பாடும் கடல் கன்னி காஞ்சனமாலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 5,642 
 
 

முன்னுரை

மீன் பாடுவதாக ஒரு நம்பிக்கை கிழக்கு இலங்கையில் உள்ள மட்டகளப்பு சமூகத்தில் இருந்து வருகின்றது. பாடும் மீனையே “பாடுமீன்” என வழங்குவதாக அறிய முடிகிறது. இத்தகு பாடுமீன் இனம் இலங்கையில் கல்லடியிலும் கலிபோர்னியாவிலுமே உள்ளதாகக் கருதப்படுகின்றது.இது ஒரு வகை ஊரி என்பது ஆய்வாளர்கள் கருத்து.

ஆனாலும், இத்தகு பாடுமீன்கள் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புக்கள் இன்னும் நம்பகமற்ற அல்லது நம்பலாமா? நம்பக்கூடாதா? என்ற நிலையிலையே உள்ளன. எவ்வாறாயினும், நாம் இன்று பாடுமீன் பற்றிய சில சுவர்சிமான செவி வழி வந்த கதை ஓன்று உண்டு.

***

இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள மட்டக்களப்பில் கல்லடி வாவிப் பகுதியில் பாடும் மீன் இனங்கள் வாழ்வதாகக் கருதப்படுகிறது. 17 ஆம் நூற்றண்டுக்ளில் இருந்து மட்டக்களப்பு மீன்பாடு வாவியில் ஒருவகை மீன் பாடுவதை மீனவர்கள் கேட்டுள்ளார்கள். ஆனாலும், அநேக மக்கள் இதை நம்பவில்லை.

பாடும் மீன்கள் இருப்பதை அதற்கு முன்பு உலகத்தில் எந்த நீர்நிலைகளிலும் இப்படி மீன் பாடிய தகவல் அறியப்பட்டதாக செய்திகள் பதிவு செய்யப்படவில்லை என்பதே உண்மை.ஆனாலும், அநேகமாக இந்த வகை மீன்கள் கல்லடிப் பாலத்தின் அடியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இவ்வாறு மீன் பாடுவதை நடு இரவுகளில் அவதானித்தனர். பாடும் மீன்களை ஆய்வுகள் செய்யும் அளவிற்கு அக்காலம் அறிவியல் ரீதியில் முன்னேறியிருக்கவில்லை. ஆனால், மக்கள் மத்தியில் மிகப் பிரபல்யமாகப் பேசப்பட்ட ஒன்றாக இப் பாடு மீன்கள் காணப்பட்டன.

இப்பாடு மீன்களை கலைஞர்கள் வர்ணித்தார்கள், சில இடங்களில் இம் மீன்கள் கடற்கன்னிகளாகவும் சித்தரிக்கும் அளவிற்கு உலகப் பிரபல்யம் அடைந்தது.

இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசையென நம்பப்படுகின்றது. இதனை இலக்கியங்களில்n “நீரரமகளீர்” இசைக்கும் இசை என வர்ணிக்கப்படுகிறது.

ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு மீன் பாடும் தேன் நாடு எனப் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு மீன் பாடும் தேன் நாடு எனப் பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றமையும் குறிப்பிடற்குரியது.

பொதுவாக இவ்வகை மீன்கள் பாடுவதை முழுப் பூரணை நாட்களில் அமைதியான இரவில் கல்லடிப் பாலத்தின் அடியிலுள்ள ஆழமான பகுதியிலும் பாலத்திலிருந்து தென் மேற்குப் பகுதியில் நீர் மேல் தென்படும் ஒரு மலைக் குன்றுகளுக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் இவ்வகை மீன்கள் பாடுவது ஒரு சாதரண நிகழ்வாக 1960. ஆண்டு காலப் பகுதியில் காணப்பட்டுள்ளது

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பிற்பாடு மீன்கள் பாடுவதை கேட்க முடியவில்லை என அப்பிரதேச மீனவர்கள் மிக்க கவலையோடு குறிப்பிட்டிருந்தனர். மட்டக்களப்ப மண்ணிற்கு பெருமை ஈட்டித் தந்த அழகிய மீன் இனம் அழிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

எனக்கு மட்டக்களபு வாவியில் மீன் பாடும் மர்மத்தை கண்டறியும் ஆவல் நீண்ட காலமாக இருந்து வந்தது . அதுவும் நான் ஒரு எழுத்தாளன் . இது போன்ற வாய் வழி வந்த வரலாறு உள்ள கதைகள் பற்றி அறிந்து எழுதுவதில் எனக்கு ஆர்வம் அதிகம்.

மட்டக்களப்புவுக்கு நான் சென்று இருந்த போது மீனவர் கூட்டத்தின் தலைவராக இருந்த சிவராசா என்பவரை சந்தித்தேன் . அவர் பிறந்தது மண்முனை.

“”ஐயா இந்த பாலத்துக்கு அடியில் ஒரு கடல் கன்னியும் அவளின் தோழிகள் மூவரும் சேர்ந்து பூரண நிலவு காலத்தில் பாடுகிறார்களா படுகிறார்கள் என்று ஊரில் பேசிக் கொள்கிறார்கள் அது உண்மையா ஐயா”? என்று வயது தொன்னூருக் மேல் இருக்கும் அந்த முதியவரை கேட்டேன் . வருக்கு அவ்வளவு வயதாகியும் பல் விழவில்லை

“தம்பி இந்த கேள்வியை பலர் என்னிடம் கேட்டு விட்டர்கள் . வெளி நாட்டவர் ஒருவர் கேட்கும் ஒலியை என் வள்ளத்தில் சென்று நடு நிசியில் பதிவும் செய்துள்ளார். இந்த இசை கேட்பதுக்கு நான் அறிந்த செவி வழிவந்த கதையும் கூட உண்டு ”

” கதையா ? அதை கேட்கத் தானே கொழும்பில் இருந்து இந்த ஊருக்கு நான் வந்திருக்கிறன். சொல்லுங்கள கேட்பம்”.

” நீர் கேள்வி பட்டிருபீர் ஒரு காலத்தில் பரதவர,. திமிலர், முக்குவர், கரையார் , செம்படவர் , அளவர். பட்டாணியர்கள் போன்ற தோழில் சார்ந்த சாதி பிரிவினைகளில் மட்களப்பில் பல இனங்கள்வாழ்ந்தனர் என்று . அவர்களில் திமிலர் . முக்குவ இன மக்கள் அநேகர் வாழ்ந்தனர் “.

“என்ன இது புது இனம் பற்றி சொல்லுகிறீர்கள் ஐயா .அவர்களை பற்றி கொஞ்சம், சொல்லுங்கள் . நான் அவர்கள் வரலாறு பற்றி அறிய ஆவலுடையவன் ”

” முக்கி முத்து குளித்தவர்கள் முக்குவர் என்பர் . திமிர் பிடித்தவர்கள் திமிலர் என்பர் கிழக்குத் தமிழர்கள் எல்லோரும் முக்குவர் அல்ல.தம்பி இது வரலாற்று ரீதியான கதைகளை உள்வாங்கி முக்குவ பார்வையில் ஏறாவூர் . சத்துருகொண்டான், வந்தேரறுமூலை போன்ற இடங்களுக்குரிய பெயர்களை விளக்குகிறது. முக்குவர் குடியிருப்பை அமைத்ததும் மற்றொரு மீன்பிடியுடன் தொடர்புபட்ட சாதியான திமிலருடன் தொழில் சார்பாக முரண்பட்டனர். அவ்விரு இனங்களுக்கு இடையே போட்டி இருந்து வந்தது திமிலர் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் காணப்பட்டனர். அவர்களின் ஆரம்ப குடியேற்ற இடம் திமிலைத்தீவு ஆகும். இங்கு மீன் பிடி துறைமுகம் காணப்பட்டதாக வரலாறு குறிக்கிறது. திமிலரால் அதிகம் மீன்கள் பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் மீன்கள் முக்குவர் அம்பா பாடி கரை வலை இழுக்கும் பகுதிக்கு சென்றதனால் திமிலருக்கு மீன் கிடைப்பது குறைந்தது . அதுக்கு முக்கிய காரணம் முக்குவர் கூட்டத்து தலைவன் மகள் காஞ்சனமாலாவும் அவளின் மூன்று சினேகிதிளும் பாடிய மீன்களை கவரும் அம்பா பாடல்களே என பேசிக் கொண்டனர் .

திமிலர் கூட்டதுத் தலைவன் மீன் அதிகம் முக்குவருக்கு கிடைக்கும் இரகசியத்தை அறிய தன் ஒரே மகன் திலகனை மாறு வேடத்தில் முக்குவர் கரை வலை இழுக்கும் பகுதிக்கு அனுப்பினான். திலகன் மீன் பிடிப்பதில்கெட்டிக்காரன் . அழகன் வேறு . அதே நேராம் இசையில் பற்றுதல்உள்ளவன்”

” இரகசியத்ததை கண்டு பிடிக்க எங்கு ஐயா சென்றான் “?

“ஓரு நாள் திலகன் காஞ்சனாவின் பாடலில் இருக்கும் இரகசியத்தை அறிய முக்குவர் கரை வலை இழுக்கும் இடத்துக்கு மாறு வேடத்தில் சென்றான். காஞ்சனாவும் அவளின் மூன்று தோழிகளும் அம்பா பாடுவதை கேட்டு மெய் மறந்து கேட்டு நின்றான் “.

“என்ன பாடல் ஐயா . தெரிந்தால் சொல்லுங்கள் கேட்பம் “.

:”இது என் பாட்டனர் எனக்கு சொன்ன பாடல். நான் படுகிறன் கேளும்

அந்த வயதிலும் குரல் தழும்பாமல் கிழவன் பாடினார்

“விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா

விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா

அடிக்கும் அலையே நம்தோழன் – ஐலசா

அருமைமேகம் நமதுகுடை – ஐலசா

பாயும் புயல் நம்ஊஞ்சல் – ஐலசா

பனிமூட்டம் உடல்போர்வை – ஐலசா

காயும் ரவிச்சுடர்கூரை – ஐலசா

கட்டுமரம் வாழும் வீடு – ஐலசா

மின்னல்வலை அரிச்சுவடி – ஐலசா

பிடிக்கும் மீன்கள் நம்பொருட்கள் – ஐலசா

மின்னல் இடிகாணும் கூத்து – ஐலசா

வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா

முழுநிலாதான் கண்ணாடி – ஐலசா

மூச்சடக்கி நீந்தல் யோகம் – ஐலசா

தொழும் தலைவன் பெருவானம் – ஐலசா

தொண்டு தொழிலாளர் நாங்கள் – ஐலசா

ஒத்துமை கொண்டாடனும் – ஐலசா

உரிமையை உயர்த்திடனும் – ஐலசா

” அருமையன பாடல் . செய்யும் தொழிலுக்கு ஏற்ற பாடல் . அதை அவன் கேட்டதும் என்ன செய்தான் ‘?

“காஞ்சனாமாலாவும் அவளின் தோழிகளும் உணரச்சியோடு பாடுவதை கேட்ட திலகன் தான்வந்த நோக்கத்தை மறந்து நின்றான் . வலையில் சிக்கிய மீனகள் ஏராலம். எங்கள் பகுதியில் இவ்வளவு மீன்கள்கிடைக்கவில்லையே திலகன் யோசித்தான் . இந்த பெணினின் குரலில் ஏதோ மீன்களை கவரும் அதிர்வு இருக்கிறது என்று கண்ட திலகன் . பாடிய காஞ்சனாமாலா மீது அவனை அறியாமலே காதல் கொண்டான். இவள் என் மனைவி ஆனால் எங்களுக்கும் அம்பா பாடுவாள் . முக்குவரோடு எங்கள் போட்டி பிரச்சனை தீர்ந்தது. திலகன் யோசித்தான்.

அவன் தனது முக்குவ நண்பன் மூலம் காஞ்சனாமாலாவை சந்தித்து பேசினான் . தனது ஓடத்தில்ஏரியில் அழைத்து சென்று பேசினான் . காஞ்சனாமாலாவின் மூன்று தோழிகளும் அவளுக்கு அந்த திமிலர் இனத்து வாலிபனுடன் விபரீத காதல் விளையாட்டு வேண்டாம். என்று எச்சரித்தனர் “.

” அவள் தோழிகள் எச்சரித்ததை கேட்டாளா” ?நான் முதியவரை கேட்டேன்

” முதலில் அவர்களின் சந்திப்பு புதுமையாக இருந்தது . திலகன் அவளுக்கு விலை உயர்ந்த வலம்புரி சங்கு ஒன்றை கொடுத்தான் திலகனின் பேச்சிலும் அழகிலும் காஞ்சனாமாலா மயங்கினாள் . காதலன் கேட்ட படி ஓடத்தில் போகும் போது தன் இனிய குரலில் பாடினாள். அவர்களின் சந்திப்பு அனேகமாக பூரண நிலவில் இடம் பெறும் . காஞ்சனாமாலா வின் குரல் கேட்டு மீகன்கள் ஏரியில் துள்ளி குதிப்பதை திலகன் கண்டு ஆச்சரியபட்டான். அவனுக்கு முக்குகவரின் கரை வலைக்கு அதிக மீன்கள் கிடைகும் ரகசியம் அவனுக்குப் புரிந்தது.

காஞ்சனாமாலா தன் காதலன் திமிலர் கூட்டத்து தலைவன் மகன் என அறிந்து முதலில் அவள் அவனின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை

அவனும் அவளைவிடவில்லை. அவனின் பேச்சில் அவள் மயங்கினாள்.

“:இங்கை பார் திலகன் எங்கள் முக்குவர் சமூகமும் உங்கள் திமிலர் சமூகமும் விரோதிகள் நீ திமிலர் சமூகத்தின் தலைவனின் மகன். முக்குவர் சமூகத்தின் தலிவன் மகள் எனக்கும் உனக்கும் எப்படி காதல் பொருந்தும்”? காஞ்சனாமாலா சொன்னாள்.

” எமது காதலுக்கு இனம், மதம்,விரோதம், ஆகியவை இல்லை எங்கள் இரு மனங்களும் ஒன்றாகி விட்டது காஞ்சனா”

“திலகன் இந்த ஊரில் நாம் இருவரும் கணவன் மனைவியாக வாழ ஊர் ஏற்றுக்கொள்ளாது . நீ என்ன மறந்து, உன் இனத்தில் ஒருத்தியை தெரிந்து எடுத்து மணந்து கொள்”.

” நாம் இருவரும் திருமணம் செய்து இந்த ஊரில் திருமணம் செய்து வாழ்ந்தால் தானே பிரச்சனை . அதனால் நாம் இருவரும் வெகு தூரத்தில் உள்ள மூதூருக்கு சென்று திருமணம் செய்து வாழ்வோம் ” திலகன் சொன்னான்.

“உன் தந்தை நீ என்னை காதலிப்பதை அறிந்தால் எங்கள் இருவருக்கும் அவரால் ஆபத்து வரலாம். அவர் கோபக்காரர்” காஞ்னமாலா சொன்னாள்.

“அதுக்கு அவனின் பதில் என்ன ஐயா “? நான் அவரை கேட்டேன்.

அதுக்கு அவன் சொன்னான் ” காஞ்னா நான் இருக்கும். மட்டும் நீ ஒன்றுக்கும் பயப்படாதே வருகிற சித்திராப் பெளர்ணமி தினமன்று நான் உன்னை என் படகில் வந்து சந்தித்து மூதூருக்கு கூட்டிச் செல்வேன் நீ ஏரி ஓரத்தில் எனக்காக காத்திரு ” என்றான் திலகன்

“அப்போ ஐயா அவர்கள் இருவரும் மூதூருக்கு படகில் தப்பி சென்றார்களா:”நான் ஆவலுடன் கேட்டேன்.

“அது தான இல்லை திலகனின் தந்தைக்கு மகனின் காதல் தெரியவந்து இரு பட்டாணியர்களின் உதவியோடு காஞ்சனாவும் திலகனும் படகில் கல்லடி எரியில் போகும், காஞ்னாவவை ஏரிக்குள் பட்டாணியர் தள்ளி மூழ்கடித்தனர் . திலகனை திமிலர் தலைவனிடம் அழைத்து சென்றனர். திலகன் காதலியை பிரிந்த சோகத்தில் வெகு காலம் சீவிக்கவில்லை.

அப்போ காஞ்சனமாலாவின் தோழிகளுக்கு என்ன நடந்தது “?

“காஞ்சனமாலா இறந்த செய்தி அறிந்து அவளின் தோழிகளும் ஏரியில் குதித்து இறந்தார்கள். மீன்கள் இறந்தவர்களை ஏரிக்கு அடியில் அழைத்து சென்று உயிர் கொடுத்து கடல் கன்னிகளாக சேர்த்துக் கொண்டன அந்த கடல் கன்னிகள் பாடும் பாடல் தான் நாம் கல்லடி பாலத்தில் நாம் கேட்கும் பாடல் என்று ஊர் சொல்கிறது” முதியவர் சொன்னார்.

“கேட்க சோகமானமுடிவு இனங்களுக்கு இடையே இல்லாத ஒற்றுமை வீணாக உயிர்களை பலி எடுத்து விட்டது” என்றேன் நான் .

(யாவும் புனைவு)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *