கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,387 
 

(1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இராமகிருஷ்ண மிஷன் பாடசாலை மண்டபத்தில் ஆசிரியர்களின் விடுமுறைக் கழகம் நடந்துகொண்டு இருந்தது.

திட்டவட்டமான குறிக்கோளும் கொள்கையும் அற்று, நினைத்தவர் நினைத்த போதெல்லாம் கல்விக் கொள்கையிற் தலையிட்டுத் தாம் முடைந்த தொப்பிக்குத் தக்கதாகத் தலையையே வெட்டிக் கொளளும் முயற்சி யில், ஆசிரியர்களை, வற்புறுத்துவதற்காக நடை பெறும் நிசழ்ச்சி இது’ என்று பல ஆசிரியர்கள் உள்ளூர நினைத் துக் கொண்டாலும், மண்டபம் என்னவோ நிரம்பி வழிந்தது. ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள், வாலிபர்கள், தலை நரைத்தவர்கள், பட்டாம் பூச்சியின் வாக்கிற் சுழன்று திரியும் வாலைக் குமரிகள், அவர்களில் மொய்க்கும் இளைஞர்கள்…

எத்தனையோ பேருக்குத் திருக்கோணமலைப் பட்டி னத்தில் என்னென்னவோ அலுவல்கள். விடுமுறைக் கழக வகுப்புக்காக ‘கடனே’ என்று ஐந்து ரூபாவை அழுது தொலைத்துவிட்டு, அந்தச் சாக்கோடு பட்டினத் திற் பல அலுவல்களையும் கவனிக்க வந்த கிராமத்து ஆசிரியர்கள் பலரும், விடுமுறைக் கழகத்தை ஒருபொழுது போக்காகக் கருதித் தம்மை மறந்த களிமயக்கிற் சுகித்து இருந்த இளைஞர்கள் சிலரும் ‘சித்திரப் பாவையின் அத்தக அடங்கி’ விரிவுரையைக் கேட்டுக் கொண்டிருந் தார்கள். |

மேடையிலே பேராசிரியர், கீழ் வகுப்புகளிற் கணிதம் பயிற்றும் முறை பற்றிப் போதனை செய்து கொண்டிருக் கிறார். இங்கிலாந்திலும் படித்து இளம் வயதிலேயே பேராசிரியராகி விட்டவர். அவர் பக்கத்திலே தமிழ்ப் பாஷை படிப்பிக்கும் முறை பற்றி அடுத்ததாகப் பேச இருந்த பண்டிதர் நல்லதம்பியும் வீற்றிருந்தார். ஆம்; ஓய்வுச் சம்பளம் பெற்றுத் தன் வயதில் முதுமை காரண மாக ஓய்ந்திருந்த நல்லதம்பிப் பண்டிதர், தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கழுத்தைச் சுற்றிய விசிறி மடிப்புச் சால்வை சங்கரா பரணச் சர்ப்பமாக நெளிய, தம் தடித்த மூக்குக் கண்ணாடியினூடாகச் சபையைக் கூர்ந்து கவனித்து கொண்டே, ஆரோகணித்துக் கொண்டு எதிரி படைக்குள் புகத் தயாராக நிற்கும் போர்ப் புரவி போன்று கம்பீர மாகக் காட்சியளித்தார்.

நல்லதம்பிப் பண்டிதரைத் தெரியாதவர்கள் அந்த வட்டாரத்தில் இருக்கவே முடியாது. தனித் தமிழைத் துறைபோகக் கற்றவர் என்ற இறுமாப்பை, நிமிர்த்தி நிற்கும் தன் தடமார்பில் பெருமையாக ஏற்றுக் கொண்டு, எந்நேரமும் போர்க் குதிரை போலப் பின் வாங்குதலின்றியே ஊரை- குறிப்பாக ஆசிரிய வட்டா ரத்தை—ஒரு கலக்குக் கலக்கினார் அவர். காற்சட்டை அணிந்த பல்வேறு உத்தியோகத்தர்களும், சிறப்பாக வித்தியா கந்தோரின் அத்தனை மேலதிகாரிகளும், ஏன் அந்த வட்டாரத்தின் முக்காலே மூன்று வீசும் ஆசிரியர்களும், ‘வடக்கே’யிருந்து வந்தவர்களென்ற எண்ணத்தை முள்ளின் உறுத்தலாக ஏற்றுக் கொண்டு, அந்த உறுத்தலிற் போர் கோலங்கொண்டு, ஆசிரிய கூட்டங்களிலெல்லாம் கதாநாயகனாக விளங்கிய நல்லதம்பிப் பண்டிதர் ‘காலத் திற்கும் இடத்திற்கும் பொருந்தாத அபூர்வப் பிறவி’ என்று சிலர் சொல்லிக் கொண்டாலும் கூட்டம் குழப்பு வராகவே பெயரெடுத்து அந்தப் பகுதியிற் தம் பெயரை திலை நாட்டியிருந்தார். அந்தப் போர்க் குணந்தான், ஓய்வுச் சம்பளம் பெற்ற பின்னரும் அவரை மேடை ஏற்றி யிருக்கிறது. இல்லாவிட்டால், விடுமுறைக் கழகத்தை நடத்தும் வித்தியாதரிசி அவர் பாய்ச்சலின் கீழ் விழுந்து இருக்க மாட்டாரா?

மேடையில் வீற்றிருந்து தன் தடித்த மூக்குக் கண்ணாடியின் வழியாகச் சபையினரைப் பார்க்கையில் நல்லதம்பிப் பண்டிதருக்கும் பெருமையாக இருந்தது.

முன்பெல்லாம் இதைப் போன்ற ஆசிரியர் கூட்டங்களிற் பெரும்பாலோர் ‘அன்னிய ராகவே’ இருப்பார்கள். என்னைப்போல ஓரிருவர் தான் இந்தாட்டவர்களாயிருப் பர். ஆனால், இப்போது… பிரபையோடு உதயமாகும் அறிவுச் சூரியனுக்கு இச்சபை யிலிருக்கும் இத்தனை ‘எழுவான் கரை’ ஆசிரியர்களும் நாற்றங்காலாக அமைந்து விட்டார்கள். எல்லாமே என் இடை

விடாத போராட்டத்தின் வெற்றி. யாழ்ப்பாணத்திலிருந்து சிறப்புப் பேச்சாளராக வந்த கணிதப் பேராசிரியர், தன் பேச்சைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருந்தார்.

இளம்பிள்ளைகளைக் கிளிப் பிள்ளைப் பாடமாகப் பதினாறாம் வாய்பாடு மட்டும், பதினாறு அலகுகள் வரை மனனம் பண்ணும்படி வற்புறுத்துகிறோம். புதிய கல்வி முறையின்படி இது தேவையற்றது; பிழையான முறை. பெருக்கல் வாய்பாடுகளின் நோக்கமே –ரன் கல்வியின் நோக்கமே-கற்றதைப் பிரயோகம் பண்ணு வது தான். வாய்பாட்டைப் பிரயோகித்துப் பெருக்கற் கணக்குகளைச் செய்வதற்குப் பதினாறாம் வாய்பாடு வரையும் மனனம் பண்ணத் தேவையில்லை. மேலும் பதினாறு அலகுகள் வரை வாய்பாட்டை மனனம் பண்ணவும் வேண்டாம். பத்தாம் வாய்பாடு மட்டும் பத்து அலகுகள் வரை தெரிந்தாலே போதுமானது. அதுவும் மனனம் பண்ண வேண்டும் என்ற தேவையும் இல்லை. ‘லொக்கார் தம்’ கணித மட்டைகளை வைத்துக் கொண்டு கணக்குகளைச் செய்வது போல, வாய்பாடு மட்டைகளை வைத்துக் கொண்டே கணக்குகளைச் செய்கையிற் காலகதியில் அவை மனதிற் பதிந்துவிடும்.”

கூட்டத்திலே இருந்த வயதான ‘பழைய’ ஆசிரியர் கட்குப் பேராசிரியர் சொன்னது சம்மதமில்லாமலிருப்ப தாகவே தோன்றியது. ஆயினும், எதிர்த்து ஒரு வார்த் தையுமே சொல்லவில்லை.

‘அவரை அழைத்த குற்றத்திற்கு அவரும் தன் கடமைக்கு எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும். தாம் போனது ஈரிரண்டு நாலு என்று தொடங்குவது தானே?’ என்று எண்ணினார்களோ, என்னவோ, பேராசிரியரின் ‘தொண தொணப்பு’ எப்போது முடியும் என எதிர்பார்த்தவர்களாய், மேடையின் பின்புறச் சுவரில் தொங்கிய கடிகாரத்தை பார்த்துக்கொண்டு இருத் தார்கள்.

இளைஞர்கட்கோ எதுவும் சம்மதம் என்றே தோன் றிற்று போலும்! மொத்தத்தில் இந்தப் பேச்சு என்ற யம வாதனை விரைவாக முடிவடையட்டும் என்று எண்ணிய வர்களாகச் சபையினர் அசமந்திருந்தனர்.

ஆனால், மேடையில் இருந்த நல்லதம்பிப் பண்டித் ருக்கு, இருப்புக் கொள்ளவில்லை. இந்தச் சபையிலே எல்லாருமே வாய்மூடி மௌனனியாக இருக்கிறார்களே என்று அவருக்கு ஆத்திரமாக இருந்தது.

இன்றைய ஆசிரியர் சமுதாயம் எத்தனை தூரத்திற்கு எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறது? எதற்கும் எல்லாவற்றிற்குமே தலையாட்டி மாடுபோல இருக்கிறார் களே! அதிலும் எல்லாப் பாடசாலைகளை யும் அரசாங்கம் சுவீகரித்துக் கொண்ட பின், ஆசிரியர்கள் எவருக்குமே சுதந்திரம் இல்லை. ‘இதைப் போன்று விவாதத்திற் கிடமான கருத்தை அந்த நாளையிற் சொல்லியிருந்தால் ‘மிஷன்’ வாத்தியாரா யிருந்த நாங்கள் ஆளைத் தொலைத்திருக்க மாட்டோமா? ஆயினும் இவர்கள் எல்லா ராலும் எப்.டி வாய்பேசா மௌனியாக

இருக்க முடிகிறது?’ இப்படி எண்ணிக் கொண்ட பண்டிதரின் மன ஓட்டத்திலே, அந்த நாளையச் சம்பவம் ஒன்று பளிச் சிட்ட து.

அன்றும் இப்படித்தான் ஒரு விடுமுறைக் கழகம் நடந்து கொண்டிருந்தது. காலை யில் ஒரு சொற்பொழிவு முடிந்ததும், அடுத்த பத்து நிமிடங்கட்கு ஓய்வு நேரம். ஆனால், விடுமுறைக் கழகத்தை நடத்திய வட்டார வித்தியாதரிசி நிகழ்ச்சி நிரலில் அந்தப் பத்து நிமிடத்தை ‘இளைப்பாற்றி’ என்று அச்சிட்டிருந்தார். அந்த இளைப் பாற்றி’ என்ற சொல் எச்சமா, முற்றா என்ற விவாதத்தை கிளப்பி வட்டார வித்தியா தரிசியின் தமிழ் ஞானத்தைத் தலைகுனிய வைக்க, அவர் தமது உத்தி யோக அதிகாரத்தைப் பிரயோகிக்க முனைந்தபோது, நான் குறுக்கிட்டு மேலே விடுமுறைக் கழகத்தையே நடக்கமுடியாத படி குழப்ப வட்டார வித்தியாதரிசி அடுத்த மாதமே மாற்றம் எடுத்துக் கொண்டு போய் விட்டார்! எல்லாம், அத்தக் காலத்தில் இந்த நல்லதம்பியின்

வல்லமை… ஆனால் இன்று? பண்டிதரால் பொறுக்கவே முடியவில்லை!

“நீர் சொல்வதெல்லாம் சுத்த அபத்தம்” என்றார் கணிதப் பேராசிரியரைப் பார்த்து.

அவர் அப்படிச் சொன்னது முன் வரிசையில் இருந்த வர்களுக்குத் தெளிவாகக் கேட்டது.

கூட்டத்திற் சிறிது சலசலப்பு. ஆயினும், சற்று நேரத் தில் அடங்கி விட்டது!

கணிதப் பேராசிரியரும் தன் பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்தார்.

பண்டிதர் நல்லதம்பி அவர்கள் பேச எழுந்தார். தான் பேச எடுத்துக் கொண்ட கீழ் வகுப்புகளில் தமிழ்ப் பாஷை கற்பித்தல்’ என்ற பொருளை அவர் ஆயத்தம் செய்து வந்திருப்பினும், கணிதப் பேராசிரியர் தெரிவ’த்து இருந்த கருத்துக்கள் அவர் சிந்தனையைக குழப்பி அவரின் இயல்பான போர் முனைப்பைத் தூண்டிவிட்டிருந்தன. அந்த முனைப்போடு ஒலிபெருக்கியன முன்னால் வந்து நின்றவர், தம் விஷயத்தை மறந்து, கணிதப் பேராசிரி யருக்கு ஒரு ‘ சூடு’ கொடுக்கவேண்டும் என்ற ஒரே ஆத்திரத்தோடு கழுத்தைச் சுற்றிச் சங்கராபரண சர்ப்ப மாய்ப் புரளும் தன் விசிறி மடிப்புச் சால்வையைச் சற்று இறக்கித் தம் நிமிர்த்திய தடமார்பிற் புரளவிட்டு, தமது தடித்த மூக்குக் கண்ணாடியைச் சரிப்படுத்தி ஒரு கனைப்புக் கனைத்துச் சபை வணக்கம் தெரிவித்துத் தன் பேச்சைத் தொடங்கினார்.

“எனது கெழுதகை நண்பர் உயர் திரு. சண்முக லிங்கம் பேராசிரியர் அவர்கள், இவண் சிறார்க்கு எண் கணிதம் பயிற்றும் முறை பற்றி முறைகேடாகச் சில செப் பினார். யாமும் ஓர் தமிழாசிரியன் ஆனமையின், நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்று நக்கீர நெஞ்சோடு, அவர் கூற்றிலுள்ள பொருந் தாமையை இவண் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம். அஃதென்னை எனில், எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது ஆன்றோர் வாக்கு. இரண்டுள்ளும் எண்ணை முதலில் நுவலிய தென்னையெனின், அதன் முதன்மை கருதி என்பது வெள்ளிடை மலை. ஆயின் நமது எழுவான் கரையில் அறிவுச் சூரியன் உதயமாவன தைக் கண்டு காழ்ப்புறும் பேராசிரியர் போன்றோர் எண்ணைக் கற்பிக்கும் முறைபற்றிப் பிழையான எண் ணங்களைக் கொடுத்து நம்முடையதும், நம் எதிர்காலச் சந்ததியினரதும் எண் என்ற கண்ணைக் கெடுக்கும் நாச வேலையிற் தற்போது ஈடுபட்டிருக்கிறீர்கள்! பேராசிரியர் போன்றோருக்கு நமது அருட்டிரு விபுலானந்த அடிகளார் கணிதப் பட்டதாரியாகவும் அதே நேரத்தில் இலக்கிய விற்பன்னராகவும் இருந்தமைகூடப் பெரிய ஆற்றாமை யாக இருக்கிறது; அடிகளாரைப் போன்ற பலர் நம் இடை யே தோன்றுவதைத் தடை செய்யும் முகத்தான்…”

பேச்சுத் தொடர்ந்தது.

கூட்டத்தில் கசமுசப்பு ஏற்பட்டது. இந்தக் கூட்டங் குழப்பிப் பண்டிதருக்கு இன்னமும் குதிரைப் புத்தி போக வில்லையே’ என்றார் ஒருவர். இளைஞர்கள் சிரிக் கிறார்கள்!

மேடையிலே பண்டிதர் செந்தமிழிற் பொழிந்து பொழிந்து தள்ளிக் கொண்டேயிருக்கிறார்.

‘அரபிக் குதிரையாக இருப்பினும் பிறவிச் சந்தம் போகாதே’ என அலுத்துக் கொண்ட வழுக்கைத் தலை ஆசிரியர் ஒருவர், ஒருவாய் வெற்றிலையாவது போட லாம் என்றெண்ணிக் கொண்டே வெளியேறுகிறார்.

‘சதுரங்கத்திலே குதிரை மட்டும் விசித்திரமான காய். ஏனைய காய்களைப் போன் றல்லாது, அது பாய்ந்து வெட்டும். அத்துடன் மூன்று கட்டங்கள் பாய்வதா னாலும், எத்திசையிலும் நேராக முன்னே றாமல், ஒரு கட்டமோ, இரண்டு கட்ட மோ பாய்ந்து செங்கோனத்தில் திரும்பும். அந்தப் புத்திதான் இந்தப் பண்டிதருக்கும். ‘கீழ் வகுப்புகளிற் தமிழ்ப் பாஷைக்கு கற்பித்தல்’ என்ற பொருளை விட்டு, என்னைத் தாக்க எழுந்த குதிரை, செங்கோணத்திற் திரும்பி எனது நாட்ட வர் எல்லோரையும் தாக்குகிறதே……’ எனப் பேராசிரியர் சண்முகலிங்கம்

நினைத்திருக்கக் கூடும். மேடையிலே பண்டிதர் முழங்கிக் கொண்டேயிருக்கிறார்!

– இளம்பிறை 1968

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *