போராளி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2017
பார்வையிட்டோர்: 7,703 
 

ராகவ் மணி எட்டாச்சு கெய்சர் போட்டு இருக்கேன் சீக்கிரம் குளிச்சுட்டு வா., டிபன் ரெடி., காயத்திரீ அழைத்தாள்.

கொஞ்சம் இரும்மா ஆபிஸ் வேலையை முடிச்சுட்டு வரேன் என்று சொல்லிக்கொண்டே ராகவ் முன்னால் இருந்த லேப்டாப்பில் ஆபீஸ் பைலை மினிமைஸ் செய்துவிட்டு பேஸ் புக் பக்கத்தை திறந்தான் ஏகப்பட்ட மெஸேஜ் இணைப்புகள். வெள்ளோட்டமாக பார்த்துவிட்டு அவனது ஸ்டேடஸ் பக்கத்தில் “இருக்கு ஆனால் இல்லை ” என்று போஸ்ட் செய்துவிட்டு லாப்டாப்பை மூடி கையில் மொபைலுடன் பாத்ரூம் நோக்கி சென்றான்.

எனக்கு பெண் பிள்ளை இல்லைங்கற குறையைஅடிக்கடி நீ தீர்த்து வைக்கறடா ராகவ் … எப்பபார்த்தாலும் அமைதியா குனிந்ததலை நிமிராமல் கையில் மொபைலுடன் போகும்பொழுது எனக்கு அந்த ஏக்கம் போய்டுதுடா ராகவ்..

காயத்திரியை முறைத்துவிட்டு பாத்ரூக்குள் சென்றான் ராகவ்.

சிறிது நேரத்தில் பாத்ரூமிலிருந்து ஐய்யய்யோ… என்று அலறினான். அலறலை கண்டு பதறினாள் காயத்திரி.

டேய் ராகவ் என்னடா ஆச்சு… கெய்சர் ஏதும் ஷாக் அடிச்சதா… பதறினாள்.. பதில் ஏதும் வராமல் இருக்கவே குழப்பத்துடன் பாத்ரூம் அருகிலேயே நின்று கொண்டிருந்தாள்.. சிறிது நேரத்தில் ஏதும் நடக்காததுபோல் ராகவ் கையில் மொபைலுடன் தலையை துவட்டிக்கொண்டு ரூமுக்குள் சென்றான்.

காயத்திரீயும் அவன் பின்னாடியே சென்று அவன் கத்தினதிற்கான காரணத்தை கேட்டாள்.

அதில்லம்மா… பேஸ் புக்ல. என் பக்கத்துல இருக்கு ஆனா இல்லைனு ஒரு ஸ்டேடஸ் போட்டேன்.. அவ்வளவுதான் தேள எடுத்து தெருவுல விட்டுடூவாங்க போல … மத்திய அமைச்சர் வெட்டுக்கிளி வேங்கையனுக்கும் நேத்து நடந்த தொழிலதிபர் கார் டிரைவர் கொலைக்கும் சம்பந்தம் இருக்குறமாதிரீ என் ஸ்டேடஸ்ல ரூமர கிளப்பிவிடுறானுங்க அதான் பயந்துட்டேன்.

அம்மாவிடம் மொபைலை காண்பித்தான். ராகவ் போட்ட ஸ்டேடஸ் கீழே நூத்துக்கு மேற்பட்ட லைக்குகளும் பத்துக்குமேற்பட்ட ஷேர்களும் பல கமெண்டுகளும் வந்துக்கொண்டிருந்தது.

போராளீ ராகவ் வாழ்க… உண்மையை தைரியமாக சொல்லும் சிங்கமே சீறீ பாய்., …..ஏய் வெட்டுகிளீ நீ வெட்டினாதான் கிளி எங்க அண்ணன் மொபைல தட்டினா நீ பலி…

என்னடா ராகவ் ….. விபரீதமா இருக்கு விஷயம் பெரிசாகறத்துக்குள்ள உன் ஸ்டேடஸை டெலீட் பண்ணிடுடா… இல்லைனா போணதடவ பிரச்சனைமாட்டினதுபோல மாட்டிடுவடா …

இல்லம்மா அப்படி டெலிட் பண்ணீணா நான் பயந்துட்டேனு சொல்லுவாங்க என்ன வச்சு மீமீஸ் போட்டே வெட்டுகிளி என்னை வெறுப்பேத்துவான். வேறவழியிலதான் இதை கையாளனும்.
அப்ப போதடவமாதிரி ஆபீஸ பத்துநாள் லீவபோட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கபோறீயாடா…

அம்மாவை முறைத்துவிட்டு ஆபீஸ் கிளம்பினான் ராகவ்.

ஆபீஸில் பக்கத்துஸீட் மாதவன் என்னடா ராகவ் அடுத்தபிரச்சனைய கை எடுத்துட்டீயா ஆனாலும் உனக்கு ரொம்ப தைரீயந்தாண்டா மச்சீ…

டேய் வெறுப்பேத்தாதடா… என்னபத்தி உனக்கு நல்லா தெரியும் ஆபீஸில் இரண்டு நாள் லீவு போடனும் னா கூட பயப்படுவேன்… என்னபோய் போராளி அது இதுனுட்டு… ஏதோ பொழுது போக்குறத்துக்காகவும் சில லைக்கிற்கும் ஆசைபட்டு போஸ்ட் பண்ணிணதுக்காக இப்படி ஒரு போராளீனு பட்டமா…. எங்கேந்தாவது கிளம்பிடுறாங்க..

விடுடா பாத்துக்கலாம்… பிரச்சனை ஏதும் பெருசா வராது.

பிரச்னை ஆரம்பமாயிடுச்சு மாதவா… இன் பாக்ஸ்ல வெட்டுகிளி மெஸேஜ் அனுப்பி இருக்கான்டா…. ஆதாரம் இருக்கானு கேட்டு இருக்கான்டா… ஏதாவது ஏடாகூடமா எழுதின கை இருக்காது வேற மெஸேஜ் பண்ணிஇருக்கான்டா… இப்ப என்னடா பண்றது.

உன்னை உசுபேத்தின அந்த கமெண்ட் யார் அனுப்பியது..

நண்டு நாரதர் னு எவனோ ஒருத்தன் டா… டிரைவர் கொலைல கிளிக்கு சம்பந்தம் இருக்கு ஆனா இல்லைனு நீங்க போட்டது தெளிவா புரியுதுனு போட்டு இருக்கான்டா இதுக்கு லைக்வேற ஐம்பத தாண்டிடுச்சுடா… போனதடவஇப்படி தான் ” நான் கருப்புடா ” போட்ட ஸ்டேடஸ எவனோ ஊதி விட்டு கருப்பு நெருப்பா மாறி கலரை ஜாதியோட ஒப்பிட்டு ஊரே கலவரபட்டு ஒரு வழியா அது இல்லைனு நிருபிக்கருத்துக்குள்ள படாதபாடுபட்டு போராளினு பட்டத்தோட சுத்திட்டு இருக்கேன். இப்போ புதுசா இது வேற புதுசு புதுசா கிளப்பரானுங்க…

விடுடா பாத்துக்கலாம்… பிரச்சனை ஏதும்பெருசா வராது.

அப்பொழுது தான் அவன் இன்பாக்ஸில் நண்டு நாரதர் அனுயியய அந்த வீடியோ கிளிப்பிங் வந்தது. முப்பது வயது மதிக்கதக்க வாலிபன் ஒருவன் நடைபாதையில் நடந்து வந்து கொண்டிருந்தான் அப்பொழுது அவனருகில் வந்தகார் ஒன்றிலிருந்து கை ஒன்று நீண்டு அவனை காருக்குள் இழுத்து கொண்டது. எதார்தமாக மொபைலில் பதிவான காட்சி மாதிரி இருந்தது.

கீழே நண்டு நாரதர் அனுப்பிய மெஸேஜ் ஒன்று… நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த கை வெட்டுகிளி வேங்கையனுடையது… காரினுள் இழுக்கப்படும் நபர்தான் கொலைசெய்யப்பட்ட கார் டிரைவர் சாரதி. இனி உங்களின் ஆட்டம் ஆரம்பம் ஆகட்டும்…

நான் என்ன கோலியாட விளையாடரேன்… பேசாம என்னோட. ஸ்டேடஸை டெலிட் செய்யவேண்டியதுதான். மொபைலை கையில் எடுக்கும் போதுதான்அந்த கால் வந்தது..

ஹலோ….

தம்பி நான் எதிர் கட்சி தலைவர் ஏகாம்பரம் பேசுரேன்.

ராகவ் சற்று பதட்டமாக சொல்லுங்க சார்… நான் ராகவ் பேசரேன்.

நேர விஷயத்துக்கு வரேன்… வெட்டுகிளிக்கும் சாரதி கொலைக்கும் சம்பந்தம் இருக்குனு நீங்க சொல்றதாக. எனக்கு செய்தி வந்தது அது விஷயமா ஏதாவது ஆதாரம் இருந்தா எனக்கு அ னுப்புங்க. எதையும் என்ன கேட்காம பப்ளீஷ் பண்ணீடாதீங்க… உங்க நல்லதுக்குதான் சொல்றேன் தம்பி. இது தான் என் மொபைல் நம்பர் ஏதாவது விஷயம்னா என்ன கூப்பிடுங்க…

ராகவ் மொபைலை ஆப் செய்துவிட்டு திருதிருவென்று முழித்தான்.
இப்போ என்னடா பிரச்சனை ராகவ்…

ஏகாம்பரம் டா போன்ல. ஆதாரம் இருந்தா அத. அவர்கிட்டதான்கொடுக்கனுமாம் . என்கிட்ட ஒன்னும் இல்லைனு சொன்னா இவன் உதைப்பான் போல…

இருக்கு சொன்னா அவன் உதைப்பான்…

மாதவ னை பார்த்து முறைத்தான்..

ராகவ் அந்த நாரதருக்கு போன்போடுடா…

அது யாருணே எனக்கு தெரியாது சும்மா பேஸ்புக் நண்பர்.

சரி… உன் நம்பர அனுப்பி அவனை பேசச்சொல்லு,..

சிறிது நேரத்தில் நண்டு நாரதர்கிட்டஇருந்துஅழைப்பு வந்தது.

சார் நான் நண்டு நாரதர்….

நான் ராகவ் பேசரேன். என் ஸ்டேடஸ் ல என்ன சொன்னேன்னு தெரியாம எதுக்கு இப்படி கமெண்ட் போட்டு இப்படி ப்ராபளத்த ஏற்படுத்தறீங்க .. விஷயம் பெரிசாபோச்சு ஆதாரம் இருக்கா அது இதுன்னு ஒரே தொல்லை …

நான்தான் என்கிட்ட இருந்த ஆதாரத்தை உங்களுக்கு அனுப்பி இருந்தேனே ராகவ் சார்… இது விஷயமா நான் உங்களைஇன்னிக்கு நேரில் சந்தித்து பேசுகிறேன் ஆபிஸ் முடிந்து போகும்போது ஈவினிங் நாம பனகல் பார்க்ல சந்திச்சு பேசலாம்.

சாயந்தரம் ஆபிஸ் முடிந்து ராகவ் பனகல் பார்க்கில் இருந்தபொழுது மணி ஆறு சற்று இருப்புக்கொள்ளாமல் பார்க்கில் அங்கேயும் இங்கேயுமாக நடந்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் நண்டு நாரதரிடமிருந்து கால்வந்தது. ராகவ் நான் பார்க் வாசலில் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் நீங்க எங்க இருக்கீங்க.,.

அப்படியே திரும்பி இரண்டாவது பெஞ்சுக்கு வாங்க .

இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
பின் நண்டு நாரதர் பேச ஆரம்பித்தான்.

வெட்டுகிளியோட பொண்ணு சாந்தி க்கும் டிரைவர் சாரதிக்கும் தொடர்பு இருந்து இருக்கிறது. அதுதெரிந்த வெட்டுகிளி சாரதியை கூப்பிட்டு கண்டிச்சு இருக்கான். வெட்டுகிளியும் சாரதி வேலை செய்த தொழில் அதிபர் ரத்தினமும் திரைமறைவு நண்பர்கள். ரத்தினத்தின் கருப்பு பணத்தை எல்லாம் வெள்ளையாக மாற்றுவதற்கு வெட்டுகிளி உதவிசெய்துள்ளான். அதற்கு சாரதியை பகடையாக இருவரும் உபயோகபடுத்தி இருக்கின்றனர். இந்தவிஷயம் சாரதிக்கு தெரியவர சாந்தியும் சாரதியும்தனிமையில் இருந்த வீடியோவையும் வெளியிடப்போவதாகமிரட்டி வெட்டுகிளியை சாரதி பிளாக்மெயில் பண்ணி இருக்கான் . இருக்கான .இத காரணமா வச்சு சாரதியைவெட்டுகிளி தீர்த்துகட்டிவிட்டான்

இந்த விவரம் உண்மைதானா எப்படி சார் இதை நான் நம்பறது.

நம்புங்க சார் ஏன்னாநான்தான் அந்த. தொழில் அதிபர் இரத்தினம்.

சற்று பதட்டத்துடன் சார் நீங்க இரத்தினம் னா எதுக்கு சார் வெட்டுகிளிய காட்டிகொடுக்க நினைக்கறீங்க… நீங்களும் தானே சம்பந்தபட்டுஇருக்கீங்க…

உண்மைதான் ஆனா எனக்கும் சாரதி கொலைக்கும் சம்பந்தமும் இல்லை. என்னோட கருப்பு பணம் பலகோடியை வெள்ளையாக மாத்தி வெட்டுகிளி வைத்துக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டான். இந்த பிரச்சனையை நான் கோர்ட்டுக்கோ போலீஸுக்கோ கொண்டுபோகமுடியாது. இதற்கு ஒரே வழி வலைதளம்தான். அதனால் தான் நான் உங்கள் உதவியை எதிர்பார்த்து இதை சொல்கிறேன்.

வெட்டுகிளி உள்ள போயாச்சுன்னா என் பணம் என் கைக்கு வந்துடும்.

இப்ப நான் என்ன பண்ணணும்னு நீங்க நிணைக்கிறீங்க….

இரத்தினம் ஒரு பெண் டிரைவ் எடுத்து ராகவ் கையில் தந்தான்.. இதில் வெட்டுகிளியும் சாரதியும் பேசிக்கொண்டது சாரதியுடனான அந்த பெண்ணின் நட்பு எல்லாமே இருக்கு . இதை எப்படியாவது நெட்ல. லீக் செய்துவிடு மத்தத மக்கள் பார்த்துப்பாங்க…

ராகவ் சற்று யோசித்தான் சார்… சாரதி போய் சேர்ந்தாச்சு அப்படி இருக்க அந்த பொண்ணோட விவகாரத்த ஏன் சார் இழுக்கனும் அந்த பொண்ணுக்கு கெட்ட பேர் வராதா…

ரொம்ப யோசிக்காதிங்க ராகவ் இதுல உங்கபேர் அடிபடாம பாத்துக்கோங்க புரியும்னு நிணைக்கிறேன் என்று மிரட்டும் தொணியில் சொல்லிவிட்டு இரத்தினம் எழுந்து சென்றுவிட்டான்.
அதுவரையில் செடிகளின் மறைவிலிருந்த மாதவன் இவர்கள் பேசியதை அப்படியே ரெக்கார்டு செய்த மொபைலோடு வெளியே வந்தான்.

மாதவா இரத்தினம் சொன்னதை கேட்டில. நான் இப்ப என்னடா பண்ணுவது என்று கேட்டான்..

ஒன்னும் கவலைபடாத மச்சி … வா … பாத்துக்கலாம் என்று கூறி இருவரும் ஒன்றாக. பைக்கில் கிளம்பினர்..

சற்று தொலைவிலிருந்த கார் ஒன்றிலிருந்து ஏகாம்பரம் இதை கவனித்துக்கொண்டிருந்தார்.

மாதவன் நேராக பைக்கை பார்க்செய்து விட்டு இருவரும் ஆபிஸினுள் நுழைந்தனர். ராகவ் காயத்திரிக்கு போன் செய்து அம்மா நான் வருவதற்கு கொஞ்சம் லேட் ஆகும் நீ சாப்பிட்டுவிட்டு படுத்துக்கோ …. என்று சொல்லிவிட்டு மொபைலை சுவிட்ச் ஆப் செய்தான்.

இரத்தினம் கொடுத்த பென்டிரைவ் எடுத்து சிஸ்டத்தில் போட்டு இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். அதில் சில எடிட்டிங் அப்லோடிங் கரக்க்ஷன் செய்து அப்பெண்ணின் சம்பந்தம் பற்றிய தகவல்களை அழித்தனர். புதிய இரண்டு சீடிகளில் அவற்றை காப்பி பண்ணி முடிக்கையில் மணி இரண்டு ஆகி இருந்தது. இருவரும் கேபினை விட்டு எழுகையில் கண்ணாடிக்கு வெளியே ஏகாம்பரம் இவர்களை பார்த்து சிரித்தார்.

தம் பி எனக்கு எல்லாவிவரமும் தெரியும்.. நீங்களும் வேலையை முடிக்கட்டுமேனு காத்திருந்தேன்.. எனக்குவெட்டுகிளி இந்த எலக்ஷன்ல போட்டிஇடக்கூடாது. அவன் உள்ள இருக்கனும் அவ்வளவு தான். என் கையில் அந்த சீடிய கொடுங்க மத்தத நான் பாத்துக்கறேன். உங்களுக்கு எந்த தொந்நரவும் வராது நீங்க நிம்மதியா வீட்டுக்கு போங்க. ஏகாம்பரம் சீடிய வாங்கிக்கொண்டு கிளம்பினார்.

ராகவ் வீட்டிற்கு சென்று ஷூவை கழட்டிக்கடு டீவியை ஆன் செய்தான். முக்கியசெய்தி சாரதி கொலைவழக்கில் வெட்டுகிளி வேங்கையன் கைது கூடவே அவனது கூட்டாளி பிரபல தொழிலதிபரும் உடன் கைது செய்யப்பட்டார். வியாபரத்தில் ஏற்பட்ட. பிரச்சனையின் காரணமாக. இக்கொலை நடந்திருக்க கூடும் என போலிசார் சந்தேகிக்கின்றனர்.

ராகவனின் மொபைல் எடுத்து பேஸ்புக்கில் “நல்லதே நடக்கும் ‘ என ஸ்டேடஸ் அப்லோடு பண்ணினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *