ஐந்து வருங்கள் நாயாய் பேயாய் அலைந்து நம்பிக்கையிழந்து கடைசியில் வேலை கிடைத்திருக்கிற தென்றல் யாருக்குத்தான் சந்தோஷமாய் இருக்காது?
பூரிப்பும் எழும். மனது இன்சாட் விடும் தெய்வத்தின் முன்புபோய் நின்று அழத்தோன்றும் சந்தோஷ அழுகை!
அப்பா! இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம். தள்ளாடித்தள்ளாடி கணக்கெழுதப் போக வேண்டாம் அம்மா! நீ அரிசிக்கும் பருப்பிற்கும் அலைய வேண்டாம். உன் உடம்பை கவனித்துக கொள். டானிக் வாங்கித் தருகிறேன். நல்ல டாக்டரிடம் அழைத்துப் போகிறேன். லலிதா கண்ணு. உனக்கு புது தாவணி!
இப்படியெல்லாம் நானும் கூட சந்தோஷப் பட்டவன்தான். வானத்தைத் தொட்டவன் தான். ஆனால் அது ஒரு மாதம்கூட நிலைக்கவில்லை.
இங்கே வேலை என்பது மனிதனின் தகுதியை நிர்ணயிக்கிற வஸ்து. அந்தஸ்து தரும் மாத்திரை.
அது எப்படி வேண்டுமானாலும் கிடைத்திருகலாம், சிபாரிசில், பணம் கொடுத்து, அல்லது அபூர்வமாய் மெரிட்டிலேயேக் கூட! எனக்கு மெரிட் இழுத்தும் கூட சிபாரிசை நாட வேண்டியிருந்தது.
படிக்கிற காலத்தில் வலஞ்சம் – ஊழல் மேடையில் வெளுத்து கட்டியிருக்கிறேன், கைதட்டல் பெற்றிருக்கிறேன். சிபாரிசு எனும் சொல்லையே வெறுத்திருக்கிறேன்.
ஆனால் அவற்றையெல்லம் வயிறும், காலமும் தோற்கடித்து விட்டது. அப்பாவிடம் கூட சிபாரிசை எதிர்த்துப பார்த்தேன். முடியவில்லை.
“குடும்பம் வாழ வேலை வேண்டும். வேலைக்கு சிபாரிசு அவசியம். சிபாரிசுக்கு நீ போகலை என்றால் நஷ்டம் சிபாரி செய்யும் நபருக்கில்லை. நீ இல்லையென்றால் இன்னும் ஆயிரம் போ!”
“இருக்கலாம்ப்பா, என் மனசாட்சி அதற்கு இடம் கொடுக்கவில்லை.
“முதலில் வயிறு மற்றதெல்லாம் அப்புறம்படன! ரவி… ! நான் சொல்வதைக் கேள். விதாண்டாவிதம் பண்ணாமல் அந்த அப்பாதுரையை போய் பார்!“
அப்பாதுரை பார்வைக்கு முரடாயிருந்தாலும் கனிவாய் பேசினார். “ரவிக்குமார்… ! உன் திறமையென்ன, குணாதிசயம் என்ன என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் கூட உங்கப்ப அந்த நாளில் என் குடும்பத்திற்கு செய்த உதவிக்காக எம்.டி.யிடம் சொல்லி வேலைக்கு ஏற்பாடு பண்ணித் தருகிறேன்.”
“ரொம்ப நன்றி சார்!. ‘
அன்று அவர் தெய்வமாகத் தெரிந்தார்.
முதல் சம்பளம் பெற்றதும் ஸ்வீட்டுடன் அப்பாவின் காலில் விழ, “அப்பாதுரையை போய் பார்த்தாயா..?” என்று விரட்டினார்.
“இல்லேப்பா. என்ன விஷயம்?”
“மதியம் கடைவீதியில் எதேச்சையாய்ச் சந்தித்தேன். உன்னை உடனே வந்து பார்க்க்ச் சொன்னார்.”
“பார்ப்பரேம்ப்பா. சுவீட் எடுத்துககங்க.”
“முதலில் அவருக்கு கொட. அவர்தானே நம் குடும்பத்தின் ஒளிவிளக்கு.
விளக்கு வைக்கும் நேரத்தில் பழங்களும் ஸ்வீட்களும் வாங்கிக் கொண்டு அப்பாதுரைடியன் வீட்டை பயத்தோடும், மரியாதையோடும் மிதித்தேன்.
அப்பாதுரை வாசலில் பேப்பருடன் ஈஸிசேரில் அமர்ந்து தொந்தியை சுரண்டிக் கொண்டிருந்தார். என்னைக் கவனித்து, “வாப்பா ரவி… உட்கார்!”
நான் உட்காரும் முன்பே, “என்ன நீ..? உங்க பண்ணிகிட்டிருக்கியாமே…!”
“பிரச்சனையா…?”
செக்ஷன்ல பிரச்சனை
“ஆமாம். ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் பேசிறியாம். சக தொழிலாளர்களைத் தூண்டி விடுகிறியாம். உங்க மானேஜர் முத்துசாமி எம்.டி.கிட்டே புகார் பண்ணியிருக்கார்.“
“சார்… நான் எந்தத் தப்பும்…”
“லிசன் மி! எந்த வழி மறந்து போயிற்றா? உங்கப்ப வேண்டியவர்ங்கிறதுக்கா, எம்.டி.கிட்ட கெஞ்சி வேலை வாங்க் கொடுத்தேன். இப்போ, “எனனய்யா.. உன் ஆள் இப்படி பண்றானேன்னு அவர் கேட்கும் போது ஐ ஆம் டோட்டலி ஷாக்! உன் செயலால் எனக்கு தலைகுனிவு! ஒழுகாய் வந்தோமே.. வேலையை பார்த்தோமா..போனோமான்னு இருக்க மாட்டாயா…?”
என்னைப் பேசவிடாமல் பொரிந்து தள்ளினார். “உன் நோக்கம்தான் என்ன?“
“ஒர்க் ஸ்பாட்டுலே வெண்டிலேஷன் இல்லை. குடிக்க தண்ணி இல்லை. யூரினல் இல்லை. இந்த மாதிரி அடிப்படைத் தேவைகளைக்கூட கேட்கக் கூடாதா சார்…?”
“கேட்பது தவறில்லை. கேட்ட விதமும நபரும்தான் தவறு. அந்த முத்துசாமிக்கும் எனக்கும் நென்மழக்கலாம்னு பார்த்துக்கிட்டிருக்கான். அவனால் எங்கிட்ட நேராய் மோதமுடியாது. உண்டு இல்லைன்னு பண்ணிருவேன்.என் பலம் அவனுக்குப் புரியும். ஆனாலும் கூட கவிழ்க்கணும். அதற்காக உன்னை குறி வைத்திருக்கிறான்.
என் சிபாரிசில் வந்தவன் நீ என்பது அவனுக்கும் தெரியும். அதனால் உன்னை வைத்து மறைமுகமாய் என்னைத் தாக்க முனைகிறான். உன் தவறை பெரிதாக்கி எம்.டி.யிடம் நல்ல பெயர் சம்பாதிக்க பார்க்கிறான்.
எம்.டிக்கும் எனக்குமிடையே விரிசல் ஏற்படுத்தும சதி,ஸோ, பி கேர்ஃபுல் ஆஃப் யுவர் வோர்ட்ஸ் அண்ட் ஒர்க்!”
அப்பாதுரை இத்தனை கண்டிப்பார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை கையில் இனிப்பு இருக்க, மனதில் கசப்பு.
எத்தனை ஆர்வமாய் வந்தேன்! எத்தனை குதூகலம்! எல்லாமே போச்சு! மனதை தேற்றிக் கொண்டு, “சார்… இன்றைக்கு என் முதல் சம்பளம் ஸ்வீட் கொண்டு வந்தேன்.”
அவர் எதுக்கு இதெல்லாம் என்கிற மாதிரி பார்த்து, “வெச்சுட்டுப் போ!”
அதுவரை அவர் மேலிருந்த மபியாதையெல்லாம் நொடியில் உடைந்து போயிற்று. அங்கே நிற்கக் கூட பிடிக்கவில்லை. காலில் தயக்கம். நாக்கைப் பிடிங்கிக் கொள்ள வைக்கும் அவமானம்.
எல்லாம் என் நேரம்! என்ன செய்ய… வேலை வாங்கிக் கொடுத்த தெய்வமாயிற்றே! பார்சலை வைத்துவிட்டு விறுவிறுவென வந்துவிட்டேன்.
அதன்பின்பு வேலையில் பிடிப்பில்லை. முத்துசாமியைப் பார்க்கறி போதெல்லாம் வெறுப்பாயிற்று. இப்படியும் ஒரு ஈனப் பிறவியா? என் மேல் தவறு கண்டால் அதை என்னிடம் தெரிவிக்காமல் எம்.டி வரை கொண்டு போவது ஒருவகை குரூரம். கோழைத்தனம்.
முத்துசாமியின் கண்கள் என்னை ரொம்ப வட்டமிட ஆரும்பித்தன. எங்கெங்கு தொல்லை கொடுக்க முடியுமே அங்கெல்லாம் கொடுத்துக கொண்டிருந்தார்.
எல்லாவற்றையும் குடும்பத்திற்காகவும், அப்பாதுரைக்காகவும் பொறுத்துக் கொண்டேன். தன்மானம் எழுந்த போதெல்லாம் அடக்கினேன்.
எதற்கும் ஒரு எல்லை இருக்கிறதே. தன்மானம் எத்தனை நாட்களுக்குதான் அடங்கிக் கிடக்கும்?
அன்று-
அடைமழை. இடியும் மின்னலும் மின்சாரத்தைக் கொண்டுப் போக, மெஷின்கள் ஓடவில்லை. சரி, வேலையில்லாமல் எதற்காக மழையிலும குளிரிலும் நடுங்க வேண்டும் என்று அட்மின் பில்டிங்கில் ஒதுங்கின என்னை முத்துசாமி பிடித்துக் கொண்டார்.
“ஏய்.. ! வாட் ஆர் யு டூயிங் ஹியர்?“
“மழைக்கு ஒதுங்க அங்கே இடமில்லை சார்!”
“நோ… நோ… ! யு ஆர் நாட் சப்போஸ்ட்டு டு லீவ் யுவர் ஒர்க் ஸ்பாட்!”
“இந்தப் போய் மழையில் நாங்கள் எங்கேப் போக முடியும் சார்? எங்கள் மேல் கொஞ்சமேனும் கருணை காட்டுங்கள்!“
அவர் காட்டுவதாய்த் தெரியவில்லை, என்னை அகற்றுவதிலேயே குறியாயிருக்க, எனக்கு ஆவேசமாயிற்று.
“உங்களுக்கு மனிதத் தன்மையே கிடையாதா சார்…? தொழிலாளர்கள் மட்டும் மனிதர்கள் இல்லையா…? அவர்கள் என்ன ஆடு மாடுகளா? புரடெக்ஷன் நின்றால் மட்டும கேள்வி கேட்க தெரிகிறதில்லை….? அங்கே தொழிலாளிகள் நனைகிறார்களே, அவர்களுக்கு அட்லீஸ்ட் ஒரு ஷெட்டாவது போட்டுத் தருவோம் என்கிற ஈரமில்லாமல் பேசுகிறீர்களே… உங்கள் பிள்ளையென்றால் இப்படி நனைய விடுவீர்களா…?”
எனக்கு என்னாயிற்று என்றே தெரியவில்லை. எத்தனை அடக்கியும்கூட கோபத்தை கட்டுப்படுத்த முடீயவில்லை. அடக்கி அடக்கி ஒரு லெவலுக்கு மேல் தாங்காமல் தன்மானம் வெடிக்கவே செய்தது.
எக்ஸ்ப்ளோஷன்!
அடுத்த இரண்டு மணி நேரத்தில் அப்பாதுரையிடமிருந்து எனக்கு அழைப்பு வரும் எனத் தெரியும்.
வந்தது.
யோசனையுடன் அவரைப் பார்க்கப் போனேன்.
“ஏன் இப்படிப் பேசினாய்.. உன்னால் எனக்கு அவமானம் – என் பெயரும் கெடுகிறது என்று திட்டுவார். என்னச் செய்ய. கேட்டுக் கொள்ளதான் வேண்டும். சிபாரிசு செய்தவராயிற்றே!
சிபாரிசில் வந்திருக்கவே கூடாது. அப்படி வந்தால் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. நல்லது கெட்டதைப் பேச தடை விதிக்கப்படுகிறது. அடிமையாய் நடத்தப்படுகிறது. நாக்கு பிடுங்கப்படுகிறது. குற்றம் சுமத்தப்படுகிறது.
ஒரு பைசா வாங்கிக் கொள்ளாமல் உனக்கு வேலை போட்டுக் கொடுத்தேனே… நீ இப்படி நடந்துக் கொள்ளலாமா என்றுக் கண்டிப்பார். கண்டிக்கட்டும்.
பணம் கொடுத்திருந்தால்-“நீ ஒன்றும் சும்மா வேலை வாங்கித் தரவில்லை. பணம் வாங்கிக் கொண்டுதானே” என்று திருப்பிக் கண்டிக்கலாம். ஆனால் இப்போது முடியாதே!
நன்றி விசுவாசத்திலும், நட்பிலும் தந்திருக்கிறார். அதுதான் பிரச்சனையே. எதிர்த்துப பேசமுடியாத அவஸ்தை. சித்ரவதை.
அவர்களுக்குள் ஆயிரம் துவேசங்கள் இருக்கலாம். பாலிடிக்ஸ் இருக்கலாம். அவற்றைத் தீர்த்துக் கொள்ள நான்தான் கிடைத்தேனா? நான் தொழிலாளியா இல்லை பகடைக்காயா…?
ஒரு முடிவுடன் அப்பாதுரையின் அறைக்குள் நுழைந்தேன்.
அவரது முகம் இருண்டிருந்தது. மூக்கில் சிகப்பு. என்னைக் கண்டதுமே. “உன் மனசுல என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்..? நீயென்னா காந்தியா? தெரியமால்தான் கேட்கிறேன். மனிதாபிமானம்பற்றிப் பேச நீ யார்..?”
எனக்கு பதில் வரவில்லை.
“யூ ஆர் ஹெட் ஏக் டு மி! கஷ்டப்படுகிறாயே – போனால் போகிறதென்று வேலை போட்டுக கொடுத்ததிற்கு சட்டம் பேசுகிறாயாமே.ஈ உனக்கு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.. அவன் வீஷம். அந்தாளுடம் மோதாதே என்று? உன்னால் எனக்கு தொல்லை. வாயை திறந்து பேசுய்யா!”
நான் பேசவில்லை. தலை கவிழ்த்திருந்தேன்.
தளர்ந்த அப்பாவும். சீக்கு தாயும், தளிர் போன்ற தங்கையும் கண்ணில் தெரிய, அமைதி காத்தேன்.
“உன் சௌகர்யத்திற்கு ஆட இது ஒன்றும் கவர்மென்ட் கம்பெனி இல்லை., பிரைவேட் இங்கே சிலதுகள் இப்படிதான் நடக்கும், நடப்பார்கள், அவற்றை ஏற்றுக்கொண்டு இருக்க முடியுமானால் இருக்க வேண்டும். இல்லை அத்தனை ரோஷம் இருக்கிறவனென்றால் பேசாமல் ரிசைன் பண்ணிவிட்டு போய்க்கொண்டேயிருக்கலாம். உள்ளே இருந்துக் கொண்டே வம்பு செய்வதில் அர்த்தமில்லை. எப்படி செளகர்யம்?”
தளர்ந்த அப்பாவும், சீக்கான தளிர் தங்கையும் இப்போது கண்ணிலிருந்து விலகிப் போக, அவர்களையும் விட தன்மானம் பெரியதாய் தெரிந்தது.
இது என்ன நாய் பிழைப்பு! வாழ்ந்ததால் மானத்தோடு வாழ வேண்டும். நான் என்ன வம்பு தும்பிற்காப்போனேன்! நல்லதை கேட்டேன். நியாயத்தை எடுத்துச் சொன்னேன். அதற்கு இப்படி ஒரு அவமானமா…?
சிபாரிசில் வந்திற்காக எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வேண்டுமா? உழைக்கிறேன் சம்பளம் தருகிறீர்கள். உங்கள் பேச்சையெல்லரம் கேட்டுக கொண்டிருக்க நான் ஒன்றும் பிச்சைக்காரன இல்லை!
ஒரு கணம். ஒரே கணம்தான் யோசித்தேன்.
“என்ன சொல்கிறாய்…?”
“இந்தாங்க சார். என் ரெஸிக்னேஷன் லட்டர்!” என்று நீட்டிவிட்டு விறுவிறுவென திரும்பி நடந்தேன்.
– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)