கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2022
பார்வையிட்டோர்: 4,317 
 
 

நாளை மறுநாள் நேர்முக பரிட்சைக்காக அரசவங்கியில் இருந்து அவனுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது கல்முனயில் இருந்து கொழும்பிற்கு செல்ல வேண்டும்.

நண்பர்களிடம் சொல்லிப்பார்த்தான் ‘டேய் தொழில் இல்லாட்டி பறவாயில்லை உயிர்தாண்டா முக்கியம் கொழும்புக்கு போறதப்பற்றியே நினைக்காத”

வீட்டில் அதைவிட மேலும் பல வார்தைகளை கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான்.

”மகன் தொழில் இல்லாட்டி எப்பசரி எடுத்துக்கொள்ளலாம் நீ எங்களுக்கு வேண்டும்”

பெற்றோர்கள் ஒரு பிடியில் நின்றார்கள்

“நான் யாருக்கு என்னதீங்கு செய்தன் எனக்கு எதுவுமே நடக்காது

எனக்கு அல்லாஹ் இருக்கான் அவன் பாதுகாப்பான் நான் போகத்தான் வேண்டும்..” பிடிவாதமாக ஒற்றைக்காலில் நின்றான்,

“விசயம் தெரியுமா..கல்முனையில் இருந்து மட்டக்களப்புக்கு போன பஸ்ஸில இருந்து நம்மட ஆக்களயெல்லாம் கடத்தியிற்று போயிட்டாங்களாம்” பக்கத்து வீட்டு சல்மா இவனது தாயிடம் முறையிடுவது இவனது காதுக்கு எட்டியது

காலையில் புறப்பட்டால் எப்படியோ மாலைக்குள்ள கொழும்பை சேர்ந்திடலாம்

தன்னோடு ஒண்றாக கல்முனையில் படித்த சிவாவுக்கும் இண்டவிக்கு கடிதம் வந்திருக்கு நாங்க ரெண்டுபேரும்தான் ஒண்றாக போகப்போறம் என்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு தாயின் அழுகையையும் பொருப்படுத்தாது கல்முனை பஸ் தரிப்பிடத்தில் கொழும்பு பஸ்ஸை எதிர்பார்த்தவனாய் நின்றுகொண்டிருந்தான்

1990

வீட்டை விட்டு வெளியே சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை பயங்கரவாதிகள் எண்று சமூக ஊடகங்களில் உச்சரிதுக்கொண்டிருந்த காலம் ,சமுகங்களிடையே புருந்துணர்வுகள் தொலைக்கப்பட்டிருந்தன மாற்றுசகோதரர்கள் ஒருவரை ஒருவர் எதிரிகளாக பார்த்தார்களா அல்லது அந்த ஆளுகைக்குட்படுத்திக்கொள்ளப்பட்டார்களா என்று புரிய முடியாத நாட்கள் ,கல்முனையில் இருந்து மட்டக்களப்பிற்கு செல்வதென்றாலே அவரவர் இறைவனை நினைத்துகொண்டும் நேர்ச்சைகளோடும் கடந்து போகும் நொடிகள்.

தவிர்க்க முடியாத காரணங்கள் இன்றி எவரும் தூரப்பிரயாணங்களை நாடுவதே இல்லை.

உரிய வேளைக்கு இவன் எதிர்பார்த்த பேருந்து உரிய இடத்தில் உறுமிக்கொண்டு, நின்றது பிரயாணிகள் முண்டியடித்துக்கொண்டு இருக்கைகளை நிறப்பிக்க்கொண்டிருந்தார்கள் ,இவனுக்கு இடம் கிடைக்கவில்லை எப்படி நின்று கொண்டு கொழும்புவரை செல்வது , வீடு செல்வதா கொழும்பு செல்வதா தலையை குழப்பிக்கொண்டான் ஒரு முறை இருக்கைகளை நோட்டமிட்டவனுக்கு ஒரு இருக்கையில் மாற்று சகோதரி தனியாக ஜன்னல் ஓரமாக இருப்பதையும் பக்கத்தில் வெறுமையாக இருக்கும் இடத்தில் ஒரு பார்சல் இருப்பதையும் அவதனித்தான் எதற்கும் கேட்டுப்பார்ப்போம் “மன்னிகனும் யாராவது இருக்காங்களா மிஸ்” அவள் எதுவும் பேசாமல் அந்த பார்சலை தன் மடியில் எடுத்துகொண்டாள் இவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு “தங்ஸ் மிஸ்” என்றான் அவள் வெளியே பார்துக்கொண்டு இருந்தாள்

“எது எது எப்படியோ அது அது அப்படியே நடக்கும் ,இறைவன் எப்படி எப்படி நாடினானோ அது நடந்தே தீரும் “இவன் நண்பர்களுடன் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் அந்த வார்த்தைகளை அசைபோட்டுக்கொண்டான்.

பேருந்து தனது பயணத்தை தொடர்ந்தது பாண்டிருபு..,மருதமுனை..,.நீலாவனை..கல்லாறு..கடந்து செல்லும் ஒவ்வொரு ஊரும் பாடசாலையில் ஆசிரியர் ஒவ்வொரு மாணவனின் வருகைகளை உறிதிப்படுத்தும்போதும்” ஏஸ் சேர்,பிறஸன் சேர் ”என்று மாணவர்கள் கூறிக்கொண்டு தமது இருக்கைகளில் இருந்தவாறே கைகளை உயர்த்தி காட்டும் அந்த நாட்கள் நினைவில் வ்ந்து போனது இவனுக்கு,

என்ன வாழ்க்கை இது மனிதமே இல்லாத மனிதர்கள், யாரை யார் குற்றம் சொல்வது வழிமறிப்புகள் ஆள்கடத்தல்கள் காணாமல்போதல் ..எவ்வளவோ ஆசைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் , நடமாடி இருப்பார்கள் குரோதமான பார்வைகள் எல்லைபுறங்களில் வாழமுடியாது துரத்தப்பட்டு வாழ்விடங்களை தொலைத்து ..இதற்கு முடிவே இல்லையா அசிங்கப்பட்டுப்போகும் உலகம்.

சென்றமாதம் உயர்தர தனியார் வகுப்புக்கு சென்றமாணவன் இனம்தெரியா துப்பாக்கிக்கு இரையாகிப்போனான் அந்த நிகழ்வில் இருந்து இவன் இன்னும் விடுபட்டுபோகவில்லை ,இந்த இறுக்கமான வேளையில்தான் இவனுக்கு நேர்முக கடிதம் வந்திருந்தது ம்..என்ற நீண்ட இவனின் ஒரு பெருமூச்சு பக்கத்தில் இருந்த சகோதரியை பேசதூண்டியிருக்கவேண்டும்”எங்கே போகிறீர்கள்..”அவள்தான் பேச்சை ஆரம்பித்தாள் கொழும்பு செல்வதில் இருந்து வீட்டில் பொய்சொல்லிவிட்டு பிரயாணம் செய்வது வரை விபரித்தான் ,பேருந்து ஆரயம்பதியை நெருங்கிக்கொண்டிருந்தது, கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் வந்தவர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட அந்த நிகழ்வின் நினைவுகள் இவனை தொத்திக்கொண்டது, அந்த நொடியில் அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள் கடைசி வார்த்தைகள்.. அலறல்கள் ..எப்படி இருந்திருக்கும் ,இவர்களை எதிர்பார்த்து வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ ஆசைகளுடன் இருந்திருப்பார்கள் ,

இவன் வெளியே தெரியும் காட்சிகளைகூட ரசிக்க முடியாதவனாய் தான் கேள்வியுற்ற அந்த நிகழ்வை அசைபோட்டுக்கொண்டிருந்தபோதுதான் திடீரென இவனது பேருந்து இடைமறிக்கப்பட்டு சில ஆயுததாரிகள் ஏறிக்கொண்டார்கள் இவனுக்கு என்னசெய்வதென்றே புரியவில்லை,நெற்றியில் வியர்க்க ஆரம்பித்தது ,எல்லோரும் தமது அடையாள அட்டையை எடுக்கும்படி அந்த ஆயுத தாரிகள் அதட்டிகொண்டு நின்றார்கள்

”தைரியமாக இருங்கள் அடையாள அட்டையை காட்டவேண்டாம்” பக்கதில் இருந்த அந்த சகோதரி ரகசியமாக சொன்னாள்

எடு..எடு.. அடையாள அட்டையை என்று ஒரு ஆயுததாரி மரியாதைக்குறைவான வார்த்தைகளுடன் இவனுக்கு முன்னால் இருந்த ஒரு வயோதிபரை அதட்டிக்கொண்டு நின்றான் அடுத்தது இவன் முறை பக்கதில் இருந்த அந்த சகோதரி தனது கையில் கட்டி இருந்த கைக்கடிகாரத்தை களட்டி இவனிடம் கொடுத்துவிட்டு தனது கையில் போட்டுவிடும்படி சைகைசெய்தாள், எதிரே ”எங்கே போகிறாய் எடு அடையாளஅட்டை” இவன் பேசாமல் இருந்தான் “என்ன வாயில பேசாமஇருக்கிறாய் நான் கேட்கிற விளங்கல்லையாடா..” “கதைக்கிறதமரியாதையா கதைக்கனும் “அவள்தான் பதில் சொன்னாள் இவன் அவளது கரம்பற்றி கைக்டிகாரத்தை மாட்டிக்கொண்டிருந்தான்” “டேய் கெதியாவாடா அவனுகள் வந்திடுவானுகள்” பேரூந்தின் கதவடியில் நின்ற அவனது மற்றைய ஆயுததாரி கட்டளையிட்டவாறே வெளியே பாய்ந்தான் அவனைதொடர்ந்து மற்றைய ஆயுததாரிகளும் பாய்ந்து பற்றையை நோக்கி ஓடினார்கள்

பேருந்து நகர ஆரம்பித்தது, எதிரே அரச படையினரின் வாகன தொடரணி வந்துகொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *