சுந்தரம் செய்தது தவறாங்க…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 5,473 
 

“கனம் ஜட்ஜ் வருகிறார்,எல்லோரும் எழுந்து நில்லுங்க” என்று கோர்ட் ப்யூன் குரல் கொடுக்கவே கோர்ட் வளாகத்தில் இருந்த எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

ஜட்ஜ் வந்து தன் சீட்டில் உட்கார்ந்தவுடன் எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள்.

தனது மூக்குக் கண்னாடியைக் கழட்டி விட்டு எல்லோரையும் ஒரு பார்வைப் பார்த்தார் ஜட்ஜ்.

பிறகு வழக்கு பைலை அவர் எதிரில் பிரித்து வைத்துக் கொண்டார்.அதை நன்றாகப் படித்து விட்டு,கைதி கூண்டில் நின்றுக் கொண்டு இருக்கும் நபரைப் பார்த்தார்.அவர் முகம் சுளித்தார்.

கைதிக் கூண்டிலே நின்றுக் கொண்டு இருக்கும் சுந்தரம் ஒரு பழைய வேஷ்டியுடனும், ஒரு சாதாரண ‘ஷர்ட்’டும் போட்டுக் கொண்டு இருந்தார்.அவர் தலையிலே நிறைய நரை இருந்தது.

பிறகு சர்க்கார் தரப்பு வக்கீலைப் பார்த்து“ நீங்க உங்க வழக்கைச் சொல்ல ஆரம்பிக்கலாம்”என்று உத்தரவுப் போட்டார்.

சர்க்கார் தரப்பு வக்கீல் சட்டநாதன் எழுந்து நின்று தன் கண்ணாடியை கண்களில் மாட்டிக் கொண்டு ஜட்ஜ் ஐயாவுக்கு பணிவாக வணக்கம் சொல்லி விட்டு “மை லார்ட்.இந்த கைதிக் கூண்டில் நிற்கும் சுந்தரம் என்பவரை ’ராணீ’ என்பவா¢ன் விபச்சார விடுதியில் ஒரு இள வயதுப் பெண்ணொடு படுக்கை அறையில் தனியாக இருந்த போது ‘ரெய்டு’ செய்த போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப் பட்டார்.இந்த மாதிரி படித்த,வயது முதிர்ந்தவங்க,நல்லவங்க போல வேஷம் போட்டுகிட்டு, தாங்கள் “பொ¢சு” என்கிற ஒரே காரணத்தை வச்சுக் கிட்டு ‘இந்த’ மாதிரி கெட்ட எண்ணத்துடன் நடமாடிக் கொண்டு இருக்கும் வரையில் வரை போலீஸ் என்ன விழிப்புணர்வுடன் இருந்தாலும் விபச்சாரத்தை அறவே ஒழிக்கவே முடியாது.இவர் ஒரு இளம் வாலிபராக இருந்தால்,‘இது போல் மறுபடியும் செய்யா தே’ன்னு சொல்லி,அவனை மன்னிச்சு விட்டு விடலாம்.ஆனால் வாழ்க்கையை பாதிக்கு மேல் வாழ்ந் து அனுபவிச்ச இவரை போன்ற பெரியவங்க, இந்த மாதிரி ‘கெட்ட’ காரியங்களில் ஈடுபட்டா ‘போலீஸ்’ இவரை எப்படி மன்னிச்சு விடமுடியும்.‘மை லார்ட்’.இவர் செஞ்சது ஒரு மன்னிக்க முடியாத குற்றம் ஆகையாலே,நீங்க இவருக்கு கடும் தண்டனை விதிக்குமாறு தங்களைத் நான் தாழ்மையுடன் கேட் டுக் கொள்கிறேன்.‘தட்ஸ் ஆல் மை லார்ட்’”என்று சற்று கோவத்துடன் சொல்லி விட்டு,தன் சீட்டு க்குப் போய் உட்கார்ந்துக் கொண்டார்.

ஜட்ஜ் சர்க்கார் தரப்பு வக்கீல் சொன்னதை கவனமாகக் கேட்டு விட்டு தன் டைரியில் ஏதோ எழுதி விட்டு,பிறகு தன் தலையை திருப்பி கோர்ட்டில் இருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு,கைதிக் கூண்டில் நிற்கும் சுந்தரத்தை பார்த்தார்.

சுந்தரம் முகத்தில் ஒரு சலனமும் இல்லாமல் வெறுமனே நின்றுக் கொண்டு இருந்ததைப் பார் த்த ஜட்ஜ் “மிஸ்டர் சுந்தரம்,சர்க்கார் தரப்பு வக்கில் சொன்ன குற்றத்தை நீங்க செஞ்சீங்களா.இந்த குற்றத்தை நீங்கள் ஒத்துக் கொள்றீங்களா.இல்லை மறுக்கிறீங்களா.உங்க தரப்பில் வாதாட வக்கில் யாராவது வந்து இருக்கிறரா,இல்லை நீங்களே வாதாடப் போறீங்களா” என்று நிதானமாகக் கேட்டார்.

சுந்தரம் மிக அமைதியாக “கனம் ஜட்ஜ் அவர்களே முதலிலிலே என் வணக்கத்தை உங்களுக்கு நான் நான் தெரிவிச்சுக் கொள்கிறேங்க” என்று சொல்லி ஜட்ஜ்க்கு வணக்கம் தெரிவித்தார்.

”மை லார்ட்,சர்க்கார் தரப்பு வக்கீல் சொன்னது போல் ‘ராணீ’என்னும் அம்மா நடத்தும் விபச்சாரவிடுதியில் நான் ஒரு இளம் பெண்ணுடன் தனியாக இருக்கும் போது தான் என்னை போலீஸ் கைது செய்தது உண்மை தாங்க.எனக்குன்னு வக்கீல் யாரும் இல்லை ‘மை லார்ட்’.இந்த வழக்கை நான் வா தாடப் போவதும் இல்லை.நான் என் குத்தத்தை ஒத்துக் கொண்டப் பிறகு எதுக்கு வாதாடணும்.நீங்க அனுமதி கொடுத்தா நான் என் பக்க ‘உண்மை நிலையை’ கொஞ்சம் விளக்கி சொகிறேன். அதுக்கு தயவு செஞ்சி எனக்கு அனுமதி தாங்க” என்று கேட்டு விட்டு ஜட்ஜின் பதிலுக்காக காத்துக் கொண்டு இருந்தார் சுந்தரம்.

சுந்தரம் மிக பொறுமையாக தன் தவறை ஒப்புக் கொண்டதையும்,இந்த வழக்கை வாதாட ஒன் றும் இல்லை என்றும்,‘உண்மை நிலையை’ மட்டும் விளக்க அனுமதி கேட்ட விதமும் ஜட்ஜுக்கு ஒரு பெரும் சந்தேகத்தை எழுப்பியது.

அவர் தன் மூக்குக் கண்னாடியை கழட்டி வைத்து விட்டு யோஜனைப் பண்ணினார்.

‘இந்தப் பெரியவர் என்ன உண்மையை விளக்கிச் சொல்லப் போறார்.இவர் தன் தப்பை ஒத்துக் கொண்டு விட்டு இருக்கிறாரே.அப்படி இருக்கும் போது என்ன ‘உண்மையை’ இவர் சொல்ல போறார்’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டே“சரி, நான் உங்களுக்கு அனுமதி தறேன்.நீங்கள் உங்கள் பக்க உண்மையை நிலையை இப்போது சொல்ல ஆரம்பிக்கலாம்” என்று சொல்லி விட்டு சுந்தரத்தை பார்த்து கொண்டு இருந்தார் ஜட்ஜ்.

சுந்தரம் தன் குரலை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

”கனம் ஜட்ஜ் அவர்களே,உங்களுக்கு ரொம்ப நன்றி.நான் ஒரு சாதாரண குடும்பததைச் சேர்ந்தவங்க.என் அப்பா கார்பரேஷன் ஆபீஸில் ஒரு கீழ் நிலை கணக்காராக வேலை செஞ்சு வந்தார்.நான் அவருக்கு முதல் பிள்ளையா பிறந்தேங்க.அப்போது நாங்கள் சைதாப்பேட்டையில் வசிச்சு வந்தோ முங்க.பிறந்ததில் இருந்தே எனக்கு பிள்ளை வாத நோய் இருந்து வந்துச்சுங்க.எனக்கு இரண்டு வயசு ஆகியும் என் கால்கள் சரியாக வலுப்படாம இருந்ததிச்சுங்க.அதனாலே என் அம்மா,அப்பா,ரெண்டு பேரும் என்னை அலோபதி,ஹோமியோபதி,சித்த வைத்தியம்ன்னு பல இடங்களுக்கு அவங்க தோளி லே தூக்கிக் கிட்டு போய் வைத்தியம் பண்ணி அழைச்சுக் கிட்டு வருவாங்க.எனக்கு நாலு வயசு ஆவு ம் போது என் உடல் சுமை அதிகமாகி விடவே,என் அப்பா மட்டும் தான் என்னை தூக்கிக் கிட்டு வைத்தியத்துக்கு போவாருங்க. எனக்கு ஏழு வயதாகும் போது என் கால்களுக்கு கொஞ்சம் பலம் வர வே நான் மெதுவாக நடக்க ஆரம்பிச்சேங்க.அப்புறமா எனக்கு இரண்டு தங்கைங்க பொறந்தாங்க. நான் இருபத்து ரெண்டாவது வயசிலே ‘பீ.ஏ.எகனாமிக்ஸ்’ பாஸ் பண்ணி முடிச்சேங்க.அப்புறமா நான் ஒரு தனியார் கம்பனியில் வேலைக்கு சேர்ந்தேங்க.நான் நல்லா சம்பாதிச்சு ஒரு அழகான பொண்ணை கல்யாணம் செஞ்சிக் கொள்ளணும்ன்னு ரொம்ப ஆசைப் பட்டேங்க.

நான் வேலைக்கு சேர்ந்த ஒரு மாசம் கூட ஆகி இருக்காதுங்க.என் அப்பா ரோடிலே நடந்து போவும் போது ‘ஸ்கூட்டரில்’ வந்த யாரோ ஒருவன் என் அப்பாவை பின் பக்கமா வந்து மோதினதாலே அவருக்கு காலில் பலத்த எலும்பு முறிவு எற்பட்டதுங்க.நான் அவரை ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்து அவருக்கு வைத்தியம் பண்னேங்க. அவருக்கு எலும்பு முறிவு அதிகமாக இருந்திச்சிங்க.அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் அறுவை சிகிச்சையை சரியாக செய்யாததால்,முறிஞ்ச அவர் கால் எலும்புக சரியா சேரலேங்க.கால் கட்டு பிரிச்சவுடன் அவரால் ஒரு ‘வாக்கரை’ வச்சுக் கிட்டு கொண்டு தான் நடக்க முடிந்திச்சு.

அதனாலே என் அப்பா அவர் செஞ்ச வேலையிலே இருந்து ஓய்வு எடுத்துக் கிட்டாருங்க.நாங்க ரொம்பவும் கஷ்டப் பட்டுக் கொண்டு வாழ்க்கையை நடத்திக் கிட்டு வந்தோமுங்க.என் அம்மாவுக்கு சின்ன வயசிலே இருந்தே ஆஸ்த்மா வியாதி இருந்திச்சி.எல்லா வூட்டு வேலைகளும் அவங்களே செஞ்சு வந்தாங்க.கல்யானம் கட்டி கிட்டா,எனக்கு வரும் பொண்ஜாதி அம்மாவுக்கு உதவியா இருப் பாங்களேன்னு நினைச்சு நான் கல்யாணம் செஞ்சுக் கொள்ள ரொம்ப ஆசைப் பட்டேங்க.ஆனா நான் கல்யாணத்துக்கு பாத்த பொண்ணுங்க யாரும் என் அப்பா,அம்மா,என் தங்கைங்க கூட சேர்ந்து குடித் தனம் பண்ண தயாரா இல்லேன்னு சொல்லி விட்டாங்க.‘தனி குடித்தனம்’ வரதா இருந்தா கல்யாணம் செஞ்சிக்கறோம்ன்னு சொன்னாங்க.

எனக்கு என் அப்பா அம்மாவையும் தங்கைங்க ரெண்டு பேரையும்,தனியே விட்டு விட்டு கல்யா ணம் பண்ணிக் கொண்டு ‘தனி குடித்தனம்’ போவது சரியாய் படலீங்க.நான் என் கல்யாண ஆசை யை தள்ளிப் போட்டு விட்டு,மெல்ல பணம் சேர்த்து,என் அப்பா ‘ரிடையர்’ ஆன பணத்தையும் வச்சுக் கிட்டு,என் பொ¢ய தங்கையை ஒருத்தருக்கு கல்யாணம் செஞ்சி வச்சேங்க.

நாலு வருஷம் கழிச்சு என் சின்ன தங்கைக்கு நல்ல இடத்லே கல்யாணம் செஞ்சு முடிச்சேங்க.

என் வயசு முப்பத்தாரை நெருங்கிச்சுங்க.

என் பொருப்புகள் எல்லாம் முடிஞ்சி விடவே,எனக்கு கல்யாண ஆசை மறுபடியும் வர ஆரம்பிச் சதுங்க.நான் கல்யாணம் பண்ணி கொள்ளத் தீர்மானம் செஞ்சி ஒரு ‘பெண்ணே’ தேடினேன்.என்னை கல்யாணம் செஞ்சிக் கொள்ள ஒத்துக் கொண்ட பொண்ணுங்க யாரும் என் அப்பா,அம்மாவுக்கு உறு துணையா இருந்து வர மறுத்துட்டாங்க.

‘தனி குடித்தனம்’ வரலைன்னா உங்களை நாங்க கல்யாணம் செஞ்சி கொள்ள முடியாதன்னு தீர்மானமா சொல்லி விட்டாங்க.

என்னை பெத்து,கஷ்டப் பட்டு வளத்து ஆளாக்கின பெத்தவங்களை கடைசி காலம் வரை நல்ல படியாக பார்த்து கொள்ள வேண்டியது என் கடமைன்னு எனக்கு பட்டதுங்க.

நான் கல்யாணம் செஞ்சிக்கலே.என் கல்யாண ஆசையை தள்ளிப் போட்டேங்க.

எனக்கு நாற்பத்து எட்டு வயசு முடியும் போது என் அப்பா இறந்து போனாருங்க.ரெண்டு வரு ஷத்துக்கு அப்புறம் என் அம்மாவும் இறந்து போனாங்க.

எனக்கு வயசு ஐம்பது ஒன்னு ஆச்சுங்க.இப்போ நான் தனியாக இருந்ததினாலும்,என் பொறுப்புகளை எல்லாம் சரி வர செஞ்சி முடிச்சு விட்டதாலும், நான் மறுபடியும் கல்யாணம் செஞ்சிக் கொள்ள ரொம்ப ஆசைப் பட்டேங்க.

முப்பது வயசுக்குள்ளாற இருந்த பெண்கள் எல்லோரும் என்னை ‘கிழவன்’ன்னு சொல்லி,என்னுடைய “ஆசைக்கு’ முத்து புள்ளி வச்சிட்டாங்க.

முப்பது வயசுக்கு மேற்பட்ட ‘பெண்கள்’ ஒன்று விவாக ரத்து செஞ்சு கிட்டவங்காளாகவோ, இல்லை புருஷனை இழந்து,மறுமணம் செஞ்சு கொள்ளும் ஆசை உள்ளவங்களாகவோ தாங்க இருந்தாங்க

எனக்கு இந்த மாதிரியான பெண்களையும் பிடிக்கலேங்க.

இதுக்கு நடுவிலே என் தங்கை பொண்ணு திருமண வயசை அடைஞ்சு இருந்தா.அவளுக்கு நான் பண உதவி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நான் என் கையிலே இருந்த பணத்தைக் குடுத்து அவளுக்கு கல்யாணத்தே செஞ்சி முடிச்சேங்க.

எனக்கு இப்போ வயது ஐம்பதைஞ்சு.

‘இந்த வயசிலே என்னை யாருங்க கல்யாணம் செஞ்சுக்க மாட்டாங்களே’ன்னு நினைச்சு நான் ரொம்ப வருத்தப் பட்டேன்.

‘நாம வாழ்க்கையிலே ஒரு சந்தோஷம் கூட அனுபவிக்கலையே’ ன்னு நினைச்சி ரொம்ப வேதனைப் பட்டேங்க.வழி தெரியாம தவிச்சேங்க” என்று சொல்லி விட்டு ஜட்ஜை பார்த்து “எனக்குக் கொஞ்சம் குடிக்க தண்ணி குடுங்க. ரொம்ப தாகமா இருக்குது” என்று கேட்டார் சுந்தரம்.

கோர்ட் சிப்பந்தி ஒருவர் கொடுத்த தண்ணீரைக் குடித்து விட்டு சுந்தரம் தொடர்ந்தார்.

“ஒரு ஆணா பொறந்த எனக்கு ‘பெண் சுகம்’ என்பது என்னன்னு தெரிஞ்சு கொள்ளணும் என்கிற ஆசை மட்டும் மனசிலே கொழுந்து விட்டு எரிஞ்சிகிட்டு இருந்ததுங்க. இந்த ‘சுகத்தே’ எப்படியாவது, யாருக்கும் எந்த வித தொந்தரவும் குடுக்காம, அனுபவிக்கணும்ன்னு ஆசைப் பட்டேங்க” சொல்லும் போது சுந்தரத்தின் தொண்டை அடைத்தது.

அவர் கொஞ்சம் இருமி விட்டு ‘டம்ளரில்’ இருந்த மீதி தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் தொடர்ந்தார்.

“பணம் குடுத்தா இந்த ‘பெண் சுகம்’ கிடைக்கும் இடத்துக்கு ஒரு தரம் போய் நாம் இந்த சுகத்தை அனுபவிச்சா என்னன்னு நான் யோஜனைப் பண்ணேங்க. அதனால் நான் ‘ராணீ’ என்பவர் நடத்தி வரும் ‘அந்த மாதிரி இடத்துக்கு’ ஒரு நாள் சாயங்காலமா ஒரு மூனு மணிக்கு போனேங்க.

ராணீயை பாத்து நான் என் கதையை பூராவும் சொல்லி, என் ஆசையை சொன்னேங்க.அவங்க விழுந்து விழுந்து சிரிச்சாங்க” என்று சொல்லும் போது சுந்தரத்துக்கு துக்கம் பொங்கி வரவே அவர் விக்கி விக்கி அழுதார்.

‘ஜட்ஜு’ம் தன் கண்களில் வழியும் கண்ணீரை தன் கைக் குட்டையை எடுத்து துடைத்துக் கொ ண்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் தன்னை சுதாரித்துக் கொண்டு “நான் அந்த விடுதிக்குப் போனப்ப விடுதியில் ‘கஸ்டமர்கள்’ யாரும் இல்லீங்க.அந்த அம்மா என்கிட்டே ஆயிரம் ரூபாய் பணம் கேட்டாங்க.அந்த அம்மா கேட்ட ஆயிரம் ரூபாயை நான் அவங்க கிட்டே குடுத்தேங்க.அவங்க என்னை ஒரு பொண்ணு கிட்ட அழைச்சு போய் விட்டாங்க. நான் அந்த பொண்ணு கிட்டே என் கதையை முழுக்கச் சொல்லி விட்டு, அந்தப் பொண்ணோட விருப்பத்துக்கு மாறா, என் ஆசையை நிறைவேத்தி கொள்ள வந்து இருக்கேனான்னு மறுபடியும், மறுபடியும் கேட்டேங்க.

அதுக்கு அந்த பொண்ணு ‘இல்லீங்க நான் பூரண இஷ்டத்துடன் தாங்க இந்த ‘வேலை’யை செஞ்சி வறேன்.நீங்க குடுத்த ஆயிரம் ரூபாயிலே ‘அம்மா’ எட்டு நூறு ரூபாயே எடுத்துக்கிட்டு எனக்கு எரநூறு ரூபாய் தருவாங்க. எனக்கு ஒரு பையன் இருக்காங்க.அவன் ரெண்டாவது படிக்கிறான் அவன் படிப்பு செலவுக்கு இந்த பணம் ரொம்ப உதவுங்க. அதனாலே நீங்க தயவு செஞ்சி திரும்பிப் போவாம என் கூட ‘இருந்துட்டு’ போங்க. உங்க மாதிரி ஆளுங்க இங்கு வந்தா தாங்க எனக்கு எதாவது பணம் கிடைக்குங்க’ என்று சொல்லி தன் கைகளைக் கூப்பிச் சொன்னாங்க.

நான் அந்த பொண்ணு கிட்டே பேசிகிட்டு இருந்த போது தாங்க ‘போலீஸ் ரெய்ட்’ வந்து என்னை கைது செஞ்சாங்க. உடனே அந்த போலீஸ் வழக்கு பதிவு,செஞ்சி என்னை இந்த கூண்டிலே குத்தவாளியா நிக்க வச்சு இருக்காங்க” என்று சொல்லும் போது சுந்தரம் அழ ஆரம்பித்தார்.

அவர் தன் தோளின் மேல் போட்டுக் கொண்டு இருந்த துண்டினால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்தார்.

கொஞ்ச நேரம் ஆனதும் சுந்தரம் “அந்த “கலை’ என்னன்னு தெரிஞ்சுக் கொள்ளத் தானேங்க பெரிய சமய துறவியான ஆதி சங்கரர் கூட கூடு விட்டு கூடு பாஞ்சு ‘அந்தக் கலையை’ கத்துக் கிட்டார்ன்னு நம்ம சமய நூல் சொல்லுது. ஆனா நான் ‘அந்த கலையை’த் தெரிஞ்சுக் கொள்ளப் போதே ஒரு ‘குத்தவாளி பட்டம்’ சூட்டப் பட்டு இந்த கைதி கூண்டிலே நிற்கிறேங்க” என்று சொல்லி விட்டு மௌனமாய் நின்று கொண்டு இருந்தார்.

சர்க்கார் தரப்பு வக்கீல் சட்டநாதன் உடனே எழுந்து “’மை லார்ட்’, நான் அந்த விடுதி தலைவி ராணீயையும், அந்த ‘ரூமில்’ இருந்த பெண்ணையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோருகிறேன்” என்று கேட்டார்.

உடனே ‘ஜட்ஜ்’ அதற்கு “அனுமதி அளிக்கப்பட்டது” என்று சொல்லி விட்டு, “கோர்ட் பகல் உணவு இடைவேளைக்கு பிறகு கூடலாம்” என்று சொல்லி விட்டு, எழுந்து போய் விட்டார்.

பகல் உணவு இடைவேளை முடிந்து ‘ஜட்ஜ்’ வந்து உட்கார்ந்துக் கொண்டார்.

கோர்ட் பியூன் “ராணீ,”ராணீ”,“ராணீ”,என்று மூனு தடவைக் கூப்பிட்டதும் ராணீ என்கிற ஒரு பெண்மணி கூண்டில் ஏறி நின்று ‘ஜட்ஜ்க்கு’ வணக்கம் செலுத்தினாள்.

சர்க்கார் தரப்பு வக்கீல் அந்த அம்மாவிடம் போய் “உங்க பேர் என்ன” என்று கேட்டதற்கு அந்த அம்மா ‘ஜட்ஜுக்கு’ வணக்கம் சொல்லி விட்டு “என் பேர் ராணீங்க” என்று சொன்னாள்.

“கைதிக் கூண்டில் நிற்கும் சுந்தரம் என்பவரை உங்களுக்கு தெரியுமா” என்று கேட்டார் சர்க்கார் தரப்பு வக்கீல்.

“தெரியும்ங்க” என்று சொல்லி நிறுத்தினாள் ராணீ.

”இவரைப் பத்தி உங்களுக்கு தெரிஞ்சதே சொல்லுங்க” என்று கேட்டு ராணீ பதிலை எதிர்பார்த் து நின்றுக் கொண்டு இருந்தார் சர்க்கார் தரப்பு வக்கீல்.

“ரெண்டு நாளைக்கு முன்னாலே மதியம் ஒரு மூனு மணி அளவிலே இவர் எங்க விடுதிக்கு வந் து,அவர் கதை பூராவையும் சொல்லிட்டு,‘தனக்கு ஒரு பெண் கிட்ட ‘சுகம்’ அனுபவிக்க வேணும்’ன்னு சொல்லி கேட்டாருங்க.அவர் நான் கேட்ட ஆயிரம் ரூபாயை என் கிட்டே குடுத்தாருங்க.நான் உடனே ஜோதிங்கற பொண்ணு ரூமுக்குப் போய் இவரை கொண்டு போய் விட்டேனுங்க.ஒரு பத்து நிமிஷ த்துக்கு எல்லாம் போலீஸ் ‘ரெய்ட்’ வந்து இவரை கைது பண்ணாங்க.அவ்வளவு தாங்க எனக்கு தெரி யும்” சொல்லி நிறுத்தினாள் ராணீ.

“சரி நீங்க போகலாம்” என்று சர்க்கார் தரப்பு வக்கீல் சொல்லவே ராணீ ஜட்ஜுக்கு வணக்கம் சொல்லி விட்டு கிழே இறங்கினாள்.

கோர்ட் பியூன் “ஜோதி”.“ஜோதி”,“ஜோதி” என்று மூனு தடவை கூப்பிடவே ஜோதி என்கிற ஒரு பெண் கூண்டில் ஏறி நின்று ‘ஜட்ஜ்க்கு’ வணக்கம் செலுத்தினாள்.

சர்க்கார் தரப்பு வக்கீல் சட்டநாதன் ஜோதியை பார்த்து ”உங்க பேர் என்ன” என்று கேட்டார்.

உடனே அந்தப் பெண் “என் பேர் ஜோதிங்க”என்று சொன்னாள்.

“கைதி கூண்ட்லே நின்னுக் கிட்டு இருப்பவரை உங்களுக்குத் தெரியுமா” என்று கேட்டார் சர்க்கார தர்ப்பு வக்கீல்.

உடனே அந்தப் பெண் “எனக்குத் இவரைத் தெரியுங்க” என்று பதில் சொன்னாள் ஜோதி.

”இவரை போலீஸ் கைது செஞ்சதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு விவரமா சொல்லு”என்று சற்று கோபமாக கேட்டார்.

“ராணீ£அம்மா இவரை என் ரூமில் கொண்டு வந்து விட்டு போனாங்க.இவர் என் கிட்டே அவர் கதை பூராவையும் சொல்லி தன் ‘ஆசையை’ சொன்னாருங்க.’என்னோட விருப்பத்துக்கு மாறா,தன் ஆசையை நிறைவேத்தி கொள்ள வந்து இருக்கேனா’ன்னு மறுபடியும்,மறுபடியும் கேட்டாருங்க.அதுக்கு ‘நான் இந்த ‘தொழிலை’ இஷ்டத்தோட தாங்க செஞ்சுவறேன். என் பையன் ரெண்டாவது படிக்கிறா ன்.‘அம்மா’ எட்டு நூறு ரூபா எடுத்துகிட்டு எனக்கு எரநூறு குடுப்பாங்க.என் பையன் படிப்புக்கு இந்த பணம் ரொம்ப உதவியா இருக்குங்க.அதனாலே நீங்க தயவு செஞ்சி திரும்பிப் போவாம என் கூட ‘இருந்துட்டு’ போங்க.உங்க மாதிரி ஆளுங்க இங்கு வந்தா தாங்க எனக்கு எதாவது பணம் கிடை க்குங்க’ன்னு என் கையேக் கூப்பி சொல்லிக் கிட்டு இருக்கும் போது போலீஸ் ‘ரெய்ட்’ வந்து இவரை கைது பண்ணாங்க” என்று சொல்லி நிறுத்தினாள் ஜோதி.

“சரி நீ போவலாம்” என்று சர்க்கார் தரப்பு வக்கீல் சொல்லவே வணக்கம் சொல்லி விட்டு கிழே இறங்கினாள் ஜோதி.

அறுபது வயதை நெருங்கிக் கொண்டு இருந்த ‘சப் இன்ஸ்பெக்டர்’ சன்முகத்திற்கு சுந்தரம் சொன்னது போலவே ராணீயும்,ஜோதியும்,சொல்லவே சுந்தரதின் மீது கொஞ்சம் அனுதாபம் ஏற்பட்டது

‘நாம காலா காலத்திலே கல்யாணம் பண்ணிக் கிட்டு பேரன் பேத்திகளோடு இருந்து வறோம். ஆனா பாவம் இவருக்கோ வாழ்க்கைலே கல்யாணமே நடக்கலே. இவருக்கோ ‘பெண் ஆசை’ இருந்து இருக்கு.அதனால்லே பாவம் இவரு ‘அந்த இடத்துக்கு’ போய் இருக்காரு.இந்த விவரம் தெரியாம, நாம இவரை போய் நாம கைது செஞ்சிட்டோமே” என்று எண்ணி பார்க்கும் போது அவருக்கு கண் களில் நீர் துளித்தது.

தன் கைகுட்டையை எடுத்து தன் கண்களை துடைத்துக் கொண்டார் ‘சப் இன்ஸ்பெக்டர்’ சன்முகம்.

இதே மன நிலையில்தான் இருந்தார் சர்க்கார் தரப்பு வக்கீல் சட்டநாதனும்.

சட்டநாதன் போலீஸ் ‘சப் இன்ஸ்பெக்டர்’ இடம் போய் ஏதோ ரகசியமாகப் பேசி விட்டு வந்தார்

இருவர் முகத்திலும் வாட்டம் தெரிந்தது.

சட்டநாதன் ஜட்ஜைப் பார்த்து “வேறு எந்த சாட்சியும் விசாரிக்க வேணாம் ‘யுவர் ஹானர்’ என்று சொல்லும் போது சர்க்கார் தரப்பு வக்கீலுக்கு தொண்டை கம்மியது.

சுந்தரம் “கனம் ஜட்ஜ் அவர்களே.நான் எந்த ‘தப்பும்’ செய்யலேங்க.‘தப்பு’ செய்யப் போவும் போதே ’தப்பு’ செஞ்சவனா ஆயிட்டேங்க. எனக்கு என்ன தண்டனை தர வேணுமோ அதை தயவு செஞ்சி எனக்கு சொல்லிடுங்க..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சுந்தரம் நெஞ்சு வலி அதிகமாகவே தன் மார்ப்பைப் பிடித்துக் கொண்டு கூண்டிலேயே சாய்ந்து விட்டார்.

கோர்ட் சிப்பந்தி ஓடி வந்து அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார்.

குடிக்க அவருக்கு தண்ணீர் கொடுத்தார்.

ஒரு பத்து நிமிஷம் கழித்து சுந்தரம் மெல்ல எழுந்து நிற்க முயற்சி பண்ணினார்.

சர்க்கார் தரப்பு வக்கீலும்,அருகில் இருந்த கான்ஸ்டபிலும் ஓடி வந்து கைத்தாங்கலாகப் பிடித்து மெல்ல அவரை தூக்கி நிற்க வைக்க உதவி பண்ணினார்கள்.

அரிவாள் கழுத்தில் விழக் காத்துக் கொண்டு இருக்கும் ஆடு போல தன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு முடியாமல் நின்றுக் கொண்டு இருந்தார் சுந்தரம்.

சர்க்கர் தரப்பு வக்கீல் சட்டநாதன் எழுந்து நின்றுக் கொண்டு “மை லார்ட், மிஸ்டர் சுந்தரம் சொன்ன விவரங்கள்,சாட்சிகள் சொன்ன விவரங்கள் இவைகளை வச்சு பார்க்கும் போது..“என்று சொல்லி க் கொண்டு இருக்கும் போது சுந்தரம் மீண்டும் தன் மார்ப்பைப் பிடித்துக் கொண்டு கீழே சாய்ந்த்தார்.

அவர் காதுகளில் எதுவும் விழவில்லை.

“டாக்டர் யாராச்சும் இருந்தா உடனே வாங்க’ என்று கத்தினார் சர்க்கார் தரப்பு வக்கீல்.

வழக்கை வேடிக்கைப் பார்க்க வந்து இருந்த ஒரு டாக்டர் ஓடி வந்து சுந்தரத்தின் நாடியைப் பிடித்துப் பார்த்தார்.

பிறகு தன் கையை அவர் மூக்கில் வைத்துப் பார்த்தார்.

சுந்தரம் மூச்சு நின்று போய் விட்டு இருந்தது.

பிறகு சுந்தரத்தை இப்படியும் அப்படியும் அசைத்து பார்த்தார்.

மெதுவாக எழுந்து நின்றுக் கொண்டு “ஹி இஸ் நோ மோர்” என்று சொன்னார் அந்த டாக்டர்.

சர்க்கார் தரப்பு வக்கீல் என்ன சொன்னார், அதுக்கு ‘ஜட்ஜ்’ நமக்கு என்ன தீர்ப்பு கொடுக்கப் போகிறார்’ என்று தெரிந்து கொள்ளவில்லை சுந்தரம்.

அவர் கைதி கூண்டிலே நிரந்தரமாக உறங்கிக் கொண்டு இருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *