கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 5,274 
 
 

பிரிகேடியர் சரவணப் பெரு மாளைச் சந்திக்கச் சென்றேன். நாங் பள் இருவருமே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், அவர் ராணுவத் இல் இருந்தவர். நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவன்.

ராணுவ உயர்மட்ட அதிகாரி களுக்கு கமிஷண்ட் ஆஃபீஸர்ஸ் என் பது பெயர். இவர்கள் ஓய்வு பெற்ற பின்பும்கூட தங்கள் பெயருக்கு முன்னே, தாங்கள் வசித்த பதவிப் பெயரையும் சூட்டிக்கொள்ளலாம்.

அதிகாலையில் விடிவதற்கு முன் பாகவே நாங்கள் இருவருமே உலாவப் புறப்பட்டு விடுவோம். அனேக மாக பிரிகேடியர்தான் என் வீட்டுக் கதவைத் தட்டுவார். ஓரிரு சமயங் களில் நானும் அவர் வீட்டுக்கதவைத் தட்டி, அவரை அழைத்துக் கொண்டு உலா சென்றது உண்டு. ஓரிரு சமயங்களில்தான். நேரம் தவறாமை என்பார்களே அதற்குப் பெயர் பிரிகேடியர் சரவணப் பெருமாள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

இன்று காலை அவர் என் வீட்டுக் கதவைத் தட்டவில்லை . எனக்கும் உடல் அசதியாக இருந்தது. படுக் தையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு, அரைக் கண்கள் மூடி, லேசான கனவுகளைக் காண்பதும் ஒரு சுகம்தான்.

எழுந்து காலைக் கடன்களைக் கழித்து, சிற்றுண்டி உண்டு. காபி சாப்பிட்டு விட்டு, பிரிகேடியர் இன்று ஏன் உலா வரவில்லை என்பதை விசாரிக்கலாம் என்பதற்காக அவர் வீட்டுப் படிகளில் ஏறினேன்.

பிரிகேடியர் அழகான சின்ன வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். சின்ன வீடு என்ற சொற்கள் இன்று கொச் சைப் படுத்தப்பட்டுவிட்டன. வீட் டைச் சுற்றி தோட்டம் போட்டிருக் கிறார். அவரே மண்ணைக் கொத்திக் கிளறி, விதைத்து, பயிரிட்டு, இயற்கை உரம் இட்டு காய்கள், மலர்கள் என்று செடி கொடிகளை வளர்க் கிறார். வாசல் பக்கம் இரு முந்திரிக் கொடிகள் முதல் மாடிவரை வளர்ந்து அங்கே கொத்துக் கொத்தாகப் பழங்களைத் தொங்க விட்டிருப்பது கண்களுக்கு விருந்து.

கேட்டைத் திறந்து கொண்டு நுழைந்து, பஸ்ஸரை அழுத்திய போது, உட்புறம் இனிமையாக பியானோ இசைத்தது.

கதவு திறக்கப்பட்டதும் பிரிகே டியரின் மனைவி எதிரே நின்றார். ஆனந்தவல்லி என்பது இவருடைய பெயர். ஆனந்த் என்று பிரிகேடியரால் ஆசையாகக் கூப்பிடப்படுபவர்.

“பிரிகேடியர் இருக்காரா?”

“வாங்க இருக்கறாரு. மாடிலே ஏதோ எழுதிக்கிட்டு இருக்கறாரு.”

மாடிப்படிகள் ஏறிச் சென்றேன். அறைக் கதவு திறந்திருந்தது.

“வணக்கம், பிரிகேடியர்!”

“வணக்கம். வணக்கம். வாங்க. உட்காருங்க. பாருங்க, நம்ம அர சாங்க யந்திரம் எப்படிச் செயல் படுதுன்னு. ஓய்வு ஊதியம் அதிகரிக் கப்பட்டு ரெண்டு மாசம் ஆச்சு. போன மாதமே எனக்கு அதிகரிக்கப் பட்ட கனதியம் கொடுக்கப்பட்டிருக்க வேணும். வரல்லே. அட, அடுத்த மாதம் சேர்த்துக் கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்தேன். இந்த மாசமும் வரல்லே. ரிடையர்ட் ஆர்மி, ஏர்மன் அண்ட் செய்லேர்ஸ் போர்ட்’டில் விசாரிச்சேன். அங்கே உறுப்பினர்கள் எல்லாருக்கும் அதிகரிக்கப்பட்ட ஓய்வு ஊதியம் போன மாசமே கொடுக்கப்பட்டுவிட்டதாம்’ என் ஒருத்தனுக்குத்தான் வரல்லே. அதான் கடிதம் எழுதிக்கிட்டு இருக்கேன்.”

“இப்ப நான் வந்தது உங்களுக்குத் தொந்திரவாக இருக்குமோ?”

“அதெல்லாம் இல்லே. உட்காருங்க. நீங்க வந்தது நல்லதாப் போச்சு. இரும்பிப் போறப்ப, இந்தக் கடிதத்தை தபால் பெட்டிலே போட்டிட்டுப் போங்க. சிரமம் இல்லையே?”

“ஐயோ! இதென்ன இப்படிப் பேச ஆரம்பிச்சிட்டீங்க? என் கடன் பணி செய்து கிடப்பதே!”

“சும்மா தமாஷுக்குச் சொன்னேன். நேத்திக்கு இன்னிக்கா நாம் பழகறோம்?” பிரிகேடியர் நாற்காலியில் சாய்ந்தபடி நகைத்தார்.

நல்ல கட்டு வாய்ந்த உடல்வாகு. சுருகருவென்று பளபளப்பான கம்பிக் கொக்கிகளான பெரிய மீசை. ஒரு முடி நரைக்கவில்லை. தலையில் முன்புறம் வழுக்கை விழுந்துள்ளது. எதிராளியைப் பேச மாட்டாது பணிய வைக்கும் பார்வை. இவருக்கு எப்படி அரசாங்கப் பாதுகாப்புத் துறை ஓய்வு கொடுத்தது என்று இருந்தது எனக்கு.

“பிரிகேடியர், ஏன் இன்னிக்கு உலா வரல்லே?”

“இன்னிக்கு உலாவுக்கு ரஜா கொடுத்திட்டேன். நீங்க வந்தீங்கன்னா. உடன் வரலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். நல்ல காலமா நீங்க வரல்லே. சௌகரியமாப் போச்சு.’ வெடிச் சிரிப்புச் சிரித்தார் அவர்.

பிரிகேடியருக்கு உணர்வு எழுந்து விட்டால், சிரிப்புதான்! எதற்காக இந்தச் சிரிப்பு என்று நமக்கு இருக் கும். நாம் அவரைப் பற்றி என்ன எண்ணுகிறோம் என்பது குறித்து அவர் கவலைப்பட மாட்டார்.

“பிரிகேடியர். உங்களை ஒன்று கேட்கலாமா?”

“கேளுங்களேன். பீடிகை எதுக்கு?’

“இல்லே. என் கேள்வி உங்களைக் கோபப்படுத்துமோங்கிற தயக்கம் இருக்கு.’

“அப்படியா? என்னைக் கோபப் பட வைப்பதான கேள்வியா கேட்கப் போறீங்க? சரி. முதல்லே சுதாரிச் சுக்கறேன். கேளுங்க.”

இந்தச் சந்தர்ப்பத்தில் அவ ருடைய மனைவி இரண்டு கோப் பைகளில் தேநீர் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றார்.

“பிரிகேடியர். இந்த ராணுவங்கிறது அவசியம்தானா?”

“உம்? இதுதான் உங்க கேள்வியா?”

“ஆமா”

“அவசியம்தான். நம் நாட்டுக்குப் பாதுகாப்பு வேணாமா? பக்கத்து நாடு படை எடுத்து வந்து நம்ம நாட்டை ஆக்கிரமிச்சு, மக்களை அடிமைப்படுத்தி விடாதா? அதைத் தடுக்கத்தான் ராணுவம்”.

“ரொம்பச் சரி. நீங்க சொன்னது ராணுவத்துக்கான அடிப்படை அவசியத் தகுதி, ஒத்துக்கறேன். போர் வந்தாத்தானே உங்களுக்கு வேலை?”

“ஆமா, அதுக்காக சும்மா இருக்க முடியுமா? தினமும் தேகப் பயிற்சி செய்து உடலைத் தெம்பாக வச்சுக் சிட்டு இருப்போம். கவாத்துப் பழகுவோம். துப்பாக்கி, பீரங்கி. டாங்கி, வண்டிகள், வாகனங்கள் இதை எல்லாம் துப்புரவு செய்து தூய்மையா வச்சிருப்போம். எங்க பெல்ட். ஷாக்களுக்கு நாங்களே பாலிஷ் போடுவோம். எப்பவும் மிடுக்காக இருப்போம். நாங்க ராணுவ முகாமுலே இருக்கறதுனாலே தான் உங்களாலே நிம்மதியாத் தூங்க முடியுது.”

“அதான் போலீஸ் இருக்குதே!”

“அது உள்நாட்டு அமைதிக்கு. வெளிநாட்டுப் படை எடுப்பு நேராமல் இருப்பதற்கு ராணுவம்”.

“போர் இல்லாத போது அத்தனை உயர்மட்ட அதிகாரிங்க என்ன செய்விங்க?”

“ஏன்? வீரர்களுக்குப் பயிற்சி கொடுப்போம். அவங்க துப்பாக்கியைத் துப்புரவு செய்யறதை நீங்க பார்க்கணும். குழாய்க்குள்ளே அதாவது பாரல்லே துணியை விட்டு இழுத்து இழுத்து சுத்தம் பண்ணறதைப் பார்க்கும்போது, இப்படி சுத்தம் பண்றது அவசியம்தானானு உங்களுக்கு இருக்கும். சீருடையை அவங்க தூய்மையா வச்சிருச்சிறாதப் பார்த்து நீங்க ஆச்சர்யப்படுவீங்க. பாரக்ஸ்லே வரிசையா உட்கார்ந்து கிட்டு ஷூக்களுக்கு பாலிஷ் போட்டு, அப்பப்ப எச்சித் துப்பி. துடைசுத் தேய்த்து பளபளப்பா ஆக்குறதை நீங்க பார்க்கணும். ராணுவத்துலே எதுவும் அரை கறையா இருக்காது. திருப்தி ஏற்பட்பாகணும். அதுவரை எழ முடியாது”.

“இவ்வளவும் எதுக்கு எப்பவோ வர இருக்கற போருக்காகவா?”

“ஆமா. ஆனால் அப்படிப் போர் வந்திச்சுனு வச்சுக்குங்க. ஒவ் வொரு போர் வீரனும் சந்தோஷமா என் உயிரைக் கொடுக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா?”

“சந்தோஷமா உயிரைக் கொடுக்கிறானா? உயிரைக் கொடுக்கற போது சந்தோஷம் இருக்க முடியுமா, பிரிகேடியர்?”

“அதான் உங்களுக்குத் தெரியாதுனு சொல்றேன். போரின் போது அவன் முன்னேறித்தான் ஆகணும். ‘ரிட்டிரீட்’னு நாங்க சொன்னால் ஒழிய பின்வாங்கக் கூடாது. அந்த பின்வாங்குதல் கூட முன்னேறத்தான். புலி பதுங்குவது பாய்வதற்காகன்னு கேள்விப்பட்டிருப்பீங்களே!”

“சொல்லுங்க.”

“ரெண்டாம் உலகப் போரின் போது. ஜெர்மன் படைக்கும் பிரிட் டிஷ் படைக்கும் பிரான்ஸ்லே சண்டை தடத்திச்சு. டன்கர்க் என்கிற இடத்துலே பின்வாங்கி, கப்பல்களிலே ஏறி இங்கிலாந்துலே கலே என்கிற இடத்துலே பிரிட்டிஷ் படை தரை இறங்கிச்சு. இப்ப ‘டன்கர்க்’னா பின்வாங்குதல் என்பது அர்த்தமாகிப் போச்சு.”

பிரிகேடியர் டீயை அருந்திவிட்டு, குவளையை டக்கென்று மேஜை மீது வைத்தார். அவருடைய ஒவ்வொரு செயலிலும் ஒய்யாரத்தைக் கண்டு நான் வியப்பது வழக்கம்.

“என்ன சொல்ல வரேன்னா, ‘இத்தனை நாள் இந்த நாடு என்னை சோறு போட்டு வளர்த்திருக்கு. எதுக்காகன்னா, இந்த நாட்டின் மண் மீது அன்னியனின் காலடி படக்கூடாது என்பதற்காகத்தான். அப்படி அன்னியனின் காலடி படாமல் இருக்க, என் உயிரையும் கொடுப்பேன். நான் உயிரைப் பேணிப் பாதுகாத்ததே. இந்த வேளைக்காகத் தான்னு துணிஞ்சு ஒவ்வொரு வீரனும் போரில் ஈடுபடறான். அடிபட்டு, விழுந்து, வலியால் துடித்து, உயிர் போகும் போது வேணா அவன் தன் பெற்றோர். பெண்சாதி. குழந்தைகளை நினைக்கலாம். அதுக்கு முன்னாலே. அப்படி அவர்களுடைய ஞாபகம் எல்லாம் வராது”.

கேட்டுக் கொண்டிருந்தேன். உண்மைதான் எனப்பட்டது.

“ஏன் பிரிகேடியர், நீங்க ரெண்டு போரில் ஈடுபட்டதாச் சொன்னீங்களே, ஒண்ணு அறுபத்து நாலுலே பாகிஸ்தானுடன் போர், அடுத்தது எழுபத்தொண்ணுலே பங்களாதேஷ் போர். நீங்களே போர் முகாமில் இருந்திருக்கீங்களா?”

“ஆமா. பின்னே? பாகிஸ்தானுக் குச் சொந்தமான பாடன் டாங்குகளை அழிச்சு, நாலு டாங்குகளைக் கண்காட்சிக்காக எடுத்து வந்தது யார்னு நினைச்சிங்க? எங்க பிரிகேட் தான். லான்ஸ்நாயக் அப்துல் ஹமீதுனு ஒரு வீரனைப் பற்றி பத்திரி கைலே பிரமாதமா புகழ்ந்து எழுதி னாங்களே, அவன் என்கிட்டத்தான் இருந்தான். முஸ்லிம்தான். இருந்தாலும் பாகிஸ்தானுக்கு சாதகமா இல்லையே அவன்? ராணுவத்துலே மத அபிமானம் எல்லாம் அப்புறம். மத அபிமானம் உள்ளவங்க இல்லைனு நான் சொல்லல்லே. அப்பப்ப சிறு வாய்ச்சண்டை கூட நடக்கும். இருந்தாலும் போர் என்னும் போது, தன்னை வளர்த்த நாட்டைக் காக்க, மத அபிமானத்தையும் மீறி ஒவ்வொரு வீரனும் செயல்படறான். இதைப் புரிஞ்சுக்கிடணும்.”

“உங்க டாங்கிப் படையோடு முன்னாலே போவீங்களா?”

“உம். முன்னாலேயும் போவேன். பின்னாலேயும் இருப்பேன். நடுவுலே ருெந்துக்கிட்டு, காமெண்ட் பண் ணிட்டும் இருப்பேன். கிராலர். காட்டர் பில்லர்னு டாங்க்ஸ் உண்டு”.

கிராலர் என்றால் ஊர்வது என் பது பொருள். காட்டர் பில்லர் என் றால் புழு: பட்டுப் பூச்சி கூட்டுப் புழு அவதற்கு முந்தைய பருவம். டி.வி. யில் இந்த டாங்கிகள் நகர்வதைப் பார்த்திருக்கிறேன். மேடு, பள்ளம் என்று எதிலும் கவலைப்படாமல் ஏறி இறங்கி புழுப் போலச் செல்லும்.

“சரி. மிஸ்டர் ராம். இந்தக் கடிதத்தை கவர்லே போட்டு ஓட்டித் தரேன். போஸ்ட் பண்ணிடுங்க” என்று கூறிய பிரிகேடியர் எழுதப்பட்ட இரு தாள்களை ஸ்டாப்ளர் கொண்டு, முனையில் ஸ்டாபிள் பண்ணினார்.

பின்கள் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு பின்கள் விரய மாயின.

“பாருங்க நம்ம நாட்டு ஸ்டாபிள் பின்னும் இப்படி திராவையா இருக்கு. ஜப்பான் பின்களை வாங்கலாம்னா, அவை விலை அதிகம்” என்றார் பிரிகேடியர். கேட்டுக் கொண்டேன்.

மூன்றாவது தடவை ஸ்டாபின் செய்தபோது, பின் நிறைவாகத் தாள்களை இணைத்தது.

விரயமான அந்த இரு பின்களையும் பிரிகேடியர் மெனக்கெட்டு எடுத்தார். அவற்றை நன்கு வளைத்தார். வளைத்து பழைய காகிதத் துண்டு ஒன்றில் வைத்துப் பொட்டலமாகக் கட்டி அப்பொட்டலத்தை குப்பைக் கூடையில் போட்டார்.

“ஏன் அப்படிச் செய்தீக, பிரிகேடியர்?” என்று கேட்டேன்.

“பின்களை அப்படியே குப்பைக் கூடையில் போட்டால், எங்காவது கீழே விழும். எவராவது அதன் மீது வெறுங்கால்களை வைத்து நடப்பார்கள். பாதத்தைப் பின் குத்தும். ரத்தம் வரும். செப்டிக் ஆகும். எதுக்கு நம்மாலே மத்தவங்களுக்குத் தொந்திரவு? ஏன். அந்த ரெண்டு பின்னுலே ஒண்ணு நம்ம காலையே குத்தலாம். அதனாலேதோன் அவை குத்தாதபடிக்கு வளைச்சு, காகிதப் பொட்டலத்துக்குள்ளே வச்சு குப்பையோட சேர்த்தேன். நேரே அது நகராட்சி குப்பை தொட்டிக்குப் போகும். நகராட்சி ஊழியர் கையால் குப்பையை அள்ளிப் போட்டால் கூட, காகிதப் பொட்டலத்திலே பின்கள் இருக்கறதாலே. அவங்க கையைக் குத்தாது”.

வியப்போடு பிரிகேடியரைப் பார்த்தேன். அத்தனை பெரிய டாங்கிகளை கமாண்ட் செய்தவர், ஆயிரக் கணக்கான எதிரி நாட்டு வீரர்களை பீரங்கி கொண்டு சுட்டு வீழ்த்தி, போர்க்களத்தில் நிலத்தை ரத்த வெள்ளமாக்கியவர். இவரா இந்தச் சின்னப் பின்கள் குத்தி மனிதன் அவதிக்கு உள்ளாவான் என்பதை நினைத்துப் பார்ப்பவர் என்று இருந்தது எனக்கு.

கண்களை மூடி அந்த மனிதாபிமான, மெத்தென்னும் மென்மையான உள்ளத்தை இருகை கூப்பி வணங்கினேன்.

– மார்ச் 1994

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *