நான் பைத்தியம் இல்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 9,584 
 
 

(இது முருகதாஸ் ராஜாராமன் என்றொரு இளம் வாலிபரின் சமீபத்திய அனுபவத்தையும், அதன் பின் விளைவுகளையும் விபரிக்கும் உண்மைக் கதை. முருகதாஸ் எம்மை மிகவும் விரும்பிக் கேட்டபடியாலும், அவருக்கு இலங்கைத் தமிழர்களான நாம் உதவ வேண்டும் என்ற நோக்கத்திலேயும்தான், அவருடைய கதையை இங்கு பிரசுரிக்கிறோம். இக்கதையை முருகதாஸ் எமக்கு சொன்னபடியே முடிந்தவரை எழுதியிருக்கிறோம். உங்களால் முடிந்த உதவியை இவருக்கு செய்யும்படி முருகதாஸின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். நன்றி -ஆசிரியர் குழு.)

அண்ணை எனக்கு சொந்த ஊர் உரும்பிராய். அங்கே “மாஸ்டர் ராஜாராமன்” என்றால் ரோட்டு நாய்க்குக் கூட தெரியும். அப்படி ஒரு செல்வாக்கு. இந்தப் பிரச்சினை அங்கே தொடங்கியிருக்காட்டி, நான் வாழ் நாளிலே இந்த நாட்டிற்கு வந்திருக்கமாட்டேன். நாடோண்ணை இது? மனிசன் வாழுவானே இங்கை…. பார்த்தீங்களே: நான் ஏதோ சொல்ல வந்து எங்கேயோ போய்விட்டேன். முதலிலை என்னுடைய பிரச்சனையை விளங்கி நான் சொல்லப்போறதை உங்களுடைய பத்திரிகையிலே போடப்போறதுக்கு தாஙக்;ஸ் அண்ணை. உங்களுக்குத் தெரியாதே அவனவன் இங்கை பில்டிங்குக்கு பில்டிங் பேப்பர் அடித்து விடுகிறான். ஒரு பேனை பிடித்து தமிழ் எழுதக் கூடியவனெல்லாம் எழுதுறான். ஆனால் உங்களிட்டை நான் வந்திருக்கிறனென்றால் . . . எனக்குத் தெரியும் எது நல்லது எது கெட்டது என்று.

ஊரிலே நான் எப்படி இருந்தனான் அண்ணை? எங்கடை குடும்பம் எப்பிடி இருந்தது? உங்களுக்கு உரும்பிராயிலே சொந்தம் ஏதாவது இருக்கினம் என்றால் விசாரித்துப் பாருங்கோ. பெருமையாக் கதைப்பினம்.

ஆனால் இங்கே வந்து எனக்குப் பைத்தியம் என்றே முடிவெடுத்திட்டாங்கள். இது எங்கே தொடங்கினது என்று எனக்கு இன்னும் ஞாபகம் இருக்குது, அண்ணை. ஒரு 2-3 வருசத்திற்கு முன்னாலே இவங்களெல்லாரும் – இவங்களெண்டு என்னோடை றூமிலே இருந்ததுகள் – என்னைப் பற்றி நக்கலாகக் கதைக்கத் தொடங்கினாங்கள். என்ன நான் 32ஆம் இன்னும் கலியாணம் கட்டிக் கொள்லேலையாம்… அதாம் இதாம் என்று தெரியாதே? பிறகு ஒரு நாள,; இவன் ரஞ்கனும் மோகனும் 2 பேருக்கு 60 டொலர் என்று ஒன்றை றூமுக்குக் கூட்டிக் கொண்டு வந்திட்டாங்கள். ரஞ்சன் என்னையும் கூப்பிட்டான். எனக்கு அன்டைக்கு என்ன நடந்ததோ தெரியாது, சரி என்றிட்டன். 3 பேருக்கு 80 டொலர் தான் அண்ணை!

இவங்கள் என்னை முதற் போ என்றாங்கள். பின்னை நானும் ஒரு றூமுக்கை கூட்டிக் கொண்டு போனேன். அப்பத்தான் அண்ணை அவளை ஒழுங்காகப் பார்த்தன். பெரிய உருப்படி இல்லை. பெயரிற்கு அங்கேயும் இங்கேயும் என்று இருக்க வேண்டியவைகள் எல்லாம் இருந்தது. ஒரே மேக்கப் அண்ணை! முகத்திலை யாரோ மொடர்ண் ஆர்ட் கீறினமாதிரி. இங்கேதான் அண்ணை பிரச்சனை தொடங்கினது. எனக்கு எதுவும் ழு.மு. ஆனால் ஒரு மனுசன் மினக்கெட்டு ஒன்றைச் செய்யேக்கை, செய்வது சரியா பிழையா என்று சொல்லுறேல்லையே? அவள் புருவத்தை வழித்துப் போட்டு கீறி விட்டிருக்கிறாள். அது எப்ப பார்த்தாலும் அவள் ஆச்சரியப்படுகிற மாதிரி இருக்குது. எப்ப சந்தோசப்படுகிறாள் எப்ப சந்தோசப்படலை என்று எனக்குத் தெரிய வேண்டாமே? எனக்கு ஆத்திரம் அண்ணை. அவளிலே, என்னோட இருந்ததுகளோட, இந்த நாட்டிலே… எல்லாரிலேயும்தான்.

எல்லோரிலே இருக்கின்ற ஆத்திரத்தையும் அவளிலே காட்டினேன். அன்றைக்கு இரவு வந்த மாதிரி முன்னே பின்னே வந்ததில்லை எனக்கு. என்ன? கோபமண்ணை! அவளை றூமை விட்டு ஓடும் வரை, வாயிலே ரத்தம் வரும் வரை அடித்தேன். அவங்கள் இரண்டு பேரும் உடனே வந்து ஏதோ துக்கம் லிசாரிக்கிற மாதிரி கேள்வி கேட்டாங்கள். “என்ன தாஸ் அண்ணை இப்பிடிச் செய்து போட்டீங்கள்? உங்களுக்கு என்ன நடந்தது?” நான் ஒன்றும் பறையேலை. எனக்கு ஒன்றும் நடக்கேலை. அதுதான் பிரச்சினை. அப்பவே தொடங்கினவங்கள் இந்த விசரன் பிரச்சாரத்தை. இப்ப இரண்டு மாதத்திற்கு முதல் நடந்த சில சம்பவங்களாலே அது முத்திட்டுது.

இது வரைக்கும் நான் சொன்னதைக் கேட்டுட்டு நீங்க நினைக்கலாம் நான் ஏதோ பிரச்சனையைத் தேடிப் போறவன் என்று. இல்லையண்ணை, நான் அப்பிடிப்பட்டவன் இல்லை. என்னை அப்பிடி வளர்க்கேலை. ஊரிலே விசாரிச்சுப் பாருங்கோ தெரியும். நான் இங்கே வந்து ஃபக்டரியில் வேலை செய்கிறேன் என்று சொன்னாலே சனம் சிரிக்கும். எங்கடை குடும்பம் வேலை செய்து வாழப்பிறக்கேலை அண்ணை. எல்லாம் இந்தப் பிரச்சனை அங்கே தொடங்கினதாலை… எப்பிடி இருந்தனான் அங்கே?

நான் வேலைக்குப் போய் வந்தால், இங்கே றூமுக்குள்ளே என்டை பாட்டுக்கு இருக்கிறனான். ஒரு நாளும் ஒரு பிரச்சனைக்கும் போறேலை. கிழமைக்கு இரண்டு ரஜினி படம் பார்ப்பேன். மற்ற நாளிலே யார் நடித்தாலும் பரவாயில்லை என்று ஏதாவது ஒரு படம் பார்ப்பேன். ரஜினியுடடைய அருமை ஒருத்தருக்கும் விளங்கிறேலை. அவன்ரை நடிப்பு என்ன, ஸ்ரைல் என்ன. எல்லாரும் அவன் கமலை ஏதோ பெரிய நடிகன் என்று புழுகிக் கொண்டருப்பாங்கள். அவன் என்ன பெரிய நடிகன்? தொட்டதற்கெல்லாம் மூலையில இருந்து பெட்டை மாதிரி அழுது கொண்டிருப்பான். உது நடிப்போ சொல்லுங்கோ? பார்த்தீங்களே, பிறகும் எங்கேயோ போயிட்டன்.

பிறகு பாருங்கோ, இப்ப ஒரு இரண்டு மாதத்திற்கு முதல், ஒரு நாளிரவு – ஒரு 12;:30 இருக்கும். நான் சர்ச்-வெலஸ்லி சந்திப் பக்கத்தாலை வந்து கொண்டிருந்தனான். அதிலை ஒரு டோனற்ஸ் கடை ஒன்று இருக்கும், அதற்குப் பக்கத்திலே ஒரு பொம்பிளையும், ஆம்பிளையும் சண்டை போடுகிற மாதிரி இருந்தது. கிட்டப்போனால் ஆம்பிளை ஆயனந in ளுசi டுயமெய மாதிரி இருந்தது. ஆனால் ஆள் படு ஸ்ரைல். அண்ணை, நான் குளிரிலே நடுங்கிக் கொண்டிருக்கிறேன், அவன் கோமணம் கட்டின மாதிரி சோட்ஸ் போட்டிருக்கிறான். மேலே ஏதோ கறையான் அரிச்ச ரீசேட் ஒன்று. மார்பிலே ஒரு தோடு.

ஆள் என்னைக் கண்டதும் ஒரு மூலைக்கு இழுத்துக் கொண்டு போய,; “அன்பரே நீர் தமிழ் பேசுவீரோ?” என்கிறான். இவன் பேசுகிறது தான் தமிழ் என்றால் எனக்குச் சத்தியமாய் தமிழ் தெரியாது. நான் தலையாட்டினேன். “நான் உம்கூட வருகிறேன், நீரும் நானும் பரஸ்பரம் தெரிந்தவர்கள். இதை அங்கே சொல்லும்.”

அங்கே அவள் கiளா-நெவ ளவழஉமiபெ இல் ஒயிலாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு ஒன்றுமே விளங்கேலை.

“அண்ணை எனக்கு உங்களைத் தெரியாது. நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்?”.

“மானிடரே… அன்பரே நான் சொல்வதைக் கேளும்; உமக்கு மிக நல்லது.”

நான் கேட்டேன். கiளா-நெவ இடம் போய் அவள்… அது… அவன் – அவன் அண்ணை! சேவ் பண்ணிய பச்சை முகத்திலே, நிற்கிற முறையே சரியில்லை, அண்ணை. காலை அகட்டிக் கொண்டு – ஒரு பொம்பிளை அப்பிடி நிற்க மாட்டாள். அவளிடம் அவன் சொன்னதைச் சொல்லி விட்டுத் திரும்ப, யாரோ காரைப்பக்கத்தில் நிறுத்தி, “லுழர றயnயெ பழ கiளாiபெ டியடிந?” என்கிறான். குiளா-நெவஇ “றூல ழெவ?” என்றபடி காரில் ஏறினாள்.

“ரொம்ப நன்றி நண்பரே.”

“பரவாயில்லை, அப்ப வருகிறேன் அண்ணை.”

“ஏன் வாங்களேன் ஆகாரம் ஏதாவது உண்டு மகிழலாம்?” என்றான்; டோனற்றைக் காட்டி. ஏனோ தெரியவில்லை, அண்ணை, அவன் சொல்வதெற்கெல்லாம் தலையாட்ட வேண்டும் போல இருந்தது – ஆட்டினேன்.

உள்ளே nளிச்சத்தில்தான் ஆளை நல்லாப்பார்த்தேன். ஒரு 5 அடி 6 அங்குலம் இருப்பான். தலை மயிரை சத்யா கமல் மாதிரி வெட்டி இருந்தான்.

“அண்ணைக்கு சிலோனோ?”

அண்ணை, “இல்லை அன்பரே, யாம் எவ்விடத்திலும் இருப்போம். என்னை உமக்கு நன்கு தெரியும். சிந்தியும் நண்பரே,” என்றார். நான் சிந்தித்தேன்;. குழம்பினேன்.

சிந்திக்கையில், அவரின் கண்களைப் பார்த்தேன். யாரோ சுத்தியலால் உச்சியில் அடித்த மாதிரி இருந்தது. அண்ணை! அவர் சிவபெருமான்!; மோகனமாக எனக்குப்; பக்கத்தில் புன்னகைக்கும் சிவபெருமான்! நான் என்றதால் பேசாமல் இருந்தேன். எங்கடை அப்புவோ, ஆச்சியோ இருந்திருந்தால் பிராணனை விட்டிருக்குங்கள்.

அவர், அண்ணை, இங்கே நாரதரோடு ஒரு நாளைக்கு முதல் வந்தவராம். இவருடைய வைஃப் – யாரோ புதுசு – அரளவயபெ காரொன்றை வு.ஏ. யில் பார்த்துப் போட்டு, அது வேணும் என்று கேட்டதாலே, ஒன்று வாங்க இங்கே வந்திருக்கிறார். அங்கே, இங்கே இருக்கிற வு.ஏ. ளவயவழைn எல்லாம் இழுக்குமாம், அண்ணை. அப்பிடி வந்ததிலே, நாரதர் ராத்திரி பார்க்டேல் பக்கம் யாரோடோ தங்கியிருக்கப் போட்டாராம். அதான் இவர் கiளா-நெவ ஓடு நேற்றுத் தங்கியிருந்தவராம். ஆள் புதுசு என்று ஏமாத்திப் போட்டாள் கiளா-நெவ.

நாங்கள் இரண்டு பேரும் ஒரு அரை மணித்தியாலமாகக் கதைத்தோம். நான் கேட்டேன் அவரிட்டை, ஏன் ©மிக்கு வந்து கார் வாங்க வேண்டும் என்று. அதற்கு அவர் சொன்னார்: “அன்பரே, மானிடரின் கைவண்ணமே தனி. நான் மானிடரிடம் இருந்து எவ்வளவு கற்றுக் கொண்டேன் தெரியுமா? என்ன சுகம் இங்கே! எவ்வளவு வித்தியாசங்கள்! நாங்கள் எல்லோரும் தேவலோகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஒரே விதத்தில், ஒன்றையே செய்து கொண்டிருக்கிறோம். இங்கு பலவிதமாக, புதுமையாக செய்கிறார்கள். நானும் நாரதரும் கூட – நாரதர் என்றவுடன் தான் ஞாபகம் வருகிறது. அன்பரே ளலசiபெந இருக்கிறதா?”

“ளலசiபெந என்றால்…”

“ஊசி அன்பரே… ஊசி, கையில் குத்தும் ஊசி”

என்னத்துக்கு ஊசி என்று எனக்கு விளங்கேல்லை. “என்னிடம் இல்லை ஐயா!”

“எனக்கு மிக அவசரம்! ஊசி இப்பொழுது தேவை!” அவர் கொஞ்சம் கோபப் பட்டது போலிருந்தது.

“நான் நாரதரை உடனடியாகச் சந்திக்க வேண்டும். வருகிறேன் அன்பரே.”

“ஐயா, நீங்கள் போகமுதல் ஒரு விண்ணப்பம்… ஒரு வரம் கேட்க வேண்டும்”.

“கேளும், எனக்கு மிக அவசரமாக ஊசி தேவை!”

“என்னை இங்கு எல்லோரும் பைத்தியம் எண்டெல்லாம் கதைக்கிறாங்கள். ஒரே பிரச்சினை, நீங்கள் தயவு பண்ணி இந்தப் பிரச்சினையை எப்படித் தவிர்ப்பது என்று அறிவுரை பண்ண வேண்டும்.”

“அன்பரே, நிறையப் பொய் சொல்லும்; ஒருத்தரையும் நம்பாதேயும்; உமக்காக வாழும். பிரச்சனை முடிந்தது. வரவா?”

“மற்றது, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழச்சி. நாரதரை கேட்டதாகச் சொல்லுங்கோ. முருகன், பிள்ளையார் எல்லோரையும் கேட்டதாகச் சொல்லுங்கோ.”

“சரி. வருகிறேன் அன்பரே”.

அவர் போயிட்டார். எனக்கு எல்லாமே ஒரு கனவு மாதிரி இருந்நது. ளுனைந றயடம இலே யாரோ ஒருத்தன் தண்ணியிலே, நிலாவைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.

நான் அண்ணை, சிவபெருமானுடைய யனஎளைந ஐக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், நான் என்ன செய்தேன், வீட்டை போனவுடனே சிவபெருமானைக் கண்டேன் என்று சொல்லி விட்டேன். அவங்கள் எல்லோருக்கும் வெறி. வெறி என்றாலே சும்மா வெட்டிக்கதை கதைப்பாங்கள். ஒருத்தன் முயலுக்கு 2 கால் எண்டுவான். இன்னொருத்தன் இவர் என்ன செய்கிறார் பார்ப்பம் என்ற மாதிரி, இல்லை மூன்று கால் எண்டுவான். அவங்களுக்கு இது ஒரு பொழுது போக்கண்ணை. எவ்வளவு நேரந்தான் பார்த்த படத்தையே திரும்பத்திரும்ப பார்ப்பது.

நான் இந்தக் கதையைச் சொன்னவுடனே மாஸ்டர் என்று ஒருத்தர் இருந்தவர். அவர் சொன்னார், “டேய், யாரடா கடவுள்? யாரடா சிவபெருமான்? எனக்கு முன்னாலே வரச்சொல்லு பார்ப்பம். வரமாட்டான்டா அவன்! பயம்! ஆ! பயம்! கடவுளாம் மண்ணாங்கட்டி, எல்லாம் சுத்து மாத்துடா. ஏன்டா, டேய், சிவலிங்கம் என்றால் விழுந்து கும்பிடுறாளவை, ஆனால் என்னைக் கும்பிடுகிறாளவையோ? இல்லை! என்னட்டடை லிங்கம் இல்லையோ? சிவலிங்கம் தேவை அவைக்கு.”

“மாஸ்ரர், தாஸ் ஏதோ சிவபெருமானைக்கண்டது என்றறெல்லோ சொல்லுது,“ என்றான் மோகன்.

“அடிசக்கை! இவனுக்கு என்ன உண்மையாகவே கழண்டுட்டுது போலத்தான் இருக்குது.”

“மாஸ்டர்! கதைக்கிறதைப் பார்த்துக்கதையுங்கோ…”

“என்னடா தாஸ் வெருட்டுறாய்? உன்டை சிவபெருமானைக் கூட்டிக் கொண்டு வாவன், பார்ப்பம்… வெட்டிடுவன் தெரியுமே?” மாஸ்டர் வெகுண்டார்.

எனக்குள்ளே இருந்த கோபம் எல்லாம் வெளிப்பட்டு, என்ன நடந்தது என்று தெரியமுதலே, என்கைக்குக் கத்தி வந்து, மாஸ்டரைப் பதம் பார்த்து, ஓடிய மோகனின் காலைக் கீறி… எல்லாம் பழைய கதை. சும்மா சின்னக் காயங்கள் தான். ஆனால், இவங்கள் பொலிஸ், கோர்ட்ஸ் என்று போய் பெரிசாக்கிட்டாங்கள்.

அண்ணை, கோட்டிலை அவங்கள் இதுதான் எனக்கு முதல் குற்றம் எண்டதாலை கiநெ ஓடை என்னை விட இருந்தவங்கள். ஆனால் இவங்கள் நான் கழண்ட கேஸ், பொதுமக்களுக்கு ஆபத்து என்றெல்லாம் கதை விட்டாங்கள். நடுராத்திரியிலே கடவுளைக் கண்டதெண்டு சொல்கிறேனாம், கோபப் படுகிறேனாம், கத்தியை எடுக்கிறேனாம். கதைக்கத் தெரிந்தவங்களெல்லாம் நல்லவங்கள், அண்ணை; எனக்குத் கதைக்கத் தெரியேலை.

பிறகு, கோட்டிலே, சொல்லிப் போட்டான், நான் கட்டாயமாக ஒரு pளலஉhழ-யயெடலளவ சந்தித்து, அவர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைப் பொறுத்துத் தான் மேலதிகமாக ஏதாவது செய்யலாம் என்று. பின்னே நானும் ஒரு pளலஉhழ-யயெடலளவ இடம் 4, 5 கிழமையாகப் போனேன்.

அவன் யாரண்ணை நான் விசரோ இல்லையோ என்று சொல்வதற்கு? நான் னளைவரசடிநன ஆம், கூடுதலாக வெறுப்புணர்ச்சி கொண்டிருக்கிறேனாம்… உதெல்லாம் ஒரு தொழிலோ, அண்ணை? இதுக்கு ஒரு படிப்பு வேறை! பேசாமல் பிச்சையெடுக்கலாம், அண்ணை!

இவங்கள் யாரண்ணை என்னைப் பற்றிச் சொல்வதற்கு? இந்தச் சிவபெருமானைக் கண்டேன் என்றதிலேதானே இந்தப் பிரச்சனை தொடங்கியது? இதற்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறேன் பாருங்கோ. உங்களுடைய பத்திரிகை வாசிக்கிறவர்கள் யாராவது, நான் இது வரைக்கும் சொன்னமாதிரி சிவபெருமானையோ, நாரதரையோ கண்டிருந்தால் உங்களுக்கு எழுதச் சொல்லுங்கோ. ஒரு ஆளாவது கண்டிருக்கவேண்டும,; அண்ணை. பிறகு காட்டுகிறேன் யாருக்கு விசர் என்று.

இவ்வளவு நேரம் உங்களுடன் இருந்து கதைத்ததற்கு ஏதாவது என்னைப் பற்றி வித்தியாசமாகத் தெரியுதோ அண்ணை? எல்லாரையும் போலத்தான் நானும் இருக்கிறேன். எப்படி இருந்தனான் அண்ணை ஊரிலை… இப்படி ஆக்கிட்டாங்கள்! யாருக்கண்ணை பைத்தியம்?

எவனுக்குப் பைத்தியம் இல்லை?

(தேடல், 1992)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *