங்களை நிலக்கள்ளியும், பிரித்து நடத்தினார்கள். கடல்வேந்தன் செய்த சைகையால் பாய்கள் ஏதும் விரிக்கப்படவில்லை. ஒவ்வொரு போர்க்கலத்திலும் இரண்டு பந்தங்களுக்கு மேல் எரிய வைக்காமலும் அந்த இரண்டையும் மறைத்தும் மெதுவாக முன்னேறினான் கடல்வேந்தன். அவனைப் போலவே தனது இரண்டு மரக்கலங்களை அவனிடமிருந்து சிறிது தள்ளிச் செலுத்தினாள் நிலக்கள்ளி. 

 கடல்வேந்தன் கப்பல்கள் நான்கும் இயங்க முற்பட்டு விட்டதைக் கண்ட யவன மரச்சுலங்களை அசையாமல் நிற்க உத்தரவிட்ட யவனர் கடற்படைத் தலைவன் தரைக்கு முன்பாக சுவர்போல் நின்றபடியே போரிட்டான். அது எவ்வளவு தவறென்பதைச் சில நாழிகைகளில் புரிந்து கொண்டான். 

கடல்வேந்தனும், நிலக்கள்ளியும்) இரண்டிரண்டு மரக் கலங்களைக் கொண்டு இரண்டிடங்களில் தான் சிருஷ்டித்த கடற்சுவரை இடித்து உட்புகுந்து விட்டதைக் கவனித்தான். அந்த நிலையில் நங்கூரமெடுக்காத தனது’ மரக்கலங்களும் நீரில் ஓடிச் சுழன்று போர் செய்யும் வசதியில்லா ததாலும், கடல்வேந்தனும், நிலக்கள்ளியும் தனது படையை இரண்டு கவனித்துத் தனது இடங்களில் ஊடுருவி விட்டதையும் பொறிகளை இயக்கலானான். மூன்று யவன. மரக்கலங்களி லிருந்து திடீரெனச் சீறிவந்த அம்புகளையும், தீப்பந்தங் களையும் கவனித்த கடல்வேந்தன் தனது மரக்கலங்களைச் சிறிது பின்னுக்கு வாங்கி எதிரி தீப்பந்தங்களிலிருந்து தப்பி, மீண்டும் அவர்களை நோக்கித் கப்பல்களிலிருந்து தனது பந்தங்களையும் அம்புகளையும் வீசிக்கொண்டே வந்தான். மீண்டும் தனது சுவர் இடிந்து ஊடுருவப்பட்டதால் யவனர் தலைவன் தனது கப்பல்களின் நங்கூரங்களை நீக்க சைகை செய்தான். அந்த ஐந்து கப்பல்களும் நங்கூரமெடுத்துத் திருப்பியதும் பாய்களை விரித்துக் காற்று அனுகூலத்தால் வேகமாக முன்னேறின. 

கடல்வேந்தனும் தனது மரக்கலங்கனை ஓரிடத்தில் நிற்கவைக்காமல் சுழன்ற வண்ணம் எதிரியின் மரக்கலங்களை வரவேற்றான். எதிரிக் கப்பல்கள் நேரில் அவனிடம் மோத முயன்ற சமயத்தில் தனது கப்பலை அவற்றுக்கு இடையில் செலுத்தி அம்புகளைப் பிரயோகித்தான். இரண்டு அம்புகள் யவனன் தலைமை மரக்கலத்தில் பாய்க் கயிற்றைத் துண்டித்தன. இன்னொரு பந்தம் நேராக அவன் பாய்களை அணைத்துக் கொண்டன. இதே மாதிரி நிலையைத் தன்னை எதிர்த்த இரு மரக்கலங்களிலும் ஏற்படுத்தவே கடற்பகுதியில் ஐந்து பெரிய ஜுவாலைகள் உலாவி இருட்டைக் கிழித்துக்கொண்டிருந்தன. அது மட்டுமல்ல. பாய்களுக்குத் தீ வைத்ததோடு நில்லாமல் எதிரி மரக்களங்கள் மீது தனது மாலுமிகளைத் தாவவும் உத்தரவிட்ட கடல்வேந்தன், தானும் ஒரு வாளை ஏந்திப் மரமொன்றில் ஏறி வாளால் சைகை செய்ய, கடற் போர் மும்முரமாகியது. 

கடலில் எதிரிகளுக்குப் பெருநாசத்தை விளைவித்தான் கடல்வேந்தன், இரண்டிரண்டு படகுகளாகக் கீழே இறங்கி எதிரி மரக்கலங்களின் அடிகளைப் பெயர்க்க வீரர்களை அனுப்பினான்; தளத்துக்குத் தளமும் போர் நடந்தது. நிலக்கள்ளி தன்னை எதிர்த்த இரு மரக்கலங்களையும் கடல்வேந்தன் சைகைப்படி நெருங்கித் தனது வீரர்களை ஏவினாள் அவற்றைத் தாக்க. மரக்கலங்களோடு இணைத்தும் பிரிந்தும் போரிட்டாள். கடல்வேந்தன் கப்பல் செய்த போர் முறைப்படி, கடலில் இப்படி பிரளயம் விளைந்து கொண்டிருந்த அதே சமயத்தில் தரையிலும் ஒரு புதுமை நிகழ்ந்தது. 

எங்கிருந்தோ பல தாரைகள் ஊதப்பட்டன. யேற்றிச் சங்குகள் முழங்கின. யவனர் தரைப் படைகளை தோக்கிப் புரவிப் படையொன்று புயல் போல் தூரத்தே வந்து கொண்டிருந்தது. அதைச் சமாளிக்க கிளேஸியஸ் திரும்பியதும் உயர்த்திய வாளை நிலத்தில் தாழ்த்தி பிரமை பிடித்து நின்று விட்டான். அவனைச் சுற்றிலும் போர் நடந்து கொண்டிருந்தது. கடலை நோக்கித் திரும்பினான் ஒரு முறை. அங்கு இரு கப்பல்கள் மறைந்து விட்டதைக் கண்டு அவை கடலடிக்குச் சென்றுவிட்டதை உணர்ந்தான். கடல்வேந்தன் போர்க்கலம் அசுர வேகத்தில் வளைந்து போராடுவதைக் கண்டான். கடலில் யவனர் பலர் அஸ்தமித்து விட்டதைக் கண்டான். 

மீண்டும் திரும்பினான் கிளேஸியஸ், தாரைகள் வழங்கிய பகுதி தோக்கி. புரவிப் படையின் முகப்பில் வேகமாக சேரமன்னன் செங்குட்டுவன் வந்து கொண்டிருந்தான். தன்னைச் சுற்றிலும் யவனர் அடைந்த சேதத்தையும் கண்டு மன்னனையும் கண்ட கிளேஸியஸ் தனது கனவு முடிந்துவிட்டதைப் புரிந்து கொண்டான். நான்காம் ஜாமம் புகுந்து கொண்டிருந்தது. நாலா பக்கங்களிலும் யவனர் படை பின்வாங்கிக் கொண்டிருந்தது. கடலில் மூன்று மரக்கலங்களைக் காணோம். 

தூரத்தே சேரர் கொடி தாங்கி. முன்னே ஒருவன் புரவியில் வர, அடுத்து பெரும் வெண் புரவியில் சேரர் பிரான் வருவதைக் கண்டதும் கிளேஸியஸ் தனது வாளைத் தூக்கி அந்தத் திசை நோக்கி வணங்கித் தரையில் மண்டியும் இட்டான். அதே சமயத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த ஓர் அம்பு அவன் வாட்கரத்தில் தைக்கவே வாளும் நிலத்தில் விழுந்தது. இன்னொரு வாள் அவன் அணிந்திருந்த கவசத்தை உடைத்து உள்புகவே நிலத்தில் சாய்ந்தான் கிளேஸியஸ். 

47. அர்த்தங்கள் ஆயிரம் 

சுள்ளியாற்றின் தென்கரையில் முதலை வியூகத்தில் இணைந்து போராடிக் கொண்டிருந்த அமைச்சர் அழும்பில்வேள், ஆற்றின் வடகரையில் நிகழ்ந்து கொண்டிருந்த அற்புதங்களைக் கண்டதால் வியப்பின் எல்லையை எய்தி வாளால் போரிட்ட வண்ணமே “சஞ்சயா! அதோ பார்” என்று பக்கத்திலிருந்த தூதுவனுக்குத் தூரத்தே வந்து கொண்டிருந்த செங்குட்டுவனின் புயல்வேக புரவிப் படையைக் கண்களின் அசைப்பால் சுட்டிக்காட்டினார். அதைப் பார்த்த சஞ்சயன் மிதமிஞ்சிய ஆச்சரியத்திற்குள்ளாகி, “மன்னர் எப்பொழுது வந்தார் வஞ்சியிலிருந்து?” என்று வினவினான். “தவிர இந்தச் சிறுபோரில் சில் மன்னர் நேரிடையாகக் கலந்து கொள்ள வேண்டிய அவசியமென்ன?” என்று மற்றொரு கேள்வியையும் வீசினான். 

அமைச்சர் அக்கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் வரும் கேள்வி கேட்டார். “வஞ்சிப்பாதைப் பாசறையில் உள்ள படையில் பாதி தலைநகருக்கு போய் விட்டதாகச் சொன்னார்களே, அது எப்பொழுது திரும்பி வந்தது பாசறைக்கு?” என்று அவரும் வினாக்களைத் தொடுத்தார். மேற்கொண்டு கேள்வி பதில்களுக்கு அவகாசம் இல்லாமையால் இருவரும் போரிடவே முற்பட்டனர். அதே சமயத்தில் அராபியர்கள் குடியிருப்பிலிருந்து போருக்குக் கிளம்பி வஞ்சி நகர்ப் பாசறையை நோக்கிச் சென்ற யூசப்பின் படை சின்னாபின்னமாகி அலங்கோலப்பட்டுத் திரும்பிக் குடியிருப்புகளுள் புகுந்து கொள்ள ஓடி வருவதையும் அமைச்சர் கண்டார். தேன்கரை நிலை இப்படி இருக்க வடகரையில் சேர மன்னர் யவனர்களுக்குக் கடும் சேதம். விளைவித்துக் கொண்டு அக்கம் பக்கத்தில் வந்தவர்களைத் தமது பெரிய வாளால் வெட்டிப் போட்டுக்கொண்டு பிரளய கால ருத்திரன் போல் வருவதையும், அவர் பெரும் புரவி. கிளேஸியஸ் சாய்ந்துவிட்ட இடத்தை அணுக முயல்வதையும் கண்டார். அடுத்து நடப்பதைப் பார்க்க அவருக்கு ஆவலாக இருந்தாலும் போரின் மும்முரம் அதற்கு இடம் கொடுக்கவில்லையாகையால் போரிலேயே கவனம் செலுத்தினார்.  

சேர மன்னன் தனது புரவிப் படையை இரண்டாகப் பிரித்துப் போராடும்படி கையிலிருந்த தனது வாளை உயர்த்தி சைகை செய்துவிட்டுத் தனக்கெதிரே ஒரு வழி யையும் செய்துகொண்டு கிளேஸியஸ் விழுந்து கிடந்த இடத்தை அணுகி சட்டென்று புரவியிலிருந்து தரையில் குதித்து வாளை இடைக் கச்சையில் இணைத்துவிட்டு, கிளேஸியஸைத் தமது இரு கைகளாலும் தூக்கிக் கொண் டார். அந்த வாய்ப்பை உபயோகப்படுத்தி அவரை வெட்டி விட முயன்று அங்கு குவிந்த யவன வீரர்களை மன்னரைச் சுற்றி சக்கர வட்டமாக நின்றுவிட்ட புரவிப் படை வீரர்கள் தடுத்தார்கள். அந்த வட்டச் சுவரைத் தகர்த்து நுழைய முற்பட்ட யவனர்கள் தயவு தாட்சண்யமின்றி வெட்டப்பட்டார்கள். 

நான்காம் ஜாமம் முடிந்துகொண்டிருந்தது. யவனர் புரட்சியும் முடிந்து கொண்டிருந்தது. பெருவாரியான வீரர்களை இழந்ததின் காரணமாகப் பெரிதும் பலவீனப் பட்டுவிட்ட யவனர் படை கடலை நோக்கிப் பின்வாங்கிக் கொண்டிருந்தது. கள்ளியாற்றின் தென்கரை முதலை வாய்ப்பட்ட யவனர்களில் மிஞ்சியவர்கள் வடகரை யவனர்களைப் போலவே கடலை நோக்கிப் பின்வாங்க முற்பட்டார்கள், சிறிது தூரம் பின்வாங்கியதும் தென் கரை யவனர்கள் ஆற்றுப்படகுகளில் தாவி வடகரையைச் சேர்ந்து, குலைந்த தங்கள் படையுடன் இணைந்தனர். இணைந்து மீண்டும் திரும்பிப் போரிட முயன்ற போது மன்னரின் அசுர வேகப் புரவிப்படை பலமாகத் தாக்கவே யவனர்கள் வரிசை குலைந்து அணி குலைந்து கடற்புறம் ஓடத் தொடங்கினார்கள். அவர்களைத் துரத்த முற்பட்ட சேர வீரர்கள் சட்டென்று நின்றார்கள். கடற்தரைக்கு ஓடிய யவனர்களைச் சந்திக்க அங்கிருந்த கடல் லேத்தன் கப்பலிலிருந்து இறங்கிய மாலுமிகள் படகு களில் வேகமாக வந்திருந்தார்கள். அவர்கள் தலைமையில் வேந்தன் வந்து கொண்டிருந்தான். படகுகள் தரையைத் தொட்டதும் மாலுமிகள் மணலில் மண்டி யிட்டு வில்களின் நாணைப் பூட்டி அம்புகளைப் பொருத்தினார்கள். அந்தச் சமயத்தில் கடல்வேந்தன் மரக்கலத்தில் இருந்த டமாரம் டம டமவென டமவென ஒலிக்கவே அம்புகள் பறந்தன. யவனர்களை நோக்கி. ஆனால், சேர மன்னர் தனது கைகளில் தாங்கிய கிளேஸியஸை, பக்கத்தில் இருந்த ஒரு வீரனிடம் ஒப்படைத்துவிட்டு அவனிடம் ஏதோ செய்தி சொல்லி, இன்னொரு பக்கத்திலிருந்த வீரனிடம் சைகை காட்ட அவன் தன்னிடமிருந்த சங்கைப் பலமாக ஒருமுறை ஊதினான் அதைத் தொடர்ந்து கடற்கரையில் நின்ற கடல்வேந்தனும் ஊது தாரையை எடுத்து “பிழைக்க விருப்பமுள்ளவர்கள் ஆயுதங்களைக் கிழே போடுங்கள்” என்று முழங்கினான். இரண்டாவது சங்கு முழங்கியதும் “போர் முடிந்துவிட்டது” என்று அறிவித்தார். அவன் சொன்னதை அடுத்து பல இடங்களில் சேரர் படை வெற்றிச் சங்குகளை முழங்கியது. தாரைகளும் வெற்றி கோஷம் செய்தன. அந்த வெற்றியைக் காண கீழ்த் திசையிலிருந்து மெல்ல மேலே எழுந்தான்.

அருணோதயத்தில் போரை முடித்தான் சேர மன்னன். யவனர் அப்பொழுதும் கடலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள். போர் நடந்த நான்கு திசைகளுக்கும் வெற்றிச் செய்தி எட்டச் சிறிது நேரமாகியதால் ஆங்காங்கு சிறுசிறு பகுதிகள் போரிட்டுக் கொண்டிருந்தன. அருணோதயமும் தனது செவ்விய கிரணங்களை ஆற்றில் ஆங்காங்கு சுரைத்துக் கொண்டிருந்த குருதியுடன் சேர்ந்து அவற்றுக்கு ஒரு பளபளப்பையும் அளித்தது. முசிறியின் கரைகளைத் தாக்கிய மேற்குக் கடலும் வெற்றியைப் பாராட்டுவதற்குப் பெரிதாக இரண்டு அலைகளைக் கரையை நோக்கி அனுப்பலாயிற்று. அந்த அலைகளிலேயே கடல்வேந்தன் தனது நீண்ட வாளின் குருதியை அலம்பினான். பிறகு திருப்தியுடன் கடலையும் கரையையும் திரும்பத் திரும்ப நோக்கினான். பிறகு தனது மாலுமி களில் ஒருவனை அழைத்துத் தப்ப முயலும் யவனர்களை ஒன்று திரட்டுமாறும் அவர்களைத் தான் உத்தரவிடும் வரையில் ஏதும் செய்ய வேண்டாமென்றும் உத்தரவிட் டான். அவன் உத்தரவை நிறைவேற்ற மாலுமிகள் நாலா பக்கமும் பறந்தார்கள். 

போரை முடித்து யவனர் புரட்சியை அடக்கிய சேர மன்னன், கிளேஸியஸை மீண்டும் தனது கைகளில் படகொன்றில் வாங்கிக் கொண்டு சுள்ளியாற்றுப் “அமைச்சர் அழும்பில்வேள் மாளிகைக்குப் போ” என்று உத்தரவிட, படகும் நகர்ந்தது. துடுப்புகளால் துழாவப் பட்டு அரசன் போகும் திக்கைப் பார்த்த அமைச்சர் அழும்பில்வேள் சஞ்சயனுடன் தமது மாளிகைக்கு விரைந்து மனனனை வரவேற்க காவலரையும் துரிதப் படுத்தினார். கிளேஸியஸை ஏந்திய வண்ணம் மன்னன் வந்ததும் அவரை வாசலிலேயே வரவேற்றார் அழும்பில் வேள். “அந்த அறை எங்கே?” என்று செங்குட்டுவன் கேள்வியின் பொருளைப் புரிந்து வினவினான். அவன் கொண்ட அமைச்சர், ”சித்தமாக இருக்கிறது மன்னவா என்று கூறிப் படிகளில் அரசருக்கு முன்பாக ஏறிச் சென் றார். படிகளைக் கடந்து மாடிக்கு வந்ததும் தமது பள்ளி அறைக்கு மன்னனை அழைத்துச் சென்றார். அங்கிருந்து பஞ்சணையில் கிளேஸியஸைக் கிடத்திய மன்னர், “மருத்துவருக்குச் சொல்லி அனுப்பும்” என்று அமைச்சருக்குப் பணிந்துவிட்டு, கிளேஸியஸின் கச்சையிலிருந்து குறு வாளை எடுத்து அவனது அங்கியைத் தோள் புறத்திலும் மார்புப் புறத்திலும் கிழித்தார், தோளிலிருந்த அம்பைப் பிடுங்கி அதில் சீலை ஒன்றை அழுத்தி குருதியை நிறுத்தினார். அடுத்து மார்பில் தைத்து இருந்த அம்பைப் பார்த்து “இது ஆழத்தைத்து இருக்கிறது. சிகிச்சை செய்ய என்னால் முடியாது என்றார். 

“என்னால் முடியும்” என்ற குரல் வாயிற்படியில் ஒலிக்கவே திரும்பிப் பார்த்த சேர மன்னன் அங்கு கடல் வேந்தன் நின்றிருப்பதைக் கண்டார், “நீ வீரனா, மருத்துவனா?” என்றும் வினவினார். 

“வீரன் மருத்துவனாக இருக்கக் கூடாது என்ற விதி எதுவும் கிடையாது. மன்னர் அனுமதி கொடுத்தால் காயத்தை நான் பார்க்கிறேன்” என்றான். 

“பார், சிரத்தையுடன் பார். இவன் உயிருக்கு நீ பொறுப்பாளி” என்று கூறிய வண்ணம் மன்னர் கட்டிலின் முகப்பிலிருந்து எழுந்தார். 

“போகும் உயிரை யாரும் நிறுத்த முடியாது. உயிருக்கு ஆண்டவன் ஒருவன்தான் பொறுப்பாளி, என்னால் இயன்றவரை இவனைக் காப்பாற்றப் பார்க்கிறேன்” என்று கூறிய கடல்வேந்தன் பின்னால் திரும்பி, “நிலக்கள்ளி ஒரு பாத்திரத்தில் சுடுநீரும் பச்சிலைக் களிம்பையும் எடுத்துவா” என்று உத்தரவிட நிலக்கள்ளி உள்ளே சென்றாள். சிறிது நேரத்திற்கெல்லாம் சுடுநீரை ஒரு பாத்திரத்தில் ஏந்தி வந்த நிலக்கள்ளி அப்படியே பாத்திரத்தைப் பிடித்து நிற்க ஒரு துணியைச் சுடுநீரில் நனைத்து மார்புக் காயத்தில் பிழிந்தான். பிறகு மார்பில் து இருந்த அம்பை இருமுறை இலேசாக அசைத்தான். “பாதகமில்லை. அம்பு ஆதமாகப் புதையவில்லை. தவிர அது மார்பு எலும்பின் மேலேயே தைத்து நிற்கிறது” என்று கூறிக்கொண்டு, “நிலக்கள்ளி! களிம்பைக் கொடு” என்றான். அவள் சுடுநீரைப் புக்கத்திலிருந்த மஞ்சத்தில் வைத்துவிட்டு இடையிலிருந்து,ஒரு மடித்த வாழைப்பட்டையை எடுத்து நீட்டினாள். பட்டையைப் பிரித்து அதிலிருந்த பச்சைக் களிம்பை அம்பு தைத்திருந்த இடத்தைச் சுற்றிப் பூசி கடல்வேந்தன் அம்பை லேசாக அசைத்து அசைத்துக் களிம்பை உள்ளே செலுத்தினான், பிறகு மெதுவாக அம்பைப் பிடுங்கினான். களிம்பையும் மீறி துளிர்க்கத் தொடங்கிய குருதியை அடக்க களிம்பை நிரம்பக் காயத்தில் கொட்டி பட்டையாகப் பூசவும் செய்தான். குருதி அதற்குமேல் சிறு சொட்டுகூடத் துளிர்க்க வில்லை. “இந்தக் களிம்பைக் கட்ட வேண்டாம். காற்றில என்றான் கடல்வேந்தன். ஆறி இறுகட்டும்.” என்றான் கடல்வேந்தன். 

*மன்னவா! இனி இவன் உயிருக்கு ஆபத்தில்லை. நீங்கள் செல்லலாம்” என்றான்.

மன்னர் செல்ல மறுத்தார். “அவன் கண் விழித்தபின் போகிறேன்” என்றார். 

“கண் விழிக்க இரண்டு நாள்கள் ஆகும் ஆகும்” என்றான் கடல்வேந்தன். 

“பாதகமில்லை” என்றார் மன்னர். 

இரண்டு நாள் கழித்துக் கண் விழித்தான் கிளேஸியஸ், அவன் கண்கள் தன்னைப் பார்த்தவண்ணம் உட்கார்ந்திருந்த கடல் வேந்தனை நோக்கின. அவன் இதழ்களில் புன்முறுவல் நிலவியது “தலைவரே!” என அவன் இதழ்கள் முணுமுணுத்தன. அடுத்து “தந்தை கேட்டான் எங்கே” என்றும் கேட்டான். செங்குட்டுவன் கிளேஸியஸை நோக்கிக் குனிந்து “இதோ இருக்கிறேன் மகனே!” என்று கூறி அவன் கையைப் பற்றினான். கிளேஸியஸின் கை மன்னன் கையை இறுகப் பற்றிக் கொண்டது, அப்படிப் பற்றியதில் அர்த்தங்கள் ஆயிரம் இருந்தன. 

48. நீ, நான், கடல் 

உணர்ச்சிகள் வாய் மேம்படும்போது, வாய் பேசும் சக்தியை இழந்தாலும் மற்ற அவயவங்கள் இழப்பதில்லை. மன்னன் கையை இறுகப் பற்றிய கிளேஸியஸின் கை ஏதேதோ செய்திகளைச் சொல்லியது. அவன் கையின் பிடிப்பிலிருந்தும் லேசான துடிப்பிலிருந்தும் அவன் என்ன கூறுகிறானென்பதைப் புரிந்து கொண்ட மன்னர், “மகனே! பேச்சுக்குக் காலமிருக்கிறது. முதலில் நீ பிழைத்தெழு’ என்று கூறினார். 

மன்னன் பேச்சில் குறுக்கிட்ட கடல்வேந்தன் “கிளேஸியஸின் உயிருக்கு இனி எந்த ஆபத்துமில்லை. அம்பு ஆழமாகப் பதியவில்லை. இருதயத்தின் எந்தப் பாகத்தையும் தொடவில்லை. இன்னும். இரண்டே நாள்களில் கிளேஸியஸின் முழு பலம் திரும்பி விடும்” என்று கூறினான்.

“அப்படியானால் இரண்டு நாள்கள் கழித்துப் பேசுவோம்” என்ற மன்னர் கட்டிலின் முகப்பிலிருந்து எழுந்திருக்க முயன்றார். 

ஆனால், கிளேஸியஸின் கை அவர் கையிலிருந்து விலக மறுத்தது. அவன் முகத்தில் சிறிது சோகம் படர்ந்து கிடந்தது. “தந்தையே! விசாரணை எப்போது?” என்று வினவினான். 

செங்குட்டுவன், கிளேஸியஸ்ஸை நோக்கிப் புன்முறுவல் செய்தான். “இன்னும் இரண்டு நாளில்” என்று கூறினான்.

கிளேஸியஸ் மன்னன் கையைச் சற்று அதிகமாகவே அழுத்திப் பிடித்தான். “விசாரணை தேவையில்லை தந்தையே! நான் செய்தது பகிரங்கமான குற்றம், அதற்குத் தாங்கள் தண்டனை விதித்தாலே போதும். நான் உட்படச் சித்தமாயிருக்கிறேன்” என்று கூறினான் கிளேஸியஸ். 

அதுவரை வாளாவிருந்த அமைச்சர் அழும்பில்வேள், “மன்னவா! இந்த நாட்டில் விசாரணையில்லாமல் தண்டனை விதிக்கும் வழக்கம் இல்லை” என்று கூறினார். “எதற்கும் மன்னர் சித்தம்’ என்று மன்னன் சினம் தன் மீது திரும்பாதிருக்க வழியும் செய்து கொண்டார். 

மன்னர் அமைச்சர் மீது வியப்பு நிரம்பிய விழிகளை நிலைக்க விட்டார். “சரி அமைச்சரே! உமது இஷ்டப் படியே செய்வோம். அப்படி விசாரணை நடக்குமானால், அதில் மற்றவர் யாராவது குற்றம் செய்ததாக வெளிப் பட்டால் அவர்களுக்கும் தண்டனை அளிக்கப்படும்” என்று கூறிவிட்டு கிளேஷியஸின் கையிலிருந்த தனது கையை விடுவித்துக்கொண்டு, அவன் தலைமீது தனது கையை ஆறுதலாக வைத்துவிட்டு அந்த அறையை விட்டுக் கிளம்ப முயன்றவர், வாயிற்படியை அடைந்ததும் சற்றுத் திரும்பி “விசாரணையை எங்கு வைத்துக் கொள்ளலாம்?” என்று அமைச்சரை வினவினார். 

“முசிறியின் விசாரணை மண்டபத்தில் வைத்துக் கொள்ளலாம்” என்றார் அமைச்சர்.

“வேண்டாம்” என்றார் மன்னர். 

“ஏன் மன்னவா?” அமைச்சரின் வினாவில் வியப்பு இருந்தது. 

“உண்மை முழுதும் அங்கு வெளி வராது” என்றார் மன்னர். 

இந்தப் பதில் அமைச்சருக்கு அதிக வியப்பை அளித்தாலும் அதை அவர் வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் “வேறெங்கு விசாரணை நடத்தப் போகிறீர்கள்?” என்று வினவினார். 

“பரணர் இல்லத்தில். அங்கு தான் இந்தப் புரட்சிக்கு வித்திடப்பட்டது. அங்கேயே விசாரணை நடத்துவோம். விசாரணை ரகசியமாக நடத்தப்படும். இங்கிருப்பவர்களைத் தவிர நான் சொல்லும் சிலரை வரவழைத்தால் போதும்” என்று கூறிவிட்டு மன்னர் வெளியே சென்றார். அவரைத் தொடர்ந்து கடல்வேந்தனும் வெளியேறினான். விநாடிகள் கழித்துச் சாளரத்தின் மூலம் வெளியே எட்டிப் பார்த்த அமைச்சர் பெரும் பிரமிப்புக்கு உள்ளானார். வெளியே சுள்ளியாற்றுச் சங்கமப்பாதையில் மன்னர் கடல்வேந்தன் தோளில் கையைப் போட்ட வண்ணம் நடந்து கொண்டிருந்தார். அவர் சொல்வதை ஒப்புக் கொள்ளாதவன் போல் கடல்வேந்தனும் தலையை ஆட்டிக்கொண்டு அலட்சியமாக நடந்தான். “கொள்ளைக் காரனுக்கும் மன்னனுக்கும் அப்படி என்ன பேச்சிருக்கும்?” என்று சற்று இரைந்தே தன்னைக் கேட்டுக் கொண்டார் அமைச்சர். 

அவர் கண்ட காட்சியை அவருக்குப் பின்னாலிருந்து பார்த்த சேர தூதுவனான சஞ்சயனும். “இருவரும் பேசுவதைப் பார்த்தால் மன்னர், கடல்வேந்தனிடம் ஏதோ கெஞ்சுவது போல் தெரிகிறது” என்றான். 

சஞ்சயன் ஊகத்தில் உண்மை இருந்தது. அவ்விருவரும் அடுத்து நடந்து கொண்ட விதத்தில் தெரிந்து மன்னர் சட்டென்று ஏதோ கூறிவிட்டுக் கடல்வேந்தனிட மிருந்து பிரிந்து வேறு திசையில் சென்றார். கடல்வேந்தன் ஒரு படகில் ஏறி சுள்ளியாற்று முகத்துவாரத்தை நோக்கிப் படகைச் செலுத்தினான். படகைச் செலுத்திய போதும் அவன் பெரும் சிந்தனையிலிருந்தான். படகிலிருத்து நூலேணியில் ஏறி, தனது மரக்கலத் தளத்தை அடைந்தபோதும் அவன் முகத்தில் ஆழ்ந்த சிந்தனையும் ஓரளவு கவலையும் இருந்ததை அவனைத் தளத்தில் எதிர் கொண்ட நிலக்கள்ளியும் கவனித்தாள். தளத்தை அடைந்த கடல்வேந்தன் நிலக்கள்ளியைப் பாராதவன் போலப் பெரும் கடற்பரப்பை நோக்கினான். பிறகு பெருமூச்சு விட்டான். நிலக்கள்ளி சொன்னாள். “இது சோகக் கட்டமல்ல. மகிழ்ச்சிக்குரிய சமயம்” என்று.

கடல்வேந்தன் அவளைத் திரும்பி நோக்கி, அவள் தோள்களைப் பிடித்து அவளைக் கடலை நோக்கித் திருப்பி “இந்தக் கடலைப் பார் நிலக்கள்ளி” என்றான். 

கடல்காற்று அவளுடைய மேனியைத் தழுவிச் சென்றது. ”ஆம். மிக இன்பமாயிருக்கிறது” என்றாள். 

“நிலக்கள்ளி, இதிலுள்ள சுகம் நிலத்தில் கிடையாது. இதிலுள்ள சுதந்திரமும் நிலத்தில் கிடையாது. இந்தக் கடலை நான் பெரிதும் நேசிக்கிறேன்” என்றான் கடல் வேந்தன். 

அவன் எதற்காக இதைச் சொல்கிறானென்று நிலக் கள்ளிக்கு புரியாததால், “அதுதான் தெரிந்த விஷயமாயிற்றே” என்றாள். 

“இந்தக் கடலை நாம் பிரியும் நிலை வரும் போலிருக்கிறது” என்ற கடல்வேந்தன், அவள் தோளைப் பிடித்த வண்ணம் அறைக்கு அழைத்துச் சென்றான். தனது கட்டிலில் அமர்ந்து “நிலக்கள்ளி! நான் உறங்கி இரண்டு நாள்கள் ஆகின்றன. ஆகையால் சிறிது நேரம் உறங்குகிறேன். என்னை யாரும் தொந்தரவு செய்யவேண்டாம்” என்று கூறிப் படுத்துக்கொண்டு காலை நீட்டினான். 

“இரண்டு நாள்களாக ஏன் தூங்கவில்லை?” என்று கேட்டாள் நிலக்கள்ளி காரணம் புரியாமல். 

“கிளேஸியஸுக்கு சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவன் மார்பில் அம்பு பாய்ந்திருந்தது” என்ற கடல்வேந்தன், “இனி பயமில்லை. பிழைத்து விடுவான்” என்று சொன்னான். 

கிளேஸியஸ் உயிருடனிருப்பதிலோ இறப்பதிலோ அக்கறை இல்லாத நிலக்கள்ளி, “நீங்கள் எதற்காக சிகிச்சை செய்ய வேண்டும்?” என்று வினவினாள். 

“மன்னருக்கு சாந்தியளிக்க’ என்றான் கடல் வேத்தன். 

நிலக்கள்ளி வியப்புத் ததும்பிய விழிகளால் கடல் வேந்தனை நோக்கினாள். அந்து நோக்கில் வினாவொன்றும் தொக்கி நின்றதால் கடல்வேந்தன் அதற்குப் பதிலளித்தான், “மன்னர் கிளேஸியஸை தனது உயிர் போல் நேசிக்கிறார். ஆகையால் அவனுக்கு நானே சிகிச்சை செய்தேன்” என்று விளக்கிவிட்டு “இன்னும் இரண்டு நாள்களில் அவன் கதி நிர்ணயமாகும். பல உண்மைகள் அம்பலமாகும்” என்றான். 

“விசாரணை என்ன அவனுக்கு? பல கொடுமைகளைப் புரிந்திருக்கிறான். மன்னருக்கு எதிராகப் புரட்சி செய்திருக்கிறான்” என்றாள் நிலக்கள்ளி.

“ஆம் நிலக்கள்ளி! இருப்பினும் சேர நாட்டில் விசாரணை இல்லாமல் தண்டனை விதிக்க முடியாது” என்றான் கடல்வேந்தன். “விசாரணை இன்னும் இரண்டு தாள்களில் நமது குருநாதர் இல்லத்தில் நடக்கும்” என்று கூறினான். 

“பரணர் இல்லத்திலா?” ஆச்சரியம் ததும்பிய குரலில் கேட்டாள் நிலக்கள்ளி: 

“ஆம்” என்றான் கடல்வேந்தன். அதற்கு மேல் அவன் பேசவில்லை. அவள் இடையில் தனது கையைச் செலுத்தி இழுத்துக்கொண்டு திரும்பப் படுத்து கண்களை மூடினான்.

அவன் குழலை வருடியவண்ணம் நிலக்கள்ளி பஞ்சணையில் உட்கார்ந்திருந்தாள். மெல்லத் தனது கையையும் ஒருக்களித்த அவன் உடலுக்குக் குறுக்கே போட்டு சற்று இறுக்கி அணைத்தாள். பிறகு அவன் கன்னத்தில் தனது கன்னத்தை வைத்து அவளும் கண்களை மூடினாள். நீண்டநேரம் அப்படியே இருந்த நிலக்கள்ளி மெல்ல எழுந்திருக்க முயன்றாள். ஆனால் வலிய வேந்தன் கை அவள் இடையிலிருந்து அகல மறுத்ததல்லாமல் அந்த இடையை நெருக்கி நொறுக்கிவிடுவது போல் பிடித்து அவள் உடலைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இன்னொரு கை அவள் கால் சீலையைச் சற்று முழங்காலுக்கு மேல் தள்ளி வழவழத்த அவள் காலை இறுகப்பிடித்தது. “உம் உறங்குங்கள்” என்று அவள் அதட்டினாள். 

பதிலுக்கு அவன் தனது முகத்தை அவள் வயிற்றில் புதைத்தான் லேசாசு, “உறக்கம் வரவில்லை கள்ளி” என்று அவள் வயிற்றுக்குச் சேதி சொன்னான். 

அவள் புன்முறுவல் செய்தாள். அவள் காதுக்கருகில் தனது உதடுகளைக் கொண்டு போய், “உறங்குவதற்கு வழி இதுவல்ல” என்று அவள் முணுமுணுத்தாள். 

“நிலக்கள்ளி….” அவன் வயிற்றிடமே பேசினான். 

“உம்.” 

“நீ அருகிலிருக்கும்போது உறக்கம் எப்படி வரும்?”

“நான் போகட்டுமா?” 

“போனால் உறக்கம் எப்படி வரும்?” 

“ஏன் வராது?”

“உன்னைப்பற்றி நினைத்து மனம் அலையும்.”

”உறக்கத்திற்கு வேறு என்னதான் வழி?”

“அலுப்பு.” 

“அலுப்பா?” 

“ஆம்” என்ற கடல்வேந்தன் அவளைப் பக்கத்தில் இழுத்துக் கொண்டான். அவள் உடலைச் சுற்றி அவன் வலிய கைகள் ஓடின. அவள் உடலை அப்படியே தூக்கித் தன் மீது கிடத்திக் கொண்டான். அவன் கோர முகம் அவள் முகத்தில் இழைந்தது.  “வேந்தரே!” என்றாள் அவள் அந்த நிலையில். 

“என்ன கள்ளி?” என்றான் அவன்.

“முகத்தை அதிகமாக என் முகத்தில் இழைக்காதீர்கள்” என்று அவள் சொன்னாள், 

“ஏன்” 

“காரணம் உங்களுக்கே தெரியும்?” 

“ஆம். ஆம் தெரியும்” என்ற கடல்வேந்தன் “இன்னும் இரண்டே நாள் நிலக்கள்ளி! பல உண்மைகள் வெளியில் வரும். அதற்குப் பிறகு…” 

” அதற்குப் பிறகு!” 

“நான் உன்னுடன் இந்தக் கடலில் ஓடிவிடுவேன்” என்ற கடல்வேந்தன் “நிலக்கள்ளி! அதற்குப் பிறகு நீ கடற்கள்ளி. நீயும் நானும் இந்த அகண்டமான நீர்ப்பரப்பில் செல்வோம். உலகத்தைப் பார்ப்போம். பிறகு நமக்கு இன்றுபோல் இந்தக் கடல் நிரந்தரமான சொர்க்கம். அப்போது நீ, நான், கடல் உண்டு. வேறெதுவும் கிடையாது- அப்பொழுது மேலே நீலவானம், கீழே நீலக்கடல், இரண்டுக்கும் இடையில் எனது நீலவிழிக்கள்ளி, அந்த ஆனந்த சொர்க்கம் யாருக்கும் கிட்டாது நிலக்கள்ளி! இன்றிலிருந்து மூன்றாவது நாள், நமது வாழ்வின் புனரமைப்பு” என்று பேசிய கடல்வேந்தன், அந்தக் கனவில் லயித்து வர்ப்போகும் சொர்க்கக் கதைக்கு முன்னுரை அமைக்கலானான். அதற்கு இணைந்து கொடுத்தாளா அவள்? இழைந்து கொடுத்தாளா? இரண்டுந்தான். 

49. விசாரணையில் நிகழ்ந்த விசித்திரம் 

முசிறியின் துறைமுகப் போர் நடந்து மூன்று நாள்கள ஆகியுங்கூட துறைமுகப் பகுதிகளும், கடற்புறமும் போரின் காயங்களை முழுதும் துடைக்காமல் இருந்த படியால், இரண்டு நாள் சுத்திகரிப்பு வேலைக்குப் பிறகும் சிற்சில கேடயங்களும் வாள்களும் ஆங்காங்கு தரையில் கிடந்ததன்றி, மூழ்கடிக்கப்பட்ட இரண்டு யவன மரக் சுலங்கள் அவற்றுக்குத் துணை புரியவந்த இரண்டு பக்கத்துக் குறுநில மன்னர்களின் கப்பல்கள் இவற்றின் பிளந்த பலகைகள் அவற்றில் அலைந்து கொண்டும், கரையில் ஒதுக்கப்பட்டும் விடப்பட்ட கிடந்தன. உருப்படியாக யவனர்களின் பிரதான மரக்கலங்கூட பாய்களை இழந்தும் சில இடங்களில் பக்கப் பலகைகள் மூளியாகவும் காட்சி யளிக்கவே செய்தன. மொத்தத்தில் அந்தத் துறைமுகம் சேர நாட்டைச் சீண்டுவது எத்தனை அபாயம் என்பதை நிரூபித்தது. போர் முடிந்துவிட்டதால் சுள்ளியாற்று சங்கமத் துறையில் மறுபடியும் உலாவத் தொடங்கி விட்ட படகுகளும், மக்களும் கிளப்பிய குதூகல ஒலிகள் எப்போப்பட்ட அச்சத்தையும் அவர்கள் சகிக்கக்கூடிய உரம் படைத்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டின. நான்காவது நாள் காலையில் முசிறியின் படைகள் தங்கள் பழைய இடங்களுக்குத் திரும்பிவிட்டதால் சாதாரண வாழ்க்கை அந்த மாநகரில் உலாவத் தொடங்கி னாலும், போரைப் பற்றிய மக்கள் பேச்சு மட்டும் முடியவில்லை. கடல்வேந்தன் சிறப்பும், மன்னன் திடீரென தோன்றி யவனர்களையும் அவர்களுடன் புரட்சியில் சேர்ந்தவர்களையும் கடற்புறம் விரட்டிவிட்ட சிறப்பையும் பற்றிப் பேசவே செய்தனர். இந்தப் போர் சிறியதாயினும் இதைப் பற்றிப் பெரும் புலவரான பரணர் பாடாதிருக்க மாட்டார் என்று நிச்சயமாக மக்கள் பேசிக் கொண்டார்கள். அப்படியொரு பாட்டை அவர் முன்னமே பாடியிருந்தார் என்பதும், அதன் மூலம் கவிவாக்கு பொய்க்காது என்ற உண்மையை நிலைநாட்டியிருந்தாரென்பதும் மக்களுக்குத் தெரியாவிட்டாலும் நிலக்கள்ளிக்குத் தெரிந்தே இருந்ததால் அவள் நான்காவது நாள் காலையில் பரணர் வீட்டில் பதிற்றுப்பத்தின் வரிகளைப் பாடவே செய்தாள். அவள் தேன் குரல் பரணர் இல்லத்தில் எதிரொலி செய்த போதுதான் செங்குட்டுவன் அங்கு வந்து சேர்ந்தான், அமைச்சர் அழும்பில்வேளுடனும், படைத்தலைவன் வில்லவன் கோதையுடனும். 

உள்ளே நுழைய முயன்ற சேரன் சட்டென்று வாயிற் படியில் தானும் நின்று மற்றவரையும் நிற்கச் சொல்லி, பரணரின் பதிற்றுப்பத்தின் ஐந்தாம்பத்தின் வரிகளையும் அவற்றைச் சிறப்புச் செய்த இசையையும் காதில் வாங்கி நின்றான் சிறிது நேரம். பிறகு உட்புகுந்து கூட்டத்தில் அமர்ந்திருந்த பரணரை அணுகி, “புலவர் பெருமானே! இந்தச் செய்யுள் எப்பொழுது எழுதப்பட்டது?” என்று விசாரித்தான். 

“இரண்டு-மூன்று மாதங்கள் இருக்கும்” என்றார் புலவர். 

“இப்பொழுது நடந்ததை முன்னமே எப்படி முழுத முடிந்தது?” மன்னன் குரலில் கனிவு தோன்ற விசாரித்தான். 

“சேரனை மண்ணில் எதிர்ததுப் பிழைத்தவர் இல்லை. கடடில் மட்டும் எப்படி வெல்ல முடியும்?” என்ற பரணர் “சேரமன்னா! பிற்காலத்தில் பகைவரை, கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் என்று நீ அழைக்கப்படுவாய்” என்று உரைக்கவும் செய்தார். 

மன்னன் தலைவணங்கினான். “பரணர் பெருமானே! இந்தச் செய்யுள்களுக்கு என்ன கொடுப்பதென்று எனக்குத் தெரியவில்லை” என்றார். 

“ஏற்கெனவே உன் மகனை எனக்குப் பரிசாக வழங்கி விட்டாயே. வேறென்ன வேண்டும்? உன் ஒரே மகன் நாட்டை ஆள வேண்டிய இளவரசன், அந்தக் குட்டுவன் சேரனையே எனக்கு அளித்துவிட்டாயே மன்னா! இதை விடச்சிறந்த இன்னொரு பரிசு இருக்க முடியுமா?” என்று கேட்ட புலவர் “மன்னா! நீ எதற்கு வந்தாய் இத்தனை காலையில்?” என்றும் விசாரித்தார். 

மன்னன் பதில் சொல்லுமுன்பு அமைச்சர் அழும்பில்வேளே பதில் சொன்னார். “இங்கு இன்று மாலை விசாரணையை வைத்துக்கொள்ள மன்னர் முடிவு செய்திருக்கிறார்” என்று. 

“இங்கா!” புலவர் கேள்வியில் வியப்பு இருந்தது. 

“ஆம் பரணரே!” என்றான் மன்னன். 

“இங்கு இடம் போதுமா?” 

“சங்கப் பலகையில் இடமா இருக்கிறது? புலவர்கள் அதிகமாவதற்குத் தக்கபடி அது பெரியதாகி இடம் கொடுக்கும்”

“இது சங்கப்பலகையா?”

“ஆம் பரணரே! இது சங்கப் பலகைதான். எனது புலவர்தான் சங்கத்தின் தலைவர். இன்று அவர் முன்னால் விசாரணை நடைபெறும். அவரும் சாட்சி சொல்ல வேண்டியிருக்கும்” என்ற மன்னன் அன்று காலையிலேயே அங்கு தங்கிவிட்டான். விசாரணைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய அமைச்சருக்கும் உத்தரவிட்டான். 

மாலையும் மெல்ல மெல்ல நெருங்கியது. அன்று முசிறியில் வெளிவரப்போகும் பல ரகசியங்களை மறைக்க முயலுபவன் போல பகலவனும் மலைவாயிலில் விழுந்து மெதுவாக இருளைப் பரப்ப முற்பட்டான். புலவர் இல்லம் அன்று மாலையில் பெரும் கோட்டை போல் காணப்பட்டது. வாயிலில் ஆயுதந்தாங்கிய வீரர்கள் பலர் காவல் செய்தனர். உள்ளே பரணரின் பெரும் கூடத்தில் நாலாபக்கங்களிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்தக் கூடத்தின் ஒரு பக்கத்தில் பெரும் அரியணை ஒன்றில் சேரமன்னன் கம்பீரமாக வீற்றிருந்தான், நீதி செலுத்தும் தண்டமாக செங்கோல் அவன் கையை அலங்கரித்திருந்தது. அரியணையின் ஒரு பக்கத்தில் வில்லவன் கோதையும். இன்னொரு பக்கத்தில், சஞ்சயனும் பொம்மைபோல் சிறிதும் அசையாமல் நின்றிருந்தனர். சஞ்சயன் கையில் மட்டும் நீளமான வெள்ளித்தடி போன்று பற்பல வைரங்கள் பதித்த பிடியுடன் விளக்கொளியில் பளபளத்தது. மன்னன் சஞ்சயனை நோக்கித் தலையை லேசாகத் திருப்பியதும், தூதனான சஞ்சயன் கட்டியம் கூறினான். “சேரர் குலப் பெருந்தகை, புலவருக்கும் புரவலன் இமயத்தில் இலச்சினை பொறித்த மாவீரர், கடல் பிறகோட்டிய செங்குட்டுவர் வாழி! அவர் அறம் வாழி! அவர் நீதி வாழி! விசாரணை தொடங்குகிறது. அமைதி! அமைதி! அழைத்தாலன்றி யாரும் பேச வேண்டாம்” என்று இரைந்து. கூறினான். அடுத்து வில்லவன் கோதை அழைத்தான், “கிளேஸியஸ்! -கிளேஸியஸ்!” என்று. 

அடுத்த அறையொன்றிலிருந்து முதலில் கிளேஸியஸ் இருவர் கையைப் பிடித்துத் தாங்க உள்ளே வந்தான். அவன் உட்கார ஓர் ஆசனம் கொடுக்கும்படி மன்னன் சைகை காட்ட சற்று எட்ட ஓர் ஆசனம் போடப்பட்டது. அதில் அவன் அமர்ந்ததும் வில்லவன் கோதை கேட்டான். “கிளேஸியஸ்! முசிறித் துறையில் குடியிருந்த யவனர்களை நீ மன்னருக்கு எதிராகப் புரட்சிக்குத் தூண்டியதாகவும், சுள்ளியாற்றுத் தென்கரைக் குடியிருப்பிலிருந்து அராபியர் களையும் உன் புரட்சிக்கு இழுத்துக் கொண்டதாகவும் உன்மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. என்ன சொல்கிறாய்?”  என்று கிளேஸியஸ் தனது தலையைத் தூக்கினான் கம்பீரமாக. “குற்றத்தை அமைச்சர் மாளிகையிலேயே ஒப்புக்கொண்டு விட்டேன். தண்டனை பெறக் காத்திருக்கிறேன்” என்றான் சிறிதும் அச்சமில்லாத குரலில்.

“புரட்சிக்குத் தண்டனை என்ன தெரியுமா?” என்று விசாரித்தான் வில்லவன் கோதை. 

“தெரியும். மரணதண்டனை” என்றான் கிளேஸியஸ்.

“அதைப்பற்றி நீ கவலைப்படவில்லையா?”

“இல்லை.” 

“உயிரில் விரக்தி பிறந்துவிட்டதா?” 

“இல்லை. உயிரைக் கொடுத்தவர் உயிரைத் திரும்பப் பெறுவதில் தவறில்லை.”

“உனக்கு உயிரைக் கொடுத்தவர் யார்?” வில்லவன் கோதை இந்தக் கேள்வியைச் சற்று அழுத்தமான குரலில் கேட்டான். 

கிளேஸியஸ் அச்சமற்ற பரிதாபமான விழிகளை மன்னரை நோக்கி உயர்த்தினான். “மும்முறை என் உயிரைக் காப்பாற்றிய சேரமன்னர்; இன்று விசாரணை புரியும் மகாவீரர்; அன்பின் சிகரம்;” என்று சொன்னான் வருத்தம் தோய்ந்த குரலில்.

“மன்னரா உனக்கு மும்முறை உயிரளித்தவர்?” என்று மீண்டும் வினவினான் வில்லவன் கோதை. 

“ஆம்”

“எப்படி, எவ்வெப்பொழுது காப்பாற்றினார்?” என்று விளக்கமாகக் கேட்டான் வில்லவன்கோதை. 

“அது ஒரு பெரும் கதை. கேளுங்கள். அதைச் சொல்லி யாவது எனது நெஞ்சின் துன்பத்தை ஆற்றிக் கொள்றேன்” என்ற முகவுரையுடன் தனது கதையைச் சொல்லலானான் கிளேஸியஸ். “கிரேக்க நாட்டில் கலவரம் ஏற்பட்ட காலம். பிற நாடுகளை நாடி யவனர் குடும்பங்கள் கிளம்பிய காலக்கட்டம். அப்படிக் கிளம்பியவர்களில் எனது தாயும் ஒருத்தி. பல உறவினர்களுடன் ஒரு மரக்கலத்தில் அவள் இந்த முசிறியை அடைந்தாள். இந்த ஊரில் கடற்கரையோர இருந்த யவனர் சேரியில் தங்கினாள். கிரேக்க நாட்டிலேயே ஓர் அயோக்கியனால் பல துன்பங்களுக்கு இலக்கான என் தாய் அமைதியான வாழ்க்கையை நாடி இங்கு வந்தாள். இங்கும் அந்த அயோக்கியன் என் தாயைத் தொடர்ந்து வந்தான். ஒருநாள் என் தாயைப் பலவந்தமாகக் கற்பழித்தான். என் தாய் கதறினாள். அப்பொழுது அவள் குடிசைக் கதவைத் திறந்து கொண்டு வந்த ஒரு வீரர் அந்த யவன அயோக்கியனைப் பிடித்து இழுத்துக் நொண்டு வெளியே சென்றார். அப்புறம் அந்த அயோக்கியனை என் தாய் சந்திக்கவில்லை. அவளைக் காப்பாற்றிய வீரர் மட்டும் அடிக்கடி வந்து அவளை விசாரித்துச் சென்றார். அந்த அயோக்கியனின் நடத்தையால் என் தாய் கரு விற்றிருந்தாள்.அந்தக் கரு நான்தான். என் தாய் என்னை பெற்ற சில நாள்களுக்குள் இறந்து விட்டாள். இறக்கும் தறுவாயில் என்னையும் ஒரு சீலை, ஒரு குறுவாள், இவற்றையும் அந்த வீரரிடம் ஒப்படைததாள். அவர் என்னை பாதுகாக்கச் சில யவனர்களுக்குக் கட்டளையிட்டார். வாலிபத்தை அடைந்தேன். சிறு வயதிலேயே எனக்கு வாட் போர் கற்றுத்தரப்பட்டது. வாலிபத்தை அடைந்ததும் பல யவனர்களை வாட்போரில் தோற்கடித்தேன். ஒரு முறை என்னிடம் தோல்வியடைந்த ஒருவன் நான் திரும்பிய சமயத்தில் என் முதுகில் கீழே கிடந்த எனது குறுவாளால் குத்திவிட்டான், அப்பொழுது அங்கு தோன்றிய அந்த மகா போட்டுக்கொண்டு, வீரர் என்னை எடுத்துத் தோள்மீது அதோ இருக்கும் அமைச்சர் வீட்டுக்கு அழைத்துப்போய்ச் சிகிச்சை செய்து மீண்டும் யவனர் சேரிக்கு என்னை அழைத்து வந்து அங்கு விட்டுப் போனார். அதற்குப் பிறகு என்னை யவனர்களின் தலைவனாகவும் நியமித்தார். அவர் செய்த தவறு அதுதான். தலைவனானதும் அதிகாரம் வந்தது. அதிகாரம் வந்ததும் ஆசை வந்தது.ஆசை பேராசை யாகி இந்த முசிறியில் யவனர் ஆட்சியை நிறுவவும் தூண் டியது. இதற்கு எனக்குப் பலர் தூபம் போட்டார்கள் யவனர்கள் பெரிய வீர இனமென்றும் அவர்கள் பிற நாட்டில் அடிமைகளாக வாழ்வது தவறென்றும் குருமார்கள் சோதிடம் சொன்னார்கள். வெள்ளை, கறுப்பு நிறங்களு இதில் தலைகாட்டின.உயர்ந்த இனத்தவரான வெள்ளையர் சுறுப்பரிடம் அடிமையாக வாழ்வது தவறென்றும் எனக்குப் போதிக்கப்பட்டது. நான் மதியிழந்தேன் வணிகராக வந்த யலனர்களைச் சிறு படையாகத் திரட்டினேன், புரட்சிக்கும். வித்திட்டேன், வளர்த்தேன். அந்தப் பணியில் இன்னொரு மகாவீரனும் எனக்குக் கை கொடுத்தான். அவன்.. கத்தை முடிக்கவில்லை கிளேஸியஸ். சிறிது தயங்கினான். அந்த வாசகத்தை கிளேஸியஸ் வெளி வந்த அதே அறையி லிருந்து வெளி வந்த இன்னொருவன் முடித்தான். கடன் வேந்தன்” என்ற சொற்கள் அந்த அறை வாயிற்படியிலி ருந்து கணீரென ஒலித்தன. அங்கு கடல் வேந்தன் நின்றிருத் தான், முகத்தில் முறுவல் தவழ. 

அவனைக் கண்டதும் வில்லவன் கோதை மன்னனைப் பார்த்தார். அமைச்சர் கண்களும் அரசரை நோக்கின. கடல் வேந்தன் கண்களும், சேரவேந்தன் கண்களும் நீண்ட நேரம் நான்கு வேல்கள் உராய்வது போல் சந்தித்து நின்றன. கடைசியில் மன்னனே பேசினான். “கடல் வேந்தனே! கிளேஸியஸ் செய்த துரோகம் அதிகமா? நீ செய்த துரோகம் அதிகமா?” என்று வினவினான்.

“மன்னர்தான் தீர்மானிக்க வேண்டும் ” என்றான் கடல் வேந்தன். 

“நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?” என்று மன்னன் வினவினான். 

“உண்மையை” என்றான் கடல் வேந்தன். 

சேரமன்னன் சிறிது சிந்தித்தான். பிறகு “நிலக்கள்ளி! நிலக்கள்ளி!” என்று அழைக்க, நிலக்கள்ளி மற்றோர் அறை யிலிருந்து தோன்றினாள், தலை வணங்கினாள். 

“நிலக்கள்ளி!” என்று சற்றுக் கடுமையாக அழைத்தான் மன்னன். 

“மன்னவா!” நிலக்கள்ளியின் குரலில் லேசான அச்சமிருந்தது. 

“உன் கடமையைச் செய்” என்றான் மன்னவன்.

நிலக்கள்ளி அங்கிருந்த அனைவரையும் ஒரு முறை சுற்றிப் பார்த்தாள். பிறகு மெதுவாக நடந்து கடல் வேந்தனை நெருங்கினாள். அடுத்து நிகழ்ந்தது அனைவ வரையும் உலுக்கிய ஒரு விசித்திரம். நம்ப முடியாத விளைவு. ஆனால் நிலக்கள்ளி அதை எத்தனை அலட்சியமாகச் செய்தாள்! 

“தாமதிக்காதே! அவனை அழித்துவிடு” என்றான் மன்னன். 

தனது இடையிலிருந்த குறுவாளை எடுத்துக்கொண்டாள் நிலக்கள்ளி. 

50. அவன் ஆட்சி 

‘அவனை அழித்து விடு’ என்று அரசன் கட்டளையிட்டதும் அசையவில்லை கடல்வேந்தன், அந்தக் கட்டளையை நிறைவேற்றத் தனது அருகில் வந்து முன்பாத நின்று கொண்டு நிலக்கள்ளி குறுவாளை எடுத்த போதும், அவன் உணர்ச்சிகளைச் சிறிதும் வெளியிடவில்லை. எந்தவிதக் கலக்கமுமில்லாமல் கல்லைப் போல் நின்று கொண்டிருந் தாள் நிலக்கள்ளி. குறுவாளை எடுத்துக் கொண்டதும் நிலக் கள்ளியின் உயரத்தை உத்தேசித்து தனது தெடிய உருவத்தை லேசாக வளைத்துக் குனிந்தான். 

அரசன் உத்தரவையும் நிலக்கள்ளியின் செய்கையையும் கண்ட வில்லவன் கோதையும், அமைச்சர் அழும்பில் வேளும், தூதுவனான சஞ்சயனும், கிளேஸியஸும் அடுத்து என்ன விடரீதம் நடக்கப் போகிறதோ என்று அச்சமுற்று நின்றாலும் பரணர் மட்டும் சிறிதும் அசையாமலும் ஏதும் பேசாமலும் மௌனமாக உட்கார்ந்திருந்தார். அடுத்து விபரீதத்துக்குப் பதில் விசித்திரம் ஏற்பட்டபோது மற்றவர்கள் பிரமித்தாலும்கூட பரணர் மட்டும் பழையபடியே உணர்ச்சிகளைச் சிறிதும் காட்டாமல் அமர்ந்திருந்தார். 

குறுவாளை எடுத்த நிலக்கள்ளி சுடல் வேந்தனின் கழுத் தைச் சுற்றிலும் இருமுறை கீறினாள்,பிறகு தலையின் குழலி ருந்த பகுதியில் பாதி கீறி எடுத்தாள். அடுத்து அந்தக் உதவியாலேயே கீறிய குறுவாளின் பாகத்தை மெதி வாகவும், சாமர்த்தியமாகவும் குறுவாளின் நுனியால் கிண்டி எடுத்தாள். பிறகு மெதுவாக கீறிய பகுதிகளைப் பிரிக்க தொடங்கியதும், கடல்வேந்தன் தலையின் முன் பகுதியையும் முகம் பூராவையும் மூடிக்கிடந்த சருமம் மெல்ல மெல்ல விலகவே அது பொய்ச் சருமம் என்பதை உணர்ந்த வில்லவன் கோதை முதலானோர் பிரமிப்பின் எல்லையை அடைந்தார்கள். எப்பேர்பட்ட முகமூடியும் சில சந்தர்ப்பங்களில் நழுவி விடுமென்பதையும் ஆனால் அந்த சரும மூடி சருமத்தோடு சருமமாய் இணைக்கப்பட்டு அசல் சருமத்திற்கும் அதற்கும் வித்தியாசம் லவலேசமும் தெரியாமல் இருந்ததையும் கண்ட தூதுவனான சஞ்சயன் கூட, தான் குற்றனாய் எவ்வளவோ வேடங்கள் புனைந்திருந்தும், இந்த அமைப்புக்கு ஒப்பான ஒரு வேடத்தை யாரும் புனைய முடியும் என்பதைக் கனவிலும் நினைக்காததால் “அற்புதம்! இந்திரஜாலம்!” என்றும் வாய்விட்டு இரைந்தே சொன்னான். அழும்பில்வேள் வாயைத் திறக்க முடியாமல் சிலையென நின்றுவிட்டார். 

ஆனால், அந்த சருமத்தை முழுதும் நீக்குவது அத்தனை சுலபமாக இல்லாததால் நிலக்கள்ளி அதை மிக மெதுவாக எடுத்தாள். அப்படி முகத்தில் செயற்கை அமைப்பு எடுக்கப்பட்ட பின்பு அந்த உறையிலிருந்து வெளிவந்த முகம் மன்னன் மைந்தனும், பரணருக்கு மன்னனால் தானம் செய்யப்பட்டவனுமான குட்டுவன் சேரனுடைய முகம் என்பதை அறிந்ததும் அந்த அறையில் சிறிது நிசப்தம் சிலவியது “வீரனான கடல்வேந்தன் மறைந்து விட்டான் கோழையான குட்டுவன் மீண்டும் தோன்றி விட்டான்” என்ற கடல்வேந்தனின் சொற்கள் மற்றவர்களை இந்த உலகத்துக்கு இழுத்தன.புரியாத பலவிஷயங்களும் புரிந்தன. யவனர்கள் தோற்கடிக்கப்பட்டதற்கும் முசிறி, புரட்சியியிலிருந்து மீண்டதற்கும் கொள்ளைக்காரனான கடல் வேந்தன் மட்டுமன்றி கோழையான குட்டுவன் சேரலும் காரணமென்பதைப் புரிந்து கொண்ட வில்லவன் கோதைக்குப் பல விஷயங்கள் புரிந்தன. கோழையும் வீரனும் ஒருவனே என்பது மன்னருக்கு முன்னமே தெரிந்திருக்க வேண்டுமென்றும், அதனால்தான் கடல்வேந்தனை அவர் கடற்படைத் தலைவனாக நியமித்தாரென்றும் தீர்மானித்தான் சேரர் நிலப்படைத் தலைவனான வில்லவன் கோதை. 

குட்டுவன் திடீரென்று முசிறியின் நிலப்படைத் தலைவனாகத் தோன்றிப் பிறகு மறைந்து விட்டதையும் எண்ணிப் பார்த்த அமைச்சர் அழும்பில்வேளும், சஞ்சயனும் ஓரளவு உண்மையைப் புரிந்து கொண்டார்கள். அழகிய குட்டுவன் முகத்தைத் தழும்புகள் உள்ள விகார முகமாக மாற்றியதும் ஒரு மான கடல்வேந்தன் முகமாக விசித்திரம் என்று அமைச்சர் எண்ணினார். அது மட்டும் வெறும் சரும முகமூடியாயிருந்தால் ஏதாவது ஒரு சண்டையில் வாள்வீச்சு அதைக் கிழித்து விட்டிருக்கும் என்று நினைத்தார். ஆனால், அது மிகக் கச்சிதமாக அசல் முகத்தைப் போலிருக்க என்ன செய்தார்கள்: யார் செய் திருக்க முடியும் என்று நினைத்து விடைகாணாமல் தவித்தார் அமைச்சர். 

அந்தச் சமயத்தில் ஒலித்தது அரசர் குரல், “இளவரசனான நீ ஏன் கொள்ளைக்காரனாக மாறினாய். என் அரசுப் பொக்கிஷ வண்டிகளைக் கொள்ளையடித்தாய். நீ கொள்ளையடித்த பொக்கிஷக் குவியல்கள் என்ன ஆயின?” என்று கேட்டார் மன்னர் நிதானமான குரலில், “நீ இளவரசனாக இருந்தாலும் நீ புரிந்துள்ள குற்றங்களிலிருந்து நீ தப்ப முடியாதென்பதைப் புரிந்துகொள். செங்குட்டுவன் ஆட்சியில் மகனுக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதி என்பது கிடையாதென்பதை நினைவில் வைத்துக் கொண்டு உன் குற்றங்களுக்குச் சமாதானம் சொல். நீ ஏன் கொள்ளைக்காரனானாய்?’” என்று மன்னன் உறுதி மிகுந்த குரலில் கேட்டான் 

கடல்வேந்தனின் ஈட்டிக் கண்கள் நிர்ப்பயமாக மன்னரை நோக்கின, “நான் கொள்ளைக்காரனானால் அதற்கு மன்னன் தான் பொறுப்பாளி” என்று சொன்ன அவன் குரலில் அச்சமில்லை, பணிவில்லை, குற்றச்சாட்டு இருந்தது. 

இந்தச் சமயத்தில் பரணர் குறுக்கிட்டு “இளவரசனோ மன்னர் முன் பேசும் முறை இதுவல்ல” என்று கண்டித்தார். 

குட்டுவன் சேரலின் விழிகள் மறுபடியும் கடல்வேந்தனின் இரக்கமற்ற விழிகளாக மாறின. “குருநாதரே! இது மன்னர் அரண்மனையல்ல. இது நீதி ஸ்தலம். இங்கு சத்தியந்தான் பேசப்படவேண்டும். அங்கு வீற்றிருப்பதும் இங்கு நிற்பதும் தந்தையும் மகனும் அல்ல. மன்னனும் குற்றவாளியும். ஆகவே சத்தியத்தைச் சொல்கிறேன். கேளுங்கள்” என்று கூறிய கடல்வேந்தன் கண்களில் கனவு விரிந்தது. கனவுக் கண்களுடன் உதடுகள் உண்மைக் கதையை, தெள்ளென எடுத்துக்காட்ட முற்பட்டன. 

கடல்வேந்தன் சிறிதும் உணர்ச்சியற்ற குரலில் அமைதியாக முதலில் பேச்சைத் தொடங்கினான். “நான் பிறந்தது இந்த நாட்டை ஆள. ஆனால் எனது பிறப் புரிமையை மன்னர் எனது ஐந்தாவது வயதில் பறித்தார். பரணர் பாடிய தமிழ்க் கவிதைகளுக்குப் பரிசிலாக என்னைப் பரணருக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார். சிறுவனான என்னைக் கைப்பிடித்து அழைத்துக்கொண்டு தமது இல்லம் வந்தார் பரணர்; எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார். இலக்கியம் கற்றேன். ஆனால் முழு நோக்கு அதில் செல்லவில்லை. புலியைப் பசுவாக்கப் பார்த்தார் புலவர். ஆனால் அது பலிக்கவில்லை. ஆகவே தமிழ்ப்பயிற்சியுடன் ஆயுதப் பயிற்சியும் பெற ஏற்பாடு செய்தார். ரத்தத்தில் ருசி கண்ட புலி போல் எனக்கு ஆயுதப் பயிற்சியில் ருசி அதிகமாயிற்று. எனக்கு வாட் பயிற்சியளித்த ஆசிரியரே என் முன்பாக வாளை எடுக்க அஞ்சினார். பிறகு குறுவாள் பயிற்சி, வில்விததை அனைத்தும் பயின்றேன். இந்த சேர நாட்டின் பயங்கர ஆயுதமான செண்டாயுதத்திலும் மிகுந்த தேர்ச்சி பெற்றேன். அதற்காக நான் தமிழை அடியோடு புறக்கணிக்கவில்லை. தமிழ் வகுப்பிலும் உட்காரத் தொடங்கினேன். அதற்குக் காரணம் ஒரு பெண். இப்பொழுது என் முகத்திரையைக் கிழித்தாளே அந்த நிலக்கள்ளி பரணரிடம் தமிழ் படிக்க வந்தாள். அவள் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாள். அவளுடன் நற்கிள்ளி என்பவனும் பாடம் படிக்க வந்தான். அவன் எனக்கு உற்ற நண்பனானான்.  

நாங்கள் முவரும் தமிழ் படித்த காலத்தில் நண்பர்களானோம். அடிக்கடி நற்கிள்ளியும் நானும் வெளியே போய் விடுவோம். நற்கிள்ளி யவனர் குடியிருப்புக்கு அருகிலிருந்தபடியால் அங்கு அடிக்கடி போய் வந்தோம். அங்குள்ள இரவு நிகழ்ச்சிகள், களியாட்டங்கள் எல்லாமே என்னைக் கவர்ந்தன. ஆனால் நற்கிள்ளி மட்டும் கவிதையில் ஆழ்ந்தான். இப்படி யவனர் சேரியில் பழகிய காலத்தில்தான் அங்குள்ள மந்திரவாதியின் பரிச்சயம் ஏற்பட்டது. சில காலங்களில் யவனர் மாறுவேடங்களைப் போட்டுக்கொண்டு நடனமாடுவார்கள் அந்த நடனததில் நானும் பங்குகொள்ள நிச்சயித்தேன். அந்த யவன மந்திரவாதி எனக்குக் கடற்கொள்லைக்காரன் வேடத்தைப் போட்டுவிட்டாள். அன்று என்னை நற்கிள்ளியால் கூட அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஆகவே அந்த மாந்திரிகனை அணுகி “நிரந்தரமாக வைத்துக் கொள்ள ஒரு முகமூடி தரமுடியுமா?” என்று கேட்டேன். அப்படிச் செய்வதானால் மனித சருமத்தை இணைத்துத் தான் செய்ய முடியுமென்றும், அதற்கு எனது சருமத்தில் ஒரு பகுதி தேவைப்படும் என்றும் சொன்னான், நான் அதற்கு இணங்கியதன் மேல் என் தொடையில் இருந்து நீளமாக சிறிது சருமம் எடுத்துக்கொண்டான். என்னை பல்லைக் கடித்துக் கொள்ளும்படி கூறி எனது தொடையை லேசாகக் கீறி சருமம் எடுத்தான். நான பல்லைக் கடிக்கவுமில்லை முகத்தைச் சுளிக்கவுமில்லை. அதைக் கண்ட அவன் எனது நெஞ்ரத்தைப் பாராட்டினான். பிறகு சரும முகமுடி செய்து அவன் கையாலேயே அதைப் பொருத்தினான். அத்துடன் வேறு சருமத்தையும் தலைப் பகுதியில் இணைத்துச் செந்நிறக் குழலையும் அதில் பதித்தான். 

முதலில் என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்ததும் எனக்கே யாரென்று புரியவில்லை. கருமை நிறைந்த வடுக்கள் உள்ள பயங்கர முகம் கொள்ளைக்காரன் முகமாகவே தோன்றிற்று. பிறகு அதை அகற்றும் முறையையும் அவனிடம் தெரிந்து கொண்டேன். என் சிந்தனை ஓடிற்று. எனது அரசு உரிமையைப் பறித்த எனது தந்தையைப் பழி வாங்கினாலென்ன என்ற எண்ணம் வளர்ந்தது. 

பிறகு நான் அடிக்கடி யவனர்களிடம் பழகினேன். அவர்கள் மரக்கலங்கள் வந்தபோதெல்லாம் அவற்றிலும் பயிற்சி பெற்றேன்! அவர்கள் மரக்கலங்களில் சென்று போரிலும் ஈடுபட்டு அரபிக் கடலில் வந்த கொள்ளைக்காரர்களைத் தாக்கினேன். அந்தக் கப்பல்களில் ஒன்றை எனது கப்பலாகவும் மாற்றிக் கொண்டேன். நற்கிள்ளியும், கிளேஸியஸும் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள். என் தலைமை அலுவலகத்தைத் துறைமுகப் பகுதியில் ஏற்படுத்தி அதற்கு வில்லம்பு இலச்சினை இல்லம் என்று பெயர் சூட்டினேன். அதன் மகிமை வளர்ந்தது. எனது கொள்ளைக் காரர்களின் உதவியால் அரசர் பொக்கிஷ வண்டிகளைக் கொள்ளையிட்டேன். என்னை அடக்கவும், பிடிக்கவும் முயன்றார் அழும்பில்வேள் முடியாததால் திணறினார். நான் மரக்கலங்களைக் கொள்ளையடித்தேன். பொக்கிஷ வண்டிகளைக் கொள்ளையடித்தேன். ஆனால் அமைச்சர் மகள் நிலக்கள்ளி என் மனத்தைக் கொள்ளையடித்தாள் அமைச்சர் மாளிகையில் அவர் கண்முன்பே நிலக்கள்ளியைத் தூக்கிச் சென்று என் கொள்ளைத் திறமையைக் காட்டினேன்”. இங்கு சிறிது நிதானித்தான் கடல்வேந்தன்.

“பிறகு ஏன் மாறினாய்?” என்று அரசர் கேட்டார். 

“தமிழ் ரத்தம் என் உடலில் ஓடும் காரணத்தால்” என்ற கடல் வேந்தன், மேலும் மெளனம் சாதித்தான். சில விநாடிகளுக்குப் பிறகு தானாகவே பேசினான். “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவன் யவன நாட்டிலிருந்து வந்தான். அவனும் கிளேஸியஸும் தனிமையில் பேசியதைத் தற்செயலாகக் கேட்டான். அவன் கிளேஸியஸைப் புரட்சிக்குத் தூண்டினான், கிளேஸியஸ் யவன ராஜகுலமென்று சொல்லி அவனிடமிருந்த சீலை அடையாளத்தையும் காட்டினான். முசிறியில் யவனர் கால் ஊன்றி விட்டால் மற்ற பகுதிகளை ஆக்ரமிப்பது கஷ்டமல்ல என்று யோசனை சொன்னான். முதலில் கிளேஸியஸ் ஒப்பவில்லை. ஆனால் அவன் சொன்னான். “உனக்கு இங்குள்ள அக்கம்பக்க சிற்றரசர்களிடமிருந்து உதவி கிடைக்கும். இந்த பாரதத்தினர் சுயலாபத்துக்காக ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்கவோ எதிர்க்கவோ தயங்கமாட்டார்கள்” என்று. 

கிளேஸியஸ் அன்றிலிருந்து மாற முற்பட்டான். சேர நாட்டில் வணிகர்களாக வந்த ஓர் இனம் சேர நாட்டை விழுங்கப் பார்க்க நினைக்கும் போது நானும் மாறினேன். சேர நாட்டை எப்படியும் யவனர்களிடமிருந்து காப்பது என்று உறுதி செய்துகொண்டேன். அந்த உறுதியுடன் என் மரக்கலத்தைப் போருக்கு சகலவசதிகளையும் உடைய தாகச் செய்தேன். அதற்கு இணையான போர்க்கலம் இப் பொழுது மேலைக்கடலில் எங்குமே கிடையாது. அதை இப் பொழுது நடந்த போரே நிரூபித்திருக்கிறது. புரட்சி யைப் பற்றி அறிந்த பின்பு மன்னரைச் சந்தித்து விஷ ய்த்தை விளக்கவும் எண்ணினேன். ஆகவே அமைச்சர் வஞ்சி சென்றபோது நானும் சென்றேன். அதை அடைந்த இரவில் மன்னரைச் சந்தித்து எனது உண்மை சொரூபத் தைக் காட்டினேன். நடக்கப் போகும் புரட்சியையும் குரிப் பீட்டு என்னைத் கடற்படைத் தலைவனாக்கினால் யவனரை முறியடித்து விடுவதாகக் கூறினேன். மன்னர் பெரிதும் சிந்தித்தார். முடிவில் இசைந்து சொன்னார். 

“குட்டுவா! உன்னைக் கடற்படைத் தலைவனாக நியமிக்கிறேன். ஆனால் நீ முரணாக நடந்து கொண்டால் நீ என் மகனென்றும் பாராது மரண தண்டனை விதிக்கத் தவறு மாட்டேன்” என்று. பிறகு நடந்தது எல்லாருக்கும் தெரியும். தொண்டியிலிருந்து சில கப்பல்களை என்னுடன் இணைத்துக் கொண்டேன். யவனர்களுடன் பழகி அவர்கள் புரட்சி தொடங்கும் நாளையும் நேரத்தையும் உணர்ந்தேன். அதைப் பற்றிப் புலவர் மூலம் தொண்டியிலிருக்கை யிலேயே மன்னருக்கு ஓலை அனுப்பினேன். 

கிளேஸியஸ் திட்டப்படி புரட்சியை நடத்தினான். யூசப்பையும் சேர்த்துக்கொண்டான். சுள்ளியாற்றுக்கு அக்கரையிலிருந்தும் இக்கரையிலும் முசிறியைத் தாக்கிப் பிடிக்கத் தீர்மானித்தான். வாணிபத்துக்காக வந்த யவனர் மரக்கலங்களையும் புரட்சிக்காக நிறுத்திக் கொண்டான். 

நானும் சித்தமானேன். எனது யோசனைப்படி படை களைக் குறைப்பது போல் சாதாரண மக்களை வெளியேற்றி னோம். முசிறியிலிருந்தும். வஞ்சிப்பாதை பாசறையிலி ருத்தும், அந்த இடத்தை சாதாரண மக்கள் உடையிலிருந்த மன்னரின் சூறாவளிப்படை நிரப்பியது, இது தெரியாமல் இயங்கிய யவனர், நிலத்தில் நற்கள்ளியால் முறியடிக்கப் பட்டனர். கடலில் நிலக்கள்ளி முறியடித்தாள், யவனர் மரக் கலங்களையும் துணை மரக்கலங்களையும், அவ்விருவரும் செரநாட்டுக்குச் செய்திருக்கும் சேவை மகத்தானது. கடற் பிறகோட்டிய செங்குட்டுவருக்கு இந்த இருவரும் இரண்டு மகத்தான துணைக் கரங்கள். இப்படிச் சொல்லித் தனது கதைைய முடித்தான் கடல் வேந்தன் எனும் குட்டுவன் சேரல். 

நீண்டநேரம் அந்தக் கூட்டத்தில் பெரும் மௌனம் நிலவியது. யாரும். பேச அஞ்சினார்கள். மன்னனே இறுதியில் பேசினான். ”கிளேஸியஸ்! நீ சேர நாட்டுக்குப் அரிந்தது பெரும் துரோகம். உன்னை வெட்டுப்பாறைக்கு அனுப்புவதுதான் நீதி, ஆனால் உன்னைக் காப்பதாக உன் தாய்க்கு வாக்குக் கொடுத்தேன். ஆகையால் உன்னை நாடு கடத்துகிறேன். நாளைக்கு மறுநாள் சேரநாட்டு எல்லையில் உன்னைக் கண்டால் உன்னை எனது படையினர் அழிக்கத் தயங்கமாட்டார்கள். இப்பொழுது முசிறி துறைமுகத்தி லிருக்கும் யவனர் கப்பலில் உன் தாயகம் சென்று விடு” என்று கிளேஸியஸை நோக்கிக் கூறிவிட்டு மன்னன் கடல்வேந் தனை நோக்கினான். “குட்டுவன் சேரல்! இளவரசனாக முடிசூடவேண்டிய நீ இந்த நாட்டைக் கொள்ளையடித் தாய். அதற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். அமைச்சர் பெண்ணை-இந்த நிலக்கள்ளியை, மாளிகையி லிருந்து அவர்கள் முன்பாகக் கடத்திச் சென்றிருக்கிறாய். அதற்குப் பல ஆண்டு சிறை வாசம் உண்டு. ஆனால் இந்த நாட்டைப் புரட்சியிலிருந்து காத்திருக்கிறாய். அதை முன்னிட்டு உன் தண்டனையைக் குறைக்கிறேன், நீயும் கிளேஸியஸைப் போல் நாடு கடத்தப்படுகிறாய்.” இப்படி தண்டனை விதித்து விசாரணை முடிந்து விட்டதற்கறிகுறி யாக எழுந்து நின்றான். 

அப்பொழுது பரணரும் எழுந்தார். “மன்னா! ஒரு வேண்டுகோள்” என்றார். 

எழுந்த மன்னன் நின்றான். “என்ன பரணரே?” என்று வினவினான். 

“இந்தக் குட்டுவன் சேரல் உனக்கு ஒரே மகன்,இவனை நாடு கடத்தினால் சேர நாட்டு ஆட்சியில் கிளை மாறும். உன் தாயத்தாருக்குப் போய்ச் சேரும்” என்றார், அவர் குரலில் எச்சரிக்கை இருந்தது. 

“பரணரே! தாயத்தானும் சேரன்தானே? கிளை மாறட்டும். அதற்காக சேரன் நீதி மாறாது” என்று கூறினான் செங்குட்டுவன். 

இங்கு கடல்வேந்தன் இடை புகுந்து “நான் சுதந்தரப் யுறா, என்னை அரசுக் கூட்டுக்குள் அடைக்க முடியாது. முதலில் உங்களுக்குச் செய்யப்பட்ட தானத்தை மன்னர் திரும்பிப் பெறவும் முடியாது. யவனரை கடற்பிறகோட்ட லாம் மன்னர். சத்தியத்தைப் பிறகோட்ட முடியாது. நான் அரசாள விரும்பவில்லை” என்றான் திடமான குரலில், 

நான்கு நாள்களுக்குப் பிறகு கடல்வேந்தன் மரக்கலம் கடலில் பாய் விரிந்து ஓடிக்கொண்டிருந்தது. அதன் தலைவன் அறையில் பஞ்சணையில் நிலக்கள்ளி படுத்துக் இடந்தாள். குட்டுவன் சேரலாக மாறிய கடல்வேந்தன் அவளை வாரித் தூக்க முயன்றான். “விடுங்கள்” என்று அவன் பிணங்கினாள். திமிறினாள். அந்தத் திமிறலில் அவள் மார்புக் கச்சை கிழிந்தது. பெரிதாக நகைத்தான், சேர நாட்டு இளவல்.

“இன்னும் கொள்ளைக்காரன் புத்தி போகவில்லை” என்றாள் நிலக்கள்ளி, சொன்னாளே தவிர, அவன் தூக்கிக் கொள்ள இரு கைகளையும் தூக்கி நீட்டினாள். அவளைத் தூக்கிக் கொண்ட குட்டுவன் சேரல் கிழிந்த கச்சையால வெளேரெனத் தொடங்கி விம்மிய அவள் விம்மிய அவள் மார்பு எழில்களைப் பார்த்தான். அவள் உணர்ச்சியால் தெளிந்தாள். அவன் கையொன்று அவள் ஆடையை நெகிழ்த்த இடையை நாடியது, “வேண்டாம் வேண்டாம்” என்றாள் நிலகசுள்ளி 

“நீ மட்டும் என் முகத்திரையைக் கிழிக்கலாமோ?” என்று அவன் தன் அலுவலை நிறுத்தவில்லை. 

“நாடாள வேண்டியவன் பெண்டாள முற்படுவது கேவலம்” என்று முனகினாள் நிலக்கள்ளி. 

“நாடு கிடைக்கவில்லை; பெண்கிடைத்தாள்” என்றான் கடல்வேந்தன். ஆட்சி தொடங்கியது,கடல்வேந்தன் காமத்திலும் வேந்தன் என்பதை நிலக்கள்ளி புரிந்து கொண்டாள். 

வெளியே நீலக்கடல் விரிந்து கிடந்தது. நற்கிள்ளி மாலுமிகளை எச்சரித்துக் கொண்டிருந்தாள். அவன் கூச்சலைக் காதில் வாங்கிய நிலக்கள்ளி கேட்டாள், “ஆமாம். நீங்கள்தான் நாடு கடத்தப்பட்டீர்கள். நற்கிள்ளி ஏன் வந்தான் நம்முடன்?” என்று. 

“நீ ஏன் வந்தாய்?” என்று கடல்வேந்தன் கேட்டான்…

“நான்…நான். உங்கள்…” வாசகத்தை முடிக்க வில்லை நிலக்கள்ளி. 

“அவனும் உன்னைப் போலத்தான். என்னைவிட்டுப் பிரிந்திருக்க முடியாது அவனால்….” என்ற கடல்வேந்தன் மேலும் ஏதோ பேச முயன்ற அவள் வாயைப் பொத்தினான். 

“நிலக்கள்ளி! கடலில் ஊறிய மீன் நிலத்தில் பிழைக்காது. என்னைப் போலத்தான் அவனும்” என்றான் கடல் வேந்தன். 

பிறகு அவன் பேசவில்லை. வாய்ச் சொல் யாதும் பயனில்லாததால், சொல் நின்றது, செயல் தொடர்ந்தது.

-முற்றும்-

– கடல் வேந்தன்(நாவல்), முதற் பதிப்பு : டிசம்பர், 1984, பாரதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *