பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தின் தேர்வு பேப்பர் திருத்தப்பட்டு வாங்கியதிலிருந்து மதிவதனி ஒரு மாதிரியாகவே இருந்தாள்.
காரணம், அதில் முப்பது மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள்.
மாலை ஐந்து மணிக்கு பள்ளிக்கூடம் விட்டு எல்லோரும் புறப்பட்டுப்போன பின்பும் மதிவதனி வீட்டுக்குப் போகாமல் அழுதபடியே நின்றாள்.
‘ஏம்மா அழறே’ தலைமை ஆசிரியை நிர்மலா அவள் கரம் பற்றியபடியே கேட்டாள்,
‘’கணக்குப் பாடத்திலே தோத்துட்டேன். வீட்டுக்குப் போனா அம்மா அடிப்பாங்க’’ மறுபடியும் அழுகை வந்து அவள் குரலை அடைத்தது.
‘உன் வீட்டு போன் நம்பர் குடு, நான் பேசறேன்’
அம்மா இங்கதான் டீச்சரா வேலை பார்க்கிறாங்க. பேரு ஜமுனா! அவள் சொல்லும்போது ஜமுனா டீச்சர் அங்கு வது சேர்ந்தாள்.
‘’குழந்தைங்க தேர்வுல தோத்துட்டா, அடுத்த தேர்வில் ஜெயிச்சுடலாமுன்னு ஆறுதல் சொல்லணும். இது ஒவ்வொரு பெற்றோரும் புரிஞ்சிக்கணும். நீங்க இந்த பள்ளிக்கூடத்துக்கு வந்தா மட்டும் டீச்சரா இருங்க. வீடுக்குப் போனா நல்ல பெற்றோரா இருங்க!’’
நிர்மலா டீச்சர் சொன்னது, நுறுக்கென்று வெட்டியது போல் வலிக்க, ஜமுனா டீச்சரின் தலை குனிந்திருந்தது.
தனது தவறை உணர்ந்து மதிவதனியின் கரம் பற்றி பரிவோடு அழைத்துப் போனாள் ஜமுனா.
– டிசம்பர் 2012