தங்க கிணறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 15, 2021
பார்வையிட்டோர்: 3,486 
 

விவசாயின் பெயர் ராமசாமி, அவர் மனைவி சாரதா, அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் சரவணன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வேளாண்மை துறை பற்றி படிக்க அவன் அப்பாவுக்கும், சரவணனுக்கும் ஆசை. கல்லூரியில் சேர்வதற்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். மகள் லட்சுமி பத்தாம் வகுப்பு சேர்ந்துள்ளார். ராமசாமி இருவருக்கும் என்ன கஷ்டம் வந்தாலும் பொய் சொல்லக்கூடாது திருடக்கூடாது என்றும் நல்லதையே சொல்லி வளர்த்து வருகிறார்.

விவசாயத்திற்கு ஆறு மாத காலமாக மழை இல்லாமல் மிகவும் காசு பணத்திற்கு கஷ்டப்படுகிறார். அவர்கள் தோட்டத்தில் கிணறு ஒன்று இருக்கிறது. ஆனால் தண்ணி இல்லை, ஆட்களை விட்டு தூர் வாரலாம் என்றால் பணம் இல்லை, மகன் மனைவி மகள் மூவரையும் அழைத்து கிணற்றை ஆழப்படுத்தி கொண்டு இருந்தார் தண்ணீர் கிடைக்கும் என்று. அப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் தங்க காசுகள் கிடைத்தது, ராமசாமி ஆ! இதெல்லாம் நிஜமாக தங்கமாகவே இருக்குமா. ராமசாமி தலையில் கட்டியிருந்த துண்டை கழற்றி காசுகளை வைத்து முடிந்து தலையில் கட்டிக் கொண்டு கிணற்றை ஆழப்படுத்தி கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் ஒரு சிறிய பானை தென்பட்டது அதை எடுத்துப் பார்த்தார் துண்டில் முடிந்து வைத்த காசுகளை போலவே அந்த பானையிலும் தங்கக் காசுகள் இருந்தது, இன்னொரு பக்கம் பார்த்தால் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, ராமசாமிக்கு மிக சந்தோசம் சாரதா தண்ணீர் ஊற்று கிடைத்துள்ளது, தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது, வேறொன்றும் கிடைத்தது.

கயிற்றை மேலே இழு வருகிறேன் என்றார். ராமசாமி மேலே வந்தார் இங்க பாரு இந்தப் பானையில் எல்லாம் தங்கக்காசு, என்ன ஒரு அதிசயமா இருக்குது, நடங்கள் வீட்டுக்கு பொய் பேசலாம் ராமசாமி மனைவி மகள் மகன் உடன் வீட்டுக்கு சென்றான், வீட்டுக்குள் நுழைந்தவுடன் தலையில் கட்டியிருந்த துண்டை கழற்றி வீசிவிட்டு ராமசாமி கீழே அமர்ந்து அந்தப் பானையில் இருந்த காசுகளை எல்லோரும் பார்த்துக் கொண்டு இருந்தார்.

சரவணன் அப்பா இது அரசாங்கத்துக்கு சேர வேண்டியது. அதை நாம் கலெக்டர் அலுவலகத்துக்கு போய் கொடுத்து விடுவோம் என்று சொன்னான், ராமசாமி அதுதான் சரவணா சரி வாங்க எல்லாருமே போவோம் என்று சொல்லிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் பார்த்து ராமசாமி, ஐயா! வணக்கங்க! எங்க தோட்டத்து கிணற்றை ஆழப்படுத்தி கொண்டிருந்தோம் அப்போது இது கிடைத்தது இந்தாங்கயா. கலெக்டர் வாங்கி பார்த்தார் எல்லாமே தங்கக் காசுகள், இது எந்த காலத்து காசாக இருக்கும், இன்னொன்று செப்புபட்டயம் போல் தெரிகிறது இதில் என்ன.எழுதி இருக்கிறது என்று புரியவில்லை. கலெக்டர் ராமசாமியிடம் ஐயா உங்கள்.பெயர் விலாசம் எல்லாம் கொடுத்துவிட்டு போங்கள், இந்த நாணயத்தை தொல்லியல் துறையினரை வரவழைத்து இந்த செம்பு பட்டயத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் பிறகு உங்களை வந்து பார்க்கிறேன் என்றார்.

ராமசாமி மனைவி பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வெளியே வந்தார். ராமசாமியின் பக்கத்து தோட்டக்காரன் பெருமாள் பிச்சை, என்ன ராமசாமி? கலெக்டரிடம் புதையலை கொடுத்தது போல தெரியுது. நான் அங்க தான் நின்று கொண்டு இருந்தேன், கிடைத்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத ஆளாக இருக்கிறாயே! ராமசாமி போ போ. சாரதா இவன் எதுக்கு இப்படி சொல்கிறான். சாரதா கிடைச்ச புதையலை நீயே வைத்திருக்கலாம் அப்படின்னு சொல்லாமல் சொல்றான், சரவணன் அப்பா நாம செஞ்சது தான் சரி யார் என்னமோ சொல்லட்டும். ராமசாமி எல்லோரும் வீடு வந்து அடைந்தார், சாரதா சாப்பிடறதுக்கு ஏதோ ஒன்று செய் நான் கிணற்றை பார்த்துவிட்டு வருகிறேன்.

ராமசாமி கிணற்றை போய் பார்த்தான் வந்து கொண்டிருந்த தண்ணீர் ஒரு துளி கூட இல்லை வரண்டு கிடக்கிறது, ராமசாமி வேதனைப்பட்டு வீடு திரும்பினார். சாரதா தண்ணீர் வந்து கொண்டு இருந்தது இப்பொழுது பார்த்தால் வரண்டு கிடக்கிறது இதற்குமேல் தோன்றவும் முடியாது பாறைகளாக இருக்கிறது, இனி மழை வந்தால்தான் தண்ணீர். மறுநாள் கலெக்டர் அலுவலகத்துக்கு தொல்லியல் துறையிலிருந்து வந்தார்கள், செம்பு பட்டயத்தை பார்த்தார்கள், கலெக்டரிடம் தொல்லியல் துறையினர் கூறினார், இந்த செம்பு பட்டயத்தில் உள்ளது சுருக்கமாக தான் எழுதி இருப்பார்கள், அதை நாம் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இதுதான். சோழவந்தான் மனைவி கருணை அம்மாள், சோழவந்தான் மனைவி கருணை அம்மாளுக்கும் ஒரு மகன் பாண்டியன், .அவருக்கு திருமணமாகி குழந்தைகள் எதுவும் இல்லை, மனைவி லோகேஸ்வரி. இவர்கள் விவசாய தொழில் செய்து வந்தார், அவருக்கு சொந்தமான. இந்த தோட்டத்தில் கிணறு ஒன்று வெட்டலாம் என்று வெகு நாட்களாக ஆசை, ஆட்களை வரவைத்து கிணறு தோண்டினார். வெகு ஆழம் தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை, பாறை வந்துவிட்டது, கிணறு தோண்டும் ஆட்கள் மேலே வந்து ஐயா இதற்குமேல் தோண்ட முடியாது பாறைகளாக இருக்கிறது மழை வந்தால் தண்ணீர் வந்து விடும், இதை வெகுநாட்களாக தோன்றினார்.

பாண்டியன் அவர்களுக்கு தங்க நாணயம் கொடுத்து வழி அனுப்பினார். பாண்டியன் கிணற்றை பார்த்துக்கொண்டே இருந்தான் கிணற்றை பார்த்து உன்னை தோண்டுவதற்காக எத்தனை தங்க நாணயம் கொடுத்திருக்கிறேன், இனி தோண்ட முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் எனக்குத் தண்ணீர் இல்லை இருந்த நாணயத்தை எல்லாம் கொடுத்து விட்டேன் என் கையில் இருப்பது 10 தங்க நாணயம் இதை நீயே வைத்துக்கொள் எனக்கு தண்ணீர் கொடு, என்று சொல்லி காசுகளை கிணற்றிற்குள் போட்டுக் கொண்டு வீட்டுக்கு போய்விட்டான். சோழவந்தான் பாண்டியா கிணறு தோண்டும் வேலை முடிந்ததா தண்ணீர் கிடைத்ததா என்று கேட்டார், அப்பா ஆட்கள் இதற்குமேல் கிணறு தோண்ட முடியாது, பாறைகளாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள், ஆனால் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை கருணை அம்மாளும் லோகேஸ்வரி மழை வந்தால் தண்ணீர் வந்துருங்க இதுக்கு கவலைப்படாதீங்க.நீங்க சாப்பிட்டு தூங்குங்க, மறுநாள் பாண்டியன் கிணற்றுக்கு வந்து பார்த்தான் தண்ணீர் கண்ணாடி போல் கையில் எட்டும் அளவுக்கு இருந்தது.

வீட்டுக்கு ஓடினான் அம்மா அப்பா லோகேஸ்வரி எல்லோரும் வாருங்கள் வந்து பாருங்கள் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு கிணற்றுக்கு வந்தார்கள், பாண்டியனுக்கு மிக சந்தோசம் கிணற்றில் குதித்து நீராடினான், மறுநாள் விவசாயத்துக்கு உண்டான எல்லாவற்றையும் செய்து தண்ணீர் விடுவதற்கு வாய்க்கால் வெட்டி தண்ணீர் விட்டான், விவசாயம் மிக மிகச் செழிப்பாக வந்தது, காசுகள் குவிந்தது, ஒருநாள் கிணற்றுக்கு வந்து 10 தங்க நாணயம் கொடுத்துள்ளேன் நான் இப்பொழுது நன்றாக இருக்கிறேன், இந்த பானையில் 90 நாணயங்கள் உள்ளது, நூறு நாணயமாக வைத்துக்.கொள் என்று சொல்லி. இந்த கிணறு எப்படி உருவானது யாரால் உருவானது என்று செம்பு பட்டயத்தில் எழுதி வைத்து கிணற்றுக்குள் அந்தப் பானையை போட்டுவிட்டார். இனிமேல் உனக்கு பெயர் தங்க கிணறு என்று சொல்லி பாண்டியன் விடை பெற்றான். இதுதான் செம்பு பட்டயத்தில் எழுதி உள்ளதற்கு இதுதான் அர்த்தம்.

பிறகு இந்தத் தோட்டம் பலரிடம் கைமாறி சிலர் கிணற்றை தோண்டுவதற்கு முயற்சி செய்தார்கள் ஆனால் அவர்களுக்கெல்லாம் பெரிய பெரிய பாம்புகள் தென்பட்டது எல்லோரும் பயந்து கிணற்று பக்கமே போகாமல் விட்டுவிட்டார்கள் இப்பொழுது ராமசாமியிடம் இருக்கிறது. கிணறு மண்சரிவால் பாதி கிணறு மூடிவிட்டது இந்த கிணத்தை ஆழப்படுத்த ராமசாமி மட்டும் எதுவும் தென்படவில்லை, கலெக்டர் அப்போ இன்னும் பத்து நாணயம் கிணற்றில் இருக்குமா தொல்லியல் துறையினர் 10 நாணயம் இருந்தால்தான் தண்ணீர் இருக்கும் இல்லாவிட்டால் இருக்காது அந்த பத்து நாணயத்தை எடுக்க நீங்கள் முயற்சிக்காதீர்கள் தண்ணீர்தான் வேண்டும் வருகிறோம்.. ராமசாமி சரவணனை அரசாங்க கல்லூரியில் சேர்க்கப் போனார் இடம் இல்லை, தனியார் கல்லூரியில் தான் படிக்க வேண்டும் பணம் கட்ட வேண்டும் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறான் ராமசாமி, அன்று மழை வந்தது சரவணன் ராமசாமியும் உழவு ஓட்டி நெல் விதைகள் தூவி விட்டார், மழை வந்தும் கிணற்றில் தண்ணீர் இல்லை, ஒருநாள் சாரதா துணிகளைத் துவைப்பதற்காக எல்லா துணிகளையும் எடுத்துக்.கொண்டு துவைத்துக் கொண்டு இருந்தார் அப்பொழுது ஒரு துண்டில் முடிந்து இருந்தது, முடிந்ததை கழற்றி பார்த்தாள் 10 தங்க நாணயம் இருந்தது, என்னங்க இங்க வாங்க, இங்க பாருங்கோ கலெக்டரிடம் கொடுத்த அதே தங்க காசு, ராமசாமி ஆமா இதுதான் முதலில் எனக்கு கிடைச்சது, நான் தான் தூண்டில் முடிந்து தலையில கட்டி இருந்தேன் அது முடிந்த ஞாபகமே எனக்கு இல்லை, என்ன சாரதா பண்றது மீண்டும் கலெக்டர் இடமே கொடுத்து விடலாமா?

சாரதா கொடுக்கும் பொழுது இன்னும் எத்தனை நாணயத்தை மறைத்து வைத்திருக்கிறாய் என்று கேட்டால், என்ன சொல்வது ஆமாம் அதுவும் சரிதான் வேற யோசனை செய்வோம் ராமசாமி, சாரதா ஒரு யோசனை எனது நண்பன் நடராஜ் நகை வேலை செய்கிறான் அவனிடம் சொல்லி நகைகளாக மாற்றி கொடுக்கச் சொல்லலாம், பிறகு அந்த நகைகளை பேங்கில் அடகு வைத்து சரவணனை கல்லூரியில் சேர்த்து விடலாம், சாரதா அவர் யாரிடமாவது சொல்லி விட்டாள்? ராமசாமி அவனுக்கு இரண்டு தங்க நாணயம் தருகிறேன் என்று சொல்லிவிடலாம், மறுநாள் நகை வேலை செய்யும் நடராஜ்.பார்த்தான், வா ராமசாமி என்ன விஷயம்? இல்லை, ஒருவரை பார்க்க வந்தேன் உன்னையும் பார்த்து விட்டு போகலாம் என்று வந்தேன், நடராஜ் ராமசாமி நீ என் நண்பன் என்று சொல்வதற்கு பெருமையாக உள்ளது கிணற்றில் இருந்த தங்க நாணயத்தை அரசாங்கம் இடத்தில் ஒப்படை தாயாம், ஆமாம் நடராஜ் நான் வருகிறேன், இன்னொரு நாள் வந்து பொறுமையாக பேசலாம் வருகிறேன், ராமசாமி வீட்டுக்கு வந்தான் சாரதா என்னங்க நகை வேலை செய்யும் உங்களது நண்பர் நகையாக மாற்றி கொடுக்கிறேன் என்று சொன்னாரா? இல்லை, அவன் என்னையே நண்பனாக அடைந்ததற்கு பெருமையாக உள்ளது என்று சொன்னான், அதனால் அவனிடம் நான் எதுவும் சொல்லவில்லை வந்துவிட்டேன், ஆனால் அவன் தங்கங்களை எப்படி உருக்குகிறான் என்று பார்த்தேன் நான் போகும் பொழுது அவன் அதைத்தான் செய்து கொண்டு இருந்தான் நாம் நாளை இதை செய்து பார்ப்போம், கலெக்டர் அலுவலகத்திற்கு கலெக்டருக்கு தகவல் வந்தது, முதல்வர் அந்த தங்க நாணயத்தை கொடுத்தவருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யுங்கள் வரும் சுதந்திர தினத்தன்று பாராட்டி பதக்கம் வழங்கும் பட்டியலில் இவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள், கலெக்டர் அவருடன் பணிபுரியும் ஆட்களை விட்டு ராமசாமி வீட்டுக்கு சென்று இதை சொல்லிவிட்டு வாருங்கள் என்று சொன்னார், கலெக்டர்

ராமசாமி தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து சாரதா சரவணன் எங்கே? அவன் யாரையோ பார்க்கணும்னு போய் இருக்கிறான், லட்சுமி ஸ்கூலுக்கு போயிட்டான், சரி அந்த இரும்பு வடசட்டி எடுத்து அடுப்பில் வை சரிங்க, சாரதா அடுப்பில் விரகு வைத்து நெருப்பை போட்டு அந்த இரும்பு சட்டியை வைத்தாள் ராமசாமி அந்தப் பத்து நாணயத்தையும் எடுத்துட்டு வா இதையெல்லாம் ஒரே கட்டியாக செய்துவிடலாம் என்று சொல்லி அந்த இரும்பு வட சட்டியில் நாணயத்தை போட்டு இருக்க ஆரம்பித்தான், ஆனால் அது உருகவில்லை, ஒருவர் வந்து அண்ணா இது ராமசாமி வீடு ஆ! என்று கேட்டார், ஆமாம் நீங்கள் யார் என்று கேட்டார்? நாங்க கலெக்டர் ஆபீசில் இருந்து வருகிறோம், உங்களுக்கு சுதந்திர தினத்தன்று பாராட்டி பதக்கம் வழங்கும் பட்டியலில் நீங்களும் இருக்கிறீர்கள், உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்து தரச் சொல்லி முதல்வர் சொல்லியிருக்கிறார், நாளை கிணற்றை பார்க்க தொல்லியல் துறையினரும் கலெக்டரும் வருகிறார்கள், அதைச் சொல்ல என்னை அனுப்பி உள்ளார்கள் நான் வருகிறேன்.

சாரதா என்ன இது முதல்வர் வரைக்கும் போய் இருக்குது, என்ன உதவி வேணாலும் செய்து தருகிறார்களாம், சரவணன் மேல் படிப்பு படிப்பதற்கு சொன்னாலும் செய்து தருவார்கள், அவர்கள் வருவதற்கு முன் இந்த நாணயம் நம்மிடம் இருக்க வேண்டாம் எங்கு இருந்ததோ அங்கேயே போட்டுவிடலாம், நாளை அவர்கள் வருகிறார்கள், என்று சொல்லி ராமசாமியும் சாரதாவும் அந்த நாணயத்தை கிணற்றில் போட்டு விட்டார்கள், மறுநாள் கலெக்டரும் தொல்லியல் துறையினரும் வந்தார்கள், ராமசாமியிடம் சாரதாவும் பேசினார்கள், சாரதா என் மகனை வேளாண்துறைக்கு அரசாங்கம் படிக்க வைக்குமா? என்று கேட்டார், கண்டிப்பாக செய்து தரப்படும் என்று சொன்னார் கலெக்டர். சாரதாவுக்கு மிக சந்தோசம் கலெக்டரும் தொல்லியல் துறையினரும் கிணற்றை பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள், ராமசாமி கிணற்றை பார்க்க அழைத்து கொண்டு போனான் கிணற்றை பார்த்தாள் தண்ணீர் கையில் எட்டும் அளவிற்கு நின்று கொண்டு இருந்தது, ராமசாமி ஆச்சரியமாக பார்த்தான் சாரதா என்ன நேற்று பார்த்தேன் வறண்டு கிடந்தது அந்தக் காசுகளை போட்டது பிறகு இப்படி தண்ணீர் நிற்கிறதே என்று சாரதாவிடம் சொல்லிக்கொண்டு கலெக்டரிடம் நின்றுகொண்டு இருந்தான், கலெக்டரும் தொல்லியல் துறையினரும் பார்த்துக்கொண்டு கலெக்டரிடம் தொல்லியல் துறையினர் 10 நாணயம் கிணற்றுக்குள் தான் இருக்கிறது என்று சொன்னார் ராமசாமியிடம் நாங்கள் வருகிறோம், என்று சொல்லி விட்டு போய்விட்டார்கள், ராமசாமி சாரதா தண்ணீரே இல்லாமல் இருந்தது இப்பொழுது எங்கு இங்கிருந்து தண்ணீர் வந்தது அதிசயமாக இருக்கிறது யோசனை செய்து பார்த்தால் இந்த கிணற்றில் தங்க நாணயம் இருந்தால் தான் தண்ணீர் இருக்கும் போல் தெரிகிறது, பிறகு ராமசாமியை பாராட்டி பதக்கங்களும் அவருக்குத் தேவையான உதவிகளும் செய்து கொடுத்தது அரசாங்கம் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *