தேவை எக்ஸ்பிரஸ் சென்ட்ரலை மகா வந்தடையும் நேரம் என்பதால், கணேசன், அவனது ஆட்டோவை வேகமாக ஓட்டினாள். ஒரு சவாரியை, புரசைவாக்கத்தில் இறக்கி விட்டு, சூளை வழியாக சென்ட்ரலை நோக்கி வேகவேகமாக வந்தான். எதிரே யார் வருகிறார்கள், அல்லது எந்த வண்டி வருகிறது என எதுவுமே அவனது கவனத்தில் வரவில்லை , கோவை எக்பிரஸ்ஸிலிருந்து இறங்கி வெளியில் வரும் பயணியை, மற்ற ஆட்டோக்காரர்களை முந்திக் கொண்டு தான் சவாரி பிடித்து விட்டால், அதன் மூலம் கிடைக்குமே முன்னூறோ.. நானூறோ.. அது மட்டுமே அவளது கவனத்தில் வந்தது. டிரயின் ஸ்டேஷன் உள்ளே வந்து நற்பதற்கும், அவன் ஸ்டேஷன் வாசலில் ஆட்டோவைக் கொண்டு வந்து நிறுத்துவதற்கும் சரியாக இருந்தது.
டிரயினிலிருந்து மாலதி டீச்சர் இறங்கினாள், கையில் சிறியதாக ஒரு பேக் வைத்திருந்தாள், குளிர் காலம் என்பதால், தலைக்கு ஸ்கார்ப் கட்டியிருந்தாள், வெளியில் செல்ல எப்படிப் போக வேண்டும் என்பது -தெரியாததால், மற்ற பயணிகள் எந்தப் பக்கம் செல்கிறார்கள் என்பதை கவனித்து. அந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் மச்சர் வேலைக்குச் சேராமலே போயிருந்தாலும் கூட, யார் பார்த்தாலும் கையெடுத்துக் கும்பிடும்படியான ஒரு தோற்றத்தைப் பெற்றிருந்தாள். மச்சரை அவளது சிறு வயதில் பார்த்தவர்களுக்கு, இப்போது பார்த்தால் பிடிக்காமல் போகலாம். காரணம், காதோர நரை. பத்து ஆண்டுகளுக்கு முன், ட்ரான்ஸ்பரில் கோயம்புத்தூருக்குப் போனவள், இப்போது தான் சென்னைக்குத் திரும்பி வருகிறாள்.
ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தாள், கணேசன் ‘ஆட்டோ வேணுமா..’ எனக்கேட்டான். அவள் ‘ஆமாம்.. நெசப்பாக்கம் போகணும்.. எவ்வளவு கேப்பிங்க…’ எனக்கேட்டாள், கணேசன் ‘மீட்டர் எவ்வளவு காட்டுதோ அதைக் குடுங்கம்மா..’ என்றான். அந்த நேர்மை அவளுக்குப் பிடித்திருந்தது. எதுவும் பேசாமல் ஏறி உட்கார்ந்தாள். ஆனாலும் ஒரு சந்தேகம். ‘மீட்டர் கரெக்ட்டா தான காட்டும்..’ எனக்கேட்டாள்.
கணேசன் ‘உழைச்சு சாப்பிடணும்ன்னு நினைக்குறவங்களுக்கு அடுத்தவங்க காசை திருடணும்ன்னு தோணாதும்மா..’ என்று கூறி ‘இது எங்க டீச்சர் எனக்குச் சொல்லிக் கொடுத்தது..’ என்றாள். அவள் சிரித்தபடி ‘நல்ல டீச்சர்.’ என்றாள்.
அவன் ‘நெசப்பாக்கத்துல எங்க போகணும்.. வழி தெரியுமா.. இல்ல அட்ரஸ் எதுவும் வச்சுருக்கிங்களா..’ எனக்கேட்டான். அவள் ‘வழியெல்லாம் மறந்துடுச்சு.. அட்ரஸ் இருக்கு…’ என்று கூறி, தனது பர்சிலிருந்து ஒரு பேப்பரை வெளியில் எடுத்து, அவனிடம் கொடுத்து ‘இந்த அட்ரஸ்தான்…’ என்றாள். அவன் வாங்கிப் பார்த்தான்.
வி. கணேசன், 12, பாரதியார் தெரு, நெசப்பாக்கம், சென்னை என அதில் எழுதப்பட்டிருந்தது. அந்த அட்ரஸைப் படித்ததும் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. காரணம் அது அவனுடைய அட்ரஸ். யார் இந்த அம்மா? எதற்காக தன்னைத் தேடி வந்திருக்கிறாள்? இதற்கு முன் இவளை எங்கும் பார்த்ததாக நினைவு இல்லையே? யோசனையுடன், ஆட்டோவை நிறுத்தினான். தனது அடர்ந்த தாடியைச் சொறிந்த படியே, பின்னால் உட்கார்ந்திருக்கும் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் ‘ஏன்ப்பா ஆட்டோவ நிறுத்திட்ட..’ எனக் கேட்டாள்.
அவனுக்கு, அந்தக் குரலை மட்டும் எங்கேயோ கேட்டது போல் இப்போது நிளைவு வந்தது. யார் இவள்..? யார் இவள்..? என்கிற கேள்வியால் மூளையைத் துளைத்தெடுத்தான். ம்.. நினைவற்கு வந்து விட்டது. இவள் மாலதி பச்சர் தானே.. ஸ்கார்ப் கட்டியிருந்ததால் அடையாளம் தெரியாமல் போய் விட்டது. இப்போது அடையாளம் தெரிந்ததும், அவனுக்கு அவள் மேல் இருந்த கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையில் இருந்திருக்க வேண்டியவன், இன்று ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறான் என்றால், அதற்குக் காரணம் அவள்தான்.
அவளையா தனது ஆட்டோவில் ஏற்றி வந்தேன்! எவ்வளவு பெரிய பாவ காரியம் செய்து விட்டேன்? நல்ல வேளை, தாடி வைத்திருந்ததால் தன்னை அவளுக்கு அடையாளம் தெரியாமல் போய் விட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன் செய்த தவற்றிற்கு, இப்போது பரிகாரம் தேட வந்திருக்கிறாளா? என்னதாள் பரிகாரம் தேடினாலும், தான் இழந்த வாழ்க்கையை அவளால் திருப்பி தர முடியுமா?
‘ஆட்டோ ரிப்பேர். இதுக்கு மேல போகாது.. இறங்கிக்கங்க…’ என்றான். அவள் சலித்துக் கொண்டவளாக ‘என்னப்பா நீ.. ஏத்திட்டு வந்து இப்படி பாதி வழில இறக்கி விடுறியே..’ என்று கூறி இறங்கிக் கொண்டாள். மீட்டர் பார்த்து, பர்சைக் திறந்து பணத்தை எடுத்தாள். அவன் ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. நீங்க கிளம்புங்க..’ என்று கூறி, அட்ரஸ் எழுதப்பட்டிருந்த, அந்த காகிதத்தை, அவளது கையில் கோபமாகத் திணித்தான். அவள், வேறு ஆட்டோ கிடைக்குமா எனத் தேடி, தள்ளிப் போனாள். இவளிடம் காசு வாங்கினால், அது மகா பாவம். அப்படி என்ன பாவத்தைச் செய்து விட்டாள் அவள்?.
***
சென்னை, வேப்பேரியிலுள்ள ஒரு பிரைவேட் ஸ்கூலில், கணேசன் ப்ளஸ் டு படித்துக் கொண்டிருந்தான். ஸ்கூவில், ஃபஸ்ட் மார்க் வாங்கும் மாணவள் அவள். மாவட்ட அளவில், ஃபஸ்ட் மார்க் வாங்கும் நம்பிக்கை நட்சத்திரமும் கூட. இப்போது, மாநில அளவில் ஃபஸ்ட் மார்க் வாங்கி விட வேண்டும் என்பதற்காக, கடுமையாக படித்துக் கொண்டிருந்தான். அப்படி மார்க் வாங்கியதும், கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜில், எம் பி பி எஸ் சேர்ந்து, டாக்டராகப் பட்டம் பெற வேண்டும் என்பதே அவனது கனவாக இருந்தது, படிப்பில் கெட்டியாக இருந்தாலும், அவளது கவனம், அவ்வபோது, தன்னுடன் படிக்கும் சித்ராவின் மேல் சிதற ஆரம்பித்தது.
சித்ரா அழகாக இருப்பாள். கொஞ்சம் த்ரிஷா சாயலில் இருப்பாள். அதற்காகவே, கணேசன் ‘சாமி’ படத்தைப் பதினாறு தடவை பார்த்திருக்கிறான். அதில் விக்ரம் த்ரிஷாவைக் கல்யாணம் செய்து கொள்ளும் காட்சி வரும் போதெல்லாம், அவன் எழுந்து, தியேட்டரை விட்டு வெளியில் போய் விடுவான. அவனுக்கு தரிஷாவை விக்ரம் கல்யாணம் செய்து கொள்ள வில்லை. சித்ராலைக் கல்யாணம் செய்து கொள்வதாகவே நினைத்துக் கொள்வான். தான் விரும்பும் ஒரு பெண்ணை, வேறொருவள் கல்யாணம் செய்து கொள்ளும் போது, அதை எந்த ஆணால்தான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்? சித்ராவும் நன்றாகப் படிப்பாள். அவளுக்கும், கணேசலுக்கும் தான் எப்போதும் போட்டி நிலவும். அவள், ஒரு தடவையாவது கணேசனை மிஞ்சி விட வேண்டும் என நினைத்து கடுமையாக படிப்பாள். ஆனால், ஒரு தடவை கூட அப்படி நடந்ததில்லை. மார்க் ஷீட் கொடுக்கும் போதெல்லாம், அவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இப்படி, அவள் அவன் மேல் மதிப்பு கொண்ட காரணத்தால், அவளது மனம், அவளை விரும்ப ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் பெரிய பற்றுதலெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் போகப் போக தான் அவளைப் பிடிக்க ஆரம்பித்தது. சித்ரா, ஒரு அழகான பெண் என்கிற கவனமே, அதன்பிறகுதான் அவனுக்கு வர ஆரம்பித்தது. ஒருமுறை, அவளுக்காக தனது மார்க்கை வட்டுக் கொடுத்து, தான் இரண்டாம் இடத்திற்ரு வந்து, அவளை சந்தோஷப்படுத்த வேண்டும் என நினைத்தான். அப்படி செய்யவும் செய்தான். ஆனால், அந்த முறையும், சித்ரா, அவனைவிடக் குறைவான மார்க்கை வாங்கி, வழக்கம் போல், இரண்டாவது இடத்தையே பெற்றாள்.
தனது எண்ணம் ஈடேறாததால் அவன் கவலை அடைந்தான். ஒருநாள், மனதில் உள்ள காதலையெல்லாம் கொட்டி, அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதை, விளையாட்டு பிரியடின் போது, யாரும் பார்த்திடாத வண்ணம் அவளிடம் கொடுத்தான்.
‘என்ன து இது..’
‘படிச்சுப் பாரேன்..”
அவள் பிரித்துப் படித்தாள். முகம் பேயறைந்தது போல் மாறியது. திரும்பி அவனைப் பார்த்தாள். கண்களில் கோபாவேசம் தெரிந்தது. அவன் அதைப் பார்த்து நடுங்கிப் போனான்.
‘என்ன லவ் பண்றியா.. இப்ப உன்ளை என்ன பண்றேள் பாரு..’ என்று கூறி அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினாள். அவள் எங்கு போகிறாள் என்பது தெரியாமல், அவன் திகைத்துப் போய் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ஒரு பையன் வந்து ‘உன்னை, மாலதி டீச்சர் ஸ்டாஃப்ஸ் ரூமுக்கு வரச் சொல்றாங்க..’ என்று சொன்னான்.
கணேசனுக்கு விஷயம் புரிந்து விட்டது. சித்ரா, தான் கொடுத்த கடிதத்தை, மாலதி டீச்சரிடம் காட்டியிருக்க வேண்டும். மாலதி பச்சர், மிகவும் கண்டிப்பானவள். கிளாஸுக்கு பத்து நிமிடம் லேட்டாக வந்தாலே, அவளது பனிஷ்மென்ட் கடுமையானதாக இருக்கும். இவ்வளவு பெரிய தவறைச் செய்ததற்கு என்ன மாதிரியான பனிஷ்மென்ட்டைக் கொடுப்பாளோ என அச்சமாக இருந்தது. கடவுள்தான் தன்னை காப்பாற்ற வேண்டும்…
கணேசன் ஸ்டாஃப்ஸ் ரூமிற்கு வந்தான். அங்கு மாலதி டீச்சர் பத்ரகாளியாக நின்று கொண்டிருந்தாள். உடன் சித்ராவும் நின்று கொண்டிருந்தாள். ‘ஸ்கூலுக்கு படிக்க வர்றியா.. இல்ல லவ் பண்ண வாறியா..’ என அவனிடம் உக்ரமாகக் கேட்டாள்,
அவன் ‘இல்ல மச்சா-..’ என எதோ சொல்ல வர, அவள் அதை மறுத்து ‘என்ன நொள்ள மச்சர்… கேக்குற கேள்விக்கு பதில் சொல்லாம வேற ஏதோ பேசிகிட்டு இருக்க.. வா ஹெட்மாஸ்ட்டர் ரூமுக்கு..’ என அழைத்தாள். கணேசன் கதிகலங்கிப் போனான்.
‘வேணாம் மச்சர்! நா செஞ்சது தப்புதான்.. இனி அப்படி பண்ண மாட்டேன்.. பளீஸ் என்னை மன்னிச்சுடுங்க..’ எனக் கெஞ்சினான். அவள் ‘நீ திருந்துவன்னு எனக்கு நம்பிக்கை இல்ல.. உன்னை பனிஷ் பண்ணாதான். நாளைக்கு மத்த பசங்களும், இதே தப்பைப் பண்ண மாட்டாங்க…’ என்று கறாராகப் பேசினாள். அவன் ‘ப்ளீஸ் டீச்சர்.. ப்ளீஸ்..’ என கெஞ்சினான். அவள் அதைக் கண்டு கொள்ளாமல், அவனது காதைப்பிடித்து திருகி, ஹெட்மாஸ்ட்டர் ரூமிற்கு இழுத்துச் சென்றாள்.
ஹெட்மாஸ்ட்டரிடம், அந்தக் கடிதத்தை காட்டி, நடந்த விஷயம் அனைத்தையும் கூறினாள். அவர் அதிர்ச்சியுடன் பார்த்தார். பின் அவனிடம் ‘ஏம்ப்பா நல்லா படிக்குற ஸ்டுடண்ட்டாச்சே நீ.. ஏன் உள் புத்தி இப்படிப் போச்சு..’ எனக் கேட்டார். அவன் என்ன பதில் சொல்வது என தெரியாமல், அவரையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர் ‘படிப்பு முக்கியம் தான்.. அதே சமயம் டிஸிப்ளிலும் முக்கியம்..’ என்று கூறி, மாலதி டீச்சர் பக்கம் திரும்பி, ‘சொல்லுங்க மாலதி.. இவனுக்கு என்ன பனிஷ்மென்ட் குடுக்கலாம்..’ எனக்கேட்டார்.
அவள் ‘டீஸிய குடுத்து அனுப்பிடலாம் சார்..’ என்றாள். அவன், தேன் கொட்டியவனாக நிமிர்ந்து அவளைப் பார்த்தான். பின் ஹெட்மாஸ்டரிடம் ‘ஸார் சார்.. இந்த ஒரு தடவை மன்னிச்சுடுங்க சார்..’ என கதறினான். அவர் ‘வேற மாதிரி தப்புன்னா மன்னிச்சுடலாம்… அதுல திருந்துறதுக்கு வாய்ப்பு உண்டு.. ஆனா நீ பண்ணியிருக்குறது, லவ்வாச்சே.. இதுல திருந்துறதுக்கு வாய்ப்பே இல்ல.. சித்ராவ பாக்கும் போதெல்லாம் அந்த லவ் திரும்பத் திரும்ப உன் மனசுக்குள்ள எழுந்துகிட்டே தான் இருக்கும்.. அதனால, மச்சர் சொன்ன பனிஷ்மென்ட்டு தான் கரெக்ட்டு.. நாளைக்கு உன் பேரன்ட்ட கூட்டிட்டு வந்து டீஸிய வாங்கிட்டுப் போயிடு…’ என்றார். அவன் நிலை குலைந்து போய் நின்றான.
அப்போதுதான், அவனுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்திருந்தது. மார்க் ஷீட் கூட கொடுக்க வில்லை. இன்னும், ஆறு மாதம் ஸ்கூல் இருக்கிறது. இந்தச் சூழலில், டீஸியைக் கொடுத்து அனுப்பினால், வேறு ஸ்கூலில் எப்படி சேர்த்துக் கொள்வார்கள்? ஸ்கூல் ஆரம்பித்த புதிது என்றால் பரவாயில்லை .. யார் கை காலிலாவது விழுந்து சேர்ந்து விடலாம்.. நடுவில் என்பதால் யார் சேர்ப்பார்கள்.?
கணேசனின் அப்பா திருநாவுக்கரசு, ஹெட்மாஸ்ட்டரின் காலைப் பிடித்து கெஞ்சினார். மாலதி மச்சர் அதில் மயங்கி விட வேண்டாம் என அவருக்கு ஜாடை காட்டினாள். அவளது விருப்பம் போலவே, கணேசனை டீஸி கொடுத்து அனுப்பி வைத்தார்கள். அதன் பிறகு, அவன் அப்பாவுடன் வேறு பல ஸ்கூலிற்கு, அலைந்து திரிந்து பார்த்தான். எங்கும் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆறுமாதம் சும்மா இருந்தாக வேண்டும் என்கிற நிலை அவனுக்கு ஏற்பட்டது. என்ன செய்வதென்று புலஜியவில்லை.
அப்பாவிடம் கேட்டு, அவர் வைத்திருக்கும் ஆட்டோவை, அவர் பகலிலும், இவன் இரவிலும் ஓட்டலாம் என முடிவு செய்தான். அவர் அதற்கு சம்மதிக்க வில்லை. ‘எவ்வளவு கஷ்டம் வந்தாலும் என்னோட போகட்டும்.. நீ படிக்கிற வேலைய மட்டும் பாரு…’ என்றார்.
அவன் ‘இல்லப்பா.. இந்த ஆறுமாசம் நா சும்மா இருந்துதாளே ஆகனும்.. அதுக்கு பதிலா ஆட்டோ ஓட்டுறேன்..’ என வற்புறுத்திக் கூறினான். அவர் அரை மனதோடு சம்மதித்தார்.
அப்போது ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தவன்தான். இன்று வரை ஓட்டிக் கொண்டிருக்கிறான். படிப்பில் இருந்த நாட்டம் சுத்தமாகப் போய் விட்டது. ஆறுமாதம் கழித்து, ஸ்கூல் புதிதாக திறந்த போது ‘இனி என்னால ஸ்கூலுக்கு போயெல்லாம் படிக்க முடியாதுப்பா.. அந்த மூடே போயிடுச்சு..’ என மறுத்து விட்டான். அவனது அப்பா ‘டாக்டரா பாக்க வேண்டிய ஒரு புள்ளைய இப்படி ஆட்டோ டிரைவரா ஆக்கிட்டாங்களே..’ என்று கூறி கண் கலங்கினார்…
***
கணேசனின் நினைவை, அந்தக் குரல் கலைத்துப் போட்டது. ‘எக்மோர் வறியாப்பா..’ ‘போகலாம் சார்.. ஏறிக்கங்க…’ என்றான். அந்த நபர் ஏறிக்கொள்ள, ஆட்டோ பறப்பட்டது. அவன் எல்லாவற்றையும் மறந்து, அன்று, பகலிலும் நிம்மதியாக ஆட்டோ ஓட்டினான். இரவானதும் வீடு திரும்பினான். ஆட்டோவை நிறுத்தி விட்டு வாசலுக்கு வந்ததும், இருளில் யாரோ உட்கார்ந்திருப்பது அவனுக்குத் தெரிந்தது.
அருகில் வந்து உற்றுப் பார்த்தான். அது, மாலதி மச்சர்!
அவனுக்குக் கோபம் தலைக்கு ஏறியது. அவளும் அவனை அடையாளம் கண்டு கொண்டு, காலையில், தன்னை ஆட்டோவில் ஏற்றி பாதி வழியில் இறக்கி விட்டவன் கணேசனா, என ஆச்சரியப்பட்டாள். இருவரும் அடையாளம் கண்டு கொண்ட நிலையில், அவன் –
‘எதுக்காக என்னைத் தேடி வந்திங்க.. உங்க முகத்துலயே முழிக்கக் கூடாதுன்னு தான பாதிலேயே இறக்கி விட்டேன்…’ என்றான் கடுமையாக.
‘என் பையனுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்கு.. அந்த இன்விட்டேஷனை உனக்கு கொடுத்துட்டு, உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டுப் போகலாம்ன்னுதான் வந்தேன்..’
அப்போது கணேசனின் அப்பா கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். சூழலைப் புாந்து கொண்டு, ‘என்னதான் கோவம் இருந்தாலும் வீடு தேடி வந்தவங்களை வாங்கன்னு சுப்படுறதுதான் மரியாதை..’ என கணேசனை சமாதானப்படுத்தி, இருவரையும் உள்ளே அழைத்தார். இருவரும் உள்ளே வந்தார்கள்.
டீச்சா ‘எனக்குத் தெரியும்.. என்மேல இருக்குற கோபம் உனக்கு போகாதுன்னு.. உன் வாழ்க்கை தடம் மாறுறதுக்கு காரணமா இருந்தவளாச்சே… கணேசா.. என்னை மன்னிச்சுடுப்பா.. நீ மன்னிச்சாதான் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும்…’ என்றாள்.
அவன் புரியாமல் பார்த்தான். ‘நீ மன்னிக்குறதுக்கும் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்குறதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு பாக்குறியா.. என் பையன், கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு வேற யாருமில்ல.. நம்ப சித்ராதான்..’
அவள் அதிர்ந்து போய்ப் பார்த்தான். தலை சுக்கு நூறாக உடைந்தது போல் இருந்தது. அவளது அப்பாவும் வாயடைத்துப் போய் நின்றார்.
‘அது எப்படின்னு பாக்குறியா.. சித்ரா என்கிட்ட டியுஷன் படிக்குறதுக்கு வீட்டுக்கு வந்தப்ப, என் பையன் அவளைப் பாத்துருக்கான்.. அவளுக்கு அவளை புடிச்சுப் போச்சு.. என்கிட்ட ஒருநாள், அந்த விஷயத்தைச் சொன்னான்.. எனக்கும் சித்ராவைப் புடிக்கும்.. அதனால, படிப்பை முதல்ல முடி.. அப்புறம், நானே அவகிட்ட பேசி அவளை உனக்கு கல்யாணம் பண்ணி குடுக்குறேன் இது ப்ராமிஸ்ன்னு சொன்னேன்.. அந்த சமயத்துலதான், அந்த விஷயம் தெரியாத நீ, சித்ராவுக்கு லவ் லெட்டர் குடுத்த.. சித்ரா என்கிட்ட வந்து அதைக் காட்டினப்ப, எனக்கு பயமாயிடுச்சு…. என் புள்ளை பெரிய படிப்பாளியெல்லாம் இல்ல.. அப்படியிருக்கும் போது, சித்ரா எந்த தகுதிய வச்சு அவனை ஏத்துக்குவா.. ஆனா, உன்னை ஏத்துக்குறதுக்கு. உனக்கு எல்லாத் தகுதியும் இருந்துச்சு.. அதை யோசனை பண்ணித்தான், உன்னை ஸ்கூல்ல வச்சுருந்தா, அவ உள்னை லவ் பண்ணிடப் போறாளேன்னு பயந்து, டீஸிய குடுத்து அனுப்பினேன்.. அன்னிக்கு, ஒரு அம்மாவா ஜெயிச்சுட்டேன்.. ஆனா ஒரு ஆசிரியையா தோத்துட்டேன்.. அந்தக் குற்ற உணர்ச்சி, எனக்குள்ள எப்போதும் இருந்துகிட்டே இருக்கு.. நா பண்ண அந்த பாவத்துக்கு, எந்த ஜென்மத்துலயும் மன்னிப்பு கிடையாது.. நீ மன்னிச்சா மாத்திரமே. என்னால நிம்மதியா வாழ முடியும்.. என் புள்ளையோட கல்யாணமும் நல்லபடியா நடக்கும்..’ என்று கூறி கை கூப்பினாள்.
அவனுக்குக் கோபப்படுவதா அல்லது இரக்கப் படுவதா என்று புரியவில்லை. அவள், கைப்பையிலிருந்து அவனது பெயர் எழுதப்பட்ட பத்திரிகையை எடுத்து, ஒரு தட்டில் வைத்து, அவன் முன் நீட்டினாள்.
‘இதை ஏத்துக்கிட்டின்னா.. நீ என்னை மன்னிச்சுட்டதா அர்த்தம்.. ஏத்துக்க லன்னா பரவாயில்ல.. நா பண்ணின பாவத்துக்கு கடவுள் என்ன தண்டனை வேணும்ன்னாலும் குடுக்கட்டும்… அதை சந்தோஷமா ஏத்துக்குவேன்..’
அந்த வார்த்தை, கணேசனை நெருக்கியது. அவள் நின்ற தோரணை, ஒரு மாணவி ஸ்தானத்தில் அவளும், அவன் நின்ற தோரணை, ஒரு ஆசரியர் ஸ்தானத்தில் தானும் நிற்பது போல், அவனுக்குத் தோன்றியது. ஆசிரியர் ஸ்தானம் என்பது, மன்னிக்கும் மனநிலை கொண்டதாக தானே இருக்க வேண்டும்…?
மாலதி டீச்சர் ஓர் ஆசிரியையாக இருந்தும், அதைச் செய்யத் தவறி விட்டாள். அதே தவறை, ஒரு மாணவனாக இருந்து தான் செய்துவிடக்கூடாது என நினைத்து, தளது அப்பாவை ஒருமுறை பார்த்து விட்டு, அவளது கையிலிருந்த அந்த பத்திரிகையை எடுத்துக் கொண்டான். ‘தாங்க கணேசா..’ என்று சொன்னவளின் கண்களிலிருந்து, நீர் பொலபொலவென்று கொட்ட ஆரம்பித்தது.
– ஜூன் 2019