நீதிக்கதை – 3

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 16, 2024
பார்வையிட்டோர்: 153 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இனி,பரதார நிவிருத்தி யில்லாமையால் யில்லாமையால் அனர்த்த மெய்திய பாடிகாப்பானது சரிதமாவது-

ஜம்பூ துவீபத்து பரத பரத க்ஷேத்திரத்து சித்திரகார மென்னும் நாட்டு, நிசில்பமென்னும் நகரத்து ராஜா ஸிம்மஸேனன் என்பான். அந்நகரத்து ஸர்வரக்ஷனென்பான், இவன் மனைவி யோருநாளிவனோடு அங்கலாய்த்து என் மாதா வெனக்குப் பூட்டிய ஆபரண மல்லது உன்னால் மஞ்சாடிப் பொன்னும் பூட்டப்பட்டதில்லை யென்று சொல்லக் கேட்டு, லஜ்ஜிதனாய்ச் செல்கின்ற காலத்து இவள் மாதா. மரித்தபின் படுவாய் துக்கித்து நடக்கும் நாளில் அவனுக்கு அஸாத்தியமான வியாதி தோன்றித் தன் மாதாவாகிய இவள் வியபிசாரிணியாகி வர்த்திக்கின்ற இவள் தன்னோடு களவு புணர்ச்சி சேரும் அவனையம் பலத்தே யானிரவு வருகிறேன்; நீயுமங்கே வருகவென்று ரஹஸ்யமாகச் சொல்லிப் போந்து ஸர்வ ரஷன் மனையாளான தன் மருமகள் பக்கல் வந்து யானொரு ஊருக்குப் போய், பந்துக்களைப் பார்த்து வரவேணுமென்று, பூஷணங்களைத் தரவெணுமென்று சொல்லி, யவையிற்றைப் பூண்டு, மற்றும் வேண்டு மலங்காரஞ் செய்து, அர்த்த ராத்ரத்து அம்பல மேற்போய், அம்பலத்துப் புக்குநிற்பக் களவுபுணர்ச்சி புணருமவனைச் காணாது நின்றபின் தன் மசனாகிய ஸர்வரக்ஷன் சென்றம்பல மெய்த அவனைக் கண்டு பயப்பட்டு ஒரு மூலையிலொதுங்க அவனுடங் கொதுங்கினவள் யாவளென்று மெய்பற்றி யாபரணமெல்லாம் வாங்கிக் கொண்டு, பிவளுடன் புணர்ந்து போந்தபின், இவளுந் தன் னை வந்துபுகுதலும் ஸர்வரக்ஷன் பொழுது விடிந்து இன் மனையாளுக்கு யானுனக்கு ஆபரணந் தருகின்றேன்; கொள்வாயாக வென்று கொடுப்ப அவளும் ஸந்தோஷிந்து அவற்றை வாங்கிக்சொண்டு போந்து, இவையெல்லா மென்னுடைய ஆபரணம், நான் மாமியாருக்கு இரவல் கொடுத்தவை யென்று சொல்ல, அவனும், உன் மாமிக்கு இரவல் கொடுத்தவை என் கையில் வரக் காரணமென் னென்று வினவ யவையல்ல வென்று சொல்லி அவளும் சங்கித்துச் சென்று, தன் மாமியைக் கண்டு, தன்னாபரணம் வாங்க அவள் கழுத்திற் காணாது, என்னாபரண மெங்கே! யென்று கேட்ப, அவளும், அவை வாங்கி வைத்தே உன் மனையேறக் கொண்டுவருகிறேன், நீ போ வென்று சொல்ல.

இவளும், அவளது அனுபவ சின்னம் பலவுங் கண்டு, தன் பர்த்தா வியாதிஸ்தனாய்க் கிடப்ப, இவளது சரீரம் வேறு பாடு தன் பர்த்தாவாகிய ஸர்வரக்ஷன் செயலென்று கருதி மாத்ஸரியத்துடன் மனைபுகுந்தபின், ஸர்வரக்ஷன் தன் மாதாவாவதறிந்து, தங்களி பல்ரமித்துச் செல்லா நிற்ப, தன் மனையாளாகியவள் பாடிக் காப்பிற் கெல்லாம் என் பர்த்தாவை இவள் மாதாவாயிருந்தும் அனு ‘விப்பதோ வென்றுஞ் சொல்லி மாத்ஸரியத்தால் பிரகாசிப்பிக்கப் பாடி காப்பாரும் ராஜாவுக் கறிவிப்ப, ராஜாவும் கோபித்து ஸர்வரக்ஷகனை யழைத்து, இவ்வண்ணம் அநியாயஞ் செய்தது உண்டோ? வென்று தண்டித்துக் கேட்ப அவனும் ஸம்பதித்தனன்.

அதுகேட்டு பூராசாரம் பண்ணிய இவனுக்குத் தண்டமென்னவென்று தண்டனம் பண்ணுவார்களை வினவ, அவர்களுங் கண்ணிரண்டுஞ் சுட்டு, மூக்குஞ் செவியு மறுத்து, வாயுங் கிழித்துளங்கச் சேதனமும் பண்ணிவிக்கை கைகாலிரண்டு மறுத்துத் தன் மாதாவாகிய அவளுக்கு மிந்தப் பிரகாரஞ் செய்து, சகட்டின் காலி லிருவரையுங் கட்டி நகரத்தைச் சூழ விழுப்பதென்று விதிப்ப, ராஜாவும் அவர்களை யவ்வண்ணம் தண்டிப்பித்தனன்.

இவ்வண்ணம் பாதார பாதார நிவிருத்தி யென்னும் விருத மில்லாமையால், அனர்த்த மெய்திய ஜனங்களுக்கு ஸர்வரக்ஷ னென்று பாடிகாப்பான் உதாஹரணமாகச் சொல்லப் படுகின்றன னென்றவாறு.

சுபமஸ்து.

– தமிழ்நாடு அரசு கீழ்த்திசைச் சுவடிகள் வரிசை எண்: 73, நீதிக் கதைகள், பதிப்பாசிரியர்: டாக்டர் எஸ்.சௌந்தரபாண்டியன் எம்.ஏ, (தமிழ்), எம்.ஏ, (ஆங்.), பி.எட், டிப்.வ.மொ, பிஎச்டி, காப்பாட்சியர், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை, தமிழ்நாடு அரசு, 1992

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *