மன கண்ணாடி

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 14,598 
 
 

“என்ன நான் கேட்டது நிஜம்தானா ? …பாட்டீ ! என்று தன் வேலைக்காரி லட்சுமி பாட்டியிடம் விசாரித்தாள் பவானி.

“என்ன கேட்டீங்களாக்கும் .? எதையும் கண்டுகொள்ளாமல் பாத்திரத்தைப் சிங்கில் துலக்கியபடி கேட்டாள் லட்சுமிபாட்டி.’’

“உங்கள் கணவர் இறந்துவிட்டாராம், நீங்க ஆஸ்பத்திரிக்கு போய் பிணத்தை கூட பார்க்கமாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லிட்டீங்ளாம்’’!?

“ அதுகடக்கு வுடுமா..!இருக்கும் போதே நிறைய அழுதுட்டேன் ,இனி கண்ணீர் இல்லை .. வேற ஏதாவது சொல்லுங்க………என்று ..சொன்னாள் பாட்டி .”… .

பெண்ணிய எழுத்தாளர்கள்,…. மகளிர் முன்னேற்றதிட்டங்கள்.. பெண்கள் விடுதலைப்போரட்டங்கள்….,விமன் லிப் மூவ்மெண்ட்ஸ்…. பெண்களின்மேல் வீட்டில் நடக்கும் வன்முறைகள் ,அவைகள் மேல் தடைசட்டங்கள் பெண்களின் பாலியல் வன்முறைகள் இவைகள்..எல்லாம்…ஒரு பக்கம்…படிக்காத பணம் இல்லாத ஓர் புரட்சி செய்யும் மூதாட்டி ..ஓர் பக்கம் பவானி மனதில் ஏதோ நெருடல் .

“ஏன்! புருஷன் செத்துட்டா வீட்டில சேர்க்கமாட்டீங்களாக்கும் …! அய்யரூட்டம்மா ….? என்று அறைவதுபோல் ,ஆனால் அமைதியாய் கேட்டாள்,”லட்சுமிபாட்டி..

“ சீ, சீ” அதெல்லாம் இல்ல ! பாட்டீ , விளக்கு மின்சுமோ திரி மின்சுமோ ? யாருக்கு தெரியும். . இல்ல.. நீங்க ரொம்ப நல்லவங்ளாச்சே ! எப்படி இப்படி இருக்க முடிந்ததது ? கட்டின புருஷனை கடைசியில் கூட போய் பார்க்கவில்லை என்றால்…? சொந்தகாரர்கள் திட்டவில்லையா ? என்று கவலையுடன் இழுத்தபடி கேட்டாள் பவானி .

“சரிதான் போங்கம்மா , கட்டண புருஷனா,கட்டின புருஷன் . அவன் மனுசனே இல்ல..! குடித்து ,கூத்தாடி நாப்பது வருஷத்துக்கு முன்னால நாலு குழந்தைகளோட அனாதையாய் நடுதெருவுலவுட்டுட்டு போனவன் இருந்தா என்ன? செத்தா என்ன?.. என்று சொல்லிகொண்டே புடவை முந்தானையால் கண்ணீரை துடைத்துகொண்டாள்,லட்சுமி பாட்டி ””.சொந்தமாவது ….பந்தமாவது எல்லாம் பணபேய்கள் ! காசிருந்தா சேறும்…என்றாள் மேலும் .

“ சரி .. சரி ..விடுங்க.. நான் கிளம்புகிறேன் காலேஜுக்கு, நேரமாச்சு ! சாவியை பக்கத்துக்கு வீட்ல குடுத்து விடுங்க… என்று சொல்லிக்கொண்டே பதிலுக்கு எதிர்பார்க்காமல் ஓடினாள் பவானி .

வலசரவாக்கத்தில் ஓம்சக்தி நகரில் லட்சுமி பாட்டியை தெரியாதவங்களே கிடையாது என சொல்லலாம். ஆறு அடி உயரம், மெலிந்த,தேகம்,சுருக்கங்களுடன் கூடியதிருநீறுஅனிந்தநெற்றி..,கோடாலிமுடிச்சு,ஹவாய்செப்பல்கள் இவைதான்லட்சுமி பாட்டியின் அடையாளங்கள்.அதிகாலையில் பிள்ளையார் கோவிலை பெருக்கி,வெளியில் சாணி தெளிச்சு கோலம் போட்டு ஓடுவதுப்போல்…மூன்று சுத்துசுத்தி விட்டுக்கு வேளைக்கு கிளம்புவாள் லட்சுமி பாட்டி. ஒரு வீட்டில் காபி,டிபன். ஒரு வீட்டில் மதிய உணவு, ஒரு வீட்டில் குழம்போ, ரசமோ சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு விட்டு இரவு படுக்க மட்டும்தான் தன் குடிசைக்கு போவாள். எந்த வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் ஆஜராகிடும் லட்சுமி பாட்டிக்கு கோபமும் அதிகம்தான், குணமும் அதிகம்தான் .

மூன்று வருஷங்களாக பவானிக்கு லட்சுமி பாட்டியை தெரியும் . சென்னை ஓம்சக்தி நகரில் வாடகை வீட்டில் குடியேறும்போது அவளை வீட்டுவாசலில் நிறுத்தி , கேள்வி மேல் கேள்விகளை கேட்டு முதல் நாளில் இருந்து அந்த வீட்டில் வேலை செய்ய ஒட்டிகொண்டவள் , லட்சுமி பாட்டி. தானாக வந்து கையை பிடுங்கி வேலை செய்யும் லட்சுமி பாட்டியை பவானிக்கு ரொம்ப பிடிக்கும். சம்பளம் கூட அவள் கேட்கவில்லை

பவானியாகத்தான் சொன்னாள். நீங்கள் சொன்னா சரிதான் என்று சொல்லி அந்த வீட்டில் தனக்கு என்று ஓர் இடம் பிடித்து விட்டாள்.

வீட்டில் எந்த டிபன் செய்தாலோ அல்லது வெளியிலிருந்து பலகாரமோ இனிப்போ வாங்கினால் லட்சுமி பாட்டிக்கு கட்டாயம் ஒரு பங்கு உண்டு,

தமிழ்நாட்டில் பெண்ணியத்தை சேர்ந்த எழுத்தாளர்களின் பட்டியலில் பவானியும் ஒருத்தி, வீட்டின் நிலைமையோ வேறு. இரண்டு குழந்தைகள் பெண் பெங்களுரில் மெடிசன் படிக்கிறாள். பையன் இவள் கிட்ட இருந்து பத்தாம் வகுப்பு படிக்கிறான் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர். கல்யாணம் ஆகிய சில நாட்களிலேயே அவர் ஓர் காம்ப்ளக்ஸ்பெலோ, சாடிஸ்ட், அன்பில்லாதபிறவிஎன்று தெரிந்துகொண்டாள் பவானி . பார்த்து பார்த்து பி.எச்.டி பட்டம் பெற்ற எனக்கு ஆண்டவன் அரேன்ஜ்ட் மேரேஜ் என்கிற பெயரில் எவ்வளவு அற்புதமான கணவனை தந்திருகிரான் என்று மனதில் குமுறாத நாளே கிடையாது.படிக்காத வேலைக்காரியின் புரட்சி எண்ணம் படித்த முட்டாளான எனக்கு ஏன் தோன்றவில்லை…. ஜடமாய் வாழ்ந்து கொண்டிறிக்கிறேன்..மனம்தனையால்துடித்தது. .“இளமையில் கணவனால் ,நடுத்தெருவில் நான்கு குழந்தைகளுடன் நிறுத்தப்பட்ட லட்சுமி அம்மாள் – ஒரு பக்கம் ,மனதில் ஏதோ ஓர் தடுமாற்றம், ஓர் வேதனை ஓர் குழப்பத்துடன் கூடிய புயல் வீசிக்கொண்டிருந்த்து……..

“வெள்ளை அடித்தார்கள் என் திருமணத்திற்கு..

அதில் தொலைந்துவிட்டன என் வண்ண கனவுகள் …என்னமா எழுதி இருக்காங்க கனி மொழி கவிதையை .மனது துடித்துபோய்விட்டது.

“எந்த உலகத்தில் உலாவிக் கொண்டிடுகிறாய்… கண்ணா ! ஏதேனும் புது கதையா, நாவலா “? தோழியின் கேள்வியை கேட்டு இந்த உலகத்தி ற்கு வந்தாள் பவானி.

“ஏதோ நினைவுகள்….. சாந்த்…!”என்றாள் பவானி

“அப்புறமா கற்பனை உலகிற்க்கு போலாம் ,பசிக்குது …வா..டிபன் சாப்பிடலாம்.” என்று தன் கேபினுக்குள் அழைத்துசென்றாள் ஆங்கில பேராசிரியை சாந்த்னி.

“ காண்டின்சே ஊத்தப்பம் லாயி ஹீம் ( காண்டின்லிருந்து ஊத்தப்பம் கொண்டு வந்திருக்கிறேன்) …….ராவே (வாடி) … கம்”..என்று கூப்பிட்டாள் மினி கோஷ் ..“அடடா கோஷ் .! எவ்வளவு அழகாய் நாலுமொழியை ஒரே சமயத்தில் நாசூக்காய் பேசறா …பார் ..என்றாள் சாந்த்னி கண் சிமிட்டிபடி

“வாட் இஸ் ஷி சேயிங் ? பொறுக்க முடியாமல் கேட்டாள், மினி .

பவானி ஆங்கிலத்தில் விள்க்கினாள் .மூன்றுபேரும் சிரித்துக்கொண்டே டிபனை முடித்தார்கள் .தன் வேலைக்காரியை பற்றி அவர்களிடம் சொன்னாள் பவானி .நேரமாகி விட்டதால் அவரவர் தன் வகுப்பறைக்கு ஓடினார்கள்.

பவானி, சாந்தினி,மினி மூன்று பேறும் ஒரே பல்கலைகழகத்தில் பணிபுரியும் தோழிகள். பத்து வருஷமாய் நண்பர்களும் கூட .உழைப்பினால் முன்னேறி முனைவர்களாய் ஒரே பல்கலைகழகத்தில் வெவ்வேறு துறைகளில் பண்ணியாற்றும் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்த இவர்கள் என்றால் மற்றவருக்கு மதிப்பும், மரியாதையும் , அதிகம் . பவானி தமிழ் முனைவர்.அவள் ஒரு முறை முதுகளை பட்ட மாணவர்களுக்கு இலக்கிய வரலாறு சொல்லித்தந்தால் போதும், மூ.வா, தமிழ் அண்ணல், சுபாஸ்சந்திரபோஸ் ….நுல்களை படித்தாற்ப்போல் இருக்கும்.ஆகையால் தான் மாணவர்களுக்கு அவள் மேல் தனி விருப்பம் .அவள் கிளாசை எவரும் மிஸ் பண்ண மாட்டாங்க .காலி நேரங்களில் கதைகளையோ ,புதினங்களையோ எழுதிக்கொண்டிருப்பாள். பெண் எழுத் தாளர்களில் தனக்கென்று ஒரு சிறப்பிடம் பெற்று விட்டாள்.

பவானிக்கு அன்று இரண்டு பீரியட்ஸ் காலி, ஆகையால் நூலகத்திற்க்குள் நுழைத்தாள் .அவள் மனம் நூல்களின் மேல் செல்லவில்லை. லட்சுமி பாட்டியின் முகம் தான் முன்னே வருகிறது. படிப்பும் இல்லை பணமும் இல்லை நடு ரோட்டில் ரயில்பயணி போல் விட்டு விட்டு கணவன் போய் விட்டான். நான்கு குழந்தைகள் இளமை பருவம் எப்படி லட்சுமி அம்மாள் கஷ்டபட்டிருப்பாள் ….. பாவம்..அவள் வாழ்கையை மையமாக கொண்டு ஒரு புதினத்தை எழுத துவங்கி ஏழே நாட்களில் அதை முடித்து பிரமுக பத்திரைக்கு அனுப்பிவைத்தாள் .

எப்போதும்போல ஒன்பது மணிக்கு கேபினில் மூவரும் காலை டிபன் நேரத்தில் ஒன்று சேர்ந்தார்கள். “எப்படி சாந்த் ! அவளால் முடிந்தது,? ஒரு படிப்பில்லாதவள்…,வசதி இல்லாதவள்…. புரட்சி புயலாய் எப்படி மாறினாள் ? பவானி ஆதங்கத்துடன் கேட்டாள்.

“எல்லாம் பெண் எழுத்தாளர் வீட்டின் சாப்பாட்டின் மகிமை என்று நகைத்தாள் எப்பவும் போல சாந்த்னி . மினி டிபன் பார்சலை பிரித்து கொண்டிருந்தாள்.செல் அடித்தது . ஒரு நிமிடம் , என்று கூறி பவானி வெளியே ஓடினாள். போனை அட்டென்ட் செய்து விட்டு சொன்னாள்,” சாந்த் ! என் புதினத்துக்கு தினகரன் பத்தரிக்கையில் சிறப்பு பரிசு தர்றாங்களாம் ,பத்தாயிரத்துடன் மெமெண்டோ பரிசு தராங்கலாம் வர சனிக்கிழமை மைலாபூர் அகாடமி ஹாலில் விழாவாம் ..! உற்சாகத்துடன் சொன்னாள்பவானி . அது தெரிந்துதானே நான் பால் பாயசம் செய்து கொண்டு வந்திருக்கிறேன் “என்றாள் சாந்த்னி .மினிக்கு சொன்னவுடன் பதாயி ஹோ (வாழ்த்துக்கள் ) என்றாள். நீங்க ரெண்டு பேரும் அவசியம் வந்திருங்க என்றாள் பவானி.

“ நீ கூப்பிடுனுமா என்ன ..! நாங்க வந்து சேர்ந்துடுவோம்” என்றார்கள் இரண்டு பேறும் ஒரே நேரத்தில்.

சனிக்கிழமை மாலை பவானி காரில் தன் மகனுடன் லட்சுமி பாட்டியையும் கூட அழைத்து சென்றாள் பவானி. ஒரே கும்பல் பல எழுத்தாளர்கள், நிருபர்கள், தமிழ்நாட்டை சேர்ந்த எல்லா சேனல்காரர்களும் வந்திருந்தார்கள். சாந்த்னி மற்றும் மினி கோஷ் முன் வரிசையில் ஆஜர்.

எழுத்தாளர்கள், நிருபர்கள் பவானியின் புதினாங்கள், சிறுகதைகள் பாத்திரபடைப்புகள் ஆகியவற்றை பற்றி பேசி கொண்டிருந்தார்கள். பவானி மேடைக்கு அழைக்கப்பட்டாள் அங்கு அமர்திருந்த பிரபலங்கள் இவளுக்கு புகழாரம் சூட்டினார்கள் .கடைசியில் பரிசு ரொக்கமும் நினைவு சின்னமும் தர அழைக்கபட்டாள் . சென்னை மகளிர் அணி தலைவி பூ மாலை போட்டு பரிசு கொடுக்க போகும் போது…” ஒரு நிமிடம் “ என்று பவானி மைக்கை கையில் எடுத்து பேச துவங்கினாள் . சபை அனுமதித்தால் எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்” என்றாள் பவானி. அனுமதி வழங்கபட்டது .”இந்த புதினத்திற்குக்கு பரிசளித்து வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி வணக்கங்கள் .. இந்த கதையை பொறுத்தவரை நான் ஒரு தபால் காரன் மாதிரிதான்

“ ஒரு வாரத்திற்கு முன் ஒருநிருபர் என்னை தொலைபேசியில் இந்த புதினத்தைபற்றியும் ,இதற்க்கு முன்னால் வெளிவந்த என்னுடைய புதினம் “’அய்யர்களின் அவலங்கள்“பற்றியும் படு விமர்சினம் செய்து விட்டு ஒரு கேள்வி கேட்டார் “ என்ன மேடம்? அய்யராக இருந்து கொண்டு சமுதாய வழக்கத்துக்கு மாறாக ஓர் பாத்திரம் படைத்து கலாசாரத்தை இழிவு படித்தி விட்டீர்கள் ? தாலி கட்டின புருஷன் செத்தா பிணத்தை கூட பார்க்காத ஒரு கதாபாத்திரத்தை படைத்து ,சீர்திருத்தம் செய்கிறீர்களா ? என்று. அதற்க்கும் ,இதற்க்கும் சேர்த்து என் பதில் இது தான் கேளுங்கள் …. “நான் அய்யராக இருந்தால் தானே என் ஜாதியில் நடக்கும் அக்கிரமகங்கள் , பெண் மேல் நடத்தும் வன்முறைகள் ,குறைபாடுகள், ஊழல்கள் அணைத்தையும் உணர்த்து அதை வெளியே கொண்டுவர முடியும் .பாரதி தானே ஜாதி மதங்களின் வேறுபாட்டை தூக்கியெறிந்தவன் .எத்தனை பாரதிகள் ,பெரியார்கள் வந்தாலும் இந்த சமுதாயம் அவ்வளவு சுலபமாய் மாறி விடாது . மேலும் இலக்கியவாதிகள் ,படைப்பாளிகள் ஜாதியையோ ,பணத்தையோ குறி வைத்து எழுதுவது இல்லை . சமுதாய முன்னேற்றம் தான் எங்களின் ஒரே குறி கோள் . அந்த புதினத்தை பொறுத்தவரை நான் கூறினது அனைத்தும் உண்மையே . என் ஜாதியில் பெண்கள் நிறைய படிப்பாங்க ,ஆனால் படிக்காத ஆண்களான கணவர்மார்கள் அவர்களை நாலுபேர் மத்தியில் மட்டம் தட்டுவார்கள் .மனைவியை …வாடீ. போடீன்னு மரியாதை.. மதிப்பு தராமல் இளமையில் ..ஆடுவார்கள் .. வயது முதிர்ந்த பின் மாமி தான் ஆட்சி செய்வாள் …என்று எழுதி இருந்தேன் .

. “ இந்த கதையை பொறுத்தவரை அது புரட்சியோ, சீர்திருத்தமோ, சமுதாய கட்டுபாட்டின் எதிர்ப்போ கிடையாது ஒரு சாதாரண அவல பெண்ணின் ஊமை கண்ணீரில் நனைந்த புரட்சி உணர்வுகள் .. இளமையில் நடு தெருவில், நான்கு குழைந்தைகளுடன் , அனாதையாய் கணவன் விட்டுட்டு போனாப்போ ….படிப்பில்லாமல், பணமில்லாமல் தனியே, …. ஆணவத்தோடும், காமத்தோடும் பார்க்கும் பலஆண்களின் மத்தியில் நின்று கஷ்டபட்டு ,சொந்த முயற்சியில் ,வீட்டு வேலை செய்து நாலு குழந்தைகளை, படிக்கவைத்து நல்லவர்களாய் வளர்த்து,கரை சேர்த்து , சமுதாயத்தில் நல்ல பெயருடன் வாழும் ஓர் வயதான மூதாட்டியின் மௌன புரட்சி புயலின் பிரதிபலிப்பு. கொஞ்சம் யோசியுங்கள்…! பெண்களின் மனது மென்மையான கண்ணாடிப்போல் தான் .அதை பத்திரமா பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆண்களுக்கு வேண்டும். பெண் என்பவள் மென்மையான அன்புக்கு கட்டுப்பட்டவள் .கல்லையும் கரையவைக்கும் மனம் பெண்ணுக்கு உண்டு. ஆனால் அந்த மன கண்ணாடி சுக்கு நூராய் உடைத்து விட்டால் அது என்றுமே ஒட்டாது. மனைவி செத்தால்ஒரு வாரத்தில் ஆடவன் புது மாப்பிள்ளை ஆகிவிடுகிறான். அதுதான் நம் சமுதாயம் அதே கணவன் இறந்தாலோ இல்லை விட்டு சென்றாலோ பெண்னை பற்றி குறை கூறாமல் இந்த சமுதாயம் இருந்ததில்லை இந்த சமுதாயத்தில் நாற்பது வருஷத்துக்கு முன்பு இந்த பெண் ஆண்வர்க்க ஆணவத்திற்க்கு சமாதி கட்டியவள் இந்த முத்தாட்டி நெஞ்சில் எத்தனை வேதனைகள்,.சுமைகள்,..சமுதாய கல்லடிகள் இவைகளை எல்லாம் சகித்து கொண்டு..இறந்த கணவனை பார்க்க செல்ல வில்லை என்றால் …அவள் மனதுக்குள் எத்தனை மௌன போராட்டங்கள் , வேதனை அலைகள் வீசி இருக்கும் . பொதுவா நம்ப சமுதாயத்துல டிவி சேனல்ஸ் எல்லாமே உயர் வர்க்கம் ,மத்திய வர்கங்களுக்கான போட்டிகளையும் பரிசுகளையும் அள்ளி தருகிறது .ஏதாவது ஒரு சேனல் சொல்லுங்க …சிறந்த வேலைக்காரி,அல்லது தொழிலாளி ? என்ற தலைப்பில் பரிசுக்கான போட்டிகள் வைத்து பரிசுகளை குடுத்து ஊக்க படுத்துவது என்று …? இல்லை . இந்த நாட்டில் ‘’முப்பத்து ஆறு வயதினிலே ..வசந்தி (ஜோதிகா) மட்டும் இல்லை எத்தனையோ நாற்பத்து ஆறு , ஐம்பத்தி ஆறு வயது பெண்மணிகள் நடமாடும் ஏ.டீ.எம் கார்டுகளாக வாழ்ந்து கொண்டுத்தான் இருக்கிறார்கள் .பெண்கள் பிரச்சினை தேசிய பிரச்சினை இல்லை உலக பிரச்சினை ..படித்த பெண்களுக்கு சட்டம் தெறியும், பெண்கள் விடுதலை போராட்டம் என்று கூட்டம் போட்டும், மீடியாவை உதவிக்கு கூப்பிட்டும் நியாயம் கேட்கதெரியும் . நாற்பது வருடங்களுக்கு முன் இளமையில் குழைந்தைகளுடன் நடு தெருவில் நிறுத்திய கணவனை லட்சியம் செய்யாமல் சொந்தக்காலில் நின்று பிள்ளைகளை கரை சேர்த்த ஏழை, வயோதிக பெண்மணி ,பெண்ணியதுக்கு பாடுபடும் புரட்சிகாரி இல்லையா?….. அவர்வேறு யாரும் இல்லை என் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் லட்சுமி பாட்டிதான்…அவர் . இங்கு தான் உள்ளார் , நீங்கள் அனுமதித்தால் ஓர் பெண் எழுத்தாளராய் அந்த புரட்சி புயலுக்கு இந்த பரிசை நான் தர விரும்புகிறேன் என்றாள்.. . பவானி .

கைதட்டல்களுடன் சபை அனுமதி தந்தது .இரண்டு பெண்கள் கூட்டி வர லட்சுமி பாட்டி மேடைக்கு வரவழிக்க பட்டாள் .பவானி பாட்டிக்கு மாலை அணிவித்து பரிசுரொக்கத்தையும், சின்னத்தையும் தந்து “” இன்று நான் பெருமை படுகிறேன் ,ஓர் மௌன புரட்சிக்காரியை கண்டு “’ என லட்சுமி பாட்டியை தழுவினாள் பவானி . கண்ணிரை சேலையில் துடைத்தபடி பரிசை ஏற்றுக்கொண்டு கை கூப்பினாள் லட்சுமிபாட்டி. எல்லோறும் நின்று கைதட்டி சந்தோஷமாய் அவரை வாழ்த்தினார்கள்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “மன கண்ணாடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *