பூர்வ ஜென்ம வாசனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 5,009 
 
 

விழுப்புரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவள் பூஜா.இவளுக்கு இரண்டு அண்ண ன்கள் இருந்தார்கள்.அப்பா ராமன் மின்சார வாரியத்தில் கீழ்நிலை கணக்கராக பணி புரிந்து வந்தார் அம்மா பார்வதி வீட்டை மட்டும் கவனித்து வந்தாள்.அவள் அதிகம் படிக்காததால் வேலைக்கெல்லாம் போகாமல் வீட்டில் இருந்து வந்தாள்.

பூஜா ரெண்டு வயது ஆனதும்,அப்பா அம்மா பேசி வரும் தமிழ் பாஷையை பேசி வந்தா தாலும்,கூடவே அவள் யாருக்கும் புரியாத ஒரு மொழியிலேயும் பேசி வந்தாள்.
நாளாக நாளாக பூஜா அந்த புரியாத மொழியிலே பல பாடல்கள் சரளமாக பாடி வந்தாள்.

‘நம்முடைய முதல் ரெண்டு பையங்க எல்லாம் தாய் பாஷையான தமிழைப் பேசி கிட்டு வரு ம் போது,இந்த பூஜா மட்டும் ஏன் ஏதோ புரியாத ஒரு மொழியிலே பேசி வறா’ என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டார்கள் பூஜாவின் பெற்றோர்கள்.

பூஜாவின் அம்மா அப்பா இருவரும் பூஜாவைப் பார்த்து “இதோ பார் பூஜா,நீ வெறுமே தமிழ் மட்டும் பேசி வா.அந்த புரியாத பாஷையே இனிமேபேசாதே. அப்புறமா நாங்க உன்னே பள்ளீக் கூடத்துக்கு அனுப்பினா, அங்கே அவங்க உனக்கு இங்கிலிஷ் பாஷையே சொல்லிக் குடுபாங்க இந்த ரெண்டு பாஷையே மட்டும் தான் பேசிக் கிட்டு வரணும்.புரிதா”என்று மிரட்டி சொன்னார்கள்.

அவர்கள் மிரட்டி சொன்னதற்கு பூஜா “சரிப்பா,சரிம்மா” என்று சொல்லி விட்டு யாருக்கும் தன்னைப் பார்காத இருந்த நேரங்களில்,அவள் அந்த பாஷையிலே சில சின்ன சின்ன பாட்டுகளை எல்லாம் சந்தோஷமாகப் பாடி வந்தாள்.

கொஞ்ச மாசம் ஆனதும் பூஜாவின் பேற்றோர்கள் ‘பூஜா வயசு ஆவ, ஆவ, மெல்ல அந்த புரி யாத பாஷை பேசறதே விட்டுட்டு தமிழிலே பேசி வருவா’ என்று நினைத்து புஜாவைத் திட்டுவ தை நிறுத்தி விட்டார்கள்.’பூஜா கல்யாணம் கட்டி கிட்டு வேறே வீட்டுக்குப் போகப் போற பொண்ணு தானே, அந்த புரியாத பாஷையை அவ பேசிக் கிட்டு வரட்டும்’ என்று நினைத்து பூஜாவை கண்டிப்பதை நிறுத்தி விட்டார்கள் பூஜாவின் பெற்றோர்கள்.

பூஜா ஐந்தாவது ‘பாஸ்’ பண்ணின பிறகு,அவள் பெற்றோ¡ர்கள் அவளை ஆங்கிலமும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகூடத்தில் சேர்த்தார்கள்.பூஜா ஆங்கிலமும் நன்றாகப் படித்து,சரளமாக பேசி யும்,எழுதியும் வந்தாள்.ஆனால் நேரம் கிடைக்கும் போது,அந்த புரியாத பாஷையில் நிறைய பேசி யும் பாடியும் வந்தாள்.அந்த பாஷை பேசும் போது அவள் மிக சந்தோஷப் பட்டுக் கொண்டு வந்தாள்.

அந்த வருஷம் பூஜா ‘மெட்ரிக்’ படித்து வந்தாள்.பூஜா எல்லா பாடங்களையும் மிக கவன மாகப் படித்து வந்தாள்.பூஜா ‘மெட்ரிக்கில்’ அவள் பள்ளியில் முதல் மாணவியாக ‘பாஸ்’ பண்ணி னாள்.அவள் பள்ளிக் கூட நிர்வாகிகளுக்கும்,பூஜாவின் பெற்றோர்களுக்கும் மிகுந்த சந்தோஷம்.

அந்த பள்ளிக்கூட நிர்வாகிகளில் ஒருவருக்கு அந்த மாநிலத்தின் கலெக்டா¢ன் P.A.வை மிக நன்றாகத் தெரியும்.அவர் பள்ளிக் கூட ‘பிரின்ஸிபாலு’டன் கலந்துப் பேசி,விட்டு,அந்த கலெக்டரைப் பார்த்து பேசி,அவரை தங்கள் பள்ளிக் கூட ‘பரிசு அளிக்கும் விழாவுக்கு’ தலைமை தாங்க அழைத்தார்.

அந்த கலெக்டர் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பள்ளிகூடத்தின் ‘பரிசு அளிக்கும் விழாவு க்கு’ தலைமை தாங்க சம்மதித்தார்.கலெக்டர் ‘பரிசு அளிக்கும் விழாவுக்கு’ தலைமை தாங்க ஒத்துக் கொண்ட சந்தோஷ சமாசாரத்தைப் ‘பிரின்ஸிபாலி’டம் சொன்னார் அந்த நிர்வாகி.

‘கலெக்டர்’ லலித் சுங்கா ‘மிஸொரம்’ மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஆதி வாசி.இவர் அந்த மாநிலத்தில் பட்டப் படிப்பு படித்து விட்டு ‘ஆதி குடி மக்கள் ஒதுக்கீட்டில்’ IAS பரி¨க்ஷ ‘பாஸ்’ செய்து விட்டு கொஞ்ச வருடங்கள் ‘சப் கலெக்டராக’ வேலை செய்து விட்டு இப்போது கலெக்டர் ‘பிரமோஷன்’ வாங்கிக் கொண்டு விழுப்புறம் ஜில்லாவுக்கு ஒரு கலெக்டராக வந்து இருந்தார்,

குறிப்பிட்ட தினத்தன்று மாலை அந்த பள்ளி கூடத்தில் அலங்கார மேடை,ஏகப்பட்ட தோரண ங்கள்,மைக் செட்,எல்லாம் ஏற்பாடு பண்ணி ‘பள்ளிக்கூட பரிசளிப்பு விழா’ நடத்தத் தயார் செய்து இரு ந்தார்கள் பள்ளி வாத்தியார்களும்,மாணவ மாணவிகளும் பள்ளிக் கூட வேலைக்காரகளும்.அந்த விழா வுக்கு பூஜாவின் பெற்றோர்களும்,இன்னும் நிறைய பெற்றோர்களும் வந்து இருந்தார்கள்.

அந்த விழாவுக்கு கலெக்டர் லலித் சுங்கா காரில் வந்து இறங்கினவுடன் அவரை பள்ளிக்கூட நிர்வாகிகள் அனைவரும்,‘பிரின்சிபாலும்’,ஓடி போய்,அவருக்கு மாலையைப் போட்டு,அழைத்து வந்து மேடையில் உட்கார வைத்தார்கள்.பள்ளிக்கூட நிர்வாகி ஒருவர் எழுந்து மைக்கின் முன்னால் போய் நின்றுக் கொண்டு கடவுள் வணக்கம் பாட பூஜாவை அழைத்தார்.

பூஜா மைக்கின் முன்னால் நின்றுக் கொண்டு கையைக் கூப்பிக் கொண்டு,முதலில் தமிழில் ஒரு கடவுள் வணக்கம் பாடல் ஒன்றை பாடினாள்.அந்தப் பாட்டு முடிந்ததும் பூஜா மேடையை விட்டு கீழே இறங்காமல் தான் அடிக்கடி பேசி வரும் அந்த புரியாத பாஷையில் ஒரு கடவுள் வணக்கம் பாடினாள். அந்த விழாவில் குழுமி இருந்த அனைவரும் பூஜா தன் கண்களை மூடிக் கொண்டு ஏதோ ஒரு மொழியிலே கடவுள் வணக்கம் பாடிக் கொண்டு இருப்பதைப் பார்த்து ‘என்ன இந்தப் பொண்ணு ஏதோ புரியாத ஒரு மொழியிலே தன் கண்ணே மூடிக் கிட்டு இன்னொரு கடவுள் வணக்கம் பாட்டை பாட றாளே’ என்று நினைத்து ஒன்றும் புரியாமல் அந்த கலெக்டரைப் பார்த்தார்கள்.
ஆனால் அந்த கலெக்டர் பூஜா கண்ணை மூடிக் கொண்டு பாடின கடவுள் வணக்கம் பாட்டின் வார்த்தைகளுக்கு ஏற்ப தன் உதடுகளை அசைத்து,மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தார் விழாவுக்கு வந்து இருந்த அனவரும் கலெக்டர் பூஜா பாட்டின கடவுள் வணக்கம் பாட்டின் வார்த் தைகளுக்கு ஏற்ப தன் உதடுகளை அசைத்து,மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்ததை பார்த்து ஆச்சரியப் பட்டார்கள்.

பாட்டு முடிந்தவுடன் ‘கலெக்டர்’ பூஜாவை தன் அருகில் அழைத்து,அவள் பேசின பாஷையி லேயே ‘இந்த பாட்டு உனக்கு எப்படித் தெரியும்’ என்று கேட்டார்.அதற்கு பூஜா அந்த பாஷையிலேயே அவருக்கு திருப்பி பதில் சொன்னாள்.பூஜா சொன்ன பதிலைக் கேட்டு கலெக்டர் அசந்துப் போனார்.

அப்போது தான் பூஜாவின் பெற்றோர்களுக்கு இது நாள் வரைக்கும் பூஜா பேசி வந்த ஏதோ ஒரு புரியாத மொழி மிசோரம் மாநிலத்தின் வசித்து வந்த பிரதேச மக்கள் பேசி வரும் மொழி என்று தெரிய வந்தது.

கலெக்டர் மிகவும் சந்தோஷப்பட்டு பூஜாவின் முதுகை தட்டிக் கொடுத்து விட்டு “விழா முடிஞ்ச பிறகு நீ என்னுடன் என் வீட்டுக்கு வா” என்று அந்த பாஷையிலேயே சொன்னார்.உடனே பூஜா மிக வும் சந்தோஷப் பட்டு “சார்,நீங்க என் அம்மா அப்பாவை கொஞ்சம் ‘பர்மிஷன்’ கேளுங்க.அவங்க ‘பர்மிஷன்’ குடுத்தா,நான் உங்க கூட உங்க வீட்டுக்கு வறேன்” என்று சந்தோஷமாகச் சொன்னாள்.

விழா முடிந்ததும் ‘கலெக்டர்’ எழுந்து பூஜாவின் பெற்றோர்களிடம் வந்து “உங்க பெண் பூஜாவை என்னோடு என் வீட்டிற்கு ஒரு மணி நேரம் அனுப்ப முடியுமா.இந்த விழுப்புறத்லே பொறந்த பூஜா வுக்கு இந்த பாஷை எப்படி இவ்வளவு நல்லாத் தெரியும்ன்னு கேக்க ஆசையா இருக்கு. நான் அவ கிட்டே கொஞ்ச நேரம் பேசிக் கிட்டு இருந்து விட்டு,அப்புறமா என் கார்லேயே அவளை உங்க வீட்டு க்கு திருப்பி அனுப்பி விடறேன்”என்று கேட்டார்.

கலெக்டர் கூப்பிடவே “சரி” என்று சொல்லி பூஜாவை கலெக்டரோடு அவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள் பூஜாவின் பெற்றோர்கள்.கலெக்டர் பூஜாவை தன் காரில் அழைத்துக் கொண்டு தன் பங்களாவுக்கு வந்தார்.

ஹாலில் போட்டு இருந்த சோபாவில் பூஜாவை உட்கார வைத்து,ஒரு வேலைக்காரணை அழை த்து அவளுக்கு குடிக்க கொஞ்சம் ஜூஸ் கொடுக்கச் சொன்னார்.அந்த வேலைக்காரன் கொண்டு வந்த ஜூஸை சந்தோஷமாக குடித்தாள் பூஜா.

பூஜா ஜூஸை குடித்து முடித்ததும் கலெக்டர் பூஜாவை பார்த்து “பூஜா,உனக்கு இந்த மிசோரம் பாஷையை எப்படி இவ்வளவு சரளமாகப் பேச வறது” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

உடனே பூஜா ”சார்,நான் போன ஜென்மத்லே மிஸோரம் மாநிலத்தில் இருக்கும் ‘லங்கேக்கு’ பக்கத்லே இருக்கும் ‘திங்க்ஸே’ என்கிற ஊரை சேர்ந்தவ” என்று சொன்னதும் கலெக்டர் உடனே “அப்படியா என்னால் நம்பவே முடியவில்லை பூஜா.நானும் அந்த ஊரைத் தான் சேர்ந்தவன் தான்.நீ உண்மையா தான் சொல்றயா.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,நீ சொல்றதே கேக்க.நீ போன ஜென்மத்லே நான் இருந்த ஊர்லே தான் வாழ்ந்து வந்தயா” என்று மகிழ்ச்சி பொங்கக் கேட்டார்.

உடனே பூஜா “ஆமாம் சார்,போன ஜென்மத்லே என் பேர் சக்மா.நான் பதினைஞ்சு வயசா இருக் கும் போது என் வாழ்க்கையிலே நடந்த ஒரு ‘கோரமான’ ஒரு சம்பவம் எனக்கு அடிக்கடி ‘ஞாபகம்’ வந்துக்கிட்டே இருக்கு.நான் உங்களுக்கு அதை சொல்லட்டுமா சார்”என்று பயத்துடன் கேட்டாள். உடனே கலெக்டர் “சொல்லு பூஜா,உனக்கு என்ன ‘கோர சம்பவம்’ நடந்திச்சி.எனக்கு அந்த சம்பவ த்தைப் பத்தி விவரமா சொல்லு” என்று ஆவலுடன் கேட்டார்.

பூஜா சொல்ல ஆரம்பித்தாள்.

“நான் அங்கே இருந்த ஒரு பள்ளிக்கூடத்திலே படிச்சு வந்தேன்.என் அப்பா முரெக்கா ஒரு தனியார் கம்பனியில் வேலை செஞ்சி வந்தார்.அவருக்கு நல்ல சம்பளமும் வந்து கிட்டு இருந்தது. அவருக்கு நான் ஒரே பையன் தான்.ஆனா என் சித்தப்பா டங்கா அதிகம் படிக்காதவரு.அவர் கெட்ட ‘ப்ரெட்ஸ்ங்க’ கூட வெறுமனே ஊர் சுத்திக் கிட்டு வந்தாரு. அடிக்கடி குடிச்சுட்டு சீட்டாடி,தன் பொழுதை வீணா கழிச்சுக் கிட்டு வந்தாரு.என் அப்பாவுக்கும் சித்தப்பா டங்காவுக்கும் அடிக்கடி பூர்வீக சொத்து விவகாரத்லே சண்டை வந்து கிட்டு இருந்திச்சு.என் சித்தப்பா என் அப்பா கிட்டே அடிக்கடி வந்து ‘நான் அதிகம் படிக்காதவன்.எனக்கு வேலை வேறே இல்லே.அதனாலே நம்ம பூர்வீக சொத்திலே நீ எனக்கு முக்கா பங்கு தரணும்’ என்று சொல்லி எங்க அப்பாகிட்டே அடிக்கடி சண்டை போட்டு கிட்டு இருப்பாரு.ஆனா என் அப்பா ‘உனக்கு முக்கா பங்கு எல்லாம் தர முடியாது.ஆளுக்கு பாதி பாதின்னுதான் சொத்தைப் பிரிக்க முடியும்’என்று பிடிவாதம் பிடிச்சு வந்தார்.ஆனா இந்த முடிவு என் சித்தப்பாவுக்கு பிடிக்கலே.அவர் கோவிச்சுக் கிட்டு போயிட்டாரு” என்று சொல்லி விட்டு தன் கண்களை துடைத்துக் கொண்டு இருந்தாள் பூஜா.

கொஞ்சம் நேரம் ஆனதும் “ஒரு நாள் காலையிலேயே நான் எழுந்து வயல் பக்கம் போய் என் காலை கடன்களை எல்லாம் முடிச்சிட்டு,வீடு திரும்பிக் கிட்டு இருந்தேன்.என் வீட்டின் பக்க வாட்லே என் சித்தப்பா டங்கா அவர் ‘ப்ரெண்ட்’ ஒருத்தரோடு நின்னு கிட்டு ஏதோ பேசிக் கிட்டு இருதார். நான் ‘நம்ம சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் நல்ல உறவு கிடையாதே,இவங்க என்ன பேசறாங்க.நாம அதே கேக்கலாம்’ன்னு நினைச்சு,அவங்களுக்கு தெரியாம பின்புறமா நின்னுக் கிட்டு அவங்க பேசற தே ஒட்டுக் கேட்டு கிட்டு இருந்தேன்.

என் சித்தப்பா நண்பர் என் சித்தப்பாவிடம் ‘நீ உன் அண்ணன்கிட்டே போய் ‘என்னை மன்னி ச்சிடுண்ணா.நாம இனிமே நல்ல அண்ணன் தம்பி போல வாழ்ந்து வரலாம்.சொத்தில் நீ சொன்ன படி,சொத்தே பாதி,பாதின்னு பிரிச்சுகிடலாம்.என்னை மன்னிச்சு¢டுண்ணான்னு சொல்லி உன் அண் ணன் நம்பும் படி நீ நடி.கொஞ்ச நேரம் கழிச்சு ‘அண்ணா,இன்னைக்கு நம்ப அப்பாவுக்கு ‘திதி’.வா நாம ரெண்டு பேரும் ஆத்துக்கு போய் குளிச்சுட்டு,அங்கே இருக்கிற பிராமணர் கிட்டே அப்பாவுக்கு ‘திதி’ குடுத்துட்டு வரலாம்’ன்னு நம்பும் படி கெஞ்சு.உன் அண்ணனும் உன்னை நம்பி ஆத்துக்கு வருவாரு.அங்கே நீங்க ரெண்டு பேரும் நல்லா குளியுங்க.குளிச்சுக் கிட்டு இருக்கும் போது, நீ உன் அண்ணன் தலையை தண்ணியிலே நல்லா முக்கி அவரை எழுந்திரிக்க விடாம,தண்ணிக் குள்ளே மூச்சு போற வரைக்கும் அமுக்கி பிடிச்சுக் கிட்டு இரு.அவர் இறந்துட்டார்ன்னு தெரிஞ்ச பிறவு நீ ஒன் னும் தெரியாதவன் போல கரை ஏறி,வூட்டுக்கு போயிடு.இதுக்கு நடுவிலே நான் உங்க வூட்டுக்குள் ளே போய்,உன் அண்ணியிடம் ‘சொத்து பட்டாவை’ மிரட்டி வாங்கிகிட்டு,உன் அண்ணியையும் சக்மா வையும் கெரசின் ஊத்தி கொளுத்திடறேன்.‘அடுப்பு பத்த வைக்கும் போது,கெரசின் டப்பாவும் கெரசின் அடுப்பும் தீப்பிடிச்சுக்கிடிச்சு.அதை அணைக்கப் போவும் போது அவங்க ரெண்டு பேரும் அந்த தீயாலே செத்து போயிட்டாங்க’ன்னு ஊரை நம்ப வச்சு,நம்ப சப் இன்ஸ்பெக்டர் நசீம்க்கு கொஞ்சம் லஞ்சம் குடுத்து நான் அந்த ‘கேஸை’ மூடி விட ஏற்பாடு பண்றேன்’ என்று சொல்லி விட்டு சிரித்தான்.

உடனே என் சித்தப்பா நண்பனிடம் இது ரொம்ப நல்ல ‘ப்ளான்’ தான் துகுக்கா.நான் என் அண்ணன் கூட நீ சொன்னா மாதிரி பேசி,அவரை நம்ப வச்சு,ஆத்துக்கு அழைச்சுக் கிட்டு போறேன் நீ கன கச்சிதமா மத்த வேலையை எல்லாம் முடிச்சிடு.சொத்து என் பேருக்கு வந்ததும்,நான் நீ கேட்கிற பணத்தை உனக்கு தந்துடறேன்’ன்னு அவன் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார் என் சித்தப்பா டங்கா.நான் திடுக்கிட்டுப் போனேன்.எனக்கு ரொம்ப பயமாக இருந்தது.

உடனே நான் பயதோடு வீட்டுக்கு உள்ளே ஓடிப் போய் என் அப்பா கிட்டே இவங்க நயவஞ்சக ‘ப்ளானைச்’ சொல்லக் கிளம்பினேன்.

ஆனால் அந்த துகுக்கா என்னை வீட்டுக்கு உள்ளே போவ விடாதபடி கட்டிப் பிடிச்சு கிட்டு, என் வாயை பலமாகப் பொத்தி,என்னை ஒன்னும் பேச முடியாத படி பிடிச்சு கிட்டு இருந்தான்.உள்ளே போன சித்தப்பா டங்கா என் அப்பாவோடு நயமாகக் பேசி, அவரை நம்ப வச்சு,அவரை ஆத்துக்கு அழைச்சு கிட்டு போனாரு.அவங்க ரெண்டு பேரும் ஆத்துக்குக் குளிக்கப் போன பிறவு,துகுக்கா என்னை வூட்டுக்கு உள்ளே தள்ளி கிட்டு போய்,ஒரு பழம் துணியை கிழிச்சு என் வாயிலே அடைச் சுட்டான்.என்னால் பேசமுடியலே.அப்புறமா என் அம்மா வாயிலும் மீதி இருந்த துணியை அடைச்சுட் டு,எங்க ரெண்டு பேர் கையையும் பின்னால் கட்டி விட்டு,அடுப்படியில் இருந்த கெரசினை என் உடம்பு மேலேயும்,என் அம்மா உடம்பு மேலேயும் ஊத்தினான்”என்று சொல்லி அழுதுக் கொண்டு இருந்தாள் பூஜா.

பிறகு தன் கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு “துகுக்கா என் அம்மாவை பாத்து ‘நீங்க பீரோ சாவியை தராட்டா,நான் உங்க ரெண்டு பேர் உடம்புக்கு தீ வச்சுசிடுவேன்’ன்னு சொல்லி மிரட் டினவுடன்,என் அம்மா பயந்து போய் பீரோ சாவியை துகுக்கா கிட்டே குடுத்துட்டாங்க.துகுக்கா என் அப்பா பீரோவைத் தொறந்து அதிலே இருந்த சொத்து ‘பட்டாவை’ எடுத்துகிட்டான்.பிறவு என் அம்மா மேலேயும்,என்மேலேயும்,இன்னும் நிறைய கெரஸினைக் கொட்டி விட்டு,பக்கத்திலே இருந்த தீப்பெ ட்டியிலே இருந்து ரெண்டு குச்சியை பத்த வச்சி,ஒன்னை எங்க அம்மா உடம்பு மேலேயும்,இன்னெரு குச்சியை என் மேலேயும் போட்டான்.எங்களால் கூச்சல் போட முடியலே.நெருப்பு எரிய,எரிய,துகுக்கா என் மேலேயும் என் அம்மா மேலேயும் இன்னும் கெரசினை ஊத்திக் கிட்டே இருந்தான்.என் கண் எதிரே என் அம்மா எறிஞ்சி கருகிக் கீழே விழுந்துட்டாங்க.என்அம்மா இறந்து போவதை நான் என் கண்ணாலே பாத்தேன் சார்.என் உடம்பில் தீ கொழுந்து விட்டு எறிஞ்சு கிட்டு இருந்திச்சி.நான் என் கண்களை மூடிக்கிட் டேன்.அதுக்கு அப்புறமா நடந்தது ஒன்னும் எனக்கு ஞாபகம் இல்லே சார்” என்று சொல்லி விட்டு விக்கி விக்கி அழுதாள் பூஜா.

பூஜா சொன்னதைக் கேட்ட கலெக்டர் பயத்தால் அவர் முகம் வேர்த்து கொட்டியது.

கொஞ்ச நேரம் கழிச்சு கலெக்டர் “அழாதே,அழாதே பூஜா.என் கலெக்டர் செல்வாக்கை உபயோக ப் படுத்தி நான் உன்னையும் உன் அம்மாவையும் கொன்ன துகுக்காவையும்,உன் அப்பாவை கொன்ன டங்காவையும் மிஸோரத்தில் தேடிப் பிடிச்சு,நிச்சியம் அவங்களுக்கு தண்டனையை வாங்கி தறேன்”

என்று சொல்லி பூஜாவைத் தேற்றினார்.

கொஞ்ச நேரம் ஆனதும் கலெக்டர் ”பூஜா இப்போ உனக்கு வருடாந்திர லீவு தானே.நான் உன் அப்பா அம்மா ‘பர்மிஷனை’க் கேட்டு கிட்டு உன்னை என்னோடு மிஸோரம் அழைச்சு கிட்டு போய் அந்த கோர செயலை பண்ணின ரெண்டு பேரையும் கண்டு பிடிக்கலாம்.நீ என் கூட மிஸோரம் வரயா” என்று கேட்டதும் பூஜாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

அவள் உடனே “நான் நிச்சியமா வறேன் சார்.ஆனா நீங்க எங்க அம்மா அப்பா கிட்டே கொஞ்சம் ‘பர்மிஷன்’ வாங்கிடுங்க.அவந ஒத்துக் கிட்டா தான் நான் உங்க கூட அவ்வளவு தூரம் வர முடியும்” என்று பயந்துக் கொண்டே சொன்னாள்.உடனே அந்த கலெக்டர் “சரி பூஜா நான் உங்க வீட்டுக்கு வந்து உங்க அம்மா அப்பா ‘பர்மிஷனை’ நிச்சியமா வாங்கிக் கிட்டுத் தான் உன்னே மிசோரம் அழைசுக் கிட்டு அந்த ‘கயவாளிகளை’க் கண்டு பிடிச்சு அவங்களுக்கு தண்டனை வாங்கிக் குடுக்கப் போறேன்” என்று சொன்னார்.

பூஜாவை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு கலெக்டர் தயங்கி தயங்கி பூஜாவின் அப்பா கிட்டே “மிஸ்டர் ராமன்,உங்க மக பூஜா போன ஜென்மத்லே மிஸோர பிரதேசத்தில் லங்க்லேயில்,திங்க்சே என்கிற ஊரிலே பிறந்தவ.நானும் வந்த ஊர்லே பிறந்தவன் தான்.இவ வாழ்க்கையிலெ ஒரு கோர சம்பவம் நடந்து இருக்கு என்கிற விவரத்தை இவ என் வீட்லெ சொன்னா.பூஜாவையும்அவ அம்மாவையும் ஒரு அயோக்கியன் தீயிலே பொசுக்கிட்டான்.இன்னொரு அயோக்கியன் இவ சித்தப்பா.அவன் பூஜா அப்பாவை தண்ணிலே முக்கி சாகடிச்சுட்டு,இவங்களுக்கு சேர வேண்டிய சொத்தை அபகா¢ச்சு கிட்டு போய் இருக்கான்.நான் என் கலெக்டர் பதவி பலத்தை உபயோக படுத்தி,அந்த அயோக்கியர்களை கண்டு பிடிச்சு,அவங்களுக்கு தண்டனையே வாங்கிக் குடுக்கப்போறேன்.இப்போது புஜாவுக்கு வருடா ந்திர ‘ஸ்கூல் லிவு’ தானே.நான் பூஜாவை என் கூட அழைச்சுக் கிட்டு மிஸோரம் போய்,இந்த வேலை யை முடிக்க ஆசைப் படறேன்.பூஜாவை என் கூட ஒரு பத்து நாள் நீங்க மிஸோரம் அனுப்ப முடியுமா” என்று கேட்டார் கலெக்டர்.

”அப்படியா,பூஜா போன ஜென்மத்லே மிஸோரத்திலே பொறந்தவளா.இது வரை அவ பேசி வந்த பாஷை மிஸோரம் பாஷையா.அவ வாழ்க்கையிலே இத்தனை கோர சம்பவங்க நடந்து இருக்கா.பூஜா வுக்கு போன ஜென்மத்லே நடந்தது எல்லாம் அவ்வளவு ஞாபகம் இருக்கா” என்று கேட்டு ஆச்சரியப் பட்டார்கள் பூஜாவின் அப்பாவும் அம்மாவும்.“நீங்க அவளை தாராளமா அழைச்சு கிட்டு போங்க”என்று சந்தோஷமாக சொன்னார் ராமன்.

”ரொம்ப நன்றி மிஸ்டர் ராமன்.நான் மிஸோரம் போக எல்லா ஏற்பாடும் பண்ணி விட்டு,அப்புறமா வந்து பூஜாவை அழைச்சு கிட்டுப் போறேன்”என்று சொல்லி விட்டு கலெக்டர் அவர் பங்களாவுக்கு கிளம்பி போய் விட்டார்.

வீட்டுக்கு வந்த கலெக்டர் உடனே லலித் சுங்கா மிஸோரத்தில் லங்க்கேயில்,திங்க்சே என்னும் ஜில்லா கலெக்டா¢ன் டெலிபோனுக்கு போன் பண்ணி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு,தான் அந்த ஊரைச் சேர்ந்தவன் என்றும்,தான் இப்போது தமிழ் நாட்டிலே விழுப்புரம் என்கிற இடத்திலே ஒரு கலெக்டராக இருப்பதாயும்,முப்பத்து வருஷத்துக்கு முன்னாலே நடந்த ஒரு கொலை சம்பந்தமாக அவரைப் பார்க்க வருவதாகவும் சொல்லி,அவர் உதவியையும் கேட்டார்.அந்த கலெக்டர் ஆச்சரியப் பட்டு “அப்படியா.நீங்க கிளம்பி வாங்க.நான் உங்களுக்கு பூரண உதவி செய்றேன்” என்று சொல்லி கலெக்டர் லலித் சுங்காவை உடனே மிஸோரம் கிளம்பி வரும்படி அழைத்தார்.

அடுத்த நாள் ககெக்டர் பூஜாவின் அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டு,பூஜாவை அழை த்து கொண்டு மிஸோரம் தலை நகருக்கு விமானத்தில் போய்,பிறகு அங்கே இருந்து கார் மூலமாக லங்க்லேயில்,’திங்க்சே’ என்கிற ஊரைப் போய் அடைந்தார்.கலெக்டரும் பூஜாவும் அன்று இரவு ஒரு ‘ஹோட்டலில்’ இரவு தங்கினார்கள்.

அடுத்த நாள் காலையிலே எழுந்து குளித்து விட்டு,அந்த ஹோட்டலிலேயே ‘ப்ரேக் பாஸ்ட்’ சாப்பிட்டு விட்டு கலெக்டரும் பூஜாவும் ஒரு கால் டாக்ஸியை ஏற்பாடு பண்ணிக் கொண்டு அந்த ஜில் லா கலெக்டர் ஆபீஸ்க்குப் போனார்கள்.

அந்த ஜில்லா கலெக்டா¢ன் PA இடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு லலித் சுங்கா “நான் உங்க கலெக்டரை கொஞ்சம் பாக்கணும்.நான் ஏற்கெனவே அவர் கிட்டே நான் வரப் போகீற சமாசாரத்தை ‘போன்’லே சொல்லி இருக்கேன்” என்று சொன்னதும் அந்த PA எழுந்து நின்றுக் கொண்டு தன்னிடம் இருந்த ‘இண்டர்காமில்’ கலெக்டா¢டம் விழுப்பிறம் கலெக்டர் லலித் சுங்கா வந்து இருப்பதாயும்,அவரை பார்க்க விருப்பப்படுவதாயும் சொன்னவுடன் அந்த கலெக்டர் “நானே வந்து அவரை என் ரூமுக்குக் கூட்டிக் கிட்டுப் போறேன்” என்று சொல்லி ‘போனை’ வைத்து விட்டு, தன் ரூமை விட்டு வெளியே வந்து லலித் சுங்காவையும் பூஜாவையும் தன் ரூமுக்கு அழைத்துப் போனார்.

பியூன் மூன்று பேருக்கும் ‘காபியை’க் கொடுதவுடன் அந்த கலெக்டர் இருவரையும் ‘காபி’ குடிக்கச் சொல்லி விட்டு அவரும் ஒரு ‘கப் காபியை’ எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்.மூவரும் ‘காபி’ யைக் குடித்து முடித்தவுடன் அங்கே காத்துக் கொண்டு இருந்த பியூன் அந்த காலி ‘காபி கப்களை’ எடுத்துக் கொண்டு வெளியே போனான்.

தன்னுடைய பியூன் ரூமை விட்டு வெளியே போனதும் அந்த கலெக்டர் லலித் சுங்காவைப் பார்த்து ”நீங்க நடந்த எல்லாவற்றையும் விவரமா சொல்லுங்க.நான் உங்களுக்கு புரண ஒத்துழைப்பை யும் தறேன்” என்று உறுதி அளித்தார்.

உடனே லலித் சுங்கா ”சார்,இவ பேரு பூஜா.இவ விழுப்புறத்லே ‘மெட்ரிக்’ பரிஷையிலே அவ படிச்சு கிட்டு வரும் பள்ளிக் கூடத்லே முதல் மாணவியா ‘பாஸ்’ பண்ணி இருக்கா.அந்தப் பள்ளீகூட பரிசளீப்பு விழாவுக்கு நான் தலைமை தாங்கினேன்.அப்போ இவ தமிழில் கடவூள் வணக்கம் பாடி விட்டு,கூடவே நம்ம மிசோரம் பாஷைலே கடவுள் வணக்கம் பாடினா.நானும் அவ கூட அந்த கடவுள் வணக்கத்தைப் பாடினேன்.பாட்டு முடிந்ததும் எனக்கு ஆச்சரியம் தாங்கலே.உடனே நான் உனக்கு எப்படி இந்த மிசோரம் பாஷைத் தெரியும்” என்று கேட்டேன்.

“நான் கேட்டதற்கு இவ என்ன பதில் சொன்னாத் தெரியுமா சார்.நீங்க கேட்டா ரொம்ப ஆசரியப் படுவீங்க.இவ உடனே ‘சார், நான் போன ஜென்மத்லே மிஸோரம் மாநிலத்லே இருக்கும் ‘லங்கேக்கு’ பக்கத்லே இருக்கும் ‘திங்க்ஸே’ என்கிற ஊரை சேர்ந்தவ’ன்னு சொன்னதும் நான் அசந்து விட்டேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது,கலெக்டர் பூஜாவைப் பார்த்து ” நீ போன ஜென்மத்லே இந்த ஊர்லேயா இருந்தே” என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

உடனே பூஜா எழுந்து நின்றுக் கொண்டு அவருக்கு வணக்கம் சொல்லி விட்டு “ஆமாம் சார், நான் போன ஜென்மத்லே இந்த ஊர்லே தான் வாழ்ந்துக் கிட்டு வந்தேன்” என்று சொல்லி விட்டு தன் னுடைய முழு கதையையும் விவரமாக சொல்லி விட்டு அழுதுக் கொண்டு இருந்தாள்.

உடனே அந்த கலெக்டர் பூஜாவை பார்த்து “அழாதேம்மா.நான் உனக்கு என்னால் ஆன எல்லா உதவிங்களையும் பண்றேன்” என்று சொல்லி விட்டு லலித் சுங்காவைப் பார்த்து “மிஸ்டர் சுங்கா,நான் இந்த ‘கோர செயலை’பண்ன ரெண்டு பேரையும் உடனே கண்டு பிடிச்சு,அவங்களுக்கு தக்க தண்ட னை கிடைக்க ஏற்பாடி பண்றேன்”என்று சொன்னார்.பிறகு அந்த கலெக்டர் பூஜாவைக் கேட்டு அவள் சித்தப்பாவின் பேரையும்,அவர் நண்பர் பேரையும்,போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீம் பேரையும் தன் ¨டா¢ யில் எழுதிக் கொண்டார்.
பிறகு தன் P.A.வை கூப்பிட்டார். P.A வந்ததும்.பூஜா சொன்ன எல்லா சமாசாரங்களையும் விவராகச் சொல்லி விட்டு, “நீங்க முப்பது வருஷத்துக்கு முன்னாடி சப் இன்ஸ்பெக்டரா இருந்த நசீம், இப்போ என்ன ‘போஸ்ட்லே’ எங்கே இருக்கார்,பூஜாவின் சித்தப்பா டங்காவும்,அவன் ‘ப்ரெண்ட்’துகுக்காவும் இப்போ எங்கே இருக்காங்கன்னு உடனே கண்டு பிடிச்சு எனக்கு சொல்லுங்க” என்று சொல்லி அனுப்பினார்.

ரெண்டு நாள் பூராவும் P.A. கலெக்டர் சொன்ன எல்லா விவரங்களையும் சேகா¢த்தார்.

ரெண்டு நாள் ஆனதும் P.A.கலெக்டர் இடம் வந்து “சார்,நசீம் இப்போ உதவி கமிஷனாரா இருக் கார்.பூஜா சித்தப்பா திங்க்சேயில் ஒரு பெரிய ஹோட்டலும்,ஒரு பெரிய ‘டிபார்ட் மென்டல் ஸ்டோரும்’ வச்சு இருக்கார்.அவர் நண்பன் துகுக்கா திங்க்சேயில் பெரிய ஒரு துணி கடையும் வைத்து இருக்கார்” என்று சொன்னார்

உடனே கலெக்டர் போலீஸ் கமிஷனரை தன் ரூமுக்கு அழைத்து கலெக்டர் லலித் சுங்காவையும் பூஜாவையும் அறிமுகப் படுத்து விட்டு,பூஜா சொன்ன கதை பூராவையும் சொல்லி,இப்போ உதவி கமி ஷனரா இருக்கும் நசீமையும்,பூஜாவின் சித்தப்பா டங்காவையும்,அவர் நண்பன் துகுக்காவையும் உடனே விசாரனைப் பண்ணி எனக்கு எல்லா விவரங்களையும் குடுங்க” என்று உத்தரவுப் போட்டார்.

வெளியே வந்த போலீஸ் கமிஷனர் அடுத்த நாளே உதவி கமிஷனர் நசீமையும்,டங்காவையும், டங்கா நண்பன் துகுக்காவையும் விசாரனைக்கு வர சொன்னார்.விசாரணைக்கு வந்த மூவரையும் ஒரு தனியான் ரூமில் உட்கார வைத்தார் ஒரு ‘கான்ஸ்டபிள்’.

விசாரணை ரூமில் கலெக்டரும்,லலித் சுங்காவும்,பூஜாவும் போலீஸ் கமிஷனருடன் கூட உட் கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.சித்தப்பா டங்காவை முதலில் விசாரிக்க ஆரம்பித்தார் போலீஸ் கமிஷ னர்.மற்ற இருவரும் பக்கத்தில் இருந்த ரூமில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.

அவரைப் பார்த்து போலீஸ் கமிஷனர் “உங்க அண்ணிக்கும்,அவங்க பையன் சக்மா ரெண்டு பேருக்கும் அந்த தீ விபத்து எப்படி நடந்திச்சு.எப்படி நீங்க அந்த தீ சம்பவத்தே ‘ஒரு விபத்து’ன்னு முடிவு பண்ணீங்க.அந்த தீ விபத்துக்கு சாட்சிங்க யாராச்சும் இருந்தாங்களா.அந்த தீ சம்பவத்திலே இறந்து போன அவங்க ‘பாடிங்களே’ நீங்க ‘போஸ்ட் மார்டெம்’ பண்ணி பார்க்க நீங்க போலீஸை கேக்கலையா” என்று கேட்டார். டங்காவுக்கு தூக்கி வாரைப் போட்டது.அவர் உடம்பு பூராவும் அந்த ஏ.ஸி. ரூமிலேயும் வேர்த்துக் கொட்டியது.அவர் “நான் கேக்கலே சார்.நான் கேக்காதது தப்பு தான்” என்று சொல்லி விட்டு தான் வேர்வையைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.

கொஞ்ச நேரம் ஆனதும் அந்த போலீஸ் கமிஷனர் “அவங்க ரெண்டு பேரும் அந்த தீ சம்பவ த்திலே எப்படி பொசுங்கி இறந்து இருக்க முடியும்.உங்க அண்ணியும்,அண்ணன் பையனும் இந்த தீ சம்பவத்திலே இறந்து போனதே எப்படி ஒரு சாதாரண ‘தீ விபத்து’ன்னு அந்த போலீஸ் இன்ஸ்பெக் டர் நசீம் எழுதினார்” என்று கேட்டதும் டங்கா ஆடிப் போய் விட்டான்.

போலீஸ் கமிஷனர் விடாமல் “அந்த சப் இன்ஸ்பெக்டர் நசீம் அப்படி எழுதினதுக்கு,நீங்க அவரே நீங்க ஒன்னும் கேக்காம எப்படி இருந்து இருக்கீங்க.உங்க அண்ணன் எப்படி ஆற்றிலே குளிக்கும் போது மூழ்கி இறந்தார்ன்னு கண்டு பிடிக்க வேணும்ன்னு உங்களுக்கு தோணலையா.உங்க அண்ணா சொத்து பத்திரம் உங்க கைக்கு எப்படி கிடைச்சது” என்று கேட்டார்.இதற்கும் டங்கா பதில் ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தார்.

போலீஸ் கமிஷனர் டங்காவைப் பத்து ”அன்னைக்கு நடந்த விபத்தைப் பத்தி அவருக்கு தெரி ஞ்ச விவரத்தை இந்த காகிதத்லே எழுதிக் குடுங்க”என்று சொல்லி அவா¢டம் ஒரு காகிதத்தையும் போனாவையும் டங்கா இடம் கொடுத்து விட்டு “நீங்க நாளைக்கும் விசாரணைக்கு வரணும்” என்று சொன்னார்.

டங்கா அந்த காகிதத்தை போலீஸ் கமிஷனர் இடம் இருந்து தன் கையில் வாங்கிக் கொண்டு முன்னுக்கு பின் முரணாக ஏதோ எழுதிக் கொடுத்தார்.போலீஸ் கமிஷனர் அந்தக் காகிதத்தை வாங்கிக் கொண்டு அவரை ரூமை விட்டு வெளியே அனுப்பினார்.

பிறகு உதவி கமிஷனர் நசீமை விசாரணக்கு கூப்பிட்டார் போலீஸ் கமிஷனர்.உதவி கமிஷனர் நசீம் போலீஸ் கமிஷனருக்கு ஒரு ‘சல்யூட்’ அடித்து விட்டு பயந்துக் கொண்டே உட்கார்ந்தார்.

போலீஸ் கமிஷனர் நசீமைப் பார்த்து “முப்பது வருஷத்துக்கு முன்னாடி முரெக்கா வீட்லே ஒரு தீ விபத்து நடந்திச்சே.அது உங்களுக்கு நல்லா ஞாபகம் இருக்கா”என்று கேட்டார். உடனே நசீம் “நல்லா ஞாபகம் இருக்கு சார்” என்று சொல்லி விட்டு முகத்திலே வழிந்துக் கொண்டு இருந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.

போலீஸ் கமிஷனர் “அன்னைக்கு நடந்த ‘தீ விபத்து’ எப்படி நடந்திச்சு.எப்படி நீங்க அந்த தீ சம்பவத்தே ‘ஒரு விபத்து’ன்னு முடிவு பண்ணீங்க.அந்த தீ சம்பவத்துக்கு சாட்சிங்க யாராச்சும் இருந் தாங்களா.அந்த தீ விபத்தில் இறந்து போனவங்க பாடிகளை’ ‘போஸ்ட் மார்டெம்’ பண்ணீங்களா.அந்த தீ விபத்தில் இருந்து வெளியே ஓடி வர அவங்க ரெண்டு பேரும் முயற்சி பண்ணாம இருந்து இருப்பா ங்களா.அந்த தீ விபத்திலே வெடிச்ச ‘கெரஸின்’ அடுப்பு உங்களுக்கு அவங்க வீட்லே கிடைச்சச்சா. ஆற்றில் தண்ணீர்லே மூழ்கி இந்துப் போன முரெக்காவின் பாடியை ‘போஸ்ட் மார்டெம்’ பண்ணீங்க ளா” என்று பல கேள்விகள் கேட்டு மடக்கினார் போலீஸ் கமிஷனர்.

ஒரு கேள்விக்கும் நசீம் சரியாய் பதில் சொல்லவில்லை.போலீஸ் கமிஷனர் நசீமை அன்னைக்கு நடந்த தீ விபத்தைப் பத்தியும்,முரெக்கா இறந்ததைப் பத்தியும் அவருக்கு தெரிஞ்ச விவரத்தை ஒரு காகிததில் எழுதி தரச் சொல்லி,ஒரு காகிதத்தையும் பேனாவையும் அவா¢டம் கொடுத்து விட்டு “ நீங்க நாளைக்கும் விசாரணைக்கு வரணும்”என்று சொன்னார்.நசீம் அந்த காகிதத்தில் ஏதோ சம்மந்தம் இல் லாத விஷயங்களை எல்லாம் எழுதி போலீஸ் கமிஷனர் இடம் கொடுத்து விட்டு,அந்த ரூமை விட்டு வெளியே வந்தார்.

போலீஸ் கமிஷனர் தங்கள் இருவரையும் முப்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்த தீ விபத்தைப் பத்தியும்,முரெக்கா செத்துப் போனதையும் பத்தியும் கேள்விகள் மேலே கேள்விகள் கேட்டு குடை ந்ததை துகுக்காவிடம் சொன்னார்கள் டங்காவும் நசீமும்.மூவரும் பயந்துக் கொண்டே வீட்டுக்குப் போனார்கள்.

அடுத்த நாள் நண்பண் துகுக்காவை விசாரணைக்குக் கூப்பிட்டார் போலீஸ் கமிஷனர்.அந்த விசாரணையின் போது,கலெக்டரும் லலித் சுங்காவும் பூஜாவும் கலந்துக் கொண்டார்கள்.போலீஸ் கமி ஷனர் துகுக்காவை பார்த்து “இதோ பாருங்க, நான் நசீமையும்,டங்காவையும் நேத்து விசாரிச்சு இருக் கேன் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கட்டும்” என்று சொல்லி விட்டு,அவரைப் பாத்துடங்காவையும் இன்ஸ்பெக்டர் நசீமையும் கேட்ட கேள்விகளை எல்லாம் மாற்றி மாற்றி கேட்டார். போலீஸ் கமிஷனர் கேட்ட எந்த கேள்விக்கும் துகுக்கா சரியாகவே பதில் சொல்லவில்லை.

பத்து நிமிஷம் ஆனதும் போலீஸ் கமிஷனர் நசீமையும்,டங்காவையும் விசாரணை நடக்கும் ரூமுக்கு வந்து உட்காரச் சொன்னார்.இருவரும் வந்து உட்கார்ந்துக் கொண்டார்கள்.

டங்கா,நசீம்,துகுக்கா,மூவா¢டமும் பூஜாவை காட்டி “இவங்க யார் தெரியுமா.இவங்க தான் போன ஜென்மத்தில் இந்த ஊர்லே இருந்த முரெக்காவின் ஒரே பையன் சக்மா. துகுக்கா,நீங்க கெரஸின் ஊத்தி இவனையும்,இவனுடைய அம்மாவையும் தீயிலே பொசுக்கி இருக்கீங்க.தீயை கொளுத்துவதற்கு முன்னாடி இவனுடைய வாயயையும்,இவன் அம்மா வாயையும் துணி வச்சு அடைச்சு அவங்களை பேச முடியாத படி பண்ணி இருக்கீங்க.அவங்க கைகளையும் பின்னால் கட்டி இருக்கீங்க.முரெக்கா சம்சார த்தே மிரட்டி பீரோ சாவியை வாங்கிக் கிட்டு, சொத்து பத்திரத்தை..” என்று சொல்லிக் கொண்டு இருக் கும் போது துகுக்காவுக்கு மயக்கமே வந்து விட்டது.

உடனே துகுக்கா “ஆமாங்க.அவங்க சொல்றது எல்லாம் நிஜங்க” என்று சொல்லி போலீஸ் கமிஷனா¢ன் கால்களை கட்டிக் கொண்டு அழுதான்.துகுக்கா உண்மையை ஒத்துக் கொண்டதைப் பார்த்த டங்காவும் நசீமும் அன்று என்ன நடந்தது என்கிற உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.

போலீஸ் கமிஷனர் உடனே தன் அதிகாரிகளைக் கூப்பிட்டு டங்கா, நசீம்,துகுக்கா மூவர் மீதும் வழக்கு போடும் படி உத்தரவு கொடுத்தார்.

வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது மூவரும் தங்கள் தப்பை ஒத்துக் கொண்டார்கள்.

உடனே ‘ஜட்ஜ்’ நசீமை வேலையில் இருந்து ‘டிஸ்மிஸ்’ பண்ண உத்தரவு இட்டார்.மூவருக்கும் ஆயுள் தண்டனையை விதித்தார்.டங்காவின் ஹோட்டல்,‘டிபார்ட்மெண்டல்’ ’ஸ்டோர்’, நண்பனின் துணிக்கடை மூன்றையும் உட னே ஏலத்தில் விற்று,அதில் வரும் பணத்தை பூஜா ‘மைனரா’க இருப்ப தால்,அவள் அப்பா ராமசாமியின் போ¢ல் ஒரு ‘டிராப்டாக’ தரும் படி உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவின் படி ரெண்டு கடைகளையும்,ஹோட்டலையும் ஏலத்தில் விற்று,அதில் வந்த நாலு கோடி ரூபாய்க்கு ஒரு ‘டிராப்ட்டை’ கோர்ட்டு பூஜாவின் அப்பா ராமசாமி போ¢ல் எழுதிக் கொடு த்தார்கள்.அந்த ட்ராப்டை வாங்கிக் கொண்டார் லலித் சுங்கா.அடுத்த நாள் கலெக்டர் ராம்லூனாவு க்கும்,போலீஸ் கமிஷனருக்கும்,தங்கள் நன்றியை சொல்லி விட்டு,லலித் சுங்காவும்,பூஜாவும்,விமானம் ஏறி சென்னைக்கு வந்தார்கள்.

சென்னைக்கு வந்த லலித் சுங்கா பூஜாவை அழைத்துக் கொண்டு நேரே அவள் வீட்டுக்கு வந்தார்.லலித் சுங்கா மிசோரத்தில் நடந்த எல்லா சமாசாரங்களையும் விவரமாகச் சொன்னார்.பிறகு அவர் தன் ‘ப்ரீப் கேஸை’த் திறந்து அவர் கொண்டு வந்து இருந்த நாலு கோடி ரூபாய் ‘ட்ராப்டை’ ராமசாமியிடம் கொடுத்து விட்டு “நீங்க பூஜாவை என் கூட மிசோரம் அனுப்பினீங்க.அதனால் தான் என்னால் பூஜாவுக்கு போன ஜென்மத்லே சேர வேண்டிய ‘பூர்வீக சொத்தே’ மறுபடியும் உங்க குடும் பத்துக்கு கொண்டு வந்த தர முடிஞ்சது.கூடவே பூஜாவை போன ஜென்மத்லே தீ வச்சு கொளுத்தின ‘பாவி’க்கும்,பூஜாவின் சித்தப்பாவுக்கும்,அவன் நண்பனுக்கும் ஆயூள் தண்டணை வாங்கிக் குடுக்க முடிஞ்சது” என்று சொன்னார்.

“சார்,உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியாம நான் முழிச்சிக் இட்டு இருக்கேன்” என்று தன் கைகளைக் கூப்பிக் கொண்டு கண்களில் கண்ணீர் மல்க சொன்னார் ராமன்.

எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு கலெக்டர் லலித் சுங்கா தன் பங்களாவுக்குப் போனார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *