மகாகனம் பொருந்திய…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 12, 2022
பார்வையிட்டோர்: 15,246 
 
 

(1994 வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எமது நாட்டு மக்களோடு நான் கொண்ட நிபந்தனை யற்ற உறவு என் படைப்புகளில் ஆத்மார்த்த சுருதியாக வெளிப்படுவதை என்போலவே எனது வாசகர்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். எனது வாசகர்களுக்கும் எனக்கும் உள்ள நெடுங்காலப் பந்தமும், அவர்களுடன் எனக்குண்டான உரிமையும் எனது இலக்கியச் சுருதியில் விளைந்தவை.

எனது படைப்புகளைப் படிக்காமலே என்னை விமர்சிக்கும் விபரீத வாசகர்களும், நாவலின் ஆரம்ப அத்தியாயம் ஒன்றையே பார்த்துவிட்டு முழுவிவரணத் திற்கும் விமர்சனம் செய்கிற புனைபெயர் வாசகர்களும், எனது படைப்புகளை ஆதங்கத்தோடு படிக்கிற வாசகர்களும் எனக்குண்டு. என்னைப்போலவே சில உத்திகளில் ஆசைப்பட்டு எதையுமே எழுதாமல் தவண்டையடிக்கிறவர்களும் உண்டு. எது எவ்வாறாயினும் இலக்கியம் என்று வரும் போது அனைவரும் எனது அபிமானத்திற்குரியவர்களாகின்றனர். எனது கருத்துக்கு உடன்படாதோரும் என் போலவே என்னில் அன்பு செலுத்துகிறார்கள். இலக்கியம் தான் இதன் சூத்திரம். 1987ல் எழுதப்பட்ட இக்குறுநாவல் வெறும் கற்பனைப் படைப்பல்ல. கற்பனா வேதாந்தமுமல்ல. மானசீக கவசமுமல்ல. எமது மண்ணில் புதையுண்ட கொடுமைகளின் பிம்பமும் அதனையொட்டிய பிரசவமுமாகும்.

இலங்கையின் கறைபடிந்த நீண்டகால உத்தரிப் பிஸ்தலத்தில் நெஞ்சை உலுப்பும் பல சம்பவங்களை ஒரு சிறு குறு நாவலுக்குள் பூரணப்படுத்த முடியாது. பெரிய நாவலாக எழுதவேண்டிய இதன் மையக்கரு இங்கே குறுநாவலாக ஒரு குறுகிய காலப் பகுதியை மட்டும் தொட்டு நிற்கிறது. இன்றைய அவசரயுகத்தின் ஆக்ஞை என்னை எப்படி ஆக்கிற்று. எனினும் இந்தப் போரும் சமாதனமும் கால வேளை கண்டு முழு நாவலாக விரியும். வாசகர்களின் அபிப்பிராயங்களும் விமர்சனங்களும் தேவை.

– எஸ்.ஏ.


1

மகாகனம் பொருந்திய மதியூக அதிபருக்கு,

அதிக நீண்ட நாட்களாக என் மனசை உறுத்திக் கொண்டிருந்த சம்பவங்களை, இன்று இரவு முழுதும் ஆழ்ந்து யோசித்ததன் விளைவாக, இந்த நிருபத்தைத் தங்கள் கவனத்திற்கு எழுதுகிறேன்.

தங்களைப் போலவே நானும் இந்த நாட்டை நேசித்து, அதன் விசுவாசியான பிரஜைகளில் ஒருவன் என்ற முறையிலும், இந் நிருபத்தைத் தங்களுக்கு எழுத நேரிட்டது என்னை மன்னியுங்கள்.

இப்பொழுது என் உடலும் மனமும் சோர்ந்து போய் விட்டன. வழமை போல் இன்று அதிகாலை என்னால் எழுந்திருக்கவும் முடியவில்லை. கடந்த காலங்களைவிட அண்மிய நான்கு ஆண்டுகளாக அதாவது, ஜுலை 83 கலவரத்துக்குப் பின் வேகமாகச் செயற்பட்ட போதும் எனக்கு இப்படி ஆனதில்லை.

நேற்று இரவும் கணக்கற்ற செத்த பிரேதங்களைக் கடந்தே உயிராக எரித்த மீதிச் சடலங்களைப் பார்வை யிட நேர்ந்தது. அதனாலும் இப்படி ஆகியிருக்கலாம்.

இப்போது என் மனசு உற்சாகம் இழந்து போய் தவிக்கிறது. இதயம் அடித்துக்கொள்கிறது. மண்டைக்குள் ஏதோ பிரளயம் நிகழுமாப் போல் வலிக்கிறது, சித்தங் கலங்கிவிட்டது போல் ஒரு பிரமை.

இந்த அவஸ்தைகளுக்குள்ளாகியிருக்கற போதுதான் நேற்று மாலைதான் தங்களால் பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு கிடைத்தது. ஆனால், தங்கள் உத்தரவு கிடைப்பதற்கு முன்பே என் மனசின் துல்லியம் ஆட்டங் கண்டு விட்டது.

அன்பான அதிபரே,

தங்கள் மேன்மைக்குரிய அதிகாரத்தையும் கீர்த்தியை யும் உறுதி செய்யும் பொருட்டு தான் தனிப்பட்ட கோதாவில் தன்னிச்சையாகவும் சற்று எதேச்சாதிகாரத்துடனும் முப்படைகளை உசுப்பிவிட்டுப் பல வெற்றிகளை ஈட்டியிருந்தேன் என்பதை அன்றாடம் அனுப்பி வைத்த அறிக்கைகள் மூலம் தெரிந்திருப்பீர்கள்,

அப்படி ஒரு முழு விஸ்வாசத்துடன் கடமையாற்றும் போது ‘பயங்கரவாத’ப் போராளிகளால் உண்டான தாக்குதல்களைக் கூடத் துச்சமாக மதித்துச் செயல்பட்டிருக்கிறேன். அதாவது, தங்களுக்காக எங்கள் உயிர்களைப் பணயம் வைத்தே கடமை புரிந்து வந்திருக்கிறேன்.

அப்பேர்ப்பட்ட எனக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டு விட்டது. தங்கள் புதிய கட்டளையின் வாசகம் என் சேட்டுப் பைக்குள் அப்படியே கிடக்கிறது.

இற்றைவரை தரைவாயிலாகவும் கடல் மார்க்க மாகவும் தாக்குதல்களை நடத்திப் போராளிகளை வேட்டையாடிக் கொண்டிருந்த நாம் தங்கள் புதிய உத்தரவின் பிரகாரம் ஆகாயமார்க்கவும் விமானத்திலிருந்தும் அவர்கள் மீது குண்டுமாரி பொழிந்து தள்ள வேண்டும். ஆனால், போராளிகள் மீது குண்டுகளைப் பொழிந்து அழிப்பது சாத்தியமான ஒரு காரியமா என்பதும் சந்தேகம். அதன் நோக்கின் தமிழ்த்தேசிய இனம் முழுவதுமே பெரும் பயங்கரவாதிகள் என்று கருதுகிறீர்கள் போல் தெரிகிறது.

இதன் அர்த்தம் எனக்குச் சரியாகப் பிடிபடவில்லை. அதுமட்டுமல்ல, இஸ்ரேலிய மொசாட் படைகளும் பிரிட்டிஷ விமான ஓட்டிகளும் தங்களால் இனங்கான முடியாத போராளிகளையும் பொதுமக்களையும் எப்படி நிர்ணயித்துக் கொள்வார்கள் என்பதும் புதிரான விசயமே இவற்றையெல்லாம் நினைக்க என் மூளை குழம்பிப் போயிருக்கிறது, எனது சோர்வுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்,

தங்கள் புதிய உத்தரவின்படி எனது தலைமையில் வெளிநாட்டுப்படை நிபுணர்களோடு இணைந்து ஆகாய மார்க்கமாக எப்பவோ அந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும். அதற்கான நவீன ஆயுதங்கள் வெடிகுண்டுகள் யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்தும், பலாலி ராணுவ முகாமிலிருந்தும் சப்ளை – செய்யப்படும் என்பதும் மெய்யானதே.

சென்றவாரம் கொழும்பிலிருந்து கடல் மார்க்கமாகக் காங்கேசன் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த சரக்குக் கப்பலில் பிரமாண்டமான வெடிகுண்டுகளும், ‘ஷெல்’ வெடி பொட்டணிகனும், எரி விஷ வாயுக்கணை களும் நவீன போர்க்கருவிகளும் ஒரு வாரத்துக்குள் “நவீன போர்க்கருவிகளும் ஒரு வார காலத்துக்குள் முழுத் தமிழ்ச் சனத்தையும் அழித்து வட கீழ் மாகாணங்களையே சுடுகாடாக்கப் போதுமானவை என்பதும் வாஸ்தவமே. ஆனால், இன்று காலை ஒன்பது மணியாகிய பின்னரும் தங்களின் இந்தக் கட்டளையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை .

ஒரு ராணுவத் தளபதியாகினும் மேல் மட்ட உத்தரவு களை மீறினாலோ உதாசீனம் செய்தாலோ, செய்யத் தவறினாலே அவர் எப்பேர்ப்பட்ட தண்டனைக்கு ஆளாவார் என்பதும் நான் அறிந்ததே. ஆயினும், இவற்றையெல்லாம் துச்சமென மதித்தே இன்று என் மனசு தளம்பி அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. எப்படி யேனும் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களால் சட்டரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தாங்கள் தலைவராதலால் எந்தக் கட்டளையையும் தன்னிச்சை யாகப் பிறப்பிக்கும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்பதும் எனக்குத் தெரிந்த விஷயமே. இந்த அரசபீடத் தின் சகலவல்லமையும் அதிகாரமும் இறமையும் கொண்ட தாங்கள் பிறப்பிக்கும் எந்தவோர் கட்டளையையும் அட்டியின்றி ஏற்று அவற்றை முழு விஸ்வாசத்துடன் நிறைவேற்றுவதற்காகவே தங்கள் படைத் தளபதியாக இந்தப் பிராந்தியங்களுக்கு தமிழ்ப் பிரதேசங்களுக்குக் கடமையாற்ற அனுப்பப்பட்டேன் என்பதை நான் பூரண மாக உணர்கிறேன்.

இந்த நாட்டின் மக்களுச்கும், தரைப்படை, கடற்கடை விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் ஏக தலைவரான தாங்கள் இடுகின்ற உத்தரவுகளை அவ்வப்போது நிறை வேற்ற வேண்டியது சகல படைப்பிரிவுகளின் நீங்காக் கடமை என்பதும் உண்மைதான்.

தாங்கள் இந்த நாட்டின் அதி உன்னத அதிபர் பதவியில் அமர்ந்து அதிகாரம் வகிக்கும் பெரும் தலைவராகக் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சிப்பீடத்தில் வீற்றிருக்கிறீர்கள். ‘ ஐந்து ஆண்டுகளுக்கே அதிகாரத்தைப் பரிபாலிக்கும் உரிமையை நாட்டுமக்கள் தங்களுக்கு அளித்திருந்த போதும். இந்த அதிகாரபீடத்தை நழுவாதிருக்கத்தாங்கள் வகுத்த புதிய சட்ட திட்டம் பலித்தபோது, ஒரு ஜனநாயக முறையே மாற்றியமைக்கப்பட்டுச் சர்வாதிகாரத்துக்கு வழிகோலியது. அதன் போது ஏனைய மந்திரி பிரதானிகள் வெறும் பொம்மைகளாக்கப்பட்டார்களே, அது ஒன்றே தங்கள் திறமைக்கு அச்சாணி என்பேன்.

ஓர் அரசின் விஸ்வாசமுள்ள படைத்தளபதி என்ற முறையில் தங்கள் காலப்பகுதிக்கு முன்பிருந்தே இன்று வரை சகல கட்டளைகளையும் சிரமேற்கொண்டு ஒழுங் காகவும் செயற்பட்டு வந்திருக்கிறேன் என்பதை மேன்மை தங்கிய அதிபர் அவர்சளே, தாங்கள் அறிவீர்கள்.

தங்கள் ஆட்சிக்காலத்தின் பிந்திய ஐந்து ஆண்டுகளும் படைபட்டாளங்களில் உள்ள நாம் அனைவரும் ஒரு வித பேசும் பொம்மைகள் போல் கடமையாற்றுகிறோமா என்றும் என் மனசு அடிக்கடி நெருடியதுண்டு. அதற்கு இன்று தான் சரியான அர்த்தமுள்ள விடை கிடைத்ததாகக் கருதுகிறேன்.

அதி உத்தம அதிபரே, இந்த நெருக்கடியான கட்டத்தில் இப்படித் தாக்கமான வாசகங்களை எழுத நேர்ந்தமைக்காக உண்மையில் வருந்துகிறேன். இதற்காக என்னை மன்னியுங்கள்,

தங்களால் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப் படுகின்ற சட்டங்களின்படி மாத்திரமல்ல, தாங்கள் வகிக்கும் தலைமை ஸ்தானத்தின்பாலும் தாங்களே முப்படைகளின் தளபதியாகவும், நாட்டின் பாதுகாப்பு முறைகள் தங்கள் கட்டுப்பாட்டில் தங்கள் கட்டளைப் பிரகாரமே இயங்குவன என்பதையும் நான் அறிவேன.

இந்த விஷயங்களை யெல்லாம் நன்றாகத் தெரிந் திருந்தும் நேற்றுத் தங்களால் பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவை இது வரை என்னால் நிறைவேற்ற முடியாம லிருக்கிறது. இதனால் எனக்கு என்னென்ன விபரீதங்கள் நேரிடும் என்பதையும் நான் உணர்கிறேன், எனினும், எனக்கு உண்டான இந்த அதிர்ச்சியே எனக்குப் புதிய ஞான வெளிச்சத்தை ஊட்டுவதாகப்படுகிறது.

போர் முறையில் ஒரு தளபதிக்கு இருக்கவேண்டிய கண்ணியம் பிசகினால் அந்தப்போர்க்களமே மாசுபடுத்தப்படுகிறது. நாட்டின் தலைவி தியும் மாறிவிடலாம் கொஞ்சக்காலமாகத் தங்களால் பிறப்பிக்கப்படுகின்ற உத்தரவுகளை இந்தப் பிரதேசத்தில் நடைமுறைப் படுத்துகின்ற போதும், அவற்றின் பிரதிபலிப்புக்களை அவதானிக்கிறபோதும் எமது நடவடிக்கைகள் யாவும் மாசுபடுத்தப்படுகிறதாகவே தெரிகிறது.

ஒருவனுடைய வீரம் அவனுடைய நேர்மையில் தான் பிறக்கிறது. நேர்மை இல்லாதவன் வீரம் அவன் கோழைத் தனத்திலிருந்து வெளிப்படுகிறது. இந்த உண்மையோடு பார்க்கும் போது வீரத்துடன் செயற்படவேண்டிய படை களும் அவற்றின் தளபதியாகிய நானும் தங்களின் மனிதாபிமானமற்ற புதிய புதிய தீடீர் தீடீர் உத்தரவு களால் நேர்மை தவறி நடந்து கோழைகளாகவே கடமை. புரிய வேண்டியவர்களாகி விட்டோமே என்று நான் வெட்கப்பட்ட நாட்கள் அனந்தம்.

எனினும், இத்தனை காலமாக இவற்றையெல்லாம் சமாளித்துக்கொண்டு ஒரு கோழையாகவே – செயற் பட்டேன் என்பதை ஒப்புக்கொள்வதில் வெட்கப்பட வில்லை. உண்மையைக்கூறும்போது துன்பம் நேரிட்டாலும் நேர்மையான சத்தியவந்தனுக்கு அந்தத் துன்பத்திலும் ஓர் ஆத்ம சுசும் உண்டு அப்படி ஓர் ஆத்ம சுகத்தையே இதன் மூலம் தேடிக் கொள்கிறேன்.

இது ஏதோ பீடிகை என்று யோசிப்பீர்கள். தயவு செய்து பொறுமையாக ஆனால், நிதானமாக வாசியுங்கள்.

பாதுகாப்புப் போர்ப்பயிற்சியை மட்டுமல்ல, அந்த போர் முறைகளைத் தங்கள் அதிகாரத்துடனான சட்ட திட்டங்களுக்குத் தக்கவாறு எப்படியெல்லாம் அமுல் படுத்த வேண்டும் என்பதில் தேர்ந்த ஞானம் அறிவு பயிற்சி பெறுவதற்காகவுமே தங்கள் நேச தேசத்தவர் களான மேலைநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். இன்று சகலயுத்த தந்திரங்களையுங் கற்று ஓர் இராணுவத் தளபதிகளுக்குரிய முழு மதி நுட்பங்களையும் தெரிந்து கொண்ட வனாக விளங்குகிறேன். இதற்காக நான் தங்களுக்கு எனது விஷேச நன்றிகளையும் அன்பையும் பக்தி சிரத்தையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்த யுத்தப் பயிற்சியின் கண் நான் இப்பொழுது போர்க்கருவிகளைத் துல்லியமாக இயக்கும் வல்லமை யுள்ளவனாக மட்டுமல்ல, இந்த ஆயுதங்களைப் புதிதாக உற்பத்தி பண்ணவும், நவீன உத்திமுறைகளால் இயக்கவும் அவற்றைக் கொண்டு கடல் தரை ஆகாய மார்க்கமாகத் தாக்குதல்களை நடத்தவும் தக்க நிபுணனாகிவிட்டேன் என்பதும் உண்மையே.

இவையெல்லாம் இருந்தும் என்ன? நேர்மை பிறழ்கின்ற கிருத்தியங்களால் கோழையாகிவிட்ட எனக்கு எந்தத் திறமையுமே பிரயோசனமற்றுப் போய்விட்டதாக உணர்கிறேன். இதனால்தான் இத்தனை – தகுதி திறமை வல்லமை ஆகிய வாய்ப்புக்களிருந்தும், தங்களால் பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவை இன்னும் நிறைவேற்ற விழையாமலே எனக்குள் புழுங்கி மனஞ் சோர்ந்து போயிருக்கிறேன்.

தங்கள் புதிய உத்தரவில் ஒரு இனத்தையே பூண்டோடு அழிக்கும் போர்முரசுமுழங்குகிறது. மகாகனம் பொருந்திய உத்தமரே, மனிதாபிமானத்தைச் சவக்குழிக்குள் புதைக் கின்ற சாகசப் போர் முறை எனக்கு இப்போது சரியாகப் படவில்லை.

தயவு செய்து கவனியுங்கள்.

தங்கள் புதிய உத்தரவு போலவே என் தாயாரிட மிருந்தும் புதிய பாணியிலான ஒரு கடிதம் நேற்றுத்தான் கிடைத்தது இதற்கு முன்பும் என் மாதா பல தடவை கடிதம் எழுதியிருக்கிறாள். அந்தக் கடிதங்களில் எதையுமே விஸ்தரிக்க முடியாத ஏதோ ஒரு பீதி கலந்த சோகம் இழையோடியிருந்ததை அவதானித்திருக்கிறேன். ஆனால், இப்போது என் அன்னை எழுதிய கடிதம் அப்படியல்ல. இது ஒரு மானிடத்தையே கோடு காட்டி நிற்கிறது. வித்தியாசம் என்னவென்றால், தங்களைப் போல் என் மாதா எனக்குக் கட்டளை பிறப்பிக்கவில்லை. ஒரு வேண்டு கோள் விட்டிருக்கிறாள். நான் அறிந்தவரை உணர்ந்த வரை தாய் ஒருவளுக்குத்தான் கட்டளையிடும் உரிமையோ தகமையோ உண்டு. இருந்தும் என் தாய் வேண்டுகோள் விருத்திருக்கிறாள். அதுவும் படைத்தளபதியான தன் புதல்வன் எனக்கு வேண்டுதல் சொய்திருக்கிறாள்.

தங்கள் புதிய கட்டளையை நிறைவேற்றாமலிருப் பதற்கு என் மாதாவின் இந்தக் கடிதமும் ஒரு காரணமா யிருக்கலாம் உலகில் தோன்றிய சகல ஜீவராசிகள் மட்டு மல்ல, முழு மனித குலமுமே தாய்மார்களால் பேணிப் பாதுகாக்கப்பட்ட ஜீவன்கள் என்ற முறையில் தாய்க் குலத்தைவிட மேலான ஒன்று உலகில் இருப்பதாக எனக்குத் தோணவில்லை. தாங்களும் அப்பேர்ப்பட்ட ஒரு தாய் வயிற்றுப்புதல்வர் என்பதால் நடமக்குள் ஒரு சகோதரத்துவம் கூட இருக்கலாம்.

தாங்கள் அரச பீடத்தின் உச்ச ஸ்தானத்தில் வீற்றிருக்க வரையறை செய்து கொள்ளப்பட்டவராதலால் தங்கள் கீர்த்தியும் அத்தகையதே. அது போன்று தபசுகால யோகியான துறவியைவிட ஒரு போர்க்காலத்து ராணுவ வீரனுக்கு அவனின் சொந்த பந்தப் பாச உணர்வும் உறவும் துண்டிக்கப்படுவது இயல்பே. ஆனால், என் தாயாரின் இந்தப் புனித கடிதம் அந்த இயல்பையும் தகர்த்தெறிந்து விட்டது.

அந்தக் கடித வாசகங்களிலே ஒரு கட்டத்தில் என் மாதா குறிப்பிட்ட வாக்கியம் என் இதயத்தையும் மனச் சாட்சியையும் உலுப்பி விட்டது.

என் மகனே இந்த நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக என்னை ராணுவத்தில் சேர அனுமதித்தேனே யன்றி, அதிகார வெறியால் மமதை கொண்ட பேரினவாதத் தலைவர்களின் விபரீத ஆசைகளை நிறைவேற்ற அல்ல மனித உரிமை கோரி நிற்கிற இந்த நாட்டு மக்களை அநியாயமாகக் கொன்று குவிப்பதற்குமல்ல. இந்த நாட்டு மக்களை ஒரே விதமாக நேசிக்கின்ற இந்தப் பஞ்சமா பாதகக் கொலைகளை இத்தோடு நிறுத்திவிடு. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடு. இது கட்டளையல்ல; என் வேண்டுதல். உன் தாயாரின் இந்த வேண்டு கோளை, என் அன்பான மகனே, நிறைவேற்றுவாயாக…. இதன் பொருட்டு உனக்கு வரும் துன்பங்களை, இத்தனை காலம் புரிந்த தவறுகளுக்காக ஒரு பாவ விமோசனம் போல் கருதி எதையும் சகித்துக்கொள்ளச் சித்தமாயிரு. இதன் பொருட்டு உன் ஆத்ம சுகத்தைத் தேடி கொள் வாயாக….”

2

மாட்சிமையுடைத்தான அதி உத்தம அதிபரே, ஆத்ம டேற்றம் எங்கே இருக்கிறது என்று பார்த்தீர்களா? என் மாதாவின் ஒரு பெரிய நீண்ட கடிதத்தில் இந்தச் சிறு வாக்கியம் பெரு நெருப்பாய்ப் பற்றிக்கொண்டிருக்கிற தாகவே நான் உணர்கிறேன். தங்களுக்கு எப்படியோ?

ஒரு விண்ணப்பம்,

ஒரு தாயின் மகிமையை என்னைவிடத் தாங்கள் உணர்வீர்கள். என் வாழ்க்கைத் துணைவியிலும் என் தாயைக் காண்கிறேன்’ என்று ஒரு தடவை தாங்கள் கூறியது என் நினைவுக்கு வருகிறது. உலகத்தின் சகல ஜீவன்களையும் பிரசலித்து ரட்சித்து வளர்த்து ஆளாக்கிய தாயின் ஸ்தானத்துக்கு மேலான ஒரு உன்னத சிருஷ்டியை எவராலும் கற்பனை பண்ணவே முடியாது. இத்தகைய மகிமையுடைத்தான என் மாதாவுக்கு நான் எந்த விதத்தி லும் பொய் கூறவோ, மாறாக நடந்து கொள்ள வோ கூடாது. மாதாவின் வேண்டுகோளை மீறி நடப்பேனாகில் நான் யாரலும் எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாத பெரும் பாபியாகிவிடுவேன் எனவே, என் மாதாவுக்குச் சத்திய வாக்கான உண்மையையே எழுதவேண்டும். அது போன்றே தங்களுக்கும் சத்திய வெளிப்பாடுகளை எழுத என்னை அனுமதிக்குமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்,

நான் படையில் சேரும்போதே என் தாயார் இப்படி ஆணையிட்டிருந்தாள்.

“மகனே, நீ எங்கே கடமையாற்றுகிறாயோ அங்கே யுள்ள உனது தலைமை அதிகாரியை உன் தாய் அல்லது தந்தையாக வரித்துக்கொண்டு அந்த அதிகாரிக்கு விஸ்வாசமாக நடந்துகொள்.”

அன்பான அதிபரே, இற்றைவரை அந்த ஆணைப்படி 1 தங்களுக்கு விஸ்வாசமாகவே நடந்து வந்தேன. இதை நம்புங்கள் அந்த விஸ்வாசத்திற்குத் துரோகம் இழைக்கக் கூடாது என்பதாலேயே, தங்கள் புதிய கட்டளையை நிறைவேற்ற முடியாதிருக்கிறேன். இதனை வெளிச்சமாக்கவே இந்த நிருபத்தை எழுதுகிறேன் –

அரசியல் களத்தில் நெடுங்கால அனுபவம் பெற்ற தாங்கள், அரச பீடத்தின் சகல சட்ட திட்ட நுட்பங்களை யும் வெகு நுணுக்கமாகக் கற்றுத் தேர்ந்த அறிஞர் என்பதனையும் அறிவேன், அரசியலில் மட்டுமல்ல. சட்டம், நிர்வாகம், கணிதம், கலை, இலக்கியம், விளையாட்டு, குத்துச்சண்டை, மகுடி வித்தை, மேடைப் பேச்சு, சித்திரம் வரைதல் ஆகிய சகல துறைகளிலும் தாங்கள் நிபுணத்துவம் கொண்டவர் என்பதனையும் அறிவேன். இத்தனைக்கும் மேலாகத் தாங்கள் ஓர் உண்மையான மத விஸ்வாசியாகவும் இனவாதியாகவும் திகழ்கிறீர்கள் என்பதும் வாஸ்தவமே. குறைந்த பட்சம் ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய அத்தனை ஆற்றல் களையும் கொண்டுள்ள தாங்கள் பௌத்த மத அனுஷ்டானத்திலும், சிங்கள இன முன்னேற்றத்திலும் விசேஷ அக்கறை காட்டி அவற்றை உயிரினும் மேலாக மதித்து நடந்து வருகிறீர்கள் என்பதும் உண்மையே. இதற்குமப்பால் புத்த பெருமானின் பஞ்ச சீலப் போதனை களை இம்மியும் பிசகாமல் அச்சொட்டாக அனுசரித்து வருகின்ற அவர் தம் சீடர்களைக் காட்டிலும் தாங்கள் அதி உன்னத புண்ணியசீலர் என்பதை நான் மட்டுமல்ல, இந்த நாடே அறியும்.

இவற்றைக்காட்டிலும் தங்கள் மட்டில் நாம் பெருமைப் படத்தக்க படுவதாகவுள்ள இன்னோர் முக்கிய அம்சம் என்னவென்றால், தாங்கள் ஓர் சிங்களவர். என்பதால் மட்டுமல்ல, சிங்கள இனத்தவரான தாங்கள் ஓர் உண்மையான பௌத்த சிங்களவர் என்பதாலுமாகும். இதனை இங்கு குறிப்பிடாமல் விடுவது என் மனச்சாட் சிக்கே விரோதமான செயல். ஒரு உண்மையை நான் குறிப்பிட்டேயாக வேண்டும். தங்களைப்போல நானும் ஒரு பௌத்த சிங்களவன் என்பதால் எனக்குள் ஒரு பெருமித உணர்வு உண்டு என்பதை மறைப்பதற்கில்லை, இன உணர்வைக் காட்டிலும் மதப்பற்று எத்தகைய சக்தி வாய்ந்தது என்பதை இந்த நாட்டின் வரலாற்றை துணுக்க மாக நோக்கும் ஒருவர் இலகுவாகப் புரிந்து கொள்வார். இதை நினைவு படுத்துவதற்காவே நானும் ‘பௌத்த சிங்கள வனாயிருப்பதில் பெருமி தமடையலாமென்று குறிப்பிட்டேனேயன்றி, பரிந்துணர்வு கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல.

நான் ஒரு ராணுவ அதிகாரி என்ற கோதாவில் யுத்த களத்தில் சமர் புரியும் போர்ப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றது போலவே, இந்த நாட்டுப்பிரஜை என்பதால் அரசியல் களத்தில் அதன் தத்துவ சிந்தாந்தங்களிலும் போதம் பெற்றவன் என்பதைத் தங்களுக்குத் தெரிப்பதில் தோஷம் இல்லை.

அரசியல் – என்றவுடன் – சிகப்புக் கொடி தங்கள் கண்ணில் பளிச்சிடும். இரத்தம் சிகப்பு, மனித குலம் ஒன்றே என்பதற்கு இது முத்திரை. பின்னே வரும் ஆபத்தை முன்னே காட்டிச் சகலருக்கும் வழிகாட்டும் ரட்சண்யன் அது. ஆனால், தாங்கள் இதற்கு மாறான கருத்தையேப் போதித்து வந்தீர்களென்பதையும் நான் அறிவேன்.

தாங்கள் கம்யூனிஸத்தின் பரம வைரி என்பதும், கிழக்காசியாவில் தாங்களும் ஒரு சிறந்த கம்யூனிஸ எதிர்ப்பாளன் என்பதும், இந்த வரிசையில் மக்கார்த்தியைக் கூடத் தங்களுடன் ஒப்பிடமுடியாது என்பதும் நான் அறிந்தே. ஆனால், நான் தங்கள் அரசியல் கருத்துக்குச் செவிமடுக்காமலே அரசியலை மேலும் என்னுள் புடம் போட்டுக் கொள்கிறேன். இதனால், என் பிறந்த மண்ணுக்கு தான் உரிமையுள்ள புதல்வனுமா யிருக்கிறேன் என்பதைத் தாங்கள் மனங் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

“மனிதனை மனிதனாக மதித்து நேசிக்கத்தெரியாதவன் மனிதனே அல்ல” என்பதையே அரசியலில் நான் முதன் முதல் கற்ற பாடம். கம்யூனிஸம் இதையே சொல்கிறது. மார்க்ஸ் எங்கல்ஸ் பிரகடனம் இதைத்தான் கூறுகிறது.

மனித குலத்துக்கு ஆகவேண்டிய சகல வாழ்க்கை வளங்களும் சிருஷ்டிகளும் இந்த வாசகத்துக்குள்ளே சூட்சுமமாக வியாபித்திருப்பதைக் காண்பீர்கள். ஓ… தாங்கள் ஓர் சிறந்த கம்யூனிஸ விரோதியல்லவா? என்ன செய்வது, அரசியல் என்றாலே அதைத்தான் எழுத வருகிறது.

சகல துறைகளிலும் மகா பராக்கிரமசாலியாகக்கீர்த்தி யுடைத்தான தாங்கள் இந்த நாட்டின் இரு ஆதிவாசி களான தமிழ்சிங்கள இனங்கள் மத்தியில் சிங்கள மகாசபை’ என்ற ஸ்தாபனத்தைத் தோற்றுவித்துப் பச்சை இனவாதத்தைத் தூண்டிவிட்டபோது, இதே உந்து தலால் தமிழ் காங்கிரஸ்’ என்ற போட்டி ஸ்தாபனம் தோன்றவும் தாங்கள் மூலகர்த்தாவாக இருந்தீர்களே, விபரீதமான இந்தப் பேதத்துக்கு அன்று ஏன் அப்படி அத்திவாரம் போட்டீர்கள் என்பது தான் எனக்கு இன்னும் புரியவில்லை,

அந்தச் சிங்கள மகாசபையே இன்று பௌத்த மகாசங்கமாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. இதனைப் பற்றிப் பின்பு இந்திருபம் விரிவுபடுத்திச் சொல்லும்.

இதன் தொடர்பாக மலையகத்தையே கலையகமாக்கி விட்ட இந்திய வம்சாவழித் தமிழ்த் தோட்டத் தொழிலா ளர்களின் பத்து லட்ச வாக்குரிமைகளைப் பறித்து அவர் களை ‘நாடற்ற பிரஜைகளாக்க டி. எஸ்.சேனநாயக்காவுக்கு உதவினீர்களே இது இந்த நாட்டின் வரலாறு காணாத அநியாயம் என்பதும், மனிதாபிமான நடவடிக் கையல்ல என்பதும் உண்மை – இதனை ஒரு விரல் சூப்பு கிற குழந்தைப் பிள்ளையும் புரிந்து கொள்ளும். அப்படி இருக்க, தாங்கள் இதன் தாற்பரியங்களையோ வஞ்சக வினைகளையோ உணர்ந்ததாகத் தெரியாமல் அபிநயிக்கிறீர்களே… இது வியப்புக்குரியதாகவே எனக்குப்படுகிறது.

அரசியலில் ‘ஆஜாட பூதித்தினம்’ என்ற ஒன்றுண்டு. இது மனிதர்களைப் பலவீனமாக்கியே பலவான்களைப் போலப் பாவனை காட்டுகின்ற ஒரு மகுடி. இந்த வித்தை தங்கள் போன்ற சத்வகுண போதகருக்கு வேண்டாத ஒன்று என்றே நான் கருதுகிறேன். –

புத்தஞ் சரணங் கச்சாமி, சங்கஞ் சரணங் கச்சாமி, தம்மஞ் சரணங் கச்சாமி’ என்ற பஞ்சசீலரான கௌதம் புத்த பெருமானின் முப்பெரும் தர்மத்துக்கே விரோத மான இந்தச் செயலை, பௌத்த சிங்கள வருக்கே கீர்த்தி வாய்ந்த கைங்கரியமாகத் தாங்கள் வியூகமாகக் காண் பித்ததன் நோக்கம், இதன் பால் தாங்களே அனை வராலும் வழிபட வேண்டியவர் என்ற தங்களின் ஒருவித வினோத ஆசையாக இருக்கலாம் என்றும் கருத இடமுண்டு.

தங்களால் அதிகார பீடம் கைப்பற்றப்பட்டதும் ஒரு கோடை மின்னல் போல் நாட்டில் நடந்த மாற்றங்களின் போது படைப்பிரிவுகளுக்குத் தங்களால் நியமிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியான எனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது என்றும், தங்களால் பிறப்பிக்கப் பட்ட கட்டளைக்கும் அந்த விவகாரங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லையே என்றும் தாங்கள் கருதுவீர்கள் என்று நினைக்கின்றேன்.

மகாகனம் பொருந்திய அதிபரே, தங்களைப் பொறுத்த வரை இது புதுரகமான விஷயம் தான். ஆனால், தங்கள் புதிய கட்டளைப் பிரகாரம், ஆதியோடந்தமான உண்மை வரலாற்றோடு இணைத்து பார்த்தே நான் தற் போது இயங்கவேண்டியவனாகி விட்டேன் என்பதைக் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே மொழியால் சிங்களவனான நான், குலத்தால் மனிதனாயிருப்பதால் இன்னொரு தமிழனான என் போன்ற மனிதனைப் பற்றியே பேசுகிறேன்.

‘மனிதனை மனிதனாக மதித்து, நேசிக்கத் தெரியாத வன் மனிதனேயல்ல.’ என்று நான் இதிற் குறிப்பிட்டதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். சிந்தையிற் கொள்வீர்களாக.

ஆனால், அதிபர் அவர்களே, தாங்களோ எமது நாட்டு மனிதர்களைச் ‘சிங்களவன்-தமிழன்’ என்று ‘பிரிவினை’ பண்ணிப் பேதப்படுத்தி, மனித நாகரிகத்திற்கே சவக்குழி தோண்டினீர்களே… இங்கே தான் தங்களால் பிறப்பிக்கப்பட்ட புதிய கட்டளைக்குச் சரியான அர்த்தம் தேடப்படுகிறது. ‘பிரிவினைவாதி’ யாகவிருந்த தாங்களே பிரிவினைவாதிகளைத் துவம்சம் செய்யும்படி கட்டளை பிறப்பித்திருக்கிறீர்களே, இப்படியொரு கட்டளை மனசாரப் பிறப்பிக்கப்படுகிறதென்றால் இந்தக் கட்டளைப் பிரகாரம் முதன் முதலாகத் தங்களையும் தங்கள் பரிவாரங்களையுமே துவம்சம் செய்ய வேண்டும் என்றாகிறதல்லவா? யோசித்துப் பாருங்கள்.

ஆயினும், அதிபர் அவர்களே, நான் என் மாதாவின் கருணை உள்ளத்தை நினைவு கூர்கிறேனாதலால் தங்களையும் இப்பொழுது என் போலவே நேசிக்கக் கற்றுக் கொண்டேன். எனவே, எவரையும் தவசம் செய்ய வேண்டுமென்ற அந்த எண்ணம் எனக்கு அடியோடு இனி எழாது என்பதனைத் தயவு செய்து உறுதியாக நம்புங்கள்.

உண்மை வரலாறு பதியப்பட வேண்டும் அது தன்னுணர்விலும் தன் நிலைப்பாட்டிலும் வரையறை செய்யப்பட்டதால் தான் இற்றைவரை போலியாகத் திரிபுபடுத்தப்பட்டது. இதுவும் சுத்த ஹம்பக் தான். முற்பகுதியில் குறிப்பிட்டிருக்கிறேன். தயவு செய்து அதை ஒரு தடவை கவனித்து விட்டு இதனைத் தொடருங்கள்.

தாங்களும் தங்களுக்கு முன் வந்தோரும். ‘ஐக்கிய தேசியக் கட்சி என்ற அரசியல் ஸ்தாபனம் ஒன்றை அமைத்து அந்தச் சுலோகத்துக் கூடாகச் சிங்களப் பேரின வாத நெருப்பைப் பௌத்த மதவாதத்தோடு மூட்டிய தன் விளைவாக, இந்நாட்டிலே தமிழரசுக் கட்சி’ என்ற மற்று மோர் சிற்றினவாதக் கழகம் ஒன்றைத் தோற்றுவித்தீர் கள் அல்லவா? அந்த மகிமையைத் தங்களிடமிருந்து தத்தெடுத்த லங்கா சுதந்திரக் கட்சி என்ற இனவாத பேரிகை தாங்களும் கண்மூடித்தனமாகப் பரப்பியதால் தானே, 1956 இல் நிராயுதபாணிகளான சத்தியாக்கிரகி களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தொண்டர்களோடு தங்கள் ஐ.தேக, தொண்டர் படைகளும் சேர்ந்து காலி முகத்திடலில் வேட்டையாடிற்று.

மனச்சாட்சியைத் தொட்டுப் பாருங்கள்.

பெரும் ஆயுதபாணியான பிரிட்டீஷ் சாம்ராஜ்யத் தையே முழு நிராயுதபாணியாக நின்று எதிர்த்துச் சத்தி யாக்கிரகப் போரில் குதித்த இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியைத் தயவு செய்து நினைவு கூர் வீர் களாக. காந்தி மகானின் சத்தியாகிரகத்தைப் பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் மிருகத்தனமாக அடக்கிப் பார்த்தது. கடைசியில் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரகமே அந்த வெள்ளை ஏகாதிபத்திய வெறியரை வென்றது. இந்த உண்மையை யாரால் மறுக்க முடியும்? இந்திய சுதந்திர வாடையே இலங்கைபையும் மீட்டது.

3

எங்கள் காலத்திலே இந்திய தேசத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்களையும் தயவு செய்து இதொடு நினைவு படுத்திக் கொள்வீர்களாக.

மகாத்மா காந்தி வழியில் சத்தியாக்கிரகம் செய்த அகிம்சைப் போராளிகளைத்தான் அன்று வெட்கம், மானம், ரோசம், வீரம் சகலத்தையுமே அடைவு வைத்து விட்டு அசல் கோழைகள் போல் எமது சிங்களப் பேரினவாதக் குண்டர் படைகள் காலிமுகத்திடலில் இம்சைப்படுத்தினார்கள். இத் துஷ்டத்தனத்திற்குத் தங்கள் ஐ. தே. க. துணையாயிற்று என்பதை நினைக்கும் போது …

அன்று தமிழ்ச் சத்தியாக்கிரகிகள் மீது சிங்களக் காடை யர்கள் புரிந்த அட்டூழியம். இன்று எப்படி விஷ்வரூபம் எடுத்துவிட்டது பார்த்தீர்ளா? இது யார் விதைத்த வினை?

1914ல் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உண்டான கலவரத்தின் போது தமிழர்கள் சிங்களவர்களுக்காக லண்டன்வரை சென்று வாதாடி இந்த நாட்டில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணிப்பாது காத்த வரலாறு ஒன்று இருக்கிறது. சிங்கள இனத்துக்காகப் பேரம்பேசி வெற்றி கண்ட பொன்னம்பலம் ராமநாதன் என்ற அந்தத் தமிழர் கொழும்புத்துறைமுகத்தில் இறங்கிய போது, அவரை எமது சிங்கள மக்கள் பல்லக்கில் ஏற்றிக் காவிக்கொண்டு கொழும்பு மாநகரை அடைந்த சம்பவத்தை இன்னமும் மறந்துவிட முடியாதல்லவா?

அந்த நன்றிக் கடனுக்காகவா இந்தத் தமிழ்ச் சத்தியாக்கிரகிகள் மீது, சிங்களக் குண்டர் படை ஏவிவிடப்பட்டது? சிங்களவர் ‘நன்றி மறந்த சாதி’ என்று உலகம் பழிக்க, அந்த ஒரு சம்பலமே போதும். ‘செய்நன்றி மறந்தோர்க்கு ஒரு போதும் உய்வில்லை’ என்று ஒரு தமிழ்ப்புலவர் பாடிய தன்படி பார்க்கின், எமது நாடு உய்வில்லாமல், போனதற்கு இந்தச் செய்நன்றி மறந்த செயலும் ஒருகாரணியாக இருக்குமா என்றே கருதுகிறேன். இல்லா விட்டால், இன்று எமது சிங்கள இனம் மாத்திரமல்ல. இந்த நாடே அந்நிய ஏகாதிபத்திய நாடுகளிடம் விலைபோகப்பட்டிருக்குமா?

ஆமாம் அதிபரே, எங்கள் நாட்டின் சுயாதீனம் பறந்து விட்டது. தாங்கள் மட்டுமல்ல, படைப்பிரிவு களில் உள்ள நாங்களும் அந்நிய ஏகாதிபத்திய நாடு களிடம் வாங்கிய பிச்சைப்பணத்திலிருந்து தான் எங்கள் வயிறுகளை நிரப்ப வேண்டியவர்களாகிவிட்டோம். இப்பொழுது இந்த நாட்டையே சுயாதீனம் இழந்த பிச்சைக்கார நாடாக்கிவிட்டிர்கள். இன்னொருவகையில் கூறுவதானால், எங்கள் நாடு அந்நிய ஏகாதிபத்திய நாடு களின் அகதியாகிவிட்டது. இதன் பிரதிபலிப்பாகத்தானே நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் அகதிகளாக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை இன்னும் நீடித்துக் கொண்டிகுக்குமாயின் ஏகாதிபத்தியங்களின் அகதியாகிவிட்ட எமது நாடு அவற்றின் நிரந்தர அடிமை யாகவே போய்விடலாம்.

ஓ… என்னை மன்னித்தருளுங்கள். நான் என்னவோ சொல்ல முனைந்து எதையோ எழுதிக்கொண்டிருக் கிறேன். சமுத்திரத்தில் குமுறும் நீரை ஒரு சிறு குழாய் மூலம் வெளியேற்றும் போது அது சீறி அடித்துப் பாயுமல்லவா? அது போன்ற என் நெஞ்சுள் குமுறும் அலைகளை இந்தச் சிறிய திருபம் மூலம் வெளிப்படுத்தும்போது ஏனைய சம்பவங்களும் இப்படியாகச் சீறிப்பாய்ந்து கொண்டோடி வருகின்றன. இவை என்னையும் மீறி வருவதால் அவற்றை நிரைப்படுத்திக் கொள்ளமுடியாது போகலாம் அதற்காக என்னால் எழுதாமல் இருக்க முடியாது. ஏனென்றால், நான் எதனையும் எனக்காக எழுதுவதில்லை. இந்த நாட்டு மக்களுக்காகவே எழுது கிறேன். இது என் கடமையாகத் தெரிகிறது. எனவே, முடிந்தவரை என் மனசைக் சுட்டுப்படுத்தி ஒழுங்கு முறையாக எழுதுகிறேன்.

மகிபரே,

இது வரை என் மனசில் தேக்கி வைத்திருக்கிற சகல விஷயங்களையும் ஒரு வரலாறு போல் வரிசையாகத் தயாரித்தளிக்கவே திட்டமிட்டிருந்தேன். ஆனால், * விமானங்கள் மூலம் ஆகாயத் தாக்குதல்களை மூர்க்க மாகத் தொடங்குமாறு’ள்ள தங்கள் புதிய அவசர கட்டளையைப் படித்தபின் அந்த எண்ணத்தை மாற்றி விட்டு, ஒவ்வோர் கால கட்டங்களிலும் அவ்வப்போது நிகழ்ந்த சம்பவங்களை விஞ்ஞான பூர்வ ஆதாரத்தோடு விளக்கி அனுப்பவே உத்தேசித்துள்ளேன்.

எந்தவோர் சம்பவங்களோ நிகழ்ச்சிகளோ ‘திடீர் திப்பென்று தாமாகத் தோன்றுவதில்லை. எதற்கும் ஒரு வரலாறும், அதோடிணைந்த விஞ்ஞான பூர்வச் செயற்பாடும் உண்டு. விஞ்ஞானத்தைப் ப புறக்கணித்த சரித்திரமோ சரித்திரத்தைப் புறக்கணித்த விஞ்ஞானமோ உண்மைச் சம்பவங்களாகா. எனவேதான், ஆதியோடந்த மான ஆய்வோடு இதனைத் தயாரித்துத் தங்கள் சமூகத்துக்கு அளிக்கச் சித்தங் கொண்டேன்.

இந்தப் பிரதேசங்களில் கடமையாற்றும் போது நிகழ்ந்த அத்தனை சம்பவங்களையும் தங்களினதும், தங்கள் மந்திரி பிரதானிகளதும், பாதுகாப்பு மந்திரி யினதும் ‘நிர்ப்பந்த ஆலோசனை’களின் பேரிலேயே முற்றாகத் திரித்த பொய் அறிக்கைகளை இத்தனை கால மாக அனுப்பி வந்தேன். என்னாலும், என் போன்ற ஏனைய ராணுவத் தளபதிகளாலும் இவ்வாறு திரித்து அனுப்பப்பட்ட அறிக்கைகளையே தாங்களும் தங்கள் பரிவாரங்களும் அரச பிரகடனங்களாகப் பத்திரிகைகளி லும், வானொலிகளிலும், ரூபவாகினியிலும் மக்களுக்குப் பிரசார முழக்கம் செய்தீர்கள். வெளிநாட்டு-உள் நாட்டுப் பத்திரிகை நிருபர்களுக்கும் உற்சாகத்தோடு பேட்டி அளித்தீர்கள். குறிப்பிட்ட கைங்கரியங்களை நான் செவ்வனே புரிகிறேனா என்பதைக் கண்காணிக்கத் தங்களால் இரகசியமாக நியமிக்கப்பட்ட சில ஒற்றர்கள் எனது முகாமில் எடுபிடி வேலையாளர்களாக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற சம்பவம் கூட இப்போது தான் தெரிய வருகிறது.

‘நான் மக்களால் ஜன நாயக பூர்வமாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட அதிபர்’ என்று அடிக்கடி வாய் ஓயாமல் மேடைகள் தோறும் முழக்கம் செய்கின்ற தாங்கள் சட்டத்தை மீறுகின்ற எந்தப் பிரஜைகளையாவது நீதி விசாரணை மூலம் தண்டிக்கப்படுவதையே ஜனநாயக நடவடிக்கையாகக் கொள்வீர்கள் என்று நம்பப்பட்டது. ஆனால், தங்கள் அரசுக்கு எதிராக இந்த நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் உரிமைப்போராட்டத்தில் குதித்த போது, தாங்கள் அவர்களைப் ‘பயங்கரவாதிகள் என்று தாக்கூசாமல் பகிரங்கமாகவே பிரகடனம் செய்தது மன்றி, நீதி விசாரணை ஏதும் இல்லாமல் சுட்டுக் கொல்லும்’ கட்டளையைப் பிறப்பித்தீர்களே…அந்தக் கட்டளைப் பிரகாரம் இந்த நாட்டு மக்களுக்குத் தங்கள் ஜனநாயக தர்மம் எப்படிப் பிரயோகிக்கப்படுகிறது என்பதைச் சாட்சி சொல்லக்கூட இன்று ஒருவரும் உயிரோடு இல்லை. சுதந்திரமாகவே சுட்டுக் கொல்லப்பட்டுப் போனார்கள்.

தேடுதல் வேட்டையில் – பிரயாணங்களில் – வதை முகாம்களில் இறந்துபோனார்கள்.

நிச்சயமாகச் சொல்கிறேன். இவர்களில் ஒருவனோ ஒருத்தியோதானும் பயங்கரவாதிகள் அல்லர். ஆனால், தாங்கள் கோடுகாட்டிய பட்டியலில் பச்சிளம் பாலகர்சளும், பச்சைக்கர்ப்பிணிகளும், தள்ளாடும் வயோதிகர்களும் பயங்கரவாதிகளே.

தங்களால் முடுக்கிவிடப்படுகின்ற பிரசார சாதனங் சளின் மதிநுட்பம் என்னவென்றால், தங்கள் அரச பீடத்தை விமர்சிக்கின்ற எதிர்க்கிற இயக்கங்கள் பிரஜை கள் சகல தரத்தினரும் ‘பயங்கரவாதிகள்’ என்று நாட்டு மக்கள் அனைவரையுமே நம்ப வைத்து அவர்களைக் கிலி கொள்ள வைத்தது தான். இந்தப் பயங்கர வாதி களைத் தொலைத்துக் கட்டுவதற்குத் தங்களைத் தவிர வேறு பராக்கிரமசாலி இங்கு எவரும் இல்லை’ என்று தங்கள் காலடியில் மக்களைத் தஞ்சம் கொள்ள வைக்க இந்த யுக்தி பயன்படுகின்றது என்று தாங்கள் போடும் தப்புக்கணக்கு அம்மணமாகவே தெரிகிறது. ‘இது பெரும் அபாண்டமான சுத்த அயோக்கியத்தனம்’ என்று தங்களுக்குத்துலாம்பரமாகத் தெரிந்த போதும் இதனையே தங்கள் மேலான அரசியற் ‘சாணக்கியம்’ என்று கருதுகிறீர்களே, இந்தச் சாணக்கியம் கடைசியல் நமக்குமட்டுமல்ல, தங்களுக்கே விபரீதமாக வந்து முடியலாம்.

தங்கள் பணிப்புரையின்பேரில் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டும் தேடுதல் வேட்டையில் எமது படைகள் இதுவரை எத்தனை ஆயிரம் அப்பாவி உயிர்களை அநியாயமாகப் பலி எடுத்தார்கள்…?

மகாகனம் பொருந்திய அதிபரே, இந்தப் படுகொலை களுக்கெல்லாம் தாங்களும் தங்கள் பரிவாரங்கள் மாத்திர மல்ல, எனது சந்ததியும் பாவவி மோசனத்திற்காக ஏதோ ஒரு வகையில் கட்டாயம் உத்தரித்தே தீரவேண்டும். ஆதலால், இதற்கெல்லாம் நான் இன்று தொடக்கம் முழுக்குப் போடத் தீர்மானித்து விட்டேன்.

வதை முகாம்களில் சித்திரவதை செய்வதற்குப் பெயர் போன இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை தங்களுக்கு நன்றி விஸ்வாசத்துடன் செயற்பட்டபோது, அவருக்குத் தாங்கள் அளிக்கவிருந்த ஒரே ஒரு விருது “தேசிய வீரன்” என்ற அந்தஸ்து அல்ல, ஒரு சிறு பதவி உயர்வு மட்டுமே அந்தப் பதவி உயர்வு அவரைக் காப்பாற்றியதா…?

வட கீழ் மாகாணப் பிராந்தியங்களில் எமது ராணுவ நடவடிக்கைகளால் இதுவரை நிகழ்ந்த மோசமான பயங்கரச் சித்திரவதைகளெல்லாம் எத்தகைய மகிழ்ச்சி யோடும் பெருமிதத்தோடும் குதூகலித்துக்கொண்டு நடத்தி வைக்கப்பட்டன என்பதை இங்கே வகைக் கொன்றாக இடையிடையே நான் குறிப்பிடுவதன் நோக்கம், தங்கள் உத்தரவுகள் அனைத்தும் எப்படிப்பட்ட தாற்பரியங்களைக்கொண்டிருந்தன என்பதைத் தங்களுக்கு மீண்டும் நினைவூட்டுவதற்காகத்தான்,

மலை விழுங்கிகளான பூதங்களுக்கு அள்ளிப்போடும் உணவுபோல் இந்தப் படைப் பிரிவுகளுக்கு ஒவ்வோர் தினமும் வழங்கவேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு தாங்கள் ஆயுதங்களுக்கும் ராணுவச் செலவுக்கும் பல ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து பிச்சை வாங்கிப் பராமரித்துக் கொள்கிறீர்கள் என்பது வாஸ்தவம் தான். உண்டகளை தீர உலா வரும் நமக்கு ரோந்து சுற்றுவதெல் லாம் ஒரு பொழுதுபோக்கான களியாட்டமாகவே கழியும். அப்படி ஒரு பொழுது போக்கையே எங்கள் வழக்கமான கடமையாகக் கொண்டிருக்கிறோம்.

அப்படி ஒரு மாலைப்பொழுது, பூமியை இருள் மண்டிக்கொண்டிருக்கிற நேரம்.

பதினாறு ‘றக்’ வாகனங்கள் சகிதம் மூன்று ‘ஜீப்பு களில் குருநகர் முகாமிலிருந்து எங்களின் ஒரு யூனிட் படைப் பிரிவின் பவனி ஆரம்பமாகியது. கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்துக்குள்ளாகவே மானிப்பாய், தாவடி, ஆணைக்கோட்டை, கொக்குவில், சுதுமலை ஆகிய ஐந்து கிராமங்களையும் சுற்றிவளைத்துச் சிக்காராக முற்றுகை யிட்டுக்கொண்டோம், வாகனங்களை விட்டு இறங்கிய எமது படையினரின் கோடை இடிபோல் முழங்கிய துப்பாகி வேட்டுக்கள் முழுக்கிராமங்களையே உலுப்பி விட்டன. மனிதர்கள் பீதியில் ஆழ்ந்து போய் விட்டனர், ஜனங்களை ஊசாடவிடாமல் அப்படியே ஸ்தம்பிக்க வைத்துவிட்டன எனக்கருதக் கூடியளவு அந்த அதிர் வேட்டுக்கள் அமைந்திருந்தன.

இந்த அமைதியினூடே இருந்தாற்போல் பற்றை பறுகுகளிற் பதுங்கியிருந்த நாய்கள் அம் மாறு போட்டு குரைக்கின்ற சத்தமும், மாடு ஆடுகள் முனகி அழும் கதறல் களும் காதில் விழுந்தன.

அவ்வளவுதான். வீதிகளிலும், சிறுசிறு குச்சொழுங்கை களிலும், முற்றத்து மைதானங்களிலும் எமது ராணுவப் படைகளின் நடமாட்டங்களைத் தவிர வேறு எந்த அசுமாற்றமும் தெரியவில்லை.

சுமார் மூன்று மணி நேரத்துக்குள் எங்கள் தேடுதல் வேட்டை முடிந்து விட்டது.

இந்த வேட்டையின் போது மொத்தம் முற்நூற்றி யிருபத் தெட்டு வாலிபர்களைக் கைது செய்து பதினாறு பறக் குகளில் அடைத்தும் முடியாமற் போகவே, மிகுதிப் பேரை ஜீப்’புகளில் போட்டு முகாமுக்குக் கொண்டு வந்தோம். ஆனைக்கோட்டையில் மட்டும் தொண்ணூற்றெட்டு வாலிபர்களைக் கைது செய்தோம். இத்தனைக்கும் நாங்கள் கைது செய்த வாலிபனிடத்திலாவது எந்தவோர் தடயமும் இருக்கவில்லை. ‘ஒரு கணிப்பீட்டில் சகல வாலிபர்களையும், முடிந்தால் யுவதிகளையும் கைது செய்யவேண்டும்’ என்ற தங்கள் பணிப்பின் பேரில் இதெல்லாம் கனகச்சிதமாக நிறைவேற்றப்பட்டது.

இதில் பதின்மூன்று யுவதிகள் அடங்குவர்.

அன்று இரவே விசாரணை ஆரம்பமாகியது. எமது பொலிஸ் ராணுவ அகராதியின்படி ‘விசாரணை’ என்றால் நாங்கள் நினைப்பதைக் கைதிகளிடமிருந்து வர வழைப்பதே தவிர வேறு ஒன்றுமில்லை. அதாவது, கைது செய்யப்பட்டவன் சொல்கின்ற உண்மைகள் அனைத்தும் நாங்கள் எண்ணுவதுபோல் அமைந்திருக்காவிடில் அசந்து விடமாட்டோம். எப்படியும் நாங்கள் எதிர் பார்க்கிற சம்பவங்களை அவன் வாயால் உண்மை போல் கக்க வைப்பது தான் எங்கள் கடமை. இது தான் உள் விஷயம். இந்த விவகாரத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவன் எவனாவது பொலிஸிலோ ராணுவத்திலோ கடமை புரியத்தகுதியற்றவன் என்பதால், எமது தகுதியையும் திறமையையும் உரியவர்களுக்கு வெளிக்காட்டும் பொருட்டும் இப்படியாக நடந்தேயாக வேண்டும், இப்படி நடந்துகொள்ளும்போது சில உத்திமுறைகளைக் கையாள்வோம். அப்படிக் கையாண்டும் அவன் அந்த உண்மையைக் கக்காவிடில் நாம் சோர்ந்து விடுவதில்லை. சலித்துக்கொள்வதுமில்லை. அவன் வாயால் அந்த உண்மைக்குப் பதிலாக இரத்தம் கக்கச் செய்து விடுவோம். அதுவே அவன் கூறும் ‘ரத்த சாட்சி’யாக எடுத்துக் கொள்வோம். எதிரிகள் மட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்’ என்று எமது ராணுவ-பொலிஸ் பயிற்சிக்கூடங் களில் போதிக்கப்படும் முதல் பாடம் இந்த வகையில் தானே அமைந்திருக்கிறது?

அப்படித்தான் இந்த விசாரணை வழக்கம்போல் ஆரம்பமாகியது.

இத்தனை கைதிகளையும் விசாரணை செய்யும் பொறுப்பை ஒரு ‘சார்ஜண்ட்’ – உட்பட இரண்டு ‘சோல்ஜர்’ களிடம் ஒப்படைத்தேன். ஒரு லெப்டினன் இரண்டு சார் ஜண்ட் மேஜர்’ முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.

அதனை அப்படியே தங்கள் மேலான கவனத்துக்கு அச்சொட்டாகத் தருகிறேன்.

4

வாட்டசாட்டமான ஒரு வாலிபன். இவன் கொஞ்சம் திமிர் பிடித்தவன் போல் காணப்பட்டான். கீற்று மீசையும் வாளிப்பான கன்னக்கிறுதாவும் விட்டிருந் தான். கட்டி வைத்து அடித்தாலும் இறுங்காத உடற் கட்டு. கிட்டத்தட்ட இவன் மாதிரியான பதின்மூன்று வாலிபர்களை நிரையாக நிறுத்தி வைத்து அந்தரங்க விசாரணை தொடங்கியது. லெப்டினன் உசாராகக் கனைத்துக்கொண்டு எழுந்து சுற்றிவர ஒரு நோட்டம் விட்டு நிலை குத்தி நின்றார்.

எவனாவது உண்மை சொல்லாவிட்டால் உயிரோடு தப்ப முடியாது பயங்கரவாத இயக்கங்களோடு தொடர் புண்டா ?’ என்று கேட்டால், இதுவரை எந்தப் பயலாவது ஒழுங்காக உண்மை சொன்னதே கிடையாது. இல்லை, எனக்கு ஒன்றுமே தெரியாது’ என்று ஒரு வார்த்தையை ஒரு சுலோகமாகச் சொல்லி மழுப்புவதே வழக்கமாகி விட்டது இதனால் எங்கள் பாடு மட்டுமல்ல, உங்கள் பாடும் பெருந் திண்டாட்டமாகி விடுகிறது. ஆனால் ஒரு விஷயம் ஒரு உண்மையை மறைக்க ஓராயிரம் பொய் சொன்னாலும் அந்த உண்மை பொய்யாகி விடாது’ என்ற உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆகையால், உண்மையைத் தவிர வேறு எதைக் கூறி னாலும் தப்பமுடியாது என்பதை உணர்ந்து ஒவ்வொருவ ராக முன்னே வந்து பதில் சொன்னால் போதும்..”

இந்த விதமாக ஒரு பீடிகையோடு லெப்டினன் வலிபர்களை வரிசையாக முறுவலித்துப் பார்த்தார்.

ஒன்று-இரண்டு-மூன்று நிமிஷங்கள்.

‘தண்ணியும் மூன்று பிழை பொறுக்கும்’ என்பார்கள் பொறுத்துப் பார்த்தாயிற்று. காரியம் கைகூடவில்லை. ஒரு பயலாவது வாய் திறக்கவில்லை.

இதைச் சகியாமல் முறைத்துக் கொண்டு நெருங்கிய சார்ஜன்ட மேஜர், லெப்டினன் சொன்ன விஷயங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு வார்த்தையை வெகு அநாயாச மாகத் தூக்கிப் போட்டார்.

“தமிழ்ப் பொலிஸ் கான்ஸ்டபிள்களை இனத்து ரோகிகள்’ ஒன்று ரகசியமாகச் சுட்டுக் கொன்று விட்டு, ஒன்றும் புரியாத அப்பாவி போல் தலைமறைவாக உலா வித்திரிந்த இன்பம் என்பவன், யாழ்ப்பாணப் பண்ணைக் கடல் பாலத்தடியில் அடையாளம் தெரியாதபடி கண்ட துண்டமாக வெட்டிப் பகிரங்கமாகக் கொலை செய்யப் பட்ட சம்பவம், உங்களில் எவனுக்காவது தெரியுமா?”

இந்தக் கேள்வியில் கிலிகொண்ட வாலிபர்கள் தாங்களே அந்தக் கொலையைப் புரிந்தவர்கள் என்ற தோரணையில் அசந்தே போய்விட்டார்கள். அவர்களின் மூளைகள் உண்மையில் கூழ் முட்டை போல் கலங்கியிருக்க வேண்டும். ஒவ்வொருத் தரும் ‘தறுதறுத்து முழிசலானார் கள். தேகங்கள் குல்லிட்டுக்கொண்டன. ஒவ்வொருத்தன் உடம்பும் வெடவெட’ வென்று அடித்துக் கொண்டது. நனைந்த கோழிக்குஞ்சுகள் போல் தேகங்களில் நடுக்கம்.

‘தெரியும்’ என்றால் சங்கடம், தெரியாது’ என்றால் வில்லங்கம், மௌனமாயிருந்தாலும் பொல்லாப்பு,

என்ன – எதை – எப்படிச் சொல்வது? பொறிக்குள் அகப்பட்ட எலிகள் நிலை.

குழப்பிய குட்டைக்குள் மீன் பிடிக்கிற தோரணையில் சார்ஜன்ட் ஒருவர் அடுத்தகணை தொடுத்தார்.

“இப்படித்தான் பெரும் பயங்கரவாதியான சிவ குமாரன் என்ற தறுதலைப்பயலும், எங்கள் தேடுதல் வேட்டையின் போது கூட்டாளிகளோடு வயல் வெளியில் அகப்பட்டான் அப்போது அவன் உங்களைப் போலவே எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் எதுவும் தெரியாத அப்பாவி போல் மௌனமாக இருந்தான். அவன் மனச் சாட்சி வேலை செய்யாதிருக்க வேண்டும். முகாமுக்குக் கொண்டு வர முதலே ‘சையனட்’டை – வாய்க்குள் திணித்துத் தற்கொலை செய்து கொண்டான். அப்படி அவன் செய்யாதிருந்தால் எங்கள் பேயினட்’ தான் அவன் தொண்டைக்குள் செலுத்தப்பட்டிருக்கும். கடைசியில் அவன் சடலம் எரித்துத் தீய்க்கப்பட்ட சங்கதி தெரிந் திருக்கும் அல்லவா?”

இளைஞர்கள் என்புகள் நடுங்கின. அவர்கள் முகங்கள் குறாலி விட்டன.

சார்ஜண்ட் அடுத்த கணை தொடுத்தார்.

“சிவகுமாரன் பயங்கரவாதியல்ல, மாபெரும் தேச பக்தன். சிங்கள இராணுவ ரவுடிகள் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று கண்டதும், ‘கோழைகளால் மரணிக்கக் கூடாது எனத், தன்னைத்தானே அழித்துக் கொண்ட கர்ம வீரன்’ என்றே உங்கள் போன்றவர்களால் சிவகுமாரன் நாமம் அர்ச்சிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?”

இந்தக் கேள்வியோடு அவர்கள் உயிருள்ள வெறும் சடலங்கள் போல் முகங்களைத் தொங்கப்போட்டுக் கொண்டு தேம்பி அழுகிற பாவனையில் நின்ற அவர்களின் பெற்ற தாய்மார்கள் பார்த்திருப்பின், அந்தத் தாய்கள் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கதறிக் கொண்டே செத்துப் போவார்கள்.

ஒருவனாவது வாய் திறக்கிறதாய் இல்லை. விறும் தடியன்களாட்டம் நிற்கிறார்கள். நடுச்சாமமாகி விட்டது. சுமார் மூன்று மணி நேரமாக விசாரித்தும் எந்தத் துப்பும் கிடைப்பதாயில்லை.

இந்தக் கட்டத்தில் விசாரணை நிறுத்தப்பட்டு விசயம் என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட போது நான் சொன்னேன்:

“எங்களுக்குத் தேவையான விபரங்கள் கிடைக்கிற வரை இதே தோரணையில்– இதே உத்தியில் இறுக்க மான விசாரிப்பு நடக்கட்டும். கைகூடாத பட்சத்தில் அடுத்த கட்டத்தைப் பிரயோகிக்கலாம்.”

மகுடி வித்தைக்காரன் போல் லெப்டினன் நமட்டிச் சிரித்துக் கொண்டு சார்ஜன்ட் மேஜர்களுக்கு, கண் ஜாடை காட்டினார்.

எதிர் அறைக்கதவு திறக்கப்பட்டது.

நான் ‘சிகரட்’ ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு சற்றுத்தள்ளி அமர்ந்து கவனித்தேன்,

சார்ஜன்ட் உரத்துக் கத்தினார்:

“அடோ பண்டிப்பயல்களே, உள்ளே நடவுங்கோடா”

உள்ளே காலடி வைக்கிறபோது ரத்த வெடில் மூக்குத் துவாரங்களைத் துளைத்தது. தலை சுற்றி மயக்கம் வருவது போல் சுவர் ஏகலும் சிலும்பல் கோடுகளாய் கிடக்கின்றன. வதை படலத்தின் சின்னங்கள் இரத்தச் சுவடுகளான விறுத்தத்தை இவர்கள் ஏறெடுத்துப் பார்த்த போதே இவர்களிடம் சூல் கொண்ட ஏக்கம் இவர்கள் முகங்களில் தேங்கியதை அவதானிக்க முடிந்தது. எவன் உடம்பிலும் நடக்க வலுவில்லை. சித்தப்பிரமை இவர் களை ஆட்கொண்டு விட்டதாகத் தெரிகிறது. ஒருவனை ஒருவன் தேம்பி அழுகிறதான முகபாவம். மன்னைகள் வீங்கிவிட்டன. இத்தனைக்கும் எங்களில் ஒரு இராணுவ வீரனாவது அவர்கள் மேனிகளில் கை வைத்ததில்லை.

அறையை மருவிய சதுப்பு ஓடைப்பக்கம் இவர்கள் கவனம் செலுத்தப்பட்டது.

அந்த ஓடைகளுக்குள் இருந்து தான் பிணவாடையின் நெடிலடிக்கும்.

எங்கள் இராணுவ வீரர்களின் தொடர்ச்சியான சித்திரவதையின் போது இறந்து போகிற சடலங்களை எரிக்கும் வரை, சதுப்பான இந்த ஒடிந்துபோன ஓடை களுக்குள் தான் ஒதுக்கி வைப்பேம். அந்தர பவனியில் வேகமாகச் செயற்படுகின்ற போது விடுபட்டுப் போகிற சடலங்கள் இற்று நாறி ஈற்றில் எலும்புக் கூடுகளாகவே மிஞ்சி விடுவதுமுண்டு அந்த எலும்புக் கூடுகளையும் நாம் விட்டு வைப்பதில்லை. தேவைப்படும் போது விசாரணைகளில் பக்குவமாகக் கையாள்வோம்.

அறைக்கூடாக நடைபவனி தொடங்கியது. இனி எங்கள் விசாரணையை நாங்கள் நினைத்தபடி சுலபமாக நடத்த இந்த இரத்தப் பீறல்கள்-சித்திரவதைக் கூடங்கள் – எலும்புக்கூடுகள் – என்கிற இந்த திகிற் காட்சிகள் போதும்.

இந்தப் பயங்கரக் கோலங்களைக் கண்ட மாத்திரத் தில் இவர்கள் சித்தங்கலங்கிப் பித்தர்களாகி பிதற்றுவார்கள் என்று வள்ளீசாகத் தெரிந்தும். ஒன்றையும் காட்டிக் கொள்ளாத முகபாவனையில் மிகச்சாதரணமாகவே சார்ஜன்ட் மேஜர் இவர்களைப் பார்த்து அனுதாப்படு பவர் போல் பாசாங்காகக் கூறுகின்றார்.

“நன்றாகக் கவனியுங்கள். இப்பொழுது உங்கள் உயிர் உங்களில் அல்ல; நீங்கள் சொல்லுகிற உண்மையில் தான் தங்கியிருக்கிறது. எப்போதும் உண்மைக்கு அழி வில்லை. அதற்குத்தான் உண்மையான விலையுண்டு. ஒரு மனிதன் இறக்கும் வரை அவன் உயிர் எப்படி விலை மதிக்க முடியாததோ அப்படித்தான் அவன் கூறும் உண்மையும் மகத்தானது. மகாத்மா காந்தி எப்போதும் உண்மையைக் கடைப்பிடித்தபடியால் தான் உலக சாம்ராஜ்யத் தலைவரான ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் கூட எழுந்து நின்று மரியாதை செய்தார். எங்கள் மரியாதையை நீங்கள் பெறவேண்டுமா னால் உண்மையைக் கூறவேண்டும். அவ்வளவுதான். அதைவிட மவுனமாயிருந்து அப்பாவியாகத் தப்பிவிட லாம்’ என்று நினைத்தவர்கள் அனேகமாக உயிரோடு தப்பியதே இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு நடந்த கதி எப்படியாயிற்று என்பதை இந்த இடங்கள் உங்களுக்குப் புலப்படுத்தியிருக்கும். ஆகையால், சுணங்காமல் ஒழுங் காக மறுமொழி சொல்ல வேண்டும்”

எளிமையான வார் த்தைகளில் நிதானமாக எடுத்துக் கூறியும் சார்ஜான்ட் மேஜர் முயற்சி பலித்ததாக இல்லை, தோற்றுப் போன வெக்காளத்தில் அவர் முகம் சிவந்து விட்டது. பக்கத்தில் நின்ற லெப்டினன் காதோடு ஏதோ முறையிட்டார். நாடகக் கொட்டகையில் சீன் விழுந்தது போலாயிற்று:

கண்மின்னி – விழிப்பதற்குள் ஒன்றையொன்று பிணைந்த இரண்டு பெரிய மலைப்பாம்புகள் இவர்கள் எதிரே எப்படித் தோன்றின என்று இவர்களால் யூகிக்கவே முடியவில்லை

அந்த அறையைச் சுட்டிக்காட்டி லெப்டினன் சொன்னார்:

“83 ஜூலை 23ம் திகதி பயங்கரவாதிகள் தின்ன வேலிச் சந்தியில் கண்ணிவெடி வைத்து 13 இராணுவவீரர்களை ஒரு நொடியில் படுகொலை செய்த போது நீங்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கும்மாளம் அடித்திருப்பீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு அந்தப் பயங்கரவாதிகள் யார், எந்த ஊர் எங்கே மறைந்திருக்கின்றார்கள், அவர்கள் காம்புகள் எங்கெங்கே இருக்கின்றன யாவும் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது நீங்கள் அடைந்த குதூகலமோ, பயங்கரவாதிகள் மறைவிடங் களைத் தெரிந்து வைத்திருப்பதோ தண்டனைக்குரிய குற்றமாசுத் கருத முடியாது. அது இயல்பான தன்மைகள். ஆனால், இவற்றையெல்லாம் வெளியிடாமல் மறைத்து வைத்திருப்பதுதான் குற்றம். இப்படியான குற்றம் புரிகிற வர்களுக்குச் சட்டப்படி என்ன தண்டனை வழங்கப்படும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள், இந்தக் குற்றவாளி களுக்கு ஆகக் குறைந்தது 20 வருஷ காலச் சிறைத் தண்டனை அல்லது தூக்குத்தண்டனையும் கிடைக்கலாம். ஆனால், நீங்களோ, நிரபராதிகள். அந்தத் தண்டனை களிலிருந்து உங்களைக் காப்பாற்றவே உங்களிடம் உண் மைகளைக் கூறுங்கள்’ என்று கேட்கிறோம். இனியும் மவுனம் சாதித்தீர்களானால் அந்த மவுனத்தைக் கலைக்க நாங்கள் முனைவதற்குள் இதோ இந்த மலைப்பாம்புகள் உங்கள் மவுனத்தைக் கலைத்து விட நேரிடும் மரணத்தை விட விஷம் எவ்வளவு கொடியது என்பதைப் புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்….”

இந்தக் கட்டத்தில் வரிசையில் நின்ற ஒரு தடித்த வாலிபன் ‘பொத்தென்று’ கீழே விழுந்தான். அவன் கண்கள் மேலே செருகி விட்டன. மூக்கு நுனியில் கை வைத்துப் பார்த்த போது மூச்சு இழுபட்டுக் கொண்டிருந்தது, மயக்கம் தெளியவிய்லை. முகத்தில் தேக்கிய வியர்வை நெய்யாக வழிந்து கொண்டிருந்தது.

கிருதா மீசை வைத்த இன்னொரு வாலிபன். இவன் தான் கைது செய்யப்பட்டவர்களில் சற்று வாட்ட சாட்டமாக இருந்தான். திரண்ட தோற் புயங்களிலிருந்து இவன் கராட்டிக்காரனாக இருக்க வேண்டும். இவன் இறக்கப் போகும் தருவாயில் கண்களை உருட்டுகிற ஜடம் போல் பரிதாபமாக மிரண்டு பார்த்துக் கைகளைப் பிணைந்து கொண்டு, ஒண்டுக்கு வருகுது என்று திமிறிக் கூறினான். நன்றாகப் பயந்து போனான்,

உடற்கூறுகளை விஞ்ஞான முறைப்படி கற்றவர்களுக்கு இதன் தார்ப்பரியம் புரியக் கூடியதே. குளிர் உடம்பைத் தாக்கித் தாவும் போது மூத்திரப்பை சுரந்து சிறுநீர் கழிவதும், பயபீதி தாக்கும் போது குடலைக் கலக்கி கொண்டு மலம் நுளுந்துவதும் இயல்பான அவஸ்தைகள். இவன் இந்த அவஸ்தைக்கு ஆளாகி உடம்பு திணறுவதைப் புரிந்து கொண்ட லெப்டினன் சிரித்துக் கொண்டு, ஒரு பால் ‘டின்’னை எடுத்துக் கொடுத்து, “இதிலே மொண்டு, அடுத்தவனிடம் கொடு. அவன் அதைக் குடிக்கட்டும்” என்றார்.

5

இந்தக் கிருத்தியம் வெகு நுட்பமாகக் கையாளப்பட்டது.

இதன் பின் நிகழ்ந்த சம்பவங்கள் என் கவனத்திற்கு, மறுநாள் கொண்டு வரப்பட்டது.

“மலைப் பாம்புகளின் விஷப்பற்ககளை நாம் எப்படிப் பிடுங்கி வைத்திருக்கிறோமோ அது போலவே இந்த வாலிபர்களின் வாக்குமூலங்களையும் நாம் விரும்பியபடி எடுத்துக்கொண்டோம்” என்று லெப்டினன் என்னிடம் கூறினார்.

ஆனால், ஒரு அபத்தம். இந்தப் பேர் வழிகளில் ஏழு நபர்கள் குற்றுயிராக்கப்பட்டனர். மூன்றாம் நாள் ஏழு பேரும் இறந்தே போனார்கள். இறந்து போன சடலங்களை எரித்துக் கடலுக்குள் அல்லது காட்டுப் பற்றைக்குள் போட்டு விடுவதே வழக்கம், அன்று இதற்கு அவகாசம் இருக்கவில்லை. ஆதலால், இந்தச் சடலங்களைப் பெற்றோல் ஊற்றி எரித்து உருக்குலைத்துச் சாம்பல் மேட்டிலேயே விட்டுவிடுவோம்.

அந்த ஏழு இளைஞர்களும் எங்களால் விடுதலை செய்யப்பட்டார்கள் என்று மறுநாள் அவ்வட்டார அரச அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்ததோடு அவர்கள், பற்றிய அன்றைய விசாரணையை முடித்துக்கொண்டோம்.

அவர்கள் விவகாரம் அதோடு சரி.

மகானம் பொருந்திய அதிபரே,

இற்றை நாள் வரை இது போன்ற கணக்கற்ற சம்பவங்கள் இதனிலும் மோசமாக – அன்றாடம் நிகழ்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட விசாரணைகளின் அறிக்கைகளை அவ்வப்போது தங்கள் சமூகத்திற்குச் சமர்ப்பித்திருந்தேனல்லவா? அவற்றில் ஒன்றுகூட நேர்மையாக – உண்மையாக – சத்தியவாக்காக – நீதியாகப் பெறப்பட்டவையல்ல என்பதை, நாம் கையாண்ட உத்திமுறைப்படி தாங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். போடும் போது ‘நெருப்பில்லாமல் புகை மூளாது’ என்பது எவ்வளவு உண்மையோ, அதுபோன்றே புகை மூள்வதற்காகவே நெருப்பை மூட்டுவதும் அதைவிட உண்மை எங்கள் உண்மை இரண்டாவது வகையைச் சேர்ந்தது. ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி’ கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்கள் நாட்டின் கதையும் அப்படித் தான். எங்கள் அறிக்கைகள் தான் உண்மையே தவிர, அவற்றில் பொதிந்துள்ள சம்பவங்கள் அனைத்தும் புனையப்பட்டவையே. மதி யூ கியான தாங்கள் இதனைப் புரிந்து கொள்வீர்கள்.

இதற்குச் சான்றாக மேலும் பல முக்கிய சம்பவங் களைக் குறிப்பிடலாம். அதற்குமுன் இந்த நாட்டின் உண்மையான அரசியல் சமூக பொருளாதார வரலாற் றினை ஒரு தடவை நேர்மையாக அலசித் தங்கள் கவனத்துக்குக் காண்டு வந்தபின் தற்போதுள்ள பயங்கரவாத நடவடிக்கைளின்போது எங்கள் விசாரணை களையும் நாங்கள் கடமையாற்றிய முறைகளையும் விவரிக்கலாமெனக் கருதுகிறேன்.

அன்புள்ள அதிபரே,

எங்கள் நாட்டு அரசியல் வரலாறு முதலாளித்துவத் தின் நலன் பேணப் படுவதற்காகத் திரித்து எழுதப்பட்டி ருப்பதனை நீங்களும் உணர்வீர்கள். இத்தனை அனர்த்தங் களுக்கும் இதுவும் முக்கியகாரணம் என்றே கருதுகின்றேன் டல்லாண்டுகாலமாக போத்துக்கீஸ், ஒல்லாந்து தேசங்களின் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து பிரிட்டிஷ் சக்ராதிபத்தி யத்தின் கலோனிய ஆதிக்கத்தில் சிக்குண்டு அடிமைப் பட்டிருந்த இலங்கையில், இன்று வரை அதன் அரச பீட அதிகாரம் சுரண்டும் கொடிய முதலாளித்துவ அமைப்புக் குள் சிக்குண்டு தவிக்கிறதேயன்றி, புதிய சோஷலிச சமுதாய அமைப்புக்கான நல்ல வாய்ப்பினைப் பெறாமலே இருந்து வருகின்றது. இந்த வாய்ப்பை எங்கள் நாட்டி லுள்ள மத இன குல ஜாதி வெறியர்கள் தடுத்து வந்தார் கள் என்பதற்கும், அதற்குத் தங்கள் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இடை விடாமல் எப்போதும் தூபம் இட்டு வந்தது என்பதற்கும் எத்தனையோ சான்றாதாரங்களடங்கிய சம்பவங்களுண்டு. அவற்றை இந்த நிருபத்தில் இடையிடையே சுட்டிக்காட்டச் சித்தங் கொண்டிருப்பதால் முக்கிய தரவுகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

இலங்கை ஒரு முதலாளித்துவ அமைப்பைக் கொண்டது’ என்று சொல்வதற்கும் இதன் மூல வளங்கள் இல்லை. உண்மையில் இலங்கை ஒரு தரகு முதலாளித்துவ வளர்ச்சியின் உற்பத்தி முறைகளைக் கூடக் கொண்டிருக்க வில்லை, சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளைப் போல் இதுவும் முதலாளித்துவத்தின் சநதைக்கூடாரமாகவே இன்றும் விளங்குகின்றது.

இத்தகைய தரகு முதலாளித்துவ அமைப்பைக் கொண்ட இலங்கையின் வரலாறு எஸ்.டபிள்யூ. ஆர்.டீ.பண்டார நாயக்கா ஸ்தாபித்த சுதந்திரக் கட்சியின் தலைமையில் – 1956லே ஒரு தேசிய ‘மறுமலர்ச்சி’யினூடாக, கம்யூனிஸ்டுகள்-சமசமாஜிஸ்டு கள் ஆகிய இடதுசாரிகள் அடங்கிய முற்போக்குச் சக்திகளின் துணையோடு திசை திருப்பப்பட்டு, சோஷலிஸ அமைப்புக்கு இட்டுச்செல்ல அத்திவாரமிடப்பட்டது. அந்த அத்திவாரங்கூடச் சரியான பரிணாமம் பெறுமுன்பே பிற்போக்கு இனவாத மதவாத-வகுப்புவாத நாசகாரர் களால் பின்னுக்குத் தள்ளப்பட்டு மீண்டும் 1877ல் ஏகாதிபத்திய முதலாளித்துவ அமைப்புக்குள் சிக்குண்டு தவிக்கிறது இந்த இடைப்பட்ட காலத்தில் முதலாளித்துவ வாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகிகள் பண்டார நாயக்கா அரசைக்கவிழ்த்துவிடக் கங்கணங் கட்டி 1958ல் இனக்கலவரத்தை நடத்தியதையும், அது வெற்றிபெற முடியாமற்போகவே பௌத்த வேஷமிட்டே பட்டப் பகலில் அவரைச் சுட்டுப் படுகொலை செய்த தையும் முழுஉலகமே அறியும் ‘பண்டாரநாயக்கா செல்வ நாயகம் ஒப்பந்தத்தை’ எதிர்த்துத்- தங்கள் தலைமையில் கண்டியாத்திரை நிகழ்ந்ததே, அதற்கும் இந்தக் கொலைக் கும் முடிச்சுப் போடுவது என் நோக்கமல்ல. அதனைத் தங்கள் மேலான மனச் சாட்சிக்கே விட்டுவிடுகிறேன். ஆனால், உண்மைகள் அழிவதில்லையல்லவா? ‘சத்தியம் வெல்லும்’ என்ற காந்திஜியின் உயிரைப் பலி எடுத்த வாதுராம் கோட்ஷேயினால் சத்தியம் தோற்றதும் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்பு கிறேன். உண்மையை அதன் சத்திய நெறியோடு நோக்குவதாயின் இலங்கை அரசாங்கங்களில் வரலாறு காணாத மிகப் பயங்கரமான ஏகாதிபத்திய முதலாளித் துவத்தின் கொடிய கரங்கள் பதிந்த நமது நாடு 1967 தாங்கள் தலைமை ஏற்றதிலிருந்து ரத்தக் களரி’யாக மாறிவிட்ட சோக வரலாற்றைக் கண்டதே, அதுவே இன்றைய கட்டமாகும் முதலாளித்துவ அமைப்பில் வழக்கம் போலவே தனி மனித வழிபாடும் வீர தீர சாகசங்களும், தன்னாதிக்க முறைமைகளும் தன்னிச் சாபூர்வக் கலை கலாச்சாரங்களும் விதந்து போற்றப் படுவது இயல்பேயாயினும், உண்மையில் அவை சரியான வரலாற்றினை நிர்ணயிக்கும் வர்க்க சக்தி’ களாயிருப்ப தில்லை. ‘வர்க்கப் போராட்டங்களின் நிகழ்வுகளே வரலாறாகின்றன, என்னும் மெஞ்ஞானத்தினூடாக உணர்ந்துகொள்ளும் ஒருவருக்கு இதன் தாற்பரியம் புரியக் கூடியதே. இதன் உண்மையான அர்த்தம், எந்தவோர் செயற்பாடோ அல்லது நிகழ்வோ எப்போதும் ‘வர்க்க அணி’ சார்ந்திருப்பதேயாகும். வர்க்கப் போராட்ட மில்லாமல் சமுதாய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. புதிய சமுதாயங்களோ சமுதாய மாற்றங்களோ எந்த நாட்டிலா வது வர்க்கப் போராட்டங்களினால் தோற்றம் பெற்றனவேயன்றி தனி மனிதர்களின் வீர தீர சாகஸங் களாலல்ல. பண்டாரநாயக்காவின் படுகொலையால் செயலற்றுப் போயிருந்த அவர் கட்சி பலப்படுத்தப் பட்டதே தவிர ஒரு சமுதாய மாற்றம் பரிணாமமாக நிகழவில்லை. தங்கள் தலைமையில் மீண்டும் இழுத்து விட்ட ரப்பர் விசைந்து வந்ததுபோல் பழைய ஏகாதிபத்தியக் கரங்கள் பலப்பட்டதேயன்றி, புதிய சமுதாய அமைப்புத் தோன்றவில்லை. இதன் உண்மை யான காரணம், இன்னும் இலங்கையில் ஒரு வர்க்கப் போராட்டம் நிகழவில்லை. அப்படி நிகழ்வதற்கு இன மத குலவாதிகள் விடவில்லை என்பதேயாகும்.

‘இரண்டு கமுகமரத்தில் அமிர் தலிங்கத்தின் கால் களைக் கட்டி அவர் உடலை இரண்டாகக் கிழிக்க வேண்டும்’ என்று தெவில்பர்ணாண்டோ கசக்கிய விஷமும் அத்தகையதே. ‘தமிழன் தோலை உரித்துச் செருப்புத்தைக்கவேண்டும்’ என்று வகுப்புவாதம் கக்கிய கே எம். பி. ராஜரத்தினாவும் உங்களுடன் இணைந் துள்ளதை அவதானிப்பீர்கள். ‘சிங்கள நாய்கள் – சிங்கள வரின் முதுகுத்தேலை உரித்துத் தமிழன் காலில் போட்டு நடக்க வேண்டும்’ என்று அமிர் தலிங்கம் மங்கயர்க்கரசி கக்கிய இனவாதமும் கே.எம்.பி. ராஜரத்தினா கக்கிய இனவாதத்திற்கும் உள்ள சுருதி ஒன்றே என்பதைத் தாங்களும் அறிவீர்கள். இனவாத சக்திகளை இனம் காட்டவும், தாங்கள் இவற்றுத்குத் துணை போன விறுத்தத்தைச் சுட்டவுமே உதாரணத்திற்கு அவற்றை நினைவு படுத்தினேன், தனிப்பட்ட ஒரு பனிதனை அழிப்பதாலோ அல்லது ஒரு இனத்தை தூசிப்பதாலோ புகழராம் பாடி உயர்த்திவிடுவதாலோ சமுதாய மாற்றங் கள் ஏற்படுவதில்லை என்பதையும், அவை அராஜகத் திற்கே வழிகோலும் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

புராதன ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்திலிருந்து அடிமைச் சமுதாயம் தோன்றியதும் அடிமைச் சமுதாயத் திலிருந்து – பிரபுத்துவ சமுதாயம் தோன்றியதும் பிரபுத்துவ சமுதாயத்திலிருந்து முதலாளித்துவ சமுதாயம் தோன்றியதும், முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து சோஷவிஸ சமுதாய அமைப்புத் தோன்றியதும் தனிப் பட்ட மனிதர்களின் அழிவிலோ, அழிப்பிலோ, புகழாரத் திலோ, வீர தீர சாகஸக் கோஷங்களாலோ அல்ல. இவ்வாறான ஒன்றுக்கொன்று முரண்பட்ட சமுதாய அமைப்புக்கள், அந்தந்தச் சமுதாய மாற்றத்துக்கான “வர்க்கப் போராட்டங்’களாலேயே நிர்ணயிக்கப்பட்டன. ஒவ்வொரு நாடுகளில் நிகழும் அரசியற் போராட்டங்களும் இத்தகையதே. ஏன், நமது கிராமங் களில் சாதாரண மக்களுக்குள் நிகழும் சிறு சிறு சச்சரவு களும் சண்டைகளும் இருகன்னையான முரண்பாடுகளாலேயே உண்டாகின்றன என்பதை அவதானித்திருப்பீர்கள்

சமுதாயம் மாற்றங்களுக்காக நிகழ்ந்த போராட்டங் கள் அனந்தம் இவற்றில் எந்த வர்க்கம் நீதியானது எந்த வர்க்கம் அநீதியானது என்று தாங்கள் அறிவீர்கள் என்பதையும் நான் உணர்வேன். தங்கள் மனச் சாட்சி எப்பவோ தங்கள் வசம் இல்லாமல் போய்விட்டதால் அந்த உண்ைையக்கூட மறைத்து வருகிறீர்கள். உலகில் இன்று முதலாளித்துவ சமுதயாயம், சோஷலிஸ சமுதாய அமைப்பு என இரண்டு முகாம்களின் போராட்ட மையத் தில் மனிதகுலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முதலாளித் துவ சமுதாய அமைப்புக்கு அமெரிக்க ஆளும் வர்க்க ஏகாதிபத்தியமும், சோஷலிஸ சமுதாய அமைப்புக்கு மூன்றாம் உலக நாடுகளும் தலைமை தாங்குகின்றன என்பதைத் தாங்கள் அறிந்ததே சோஷலிஸ சமுதாய அமைப்பு வளர்ச்சிக்கு இன்னும் நீண்டகாலப்போராட்டம் நடத்தவேண்டும் என்பது என் கருத்து, இதனை இன்னோர் கட்டத்தில் ஆதாரத்தோடு விவரிக்க எண்ணு கிறேன். இல்விரண்டு முரண்பட்ட அமைம்புகளில் எந்த வர்க்கத்தைச் சார்ந்த தலமை நீதியான தேர்மையானது என்பதை மனித குலம் அன்றாடம் தரிசித்துக் கொண்டி ருக்கிறது. உலகமெங்கும் முதலாளித்துவங்களால் சுரண்டப்படுகின்ற அடக்கப்படுகின்ற ஒடுக்கப்படுகின்ற, கொடுமைப் படுத்தப் படுகின்ற தாழ்த்தப்படுத்தப் படுகின்ற, உரிமை மறுக்கப்படுகின்ற மக்கள் அதே சுரண்டலிலிருந்து, அடக்குமுறையிலிருது, ஒடுக்கப் படுவதிலிருந்து, கொடுமைப்படுத்தலிலிருந்து, தாழ்த் தப்படுத்தவிலிருந்து, உரிமை மறுக்கப்படுதலிலிருந்து

தங்களை முற்றாக விடுவித்துக்கொள்ளவும் சுதந்திர ஜீவிகளாக-சமத்துவமாக வாழவும் சோஷலிஸ ச முதாய அமைப்பை நாடியே விரைகின்றார்கள்.

எந்தவொரு முனைப்போ போராட்டமோ அது அரசியலாயினும் வரலாறாயினும், கலை இலக்கியமாயி னும் ‘வர்க்கம் சார்ந்தே’ நிகழ்கின்றது என்ற உண்மையை அழுத்தவே இவற்றைக் குறிப்பிட்டேன். பிசகற்ற இந்தக் கண்ணோட்டத்தோடு எங்கள் நாட்டு வரலாறு எழுதப் பட்டிருந்தால் இந்த தாசங்கள் சம்பவித்திருக்கவே மாட்டா.

மக்களின் பாரம்பரியம், பண்பாடு, கலை இலக்கியம் கலசாரம், அரசியல், சமுதாயப் பிரச்சினை ஆகிய துறை களில் எந்தத் தகுதியோ திறமையே ஆளுமையோ சரியான கண்ணோட்டமோ இல்லாமல் ‘பணநாயகம்’ – என்ற வாய்விடாச் சாதியை மட்டும் வரித்துக்கொண்ட ஒருவர், முதலாளித்துவ சமுதாய அமைப்பில் மிகச் சுலபமாகவே சகல துறை சார்ந்த சாதனையாளராகவும், தகுதியுள்ள வராகவும், பலே கெட்டிக்காரராகவும் சகலகலாவல்லவன் போல் வேஷம் போடமுடியும். பாபா

இந்த வேஷங்களே இங்கே பொதுவாகப் பரவி யுள்ளன. இத்தகையே அருவருப்பான வேஷங்களுக்கு இந்த முதளாளித்துவ அமைப்பு ஒரு வரப்பிரசாதமான வாய்ப்பாகும். இதனால்தான் உலக மக்கள் பெரும்பாலும் புத்தி சுவாதீனமிழந்து அன்றாடம் தவித்துக்கொண்டிருக் கிறார்கள். விசனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தப் பணநாயக வாதிகளைச் சார்ந்து அண்டிப் பிழைப்போர் பலர் தம்மிற் தகுதி, திறமை, வீரம், ஆளுமை ஆகிய அம்சங்களைக்கொண்டிருந்தும் முதலாளித்துவங்களின் துதிபாடுவதன் மூலம் தங்களையே திறமையற்றவர்களாக்கியும் தகமையற்றவர்களாக்கியும் கொள்வது தான். இந்த நிலை சமுதாயத்தில் மட்டுமல்ல, கலை இலக்கிய அரசியற் களத்திலும் ஒரு சாபக்கேடாகவுள்ளது. இந்தச் சீரழிவுகளும் நாசங்களும் தொடர்ந்து கொண்டிருப்பதற்கும் இந்த முதலாளித்துவ அமைப்பே காரணமாகும்.

நவீன இயந்திர சாதனங்களற்ற அந்தக் காலத்தில் திரித்துக் கூறப்பட்ட வரலாறுகளைச் சாதனையாகக் கொண்டு பெருமிதமடைந்த நம்மவர்கள், நமது இலங்கைத் தீவில் 1958 ம் ஆண்டு தொடக்கம் கொழும்பி லிருந்து யாழ்ப்பாணம் வரை கப்பல் ஏறிய இனமாகி விட்ட சோகமான அசிங்க வரலாற்றை எப்படி அழைப் பது? இன்று தமது மக்கள் திக்குத் திசை தெரியாமல் கடலில் தத்தளிக்கும் மரக்கலங்கள் போல் நாடெங்கும் அகதிகளாக அலைகிறார்கள். இதனை நம்பிக்கையூட்டும் சோக முடிவாகவோ, அன்றேல் சோகமாகிவிட்ட நம்பிக் கையூட்டும் சாதனையாகவோ கொள்ளலாமா? சாதனை என்று சாது கருதப்படுகிறதோ அது குறித்த சாதனை சமு தாய முன்னேற்றத்துக்கு மாற்றத்துக்கு எவ்வாறு பங் களித்தது என்பதைப் பொறுத்தே அதற்குச் சரியான அர்த்தம் உண்டாகிறது ஆனால் தங்கள் சாதனை மக்களின் அழிவு – நாசங்களாகவிருக்கும்போது இதற்கு எப்படிச் சரியான அர்த்தம் கொடுக்க முடியும்?

மகாகனம் பொருந்திய அதிபரே.

இப்படி நான் தொடுக்கின்ற கேள்விக் கணைகளுக் காக என்னை மன்னியுங்கள். ஆனால், சக்தி வாய்ந்த திறமையான ஓர் உழைப்பாளியன் சாதனை சமுதாயத் தோடு பலவந்தமின்றி இயல்பாகவே சம்மந்தபடாவிடின் அவன் சாதனைக்கு எந்தவித அர்த்தமும் இல்லையல்லவா? அப்படித்தான் தங்கள் சாதனைகள் அனைத்தும் மக்கள் மட்டில் பலவந்தப்பட்டிருப்பதால் அவை இலவம் பஞ்சாகி விட்டன. தங்களால் நான் மட்டுமல்ல, நமது படை வீரர் களும் ஏன், முழுசனங்களும் இலவுக்காத்த கிளிகளாகி விட்டோம் என்பதை மிகத் துயரத்துடன் தங்கள் கவனத் திற்குக் கொண்டுவருவதில் சற்று மன நிம்மதியடைகிறேன்.

6

மகியரே, வரலாறுகளை எப்போதும் கற்பனைக்கு இடமில்லாமலும் மெருகூட்டாமலும் சித்தரிக்கவேண்டும். ஆனால் மகாவம்சம்’ என்ற பௌத்த சாஸன நுலை யும் இலங்கையில் பல வரலாற்றாசிரியர்கள் அதனைத் தழுவி எழுதிய நூல்களையும் பார்த்தால் அவை எப்படி யெல்லாம் திரித்து எழுதப்பட்டுள்ளன என்பதுபுலனாகும். இந்தப் பொய்மைகளே இலங்கை இனக்கலவரங்களுக்குத் துணைபோயிருக்கின்றன இலங்கை வரலாற்றாசிரியர்கள் மட்டுமல்ல சில இந்திய வரலாற்றாசிரியர்களும் இந்தப் புரட்டுக்களைச் செய்திருக்கிறார்கள். அதன் காரண மாகவே இந்தியாவிலும் வகுப்புவாத நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. இன்றைய இலங்கை அரசியல் வரலாற்றைக் குறிப்பிட்டு வந்த நூல்கள் பெரும்பாலும் அவ்வாறு விதந்தும் திரித்தும் புரட்டியுமே வெளி வந்துள்ளன இந்த நூல்களுக்குச் சற்று வித்தியாசமான குறிப்புகளைக் கொண்டு இலங்கையாளர் – குமாரி – ஜயவர் தனா வெளியிட்ட இலங்கையின் இனவர்க்க முரண்பாடுகள் என்ற வரலாற்று நூலில் பல நல்ல தரவு கள் தரப்பட்டபோதும். அவர் சரியான சமுதாயக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத் தவறிவிட்டார். இதனால், அதிற் சரியான கணிப்பீட்டைக் காணமுடியவில்லை. இருந்தும் அவர் நம்மைப்போல் ஓர் சிங்கள பௌத்தரா யிருந்தும் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் தமிழினம் சொல்லொணாக் கொடுமைகளுக்களாயிற்று என்ற அவர் தம் கருத்தோட்டம் ஒரு கன்னையாயினும் அது மனங் கொள்ளத்தக்கதே. ஆனால், அந்தப் பேரினவாதம் எந்த வர்க்கத்தின் ஆயுதம் என்பதையோ, எங்க வர்க்கம் அந்தப் பயங்கர ஆயுதத்தை எடுத்துப் பயன் படுத்தியது. பயன் படுத்துகிறது’ என்பதையோ அவர் சரியாகக் கணிக்கமுடியாமல் விட்டமை விசனிக்கத்தக்கதே. அவர் அப்படிப் புலப்படுத்தியிருப்பின் அந்நூல் மிகப் பயனுள்ளதாக அமைந்திருக்கும். ஆயினும், அவர் ஓர் மானிடநேயமுள்ள முழுமையான நற்பிரஜை என்பதைக்காணும் போது, என் மனசு துவண்டு போன இந்த வேளையிலும் குதூகலிக்கிறது.

சொற்ப காலமாக இலங்கை அரசியல் வரலாறுபற்றி வந்த ஏனைய பெரும்பாலான நூல்களும் வெளியீடுகளும் “நாற்பது ஆண்டுகளாகத் தமிழினம் சிங்கள இனத்தின ரால் உரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது’ என்றும்’ “தமிழ்த் தலைவர்களோடு செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்து எறியப்பட்டன’ என்றும், சிங்கள இனம் தமிழ் இனத்தின் எதிரி’ என்றும் பொதுவான ஓர் பகை உணர்ச்சியை ஊட்டி உண்மையான வரலாற்றையே முற்றாகத் திரித்துப் புரட்டிவிட்டன. அது போன்றே, “தமிழர்கள் இந்தியாவிலிருந்து படையெடுத்து வந்து சிங்கள இனத்தையே அழித்து விடப்போகிறார்கள்’ என்றும், ‘நாட்டைத் துண்டு போட்டுச் சிங்கள இனத்தை வேட்டையாடப்போகிறார்கள்’ என்றும் ஒரு பேரின சிற்றினவாத உணர்வை ஊட்டி ஒரு பொய்மையான வழிகாட்டி விட்டுள்ளன. இதோ சிங்களவர் வவுனியாவைத் தாண்டிவிட்டார்கள் . இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் போடு புள்ளடி தமிழரசுக் கட்சிக்கு’ என்ற இன உணர்ச்சியை வெகு இலகுவாகத் தட்டி எழுப்பி விட்டு மிகச் சுளுவாகப் பாராளுமன்றம் சென்ற முதலாளித்துவத் தலைமையின் கோடையிடியான மேடைப்பேச்சுக்கள் நினைவுக்கு வருகின்றன. இதே. பாணியில் இதே சுருதியில் தெற்கேயுள்ள இவர்களின் “சிங்களக் கூட்டாளி’களின் ‘பௌத்த பேரினவாத’ முழக்கங்கள் மேடைகள் தோறும் இடிமுழக்கங்களாகிய விறுத்தங்களும் தார்பூசித் தமிழ் அழித்த சிங்கங்களும், அதேபோன்று, சிங்களம் அழித்துச் சிறை சென்ற’ செம்மல்களும் மனக்கண்ணில் நிழலாடுகின்றன. யதார்த்த பூர்வமான உண்மை யாதெனில், பொன்னம்பலம் ராமநாதன், டி. எஸ் சேனநாயக்கா காலத்திலிருந்து இன்றையவரையிலான இலங்கை அரசியல் வரலாறு சிங்கள தமிழ் முதலாளித்துவக் கூட்டுத்தலைமைக்கும், தேசிய வாதத் தலைமைக்குள்ளும் உண்டான பேரம் பேசுதல் நேசமுரண்பாடுகளே தவிர, விரோத முரண்பாடு களல்ல. சிங்கள தமிழ் மக்கள் பொதுவாக ஒரு நேச சக்திகளாகவே இயல்பாக வாழ்ந்து வந்துள்ளார்கள். இதுவே உண்மை. இந்த உண்மை இன, மத, குல, ஜாதி வெறியர்களான – ‘முதளாளித்துவச் சிந்தனையாளர் களான’ தங்கள் போன்றவர்களுக்குக் கசப்பாக இருக்க லாம். முதளாளித்துவ வர்க்க சிந்தனை என்பதே எதனை யும் குதர்க்கித்துக் குழப்புவது தான் ஆனால் தொழிலாள விவசாய பாட்டாளி வர்க்க வெகு ஜனச்சிந்தனை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. பொய்மைத் தோற்றத்தை வித்திட்ட முதலாளித்துவ சிந்தனையாளர்களுக்கு அத்தோற்றத்தை விட்டொழிக்க நாட்கள் எடுக்கலாம். அல்லது காலம் செல்லலாம். ஆனால் உண்மை ஒருபோதும் அழியாது; அழிக்க முடியாதது. இந்த வகையில் உண்மை யில் நாற்பது ஆண்டுகளாக முதலாளித்துவ ஏகாதிபத்திய தாசர்களாலும், தேசிய வாதிகளாலும் தமிழினம் ஏமாற்றப்பட்டதும் உரிமை மறுக்கப்பட்டது மே உண்மை . வரலாறு. ஆனால், இந்தப் பிரசுரங்களோ, ‘சிங்கள இனம், தமிழ் இனம்’ என்ற யதார்த்த நிலையைப் பார்த்தனவே தவிர, இந்த இரண்டு இன மக்களுக்குள் இரண்டு வர்க்கங்களும், வர்க்கக் குணாம்சங்களும் இருந்தன இருக்கின்றன’ என்னும் அப்பட்டமான உண்மையை மறைத்தும் வருகின்றன. *ஓர் இனவாத எழுச்சி எப்போதும் முதலாளித்துவ வர்க்கம் சார்ந்தே வெளிப்படுகின்றது அது முதலாளித்துவ வர்க்கத்துக்கே பலம் சேர்க்கின்றது’ என்ற இயக்கவியல்வாத யதார்த்த உண்மையை உணர்த்தவும் அவை தவறி விட்டன. மறைத்தும் வருகின்றன.

முதலாளித்துவவாதிகளால் தட்டி எழுப்பப்பட்ட இனவாத உணர்ச்சி 1956ல் தலைவிரித்தாடியபோது, கம்யூனிஸ்ட் கட்சியின் தேசாபிமானி’ப் பத்திரிகை ஆசிரியராயிருந்த கே. ராமநாதனால் இலங்கையின் அரசியல் கோமாளி’ என வர்ணிக்கப்பட்ட சமசமாஜிஸ்ட் தலைவரான கொல்வின் ஆர். டி சில்வா, ‘ஒரு மொழி இரு நாடுகளையும், இரு மொழி ஒரு நாட்டையும் தோற்று விக்கும்’ என்று மொழிந்ததைத் தாங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அவர் அரசியல் களத்தில் ஒரு கோமாளி யாக இருந்த போதும், அந்தக் கோமாளித்தனத்திலும் ஓர் அர்த்தம் இருந்ததை அவதானிக்க முடியும். அது பேரின் வாதத்திற்குச் செப்பமாக விழுந்த சாட்டை அடி, அந்த அடியைக் கருத்தில் கொண்டிருந்தால் தமிழும் சிங்களமும் சம உரிமை பெற்று மக்கள் சகோதரர்களாக வாழ வழி ஏற்பட்டிருக்கும். இனப்பகை இறந்து வர்க்க முரண்பாடு, கூர்மைப்பட்டிருக்கும். இதற்கெல்லாம் செவி சாய்க்கத் தேசியவாதியான பண்டாரநாயக்கா தயாராகவே இருந்தார். அந்த நிலைக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு அதன் முதற்கட்டமாக, ‘தமிழுக்கு உரிய அந்தஸ்து’ வழங்கியதோடு பண்டா செல்வா’ ஒப்பந்த மும் செய்து கொண்டார். ஆனால், தாங்களும் தங்கள் தலைமையிலான யூ. என் பியும் அதை எதிர்த்து ஆர்ப் பாட்டங்களும் கண்டியாத்திரையும் செய்தீர்கள். புத்தஞ் சரணஞ்சாமிகளை ஏவிவிட்டுக் கிழிப்பித்தீர்கள். இந்தப் பழி இப்போ முழுச் சிங்கள பாக்களுக்குமே சார்ந்து விட்டதைப் பார்த்தீர்களா? ‘நாற்பது ஆண்டுகளாகச் சிங்கள இனத்தால் தமிழினம் உரிமை மறுக்கப் பட்டது’ என்ற வசைச்சொல் தங்களாலும் தங்கள் போன்ற முதலாளித்துவப் பேரினவாதிகளாலும் எத்தகைய பொய்மையோடு உதவுகிறது பார்த்தீர்களா?

“சிங்களத்துக்கும் தமிழுக்கும் சம அந்தஸ்துக் கோரிக்கையோடு முகிழ்த்த இலங்கை மார்க்ஸிய கம்யூனிஸ்டு சமசமாஜக் கட்சிகளின் உன்னத அரசியல் வரலாறு இன்றுவரை முதலாளித்துவ சக்திகளால் வேண்டு மென்றே திரித்தும் மறைத்தும் கூறப்பட்டமையே ஒரு தேசத்துரோகம் பெரும்பாலும் மேனாண்மை வர்க்கம் சார்ந்த பிரசாரக் கருவிகளாக இவ்வெளியீடுகள் விளங்கி பொய்மைக்கு முக்கியகாரணம் என்பதைத் தாங்கள் அறியாததல்ல இலங்கை அரசியல் வரலாற்றில் இலங்கைக் கம்யூனிஸ்டு சமசமாஜிஸ்டுகளின் உன்னத போராட்டங் களின் போது நிகழ்ந்த சம்பவங்களும் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட போது அவர்கள் கூறிய மார்க்கங்களே எமது நாட்டுக்கு அவசியம் தேவை என்பதும் அந்த மார்க்கங்களே எமது நாட்டின் விமோசனத்துக்கு வழி என்பதும் இன்று துலாம்பரமாகிவிட்டது. ஆகையால் மறைக்கப்பட்ட அந்த வரலாற்றை இன்று மக்களுக்கு வெளிச்சமாக்க வேண்டியிருக்கிறது.

இதனை இந்த நிருபத்தின் பிறிதொருகட்டத்தில் நேரம் வாய்க்கும்போது விரிவாக உரைக்கவிருப்பதால், இதன் தொடரான விசயத்திற்கு வருகிறேன்.

ஒன்றை மனசிருத்துவீர்களாக.

சிங்கள மக்கள் தமிழ் மக்களின் விரோதிகளோ அன்றேல் தமிழ் மக்கள் சிங்கவ மக்களின் விரோகளோ அல்லர். இரண்டு இனங்களுக்குள்ளும் விரோதத்தை வளர் த்ததே சுதேசிய விதேசிய தமிழ் சிங்கள முதலாளித்துவப் பிரசாரங்கள் தான். இன விரோதத்தை இன்னும் தொடர்ந்து வளர்த்து வருவதும் முதலாளித்துவ வெளியீடுகளே அப்படி இருந்தும் இந்த இன விரோதப் போக்கு முதலாளித்துவ வர்க்க நலவலிமை கொண்ட சாதனம் என்ற உண்மையைக்கூட அவை மதிப்பிடத் தவறிவிட்டன. இதனால், சரியான கறாரான நிலைமை களை மக்கள் அறிய முடியாமல் போய்விடுகிறது. இன்றைய கொடுமைகளுக்கும் விரோதங்களுக்கும் – தன் படை மாற்றான் படை தெரியாமல் நடக்கும் கொலைக்கும் இது ஒரு முக்கிய காரணமாகும்.

தயவு பண்ணிச் சற்றுக் கூர்ந்து கவனியுங்கள்.

வர்க்க முரண்பாடும் இனப்பாகுபாடும் ஒன்றெனக் கருதுவது தவறு. இந்த வேற்றுமைபற்றித் தெரிந்து கொள்ள ஒரு சாதாரண மனிதனால் கூட முடியும்.

‘வர்க்க முரண்பாடு இரண்டு இனங்களுக்கிடையில் மாத்திரமன்றி ஓர் இனத்துள்ளேயும் நிகழும் தவிர்க்க “முடியாத அம்சம். அப்படித்தான் நிகழ்ந்தும் வருகிறது இரண்டு இனங்கள் இணைந்து சகவாழ்வு’ கொள்வது வேறு இரண்டு இனங்கள் வர்க்கரீதியாக இணைந்து’ அரசியற் போராட்டம் நடத்துவது வேறு. இரண்டு முனைப்புகளையும் ஒன்றாசக் கருதுவதுதான் பிசகு அதாவது, வர்க்கப் போராட்டத்தையும் இனப் போராட்டத்தையும் ஒன்றாக ஒரே போராட்டமாகக் கணிப்பது தான் தவறு. இந்த வகையில் இரண்டு இனங் கள் சகவாழ்வு’ என்பது சாத்தியமானது. இதன் சரியான அர்த்தம். ஓர் இனத்துள் இரண்டு வர்க்கங்கள் – இரண்டு வர்க்கக் குணாம்சம் கொண்டவர்கள் முதலாளித்துவ வர்க்க பாட்டாளிவர்க்கக் குணாம்சம் கொண்டவர்கள் சகவாழ்வு வாழ்வதே அது. இது போன்றே இரண்டு இனங்கள் வர்க்கரீதியாகத் தோழமை’ கொள்வது சாத்தியமற்றது “தோழமை’ வேறு, ‘சக வாழ்வு’ வேறு இத்தகைய சரியான கண்ணோட்டத்தில் எழுதப்படும் நூல்களே உண்மையான வரலாற்றைச்சுட்டுவன.

வரலாற்றுக் குறிப்புக்கள் கற்பனைப் புனைவுகளால் ஆக்கப்படும் நாவல் இலக்கியமோ, ஆசிரியர் தன் கருத்தினைப் புகுத்தும் சிருஷ்டியோ, திருஷ்டித்த பாத்திரங் களின் குணவியல்பான சித்தரிப்போ அல்ல. இருள் சூழ்ந்த வியாபகத்திலிருந்தும் மக்களுக்கு ஞான வெளிச்சங் காட்டுங் கலங்கரை விளக்கமாக உன்னத இலக்கியங்கள் திகழ்வது போல் வரலாற்றுக் குறிப்புகளும் சரியான கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டாலே உண்மை விளம்பிகளாக விளங்க முடியும். இதற்கு முற்றிலும் மாறான கண்ணோட்டத்தில் நடப்பியல் வாதங்களையே சரியான கருதுகோள்களாகச் சித்தரித்து வெளிவந்த சில நூல்களில் அடங்கிய வாசகங்களையும் அவ்வாசகங்களில் மறைபொருளாகவுள்ள எனது கருத்தோட்டங்களையும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வரச் சித்தங் கொண்டு முக்கிய அம்சங்களை வெளிச்சமாக்க விரும்புகிறேன்,

இலங்கைத் தீவில் இனப் பிரச்சினை மிக மோசமான நிலையை இன்று அடைந்திருக்கின்றது. சிங்கள பௌத்த மேலாதிக்க இனவாதம் பாரிய ஒடுக்குமுறைகளில் ஈடு பட்டுள்ளது என்ற முன்னுரையோடு தொடரும் வாசகம், ‘வரலாற்றின் ஆரம்பத்திலிருந்து ஐரோப்பியர் காலம் வரை’ ஐரோப்பியர் காலம்,’சுதந்திரத்தின் பின், குடியரசுகாலம்’ என்ற நான்கு கட்டங்களைக் குறிப்பிட்டு நூலில் நுழைகின்றது.

இலங்கையில் மட்டுமல்ல எந்த நாட்டிலுமே இனப்பிரச்சினை – தோன்றுவதும் தோற்றுவிப்பதும் பொருளாதாரப்பிரச்சினைதான். பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க வக்கற்ற முதலாளித்துவம் இன மத மொழி குல ஜாதி உணர்ச்சிகளைக்கிளறி அவற்றையே ஆயுதமாக வரித்துக் கொண்டு மக்களை மோத வைத்து அழிக்கிறது. இந்த உண்மையினூடாக இனப் பிரச்சினையைப் பார்க்கத் தவறும் ஒருவர் இந்த ஆயுதங் களை இலங்கையில் பாவித்த பாவிக்கிற வர்க்கம் எது என்பதைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, இதற்குப் பலி யாகிய மக்கள் மீது பழியைப் போட்டு விட்டுத் தப்பித்துக் கொள்வதும் இந்த வகுப்பு வாத ஆயுதங்களைத் தூக்கிய முதலாளித்துவத்திற்கே லாபம் சேர்க்கிறவராகின்றார். அல்லது முதலாளித்துவத்தின் மற்றோர் கன்னையான துணைப் பிரசாரகாரராகி விடுகிறார். இலங்கையில் தோன்றிய மத இன குல மொழி ஜாதி வெறியர்கள் அனைவரும் முதலாளித்துவத்தின் கைக்கூலிகள் என்பதும், இந்தக் கைக்கூலிகளுக்கு எதிரான வர்க்கம் சார்ந்த மக்கள் இலங்கை பூராவும் பரந்து வாழ்கின்றார்கள் என்பதும் உண்மையாயிருக்கும் போது, அந்த வர்க்கம் சார்ந்த மக்களும் இயக்கங்களும் நிகழ்த்திய போராட்டங்களின் போது இந்தப் பிரசாரகர்கள் இதே முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் நின்றார்கள். ஆக இவர்களும் – இனப்பிரச்சினை’ என்ற பொய்மையான தோற்றத்தை மக்களுக்கு ஊட்டி முதலாளித்துவத்திற்கே துணை போகிறார்கள் என்றாகிறது. நீ அடிக்குமாப் போல் அடி, நான் அழுமாப் போல் அழுகிறேன்’ என்ற தோழன் சூத்திரம் குழந்தையும் புரியக்கூடியதே.

மகாவம்சத்தைத் தழுவி பிரசார நூல்களோ இப்பிர சாரங்களை மறுத்து வெளி வந்த பிரசார நூல்களோ எவ்வாறு முற்றிலும் மாறுபட்ட உண்மைக்குப் புறம்பான கண்ணோட்டங்களில் ஆக்கப்பட்டன என்பதையும். இதன் விளைவாக மக்கள் மத்தியில் ஒரு முழுமையான வகுப்புவாத உணர்வை இவை எப்படி அழுத்தி விடு கின்றன என்பதையும் இதில் விஸ்தரிக்கவே முனைந்தேன், ஆனால், இன்றைய நெருக்கடிகளைத் தங்கள் சமுகத் திற்குச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாதலால் அவற்றைப் பிறிதொரு தொகுப்பில் விரிவு படுத்தச் சித்தங் கொண்டு இந்த நிருபத்தில் தவிர்த்துள்ளேன்.

இப்பொழுது நேரம் இரவு பதினொருமணி. இதனை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது வடதிசையில் வெடி குண்டுகளின் இடிமுழக்கங்கள் கேட்கின்றன. போராளி களாகத்தானிருக்க வேண்டும். முகாம் கட்டிடங்கள் அதிர்கின்றன . நமது படைபட்டாளங்கள் உசார் கொண்டு துரிதவேகமாகச் செயற்பட ஆயத்தமாகிறார்கள். துரித வேகமாகச் செயற்படுகின்ற போதும் அவர்கள் முகங்கள் தேம்பி விம்மிச் சலித்துப் போய்க் கிடப்பதாகவே மின் வெளிச்சத்தில் தெரிகின்றன. அவர்கள் கடமை புரிவதைக்காட்டிலும் தங்கள் உயிர்களுக்காகப் பரிதவிக் கிறார்கள் போல் தெரிகின்றது. யுத்த களத்தில் வீரம் மட்டுமல்ல, மரணபயமும் உள்ளூாத்தொற்றிக் கொள்வது இயல்புதானே? ஹிட்லர் நெப்போலியன் கூட மரணபயத் திற்கு ஆளானவர்கள் என்பதை வின்ஸன்ற சேர்ச்சில் இரண்டாவது உலக மகாயுத்தம் பற்றி எழுதிய நூலில் வர்ணித்திருப்பதைத் தாங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நாம் எல்லாம் எம்மாத்திரம்! இந்த வெடி குண்டுகள் எங்கிருந்து இடி முழக்கம் செய்கின்றன என்பதைக் கவனித்து வேண்டிய நடவடிக்கை எடுத்து விட்டு இந்த நிருபத்தைத் தொடரலாம் என்று கருதுகிறேன்.

7

மகிமை மிகு அதிபரே,

விசனம் ஆட்கொண்ட தால் சயனிக்கவும் முடிய வில்லை. பத்திரிகைகளைப் புரட்டினாலும் இந்த அரசைப் பற்றிய குறிப்புகளே குவிந்துள்ளன.

‘யூ. என். பி. அரசில் தமிழர் நம்பிக்கேட்ட’ வரலாறு, என்று வித்தக பண்டிதர் என்பார் எழுதிய விஷயம் என் மனசை நெருடியது ஒரு சுவையான கதைபோல் கிளர்ந்த அச்சித்திரத்தைத் தாங்கள் சிந்தனையால் கொள்வீர்கள் என்ற கோதாவில் அப்படியே வரைகிறேன்.

வரைபடம் போல் நகரும் அந்த விமர்சனம் இது. உற்றுக் கவனியுங்கள்.

நம் நாடு வட்டிக்கு வட்டி கொடுக்கவும் வக்கற்ற தீவு. இத்தகைய கீர்த்தி பெற்ற அரசின் சாதனையைக் கேள்வி யுற்ற ஒரு புலவர், “விகாரம் இப்படியிருக்கையில் எப்படி யப்பா இலங்கையில் சிறீமான் பொது ஜனம் உயிரோடு வாழ்கிறது?’ என்று வினவி தன் ஆச்சரியத்தைத் தெரிவித்தார்.

இதற்குச் சுருக்கமாக விளக்கம் அளித்து ஒரு மடல் சீட்டினேன். அதன் சாரம் இது.

எங்கள் தீவிலே ‘தர்மிஷ்டர்’ தலைமையில் யூ. என் பி. ஆட்சி நடக்கிறது இந்த ‘உத்தமர் அமெரிக்க மாமாவின் அத்தியந்த நண்பராக இருக்கவேண்டும் ‘பண்டாசெல்வா* ஒப்பந்தத்தைக் கொடூரமாக எதிர்த்தார். சிங்களவர் தமிழர் சுயாதீனமாக ஒற்றுமையோடு வாழ வித்திட்ட அந்த ஒப்பந்தத்தைச் சிங்கம் என எதிர்த்துக் ‘கண்டி யாத்திரை மேற்கொண்டபோதே இலங்கைக்குச் சனியன்’ பிடிக்கத் தொடங்கியது. தர்மிஷ்டர் பாஷை யில் கூறின், “நாட்டுக்கு நல்ல சகுனம்’ பிடித்தது. அன்று தொட்டு இன்று வரை பேரின வாதிகளாலான இனக் கலவரத்துக்குக் குறைச்சலே இல்லை,

பண்டாரநாயக்கர் ஆட்சியை வீழ்த்த 1958ல் பேரின வாதக் காடையர்களால் இனக்கலவர நெருப்பு மூட்டப் பட்டது. இருந்தும் பண்டாரநாயக்கர் அரசை இந்த உத்தமர் களால் வீழ்த்த முடியவில்லை. ஆனால், பண்டார நாயக்கா அழிக்கப்பட்டார். அவர் பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவர் படுகொலைச் செய்தி நாடுபூராவும் பரவியபோது யானைகள் துள்ளிக் குதித்துக் கொண்டாடியதை முழுநாடே அறியும்.

எனினும், அதி உத்தமர்களின் கரங்கள் ஓயவில்லை . ஆயினும், உத்தமர்கள் தோற்றுப் போய்விட்டனர்.

அம்மா அரசபீடத்தில் பிரவேசம் செய்யப்பட்டார். வாழ்க இலங்கரத்தினா, டாக்டர் என் எம் பெரேரா, பீட்டர் கெனமன்!

அந்தகோ, அந்த அம்மாவையும் இந்த உத்தமத் தர்மிஷ்டர்கள் விட்டு வைக்கவில்லை.

அவ அரசை வீழ்த்த, 1962ல் ‘குஷி’யாக ஓர் அரசியற் தர்மிஷ்டரின் அத்தியந்த பொலிஸ்-ராணுவ மேல் மட்ட நண்பர்கள் கைதாகினர்.

அம்மா கழுத்துக்கு வந்த கண்டம் தலையோடு தப்பி யது. எனவே, அந்தக் கூத்தும் எடுபடவில்லை.

1971ல் றோகணா என்ற வீரவாகுவை ஏவிவிட்ட கூத்து நடந்தது. அந்தக் கூத்தும் எடுபடவில்லை.

தர்மிஷ்டர் சும்மா இருக்கவில்லை.

அம்மா ஆட்சிக்கு எதிராக அத்தன கலையில் ‘சத்தியாக்கிரகம்’ என்ற நாடகத்தை மேடையேற்றிப் பார் த்தனர். காந்த, செல்வா பாணியில் காப்பியடித்த அந்தச் சத்தியாக்கிரக நாடகமும் சோபிக்கவில்லை.

பின் அமெரிக்க மாமாவின் புத்திசுவாதீனம் போலும் தர்மிஷ்டர் கொக்குத் தவம் செய்யலானார். ஓடு மீன் ஓடி உறுமீன் வருமளவும் வாடி இருக்கும் கொக்குப் போல் உத்தமர்கள் வழிமேல் விழி வைத்துக்கொண்டிருந்தனர்.

ஒரு சவமும் அகப்படவில்லை.

அம்மாவுக்கு எழுந்த அதிகார ஆசையால் கண் மண் தெரியவில்லை.

‘கழுதை’ மூளையாக ஒன்று அவவுக்கு மகனாகிய தால் எதிரிக்கு வாசியாகியது. தர்மிஷ்டர் துள்ளிக் குதித்தார்.

இந்தக் கழுதை மூளையை அந்த உத்தமர் வாறாகப் பயன்படுத்தலானார்.

அதன் விளைவு…?

அம்மா ஏறிய ஏணிகளை உதைத்தா.

இடது சாரிகளை உதறித்தள்ளிவிட்டு, உருத்திராட்சப் பூனைகளையும், முழிகண் – கோழிக்கள்ளனையும் அணைத்துக் கொண்டதால் வந்தது நாசம்; விழுந்தது நசல்.

என்.எம்.மும் பீட்டரும் வெளியேறினர்.

அம்மா பிடித்த கொப்பும் விட்டு, மிதித்த கொப்புத் தவறி ‘தொப்’பென்று விழுந்தா.

கொக்குத்தவம் புரிந்த தர்மிஷ்டர் விழித்துக் கொண்டார்.

அம்மையார் – ‘தொப்பிபுரட்டி’க்கதை கேட்டு மொக்குத்தனமாக உயர்கல்வியில் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர்க்குப் பாகுபாடு காட்டியது, இந்த உத்தமர்களுக்கு அசல் வாசியாயிற்று கல்விச் சாலையில் குல்லாவை மாட்டப்போய் வந்த வில்லங்கத்தை அம்மையார் பிறகுதான் உணர்ந்தா . அதற்கு அவளின் கழுதைப்பிள்ளையும், சட்டவாதி முழிகண் கோழிக் கள்ளரும் பக்கபலமாயிருந்தமை ஒரு காரணமாகும்.

சொந்தங்கள், பந்தங்கள், வாரிசுகள் பார்த்துக் கட்சி நடத்த வெளிக்கிட்டதால் வந்த பொல்லாப்பு இது.

‘படித்தும் பயனில்லை’ என்று கண்டதால் வேறு மார்க்கம் தேடாது விரக்தி கொண்ட மாணவர்கள் ‘தனி நாடு’ கோஷத்தை முன் வைத்தபோது, பீட்டர் கெனமன் நற்தீர்ப்பையும் தட்டிக் கழித்த அமையார் சும்மா கிடவாமல், அதனைத் தீர்ப்பதற்குப் பதிலாக – மோட்டுத் தனமாகப் பட்டாளத்தை ஏவிவிட்டு அடக்கப் பார்த்தா.

அதன் விளைவே தமிழர் பிரதேசமான வடகீழ் மாகாணங்களில் ராணுவம் படையெடுக்கக் காரணமா உற்று. உரிமை கேட்ட இனத்திற்குக் கங்கு கரையற்ற படையை ஏவிவிட்ட நாடும் நமது இலங்கை தான்,

தமிழினம் கெம்பி எழுந்தது. இது சிங்கள மக்களுக்கு எதிராக அல்ல, இனவாத அரசுக் கெதிராக அமைந்தது.

அடக்கப்பட்டவனை அடக்கியாள முடியாது. ஒடுக்கப் பட்டவனை ஒடுக்கியாட்டமுடியாது. எரிமலை வெடித்தால் காடும் கரை புரளும்.

சட்டமறுப்புச் செய்த தமிழ்த் தலைவர் களைக்கூட்டுக் குள் அம்மா போட்டா.

இங்கேதான் அம்மாவின் வீழ்ச்சி ஆரம்பமாயிற்று.

இப்படி எத்தனையோ அநியாயங்கள் தமிழனத்தைச் சூழ்ந்தன.

இவற்றையெல்லாம் துச்சமென மதித்துக் கண் மூடித்தனமாக நடந்து கொண்ட அம்மையார், ‘இது பேரிடி யாக விஸ்வரூபமெடுக்கும்’ என்று இடதுசாரிகள் எச்சரிக்கைகையும் பொருட்படுத்தாமல், எவரோ மாட்டிய குல்லாவுக்குள் உல்லாசமாகவே இருந்தா.

கொக்குத் தவம் மீண்டது.

இவற்றையெல்லாம் தர்மிஷ்ட உத்தமரும் அவர் தம் யூ.என்.பி தாசர்களும் வாறாகப் பயன் படுத்தினர்.

“ஆகோ வாரும் பிள்ளாய், அம்மையார் அநியாயங் களைப் பாரும் பிள்ளாய்”என்று கவிதைப் பாணியில் தமிழினத்தைப் பார்த்து முதலைக் கண்ணீர் வடித்தனர்.

நம்பிக் கெட்டவன் தமிழன்: தும்பி பிடிப்பவன் தமிழன்.

தமிழ்த் தலைமையோ இதனை உண்மையென்று நம்பியது. தமிழ்த் தலைமை தங்களை நம்பிக் கெட்டும் தங்களையே கதியென்று கிடந்ததும் அவர்களுக்கு வள்ளீசாகத் தெரியும். இரண்டு தலைமைகளும் அடிப் படைக் கொள்கையில் ஒன்று தானே?

எனவே, தமிழினத்தைப் பார்த்து யூ.என்.பி. வீட்ட முதலைக் கண்ணீர் முட்டைக் கண்ணீராக உதிர்ந்தது.

“அம்மையார் செய்த அநியாயத்தால் தான் நீங்கள் விரக்தியடைந்து ‘தனி நாடு’ கோஷத்தை முன் வைத்துப் போராடுவதற்குத் தள்ளப்பட்டீர்கள். நாம் ஆட்சிக்கு வந்தால் நீங்களே, எங்களுக்குத் தனிநாடு வேண்டாம், என்று வேறுமளவிற்குச் சகல – உரிமையையும் கொண்ட ‘வட்ட மேசை மகாநாடு’ வைத்து அதில் நிரந்தரத் தீர்வு காண்போம்’ என்று யூ.என்.பி. தாசர்களும் தர்மிஷ்ட உத்தமத்தாரும் மேடைகள் தோறும் சத்தியவாக்களித்தனர்.

தென்னிலங்கை – மக்கள் மட்டுமின்றி, வடகீழ் மாகாணங்களின் பெரும்பாலான தமிழ்மக்களும் அந்தச் சத்தியவாக்சைத் தேவவாக்காக தம்பி யூ.என்.பி.க்கே வாக்களித்தனர். வாக்குத்தத்தம். பலிதமாகுமென்று வாக்குச் சீட்டுப் போட்டார்கள்.

இடது சாரிகளோ , ‘யூ.என்.பி.தாசர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகவேண்டாம்’ என்று காலில் விழாத குறையாகச் சொல்லிப் பார்த்தார்கள்.

“ஜே.ஆர்.இதயம் ஹிட்லரைவிடக் குரூரமானது” என்று அம்மையாரும் கண்டிப் போகம்பர மைதானத்தில் கடைசியாக எடுத்துக் கூறினா.

ஆனால் தமிழ் மக்கள் செவிசாய்க்கவில்லை. பெரும் பாலான தமிழ் மக்களும், தமிழ்ப் பெரு வியாபாரிகளும் ‘யூ. என் பி. ஆட்சிபீடமேறினால் நாட்டில் ‘சமாதானம் நிலவும், எந்தவித பயமுமின்றி நாட்டின் சகல பாகங் களிலும் ‘சுதந்திரமாக’ நடமாடலாம். எனவே, போடு புள்ளடி யானைக்கு நேரே” என்று கூறி யூ.என்.பிக்கே வாக்களித்தனர்.

தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவே யூ.என் பி, அதிகாரத்துக்கு வரக்காரணம் என்பதை முழுநாடே அறியும்.

ஆனால், அது பதவிக்கு வந்ததே தாமதம், நாடு “குரங்கின் கை பூமாலையாயிற்று” என்பதை முதல் வருஷ வரவு செலவுத் திட்டமே காட்டிவிட்டது.

அமெரிக்க மாமாவிடம். ‘கடன் பிச்சை’க்கு நாடு ஆலாய்ப் பறக்கவாரம்பித்தது.

காரணம் எதுவுமின்றியே இனக்கலவரம் தலை தூக்கப்பட்டது.

விளைவு, தென்னிலங்கையில் மட்டுமல்ல, மலையகத்திலும் பேரினவாதிகளின் பேயாட்டம் கட்டவிழ்க்கப் பட்டது.

கண்டி, இரத்தினரி, பதுளை திரிகோணமலை ஆகிய பிரதேசத் தமிழர்கள், தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். ‘லயன்’களில் சீவித்த மக்கள் பேரினவாதி ளால் அடித்து நொறுக்கப்பட்டார்கள் உயிர்கள், உடமைகள், கடைகள் சூறையாடப்பட்டன. பாதுகாப்புப் படையினரோ வெகு பக்குவமாக, ‘நடப்பவையெல்லாம் நடந்து முடியட்டும். நஷ்டமெல்லாம் தமிழருக்குகே’ என்ற தோரணையில் வேடிக்கை பார்த்து ரசித்தனர். அவர்கள் பாஷையில் வேண்டிய பாதுகாப்பு அளித்தனர்.

இக்கொடுமைகளையெல்லாம் தட்டிக்கேட்க அவர்களுக்கிருந்தவிடம், பாராளுமன்றம் ஒன்று தான். அங்கே அதனை அமிர்தலிங்கம் பிரஸ்தாபித்தபோது, ‘சமாதான மென்றால் சமாதானம் போரென்றால் போர்’ என்று தர்மிஷ்ட உத்தமரே திருவாய் மலர்ந்தருளினார். பிரகடனப் படுத்தப்படாத யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டார் தமிழினம் திகைத்தே போயிற்று

தமிழ் மக்கள் எவரைப் பதவியில் அமர்த்தக் காரணமாயினாரோ அவராலே தமிழினம் அழிந்து மடிந்து கேட்பார் யாருமின்றித் தவித்துத் தத்தளித்துக் கொண்டிருக்கிறது..

இந்நாட்டின் பேரினவாதிகளும், தொழிலாள வர்க்க எதிரிகளும், தமிழினத்தின் பகைவர்களும், யூஎன்.பி.யும் அதன் அரசுமே, இதனை ஓர் அரசியற் சித்தாந்தத்தோடு ஆய்வு செய்தபின் அடுத்து விளக்கப்படும்.

மகிபரே, எமது நாட்டின் யதார்த்தபூர்வமான உன்னத சிந்தனையாளர்கள் எப்படி இந்த அரச நிர்வாகத்தைக் கணித்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு வித்தக பண்டிதரின் விவரணம் ஒரு சான்று. அபகீர்த்திமிக்க இந்த அரசின் தாற்பரியங்களைப் புரிந்து கொண்டும் நான் வட கீழ் மாகாணத்தின் தலைமைத் தளபதியாகக் கடமையாற்றுகிறேன். இது வெட்கங்கெட்ட செயல் என்று என் மனச் சான்று அடித்துச் சொல்லுகிறது.

இதனையும் தங்கள் மேலான கவனிப்புக்குச் சமர்ப்பிக்கிறேன்.

அசட்டை பண்ணுவீர்களானால், தங்கள் சாணக்கியமும் பெரும் இந்திய நாட்டுப் படையெடுப்புக்குச் சரணடைய நேரிடலாம்.

எச்சரிக்கையல்ல, தார்மீக உணர்வுக்கும், தங்கள் சித்தத்துக்கும் விடும் வேண்டுதலாகும்.

எனினும், எனது முடிவை மறுபரிசீலிப்புக்கு மாற்று வது நோக்கமல்ல என்பதை இத்தாற் தெரிவித்துக் கொள்கிறேன்.

8

கனந்தங்கிய அதிபரே,

என்றுமில்லாத வகையில் இன்று என் மனசு பேதலித்து விட்டது! நரம்புகள் சோர்ந்துவிட்டன. உடம்பு நரிடி. நடுங்குகிறது. கண்கள் பஞ்சாடிப் பூஞ்சாணமாகி வருகின்றன. மண்டைக்குள் ஏதோ கிண்ணரம்போடு கிறது. கண்களை மூடிக்கொண்டு மனக்கண்ணால் நோக்கு கின்றேன். அனந்தகோடி நட்சத்திரங்கள் வானத்தில் இருந்து சரமாரியாக வெடித்துச் சிதறி மின்மினிப் பூச்சி –களைப்போல் பூமியடங்க வந்து விழுகின்றன எந்த வேளையிலும் மரணத்தறுவாயிலிருக்கும் ராணுவ அதிகாரியான நானே இவ்வாறான அதிர்ச்சிக்குள்ளாகி விட்டேன். தாங்கள் இவற்றைப் பார்த்திருக்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், அவராவது பார்த்திருக்க வேண்டும். தாங்களோ இந்நேரம் பஞ்சணை யில் துயின்றுகொண்டிருப்பீர்கள். பாதுகாப்பு அமைச்சரோ சகலநெருக்கடிகளுக்கும் எப்படி உகந்த பதில் அளிப்பது என்ற கனவுத் தூக்கத்தில் நிலைகொண் டிருப்பார். அதிகார உல்லாசம் யாரைத்தான் விட்டது? என்றபோதும் ஒரு கணம் மனக்கண்ணாலாவது பார்க்க வேண்டும். வெடி குண்டுகளின் சத்தம் கேட்ட திசை நாடிப் போன நான் இப்படியான ஒரு பயங்கரக் கோலத் தைக் காண்பேன் என்று கற்பனை செய்தும் பார்த்த தில்லை. அது என் முட்டாள் தனத்தான். அந்தப் பயங்கரக் காட்சிகள் என்னை நிலைகுலைய வைத்துவிட்டன. மனதில் தேங்கியிருந்த வச்சிர உறுதியும் கலைந்துவிட்டது.

கவனியுங்கள்.

தங்கள் புதிய உத்தரவுகளை நிறைவேற்றாமல் நான் எப்படித் தன்னிறைவு கொண்டேனோ, அது போன்றே எனது ராணுவப் பிரிவில் உள்ள படையினரும் தங்களிச் சையாக நடந்து கொண்டார்கள். என்னால் கட்டுப் படுத்த முடியாதபடி நிலைமை மோசமாகி விட்டதென்றே கருதுகிறேன். நான் எதனைச் செய்யக் கூடாதென்று படைப்பிரிவுகளுக்கு உத்தரவிட்டிருந்தேனோ அதுவே நிகழ்ந்து விட்டது: என் உத்தரவு எனக்குத் தெரியாமலே மீறப்பட்டுள்ளது.

முன்னைய எங்கள் விசாரணைக்குப் பின் கடந்த வாரம்தான் வடமாகாண எல்லைக்குள் பரவலாகவிருந்த கிராமங்களச் சுற்றி வளைத்துத் தேடுதல் போட்டு ஆயிரத்தி இருநூற்றிப்பன்னிரண்டு இளைஞர்களையும். முப்பத்தேழு யுவதிகளையும் கைது செய்து முகாமுக்குள் அடைத்து வைத்திருந்தோம். ஒரு வாரமாக விசாரணை செய்தபோது சட்டப்படி பார்த்தாலும் இந்த இளைஞர் களில் எவருமே தண்டிக்கக் கூடியவர்களாக இருக்க வில்லை. ஆனால், தங்கள் பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி அவர்கள் எவ்வாறேனும் காலியில் உள்ள ! பூஜா ராணுவ முகாமுக்கு அனுப்பியேயாக வேண்டும். அன்றேல் ‘பொலிஸ் றிக்ஸ்’ உத்திகளைப் பாவித்து. விடுபட முடியாத குற்றவாளி’ என்பதன் நிருபண அர்த்தம் என்னவென்பதை நான் மட்டுமன்றி, சகல ராணுவப்படைப் பிரிவு அதிகாரிகளும் அறிவர்.

‘மரண தண்டனை’ என்ற தீர்ப்பைச் சட்டவாக்கக் காகிதத்தில் மிகச் சாதாரணமாகவே எழுதிவிடலாம்! அதனை நிறைவேற்றுவதற்கு மனிதனின் மனது இரும்பா யிருக்கவேண்டும். அவ்வளவுதான். பற்றற்ற பஞ்சசீலத் துறவுகளல்லவா? இலகுவான விஷயம் என்று பாதுகாப்பு அமைச்சு அடித்துக் கூறும் பண்பைக் கலாசாரமாக வரித்துக் கொண்டிருக்கிறது! எனவே, உயிர் ஒரு தூசு என்று கருதப்படுகிறது. மெய்யாகவே ஒன்று சொல்லு கிறேன், என் மனசோ ஒரு தாயின் இதயம் போல் மென்மையாகி விட்டது. தன்னுயிர் போல் மன்னுயி ரையும் நேசிக்க எப்பவோ பண்பட்டுப் போய் விட்டது. ஓர் உன்னத உயிரை ஒரு பயித்தியக்காரன் கூட மிகச் சுலபமாக அழித்து விடலாம். ஆனால், போன உயிரை உலகின் எந்தப் பெரிய மேதையானாலும் மீட்க முடியாது, ஓர் உயிரை மீட்க வக்கற்ற எவனும் இன்னோர் உயிரை அழிக்க உரிமையற்றவன். அந்த இளைஞர்கள், யுவதிகள் மட்டில் தான் அப்படித்தான் நடந்து கொண்டேன். ஆமாம், அதிபரே நான் அப்படித்தான் நடந்து கொண்டேன்.

பாதுகாப்பு அமைச்சால் பிறப்பிக்கப்படும் உத்தரவு களுக்கு நான் அவர் களைப் பூஜா ராணுவ முகாமுக்கு அனுப்ப தவறின் – ‘முறையான’ தண்டனை வழங்க வேண்டும், பகை அதிபரே, என்னை மன்னியுங்கள். இந்த இரண்டில் நான் எதையும் நிறைவேற்றவில்லை.

அவர்களுக்கு இந்த நாட்டின் அரசியல், சித்தாந்தம், வரலாறு, கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடுகளை யும் அவற்றின் தாற்பரியங்களையும், நடைமுறைப் படுத்தும் மார்க்கங்களையும் என்னாலான வரை போதித்து நற்பிரஜைகளாக்கி அனுப்பவே திட்டமிட்டிருந்தேன். அடிப்படையில் மாற்றம் ஏற்படாமல் எந்தப் போதனை யும் ஒருவருக்கு நிறைவான மாறுதலை உண்டாக்காது. என்பதை நான் அறிவேன். ஆனால், எனது போதனை அவர்களை நிதானப்படுத்தி அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தத் தூண்டும் என்பதாலேயே அப்படி முனைந்தேன்.

அந்தத் திட்டத்தில் மண் விழுந்து விட்டது. மின்னல் வேகத்தில் இப்படி ஒரு பேரழிவு நிகழும் என்டதை நான் கற்பனையிலும் நினைக்கவில்லை. அதை விவரிக்கவே கைகள் நடுங்குகின்றன. தேகம் உதறுகிறது. மனித நேயம் என்பது சித்திரவதையின் கூடாரம் என்பதை நான் இப்போதுதான் உணர்கிறேன். மானிட நேயத்துடன் நான் இந்த இளைஞர்கள் யுவதிகளை நோக்கிய தன் விளைவு எனக்கு இப்படியாகி விட்டது.

என்ன கோரமான மரண அவலங்கள்…?

நமது ராணுவப் படைகள் அர்த்த ராத்திரி வேளையில் எழுந்து அடைத்து வைக்கப்பட்ட அத்தனை வாலிபர்கள் யுவதிகளையும் ‘விசாரணைக்காக அழைக்கப்படுகிறீர்கள்’ என்று வெளியே உள்ள ஏகாந்தமான சாலை ஒன்றில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள், இத்த நடு நிஜியில் விசாரணையா? என்ற பேதலிப்போடும் தயக்கத்தோடும் எழுந்து வந்து அத்தனை பேரும் கப்டன் ஒருவர் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் கப்டன் மூன்றாம் மாடியில் உள்ள அறையில் இருந்து இந்த விசாரணையை மேற் கொண்டிருக்கிறார்.

லெப்டினன், சார் ஜன்மேஜர், சார்ஜன்ட், புல் கோப்ரல் மட்டத்தில் உள்ள ராணுவத்தினர் உட்பட – இந்த விசாரணையில் எழுபத்திரண்டு வேகசேவை அதிரடிப் படைப் பிரிவு ராணுவத்தினரும் ஈடுபட்டிருக்கின்றனர். ஒரு மணி நேரமாக விசாரணை எதுவும் நடைபெறாமலே பத்திரங்களைத் தயார்ப்படுத்திக் கோவைப்படுத்துவதில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில், ஜீப் டிரைவர் ஒருவர் பெட்றோல் எடுத்துக் கொள்கலனில் ஊற்றி அடைத்துக் கொண்டார். அந்த வீரர் காமம் துள்ளும் பாடல் ஒன்றைச் சீட்கை அடித்துக் கொண்டே துரிதகதியில் நின்றார்.

ஒரு யுவதி சோர்ந்து விட்டாள் அவள் கால்கள் தடுமாறி விழுந்து விட்டாள் அவள் பாவாடை அவள் கழித்த சிறு நீரால் துவைந்து போய்க் கிடந்தது. அந்தக் கோப்ரல் கொடுப்புக்குள் சிரித்தான் இதனையடுத்து அவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அவ்வளவு தான். அவள் தனி அறைக்குள் தூக்கி வரப்பட்டாள். பகப்டன் டாக்டர் அல்ல, ஆனால், அவர் ஒரு டாக்டர் போல் அபிதயித்துக்கொண்டு இருக்கையை விட்டெழுந்து வெகு முடுக்காக அந்த அறைக்குள் பிரவேசித்தார். சிறு பறவையின் கீச்சுக்குரல் போல் அந்த அறையிலிருந்து யுவதியின் கேருந்தொனி எதிரொலித்தது.

கனம் அதிபரே, இந்தக் கட்டத்தைச் சற்று ஆழ்ந்து சிந்திப்பீர்களாக.

யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற சித்திரவதைப் பேர் வழியான பொலிஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம் பிள்ளையின் சரித்திரம் எப்படி அவலமாக முடிந்தது என்பதைத் தாங்களும் அறிவீர்கள் சிறீமாவோ பண்டார நாயக்கர் அதிகாரத்தின் போது நிகழ்ந்த அராஜக கிளர்ச்யின் தொடர்பாக தென்னிலங்கையில் பேரழகி மனம் பேரியைச் சித்திரவதை செய்து நாஜிகள் பாணியில் படுகொலை செய்த ராணுவ அதிகாரியைவிட இத்த ஆணவக்காரர் சித்திரவதை செய்வதில் மாகாவிண்ணன் என்பது பிரசித்தம், நான் அவதானித்தே வந்திருக்கிறேன். இவற்றையெல்லாம் தாங்கள் அறிந்ததே, பெண்ணாய்ப் பிறந்த எந்த ஒருவளும் மகிமைக்குரிய உன்னத தாய்குலத் தின் ஊற்றுக் கண் என்பதையும் யோசிக்காமல் உயர் பதவி வெறி கொண்டு தன்னாணவத்தில் தன் இனத்து இளைஞர் களை மட்டுமல்ல, தன் ஜென்மபூமியின் பெண்மணிகளையே மானபங்கமாக இம்சைப் படுத்திய மகாபாவியான அந்த இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை கதை பரிதாபமாக முடிந்தவேளையில், இந்தப் பெண்மணிகளில் ஒருவளே நெஞ்சீறலெடுத்து அழுது மூர்ச்சித்திருக்கிறா ளென்றால், பெண்களின் இதயம் இயல்பாகவே எப்பேர்ப்பட்ட மனித பாசம் கொண்டது என்பதை எந்த மூடனும் புரிந்து கொள்வான். ஓர் அரக்கன்கூட உணர்ந்து கொள்வான். ஆனால், தங்கள் அதிகாரத்தின் போது எனது படைப்பிரிவில் பணியாற்ற வந்த இந்தக் கப்டனுக்கு இதுவே புரியாமல் நிர்க்கதியான அந்த வீர மங்கையில் கோழைத்தனமாகப் பலாத்காரக் குற்றம் புரிந்திருக்கிறார். அவளின் பரிபூரணமான இசைவோடு அவர் அவளைப் புணர்ந்திருந்தாலும், பாவமான பாதகம் என்று கருதும் நான், பலாத்காரம் புரிந்த இந்தக் சுப்டனுக்கு என்ன தண்டனை வழங்குவது?

கட்டுப்பாடும் தேச பக்தியும் நேர்மை தவறாதவனுமே ராணுவ வீரன். இவற்றைவிட போலியான கவசம் எதுவும் இருக்கமுடியாது. இதைத்தான் நான் தெரிந்து வைத்திருக்கிறேன், ஆனால் நமது படைப்பிரிவில் குறிப் பாகத் தங்களது ஆட்சி அதகாரத்தில் பெரும்பாலும் கடைந் தெடுத்த காடையர்களும்,வப்பிகளும், கண்மூடித்தனமான காமவெறிக் கழிசடைகளும், கற்றறியா மூடர்களும் மலிந்துவிட்டதால், இவர்கள் பாஸிஜ ஹிட்லரின் நாஜிப் படைபோல் கூலிப்பட்டாளங்களாக கோழைசளாக வீணர்களாக விறுத்தர்களாக மாறிவிட்டார்கள். இவர்கள் பெற்ற தாயையும், உற்ற தங்கையையும், ஏற்ற காதலியை யும் இனங்காண முடியாத கண்ணவிந்த கபோதிகள். அல்லாவிட்டால் இந்தக் கப்டன் தானறியாத இந்த யுவதி யில் அந்த அகால வேளையில் மிருகம் போல் பலாத்காரம் புரியத் துணிவாரா? இப்பேர்ப்பட்ட பேர்வழிகளுடன் தான் நான் இந்தத் தேசத்திற்காக மாரடிக்க வேண்டியிருக்கிறது இவர்களே உண்மையான பயங்கரவாதிகளாக இருக்கிற போது, தங்கள் கற்பனையில் உதித்த ‘பயங்கரவாதிகளை’ எப்படி ஒழிப்பது?

9

மகிபரே, செவி மடுத்துக் கவனியுங்கள்.

யுத்த சன்னதமாடும் மனநிலையில் இருக்கிறவேளை பிலும் உணர்ச்சி செத்துச் சோர்ந்து போன வெறும் மாமிசப் பிண்டங்களில் தன்னிச்சையாக வெளிப்படுத்திய காமாக்கினியை விரசமாக விகாரமாகத் தணித்து விட்டு வீறாப்புடன் வெளியேறிய கப்டன். தன் சகாக்கள் புடை சூழ நின்று இளைஞர்களைப் பார்வையிட்ட போது மின்னிடி வேகத்தில் அதிரடியாக முகத்தில் விழுந்த குத்து எங்கிருந்து வந்ததென்று கணிக்க முன்பே முகங்குப்புற விழுந்து விட்டார். அந்தக் குத்தோடு கப்டன் செயலிழந்து மயங்கி விடுவான் என்றே எதிர்பார்த்தேன். ஆனால், கப்டன் திணறி எழுந்தார். நாசித் துவராங்களினூடாக ரத்தம் குபீரித்துக் குமுறிப் பீறிட்டது,

ஏலவே அந்த இளங்கன்னியில் சோரமாகக் கண் வைத்து, தக்க தருணத்தில் அப்பி இச்சை தீர்க்கக் கருதி யிருந்த சார்ஜண்ட் மேஜரே அந்தப் படைப்பிரிவுக்குள் ளிருந்து சற்றும் எதிர்பாராமல் கப்டன் முகத்தில் அப்படி மின்னி விளாசி விட்டான். நிச்சயம் இளைஞர் யுவதி களில் அறிவார்கள். ஆனால் அவர்களோ அந்த நெஷ்டூரத் தால் திகிலடைந்து விக்கித்துப் போய் நின்றார்கள்.

இந்த ராணுவத்தினனோ குய்யோ முறையோ என்று தூஷிணித்து மண்டப சாலை அதிர மிகப் பலமாகக் கத்தினான்:

“பயங்கரவாதிகளில் ஒருவன் எங்கள் கப்டனை அடித்துப் போட்டான். ஒரு பௌத்த சிங்கள வீரன் மேல் கைவைத்த பறைத்தமிழன் கரங்களில் உடனே விலக்கு மாட்டுங்கள். அவனை உயிரோடு விடக்கூடாது!”

ஏதோ ஒன்றில் கருக் கொண்ட விஷயம் தலைகீழாக மாறுபட்டு எப்படி வேறாக உருக்கொண்டிருக்கிறது பார்த்தீர்களா? முதலாளித்துவ தத்துவம் என்பது இது தான். விஷயம் எங்கோ இருக்க எதையோ எல்லாம் போட்டுக் குழப்பி அடித்து மனிதர்களின் மூளைகளையே கூழாக்கி விடுகிற சூத்திரம் அது அப்படித்தான் உலகம் முழுதும் முதலாளித்துவம் விஷயங்களைக் குழப்பி யடிக்கிற மாபெரும் சிந்தனாவாதிகளால் தான் இந்த நாடு சீர்கெட்டு, சுளுவான பிரச்சனையையே இப்படிச் சிக்கலாக்கிக் குழப்பியடித்திருக்கிறது. ஊர் குழம்பினால் உடையாருக்குத் தாயம் அல்லவா!

மான் குட்டிகளில் பாய்ந்த வேங்கைகள் போல் இந்தப் படைப்பிரிவு ராணுவத்தினர் போராளிகள் மீது பாய்ந்து குதறத் தொடங்கினார்கள். கரடு முரடான பூட்ஸ் லாடன்களின் வயம் பிசகிய ஒலிகள் மண்டபத்தில் ஓயாமல் கேட்கத் தொடங்கின. முடுக்கிவிட்ட யந்திரம் போல் எழுந்த அலறு சத்தம் காதைத் துளைத்தது.

ராணுவப் படைப்பிரிவின் வதை படலம் ஆரம்பித்து விட்டது.

இளைஞர் யுவதிகளாக – போராளிகளின் கேருந் தொனிகள் அடிபட்ட புறாக்களின் கீச்சுக்குரல் போல் ஈனித்துக்கேட்டன.

முகத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு திடிரெனத் துடித்து வீராவேசமாக எழுந்த கப்டன் நெஞ்சை அகல விரித்தபடி கர்ஜிக்கும் தொனியில் கத்தினான்.

“அற்றேன்ஷன்? போதும் நிறுத்துங்கள். இனி யார் மீதும் கை வைக்க வேண்டாம்”

சூறாவாளி வீசி ஓய்ந்த அமைதி சாலையில் நிலவியது.

அரைவாரில் மாட்டியிருந்த ரிவோல்வரை அதன் ‘சாக்’ படங்குப் பூட்டிலிருந்து மெல்ல எடுத்துக் குறிவைத்த கப்டன் மீண்டும் உரத்துச் சத்தம் போட்டான்.

‘எவனும் அசையக் கூடாது, அசைகிறவன் எவனோ அவனில் இந்தக் குண்டு உடனே பாயும்.’

தறிகெட்டு நிலை குலைந்து நின்ற அத்தனை பேரும் உதறியெடுக்கிற கெண்டைக்கால்களில் மண்டபத்தூண்களைப்போல் அசையாமல் நின்ற கோலம் கப்டன் கண்ணில் தெளிவாகத் தெரிந்தது.

ரிவோல்வரின் குழல் நுனியிலிருந்து நெருப்புக் கோளமாய்ப் ‘பளிச்’ சிட்ட ஒரு தீப்பொறி கண்ணில் மின்னிற்று.

இரத்தம் பீறிட்ட நெஞ்சை அழுத்துப்பிடித்துக் கொண்டு கண்மூடி விழிக்கு முன் ஆவேசமாக அலறித் துடித்த சார்ஜன்ட் மேஜர் மாலாரடித்துப் ‘பொத்’தெனக் கீழே விழுந்தான்.

சில வினாடிகளில் சார்ஜண்ட் மேஜர் உயிர் முற்றாகவே பிரிந்து விட்டது.

இறந்து போன சடலத்தைப் பார்த்துக் கொக்கரித்துச் சிரித்த கப்டன் பூட்ஸ் கால்களால் பிரேதத்தைப் புரட்டி ஒரு காலை அதன் மேல் அழுத்தி வைத்தபடி கனைத்துக் கொண்டே கர்ஜிக்கிறான்:

“ஒவ்வொருவனும் கவனத்தில் எடுக்க வேணும், ஒரு பெண்ணைப் பலாத்காரமாகக் கற்பழிக்கும் செயல், அவளைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும். இங்கே நாங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வந்தவர்களேயல்லாமல் பயங்கரவாதம் புரிவதற்கல்ல. இதை ஒவ்வொருவனும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்தக் கொலைஞனோ தான் தப்பித்துக் கொள்வதற்காக என் மீதுபாய்ந்து தன் கைவரிசையைக்காட்டிவிட்டிருக்கிறான். அந்தக் கன்னியிலும் என் மீதும் குதறிப் பாய்ந்த ஒரு வெறி பிடித்த மிருகமே உங்கள் மத்தியில் இதோ பிணமாகக் கிடக்கிறது. யுத்த காலத்தில் இதெல்லாம் சீரியசான விஷயமல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, இந்தச் சம்பவத்திற்காக உங்கள் மனசைப்போட்டு அலட்டிக் கொள்ளவோ சோர்ந்து போகவோ வேண்டிய தில்லை. நாங்கள் நாட்டை எவ்வளவு நேசிக்கிறோமோ அந்தளவிற்கு எதிரிகளால் வரும் துன்பங்களையும் மரணங்களையும் எதிர்கொள்ள வேண்டியவர்களாயுள்ளோம்…”

இத்தனை நேரமாக மலைத்துப் போய் ஊமையாக விருந்த அந்த யுவதி திடீரென்று போட்ட கூச்சல் அப்போது மண்டபம் ஏகலும் அதிர்ந்தது.

கப்டன் உஷாரானார். அவர் அவளைத் தேடி விரைவதற்குள் அவள் நின்ற நிலையில் மூர்ச்சித்து விழுந்தாள்.

அவருக்கு விஷயம் வெளித்துவிட்டது.

வெலவெலத்துப்போன அவர் முகம் குல்லிட்டது. நிதானம் இழந்துபோன கப்டன் சற்று வேளை நிலை குலைந்து தடுமாறினார். அவர் கண்ணில் சூன்யப் பிரதேசம் போல தெரிந்த மண்டப சாலையின் மங்கிய வெளிச்சமும் குன்றிப் போய் ஒரே அந்தகாரமாகிவிட்டது.

ஏதோ யோசனையில் ஆழ்ந்த கப்டன் ரிவோல்வரை -வறாகக் கைக்குள் அழுத்திக் கொண்டு உரத்த குரலில் உத்தரவிட்டார்.

“வீரர்களே, நீங்கள் அனைவரும் பரக்ஸ்ஸிற்கு உடனே திரும்பிச் செல்லுங்கள். பதினைந்து நிமிஷம் ஓய்வு எடுத்த பின் பரேட் கிறவுண்ட் முனங்கிலே உஷார் நிலை கொண்டு வரிசையாக நில்லுங்கள்”

“என்ன நிகழப் போகிறது?” என்று எவராலும் யூகிக்க முடியவில்லை ஒருவரை ஒருவர் தறுதறுத்து முழிசினார்கள்.

படைப் பிரிவினர் வெளியேறிய பின் போராளிகளை யும் கப்டனையும் தவிர மண்டபசாலையில் எந்த ஊச லாட்டமும் இருக்கவில்லை.

மண்டபசாலையின் கோடிப் புறத்தே உள்ள இரும்புக் கம்பி ஒன்றை எடுத்த கப்டன் எங்கோ மூண்டு கொடுத் துத் தெண்டிய போது மண்டபம் பகல்போல் வெளிச்சிட்டது.

ரிவோல்வரின் முனைப்புப் புடங்கைக் குதிப் பூட்ஸ் லாடனில் தட்டி விட்டு இடுப்பு வாரின் பூட்டிலே தொங் கும் சாக்கினுள் செப்பமாகச் செருகிய கப்டன் நெஞ்சு நிமிர்த்தி ஒவ்வொருவராக நோட்டம் விட்டார்.

“விடுதலைப் போராளிகளான உங்களையெல்லாம் பயங்கரவாதிகள் என்று கைது செய்துகொண்டு வந்த எமது படை வீரர்களின் பயங்கரவாதச் செயல்களை நீங்கள் இப்போது அனுபவித்தும் அவதானித்தும் இருக் கிறிர்கள். பயங்கரவாதிகளைக் கைது செய்து விசாரித்த பின் தண்டனைக்கான தீர்ப்பு வழங்குவதும், இத் தண்டனைகள் ராணுவ உயர் அதிகாரிகளாலேயே நிறை வேற்றப்படுவதும், அரசாங்கத்தின் இன்றைய நிறை வேற்றுச் சட்டங்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால், ராணுவ அதிகாரிகளான நாங்களும் மனிதர்களே என்பதை நீங்கள் சில தடவை மறந்தே போய்விடுகிறீர் கள். எங்களால் இம்சிக்கவோ, துன்பப்படவோ நேரிடுகிற போது எங்கள் மீது உங்களுக்கு எத்தகைய ஆத்திரமும் வெறுப்பும் ஏற்படுகின்றனவோ, அதுபோலவே நீங்களும் எங்களை இம்சிக்கும் போதும், தொல்லைப் படுத்தும் போதும், எங்களுக்கும் ஆத்திரம், கோபம் உண்டா கின்றன என்பதை நீங்கள் ஏன் உணர்வதில்லை?

நான் ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டேன், அதன் படி இன்று உங்கள் அனைவரையும், அதிகாலைக்கு முன் விடுதலை செய்ய முடிவு எடுத்து விட்டேன். நீங்கள் உங்கள் விருப்பம் போல் சுதந்திரமாக வெளியேறலாம். இந்த முடிவு உங்களுக்கு அதிசயமாகவோ, மகிழ்ச்சி யாகவோ இருக்கும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வெளியேறும் நீங்கள், எந்தவித சந்தடியும் செய்யாமல் சென்றுவிட வேண்டும். ஒரு நிபந்தனை. உங்களுக்காக காவல் நிலையச் சென்றியின் கேட் திறப்பட மாட்டாது. ஆகையால், முகாமைச் சுற்றி வளையம் போடப்பட்ட, முட்கம்பி வேலிகளைத் தாண்டியோ, நீக்கிக் கொண்டோ, உங்கள் வசதி போல், சுதந்திரப் பறவைகளாக வெளியேறலாம். இங்கே கொண்டுவரப் பட்டபின், உங்களுக்கு, என்னாலோ எனது படைவீரர்களாலோ, ஏதும் துயரமான கஷ்டமான சம்பவங்கள் ஏற்பட்டிருப்பின் அவற்றை இங்கேயே மறந்து விடுங்கள். தங்கள் கடமைகளைச் செய்யும் போது, படைவீரர்களுக்கு மட்டுமல்ல, இயக்கப் போராளிகளான உங்களுக்கும் தவறுகள் நேர்ந்து விடுகின்ற போது, தண்டனை வழங்கும் முறையும், இயக்கங்களுக்குள் மர்மமாகிவிடுகிறதல்லவா? அதுபோன்றே, இங்கே அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருப்பின், அவை உங்களுக்குள் மர்மமாகவே இருந்து போகட்டும்…

மகாகனந்தங்கிய அதிபரே, இதிற்கு மேல் விவரிக்க மனசு தளர்கிறது,

எமது படைப்பிரிவின் தலைமை அதிகாரிகள். எனது கட்டளைக்காகவும் காத்திராமல், தங்கள் மனம் போகிற போக்கில், மிகக் குரூரமாக, எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவமும் சான்று.

மகியரே, நெஞ்சு குல்லிட்டு நடுங்குகிறது.

கப்டன் தன் வஞ்சம் தீர்க்கக் கையாண்ட, நயவஞ்சக யுக்தி, அத்தனை கைதிகள் சடலங்களையும், முட்கம்பி வேலியில் தொங்க வைத்தது, இடம் பொருள் ஏவலுக்கு ஏற்றவாறு, அறிக்கை தயாரிப்பதில், மர்ம நாவலாசிரியர்களை விடச் சூரரான கப்டன் இந்த பயங்கரக் கொலைகளைப் பொய்யாகச் சோடித்து உண்மை போல் தயாரிக்க முடியாமல், கதி கலங்கிப் போனார்.

என் நெஞ்சை உருக்கும் வேதனை என்னவென்றால் கப்டன் தலைமைப் படைப்பிரிவினர் நடாத்திய படு கொலைகள் மிகப் பயங்கரமாக இருந்த போதும், பொய் யான இந்த அறிக்கையும் நான் ‘சரி’யென்று உத்தரவாதப் படுத்தித் தங்கள் சமுகத்திற்குச் சமர்ப்பிப்பதுதான்.

‘தப்பியோட எத்தனித்த பயங்கரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்’

பொய்யாகவே சோடித்த இந்த அறிக்கை தங்கள் அதிகாரத்தை மேலும் பலப்படுத்தும் என்பது மெய்யே. இந்த அறிக்கை நாளைய தினசரிகளை அலங்கரிக்கப் போவதும் உண்மையே.

விவகாரம் இப்படிப் போய்க்கொண்டிருந்தால் நாடு என்ன ஆகும்?

இனி ஒரு கணமும் என்னால் தங்கள் கட்டளைகளை ஏற்றுச் செயற்பட முடியாத நிலைக்கு, என்னை ஆளாக்கிக் கொண்டேன்.

ஒரு பரிகாரம் தேட வேண்டும்.

ஒரு ராணுவத் தளபதியான எனக்கு இலங்கை அரசியல், கலை இலக்கியம் சமுதாயம் பற்றி அறிந்த ஒரு வித்தகரின் ஞான போதம், என் மனச் சான்றைத் தட்டி விட்டிருக்கிறது. சிங்கள மக்களின் உள் உணர்வைத் தமிழ் மகன் ஒருவரால் எப்படி முழுமையாக உணர முடியாதோ அம்மாதிரியே தமிழ் மக்களின் உணர்வை சிங்கள மகன் ஒருவரால் உணர-உணர்த்த முடியாது என்பதாலேயே நான் இந்த முடிவுக்கு வர ஏதுவாயிற்று.

என்னால் தகர்த்தெறியப்பட்ட தம்பிக்கை தங்களுக்கு ஒரு சோதனையாகி விட்டதை நான் உணருகிறேன்,

இனி நான் எப்படிச் செயற்படுவேன் என்பதைத் தாங்கள் கசடறப்புரிவீர்கள் என்று திடமாக நம்புகிறேன்.

மகிமைக்குரிய அதிபரே,

எனது “படைவிலகல்” நிருபம் தங்கள் பதவிக் காலத்தில் தாங்கள் எனக்குத் தண்டனை வழங்க இயலாத போது அதிகாரம் இழந்த காலத்திலும் அர்த்தப்படலாம்.

இதனிமித்தம் தங்கள் அதிகாரம் பிறப்பிக்கும் புதிய உத்தரவு, என்னை மிரட்டலாம். எதனையும் எதிர் கொள்ளச் சித்தங் கொண்டே இந்த விவரணத்தை எழுதினேன் என்பதை மதியூகியான தாங்கள் சரியாகப் புரிவீர்களாயின், எனது பிரகடனம் வெகுஜனங்களோடு சம்பத் தப்பட்டிருப்பதையும், மக்கள் குரலாக வெளிப்பட்டிருப்பதையும் உணர்வீர்கள்.

இந்த விவரணத்தின் பிரதிபலிப்பு எப்படியெல்லாம் என்னை எதிர்கொள்ளும் என்பதை, நான் துலாம்பர மாக அறிவேன். தங்கள் வியூகத்தின் சட்டவாக்கப்பிடி எத்துணை வலுவாகவிருப்பினும், அனைத்தையும் எதிர் கொண்டு, தகர்த்தெறியவும் சித்தமாய் இருக்கிறேன்.

பொதுமக்கள் அனுகூலத்திற்காக என்றும் தங்களை எதிர் கொள்வேன்.

என்னை மன்னியுங்கள்.

(இடை நிறுத்தம்)

– மகாகனம் பொருந்திய…, முதற் பதிப்பு: மார்ச் 1994, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *