புத்தியை பயன்படுத்தினால்…

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 2, 2019
பார்வையிட்டோர்: 30,248 
 

குருவே, எனக்கு எதுவுமே சரிப்பட மாட்டேன்கிறது என்று சொன்னவனை பார்த்தார் குரு. என்ன பிரச்னை? என்றார். எல்லாமே எனக்கு எதிராக இருக்கிறது. என்னால் சமாளிக்க சிரமமாக இருக்கிறது என்றான் வந்தவன்.

குரு சற்று சிந்தித்தார். அவனின் பிரச்னை அவருக்கு புரிந்ததது. அவனுக்கு ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு வேட்டைக்காரன் தன் நாயுடன் வேட்டைக்குப் போயிருந்தான். அங்கே நாய் திசை மாறி ஓடி விட்டது. வழி தப்பிய நாய் ஓர் இடத்தில் பதட்டமாய் நின்று கொண்டிருந்தது. நாய்க்கு பயம் அதிகரித்தது. அந்த சமயம் ஏதோ சலசலப்பு கேட்க. திரும்பி பார்த்த நாய்க்கு அதிர்ச்சி. அங்கே ஒரு சிறுத்தை.

உடனே ஒரு நாய்க்கு ஒரு யோசனை தோன்றியது. அங்கே கிடந்த ஒரு எலும்பை நக்கிக்கொண்டே இன்னும் பசி தீரலையே, வேற எதை சாப்பிடறது? என்று சத்தமாக சொல்லிக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்து. இதை கேட்ட சிறுத்தைக்கு பயம் எடுத்தது. அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. நாய் நிம்மதியானது.

ஆனால் அந்த நிம்மதி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த குரங்கு ஒன்றுக்கு கடுப்பு. சிறுத்தையை நாய் எளிதாய் சமாளித்து விட்டதே என்று தாவிப்போய் சிறுத்தையிடம் சொல்லிவிட்டது.

சிறுத்தைக்கு கடுங்கோபம். நாயைத் தாக்க சீறிக்கொண்டு வந்தது. அதன் மேல் குரங்கு. இரண்டும் ஒன்று சேர வருவதைப் பார்த்ததுமே நாய்க்கு புரிந்து விட்டது.

உடனே ”நன்றி குரங்கே. சிறுத்தையை ஏமாற்றி கூட்டி வந்ததற்கு நன்றி” என்று சொன்னதும் சிறுத்தை மீண்டும் ஓட்டம் பிடித்தது.

குரு இந்த வேடிக்கை கதையை சொன்னதும் வந்தவனுக்கு எதிர்ப்புகளிடமிருந்து தப்பிப்பது எப்படி என்பது புரிந்தது.

அப்போது குரு அவனுக்கு சொன்ன ‘”WIN” மொழி:-

புத்தியை பயன்படுத்தினால் எந்த எதிர்ப்பையும் சமாளிக்கலாம்.

– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)

Print Friendly, PDF & Email

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

1 thought on “புத்தியை பயன்படுத்தினால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)