சாமான்யனின் சரித்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 6,325 
 
 

(நாம் இரு நூற்றாண்டுகள் பின்னோக்கி கி.பி.1774 க்கு போவோம்)

லண்டன் மாநகரில் பிரபல மருத்துவ மனை ஒன்றில் !.

“கிளைவ்” நீங்கள் இப்பொழுது குணமாகிவிட்டீர்கள், உங்கள் மனதை போட்டு அலட்டிக்கொள்ளாதீர்கள், தயவு செய்து அமைதியாக இருங்கள், நீங்கள் அமைதியாகிவிட்டால் இன்றே கூட உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவேன், “டேக் ரெஸ்ட்” தட்டிக்கொடுத்துவிட்டு டாக்டர் அருகில் இருந்த அவர் மனைவி மார்கரெட் மஸ்கலீனிடமிருந்து விடைபெற்று அடுத்த நோயாளியை பார்க்க சென்றார்.

கிளைவ் விரக்தியாய் புன்னகைத்தார். அமைதியாம் அமைதி! எங்கு கிடைக்கும் இங்கே அமைதி, என்னைப்பற்றித்தான் இந்த மக்கள் கொள்ளையடித்தவன் என்று பேசிக்கொள்கிறார்களே! நான் ஏதோ இவர்கள் சொத்தை கொள்ளை அடித்தது போல் பேசிக்கொள்கிறார்கள், இந்த பாராளுமன்றவாதிகளுக்கு வேறு வேலை என்ன? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என்னைப்பற்றி குறை கூறுவது, மக்களிடம் என்னைப்பற்றி தப்பும் தவறுமாக சொல்லி என் பேரை கெடுப்பது இதுதானே இவர்கள் வேலை! இவர்கள் இந்தியாவிற்கு போயிருக்கிறார்களா? இங்கே உட்கார்ந்து இந்தியாவைப்பற்றி பேசுவார்கள் காட்டுவாசிகள், அங்கே பாம்பும் பல்லியும்தான் இருக்கும், சாமியார்கள்தான் இருப்பர், என்று, போய் பார்க்கவேண்டியதுதானே, அங்கே உங்கள் சாம்ராஜ்யத்தையே நிறுவிய என்னைப்பார்த்து கண்டபடி பேசுவது, சே..என்ன வாழ்க்கை, புலம்பியவாறு புரண்டு படுத்தார்.

அந்த மிகப்பெரிய பண்ணை வீட்டின்முன் நின்ற காரிலிருந்து கிளைவ் மெல்ல இறங்க, பின்னால் அவரை தாங்கிப்பிடித்தவாறு மனைவி மார்கரெட்டும் இறங்கினாள், பின்னால் எட்வர்ட்டும், ராபர்ட்டும் கூட வந்தவர்கள் கிளைவ் அறைக்கு முனபாக வெளியே நின்றுகொண்டனர், கிளைவ் வை மெல்ல கட்டிலில் படுக்கவைத்துவிட்டு “ரிலாக்ஸ்” என்று சொல்லிவிட்டு திரும்பிய அவர் மனைவியை “ப்ளீஸ்” என்னை விட்டு போய்விடாதே அவள் கையை பிடித்துக்கொண்டார். ஓ.கே.,நான் அருகிலேயே இருக்கிறேன், நீங்கள் தூங்குங்கள், கட்டிலின் ஓரத்திலேயே அமர்ந்து கொண்டார். எட்வர்ட்டும், ராபர்ட்டும் அதைப்பார்த்து மெல்ல கிளம்பினர். மனைவியின் அருகாமையில் மெல்ல தூக்கத்துக்கு போன கிளைவின் நினைவுகள் மெல்ல கனவு படலமாக விரிய அரம்பிக்க….அவர் தந்தையின் குரல் நம்மை கி.பி 1743க்குள் அழைத்து வருகிறது

“ராபர்ட்” உன்னைப்பற்றி ஏகப்பட்ட புகார்கள் வந்து விட்டது, என்னால் உன்னை வைத்து சமாளிக்க முடியவில்லை, இதுவரை இருமுறை போலீஸ் வரைக்கும் கொண்டுபோய் விட்டுவிட்டாய், பதினேழு வயதில் இவ்வளவு தொல்லைகள் செய்பவனை நான் பார்த்ததேயில்லை, உனக்கு ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் வேலைக்கு சொல்லியிருக்கிறேன், அவர்கள் இங்கு வேலை காலி
இல்லை வேண்டுமானால் இந்தியாவில் வேலை போட்டு கொடுப்பதாக சொல்லியிருக்கிறாரகள், அதற்கான் கடிதத்தையும் என்னிடம் கொடுத்துவிட்டார்கள், நீ என்ன செய்கிறாய் நாளை ‘மெட்வே” யிலிருந்து “விஞ்செஸ்டர்” கப்பல் கிளம்புகிறது அதில் கிளம்பிச்சென்று இந்த கடிதத்தை கொடுத்து வேலைக்கு சேர் அதன் பின் எனக்கு தகவல் அனுப்பு. மெல்ல தலையாட்டினான் ராபர்ட்.

ராபர்ட்டுக்கு வெயில் கண்ணை கூசிற்று !. தான் இதுவரை பார்க்காத ஆட்கள், நிறங்கள் கருப்பாய்..அட அவர்கள் மொழி கூட வித்தியாசமாய் உள்ளதே !, கும்பல் குமபலாய் வருபவர்கள் நம்மை கண்டதும் ஏன் ஒதுங்கிப்போகின்றனர்? பயப்படுகிறார்களா? ஒருவன் போல் ஒருவன் இல்லியே, வியப்பில் மெதுவாக அன்றைய சென்னைபட்டணத்தில் நடந்துகொண்டிருந்தான் ராபர்ட்
ஆனாலும் இந்த இடத்துக்கு வருவதற்குள் ஒரு வருடத்தையே கடல் விழுங்கிவிட்டது. யோசனையாய் நடந்தவன் தோளில் யாரோ தட்ட திரும்பி பார்த்தான் ஒரு பிரிட்டிஷ் சோல்ஜர் நின்று கொண்டு எங்கு போகிறாய் என்று கேட்க இவன் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு போகிறேன் என்றான், அவன் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை காட்டி அங்கு செல் என்றான்.

இவன் கொடுத்த கடிதத்தை வாங்கி பார்த்தவன் இவனையே சிறிது நேரம் பார்த்துவிட்டு பிறகு புன் சிரிப்புடன் இவன் கையைப்பிடித்து குலுக்கி என் பெயர் வில்லியம்ஸ், நீ இனிமேல் எனக்கு உதவியாளனாக இரு. ராபர்ட் அதுக்கு மறுமொழி எதுவும் சொல்லாமல் ஒரு புன்சிரிப்பு மட்டும் சிரித்து வைத்தான்.

வில்லியம்ஸ் ஒரு பெரிய பொறுப்பில் இருந்தான், அவனுக்கு கீழ் ஏராளமான இந்தியர்கள் சுமை கூலியாக இருந்தனர். அங்கிருந்துதான் யுத்த களங்களுக்கு உணவு வெடிபொருட்கள் போன்றவை சப்ளை ஆகிக்கொண்டிருந்தன.பொருட்களை கைமாற்றி விட்டு நிறைய வரும்படி பார்த்தான், ராபர்ட் அவனுக்கு உதவியாக இருந்ததில் இருந்து அவனுடைய நெளிவு சுளிவுகளை இவனும் கற்றுக்கொண்டான். மிக விரைவில் காசு பணம் அவனிடம் புழங்க ஆரம்பித்தது ஆனாலும் அவன் உள் மனம் இந்த வேலையை விட உயர்ந்த வேலையை எதிர்பார்க்க ஆரம்பித்தது.

வில்லியம்ஸ் ஒரு வாரம் உடல் நிலை சரியல்லாமல் போக முழுப்பொறுப்பும் இவன் பார்க்க வேண்டியதாகிவிட்டது. அதற்கு பின்னும் வேலைக்கு வந்தவனைப் பற்றி பல்வேறு புகார்கள் வர அவனை இங்கிலாந்துக்கு கம்பெனி விசாரணைக்கு வரச்சொல்லிவிட்டது,விசாரணையின் முடிவில் இனிமேல் ராபர்ட்டே முழுப்பொறுப்பையும் கவனிப்பான் என கம்பெனி சொல்லும்போது அவன் சுமார் வெறும் இருபது வயதையே தாண்டி இருந்தான்.அவன் பொறுப்புக்கு வந்த சிறிது நாட்களிலே எதிர்பாராமல் ஆஸ்திரிய வாரிசுரிமைப்போரில் பிரிட்டனிடம் அங்கி¢ருந்த கோட்டையை பறி கொடுத்த பிரெஞ்சுப்படைகள் இவன் இருந்த கோட்டையை பதிலுக்கு கைப்பற்றிக்கொண்டன. இவன் பல்வேறு உத்திகள் கையாண்டு எப்படியோ தப்பித்து பக்கத்திலுள்ள இவர்களுக்கு சொந்தமான மற்றொரு கோட்டைக்கு சென்று பிரெஞ்சுப்படைகள் சுற்றி வளைத்துக்கொண்டதயும், தான் எப்படியோ தப்பித்துக்கொண்டதையும், சிறு படைஒன்றை கொடுத்தால் தானே அந்தக்கோட்டையை மீட்டு விடுவதாக கூறி அதன்படி அந்தக்கோட்டையை மீட்டான். இந்த செயல் இவனை கிழக்கிந்த்தியக்கம்பெனியில் உயர்ந்த இடத்தை அடையவைத்தது
இப்பொழுது யுத்த களத்தில் போரிடும் குழுவுக்கு இவன் தளபதியாக்கப்பட்டான். அவனுடைய புத்தி கூர்மையும் சமயோசிய புத்தியும், தைரியமும் கூடவே அதிர்ஷ்டமும் அவனை அதற்குப்பின் நடந்த பல போர்களை வெற்றி பெற் வைத்தது வெகு சீக்கிரத்தில் தலைமை தளபதியாக உயர்த்த உதவியது. அது மட்டுமல்ல அவன் நண்பனாக இருந்த எட்மெண்ட்மஸ்கில்னே தன்தங்கை மார்க்கரெட்டை அவனுக்கு மணமுடித்து கொடுத்தான்.

“ராபர்ட் கிளைவ்” என்ற பட்டத்துடன் தலைமைத்தளபதியாக உயர்த்தப்பட்ட ராபர்ட் (நாமும் அவரை இனிமேல் மரியாதையுடனே அழைப்போம்) குடும்ப வாழ்க்கையில் உயர்ந்தவராய் இருந்தாலும் இளமையில் அவர் பட்ட கஷ்டங்கள் காரணமாக பணத்தேவைகளை உணர்ந்து கொண்டு அதை வெகு சீக்கிரம் எப்படி சம்பாதிப்பது என்பதை காண்பிக்க ஆரம்பித்தார். இதனால் இங்கிலாந்தில் இவரைப் பற்றி பல்வேறு புகார்கள் போக ஆரம்பித்தன. சிறிது காலம் பம்பாய் வாழ்க்கைக்கு மாறினார் பின் கம்பெனியின் வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இதுவரை ஏறுமுகமாக இருந்த கிளைவின் வாழ்க்கை இங்கிலாந்தில் இவர் மீது கூறப்பட்ட ஊழல் புகார்களால் ஆட்டம் காண ஆரம்பித்தது.

தான் சம்பாதித்த பணத்தை எப்படி எடுத்துச்செல்வது என யோசித்தார், அனைத்தையும் தங்கமாக்கி பாளமாக கப்பலில் கொண்டு செல்ல முடிவு செய்தார், ஆனால் அந்த முடிவு தவறாகிப்போனது, இங்கிருந்து கிளம்பிச்சென்ற கப்பல் வழியில் புயலிலும் மழையிலும் கடலுக்குள் முழுகிப்போனது.இதனால் துவண்டு விடவில்லை கிளைவ், தான் குடும்பத்துடன் இங்கிருந்து கிளம்ப முடிவு எடுத்தார்.

லண்டன் வந்திறங்கிய ரபர்ட் கிளைவ் தான் இப்பொழுது நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவனல்ல என்பதையும் அன்னிய நாட்டில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவன் என்பதையும், இதனால் இங்கிருக்கும் பிரபுக்களுக்கு இணயாக நாமும் இருக்க வேண்டும் என நினைத்தார், கொண்டு வந்த பணத்தில் ஒரு பெரிய பண்ணை வீட்டை லண்டன் மாநகரிலே வாங்கி அதில் குடும்பத்துடன்
குடி புகுந்தார்.

தினம் தினம் தன்னை பற்றி குற்றம் சொல்லும் பாராளுமன்றவாதிகள், தன்னை காப்பாற்றிக்கொள்ள இந்த பத்துக்கு மேற்பட்ட வருடங்களில் சமுதாயத்தில் போராடி உடல் நலம், மன நலம் கெட்டதுதான் மிச்சம், மனதில் பயம் குடிகொள்ள ஆரம்பித்தது, மருத்துவரை நாட ஆரம்பித்தார்.இப்பொழுது கூட…

திடீரென விழிப்பு வர பக்கத்தில் மனைவியை தேடினார் கிளைவ் கணவர் தூங்கிவிட்டார் என்று எழுந்து சென்றுவிட்ட மார்கரெட்டை உடனே காண வேண்டும் என்று வேகமாக எழுந்தவர் உடல் பலகீனத்தால் தள்ளாடி விழப்போக தன்னை யாரோ தள்ளி விட்டதாக கருதி தள்ளிவிட்ட எதிராளியை எதேனும் செய்யவேண்டும் என்று ஆயுதங்கள் ஏதேனும் கிடைக்குமா என தேட ஆப்பிள் வெட்டும் கத்தி ஒன்று அங்கிருக்க அதை கையில் எடுத்து தன் கழுத்தின் மீது வைத்துக்கொண்டு எதிரில் இல்லாத எதிராளியை சண்டைக்கு கூப்பிட ஆரம்பித்தார்.

வரலாறு இராபர்ட் கிளைவை பற்றி இப்படி சொல்கிறது : “இராபர்ட் கிளைவின்” ஆரம்ப கால வாழ்க்கை போராட்டமானதாக
இருந்தாலும் அது உடல் அளவில் இருந்ததால் விரைவில் வெற்றி காண முடிந்தது, இறுதிக்காலத்தில் சட்ட ரீதியான போராட்டமாக இருந்ததால் அவர் உடல் நலமும் மன நலமும் பாதித்தது. இதனால் அவரின் முடிவு வருந்ததக்கதாய் இருந்தது.

(இதில் என்னுடய கற்பனையையும் கலந்து எழுதியிருக்கிறேன்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *