கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 21, 2022
பார்வையிட்டோர்: 14,294 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘இந்தா ரண்டரையாகுது.’

சுரேஷ் மனசுள் லேசான ஒரு கீத சுகம் நீ விற்று. சோர்ந்த உடல் சாரித்து, சடுதி உற்சாகம் கொண்டது. இடது கை விளிம்புச் சட்டை கிளப்பி வார்ச்’ பார்க்க முகத்தில் மையல் பம்மிய ஆனந்த பரவசம் ‘இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு’

கெக்கலிப்பு. ‘சேவையர் சூட்’ அவன் கையில் அவசர கோலமாகியது. ‘ஹங்கரில் கொழுவினான். பாத்றூம் பேஷன் பைப் திறந்து சாடையாக முகம் அலம்பியாயிற்று. துவாய் எடுத்துப் பறதியாகத் துடைத்த பின், ‘சிவில் சேட்’, ஜக்கற், ‘சூஷ்’ மாட்டினான்.

‘இனி வெளிக்கிடுவம்’

அடுக்குப் பண்ண, ‘பத்ரோன்’ இவன் எதிரே ருத்திர சர்மன் மாதிரி ‘றெஸ்ரோறன்’ சாலைக்கு வெளியே நிற்கிறான்.

ருத்திர முகத்தில் மலர்ச்சி ததும்புகிற சிரிப்புக் கலையவில்லை. கண்களில் அக்கினி கக்கிற மின்னல். சாந்தமான முகபாவம் தேங்கிய போதும் ‘விறும் சத்தி’ சாடை பத்ரோன் முகம் ‘சப்’பென்று இருக்கின்றது.

தன்னுள் ‘கறுமுறு’ த்தான், சுரேஷ்

‘உவன் நெடுகலும் உப்பிடித்தான்’

பரவச நிலை குலைந்து நிற்கையில் நெஞ்சு நீவி ஒரு பெருமூச்சு இவனை மீறிக் குதறிப் போயிற்று.

‘வெளிக்கிட்டாச்சு, மெல்லமா நடையக் கட்டுவம்’

மனசு கிளர்த்திற்று ஓர் இடறல்

‘பொன்ஸ்வா’ சொல்லுவமா, விடுவமா?

புருவம் நெருட, கண நேர யோசனை. பத்ரோன் பார்வை இதமாகத் தோணுவதாயில்லை.

‘அப்ப, அது, வீண் முகஸ்துதியாகிவிடும்.’

மனசு தராசு பிடித்தது. யோசித்தான்.

‘அவன் பதிலுக்கு ‘பொன்ஸ்வா’ சொல்லாட்டியும் பறவாயில்லை. நாம சொல்லுவம்’

எழுந்தமான சமாளிப்பு . தன்னுள் திருப்தியாகி, உடல் நசிய சற்றுச் சிலுப்பி, பத்ரோனைக் கடந்தான்.

‘பொன்ஸ்வா மிஸ்ஸு’

கட் செவியன் போல் சுரேஷ் பதிலுக்காகக் காதைத் தீட்டினான். தலை திருப்பாமல் சிறு கடைக்கண் எறி.

பத்ரோன் வாயில் பதில் ஏதும் இல்லை

அவன் கைப்புடங்கைத் திருகி ஊசி முனைப்பாக ‘உருளோசை’ப் பார்க்க, இவனும் தன் கடிகாரம் பார்த்தான்.

மணி ரண்டரை ‘அறுப்பான் இனி முறையான்’

கண்டம் ஒன்று தப்பினதான ஆசுவாசம்.

அடுத்து, ‘மெத்ரோவைப் பிடிக்கிற ஆவேசம்.

வெளியேறி வேகமாக நடந்தான். சாலையோரங்களில் வித விதமான பட்சணங்கள்.

வாசனை நாசியை நெருடியது. யாழ்ப்பாணத்தில் முத்துப்பாட்டி பலகாரம் சுட்டு விற்கிற கொட்டில் நெடி மூக்கில் அம்மிற்று.

‘உந்தப் பிரச்சினையளுக்க முத்துப்பாட்டி இம்மட்டைக்கு?’

அவலமாக யோசிக்க மனசு மறுத்தது.

பாட்டி உருவம் கூனல் விழுந்து ஒரு கனவு போல் பூஞ்சாணமாகக் கண நேரம் மனக்கண்ணில் அலைகிறது. வெண்

துகில் மெட்டாக்கு.

பாட்டி ஊர்க்குமர்களைக் கரை சேர்க்கிறதில் விண்ணி. அது, ஊர் பூராவும் தெரியும்.

‘நோர்வேயில் மூத்தக்கா புருஷன் புள்ளையோட சீவிக்கிறதே அந்த ஆச்சியாலதான்…’

ஊனிய கண் கசிவு வெளிச்சத்தில் கும்மி மினுங்கிற்று.

‘பாட்டி இருப்பாவோ?’

ஐமிச்சமாக இருக்கிறது.

‘தங்கச்சிமார் ரண்டு பேரும் ஆளையாள் மாறிக் கடிதம் போடுவாளவ. கன நாளாக் கடிதமே வாறேல்ல…என்ன சங்கதி?’

தேக மடங்கக் குருதி கொதித்தது.

போனவாரம் ‘சமாதானப் பேச்சுவார்த்தை’ நடந்ததாகக் கேள்வி. இது, கடை முதலாளிகளுக்கும் நடுக்கமெடுத்திருக்கிறதை இவனும் கவனித்து வருகிறான். பிறகு ‘நியூஸ் பேப்பர்’ பார்க்கிற விருப்பம் இவனுக்கும் இல்லை.

‘இனி இயக்ககாறருக்குக் காசு குடுக்கிறது பிக்கு’ செய்தி காதில் விழுந்த பின் மனசு சொல்லுது.

‘சமாதானப் போறெண்டா, பேந்தேன் இயக்கக்காறருக்குக் காசு குடுப்பான்…..?’

ஒரே குடைசல்.

ஆனால், ஒரு வில்லங்கம்.

‘பிரச்சினை தீந்தால் வெளிநாடுகளில் இருக்கிற அகதியளைத் திருப்பி அனுப்புவாங்கள்தானே?’

இவனும் அரசியல் தஞ்சம் கேட்ட அகதி கடும் யோசனை. உமிழ் நீர் தொண்டைக் குழியுள் ‘முடுக்’ கிட்டது.

‘அங்க போய் என்னெண்டு சீவிக்கிறது?’

சாடையாகத் தலை வலி எடுத்தது.

‘அப்பாட்மெண்ட்’ வந்தாயிற்று.

‘கடிதம் கிடிதம் வந்திருக்கும்?’

‘லெற்றர்ப் பொக்ஸ்’ திறக்க, பறதியாகப் ‘பொக்கற்’றுள் ‘கீ’ யைத் தடவுகிறபோதுதான், ‘றூம்மேட்’ ரவி ‘லெற்றர்ப் பொக்ஸ் கீ’யும் எடுத்தது நினைவில் வருகிறது.

‘மறதிக்குச் செருப்பால் அடிக்க வேணும்; அறுப்பாரோட ஆத்திரம் அவசரத்துக்கு ஒண்டும் செய்யேலாது. இன்னொரு ‘கீ’ சரிக்கட்ட வேணும்…’

‘புறுபுறுப்பு’ ஓயவில்லை. ‘பொக்ஸ்’எள் கைவிட்டு ஒரு பாட்டம் தடவினான்.

கடிதங்கள் இருக்குமாப் போலக் கிடக்கு?

இருவிரல் கோதி மெல்ல நுழைத்து, தடக்குப் பட்டதை இடுக்கி எடுத்துப் பார்த்தான்.

‘அசெடிக் லெற்றர், ஒரு வெடிங்காட் பாங்ஸ்ரேற்மன்’

கொஞ்ச நாளாகக் காலில் சிறு அதைப்பு. இரவில் சாதுவான ‘விண் விண்’ வலிப்பு . ‘கம்பசுக்குச் சயிக்கிள்ல போகேக்க கொக்குவில் பாட்டாளிப் பாவலன் சந்தியில் பெடறலங் இடறி அடித்தது. ஒட்டகப்புலத்தான் எண்ணையோடு அப்ப சுகமானது.

அந்த நோவோ? பசிக்களை. முகம் நெற்றி ஏகலும் நெய் சளித்து மினுங்கிற்று.

சப்பாத்துக்கள் கழற்றி நிமிர, மேசையில் ஒரு ‘சிலோன்’ கடிதம்.

பரவசமான அக்களிப்பு. அம்பலோதியாக உற்றுப் பார்த்தான்

‘றும் மேட்’ ரவி பெயர்

தொட்ட நத்தைச் சதை சாடை முகம் சூம்பிற்று.

‘தான் ஏதோ பெரிய ‘பிறை மினிஸ்ர’ ரெண்ட்டு ரவியனுக்கு எண்ணம். தன்ர கடிதத்தை நான் பாக்கேனெண்டு தெரிஞ்சும், வேணுமெண்டு மேசையில் வச்சிட்டுப் போயிருக்கிறான்’

வெக்காளம் ஆவேகித்து மண்டைக் குழியுள் புரைந்தது.

கடிதம் எழுதாத தங்கச் சிமாரில் பரிதாபம்.

கணத்தில் சோபை இழந்த ஆத்திரம் அருக்கூட்டிற்று.

நாட்டுப் பிரச்சினை, வீட்டுச் சங்கதி அறியவும் முடிவதில்லை.

‘உவன்ர கடிதத்தில் ஏதும் இருக்கும். பாத்திட்டு வைப்போமா…..?’

விபரீத ஆசை. மனசு கிளர்ந்து சலனப்பட்டது.

‘ஏதெண்டாலும் ஒரு ஆளுக்கு வந்த கடிதம் மற்ற ஆள் பாக்கப்படாது..’

மனம் அடித்துச் சொல்லிவிட்டது.

அசமந்தமாக எழுந்த ஆசை. அடக்கிக் கொண்டான்.

குசினியில் சாப்பாடு சமைத்து வைத்த சிலமனைக் காணவில்லை

‘தனக்கு மட்டமாகச் சரிக்கட்டித் திண்டிட்டு வெளிக்கிட்டி ட்டான். சரியான சுயநலக்காரன். உவனோட பங்குப் பிணைப்புச் சரிவராது’.

‘பிறிஜ் சட்டர்’ இழுத்துத் திறக்க, உள்தட்டுக் குலுங்கிற்று. அந்தவாகில் காய்கறி, பழவகை, மீன், இறைச்சி, சாப்பாடு, கீழே கொட்டுண்ட பின்பே, தனக்குப் போட்டுவைத்த சாப்பாட்டுக் கோப்பை , சோறும் கறியுமாகக் கவிழ்ந்திருப்பதைக் கவனித்தான்.

‘ஆஞ்சோஞ்சு பாராதவன் கருமம் தான் சாகக் கடவது’

கண் சாடையாகக் கலங்கி மினுங்கிற்று.

கொட்டுண்டதைப் பக்குவமாக எடுத்துப் பீங்கானில் போட்ட பிறகே விஷயம் வெளித்தது.

‘ஒரு சிறங்கை சோறும் தேறாது’

வெளியே மணி ‘ணிங்’ கிட்டது.

குமிழிப் பேழையூடாகப் பார்த்தான்.

இயக்கக்காறர் போல் நாலு பேர். எந்த இயக்கமென்று தெரிவதாயில்லை. கை கால் ஓடவில்லை. பதட்டம்.

‘குடுத்தால் பழி குடுக்காட்டி வில்லங்கம், வாய் திறந்தால் கொழுவல்?’

இவன் அழைக்க முன் அவர்கள் உள்ளே வந்த போதுதான் சங்கதி வெளித்தது.

‘தேவசேவை’க்காறர். கூட ஒரு மொட்டாக்குச் ‘சிஸ்டர்! மங்கலுக்குள் இவ அவன் கண்ணில் சரியாகத் தெரியவில்லை

இப்பதான் ஆக முழிசாட்டமாகியது.

‘இவ வேற வேல வெட்டி இல்லாமல் வந்த இடத்திலேயும் ‘தண்டி’க் கொண்டு திரியினம். கறுமம், என்ன சவத்துக்கு உள்ள விட்டன்?’

அடிக்கடி பல திகில் தில்லுமுல்லுகள் திமிலோ கப்படுவதை இவன் அறிவான்.

“அதில் இது எது சேத்தி அல்லது =..?’.

சினப்பு முகம் காட்டாமல் ‘நைஸா’கச் சிரித்தான். தவறவிட்ட எதையோ தேடுவது போல் பாசாங்கு செய்தான்.

தேவசேவைக்காறர்களில் ஒருவர், மேரை மரியாதையோடு, ‘விசுவாத்தின் ரட்சணியம்’ சஞ்சிகையைக் காட்டிக் கேட்டார்:

‘இதுகளை நீங்கள் படிக்கிறதில்லையோ?’

இவன் முகம் அருக்குளித்தது.

‘நான் சைவம் ‘பைபிள்’ல ‘இன்றஸ்ற் இல்லை. படிக்கிறதுமில்லை’

‘வெறும் பேயன்’

சிஸ்டர் மனம் பொரிந்து கொண்டா

‘பரவாயில்லை. வேதாகமங்கள் சனங்களின் ரட்சிப்புக்குத் தொண்டு செய்கின்றன. நீங்களும் இதில் பங்கு பற்றலாம்தானே? இதை ஒருக்கா வாசித்துப் பாருங்கோ’

‘வேதாகம நம்பிக்கையோட அபயமிட்ட ஆயிரக்கணக்கான சனங்கள் செத்து ஒழிஞ்சதுதானே பலன்?’

கணை ஏற்ற நினைத்தான். வாய் திறக்கவில்லை.

ரட்சணியத்தை நீட்டியவர் கை தவண்டையடித்தது.

‘இப்ப வசதியில்லை’

தட்டிக் கழிக்கிறதை மற்றவர் கவனித்து, மெல்ல எழுந்தார்.

‘இப்ப வசதியில்லாட்டி, பிறகு தாருங்கோ, வாறம்’

இவன் இதுக்கு மறுமொழி கூறத் தெரியாமல் முழுசுகிறதை அவர் ஒரு ‘பிடி’யாக்கிக் கொண்டார்.

சிஸ்டர் விடாப்பிடியில் நின்றா!

‘வசதி இருக்கிற நோம் காசு தாருங்கோ – காசு பெரிசில்லர் மனிசர்தான் பெரிசு. இது வேதவாக்கியம். இது உங்களுக்கும் எங்களுக்கும் தொடர்பை உண்டாக்கியிருக்கிறது. இதுக்காகக் கடவுளுக்கு ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும்’

இவனுக்கு இந்த வாக்கியம் அர்த்தமாகப்படவில்லை.

மண்டை வலிக்குமாப் போல இருந்தது.

‘இதென்ன சில்லெடுப்பு’

ரட்சணியத்தை அவன் கையில் அழுத்தி ஆனந்தமாகச் சிரித்தார்.

‘இது பெரிய உத்தரிப்பு. சொல்லித் தப்பேலாமக் கிடக்கு’

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றின சாடை வேதாகமம் கொடுத்த சாதனையை அடக்கமாகப் பாவனை செய்து, ‘எப்படியும் புத்தகம் வேண்ட வைச்சிட்டம்தானே’ என்ற திடும் போடு அவர்கள் வெளியேறியதும், நேரத்தைப் பார்த்தான்.

‘சிவ சிவா, நாலாச்சு’

பீங்கானில் கோதி வைத்த சோற்றை “வதக் வதக் கென்று சாப்பிட்டான் உண்ட களை தேகத்தில் ஆயாசமாகவே ‘செற்றி’யில் குத்துண் இருந்தான்.

‘ரவி வருமட்டும் ரீவி’ பார்த்திட்டு ஆறுக்கு இறங்குவம்…’

கிடந்த ‘சனல்’ முழுக்கத் தட்டிப் பார்க்க , அப்பதான் சனல் பாண்டில் ‘லம்படா’ முடிந்து எழுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

‘பறப்பாரால் பிறேசிலியன்ர நல்ல ஒரு பாட்டுப் ‘புரோக்கிரமை’ விட்டிட்டன்’

அறை ஏகலும் கொஞ்சம் மங்கல் தாவிற்று.

ரவி பேரில் வந்த கடிதத்னத மேசையில் பார்க்க, தங்கச்சிமாரில் வேதனையான ஆத்திரம் கிளாத்திற்று.

‘என்ன திகதியில் ‘சீல்’ விழுந்திருக்கு?’

விழி குத்தி உற்றுப் பார்த்தான். 13.12.1989. தெல்லிப்பளை.

‘ஊரில் பிரச்சினையெண்டா, ரவிக்குக்கடிதம் வந்திருக்காது. ‘இதுகள்’ போட்டிருக்கலாம் தானே?’

மனசு கிளர்ந்து அழுந்த, கண் சுரந்து பொசிந்து மினுங்கிற்று.

கடைக்கண்ணில் கீற்றுக் கோடுகளாக நீர் வழிந்தது.

‘எல்லோரும் துவக்குகளோட நிண்டா, அதுகள்தான் என்ன செய்யும்?’

ஆறுக்கு இருபது நிமிஷம்

‘இனி வெளிக்கிடுவம்’

அடுக்குப்பண்ண, ‘ரெலிபோன்’ அடிக்கிறது.

பேசி முடிய , முகத்தில் சடுதியான ஒரு சோக வாட்டம்.

நோர்வேயிலிருந்து அத்தார் இவன் தங்கச்சிமார் பற்றிக் கதைத்திருக்கிறார்.

‘எங்கட நாட்டில் பெண்ணாய்ப் பிறக்கிறதை விட, பெண்ணோட கூடிப் பிறக்கிறவன் தான் கறுமக்காறன்’

கனநாளாக இவனுள் மறுகிக் கொண்டிருந்த ஒரு ‘பிளான்’ போன் கோல் வந்த பிறகு பிரளயப் படுத்திற்று.

‘ரவியிட்ட நேரடியா எப்படி வாய் விடுறது?’

வெகுநாள் தருணம் பார்த்து வருகிறான். வாய்க்கவில்லை இன்று மனசு ‘கேள் கேள்’ என்று அடித்துக் கொள்கிறது.

நெஞ்சு விம்ம ஒரு பெருமூச்சு நீவி எழுந்தது.

ஒரு சங்கடம்.

‘ரவி ஒரே தங்கச்சிக்காறன். சகோதரி ஒண்டுக்குக் கேக்க, அவன் தன்ர சகோதரிக்கு என்னைக் கேட்டு அது, மாத்துச் சடங்கில வந்து நிண்டா?’

அச்சம் சூல் கொண்டது.

‘ஒரு மாத்துக் கலியாணம் ரண்டு குடும்பத்தைச் சீரழிக்கும் என்று முத்துப்பாட்டி நெடுகலும் சொல்லுறவ’.

இவன் தற்காலத்துப் பையன். ஆனால் யாழ்ப்பாண வைதீகப் பிடிப்பு இறுக்கம். சமய ஆசாரங்கள், விளையாட்டு வினோதங்கள், கோயில் திருவிழாக்கள் நடந்தால் நாட்டுப் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக இவன் கண்டை அரசியல் இளம் சந்ததியான இவனுக்கும் பழம் முத்துப் பாட்டியே ஞானக்குரு.

கலியாணம் கட்டவும் ஆசைதான்.

‘முத்துப்பாட்டிக்கு எழுதிக் கேட்டு, அவ, ‘சரி’ யெண்டா, வாய் வைப்பம்’

ஆதங்கத்தோடு எழுந்தான்.

மோசமான நாட்டுப் பிரச்சினையளுக்க முத்துப்பாட்டி என்ன ஆனாவோ?

நெஞ்சு குமுறி மனசு நெட்டுருவிற்று.

விடியக் கண் விழித்த பிறகும் ‘பெட்’டில் சுரேஷ் தீய்ந்து போய்க் கிடக்கிறதை ரவி கவனித்தான்.

‘என்ன சங்கதி, உள் பாட்டில் முழுசிக் கொண்டு இருக்கிறாய், எதுங் கரைச்சல் கிரைச்சலோ?’

‘அப்படி ஒண்டுமில்ல’

சமாளிக்கிறது கெட்டித்தனம் என்று இவன் நினைப்பு – ரவியைப்பார்த்தான்.

‘சங்கதி அறிஞ்சியோ?’

‘என்னது?’

எனக்கொரு ‘லக்’ அடிச்சிருக்கு.

‘லக்கோ அப்ப, உன்பாடு வாசிதான்’

பாவி நக்கல் பண்ண, இவனுக்கும் கேந்தியாயிற்று. தன் உசத்தியைப் பறை சாற்றலானான்.

‘பத்ரோன் சம்பளம் கூட்டிப் போட்டன்!’

பாவி நமட்டிச் சிரித்தான்.

‘தலை குத்திப் பிரண்டாலும் சம்பளம் கூட்டாத பத்ரோன் தனக்கு சாபமில்லாம எதையும் செய்திருக்க மாட்டான்…’

சுரேஷக்கு அரியண்டமாக இருந்தது. ரவி பேச்சைக் கேட்டால் தன் வாசி கெடும் என்று நினைத்தான்

‘இவன் மட்டில் பேசிப் பயனில்லை’ என்று ரவியும் கதையை மாற்றினான்.

‘மேசையில் கடிதம் வைச்சன். நீ எடுத்துப் பாக்கேலப் போல.’

பாவி கேட்டதே இவனுக்குச் ‘சுருக்’ கென்று தைத்தது.

‘கவரில் உன்ர பேரல்லோ இருந்தது?’

‘உடைச்ச கவர்தானே, பார்த்திருக்கலாம்’

“எண்டாலும் ஓராளின்ர போல வாற கடிதம் இன்னொராள் பாக்கப் படாதுதானே?”

“அதுவும் சரிதான்”

கடிதத்தை எடுத்துக் கொடுத்த கையோடு ரவி ‘பாதம்’ பக்கம் போக, இவன் இருந்த வாகில் படித்துவிட்டுச் சிரித்தவனாக வலு ‘குஷி’ யாகத் துள்ளி எழுந்தான்.

“ரவி ஒரு ‘குட் நியூஸ்’

‘என்னது?’ என்று கேட்க முதலே சுரேஷ் சொன்னான்

‘இலங்கையில் இப்ப சரியான பிரச்சினையாம் ரண்டு பகுதியாலயும் சூடுபட்டு நாள் வீதம் அம்பது அறுவதெண்டு சனம் சாகுதாம். யாழ்ப்பாணத் துக்குப் பெரிய அழிவு வரப்போகுதாம். அதுக்கிடையில் மூத்த மாமா தங்கச்சிவைய ‘ஏஜென்சி’ மூலம் ஜேமர்மனிக்கு அனுப்பிப் போட்டார்’

ரவி ‘நமட்டி’ச் சிரித்தான்.

‘உதே ‘குடநியூஸ்’. சனங்கள் சாகிறதும் உனக்குக் ‘குட்நியூஸ் என்ன’

‘நான் அதைச் சொல்லேல”

‘பின்ன, எதைச் சொன்னி?

‘தங்கச்சியவே பிரான்சுக்கு வாற சங்கதிய முக்கியப் படுத்தாமல் ‘பாவம், அப்பாவிச் சனங்கள்தான் வீணாகச் சாகு துகளெண்டு சொல்லி ரவியை மெல்லமா அணைச்சிருக்கலாம் பறவாயில்லை. அதுகள் வந்து சேருமட்டும் ஒண்டும் பறையாமல் இருந்திட்டு பேந்து பாப்பம்’

கண நேரமாகியும் சுரேஷ் பதிலே சொல்லாமல் யோசித்தபடி இருந்துவிட்டுக் கடைசிவரை வாசித்தான்

முத்துப்பாட்டி!

குறிப்பு: பத்ரோன் – முதலாளி, பொன்ஸ்வா மிஸ்ஸ – மாலை வணக்கம் ஐயா, மெத்ரோ – சுரங்க வண்டி

– ஓசை, 1991 தை-பங்குனி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *