பொன்னியின் செல்வி!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 4,954 
 

இன்னும் இரண்டு வாரத்தில் இந்துவுக்கு பிரசவம் ஆகிவிடும் !

இந்து ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் அட்மிட் ஆகப் போவதில்லை !!

ஏனென்றால் இந்து ஒரு புலி ! கறுப்பும் ஆரஞ்சும் வரிகள் போட்ட இருநூறு கிலோ எடையும் எட்டடி நீளமும் உள்ள ஆரோக்கியமான புலி !

கண்ணிரண்டும் மஞ்சள் நிறத்தில் பளபளவேன்று மின்னும் இவளின் அழகைப் பார்த்து வீரா ஆசைகொண்டதன் விளைவுதான் இப்போது இந்துவின் தற்போதைய நிலைக்குக் காரணம் !!

வீரா அவனுடைய வேலை முடிந்ததும் கிளம்பி விட்டான் !

வாரம் ஒரு தடவை இந்துவுக்கு நல்ல மான்குட்டியோ , காட்டுப்பன்றியோ , காட்டெருமையோஅடித்துக் கொண்டுவந்து தந்துவிடுவான் !!

நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறான் !!

இந்துவின் இப்போதைய கவலை பிரசவத்திற்கு ஒரு பத்திரமான இடத்தை தயார் செய்வது தான் !!!

ஒரு வழியாக ஒரு இருண்ட குகையைக் கண்டுபிடித்து விட்டாள் !

வாரம் ஒரு தடவை வீரா குடுக்கும் இறைச்சி போதவில்லைதான் !!

இந்துவுக்கு பிரசவவேதனை தொடங்கி விட்டது !! உறுமல் சத்தம் காட்டின் எல்லா பக்கமும் எதிரொலித்து!

கொஞ்சம் கஷ்டமான பிரசவம் தான் ! வீரா எப்படியோ சமயத்துக்கு வந்து விட்டான் ! அவளின் தலையை நக்கிக் குடுத்தான்!!

அழகழகாய் நாலு புலிக்குட்டிகள்! இந்துவுக்கு பயம் ! வீரா எங்கேயாவது குட்டியைத் தின்று விடுவானோ !!!

குட்டிகளை விட்டு கண்ணை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் எடுக்கவேயில்லை !!! நல்ல வேளை !!! அவள் பயந்தமாதிரி ஒன்றும் நடக்கவில்லை !!!

குட்டிகள் அழகோ அழகு !!! கறுப்பும் ஆரஞ்சும் வரி வரியாய் !!!கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு இருந்தது !!!

இரண்டு பெண் ! இரண்டு ஆண் குட்டிகள் !!! ஒரு நிமிஷம் விடாது பாலை உறிஞ்சின வண்ணம் தான் !!

இந்துவுக்கு பெருமை பிடிபடவில்லை !!
குட்டிகளை நக்கி நக்கி குடுத்து சந்தோஷப்பட்டாள்!

இரண்டு வாரத்தில் கண்ணை திறந்து பார்த்தது !! அம்மாவைப் பார்த்ததும் ஆசையாய் மேலே ஏறி குதிக்க ஆரம்பித்து விட்டது !!

பொன்னி, காளி , ராணி ‌, மாரி !!!

நாலுபேரில் மாரிதான் பெரிய குட்டி ! மூணு பவுண்டுக்கும் கொஞ்சம் மேலே !!

பொன்னி எல்லோரைக்காட்டிலும் ‌ எடை கம்மி ! அம்மாவுடனே ஒட்டிக் கொண்டிருந்தாள் !!!

நாலு பேரும் ஓடிப் பிடித்து விளையாட இடம் போதாது போல் தோணியது ! இந்து கொஞ்சம் பெரிய இடம் கண்டுபிடித்து விட்டாள் !

ஒவ்வொரு குட்டியாய் மெதுவாக, வலிக்காமல் கவ்விக்கொண்டு போய் புது இடம் மாற்றினப்புறம் தான் மனசு நிம்மதியாச்சு !!

இரண்டு மாதமாகியும் விட்டது ! பால்குடியை நிறுத்த வேண்டுமே !!!

இந்து முடிந்தவரை பக்கத்திலேயே இரை தேட ஆரம்பித்தாள் !!! வீராவையே நம்பிக்கொண்டிருக்க முடியுமா ???

ஒரு குட்டி மான் அகப்பட்டது ! கழுத்தைப் பிடித்து கவ்விக் கொண்டு குட்டிகள் முன்னால் போட்டாள்! !!

குட்டிகளுக்கு மானைப் பார்த்ததும் ஒரே பயம் !! மான் துடிப்பதைப் பார்த்து ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டது !!!

ரத்தத்தைப் பார்க்க புதிதாக இருந்தது !!

கொஞ்சம் கொஞ்சமாய் மானின் துடிப்பு அடங்கியது !! இந்து இறைச்சியைப் பிய்த்து குட்டிகள் முன்னால் போட்டாள் !!!!

குட்டிகளுக்கு இன்னும் பயம் தெளிந்தபாடில்லை ! நாலு பேரில் காளி தான் தைரியசாலி !

மெள்ள கிட்டே போய் லேசாய் நக்கிப் பார்த்தான் ! அவனுக்கு பிடித்து விட்டது !!

இந்து பிய்த்து ஊட்டி விட்டாள் ! மற்ற மூன்றும் பார்த்துக்கொண்டிருந்தேயொழிய கிட்ட வரவேயில்லை !

காளி அம்மாவுடன் வெளியில் போகத்தொடங்கி விட்டான் !

ஆறு மாசம் ஆகிவிட்டது ! குட்டிகள் நன்றாக இறைச்சியை சாப்பிட ஆரம்பித்து விட்டது ! பால் குடியை சுத்தமாய் மறந்து விட்டது !!!

பொன்னியைத் தவிர !!!!!

பொன்னியைப் பற்றி இந்துவுக்கு கவலை வர ஆரம்பித்தது !!

இறைச்சியை முகர்ந்து பார்த்தாலே பொன்னிக்கு குமட்டிக் கொண்டு வந்தது !!

எத்தனை நாள் பாலையே குடித்துக் கொண்டிருக்கும் ?? மற்ற குட்டிகளெல்லாம் நன்றாய் கொழு கொழுவென்று வளர்ந்து விட்டது !

ஒரு வேளை மான் பிடிக்கவில்லையோ ? சின்ன பன்றிக் குட்டியைப் பிடித்து ஊட்டியது !

ஊஹூம் ……தொட மாட்டாளாம் !!

இந்து வேட்டையாடப் போகும் போது குட்டிகளும் போக ஆரம்பித்தது !

இந்து பாய்ந்து போய் மான் குட்டியைப் ‌பிடிப்பதைப்பார்த்து காளிக்கு ஒரே ஆச்சர்யம் !

இரண்டே நாளில் ஒரு குட்டியை கவ்விப் பிடித்து விட்டான் !! இந்துவுக்கு பெருமையாய் இருந்தது!!

ஆனால்…. பொன்னி …!!! பாலையும் நிறுத்தி விட்டாள் !! பொன்னி இளைத்துக் கொண்டே போனாள் !! ஒன்றுமே சாப்பிடாமல் எப்படி ????….

ஆனால் பொன்னி ஒன்றுமே சாப்பிடாமல் இருக்க முடியுமா ??? பசி வயிற்றைக் கிள்ளியது !!

எல்லோரும் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள்!

மெல்ல சத்தம் போடாமல் எழுந்து தூரத்தில் போய் பச்சை பசேலென்ற புல்லைக் கொஞ்சம் பிய்த்து தின்றது. !

“ஆஹா !! என்ன ருசி !! ! பொன்னிக்கு எல்லோரையும் எழுப்பி சொல்லவேண்டும்போல ஆசையாய் இருந்தது ! ஆனால் பயமாகவும் இருந்தது !

சரி! காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று சத்தம் போடாமல் வந்து படுத்து விட்டது !!

காலையில் எழுந்ததும் கொஞ்சம் சுறுசுறுப்பு வந்துவிட்டது !! ஓடிப் பிடித்து விளையாட ஆரம்பித்தது !!

மறுபடி ராத்திரி பசி ஆரம்பித்து விட்டது ! இறைச்சியைத் தின்றதால் மற்ற மூன்றுக்கும் ஒரு வாரம் பசி தாங்கும் ! ஆனால் பொன்னி வெறும் புல்லைத்தானே தின்கிறாள் !

பொன்னி சுற்றும் முற்றும் பார்த்தாள் ! !! ஒரு மரத்தில் சிவப்பு பழங்கள் !! ஆசையாய் இருந்தது ! தின்று பார்க்கலாம் !!

‘அப்பா ! இவ்வளவு ருசியான ஒரு பழத்தை எப்படிப் பார்க்காமல் விட்டோம் ?? மரத்தையே மொட்டையடித்து விட்டாள் !!!

மறுபடியும் சத்தம் போடாமல் வந்து படுத்து விட்டாள் !!!

இப்படியே ஒரு வருஷம் ஒடி விட்டது ! அம்மா கொண்டு வந்து போடும் இறைச்சியைத் தின்பது மாதிரி நடிக்க வேண்டி இருந்தது !!

மாரியும் காளியும் தாங்களே வேட்டையாட ஆரம்பித்து விட்டார்கள் !

பொன்னிக்கு அம்மாவிடம் சொல்ல இன்னும் தைரியம் வரவில்லை !!!

ஒரு நாள் ராத்திரி பொன்னி மரத்திலிருந்து பழத்தைப் பறித்து தின்பதை ராணி பார்த்துவிட்டாள் ! அம்மாவிடம் போய் உடனே சொல்லியும் விட்டாள் !!

இந்துவுக்கு நம்பவே முடியவில்லை ! அவள் இதுவரை கேள்விப்பட்டதுகூட கிடையாது !!

பொன்னியைக்கூப்பிட்டாள்!!!!

“ராணி சொல்கிறாளே !! நீ பழம் சாப்பிடுவதைப் பார்த்தாளாமே !! நிஜமா ???”

“ஆமாம்மா !! பழம் எத்தனை இனிப்பு தெரியுமா ?? நீங்களும் சாப்பிட்டு பாருங்கள் !! கஷ்டப்பட்டு , மானைத்துரத்தி, பாவம் அதைக் கொன்று …… பழங்கள் இனிப்பாய் , நல்ல ருசியாக இருக்கும்மா !!! எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது !!!!”

அம்மாவுக்கு கோபம் வந்தது !!

“பொன்னி ! உனக்கு பிடிவாதம் கூடாது ! காட்டு நடப்பு தெரியாமல் பேசுகிறாயே !!

உன்னேட பல்லைப் பார் ! நகங்களைப் பார் !! எத்தனை கூர்மை !! இறைச்சியைத் தினபதற்காகத்தானே உனக்கு இவ்வளவு கூர்மையான பற்கள் இருக்கிறது !! இதைவைத்துக் ‌ கொண்டு பழங்களைப் போய் சாப்பிடுவார்களா ??

இது ஒரு காடு !! இங்கே எல்லாருமே வேட்டையாடித்தான் சாப்பிட வேண்டும் !! உன்னையே முதலையோ அல்லது யானையோ பிடித்துவிட்டால் தப்பிக்கக்கூட தெரியாதே !

பொன்னி உன்னை நினைத்து எனக்கு தூக்கம்கூட வரமாட்டேன் என்கிறது !

பிடிவாதம் பிடிக்காதே ! என்னோடு வேட்டைக்கு வா ! நீயே மானைப் பிடித்து தின்று பார் !! அப்புறம் நீ பழத்தை திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாய் !!”

இதெல்லாம் காதில் விழுந்தால் தானே !!

“அம்மா ! எனக்கு நிச்சயமாக மாமிசம் சாப்பிட முடியாது !! நான் உன்னோடு கூடவே இருந்து விடுகிறேன் !! என்னைப் பற்றி கவலைப்படாதே …..

நான் வேண்டுமென்றே பண்ணவில்லை !! என்னை நம்பும்மா !!!!! என்னை ஏன் யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் ????

இரண்டு வருஷமாகிவிட்டது !!

ராணி , மாரி , காளி மூன்று பேரும் தனியாக போய்விட்டார்கள் !! பொன்னி அம்மாவுடனே பழம், காய், புல் என்று தின்றுகொண்டு சந்தோஷமாய் இருந்தது !!

பொன்னி மற்ற புலிக்குட்டிகள் மாதிரி பலசாலியாக இல்லையோ என்று இந்துவுக்கு தோன்றியது !

அவள் பயந்தமாதிரி ஒரு நாள் நடந்து விட்டது !!

வேட்டையாடமல் இந்துவையே சுற்றி சுற்றி வருவதால் பொன்னிக்கு எல்லா புலிகளைப் போல இல்லாமல் , உடம்பு இளைத்தே இருந்தது !

பக்கத்தில் ஒரு குளம் இருந்தது ! அதில் தினமும் நீந்த வேண்டுமேன்று இந்து கண்டிப்பாக சொல்லிவிட்டாள் !!

பொன்னிக்கும் நீச்சல் பிடிக்கும் !

அன்றைக்கு நீந்தி முடித்து கரையேறும்போது ஒரு முதலை காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டது !!

பொன்னிக்கு பயம் பிடித்துக் கொண்டது !! அவளுக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை !!!

பெரிதாக உறுமியது ! குரல் எழும்பவேயில்லை ! அம்மா எத்தனை தடவை சொன்னாள் ??

“பொன்னி !! நீ இறைச்சி சாப்பிட வேண்டாம் !! ஆனால் எப்படி வேட்டையாடுவது என்றாவது தெரிந்திருக்க வேண்டாமா ! அப்போதுதானே உன்னை ஏதாவது துரத்தினால் வேகமாக ஓடி தப்பித் கொள்ள முடியும் !!!

அம்மா சொன்னதை கேட்டோமா ??? பொன்னிக்கு அழுகை அழுகையாய் வந்தது !

திடீரென்று எங்கிருந்தோ பாய்ந்து வந்தாள் இந்து! முதலையின் வாலைக் கவ்வி இழுத்தாள் !

கழுத்தைப் பற்களால் கடித்தவுடன் பிடியை விட்டுவிட்டது முதலை ! தப்பித்தோம் பிழைத்தோம் என்று பொன்னி அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள் !!!……….

பொன்னி காணாமல் போய் ஒரு வாரம் ஆகிவிட்டது ! இந்து தேடாத இடம் இல்லை !

காளி , ராணி , மாரி மூன்று பேரும் இந்துவை விட்டுப் போய் இரண்டு வருஷமாயிருந்தது!

இந்து கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை !!!! அவர்கள் இப்போது நன்றாக வேட்டையாட பழகிக்கொண்டு விட்டார்களே !!!!

ஆனால் பொன்னி ………????

இன்னமும் வேட்டைக்குப் போகாமல் , தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமல் , குழந்தையாக இருக்கிறாளே !!

என்ன ஆயிருக்கும் ???காலில் அடிபட்டதே ! ஏதாவது காட்டுப் பன்றி கடித்துப் போட்டிருக்குமோ ??

இந்துவுக்கு இரை தேடப் போகக்கூட பிடிக்கவில்லை !! ஆனாலும் பசி எடுத்தால் போய் தானே தீர வேண்டும் !

மெல்ல மெல்ல இன்னொரு கூட்டத்துடன் சேர்ந்து கொண்டாள் ! இப்போது வேலா என்ற புதிய நண்பன் கிடைத்து விட்டான் !

கொஞ்சம் கொஞ்சமாய் பொன்னியை மறக்கப் பழகிக் கொண்டாள் !!

ஆமாம் …….பொன்னிக்கு என்னதான் ஆயிருக்கும் ????

***

பொன்னி கண்ணைத் திறந்து பார்த்தாள்!! மயக்கமாக இருந்தது !! எழுந்திருந்து நிற்க முடியவில்லை !!

காலில் நல்ல வலி ! காலை நக்க முடியாமல் வாயில் ஏதோ மூடியிருந்தது !

அம்மவைத் தேடினாள் !

‘என்ன இது ! பழக்கமான இடம் மாதிரி இல்லையே !! வாசனையே வேறு விதமாய் இருந்தது !

எப்போதும் காதில் விழும் பறவைகள் சத்தம் , மரங்களின் சலசலப்பு ஒன்றுமேயில்லை !!

ஏதோ கூண்டுக்குள் அடைபட்ட மாதிரி …..!!!!

‘உரக்க கத்த வேண்டும் போல இருந்தது ! ஆபத்தில் மாட்டிக் கொண்டு விட்டோமோ ???

பொன்னி கத்தி ஊளையிட்டாள் !!!

“கபீர்… சீக்கிரம் இங்கே வா…!!! !

‘புலிக்குட்டி முழித்துக் கொண்டு விட்டது போல இருக்கிறது….!!!”

இரண்டு இளைஞர்கள் !!!

இருவரும் ‘ காட்டு விலங்குகள் பாதுகாப்பு சங்கத்தில் ‘ வேலை செய்பவர்கள் !! கபீரும் விக்ரமும் !!

பொன்னி இருக்கும் கூண்டுக்கு பக்கத்தில் ஓடி வந்தார்கள்!! பொன்னி அவர்களைப் பார்த்து மிரண்டு போனாள் !!!

“ஹலோ..குட்டி…. விழித்துக் கொண்டாயா..??? …”

“அட ! எழுந்து நிற்க முடிகிறதே !! பாவம் !! வலிக்கும் ”

“இரண்டு வயதாகி விட்டது !! ஆனால் எடை கம்மிதான் ”

“திறந்து விடலாமா !!”

கபீரும் விக்ரமும் கூண்டைத் திறந்து விட்டார்கள் !!

“Come on baby !!! பயப்படாமல் வெளியே வா !!!”

ஊஹூம்…. பொன்னி கூண்டின் ஒரு மூலையில் போய் பதுங்கிக் கொண்டாள் !!

கபீர் ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் இறைச்சி துண்டை வைத்துக் கொண்டு கூப்பிட்டான் !!

திரும்பி கூட பார்க்கவில்லை !!

விக்ரம் கூண்டில் ஒட்டியிருந்த note ஐ மீண்டும் படித்தான் !!

‌ஆர்டர் _ கார்னிவோர்
‌‌ஜீனஸ்_ பாந்தெரா
‌இனம்_ பேந்தரா டைக்ரிஸ்
‌பால்_ பெண்
‌வயது_ 2 வருடம்
எடை _ 80kgs
‌நீளம் – 6 ft

‌மருத்துவ ரிப்போர்ட் – வலது பின்காலில் கடிபட்டு ஆறாத புண் . முதலை கடித்திருக்கலாமென்ற சந்தேகம்…..’

“கபீர் ! பார்த்தால் இரண்டு வயது குட்டி மாதிரி தோணுதா உனக்கு ??? நூறு கிலோவாவது இருக்க வேண்டாம் ?? “

‌கபீர் தைரியமாய் தடவிக் கொடுத்தான் !! பொன்னி இன்னமும் வலியால் முனகிக் கொண்டிருந்தாள் !!

‌விக்ரம் இறைச்சி துண்டு ஒன்றை எடுத்து நீட்டினான் ! முகர்ந்து பார்த்துவிட்டு தூர நகர்ந்தாள் !!

“சரி இன்றைக்கு விட்டு விடலாம் !! ”

‌மறுபடி கூண்டில் போட்டு மூடி விட்டுப் போய் விட்டார்கள் !!

இரண்டு நாளாய் பட்டினி ! பொன்னி சுருண்டு படுத்து விட்டாள் !

சரி , கொஞ்சம் பாலாவது உள்ளே போகட்டும் என்று பாட்டிலில் பாலைக் கொடுத்தவுடன் இரண்டு லிட்டர் பாலையும் ஒரே மடக்கில் குடித்து விட்டாள் !!

நன்றாக விளையாட ஆரம்பித்து விட்டாள் !! காயமும் ஆறத்தொடங்கிவிட்டது !!! அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது !!

பொன்னியும் கபீரும் விக்ரமும் நல்ல நண்பர்களாகி விட்டார்கள் !

“Hi babe ! நாங்கள் மட்டும் உன்னை புதரிலிருந்து கண்டெடுக்காமலிருந்தால் நீ காட்டுப்பன்றி வயிற்றுக்குள் ……”

“உனக்கு என்னதான் பிடிக்கும் ?? ஏன் சாப்பிட மாட்டாயா ???

பொன்னியிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான் கபீர் !

பொன்னி சுதந்திரமாக நடமாட ஆரம்பித்து விட்டாள் ! கபீரும் விக்ரமும் தங்கி இருந்த கேம்பில்தான் பாதிப்பொழுது கழிந்தது !

ஒருநாள் மதியஉணவுக்கு ஒரு கூடையில் , ஆப்பிள் , ஆரஞ்சு , பீச் , ப்ளம்ஸ் என்று நிறைய பழங்கள் கொண்டுவந்திருந்தார்கள்!!

பொன்னி சாப்பிட்டு நாலு நாள் ஆகியிருந்தது !! பசியில் உயிரே போய்விடும் போல இருந்தது !!

அவர்கள் பார்க்காத போது ஒரு ஆப்பிளை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள் !!!

கண்மறைவில் சாப்பிடத் தொடங்கினாள் !

இதைப் போன்று இனிப்பான ஒன்றை காட்டில் கூட சாப்பிட்டதில்லை ! ஆசை அடங்கவில்லை ! மறுபடி வந்து ஒரு பீச்சை எடுத்துக்கொண்டு ஓடினாள் !!

அப்போதுதான் கவனித்தான் விக்ரம் !!

“Hi ! Buddy ! குட்டியைப் பார்த்தாயா. ! அவள் ஆப்பிளையும் ஆரஞ்சையும் ருசித்து சாப்பிடுகிறாள்…..!!!!!!

பசி முற்றிப்போய் பயித்தியம் பிடித்து விட்டதா ??

“கபீர் ! அவள் முகத்தில் சந்தோஷத்தை பாத்தியா !! அனுபவித்து, ரசித்து , ருசித்து , புசிக்கிறாளடா….!!”

இரண்டு பேரும் ஃபிரிட்ஜில் இருந்து கேரட் , முட்டைக்கோஸ் , லெட்யூஸ் என்று எல்லா காயையும் ஒரு கிண்ணத்தில் வைத்து முன்னால் வைத்துதான் தெரியும் !!

பத்து நிமிடத்தில் எல்லாவற்றையும் காலி பண்ணி விட்டாள் !

“ஹாய்.. உன்னால் இதை நம்ப முடிகிறதா…. ???? இவள் சைவப்புலியடா.. !!!? சாகபட்சிணி… !!!

இது சாதாரண விஷயமில்லை…உலக மகா அதிசயம்.. ! உடனே மேலதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்…!!”

பொன்னிக்கு அவர்களை ரொம்ப பிடித்துவிட்டது !! தன்னை நன்றாக புரிந்து கொண்டு விட்டார்களே !!!!

டாக்டர்.மைக்கேல் ஸ்டீவ் புலிகளைப் பற்றின ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் !

கொல்கத்தாவை சேர்ந்த பாசு சட்டர்ஜி அவரிடம் இரண்டு வருஷம் புலிகளின் மரபணு மாற்றம் பற்றி ஆராய்ச்சி செய்தவர்!

அவரிடம் பொன்னியைப்பற்றி சொல்ல வேண்டியது அவசியமானது ! பொன்னியின் மரபணு பரிசோதனை நடத்த தயாரானார்கள் !!!

பொன்னி இப்போதெல்லாம் காய்கறி , பழங்கள் என்று நன்றாக சாப்பிட்டு 20 கிலோ எடை கூடிவிட்டாள் !!

அவளைத் திரும்ப காட்டில் கொண்டுவிடுவது ஆபத்து என்று முடிவு செய்து விட்டார்கள் ! எவ்வளவு நாள்தான் மறுவாழ்வு மையத்தில் வைத்துக் கொள்ள முடியும் ?

ஹைதராபாத்தில் இருக்கும் நேரு மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்க முடிவு எடுக்கப்பட்டது !

பொன்னி மிருகக்காட்சி சாலைக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகி விட்டது !

கூட இன்னொரு புலியும் இருந்தது ! அசப்பில் காளி மாதிரி இருந்ததால் பொன்னிக்கு உடனே பிடித்து விட்டது !

சீக்கிரமே பொன்னி zoo வில் ரொம்ப பிரபலம் ஆகி விட்டாள் ! குழந்தைகளைப் பார்த்துக் குதிக்க ஆரம்பித்தாள் !! ஆனால் போர்டில் ‘ மாமிசபட்சிணி ‘என்றுதான் எழுதியிருந்தது !

பொன்னியின் ரகசியம் தெரிந்தால் பார்ப்பவர்கள் அதை தொந்தரவு செய்யலாம் !

இன்னும் அதன் மரபணு பரிசோதனை முடிந்தபாடில்லை ! இது போன்ற புலி பற்றி எங்கேயும் கேள்விப்படாததால் எதையும் நிச்சயமாக சொல்ல முடியவில்லை !!!!

இப்போது இன்னொரு பிரச்சனை !!! பொன்னி ஒரு அதிசயம் !! அவளுக்கும் குழந்தை குட்டிகள் வேணுமே !

புலிகள் எண்ணிக்கை ஏற்கனவே குறையத் தொடங்கி இருக்கிறது ! பொன்னி ஒரு அதிசிய பிறவி.. !!

இன்னும் நிறைய ஆராய்ச்சி தேவை !! அது ஒரு பக்கம் இருக்கட்டும் !!!!

இப்போது பொன்னிக்கு அவசியம் தேவை ஒரு துணை !!!

பொன்னிக்கு பிரசவ காலம் நெருங்கி விட்டது !! நாகா கூடவே இருக்கிறான் !! அதிகம் சிரமப்படாமல் பொன்னி மூன்று குட்டிகளைப் பிரசவித்து விட்டாள் !!!

நல்ல ஆரோக்கியமான குட்டிகள் !! மூன்றுமே பெண் குட்டிகள் !!! எல்லாமே மூன்று பவுண்டு !!!

விக்ரமும் கபீரும் குட்டிகளுடனே பொழுதைக் கழித்தார்கள் !!!

நிறைய குறிப்பெடுக்க வேண்டுமே !!! குட்டிகள் பெரிதாகும் வரை அவர்களுடைய பொறுப்பு !!!!

ஆறு வாரமும் பாலைக் குடித்துக் கொண்டு அம்மா மேல் ஏறி விளையாடி……..ஒரே அமர்க்களம்….

இப்போதே இறைச்சி குடுத்து பழக்க வேண்டுமென்று மேலதிகாரி சொல்லியிருந்தார் !! அப்போதுதான் காட்டில் திரும்பவும் கொண்டு விட்டால் உயிர்வாழ முடியும் !!!

இறைச்சியை நல்ல கூழாக்கி தட்டில் போட்டு வைத்தார்கள் !!

துர்கா முதலில் ஓடி வந்தாள் !! இறைச்சியை முகர்ந்து பார்த்தாள் !! நக்கிப் பார்த்தாள் !!! ருசி பிடித்து விட்டது !!! நிமிடத்தில் காலி பண்ணி விட்டாள் !!!

கபீருக்கும் விக்ரமுக்கும் மன சமாதானம் !!!உடனே வயர்லெஸ் மூலம் செய்தி அனுப்பி வைத்தனர் !!

ஜோதியும் முன்னியும் இன்னமும் பால்குடி நிறுத்தவில்லை !!

துர்கா அவர்களைக் கூப்பிட்டு பார்த்தாள் !! மெல்ல மெல்ல ஜோதியும் சாப்பிட ஆரம்பித்து விட்டாள் !!

ஆனால் முன்னி…….?????

பொன்னிக்கு கவலை வந்துவிட்டது !! இவள் தன்னைக் கொண்டுவிட்டாளோ ???

ஒரு விதத்தில் சந்தோஷமாகக் கூட இருந்தது !!

மற்ற இரண்டு குட்டிகளையும் நிச்சயம் காட்டுக்கு அனுப்பி விடுவார்கள் !! முன்னியும் போய் விட்டால் ??? மறுபடியும் தனிமை !!!

நினைத்துப் பார்க்கவே பயமாயிருந்தது ! அப்படியானால் முன்னி தன் கூடத்தான் இருப்பாளோ ….??? அவள் நிச்சயம் தன்னைப் புரிந்து கொள்வாள் !!!

பாசு சட்டர்ஜி தன் வாழ்நாளில் இது போன்ற மரபணு மாற்றத்தை கேள்விப்பட்டது கூட இல்லை ! அவருடைய ஆராய்ச்சியின் மிகப் பெரிய சவால். !!!

விக்ரமும் கபீரும் தாங்களும் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொள்வதை பெருமையாய் நினைத்தார்கள் !!!!!

பொன்னிக்கு இது பற்றியெல்லாம் கவலை இல்லை ! முன்னி அவளை விட்டு போக மாட்டாள் !!

தான் மட்டும் தனியா இல்லை !! தனக்கும் வாரிசுகள் உருவாகும் !! ஆனால் அவை இந்த மனித கூட்டத்தில் பத்திரமாய் வாழ முடியுமா !!

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் !!!

நீங்கள் யாராவது பழம் சாப்பிடும் புலியைப்பார்த்தால் பொன்னியை நினைத்துக் கொள்ளுங்கள் !! அது நிச்சயம் பொன்னியின் வாரிசாகத்தான் இருக்கும் !!!! ஆம்.. பொன்னியின் செல்வி….!!!

பாசு சட்டர்ஜியின் ஆராய்ச்சி முடியும் தருவாயிலிருக்கிறது !!

பொன்னி… 5 வயது சாகபட்சிணி!!!

முன்னி….. 4 மாதம் . சாகபட்சிணி ????

******************* *****************

                 இந்து  _வீரா

               (மாமிச பட்சிணி)

                     ( Carnivore  )
|
காளி___    ராணி____ மாரி___
|                     |                 |
( Carnivore) ( Carnivore) ( carnivore)

                         பொன்னி

                    ( சாகபட்சிணி)

                         ( Herbivore )
|
      துர்கா     _______ஜோதி
( Carnivore ).      (Carnivore).
முன்னி
( Herbivore ??????)

‌????????????????????????????????

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *