டொக்டர்..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 3, 2022
பார்வையிட்டோர்: 4,262 
 
 

அந்த வாட் பெண் நோயாளர்களால் நிரம்பி வழிந்து கிடந்தது.ஒவ்வொரு கட்டிலிலும் ஒரு நோயாளி.. ஆச்சி, அம்மா, அக்கா தங்கச்சி வரைக்கும்..

சில கட்டில்களுக்கு அருகே அவங்கல பாத்துக்க வந்தவங்க சில பேர் உக்காந்திருக்காங்க..

இன்னும் சிலர் ஏதாச்சம் எடுக்க வைக்க நடந்துகிட்டு இருக்காங்க..

இந்த பக்கம் நர்ஸ்.. நாளைக்கி பரீட்சை எழுத இன்னைக்கி நோட் எடுத்து படிச்சே ஆகனும்னு நோட் எழுதுறது போல எழுதுறாங்க எழுதுறாங்க எழுதிகிட்டே இருக்காங்க..

இதெல்லாத்தையும் பாத்துகிட்டு ரொம்ப கடுப்புல நிக்கிறாரு நம்ம அண்ணன்.. அந்த வாட் வாசல்கிட்ட..

முதல் நாள் ஏதோ தாங்கவே முடியாத வயித்து வலினு மனைவிய கூட்டி வந்து அட்மிட் பண்ணிட்டு ,இரவு சாப்பாட்லாம் குடுத்துட்டு காலைலயும் ஒருக்கா வந்து பாத்துட்டு தான் போனாரு..அப்பறம் பெரிய டொக்டர் பாத்துட்டு சின்ன ஸ்கேன் எடுக்கனும்னு..சொன்னாருனு மனைவி கோல் பண்ணி கொஞ்சத்துல சொல்ல…

சரினு வீட்டுக்கு வந்தா கொஞ்ச நேரத்துலயே மனைவி கோல் பண்ணிட்டாங்க.. சாதாரண வலி தானாம்னும் டிக்கட் வெட்டிட்டாங்கனும்.சொல்ல

இவரும் வீல் ஒன்னு எடுத்துகிட்டு அடிச்சி பிடிச்சி வந்துட்டாரு..

ஆனா அனுப்பாம ரிப்போட்ஸ் எடுத்து முடிய அந்தி ஆகும்னு நிப்பாட்டி வச்சிருக்காங்க..இவரையும் வாட்க்கு வெளிய நிக்க வச்சிட்டாங்க.. அந்த கடுப்புல தான் தொப்பிய கழட்டவும் போடவும் போன எடுக்கவும் பாக்கவும்னு பகல் தாண்டியும் நின்னுகிட்டு இருக்காரு..அண்ணன்..

அது போக

பகல் யாரையோ பாக்கவந்த ஒரு ஐயாவும் சொல்லிட்டு போய்டாரு அது ரிப்போட்லாம் எடுத்து முடிச்சி வர அந்தி ஆகும் நீங்க ஒரேதா அந்திக்கே வந்திருக்கலாமேனு கடுப்பேத்திட்டு போய் இருக்காரு..

இப்டி எல்லா கடுப்பையும் உள்ளுக்குள்ள ஏத்திகிட்டு எப்ப விடுவாங்க மனைவிய கூட்டிட்டு போறதுனு அந்த வாட் வாசல்லயே ரொம்ப நேரமா நின்னு நடந்து பாத்துகிட்டு நிக்கிறாரு..அண்ணன் எத பாத்தாலும் அவருக்கு எரிச்சல் தலைக்கு ஏறுது.. யார பாத்தாலும் கோவம் வருது.. அதுலயும் அந்த நாற்காலிகள்ல உக்காந்து போன்ல லேசா பாட்டு போட்டு கேட்டுகிட்டு எழுதிகிட்டு இருக்கும் நர்ஸ்கள பாக்க அத்தினை எரிச்சல் வருது..

கொஞ்சம் தள்ளி ஒரு இளம் டொக்டர்.. ஸ்டைலான ஸ்மாட்டான டொக்டர்.. போன பாத்துகிட்டு இடைல இடைல கோல் பேசிகிட்டு சிரிச்சிகிட்டு இருக்கத பாக்க இவருக்கு அவ்ளோ வன்மம் பாயுது. நம்ம எவ்ளோ அலைச்சல் அளைறோம்.. அடிச்சி பிடிச்சி வாறோம்..என்ன ஓட்டம் ஓடுறோம் இவனுங்க இவ்ளோ சொகுசா உக்காந்தி கைவாறு அடிச்சிகிட்டு இருக்கானுங்களே. ச்சீ.. அப்டினுலாம் யோசிக்குறாரு..

மனைவிய இப்டி வருத்தத்துக்காகலாம் வந்து அட்மிட் பண்ணிருக்கோமேனு ஒரு வலி அவர் மனசுக்குள்ள கொப்பளிச்சிகிட்டே இருக்கு..

இவரையும் இவர் மனைவியையும் இந்த ஹொஸ்ப்பிட்டல் நிர்வாகம் வேணுமுனே கண்டுக்காம தட்டி கழிகிறதா கூட பலவாறு யோசிச்சி கிட்டே நிக்கிறாரு.

நிக்க முடில.. திரும்பயும் உள்ள போய்ட்டு

மிஸ் எப்பதான் அனுப்புவிங்க னு சுடு சுடுனு இவர் கேட்டாலும் கொஞ்சம் இருங்களே ஒரு ரிப்போட் இன்னும் முடியல முடிஞ்சதும் கூட்டிட்டு போகலாம்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு வேலைய பாக்குறாங்க..

இருங்கடா ஒங்களுக்கு செய்றே வேல ஒருநாளைக்கினு பல்லை கடிச்சிகிட்டே டொக்டரையும் நர்ஸ்ஸையும் பாத்துகிட்டே வாட்க்கு வெளிய பின்னாலேயே வரும் போது..

கிடு கிடு னு ஒரு நேர்ஸ்

“டொக்டர் அந்த பெட்ல அவங்க மூச்சி விட திணருறாங்கனு சொல்லி முடியவே தடார்ணு டொக்டர் எழுந்து ஓடுறாரு..

கைல வைட் கலர் குளோஸ், முகத்துல மாஸ்க் போட்டிருந்தாரு..

டொக்டர் எங்க ஓடுறாருனு இவரு கொஞ்சம் உள்ளுக்கு போய் எட்டி பாக்குறாரு..

அவர் தூரத்தில் ஏதோ ஒரு பெட்ட சுத்தி பச்சைநிற திரைசீலை.. போட்டிருக்கு..

போன டொக்டர் வேகமா போய் அம்மா அம்மா பேசுறது விளங்குதா னு கேட்டுகிட்டே சினிமால நாம பாக்குற மாதிரி கை ரெண்டயும் வச்சி நெஞ்ச அமுத்துறாரு.. அவர சுத்தி நர்ஸ்லாம் அவர் சொல்ற சின்ன சின்ன கட்டளைகல உடன் உடனே செஞ்சிகிட்டு ஒரு வேகமான பார்வையோட நிக்கிறாங்க..

அம்மா அம்மா இப்ப சரி இப்ப சரி னு டொக்டர் சொல்லிகிட்டே நெஞ்ச அமுக்குறாரு..

அந்த அம்மா திணருற சத்தம் கேக்க.. டொக்டர் விடாம அமுத்துருறாரு.. கை குளோஸ், மாஸ்க் எல்லாத்தையும் கலட்டிட்டு அமுத்துறாரு வேகமா அமுத்துறாரு..

சுத்தி மத்த மத்த கட்டில்ல உள்ள அம்மாக்கள் அக்காக்கள் அண்ணனின் மனைவியும் கூட எழும்பி நின்னு ரொம்ப பதற்றமா பாத்துகிட்டே நிக்க இந்த அண்ணணும் நெஞ்சு வெடிக்கும் அளவு பதற்றத்தோட பாத்துகிட்டு நிக்கிறாரு..

ஆ ஆ னு ஒரு பெரு மூச்சி சத்தம் ஒன்னு அந்த அம்மா கிட்ட இருந்து வர…

ச்சா குட் குட் மா..

இப்ப சரி இப்ப சரி

பயப்படாதிங்க அம்மானு சொல்லிட்டு அவங்க மூக்குக்கு ஒக்சிசன் டியூப போட்டு விட்டுட்டு சாதாரணமா தன்னோட கைகுட்டையால முகத்த லேசா தொடச்சிகிட்டே நடந்துவாறாரு அந்த டொக்டர்..

அண்ணனுக்கு யாரோ முகத்துல அறைந்தத போல ஒரு உள்ளுணர்வு..

டொக்டர் கிட்ட வரவும் இவர் அவர் முகத்த நேரா பாக்க முடியாதவரா குனிஞ்சி வேற பக்கம் திரும்பி தடுமாறும் போதே..

“கொஞ்சத்துல கூட்டிட்டு போகலாம்.. ரொம்ப நேரம் நிக்கிறீங்க எனா ”

அப்டினு டொக்டர் இவர பாத்து சொல்லிகிட்டே போய் உக்காருறாரு..

ஐயோ பரவால்ல டொக்டர்

நா நிக்கிறேனு டொக்டர பாத்து ஏதோ சாமிய பாத்து பூரிபடைற மாதிரி பூரிப்டைஞ்சி பாத்துட்டு ..

அவரின் சின்ன சிரிப்ப ஏதோ பெரிய பொக்கிஷம் போல வாங்கிகிட்டு மெதுவா வாட்க்கு வெளில பின்னாலேயே நடந்து வாறாரு அண்ணன்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *